அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே..
திருக்குர்ஆன் 8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
திருக்குர்ஆன் 3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
திருக்குர்ஆன் 4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
திருக்குர்ஆன் 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
திருக்குர்ஆன் 8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
அல்லாஹ்வின் மிகப்பெறும் கிருபையால் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரகர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு, தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 28-ஏப்ரல்-2013, மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வழமைபோல் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
27-ஏப்ரல்-2013 அன்று தக்வா பள்ளி 7 பேர் கொண்ட செயற்குழுக் கூட்டம், நடைபெற்றது. இதில் வழக்கம் போல் தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மைச் செய்தியை உடனுக்குடன் அதிரை செய்திகளை சுடச்சுட அளித்துவரும் நமதூர் வலைத்தளங்கள் தர தவறியது மட்டுமன்று சில வலைத்தளத்தில் தவறான தகவல்களும் பதியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த ஒருவாரமாக மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பேசப்பட்டு வந்த அதிரை பற்றிய செய்தியில் தக்வா பள்ளியில் வழக்கமாக நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிறுத்தப்பட்டதாக வெளிவந்த சர்ச்சையான தகவலுக்கு பின்னர் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் அந்தச் சூழலின் உண்மை நிலவரத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஆய்வு செய்து இரண்டு பதிவுகள் பதிந்தோம்.
http://adirainirubar.blogspot.com/2013/04/blog-post_22.html - http://adirainirubar.blogspot.com/2013/04/blog-post_2605.html
நம்மிடம் இருந்த, மேலும் கிடைத்த வலுவான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த சர்ச்சையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சி வலை கிழித்தெறியப்பட்டது.
மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல், நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் குழுவில் உள்ளவர்களின் சொந்தங்களிடம் மறைமுக மிரட்டல்கள் செய்தும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் மாபெறும் உதவியால் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
தக்வா பள்ளியில் மார்க்க சொற்பொழிவு வழக்கம் போல் நடைபெற்றது என்பதை நினைத்து ஒரு வகையில் நாம் சந்தோசமடைந்தாலும், நம் சகோதரர்கள் சத்தியத்துக்கு எதிராக அல்லாஹ்வின் விபரீதங்கள் அறியாமல் மேலும் மேலும் சூழ்ச்சிகள் செய்து அவமானப்பட்டு போவார்களோ என்ற ஓருவித அச்சவுணர்வும் நம்மில் பலரிடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
யா அல்லாஹ், இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக..
இதில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், யார் அவமானப்பட்டார்கள் என்று நாம் தனி நபர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவதைவிட. இறைவனை மட்டும் புகழ்ந்து, தவறு செய்த சம்பத்தப்பட்ட சகோதரர்கள் திருந்த வேண்டும், அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) என்ற அத்தியாயத்தில் 45 வது வசனம் முதல் (27:45) முதல் 53வது வசனம் வரை (27:53) கொஞ்சம் நிதானமாக வாசித்துப்பாருங்களேன், அண்மைக் கால அதிரை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விதமாக இருக்கும். அனைத்தையும் மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே…
இங்கு நாம் அழுத்தமாக சொல்ல விரும்பும் தகவல் என்னவென்றால், தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை நிறுத்தியது தொடர்பாக உண்மைக்கு புறம்பான அரைகுறை செய்திகளை வெளியிட்ட அதிரை வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணம் படைத்தவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயக்கமிருப்பின் தயவு கூர்ந்து தவறான செய்திகளைப் பதிந்து உண்மை நிலவரத்தை மறைத்து நமதூர் சகோதரர்களை குழப்ப வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிறமதத்தவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி செய்திகள் போட்டுவிட்டால் முஸ்லீம் ஊடகங்கள் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளுவது போல் சத்தியத்துக்கு எதிராக எல்லைமீறி சூழ்ச்சிகள் செய்துவரும் நம்மவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அவ்வகை தவறுகளிலிருந்து திருத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவதும் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளலாமே இன்ஷா அல்லாஹ்.
முக்கியமாக நினைவுறுத்துகிறோம், மெளலவி ஹைதர் அலி ஆலிம் என்ற தனி மனிதரை மட்டும் உயர்த்தி மற்ற மெளலவிகளை தாழ்த்தும் எண்ணம் எங்களுக்கு துளியளவும் இல்லை. தர்கா வழிபாடு, இணைவைப்பு மவ்லிது, அனாச்சாராங்கள், மூட நம்பிக்கைகள், பித்அத்துகளுக்கு எதிராகவும், சத்தியத்தை தைரியமாக எடுத்துச் சொல்லும் அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ், நம் அனைவருக்கும் பொறுமையையும், நிதானத்தையும் தருவானாக.
சத்தியத்துக்கு ஆதரவாகவும், அசத்தியத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நன்மக்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக.
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர் ஆன் 17:81)
நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் பதிப்பகம்
35 Responses So Far:
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்
Allahu Akbar
அல்லாஹ் மிகப்பெரியவன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
ஹைதர் அலி ஆலிம் பயான் தொடரட்டும்
அல்லாஹ் மிகப்பெரியவன்.
கீழே குறிப்பிட்டுள்ள படி கட்டுரையில் உள்ள சில தட்டச்சுப்பிழைகளை திருத்திக்கொள்ளவும்.
//அன்மைக் கால// அண்மைக்கால
//புரம்பான அறைகுறை// புறம்பான அரைகுறை
//பெறுமிதம்// பெருமிதம்
//நினைவுருத்துகிறோம்// நினைவுறுத்துகிறோம்
சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வே உனது மார்க்கம் அதன் தூய வடிவில் அனைவராலும் அறிந்து அதன் படி நடக்க நல்லருள் புரிவாயாக.
யார் இதனை எக்காரணத்தைக்கொண்டும் தடுக்க முயற்சி செய்தாலும் உனது பேரற்றலைக்கொண்டு அதனை தோல்வியடையச் செய்வாயாக
அவர்களுக்கும் நேர்வழிகாட்டி இந்த பயானில் கலந்துகொண்டு நற்பலனடைய நல்லுதவி புரிவாயாக
எங்கள் ஊரை நன்மையிலும் ஒன்றுபடசெய்வாயாக
தீமையை எதிர்ப்பதிலும் ஒன்றுபடச்செய்வாயாக
இயக்கம், அமைப்பு, கட்சி போன்ற மாயைகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்ட மக்களாக ஆக்கிவைப்பாயாக.
மற்ற ஊர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி முஸ்லிம் ஊராக மாற்றிவிடுவாயாக.
ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
அல்லாஹ் மிகப்பெரியவன்.
கீழே குறிப்பிட்டுள்ள படி கட்டுரையில் உள்ள சில தட்டச்சுப்பிழைகளை திருத்திக்கொள்ளவும்.//
தவறு எங்கிருந்தாலும் சுட்டுவதிலும், அதனைத் திருத்திக் கொள்வதிலும் முன்னிலையில் இருப்போம் இன்ஷா அல்லாஹ் !
ஜஸாக்கல்லாஹ் ! MSM(n)
அல்லாஹ் மிகப்பெரியவன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
//அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கும் இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம்.
இன்ஷா அல்லாஹ். //
அல்லாஹு அக்பர்
அப்துல் கபூர்
துபை
தக்வா பள்ளி மார்கெட்டில் உள்ள நிறைய வியாபாரிகள் தொழ ஆரம்பித்ததும் நிறைய பெண்கள் பர்தா விசயம் மற்றும் பல நடவடிக்கைகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த காரணமாகவும் இருந்த ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களின் பயான் தொடர்ந்து நடக்க வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன்.
அல்லாஹ் மிகப்பெரியவன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வே உனது மார்க்கம் அதன் தூய வடிவில் அனைவராலும் அறிந்து அதன் படி நடக்க நல்லருள் புரிவாயாக ஆமீன்.
யார் இதனை எக்காரணத்தைக்கொண்டும் தடுக்க முயற்சி செய்தாலும் உனது பேரற்றலைக்கொண்டு அதனை தோல்வியடையச் செய்வாயாக
இயக்கம், அமைப்பு, கட்சி போன்ற மாயைகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்ட மக்களாக ஆக்கிவைப்பாயாக.
சத்தியத்துக்கு ஆதரவாககுரல் கொடுக்கும் மார்க்க அறிஞர்கள் யாருக்கும் இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
யா அல்லாஹ், இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக
ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
BY LMS MOHAMED YOUSUF
நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் இதற்கு என்னையுனம் அற்பனிக்க நான் தயார்
நல்ல மன மாற்றத்துடன் சுமூக தீர்வு எடுத்த நிர்வாகத்துக்கு நன்றி.
இன்னும் மார்க்கத்துக்கு முரணான காரியங்களை (இணை வைப்பு ஓதல்கள்) அவர்களாக அறிந்து உணர்ந்து நிறுத்தம் என்ற நிலை முடிவு வராமல் தானாக நின்று விட அல்லாஹ் அருள் புரிவானாக.
அந்த ஆலிம் அவர்களுக்கு நிகராக குர் ஆன் ஹதீஸை முழுமையாக அறிந்து மேதகு லெவை மார்கள் சிறந்த பேச்சாளர்களாகி இனி இவர்களும் நல்ல குரல் வளத்துடன் மார்க்க சொற்பொழிவாற்றும் நாள் விரைவில் வரட்டும். இன்சா அல்லாஹ்!
பொறுமைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி.
நயவஞ்சகத்தின் தோல்வி
நிறைஞ்ச ஈமானின் சக்திக்கு கிடைத்த வெற்றி
உண்மைக்கு கிடைத்த வெற்றி
மொத்தத்தில் உண்மை இறைநம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
அபு ஆசிப்.
தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பி அதில் அவமானப்படனுமென்று சிலருடைய தலையிலே எழுதி இருக்கும்போது அதை யாராலே தடுக்கமுடியும் இனியாவது திருந்துவார்களா பார்ப்போம்
அல்லாஹ் மிகப்பெரியவன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
//அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கும் இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம்.
இன்ஷா அல்லாஹ். //
அல்லாஹு அக்பர்
//comments podhadhu kalathil iraggugal//
கல்லுடைப்பவனுக்கு குவாரியே களம்
நெல்விதைப்பவனுக்கு வயல்வெளி களம்
ஆட்டக்காரனுக்கு மைதானம் ஆடுகளம்
தோட்டக்காரனுக்கு தோட்டமே தொழிற்களம்
போர்வீரர்களுக்குப் போர் முனையே களம்
ஊர்ர்க்காரர்களுக்கு தெருவெல்லாம் களம்
எங்களைப்போன்ற சபுராளிகளுக்கு இத்தளமே களம்
இதிலுள்ள அதிரையர்களே எங்களுக்கு பலம்.
மாஷா அல்லாஹ் நியாயம் வென்றது
வாழ்த்துக்கள் இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும்
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
Alhamdulillahi Rabbil Aalameen. Its a good sign.
The sad thing we all have to realize is that controversies and bitterness among brothers are mostly happening in the name of great established religion Islam(where we have solutions to all human problems), due to misunderstandings between few people.
When we observe the issue happened, the involved people were the administration of a masjid and an imam, supporters of both parties, and few brothers exchanging health/unhealthy thoughts through comments in the blogs.
I wish there won't be further similar issues in our community.
If the same happen again and again it establishes a negative branding on our community. Actually the world is observing our behaviour and activities through media and above all Almighty Allah is an absolute observer of every one of us.
Jazakkallah Khairan.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அல்ஹம்துலில்லாஹ்....
ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் தொடரட்டும்.
அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹூ அக்பர்.
அல்லாஹூ அக்பர்.
//கல்லுடைப்பவனுக்கு குவாரியே களம்
நெல்விதைப்பவனுக்கு வயல்வெளி களம்
ஆட்டக்காரனுக்கு மைதானம் ஆடுகளம்
தோட்டக்காரனுக்கு தோட்டமே தொழிற்களம்
போர்வீரர்களுக்குப் போர் முனையே களம்
ஊர்ர்க்காரர்களுக்கு தெருவெல்லாம் களம்
எங்களைப்போன்ற சபுராளிகளுக்கு இத்தளமே களம்
இதிலுள்ள அதிரையர்களே எங்களுக்கு பலம்//
வாவ்,,,..அட்ரினலின் சுரப்பியைக்கூட அசைத்து பார்க்கும் சக்தி கவிக்காக்காவின் வரிகளுக்கு உண்டு ..மாஷா அல்லாஹ்
பயான் தொடர்ந்தது சரி . பாங்கு சொல்ல மைக் இல்லையாமே. ஒரு பதிவு பார்த்து அதிர்ந்தேன். மைக் பெட்டி மட்டுமல்ல கருத்திடும் பெட்டியும் பூட்டிக் கிடக்கக் கண்டேன்.
அல்ஹம்துலில்லாஹ்
"கல்லுடைப்பவனுக்கு குவாரியே களம்
நெல்விதைப்பவனுக்கு வயல்வெளி களம்
ஆட்டக்காரனுக்கு மைதானம் ஆடுகளம்
தோட்டக்காரனுக்கு தோட்டமே தொழிற்களம்
போர்வீரர்களுக்குப் போர் முனையே களம்
ஊர்ர்க்காரர்களுக்கு தெருவெல்லாம் களம்
எங்களைப்போன்ற சபுராளிகளுக்கு இத்தளமே களம்
இதிலுள்ள அதிரையர்களே எங்களுக்கு பலம்.
அஸ்ஸலாமு அலைக்கும்"
சபீர் எங்கிருந்துப்பா ஊருகின்றது இந்த ஊற்றுகள்
மிகவும் சுவைமிக்க ஊற்றாக இருக்கின்றது
வலைத்தலங்களே உன் ஊற்றால் மிதக்கின்றன.
அல்ஹம்துலில்லாஹ்
அன்பு சகோதரர்களே கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்களை பற்றி பின்னூட்டமிடுபவர்கள் ஆலிம் அவர்களின் பெயரை குறிப்பிடும்போது கண்ணிய குறைவாக வெறும் மொட்டையாக ஹைதர் அலி ஆலிம் என்று குறிப்பிடாமல்
கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் என்று குறிப்பிடவும். ஆலிம் அவர்கள்
நம் மனதில் பெரும் இடத்தை பிடித்திருந்தாலும்,"கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம்" என்று பின்னூட்டமிடுவது ஆலிம் அவர்களை கண்ணிய படுத்தும்விதமாக அமையும்
Post a Comment