Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படங்கள் பேசுகிறதா ? 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 01, 2013 | , , , ,


மூன்றாம் கண்ணுக்கு முகவுரை மட்டுமல்ல முத்திரையும் தந்த Sஹமீது (காக்கா) அவர்கள் இப்போது பிஸியாக இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் பச்சைப் பசேல்னு கேட்கத்தோனுமே ? அம்மாவின் ஆதரவாளர்கள் ஏதோ உள்ளே நுழைந்து விட்டார்கள்னு கருத்து போடக் கூட எண்ணம் வருமே !?  ஷஃபி அஹ்மது தீட்டிய கேமராச் சித்திரங்கள் சிந்திக்க தூண்டிவிட்டு அடுத்து எங்கே சென்றது என்று கேட்கவும் தோனுமே....!?

எதுக்கு வம்பு என்று உங்க கிட்டேயே கேட்டுடலாமேன்னு தலைப்பிலேயே கேட்டு வைச்சுட்டேன்...!


விரித்து வைத்த பச்சைப் போர்வைக்குள் செல்ல இந்த செம்மண் பாதை மறக்க முடியாத இடம் (நிறைய கேமராக் கலைஞர்களுக்கு).


ஊட்டிக்குச் சென்று இந்த இயற்கை ப்யூட்டியை காட்சிப் படுத்தாமல் வந்தால் கேமராவை கண்டுபிடித்தவன் வருத்தப்படுவான்.


இவர் உலகம் சுற்றும் வாலிபன் அல்ல, ஊட்டியைச் சுற்றும் வயதில் சிறியவன் 


தோட்டக்கலைப் பூங்காவின் ஒரு பகுதி, பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற போர்டு போட்டவர்கள் அங்கு வரும் பூக்களையும் படங்கள் எடுக்காதீர்கள் என்றும் எழுதிப் போட்டு வைத்திருக்கலாம்...


மலை ஏறச் சென்றோம் மழை ஏறிட்டு வரவேற்கிறது...


வரைந்த படத்தில் தண்ணீர் ஊற்றிக் கலைந்த சாயம் அல்ல... நிஜமான நிழற்படம் மேகங்களின் சுழற்படம்.


மழை விட்டதும், சறுக்கிவிடும் சாலை, கோடுபோட்டு வழிகாட்டுகிறது...


மயக்கும் மலைகள் - அதனை
மறைக்கும் மழை !


சட்டென்று தலைக்கு மேல் போர்வை போர்த்திய கருமேகம்... நண்பகல் பொழுதை இரவாக்கிய அதிசயம் !


மூனாறு சறுக்கும் இடமெல்லம் மனதை மயக்கும் பசுமை அதில் பல்லாங்குழி சைசில் பள்ளங்கள் நெருங்கியதும் பாதாளம் சைஸாக இருந்தது.


எறும்புபோல் தெரியும் இந்த மாடுகளைக் காட்டி ஒருவர் சொன்னார், பக்கத்தில் போகாதீர்கள் அவைகள் காட்டு மாடுகள் என்று ! இங்கிருந்து அதனை காட்டிவிட்டு !


உச்சி வெயில் மணி பண்ணிரெண்டு, இருந்தாலும் குளிர் அப்போதும் கிடு கிடு நடுக்கம் அடித்த காற்றின் வேகம்.


கோடையில் நீர் தேடி ஏங்கும் நிலங்களின் வெதும்பல் எப்படி இருக்கும் என்று பச்சை போர்த்திய மலைகள் சொல்லிக் காட்டுகிறது.


கேமராவுக்கு பின்னால் 'இபு', வுக்கு பின்னால் அபு... கிளிக்கியது யாருன்னு சொன்னால் தான் தெரியுமா ?


அங்கே போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (தலை சுற்றுமாம்)...


இங்கிருந்து போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (மலைகள் சுற்றி இருக்கிறதாம்)

அபூஇப்ராஹீம்

23 Responses So Far:

sabeer.abushahruk said...

அபு இபு,

எல் ஈ டி ட்டிவியில் பார்ப்பதுபோல் மிகத் தெளிவான, மனத்தை மயக்கும் படங்கள்.

படங்கள் சிந்தையைச் சொக்க வைக்கின்றன. இதைப் பார்ப்பது நேர விரயமா?

sabeer.abushahruk said...

பச்சை முகடுகள்
அழகாக யிருக்கின்றன
கருத்த மேகங்களோ
அருளா யிருக்கின்றன

பூக்களைப் பறிக்காதீர்கள்
பூக்களின் அழகு
கண்ணைப் பறிக்கட்டும்

இயற்கை அழகுதான்
மனிதன் கைப்பட்டு
மேலும் அழகு



Ebrahim Ansari said...

அம்மாடியோவ்! பலநாட்கள் காத்திருந்தது வீண் போகவில்லை. கருத்துப் பெட்டகங்கள் திறக்கப்படும்போது சில நேரங்களில் காட்சிப் பெட்டகங்களும் திறக்கப் பட்டன. சில நாட்களால் திறக்கப் படாத கட்சிப் பெட்டகம் இப்படி ஒரு அருவியாகக் கொட்டி இருக்கிறது. இந்தக் காட்சிகளை நேரில் கண்டு அனுபவித்தவர்களுக்கு அல்லாஹ் அருளியிருக்கிறான்.

சென்ற விடுமுறையில் சுட்ட படப் பணியாரங்களாக இருந்தாலும் அடுத்த விடுமுறை வரும்வரை ஆறாமல் இருந்தது அவற்றின் சிறப்பு.

தன் சொந்தக் காமிராவில் சுட்டதைக் கூட உடனே வெளியிட முடியாத காரணம் வெவ்வேறு கருத்துப் பெட்டகங்களை திறந்து கொடுத்ததே என்ற வகையில் நெறியாளர் தம்பி அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா,

//சென்ற விடுமுறையில் சுட்ட படப் பணியாரங்களாக இருந்தாலும் அடுத்த விடுமுறை வரும்வரை ஆறாமல் இருந்தது அவற்றின் சிறப்பு.//

அடுத்த (விடுமுறை) படத்திற்கு முன்னர் ஏற்கனவே எடுத்த படத்தை வெளியிட்டுடாம்னு முடிவு செய்துட்டேன்... (இதில் ஏதோ படபிடிப்பு அறிவிப்பு மாதிரி அர்த்தம் பொதிந்திருந்தால் நான் என்ன செய்யனும்... :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா, 'இமேஜ்' ஐ பார்ப்பது எப்படி நேர விரயமாகும் !

sabeer.abushahruk said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
/கவிக் காக்கா, 'இமேஜ்' ஐ பார்ப்பது எப்படி நேர விரயமாகும் !
Reply திங்கள், ஏப்ரல் 01, 2013 10:26:00 PM



call diverted to Abu Nura and Abu Mahmoud

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer.abushahruk சொன்னது…
call diverted to Abu Nura and Abu Mahmoud///

காக்கா, இதுனால என்னோட 'இமேஜ்' ஐ பாதிக்குமோ ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகவும் அழகு!
ஹமீது காக்காவை மிஞ்சிடும் படங்களும், படத்துக்கே உரிய பானியில் எழுதப்பட்ட தமிழ் ஓவியங்களும் அருமை.
கண்டனம் தெரிவிக்கவாவது கருத்து சொல்ல வருவாங்களா ஹமீதாக்கா?

KALAM SHAICK ABDUL KADER said...

படங்கள் பேசுகின்றனவா? இல்லை; மாறாகக் கவிதைப் பூக்களாய் நறுமணம் வீசுகின்றன! விடிந்தும் விடியாத காலைப் பொழுதை விரலுக்குள் தட்டிய வித்தை ஒரு கவிதைப்பூ! கண்ணைப் பறிக்கும் பூக்களைக் கரங்கள் பறிக்கலாமா என்பதைக் கவிவேந்தரின் கவிதையைப் போலவே காமிராக் கவிதைப்பூ! மலையழகா? மழையழகா என்று பாட்டுமன்றம் துவக்கி வைக்கும் படமும் ஒரு கவிதைப்பூ! மலைமகள் உடுத்திய மடிப்புக் கலையாத பச்சைப்பட்டுச் சேலையின் ஓரங்களாய் வீதியொழுங்கின் கோடுகளைச் சேர்த்துச் சுட்டது பட்டுபோன்ற மெல்லிய கவிதைப்பூ!

sabeer.abushahruk said...

//மலைமகள் உடுத்திய
மடிப்புக் கலையாதப்
பச்சைப்பட்டுச் சேலையின்
ஓரங்களாய்
வீதியொழுங்கின் கோடுகள்//

வாவ்,கவியன்பன்.

Unknown said...

Padam pasumayayum kulumayayum noki va va yendru alaikavum seykirathu....

KALAM SHAICK ABDUL KADER said...

\\பூக்களைப் பறிக்காதீர்கள்
பூக்களின் அழகு
கண்ணைப் பறிக்கட்டும்\\

கண்ணைப் பறிக்கும் பூக்களைப் பற்றிய கவிதை என் “கல்பையும்” பறித்ததே கவிநிலவே! கவிவேந்தே!! ஆஸ்தான கவிஞரே!!!

”நீரோடைப் பக்கம்” நீந்திய உங்கள் கண்கள் “கலாமின் கவிதைகள்” பக்கம் விழவில்லையா?இலங்கைப் பேட்டியும், ரியாத்பரிசுப் போட்டியும் பேரும் புகழையும் தேடித் தருகின்றனவே, வாழ்த்த வரவில்லையே என்ற வருத்தம் மட்டும் இன்று எனக்குள்!

அப்துல்மாலிக் said...

சொல்ல வார்த்தையில்லை பார்க்க இரு கண்கள் போதாது..

நல்லாயிருக்கு என்று நான் சொல்லித்தான் தெரியனுமா என்னா...

sabeer.abushahruk said...

இபுறாகீமை ஓடவும் தேடவும் விட்டுட்டு நைஸா ஒளிஞ்சிக்கிட்ட பெருசுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பார்க்க: பூந்தோட்டத்தில் சற்றே பெரிய பூவான இபுறாகீம் ஓடும் ஃபோட்டோ.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கலக்கலான கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் நன்றி !

கவிக் காக்காவின் கவிதைக்குள் படங்கள் அனைத்தும் உட்காந்து கொள்ளும் அங்கே உயிரோடு இருக்கும்...

கவியன்பன் காக்காவின் கவிதைக்குள் படங்கள் உறவாடும், அதில் உரிமை தேடும்...

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abu Ibrahim,

Thanks a lot for sharing greenish hill station which is cool for eyes and pleasant for hearts.

Alhamdulillah, we feel fortunate to have such featured lands in our country.



B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com


Ebrahim Ansari said...

//கண்டனம் தெரிவிக்கவாவது கருத்து சொல்ல வருவாங்களா ஹமீதாக்கா?//

இன்ஷா அல்லாஹ் மருமகன் சா. ஹமீது வந்து கொண்டே இருக்கிறார். விரைவில் மீண்டும்.

Yasir said...

”உற்சாக ஊக்க மருந்து” எங்கள் அபு இபுராஹிம் காக்காவின் உள்ளத்தைபோல அழகுடனும்,உயிருடனும் இருக்கின்றது இந்தப்படங்கள்..வாழ்த்துக்கள்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//”உற்சாக ஊக்க மருந்து”//

இதென்னாது !? மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டதுன்னு அடிக்குறிப்பில் இட்டிருக்கனுமோ !?

ஏன்னா நான் ஸ்போர்ட்ஸ் மேன் இல்லை(ன்னு) எல்லோருக்கும் தெரியுமே ! :)

Unknown said...

இப்புடி என்னத்தையாவது உசுப்பேத்தி வுட்டு காச செலவாக்கிப்புடுரிய

Yasir said...

//ஸ்போர்ட்ஸ் மேன் இல்லை// நீங்க “ஸ்டார் மேன்” காக்கா.....என்னைப்போன்ற மழலைக்கும் எழுத உற்சாகம் கொடுத்தவர் என்ற நோக்கில் சொன்னேன்....அது சரி “டிவி” யை ஒளித்து வைத்துவிட்டீர்களா ?...ஐபில் தொடங்க போகுதாமே

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஆஹா அனைத்து படங்களையும் காண்பித்து எங்களையும் அவ்விடத்திற்கு நேராக செல்ல தூண்டில உட்டுப்புட்டிய

தனியாக எதுவும் ஊட்டி டூரிஸ்டர் கிட்ட டீல் எதுவும் இருக்கோ இப்படி ஒரு விளம்பர படம் மாதிரி தெள்ளத்தெளிவாவுலே இக்கிது காக்கா

KALAM SHAICK ABDUL KADER said...

மறைந்திருந்தே நோக்கும் மர்மம் என்ன என்று கேட்டிருந்தேன்; மறைந்திருக்கவில்லை என்பதை மனந்திறந்து என் வரிகட்கு விளக்கவுரை வழங்கி விட்டதன் ஊடாக அறிந்து கொண்டேன்; மிக்க மகிழ்ச்சி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

உரிமையும் உறவும் கொண்டாட உள்ளூர்ச் சகோதரர்களை விட உயர்வானவர்கள் எவரும் இலர்; குடும்ப உறவாக உணர்வதாற்றான் உரிமையுடன் கேட்கிறேன்;சில நேரங்களில் பிடிவாதமும் பிடிக்கிறேன் என்பதைச் சுட்டும் வண்ணம் “உறவும் உரிமையும்” என்ற உங்களின் உள்ளீடான வரிகள் உணர்த்துவதை அறிந்து பாராட்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு