Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரவுக்கும் செலவுக்கும் வழி சொல்லும் நாடு !? - விவாதக்களம்! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2013 | , , ,


1970க்கு முன்னர் பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை என்று கொடிகட்டிப் பறந்த(விமானத்தில்) / மிதந்த(கப்பலில்) நம்மக்கள் அதன் பின்னர் கண்டெடுத்த வளைகுடா நாடுகள் என்று இரண்டுக்கு மேற்பட்ட தலைமுறைகள் இன்னும் அங்கே கோல்லோச்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதனையும் தாண்டி பூமி உருண்டையில் இருக்கும் அனைத்து கண்டங்களிலும் காலடி வைத்து அதன் விளைவாக நிறைய அஸ்திவாரங்களும் போட்டிருக்கிறோம் (ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள வயல் வெளியிலும்).

வம்புக்கு இழுக்கவில்லை, வரம்புக்குள் ஈர்க்கப்பார்க்கிறோம் எந்த நாடு பொருளீட்டவும், செலவு செய்யவும், சேமிக்கவும் ஏற்ற நாடு !?

உங்களனைவரின் அனுபவம் தானே பேசப்போகிறது, ஆகவே ! வாருங்கள் எடுத்துரையுங்கள் உங்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் ! வாசிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் இன்ஷா அல்லாஹ் !

இக்கரைக்கு அக்கரைப் பச்சை (பாக்கிஸ்தானியர்கள் அல்ல)... என்று நினைக்கத் தூண்டும் தூண்டில்கள் இங்கேயும் அங்கேயும் இருப்பதை நினைத்து இழந்தவைகளும் நிறைய என்று புலம்புபவர்களும் உண்டு !

ஊரை விட்டுக் கிளம்பும்போது இப்படியெல்லாம் இல்லை, ஆனால் ரொம்பவே மாறிப்போச்சுன்னு திரும்பி ஊருக்குப் போகும்போது பழையபேப்பர் படித்த பிரம்மை எற்படுவதுமுண்டு.

இனி உங்கள் சாய்ஸ்...! எந்த நாடு நீங்கள் நாடுவது !?

அதிரைநிருபர் பதிப்பகம்

32 Responses So Far:

Unknown said...

சவுதி அரேபியா.

என்னை வாழ வைத்ததோ இல்லையோ
நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் , என் பொருளாதாரத்தை மேம்படுத்தியதோ இல்லையோ,சிரமமின்றி தேவைகள் பூர்தியாகிக்கொண்டிரிக்கின்றன என்று சொன்னாலும் மிகை இல்லை.

என்னோடு (1986) கால கட்டங்களில் வந்தவர்களும் சரி, அதற்குப்பிறகு வந்தவர்களும் சரி பொருளாதாரத்தின் உச்சாநிக்கொம்புக்கு போய்விட்ட நிலையில் என் பொருளாதாரம் சராசரியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது என்று சொல்வேன். அல்ஹம்து லில்லாஹ்.

நமக்கு இறைவன் எதை விதியாக்கினானோ அதோடு நாம் போட்டி போட்டால் தோல்வி நமக்கே என்பதை தெளிவாக அறிந்தவன் என்ற முறையில் , இந்தியாவில் சம்பாதித்தாலும், உலகின் எந்த மூலையில் சம்பாதித்தாலும்
நமக்கென்று இறைவன் நிர்ணயித்த வாழ்வாதாரம் நம்மை வந்து அடையும் வரை நமக்கு இறப்பு என்று ஒன்று வராது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

ஆதலால் என்னைப்பொறுத்தவரை எல்லா நாடுமே பொருளாதரத்தை ஈட்டவும், நம் கௌரவத்தை சமூகத்தில் உயர்த்திக்கொள்ளவும் உகந்த நாடுகள் தான். சம்பாத்தியத்தின் ஆணிவேரைப்புரிந்துகொண்டால் அல்லது அது வரும் வழியின் ஆரம்ப நிலையை அறிந்து கொண்டால், அறிவு என்ற மூலதனம் என்ற ஒன்று மட்டுமே உள்ளவன் சேமிப்பின் உயர்வை அறிந்து கொண்டவன், அது சிறியதாக இருந்தாலும் சரியே, உலகின் எந்த மூளைக்குச்சென்றாலும் அது அவனுக்கு சம்பத்தியத்திர்க்கும், சேமிப்பிற்கும் உரிய நாடே.
என்பது என்னுடைய விளக்கம்.

குறிப்பிட்ட நாட்டில்தான் ஒருவன் சம்பாத்தியத்தில் தனக்கு சேமிக்கமுடியும் என்று இல்லை. எங்கும் சம்பாதிக்க முடியும் அவன் சிந்தனையும், அறிவும் மேலோங்கி குறிப்பிட்ட நாட்டின் சேமிக்கும் வாய்ப்பின் சூழ்நிலையையும்
முழுதும் உணர்ந்தாநேயானால் எவனுக்கும்
எல்லா நாடுமே பொருளீட்டவும், செலவு செய்யவும், சேமிக்கவும் ஏற்ற நாடுதான்.

அபு ஆசிப்.


கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அருமையான பதிவு.
இது ஒரு விவாத பதிவாக இருப்பது ஒரு படி மேலே.

இரண்டு சங்கதிகள் மனிதனை இடம் விட்டு இடம் இழுத்துக்கொண்டு சென்று விடும்.

ஒன்று உணவு, மற்றொண்டு மரணம். இந்த இரண்டு விஷயத்திலும் மனிதன் தப்பவே முடியாது.

எந்தந்த இடங்களில் உணவுகளை நமக்காக வல்ல நாயன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளானோ அந்தந்த இடங்களுக்கு நம்மை உணவு இழுத்துவிடும்.

எந்த இடத்தில் மரணம் என்று எழுதி இருக்குதோ அந்த இடத்தில் வைத்து ரூஹ் வாங்கப்படும்.

எந்த நாடு?
அது அதிரையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாதுள் சரி, வல்ல நாயன் நாடினதுதான் கிடைக்கும்.

சேமிப்பா?
கணவன்மார்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இன்று எத்தனை இல்லத்தரசிமார்கள் சிக்கனத்தோடு செலவு செய்து வருகின்றனர்?

கணவனும் மனைவியும் நன்கு புரிதலுடன் முறையாக பட்டியல் போட்டு செலவு செய்யாதவரை சேமிக்க முடியாது.

ஆக, சேமிப்பு என்பது நம் கையில் இருக்குது, நாட்டைப் பொறுத்து இல்லை.

என்னைப் பொருத்தமட்டில், போடாத பட்டியல் அழுதாலும் தீராது, அதாவது எழுதாத கணக்கு அழுதாலும் தீராது.

இதுக்குமேலும் எழுதலாம், வேண்டாம் இதுவே போதும்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

sabeer.abushahruk said...

காதரும் ஜமால் காக்காவும் தத்தமது கருத்துகளை மிகவும் செறிவாகப் பதிந்துள்ளார்கள்.

இரண்டுமே அடிப்படையில் ஒரே கருத்துத்தான் எனினும் மாறுபட்டக் கோணங்களில் சொல்லியிருப்பதே அ.நி.யின் விவாதக்களத்தின் அழகு.

என் அபிப்ராயத்தோடு இதோ வந்துட்டேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருமையான விவாதக்களம் இது. இதற்கு தக்க பதிலை தன் வாழ்நாளில் பிழைப்பிற்காக பல நாடுகள் சென்று வந்த நண்பர்களும், அன்பர்களுமே சரியான முறையில் நாடிப்பிடித்து சொல்ல முடியும்.

அல்ஹதுலில்லாஹ், 1997லிருந்து சவுதி அரேபிய அனுபவம் இருப்பதால் இங்கு ஆரம்பத்தில் கடின வேலை, குறைந்த சம்பளம் என்று இருந்த போதிலும் ஊரில் நம் வீட்டுத்தேவைகள் பெரும் குறையின்றி, கடனின்றி கச்சிதமாகவே வல்ல அல்லாஹ்வால் நடாத்தப்பட்டு இன்றும் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

பல நாடுகள் சென்று வந்த மாற்று மத சகோதரகள் சவுதியில் பணிபுரிந்து கொண்டு பெரும்பாலும் சொல்வது என்னவெனில் "இங்கு எங்களால் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடிகிறது. ஆட‌ம்ப‌ர, (மது,மாது) அநாச்ச‌ர‌ங்க‌ள் இல்லை." என்ப‌தே. இன்னொரு ந‌ண்ப‌ர் சொன்னார், இது அல்லாவுடைய‌ ப‌ண‌ம், இங்கு ம‌க்கா, ம‌தீனா இருக்கிற‌து. என்று. நாம் என்ன‌ சொல்கிறோம் எனில் "குறைந்த‌ ச‌ம்ப‌ள‌மானாலும் அல்லாஹ்வின் ப‌ர‌க்க‌த் ஹ‌லாலான‌ ச‌ம்பாத்திய‌ம் எங்கிருந்தாலும் நிச்ச‌ய‌ம் இருக்கும்" என்ப‌தே. அதை இந்த‌ புனித‌ பூமியில் ஏற‌த்தாள‌ 15 வ‌ருட‌ கால‌ம் நாம் பார்த்து வ‌ருகிறோம் அல்ஹ‌ம்துலில்லாஹ்.

பெரும் க‌ட‌ன்க‌ள் இல்லாம‌ல் வாழ்ந்து வ‌ருவ‌தையே அல்லாஹ் ந‌ம‌க்க‌ருளிய‌ பேருப‌கார‌மாக‌ நாம் எண்ணி அவ‌னுக்கு அதிக‌ம் ந‌ன்றி செலுத்துவோம்.

நாம் வேலை செய்யும் நாட்டு ம‌க்க‌ளின் ம‌னோபாவ‌ம் க‌டின‌மாக‌ இருந்தாலும் அத‌னால் அல்லாஹ் ந‌ம‌க்கு மாதாமாத‌ம் கொடுக்கும் வாழ்வாதார‌மே நாம் அவ‌னுக்கு ந‌ன்றி செலுத்த‌ போதுமான‌து. அல்ஹ‌ம்துலில்லாஹ்.

Abdul Razik said...

சேமிப்பில் மனமும் பணமும், சிக்கனத்தில் கணவனும் மனைவியும் , சம்பத்தியத்தில் நேர்மையும் உழைப்பும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கு முறயான வரவு செலவு திட்டமும் ஒருங்கே சேர்ந்தால் உலகில் எந்த மூலையில் இருந்து சம்பாதித்தாலும் அழகான வாழ்வியலாதரத்தை திரட்டிக்கொள்ளலாம். ஆனால் Man offering God discarding என்பது போல் நாம் ஒன்று நினைத்து சேமித்து வைத்தவைகள் இயற்கையாய் இறைவன் நாட்டப்படி மாறி விடுகிறது. உண்மயான உழைப்பு ஒரு போதும் வீணாகாது.
துபாய் : படித்து நல்ல வேலயில் இருந்தால், உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட நல்லதொரு சூழல்.

Abdul Razik
Dubai

عبد الرحيم بن جميل said...

டைட்டிலை பார்த்துவிட்டு பெரும் ஆவலுடன் படித்தேன்...எதிர்பார்த்தவை கிடைக்கவில்லை

Yasir said...

சகோ.அபு ஆசிப் அவர்களின் கருத்தையும் /சகோ. ஜமால் காக்கா அவர்களின் அறிவுரையும் எல்லோரும் தன் வாழ்க்கையின் சூத்திரமாக ஆக்கிக்கொண்டால் எங்கிருந்தாலும்/எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,சம்பளம் நார்மலாக இருந்தாலும் சேமிக்க முடியும்..கணவன் சேமித்து மனைவி ஓட்டைக்கையாக இருந்தால் குடும்பம் விளங்காது, அப்படியே எதிருமாக இருந்தாலும்

என்னுடைய கருத்து,யூரோப்/ஆஃபிரிக்கா/மத்திய கிழக்கு/ முன்னாள் ரஷ்யக்குடியரசுகள் போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்தவன் என்ற முறையிலும், பல்வேறு மக்களின் அன்றாட வாழ்க்கையை அவர்களுடன் அமர்ந்து விவாதித்தவன் என்ற அனுபவத்திலும் பார்த்தால்....துபாயின் சூழல் சேமிக்கவும்/வாழ்க்கையை நன்றாக வாழவும் பல வகையில் உதவுகின்றது...சைத்தானை தூர வைக்க கற்றுக்கொண்டால் கோல்கத்தா சோனாக்காச்சியில் இருந்து கொண்டு நன்றாக ஐந்து வேளை தொழுதும் கொண்டு சாம்பாரிக்கவும்/சேமிக்கவும் செய்யலாம்....

இன்னொரு தகவல்...துபாயில் ஒரளவு டீசண்டாக வாழும் செலவு மற்ற பெரும்பாலன நாடுகளை விட 15 to 20% குறைவுதான் என்பது என் அனுபவ உண்மை

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

//எந்த நாடு பொருளீட்டவும், செலவு செய்யவும், சேமிக்கவும் ஏற்ற நாடு !?//


A country(its leaders) should have great leadership qualities and enterprising mentality.

As Shaikh Muhammad bin Rashid,Prime Minister and Ruler of Dubai said, "In the race for excellence, there is no finishing line". A country with such winning thoughts will prosper always.

We have to choose with smartness to live under good leadership, then the prosperity for us also assured. InshaAllah.

Its great place to work and live here in Dubai. I used to say whenever people wants to settle well. I used to advise them that we have to decide where to settle, either in home country or in earning country. Allah has given us the power to choose.

Earning money is based on the talents and skills of an individual. The education and proper training determine the above.

Note: Please checkout the following article in AdiraiNirubar to know about job hunting tips, specifically for bike riders community in Dubai.
www.adirainirubar.blogspot.ae/2012/11/risky-lives-of-dubai-motor-bike-riders.html

Spending is based on personal preferences and lifestyles of an individual.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எல்லா நாட்டையும் வருமானத்தை ஈட்டக்கூடியதாகவே இறைவன் நமக்கு தந்துள்ளான். அதில் ஈட்டியதை திருப்தியாக்கும், திருப்தியாக்கிடும் பொறுப்பு மனைவி கையிலேயே இருக்கிறது.

இன்று அதிகம் சம்பாதிப்பவன் திருப்தியில்லை காரணம் அவள் திருப்தியாக்கிக் கொள்வதில்லை. குறைவாக சம்பாதித்தாலும் அவளது ஒத்துழைப்பு, திருப்தியில் மகிழ்வாகவே இருக்கிறான்.

புதுசுரபி said...

சகோ.Abdul Khadir Khadir அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. அவர்களின் அனுபவமுதிர்ச்சியை எழுத்தில் அறிகிறேன்.

என்னுடைய கருத்தாய் பதிய விரும்புவது:- மனைவி பிள்ளைகளை பிரிந்து குடும்ப பொருளாதாரம், குழந்தைகள் கல்வி, அவர்களின் எதிர்காலம் என்று தன் வாழ்வை பணயம் வைக்கும் ஒவ்வொருவரும் -தான் இங்கே படும் கஷ்டம், பணிச்சுமை, Bed Space வாழ்க்கை என்பதை அவர்களுக்கு பதிய மறந்துவிடுவதுதான். மாறாக படகு போன்ற கார்,வானம் தொடும் கட்டிடங்களின் முன்நின்றும் எடுத்து அனுப்பும் ஃபோட்டோக்களின் விளைவு, “அவர்களுக்கென்ன சொகுசாய் வாழ்கிறார்கள், கேட்டவுடன் பணம் கிடைக்கும்” என்று ATM போல பயன்படுத்தப்படுவதையே பரவலாக அறியமுடிகிறது. பெற்றோரின் (கஷ்ட)நிலை, தங்களுக்காக வருந்தி உழைப்பதை கண்கூடாய் பார்க்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் மற்ற பிள்ளைகளுக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாகு.

அதுபோல சிகரம் தொட்ட பிள்ளைகள், நம்ம திருநெல்வேலியில் TVS-50ல் துணி வியாபாரம் செய்யும் வியாபாரியின் மகள் யாஸ்மின் 10ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்றதிலிருந்து, உலகமே கையில் வைத்திருக்கும் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜாப் ஸ்டீவ்ஸ் வரையிலும் பெற்றோர் படும் துன்பம் பார்த்தவர்களே!

நாம் எங்கே இருக்கிறோம்?????

Abdul Razik said...

Kind request to Editor
This is an important article for our youth, kindly request you to keep this title for a long-while until get lot of comments from AN readers. I too eager to script further.

Abdul Razik
Dubai

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abdul Razik,

Your suggestion to keep this post for long is good. However, the readers of this blog are open to write comment even in the older posts and the comments are shown in the right hand side as "புதிய உணர்வுகள்" regardless of the article pages we read.

I think every brother and sister who visit this blog have specific set of interests to read and comment. So, brothers and sisters whoever interested in this subject will sure provide their valuable insights. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com


தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் எந்த நாட்டில் சம்பாதித்தாலும், இந்த குர்ஆன் வசனங்கள் நல்ல நினைவூட்டலாக இருக்கும் என்று கருதுகிறேன்..

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே. (நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்). நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை. திருக்குர் ஆன் (69:25 - 69:35)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இன்னொரு தகவல்...துபாயில் ஒரளவு டீசண்டாக வாழும் செலவு மற்ற பெரும்பாலன நாடுகளை விட 15 to 20% குறைவுதான் என்பது என் அனுபவ உண்மை//

நானும் எல்லோர் மாதிரியும் அனுபவத்தில் ஏதாவது சொல்லனும் ஆசை... !

அப்புறம் மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டிகிட்டா என்னா செய்வது... (என்னோட பாஸுக்கு தமிழ் தெரியாதுன்னு எனக்கு கன்ஃபார்மா தெரியும், ஆனால் !?)

அப்துல்மாலிக் said...

துபாயை பொருத்தவரை டெக்னாலஜிலே ஒசரமான இடத்துக்கு போய்ட்டிருக்கு, அதனோட போட்டிப்போடனும்னா சம்பாதியத்துலே கொஞ்சம் செலவு செய்துதான் ஆகனும். எதுவுமே ஈசியா கிடைக்கு (உ.தா. சொகுசு கார், 24 மணிநேர இணைய இணைப்பு வசதி, வசதியான ஃபிளாட், உயர்தர ஸ்கூல், வாரகடைசிலே உயர்தர உணவகம், இப்படி.. நிறைய) அதற்கு கொஞ்ச செலவு செய்யவேண்டிருக்கு. அந்த செலவுகள்தான் நம் சேமிப்பின் குழி.......

இருக்கும்வரை சந்தோஷமா வாழலாம் என்பவர்களுக்கு துபாய் ஒரு வரப்பிரசாதம்...

இதே போல் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள நம்ம மக்கள் என்ன சொல்றாங்க என்பதை படிக்க ஆவலா உள்ளேன்...

Unknown said...

முன்பெல்லாம் அமீரகத்தில் சம்பாதித்து, தாயகத்தில் செலவு செய்தோம்.இப்போது அமீரகத்திலேயே சம்பாதித்ததை செலவு செய்து விட்டு, வெறும் பாஸ்போர்டுடன் தாயகம் செல்லும் நிலைமை ஏற்படுத்திவிட்டார்கள் ஆமீரக ஆட்சியாளர்கள்.

sabeer.abushahruk said...

காதர்,

கிடைப்பதே போதும், இறைவன் நாடியதுதான் கிடைக்கும், எவ்வளவு உழைத்தாலும் அல்லாஹ் விரும்பினாலேக் கொடுப்பான் போன்ற உழைப்பிற்கு எதிர்மறை எண்ணஙகளை மார்க்கம் சொல்வதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கோ எப்படியோ இவற்றை நாம் தவறாகப் புரிந்து வைத்துக்கொண்டு குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டுகிறோமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

எனக்கென்னவோ, "இதைவிட கடுமையாக உழை, உன்னோடு சேர்த்து உன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும், வயோதிகர்களுக்கும் கொடுக்க கூடுதலாக உழை, இதைவிட உழைத்தால் இறைவான் இன்னும் கொடுப்பான்" போன்ற உழைப்பை ஊக்குவிக்கும் இறை வசனங்களோ, நபி மொழிகளோ நிச்சயம் இஸ்லாத்தில் இருக்கும். எடுத்தியம்பும் ஞானம் எனக்கில்லை. ஆனால், நிச்சயம் இருக்கும்.

எனவே, அத்தகு ஊக்கம் தரும் எண்ணங்களே மனிதனை மேம்படுத்தும். தன்னால் இயன்றளவில் அதிகப்படியான உழைப்பை மூனதனமாக்குவது உயர்வுக்கு வழி வகுக்கும். அது ஹலாலான முறையில் இருப்பது அவசியம்.

க்ளர்க்காக வேலைக்குச் சேர்ந்த ஒருவர் அதற்கு மேல் உயர முயல வேண்டுமேயொழிய "இதுதான் இறைவன் எனக்கு விதித்தது. போதும்" என்று இருந்துவிட இஸ்லாம கண்டிப்பாகச் சொல்லாது. அப்படிச் சொல்லியிருந்தால், நான் இந்நாள்வரை ஒரு செக்ரட்டரியாகவே செளதியில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்திருப்பேன். அடுத்தது என்ன என்கிற எண்ணமே உழைப்பில் சிறந்தது; கிடைத்தது போதும் என்பதல்ல.

இருப்பினும், கிடைத்திபின் கிடைத்ததில் திருப்தி கொள்வதே ஈமான்.

நானும் 20 வருடங்கள் சவுதியிலும் இப்ப 6 வருடங்கள் துபையிலும் உழைக்கிறேன். சவுதியைவிட 4 மடங்கு சம்பளம் தருகிறார்கள் இங்கு. இருப்பினும் சவுதியில் உழைக்கும்போதே சேமிக்க முடிந்தது. பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தனர். இங்கு சேமிக்க இயலவில்லை. செலவும் கூடுதல்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் படிப்பு போன்ற செலவுகளும் கூடுதல். காஸ்ட் ஆஃப் லிவிங்கும் இங்கு (சவுதியைவிட) கூடுதல்தான்.

கடின உழைப்பும் சேமிப்பும் எங்கும் சாத்தியமே. போதுமென்ற மனம் வந்துவிட்ட பொருளுக்கு வேண்டுமானால் பொன் செய்யும் மருந்து என்றாகலாம். வரவிருக்கும் பொருளுக்கோ, "கோடியை நாடி உழை; கிடைப்பதில் திருப்தி கொள்" என்பதே என் மொழி.

sabeer.abushahruk said...

ஜமால் காக்கா சொன்னது:

//சேமிப்பு என்பது நம் கையில் இருக்குது, நாட்டைப் பொறுத்து இல்லை.//

இதை தீர்ப்பாகவே சொல்லிவிடலாம்.

Unknown said...

Assalamu Alaikkum,
Dear brother Mr. mk Aboobacker,

//முன்பெல்லாம் அமீரகத்தில் சம்பாதித்து, தாயகத்தில் செலவு செய்தோம்.இப்போது அமீரகத்திலேயே சம்பாதித்ததை செலவு செய்து விட்டு, வெறும் பாஸ்போர்டுடன் தாயகம் செல்லும் நிலைமை ஏற்படுத்திவிட்டார்கள் ஆமீரக ஆட்சியாளர்கள்.//

How about a person(from our community) who is earning and living in Dubai(or his present earning country). But he is going vacation this time not to go to India but to Malaysia, Singapore or London, Paris or USA, Japan.?

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

புதுசுரபி said...

@ sabeer.abushahruk: எப்படி இப்படி........... சூப்பர்
தன்னம்பிக்கைத் த்ரும் சொற்கள்...

விரைவில் புதிய படைப்பு “சொல்மந்திரம்” AN ல்

Saleem said...

சேமிப்பு என்பது அவரவர் செய்யும் செலவுகளைப்பொறுத்து .சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு வெளிநாட்டு வானொலியில் ஒரு விவாதம் நடைபெற்றது அதன் தலைப்பு "when is enough is enough" முடிவில் மனிதன் ஒருபோதும் "enough is enough " என்று கூறமாட்டான் என்று முடிவு கூறினர்.அதன்படி நாம் எப்போது போதும் என்று நினைக்கிறோமோ அப்பொழுது எங்கு சம்பாதித்து செலவு செய்தாலும் சேமிக்கலாம்!!!! "" இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது,இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது!! ""

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் வரிகளை வரிக்கு வரி வழிமொழிகிறேன்; அடியேனும், சவூதியில் செக்ரடரியாக வேலை செய்தவன் தான்; அதுவே போதும் என்றிருக்கவில்லை; இன்னும் கவிவேந்தர் சொன்னபடிப் பிள்ளைகளின் தேவைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தகுந்தபடி அதிகரிக்கும் பொழுது நம் உழைப்பும் விடாமுயற்சியும் உளம்நிறைவாய் இருக்க வேண்டும்; அப்படியிருந்ததாற்றான், இங்கும் செகரடரி, கேம்ப்- பாஸ் என்று அலைக்கழிக்கப்பட்டு ஒரு நிரந்தரமற்ற நிலையில் யான் இருந்தாலும் துவக்கத்தில் பொறுமையுடனும், கடின உழைப்புடனும் தொடர்ந்தேன்; அல்லாஹ் அருளால் தானாகவே தேடி வந்தது எனக்கு விருப்பமான- நான் பயின்ற- பயிற்றுவித்த கணக்குப் பதிவாளர்ப் பணி சென்ற ஆறு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்;அல்ஹம்துலில்லாஹ்! விடுமுறை நாட்களிலும் விடாமல் பணி செய்து தொடர்ந்து நற்பெயரைப் பெற்று என் பணியில் மிகச் சிறந்தவன் என்ற பேரும் புகழும் பெற்றுள்ளேன்; இதனைப் படிப்போர் ஊக்கம் பெறவே ஈண்டுப் பதிகிறேன்.


மாஷா அல்லாஹ்! இறைவனின் நினைப்பு+கடின உழைப்பு= வெற்றி!

Unknown said...

சபீர்

,நமக்கென்று இறைவன் நிர்ணயித்த வாழ்வாதாரம் நம்மை வந்து அடையும் வரை நமக்கு இறப்பு என்று ஒன்று வராது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

மேலே கண்ட வாக்கியத்தில் நாம் கண்டிப்பாக கடின உழைப்பைக்காட்ட வேண்டுமென்ற சொல் உள்ளடங்கி இருக்கின்றது என்பதை அறியவும்.

வாழ்வாதாரம் என்பது, நம் தந்தை நமக்கு சேர்த்து வைத்த செல்வத்தைக்குரிப்பிடவில்லை. மாறாக நீ கடின உழைப்பைக்காட்ட வேண்டும் என்ற சொல் உள்ளடங்கி இருக்கின்றது.

இந்த ஆராய்ச்சி கடலில் . மூழ்கி ஒரு சில முத்துக்களை எடுக்கமுடியுமே ஒழிய, கடல் முழுதும் மூழ்கி முத்தெடுக்க முயற்சி செய்து விட முடியாது.

அபு ஆசிப்.



அபு ஆசிப்.

Adirai pasanga😎 said...

அன்பான சகோதரர்களே நீங்கள் எந்த நாட்டில் இருந்து பொருளீட்டினாலும் அல்லாஹ்வுடைய சட்டவரம்புகளைப்பேணி அவனின் கட்டளைப்படி அவனது தூதரின் வழிகாட்டுதலை பின்பற்றி வாழ்ந்து பொருள் ஈட்டிக்கொள்ளுங்கள்.

தப்லீக் ஜமாத்தில் ஒரு உதாரணம் ஒன்று சொல்வார்கள் அது இப்போது என் நினைவுக்கு வருகிறது. அதாவது வெளி நாடு ஒன்றிற்கு சம்பாதிக்க சென்ற ஒருவன் அங்கு தான் தேடிய செல்வத்தை அங்கேயே அவன் தவறான வழிகளில் ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் காலம் வந்ததும் வெறும் கையோடு ஊருக்கு வந்தானாம். வரவேற்புக்கு பதில் ஏமாற்றமே மிஞ்சியதாம் அவனுக்கு.

அதுபோலவே நம்மை நம் இறைவன் அவனை வணங்க இவ்வுலகத்துக்கு அனுப்பி அவனை வணங்கியதற்காக நன்மையெனும் கரன்சியை மறுமையில் அவனின் கணக்கில் வரவில் வைக்கிறான். அவனுக்கு மாறு செய்ததால் தீமைக்குப் பகரமாக தண்டனையை அதிகரிக்க செய்வான்.

மொத்ததில் எந்த நாட்டுக்குப் பொருளீட்ட சென்றோமோ அந்த நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனமான உண்மை. அதுபோலவே இந்த உலகத்தி\ற்கு வந்த நாம் ஒரு நாளைக்கு நம் இறைவன் முன் நிறுத்தப்படுவோம் என்பதை நாம் அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உலகம் நம்மை அவனின் கட்டலைகளை பேனுவதை விட்டும் ஏமாற்றாமல் பார்த்துக்கொண்டால் நிரந்தர மறுமை உலகிற்கு நன்மையெனும் கரன்சி நல்ல வெயிட்தான். இன்ஸா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கே என் ஓட்டு.

வரும் வாரம் இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனைகள் தொடர் சில கருத்துக்களைத் தாங்கி வர இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்.

நானும் லெபனான், குவைத், மஸ்கட், துபாய் என்றெல்லாம் இருந்துவிட்டேன். எனக்கு மறுவாழ்வு தந்தது மஸ்கட். இருந்தாலும் ஒரே ஒரு கருத்தை நான் கூற விரும்புகிறேன்.எங்கே இருந்தாலும் ,

ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை

என்பதே அது.

Ebrahim Ansari said...


ஜமால் காக்கா சொன்னது:

//சேமிப்பு என்பது நம் கையில் இருக்குது, நாட்டைப் பொறுத்து இல்லை.//

இதை தீர்ப்பாகவே சொல்லிவிடலாம். ஏற்கலாம். அதே நேரம் சில நாடுகளில் ஷைத்தான்கள் அதிகம். அமீரகத்தில் மிக அதிகம்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

சில நாடுகளில் உள்ள ஷைத்தான்கள் கண்களுக்கு புலப்படும்.
அமீரகத்தில் உள்ள ஷைத்தான்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

ஆனாலும் அமீரகத்தில் ஷைத்தான்கள் மிக மிக அதிகம்.

Ebrahim Ansari said...

அமீரக ஷைத்தான்கள் பல வங்கிகளின் கடன் அட்டை விற்பனைப் பிரதிநிதிகளின் வடிவிலே வந்து ஆசை காட்டி மோசம் செய்து பலரின் வாழ்வை - சேமிப்பை சூறையாடி யுள்ளன. இதே போல் மற்ற நாடுகளில் உள்ளனவா என்றும் ஒரு விவாதக்களம் வைத்தால் நலம்.

Yasir said...

என்னுடைய ஷைத்தான் கார்டுலயேயும் 2.5 லட்சம் திர்ஹம் அளவிற்க்கு லிமிட் உள்ளது ஆனாலும் ஊரில நிலத்தில போட்டா லாபம் கிடைக்கும் என்ற பேராசைக் கொண்டு ஏழைகளுக்கு நிலமே வாங்க வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்ட சில பணப்பேய்களின் ஆசை எனக்கு இல்லையாதலால்...அந்த கார்டு மூலம் லோன் எடுத்து எந்த முதலீடும் செய்யாமல்...வரும் வருமானத்தில் இயன்ற அளவிற்க்கு சேமித்து ஒரளவு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கின்றேன்..ஒரு லேபரை விட கம்மியான சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து நேர்மை / கடின உழைப்பு / இறைபயம் போன்றவற்றை மூதலிடாக கொண்டு முன்னேறி இருக்கின்றேன்...நான் பார்க்காத அனாச்சாரங்கள் இல்லை...சில ஹோட்டல்களில் என் யூரோப்பிய வாடிக்கையாளர்கள் ஒரு இரவிற்க்கு 20 லட்சம் இந்திய பணத்தை செலவு செய்ததை பார்த்திருக்கின்றேன்....ஆனால் அதற்க்கெல்லாம் நான் அடிமையாகவில்லை....கண்ணுக்கு தெரிந்தோ தெரியாமலோ நிறைய சைத்தான்கள் இருக்கின்றன எல்லா நாட்டிலும் ஆனால் “ அவுது பில்லாஹி மினஸ் ஷைத்தான் னிர்ரஜீம்” ஒதிக்கொள்ளும் பழக்கத்தை கற்றுக் கொண்டால் ஷைத்தான் என்ன ..தீங்கு செய்ய நினைக்கும் பூதங்களும் ஓடிவிடும்

Yasir said...

பல பள்ளிகளின் பாங்கோசை முழங்கும் துபாய் போன்ற நாட்டில் சைத்தான்கள் குறைவே (இந்த பள்ளிகளையும்/மருத்துவமனைகளையும் /பாதுகாப்பு வசதிகளையும் நிர்மாணித்தற்க்காவே அல்லாஹ் இவ்வாட்சி ஆளர்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பான்) ஆனால் நாம் ஏரோப்பிளானில் ஊரில் இருந்து போதே பாஸ்போட் எடுத்து கூடவே கூட்டிச்வரும் சைத்தான்கள்தான் மனதைக் கெடுத்து குட்டிசுவராக்குகின்றன....மனதை கட்டுபடுத்த பழகி கொண்டால் ஷைத்தானில் தோளில் கைப்போட்டு கொண்டு செல்லலாம்....எந்நாட்டிலும்

ZAKIR HUSSAIN said...

இருக்கும் இடத்தை தனது வசதிக்கு மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவன் மனிதன்
[ பாலைவன பூமியான சவூதியில் ஏத்தனை ஏர்கண்டிசன் யூனிட்கள் ?? ]

பண வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பிருந்தும் தவறிவிடுவது பெரும்பாலும் மனித தவறே அன்றி இறைவனை குறை சொல்வதில் எதுவும் ஞாயம் இல்லை.

ஊரில் நிறைய முல்லாக்கள் இளைஞர்களை "மோலெ" மாடாக ஆக்கிவைத்து இருக்கிறார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு