Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்தி...! 38

ZAKIR HUSSAIN | April 21, 2013 | , , ,


மதங்களும் இலக்கியமும் புராணமும் இந்த வயதானவர்களை எப்படி பார்த்துக் கொள்வது என்று பல விதங்களில் சொல்லித் தந்திருகிறது. சில சின்ன சின்ன கதைகள் , உதாரணங்கள் இன்னும் கவிதைகள் என்று எவ்வளவோ சொல்லப்பட்டும் பெரியவர்கள் உதாசீணப் படுத்தப்படுவது இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே தென்படுகிறது. இன்றைக்கு கிடைக்கும் டெலிவிசன் நிகழ்ச்சியின் சந்தோசமும் , பொழுது போக்குகளின் சந்தோசமும் எத்தனையோ ஏணிகளை எட்டி உதைக்க காரணமாக இருந்து விடுகிறது.

இப்போது இருக்கும் பெரியவர்கள் என் ஆக்கத்தை படிப்பார்களா என தெரியாது, ஆனால் இப்போது உள்ளவர்கள் வருங்காலத்தில் வயதாகப் போவதால் என் ஆக்கத்தை புரிந்து ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் கேவலப்பட்டுப் போகும் சூழ்நிலைகளை விட்டு ஓரளவு தவிர்த்துக் கொள்ளலாம். இந்த ஆக்கம் எனக்கும் சேர்த்துதான் நான் எழுதுகிறேன்.

நவீனகால காற்றின் வீச்சு மனித வாழ்க்கையின் வேர்களை தாக்கி, பிடுங்கி  மறுபடியும் "நடவு" செய்ய பார்த்திருக்கிறது என்பது என் ஆழமான கருத்து.

இல்லாவிட்டால் தனிமை தாக்கும் மந்தாரமான வாழ்க்கை இன்றைய வயதானவர்களை தாக்கியிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

வழக்கமாக இது போன்ற சூழ்நிலையில் பிள்ளைகளை குறை சொல்வதும் அவர்களுக்கும் வருங்காலத்தில் இப்படிதான் நடக்கும் என்று சாபம் இடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. வாங்கி வந்த சரீரமே நமக்கு சொந்தமில்லை, ஒரு காலத்தில் வெள்ளைத் துணியில் சுற்றி அனுப்ப வேண்டிய கடனில் இருக்கும் போது பிள்ளைகளையும் சமுதாயத்தையும் , இப்போது வந்திருக்கும் கேட்ஜெட்டுகளையும் திட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை.

முதலில் மருத்துவ ரீதியாக உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை வயதானபிறகு மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. “நான் முன்பு இப்படி இயங்க முடிந்ததே ஏன் இப்போது முடியவில்லை” என்ற போராட்ட மனதே விரக்தியை விதைக்கிறது.

சின்ன பிள்ளையாக இருக்கும்போது சிறுவனாக மாறும் நம் உடம்பின் நரம்புகள் டிஜெனரேட்டிவ் நிலையை அடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வது இயற்கைதானே??. இதை ரத்தம் சூடேறி ஒடிய காலம் கால ஓட்டத்தில் அழுக்கையும் தன் வழிநெடுக ஒட்ட வைத்துப் போனதில் என்ன ஆச்சர்யம் கண்டு விட்டோம்.

இப்படி வாழ்க்கை முழுக்க இறைவன் வகுத்த விதிமுறைகளுக்கும் நமது கற்பனைக்கும் இடையில் நடக்கும் முரன்பாடே மனதையும் உடம்பையும் சோர்வடைய செய்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சுழ்நிலையில் படைத்த இறைவனை குறை சொல்ல வைக்கிறது.

இந்த பிரபஞ்சத்தையே ஆளும் இறைவனின் ஞானத்தோடு  ஒரு சதுர அடிக்குள் நின்று கொண்டு சிந்திக்கும் மனிதனின் சிற்றறிவு போட்டி போட நினைப்பதில் எந்த ஞாயமும் இருப்பதாக தெரியவில்லை.

'அப்படி ஒன்றும் இல்லை' என்று சொல்பவர்கள் யாரும் இதைக் கடக்காமல் இல்லை.




வாழ்க்கையின் பாதிக் கிணற்றை தாண்டுபவர்களுக்கென்று நிறைய பரிசுப் பொருள்களை ஃபார்மசூட்டிகள் கம்பெனிகள் கடை விரித்து வைத்து காத்திருக்கிறது.  ப்ரஸ்ஸர் மாத்திரையும் , இனிப்பு என்று சொல்லும் 'கசப்பு" நோய்க்கு கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளும் மனிதனின் ரத்தத்தில் மாற்றதை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மனித மூளைக்கு எடுத்துச் செல்லும் செயல்பாட்டில் கோளாறை ஏற்படுத்தி ஞாபகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மங்க வைக்கிறது. அதனால்தான் என்றோ ஒருநாள் ரயிலில் போகும்போது நிலக்கடலையின் தோல்களி நீக்கி ஊதி ஒசாப்பிட்ட ஞாபகம் இருக்கும்... காலையில் சாப்பிட்ட இட்லி டெலிட் ஆகியிருக்கும்.

30 வருடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகள் , மனிதனின் பெட்ரூம் வரை வந்து உறவை சிதறடித்து சென்றிருக்கிறது. மருந்து கம்பெனிகளின் 'மன்னிப்பு" இன்னும் மனிதனுக்கு செய்த துரோகத்தை ஈடு செய்யவில்லை. சரி இதையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்....பதில் மிக எளிது ' ‘தயாராகுங்கள்' அவ்வளவுதான்.

வருங்காலத்தில் வளர்ந்து வரும் கல்வியில் போராட்டமும் வேலைக்கும் பணத்துக்கும் தன்னை சுற்றி வளர்த்துக் கொண்ட செயல்களுக்கு பணம் பட்டு வாடா செய்யும் நேரத்திலும் வாழ்க்கையின் நேரங்கள் நிரம்பி வழியும்... நாம் வளர்த்த நம் பிள்ளைகள் நம் கண் முன் இருந்து நமக்கு எல்லாம் செய்யும் என்று எதிர் பார்ப்பது பழைய கதை ஆகிவிடலாம்.

நாம் இப்போது விரும்புகிறோமோ இல்லையோ பிள்ளைகளை மிகப்பெரிய வெற்றிக்கு தயார் படுத்துகிறோம். இதில் தவறில்லை, ஆனால் குர்ஆனையும், ஹதீஸையும் கல்யாண சடங்குகளிலும், பள்ளிவாசலில் தொப்பி போடுவதிலும் மட்டும் எடுத்து பேசி விட்டு அன்றாட நடைமுறையிலும், எதிர்கால சந்ததிகளை எப்படி உருவாக்குவது என்பதிலும் கோட்டை விட்டு விடுகிறோம். பெற்றவர்களாகிய நாம் "கண்டிப்பானவன்" என்று பெயர் எடுக்க ஆசைப்படுகிறோம்.ஆனால், பிள்ளைகளிடம் ' காது கொடுத்து கேட்கும் தகப்பன்" என்று பட்டம் வாங்கினால் கேவலம் என்று நினைத்து விடுகிறோம் என நினைக்கிறேன்.

அதனால்தான் நம் தெருவில் இப்படி / நம் சமுதாயத்தில் இப்படி / நம் ஊரில் இப்படித்தான் என்று கதைக்கு உதவாத ரூல்ஸ்களால் குடும்பத்தை விட்டு வெகுதூரமாகி விடுகிறோம்.

வயதானவர்கள் சொந்தமாக ஏற்படுத்திக் கொள்ளும் பயம் ஒரு திகில் கதை மன்னனின் அறிவை விட விசாலமானது. உடம்பு வளைய மறுக்கும் தருணங்களில் "எனக்கு வயசாகுதுலெ" என்று மூளைக்கு கமென்ட் அனுப்பிக் கொண்டிருப்பதால் தசைகள் இறுகிப் போகிறது. கொஞ்சம் முயற்சி என்பதே இல்லாமல் போனதால் வயது ஆகும் ப்ராசஸ் அவசரமாகவே நடந்து விடுகிறது. நம் பகுதிகளில் மகளுக்கு / மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் ஏறக்குறைய பெரியவர்கள் கல்யாணம் ஆகியும் துறவிகளாகிவிடுகிறார்கள். மருத்துவம் இதை "இயற்கைக்கு மாறானது" என்று சத்தியம் செய்கிறது.

ஒய்வு காலங்களில் தனக்கென்று ஒரு பொழுது போக்கு, தனக்கென்று ஒரு சின்ன விருப்பம் என்று வைத்துக்கொள்வது என்பது நம் பகுதிகளில் ஏதோ குற்றமாகவே பார்க்கிறார்கள். ஒரு முறை இங்கு வந்திருந்த நண்பர் நான் என் வீட்டுக்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருந்ததை பார்த்து ஏன் உங்களுக்கு ஒரு கூலி ஆள் கிடைக்கவில்லையா என்று கேட்டதிலேயே எனக்கு தெரிந்தது இதுபோன்ற வேலைகளை நாம் ஊரில் இருக்கும்போது செய்தால் கிறுக்கன், வெளிநாட்டில் இருக்கும்போது செய்தால் பரவாயில்லை என்ற தவறான ப்ரோக்ராமிங்.

பிள்ளைகள் பணம் தரும் , கூழ் ஊத்துவான் என்பதெல்லாம் பிளாக் & ஒயிட் காலத்து விதிமுறைகள். இப்போது அதை நம்பி வாழ்வது சவால்தான்.

ஒருமுறை நான் சந்தித்த ஒரு பெரியவர் தான் தன் பிள்ளைகளை எப்படி வளர்த்து  மிகப்பெரிய தொழில்களிலும் , உத்யோகத்திலும் அமர்த்தினேன்  என்று சொல்லிக் காண்பித்தார், சொல்லிக் காண்பித்த இடம் ஒரு முதியோர் இல்லம்.

எனக்கு அந்த பிள்ளைகள் மீது வெறுப்பு வந்தது, கொஞ்சம் கடுமையாக அந்த பிள்ளைகளை ஏசினேன். ' என் பிள்ளைகளை ஏசாதே தம்பி...திட்ட நினைத்தால் என்னைத்திட்டு.. இத்தனை பிள்ளைகளை கரை சேர்த்த நான் என்னை காப்பாற்றிக் கொள்ள தவறியது என் தவறுதானே?.....


இந்தக்கேள்வி நம் எல்லோருக்கும்தான்.

ZAKIR HUSSAIN

38 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum,
Dear brother Mr. Jahir Hussain,

An article that gives ideas for conscious, confident and independent living till the death. I hope these ideas will change the dependent mentality in future aging generations.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

Islam has unique framework for living and has an integrated, radical and systematic solutions for every issue and conflict in human life at any age. And it has 'prevention is better than cure approach' in resolving issues nip in the bud.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முதுமை என்னும் நாடிப்பிடித்து முறையான வைத்தியம் போல் இந்த முத்தான ஆக்கம் தந்த ஜாஹிர் காக்காவிற்கு என் சலாமும், து'ஆவும் சென்றடையட்டுமாக....

இளமைக்காலத்தில் சொந்தபந்தமென எங்கெங்கோ பம்பரமாய் சுற்றித்திரிந்த கால்களும், தேகமும் இன்று வயோதிகத்தாலும், அழையா விருந்தாளியாய் வரும் புதுப்புது வியாதிகளின் குடியேற்றத்தாலும் அவதியுற்று எல்லாம் முடங்கிப்போய், இனிப்பு என்ற நோய் தந்த அந்த கசப்பான காலை, மாலை என இருவேளை இன்சுலின் ஊசி மூலம் உடல் முழுவதும் பஞ்சராக்கப்பட்டு தினம், தினம் வரும் சாங்கால நேரம் இப்படி நம் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பது தான் எங்களின் இன்றைய நேர பொழுது போக்கு என சமீபத்தில் என் உம்மா சொல்லக்கேட்டு என் உள்ளம் சோர்வடைந்தேன் நம்மை எதிர்கொள்ள இருக்கும் எதிர்காலத்தில் இறைவன் நாட்டத்தில் என்னவெல்லாம் நம்மீது நடந்தேறவிருக்கின்றன என எண்ணியவனாக........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நவீன நாகரீக மாற்றத்தாலும், உலக வெப்பமயமாதலாலும் இன்று நம் ஊரில் கூட 40, 45 வயதிற்குட்பட்ட வாலிபர்கள் கூட அப்பாக்களாக ஆக்கப்பட்டு விட்டனர். ஆனால் அன்று 80 லிருந்து 90 வரை கம்பூண்டி சிறுவர்களாக இருந்த எம்மை அச்சமூட்டி எச்சரிக்கை செய்த உண்மையான அப்பாக்களை இன்று ஒரு சதவிகிதம் கூட பார்க்க இயலவில்லை. அன்று ஆளுமை செலுத்திய எத்தனையோ நெஞ்சம் கவர்ந்த அப்பாக்கள் இன்று அவரவர் கபுர்களில் அவன் நாட்டப்படி அமைதியாய் அடங்கிப்போய் விட்டனர். எனவே 20 டு 30ல் இருக்கும் இளைஞர்கள் அம்பதிலிருந்து எம்பதுவரை இருப்போரை எக்காரணம் கொண்டும் உதாசீனப்படுத்தாதீர்கள். காரணம் அதுவரை நீங்கள் எட்டிப்பிடிக்க இறைவன் நாடி இருக்கிறானோ, இல்லையோ? எவன் தான் எளிதில் அறிந்து விட முடியும் அவனைத்தவிர?

sabeer.abushahruk said...

மிக ஆழமான சிதனையின் வெளிப்பாடு. ஐடியலான எதிர்பார்ப்புகளிலிருந்து வெளியாகி எதார்த்தமான வாழ்க்கைக்குத் தயாராகச் சொல்வதில் ஓர் அக்கறையிருக்கிறது.

அந்தி என்கிற தலைப்பின் பேசுபொருளில் மனிதர்களின் பிந்திய நாட்களைச் சொல்லியிருப்பதில் ஒரு பொயட்டிக் ட்டச்சும் உள்ளது.

ஆழ்ந்து வாசிப்பதற்கான எலிமென்ட்ஸ் நிறையவே இருக்கிறது.

குட் ஒர்க் டா.

Yasir said...

மாஷா அல்லாஹ்...காக்காவின் எழுத்து நெஞ்சில் ஒரு பெருமூச்சை இழுத்துவிட வைக்கின்றது.....பிறருக்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்துவிட்டு தமகென்று ஒன்றும் சேர்க்காமல் முதியோர் இல்லத்தில் கிடப்பது கொடுமையிலும் கொடுமை....இந்த ஞபாகப்படுத்தலுக்கு நன்றி ஜாஹிர் காக்கா

Ebrahim Ansari said...

எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து என் மூலமாக.

மருமகன் ஜாகிரின் "அந்தி" என்ன் ஐம்புலன்களையும் ஒரு அசைவு அசைத்துவிட்டது.

ஏனெனில் அந்தியை நானும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.

போட்டோவில் நடந்து போகும் அந்த மூவரில் கைலி கட்டிய ஆசாமி நான்தானோ? அந்தக் காலத்துப் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. "அந்தி சாய்கிற நேரம் - மந்தாரச்செடி ஓரம் ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா அடிச்சாராம் கண்ணு ! அவ சிரிச்சாளாம் பொண்ணு!." என்ற அந்தப் பாடல்தான் அது.

இந்த அந்தியிலே நான் கண்ணடிச்சா சிரிப்பாரும் இல்லை. அழுவாரும் இல்லை.

அந்தியிலே சாந்தி பெற கண்ணதாசன் ஒரு பாட்டெழுதினார் " யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க" ன்னு போக வேண்டியதுதான் .

மருமகன் ஜாகிர் இதை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் அந்த அளவுக்கு மருமகனிடம் சரக்கு இருப்பதாகத் தெரிகிறது.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் !

அபூ இபுராஹீம் அவர்கள் தவமாய் தவமிருந்து பெற்ற இந்த " அந்தி" இன்று இந்த தளத்தில் படிப்போருக்கு கிடைத்த அறுசுவை "பந்தி".

அந்தி எனும் ஸ்டேஷனுக்கு வந்து சேர, முந்தி வரும் வாழ்க்கை வண்டியில் முதல் பெட்டியில்தான் நானும் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

அண்மையில் இரு சம்பவங்களைப் படித்தேன். உறைந்தேன்.

ஒரு முதியவரை இறந்துவிட்டார் என்று இடுகாட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தனர் உறவினர்கள். தீயிடும் நேரத்துக்கு சற்று முன்புதான் அவர் உயிர் பிரிந்துவிடவில்லை என்று தீயிடுவோனுக்குத் தெரிந்தது. அவனிடம் அவர் சொன்னது " நான் செத்ததாகவே இருக்கட்டும் என்னை எரித்துவிடு- மீண்டும் இவர்களின் கரங்களில் திருப்பிச் சேர்த்து விடாதே!"

இன்னொரு முதியவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். இரண்டு மாதம் கழித்து அவர் இறந்துவிட்டார். உடனே உறவினர்கள் தந்திருந்த அலைபேசி தொலைபேசி அத்தனை பேசிகளுக்கும் தகவல் தெரிவிப்பதற்காக அழைத்தபோது தரப்பட்ட எண்கள் போலியானவை என்று தெரிந்தது. இறுதியில் அவரது இறுதி ஊர்வலம் - இறுதிச் சடங்கு அனாதைக்கு நடப்பதாக நடத்தப் பட்டது.

இதுபோல சம்பவங்கள் நடக்கின்றன. அல்லாஹ் காப்பானாக.

அதிரை.மெய்சா said...

அந்தி..! என்னை சிந்திக்கவைத்து விட்டது.

சிந்தனைக்கு மருந்திட்ட விழிப்புணர்வுக்கட்டுரை.

வாழ்த்துக்கள் அன்பரே.!

முதுமை உறவுக்காகவும் உண்மையான அன்புக்காகவும் ஏங்கும் தருணம். இத்தருணத்தை அனைவரும் கடந்தே ஆகவேண்டும் ஆகவே நாமும் முதியோர்களை ஆதரிப்போம். முழுமனதாய் ஏற்றுக்கொள்வோம்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

யாருக்கு யார் சொந்தம்?

செய்த நல்ல செயல்களுக்கு நன்மைகள் சொந்தம்.
செய்த தீய செயல்களுக்கு தீமைகள் சொந்தம்.

நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்,
நன்மைகளை அறுவடை செய்வோம், தீமைகளை விட்டு ஒதுங்குவோம்.

இறையச்சம், மரணம் குறித்து பயம், மறுமை குறித்து நம்பிக்கை இருக்கும் இதயத்தில் எந்த ஒரு களங்கம் இல்லாமல் தூய்மை மட்டும் இருக்கும்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Anonymous said...

DEARS:

PLS GO THRU THESE VERSES IN THE HOLY QURAN...

17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.

--
Thanks & Wassalam
Urs NF Abuhaamid

Unknown said...

Asssalamu Alaikkum
Dear brother Mr. NF Abuhaamid,

Thanks a lot for quoting relevant verses from Al Quran here.

May God Almighty lead us to the straight path.

JazaakkAllah Khairan.

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com


Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாகிர் காக்காவின் அந்தி நம் சிந்தனைக்கு உயர்தரமான மந்தி.ஜஜாகல்லாஹ் ஹைர்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

//ஒருமுறை நான் சந்தித்த ஒரு பெரியவர் தான் தன் பிள்ளைகளை எப்படி வளர்த்து மிகப்பெரிய தொழில்களிலும் , உத்யோகத்திலும் அமர்த்தினேன் என்று சொல்லிக் காண்பித்தார், சொல்லிக் காண்பித்த இடம் ஒரு முதியோர் இல்லம்.//

இடப்படாதக் கையொப்பங்கள்

வெட்டப்பட்டக் கிளையிலிருந்து
இன்னும்
உதிரா திருந்தன இலைகள்

வேர்களோடான
தொடர்பு துண்டிக்கப்பட்ட தறியாது
கரியமில வாயுவோடும்
கதிரவக் கதிர்களோடும்
சோலியாயிருந்தது
பச்சையம்.

மொட்டுகளும் மொக்குகளும்
கொழுந்துகளும் காய்களும்
பூக்களும் மகரந்தமமுமாய்
பூத்துக் குழுங்கிய மர மது.

காலங்களைச் சுமக்கும்
முதியோர்களிடம்
இடப்படாதக் கையொப்பங்கள்
மிச்சமில்லாததால்
காப்பகங்களில்
விடப்பட்டவர்களை விட்டும்
விலகி
இச்சைக்கேற்ற நிரமேற்று வாழ்ந்தன
பச்சோந்திகள்

காய்ந்தும் மடிந்தும்
சருகாகியும் மக்கியும்
போகும்வரை
வேர்கள்மேலான
பிடியை
விடுவதில்லை இலைகள்!



sabeer.abushahruk said...

// என் பிள்ளைகளை ஏசாதே தம்பி...திட்ட நினைத்தால் என்னைத்திட்டு.. இத்தனை பிள்ளைகளை கரை சேர்த்த நான் என்னை காப்பாற்றிக் கொள்ள தவறியது என் தவறுதானே?.....//

ஜாகிர், எல்லாப் பெற்றோரும் கைவிடப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம். நாலைந்து ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சோற்றுக்குக் கஷ்டப்படுவதையும் ஒரே பிள்ளையைப் பெற்றோர் மகனால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுவதையும் நாம் நம் ஊரிலேயெ கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

ஏன் இந்த முரண்? எனக்குத் தெரிந்து, வளர்ப்புதான். பொருட்களையும் படிப்பையும் வேலையையும் வாங்கிக்கொடுத்தப் பெற்றோர் அன்பையும் பாசத்தையும் கற்றுக்கொடுக்கத் தவறியதுதான் என்பது (பெரும்பாலும்) காரணமாக இருக்க முடியும்.

இளமையில் கற்றுக்கொடுக்கப்பட்டதைத்தானே அவன் வளர்ந்ததும் காட்டுவான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்காஸ்: இப்ராஹீம் கேட்டது "ஏன் டாடி அப்பாவுக்கு பயப்படுறீங்க?"

அது பயமில்லை மரியாதைன்னு நிச்சயம் தெரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு (இன்ஷா அல்லாஹ்)!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//
பிள்ளைகள் பணம் தரும் , கூழ் ஊத்துவான் என்பதெல்லாம் பிளாக் & ஒயிட் காலத்து விதிமுறைகள். இப்போது அதை நம்பி வாழ்வது சவால்தான்.//

இனி வரும் காலங்களில் இந்த சவால் வலுவடையும். ஆனால் இஸ்லாமிய உணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் தம் முதிய வயது பெற்றோருக்கு செய்யவேண்டிய சேவையை நிச்சயம் செய்வார்கள்.

நற்சிந்தனை தந்தமைக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்..



//எஸ். முகமது பாரூக் அவர்களின் கருத்து என் மூலமாக.

மருமகன் ஜாகிரின் "அந்தி" என் ஐம்புலன்களையும் ஒரு அசைவு அசைத்துவிட்டது.

ஏனெனில் அந்தியை நானும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.//

உங்கள் கருத்தை படித்ததும் கண்கலங்கிவிட்டேன்..

எங்கள் மூத்த சகோதரர் பாரூக் காக்கா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க துஆ செய்கிறேன்.

sabeer.abushahruk said...

அபு இபு,

பெரும்பாலும் பேரன்கள் அப்பாக்களை விரட்டுவதில்லை. மகன்கள்/மகள்கள்தான் பெற்றோரைப் புறக்கணிக்கின்றனர்.

sabeer.abushahruk said...

//ஏனெனில், அந்தியை நானும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன்//

ஒரு நாளின் நேரத்திலேயே ரசனை மிக்கது அந்திதான், இல்லையா காக்கா? விடியல் வேண்டுமானால் புதிர்களோடு துவங்கலாம். காலை பெரும்பாலும் காரியங்களால் ரொப்பப் பட்டிருக்கும். மதியம் இரெண்டுங்கெட்டான். மாலையோ மனித இயல்புகளான மயக்கங்களின் பிடியில், இரவோ மரண ஒத்திகை.

அந்தி மட்டும்தான் தெளிவானது. தொய்வான ஊஞ்சலில் நனவுகளோடு ஊஞ்சலாடுகையில் காது மடல்களில் காற்று உராய்ந்து கனமான வலிகளை லேசாக்கும். அந்தியை வசந்தமாக்குவதும் மந்தமாக்குவதும் ஏனைய காலங்களை எப்படிக் கழித்தோம் என்பதில்தான் இருக்கிறது.

அந்தியை நினைத்தால் மட்டுமே காக்காவுக்கு வந்தததுபோல் ஜோரான பாடல்கள் நினைவுக்கு வரும். "யாரை நம்பி நான் பிறந்தேன்" என்பதில் மட்டும் எங்கே சற்றே பிடி நழுவிய சோகம்.

மற்றபடி அந்தியை அனுபவித்து எங்களுக்காக இங்கு குறித்து வைக்கத் தவறாதீர்கள். அனுபவிக்கும் முன்பதாக அதை அறிந்துகொள்வதும் தனி சுகம்தான்.

இரண்டு காக்காமார்களும் உடல் நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள். இருவருக்கும் அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா:

பேரன்கள்/பேத்திகள் அப்பாக்களையும் / வப்பிச்சா / பெரியம்மா க்களை மதிப்பதில் இடைப்பட்ட வர்களை விட பல படிகள் மேல்தான் அதோடு முன்னோடிதான் அவர்கள் !

sabeer.abushahruk said...

.// "யாரை நம்பி நான் பிறந்தேன்" என்பதில் மட்டும் எங்கே சற்றே பிடி நழுவிய சோகம். //

எங்கோ சற்று பிடி நழுவிய சோகம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயர்சிந்தனைத் தத்துவங்கள்!

இறையச்சம், இரக்கம், இஸ்லாமிய பண்பு இருந்துவிட்டால் இல்லை இப்பிரச்சனை.

அல்லாஹ் நமக்கும் தந்து, அதுபடியே நம் வாரிசுகளையும் அமையச் செய்வானாக ஆமீன்.

Shameed said...

/டெலிவிசன் நிகழ்ச்சியின் சந்தோசமும் , பொழுது போக்குகளின் சந்தோசமும் எத்தனையோ ஏணிகளை எட்டி உதைக்க காரணமாக இருந்து விடுகிறது//.

//இந்த ஆக்கம் எனக்கும் சேர்த்துதான் நான் எழுதுகிறேன்//.


//நவீனகால காற்றின் வீச்சு மனித வாழ்க்கையின் வேர்களை தாக்கி, பிடுங்கி மறுபடியும் "நடவு" செய்ய பார்த்திருக்கிறது என்பது என் ஆழமான கருத்து//.

//வாழ்க்கையின் பாதிக் கிணற்றை தாண்டுபவர்களுக்கென்று நிறைய பரிசுப் பொருள்களை ஃபார்மசூட்டிகள் கம்பெனிகள் கடை விரித்து வைத்து காத்திருக்கிறது.//

//என்றோ ஒருநாள் ரயிலில் போகும்போது நிலக்கடலையின் தோல்களி நீக்கி ஊதி ஒசாப்பிட்ட ஞாபகம் இருக்கும்... காலையில் சாப்பிட்ட இட்லி டெலிட் ஆகியிருக்கும்.//

// குர்ஆனையும், ஹதீஸையும் கல்யாண சடங்குகளிலும், பள்ளிவாசலில் தொப்பி போடுவதிலும் மட்டும் எடுத்து பேசி விட்டு அன்றாட நடைமுறையிலும், எதிர்கால சந்ததிகளை எப்படி உருவாக்குவது என்பதிலும் கோட்டை விட்டு விடுகிறோம்//.

//அதனால்தான் நம் தெருவில் இப்படி / நம் சமுதாயத்தில் இப்படி / நம் ஊரில் இப்படித்தான் என்று கதைக்கு உதவாத ரூல்ஸ்களால் குடும்பத்தை விட்டு வெகுதூரமாகி விடுகிறோம்.//

//வயதானவர்கள் சொந்தமாக ஏற்படுத்திக் கொள்ளும் பயம் ஒரு திகில் கதை மன்னனின் அறிவை விட விசாலமானது. உடம்பு வளைய மறுக்கும் தருணங்களில் "எனக்கு வயசாகுதுலெ" என்று மூளைக்கு கமென்ட் அனுப்பிக் கொண்டிருப்பதால் தசைகள் இறுகிப் போகிறது.//


//மகளுக்கு / மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் ஏறக்குறைய பெரியவர்கள் கல்யாணம் ஆகியும் துறவிகளாகிவிடுகிறார்கள். மருத்துவம் இதை "இயற்கைக்கு மாறானது" என்று சத்தியம் செய்கிறது.//

//பிள்ளைகள் பணம் தரும் , கூழ் ஊத்துவான் என்பதெல்லாம் பிளாக் & ஒயிட் காலத்து விதிமுறைகள். இப்போது அதை நம்பி வாழ்வது சவால்தான்//.

நான் ரசித்து ருசித்து படித்த வார்த்தைகள்

அதிரை நிருபர் எடிட்டருக்கு ஒரு இருபது வருடம் கழித்து இந்த கட்டுரையை மீண்டும் மறு பதிப்பு செய்யவும்

ZAKIR HUSSAIN said...

Thank you Brother Ahamed Ameen for your comments , i used to wait for your comments always as it has lot of input there to follow.

Brother NF Abu Haamid, சரியான நேரத்தில் குர் ஆனின் ரெஃபரன்ஸ் க்கு நன்றி. இது போன்ற அச்சுறுத்தல்களில் மக்களின் கவனம் இல்லாமல் போவதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும்.

சகோ எம் எஸ் எம் நெய்னா உங்களுக்கும் என் சலாமும் துஆவும்.

சகோ இப்ராஹிம் அன்சாரி , உங்களின் இரண்டு உதாரணங்களிலும் நிறைய படிப்பினை இருக்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு சம்பவம் இங்கு நடந்தது அது பேப்பரிலும் வந்தது.

பாரூக் மாமா அவர்களுக்கு....எதிர்பார்ப்புகள் அற்ற வாழ்க்கையில் விரக்தி குறைவு. அந்தி வயதில் அந்திக்காற்றில் இருக்கும் சுதந்திரம் மட்டுமே பிடிமானம்.

சகோ அதிரை மெய்சா & KMA ஜமால் முஹம்மது ,அபு இப்ராஹிம், எம் ஹெச் ஜே அனைவருக்கும் நன்றி.

சபீர்.. உன் எழுத்தில் ஒருசின்ன திருத்தம் எப்படி 'வளர்க்கப்பட்டிருக்கிறான்" என்பதை விட எப்படி 'வளர்ந்திருக்கிறான்" என்பதை வைத்தே மனிதன் நடந்து கொள்கிறான். எல்லா பெற்றோரும் பிள்ளையை நல்லபடியாகத்தான் வளர்க்கிறார்கள், "தறுதலை" ப்ரோகிராமிங் பெரும்பாலும் 'ஆட்டோ டவுன்லோட்" தான்.

எல் எம் எஸ்...'மந்தி' சாப்பாட்டை இன்னும் மறக்கவில்லை என்பதிலேயே தெரிகிறது ரொம்ப பசியோட கமென்ட் எழுதியிருக்கீங்க.

தாஜூதீன்...துபாயில் சமீபத்தில் 'சூரிய கிரகணம்' வந்ததா?...உங்கள் ப்ரோஃபைல் படத்தை சொன்னேன்.

சாகுல்...20 வருடத்திற்கு பிறகும் ..இதே சூழ்நிலைதான். நாம் இப்போதோ விழித்துக்கொள்வோம்.


Ebrahim Ansari said...

மச்சான் பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் சொல்லி எழுதச் சொன்னது.

" குர் ஆனையும் ஹதீஸையும் பள்ளிவாச்லகளிலும் கல்யாண வீடுகளிளும்தான் ஆலிம்கள் சொல்ல முடியும். அவர்களின் தொப்பை வயிறும் கனத்த உடம்பும் இருக்கும் நிலையில் வேகாத வெயிலில் ஓடியாடி போதனை செய்ய முடியுமா? ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். "

Ebrahim Ansari said...

//அதிரை நிருபர் எடிட்டருக்கு ஒரு இருபது வருடம் கழித்து இந்த கட்டுரையை மீண்டும் மறு பதிப்பு செய்யவும்//ஹஹஹஹ்ஹா.

தேவைப்படும் . தேவைப்படலாம்.

Unknown said...

Assalamu Alaikkum
Respected brother Mr. Ebrahim Ansari,

//" குர் ஆனையும் ஹதீஸையும் பள்ளிவாச்லகளிலும் கல்யாண வீடுகளிளும்தான் ஆலிம்கள் சொல்ல முடியும். அவர்களின் தொப்பை வயிறும் கனத்த உடம்பும் இருக்கும் நிலையில் வேகாத வெயிலில் ஓடியாடி போதனை செய்ய முடியுமா? ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். " //

I would like to ask Mr. S.Mohammed Farook is mentioning the statement about himself or generally the Ulama's of our community.?

The above statement seems similar to that the people(in both cinema and real life conversations) used to make fun out of some police officers for their big bellies and irresponsible behaviour.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Yasir said...

//ZAKIR HUSSAIN சொன்னது…///ஜாஹிர் காக்கா நான் கென்யாவிலயிருந்து வந்துட்டேன் ..கமெண்ட்டும் போட்டிருக்கேன்...என்ன மறந்துட்டீங்களே :) kidding kakkaa...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"தறுதலை" ப்ரோகிராமிங் பெரும்பாலும் 'ஆட்டோ டவுன்லோட்" தான். //

ஒரு சில சிஸ்டமில் பூட்டாகும்போதே ஆட்டோ ரன் ஆகிவிடுவதுதான் பரிதாபம் !

அந்த சிஸ்டத்தை வச்சுகிட்டு மாரடிக்கிற பெற்றோரை நினைத்தால்தான் பாவம் !

ZAKIR HUSSAIN said...

Sorry Yasir, It was a mistake. Thanx for your comment. In fact whenever i reply & thanks to readers of my article, i will normally write their name in a paper and start reply to them. After i have seen your reply, i saw your name was written in the paper but not on the web. sorry about that.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது… தாஜூதீன்...துபாயில் சமீபத்தில் 'சூரிய கிரகணம்' வந்ததா?...உங்கள் ப்ரோஃபைல் படத்தை சொன்னேன்.//

ஹி ஹி..

இந்த பூமியில் நடக்கும் அநியாங்களை பார்க்க சகிக்கல என்பதை சொல்லத்தான் இந்த புரொஃபைல் புகைப்பட மாற்றம்..

Yasir said...

Kakka i was just pulling you leg kakka, was kidding...please don't say sorry to me kakka....it hurts...and you no need to say thanks to me....and i know you always read my comments

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
கருத்து பதிந்தேன் சில தொழில் நுட்ப கோளாறு காரணமாய் எல்லாம் மாயமாகிவிட்டன! அந்தி! அருமையான தலைப்பு! மாலை நேரம் என்பதுடன் முச்சந்திக்கும் அந்தி என பெயருண்டு.மேலும் இதன் மூலம் சந்திசிரிக்க(அழவைக்கும்)சந்ததிகள்(பிள்ளைக(ல்)ள்)!அந்தி மழை அழுதாலும் விடாது - பழமொழி!இப்படி பல தொடர்புகள் உள்ள ஆக்கம். மனிதன் மூப்பு வந்த உடன் ஆப்பு வைக்கப்பட்டு எந்த தொடர்புகளும் அற்றவனாக ஆக்கப்படு"வதை"(அதுவும் வதைதான்)தந்திபோல் முந்தி சொல்லி இருக்கீங்க! வழக்கமாய் நல்லதொரு விழிப்புனற்வு ஆக்கம்.வாழ்த்துக்கள்.

Ebrahim Ansari said...

// "யாரை நம்பி நான் பிறந்தேன்" என்பதில் மட்டும் எங்கே சற்றே பிடி நழுவிய சோகம்.//

அந்தியிலும் அயல்சார்பு இல்லாமல் தற்சார்புடன் வாழும் நிலையை "தன்னம்பிக்கை" என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எல்லோருக்கும் அமையாது. இது ஒரு வரம்.


அப்துல்மாலிக் said...

நல்ல ஒரு புத்திமதி
தன் மகனை/மகளை எதிர்பார்க்காமல் நமக்காகவும் கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்பது வரவேற்க தகுந்த போதனை

எல்லாத்துக்கும் மேல் தன் பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளும் தன் பெயர் சொல்லி தெரியும் அளவுக்கு நம் வாழ்க்கை முறையும், அதற்கான செல்வமும் மிக மிக முக்கியம்

அப்துல்மாலிக் said...

முகநூலில் படித்தது:

தான் இறந்தால் மற்றவங்க அவரா அப்படி சொல்லாமல்

அல்லாஹ்வே அவரா இறந்துட்டார் என்று கொஞ்சமேனும் கவலைப்படும் அளவுக்கு நம் வாழ்வு இருக்கனும்......

Thameem said...

To my beloved Father

முகமது பாருக் அவர்கள் சொன்னது

//யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க//



எங்கும் போகலை தந்தையே இருவரும் உங்களிடம் தான் இருக்கிறோம். வாங்கடா என்று சொன்னால் ஒடடோடி வந்துவிடுவோம் தந்தையே !

And you, my father, there on the sad height,
Curse, bless me now with your fierce tears, I pray Allah

I am with you always.





உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு