Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விதை ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2013 | , , ,


"என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?"

நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா?

என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்ன வார்த்தைதான் அது.

என்ன புதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன், 

"என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும் ....அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி....."

விஷயத்திற்கு வருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத்தானிருக்கிறது ஆனால் நண்பருக்கு என் மொபைல் போனில் காணக்கிடைத்ததோ சிறுவர்களுக்கான நல்லொழுக்கம் பற்றிய  'அனிமேஷன்' படம் மற்றும் பாடல்கள். இது மேலோட்டமாக பார்க்கும்போது நண்பர் சொன்னது போலவே 'சிறுபிள்ளைத்தனமாக'த்தான் தோன்றும்.

ஆனால், 

நண்பர்களை விட அதிக உரிமையுடன் நம் மொபைல் போனை ஆராய்பவர்கள் இல்லை இல்லை ஆள்பவர்கள் நமது பிள்ளைகள்தானே? 

'சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்' என்பார்கள். அதுபோல நம்மிடம் என்ன உள்ளீடு இருக்கிறதோ அவைதானே நம்மை பார்த்து வளரும் நமது பிள்ளைகளின் முன்பருவ காலத்தில் எதிரொலிக்கும். அவைதானே விதையாய் விழுந்து விருட்சமாய் மாறும்.

முன்னொரு காலத்தில் (இன்று அப்படி சொல்ல வேண்டிய நிலை) சினிமா என்பது பொழுதுபோக்கிற்காகவும், திரைப்பாடல்களின் வார்த்தைகள் மனசாட்சி கொண்ட கவிஞர்களால் அதிகம் எழுதப்பட்டும், வசனங்களில் விஞ்சிநிற்கும் மொழிஆளுமை கையாளப்பட்டும், காட்சிகளில் பண்பாட்டின் அக்கறை போர்த்தப்பட்டும் வெளிவந்தது . இன்று நிலை எப்படியுள்ளது என்பதை விபரமாக எழுதவேண்டியதில்லை; நானறிவேன், நீங்களறிவீர்கள், நாடறியும் ஏன் நாளிதழ்களும் சாட்சி சொல்கின்றன.

எவையெல்லாம் நன்னெறிகள் என்று போதிக்கப்படுகிறதோ அவைகளுக்கு வேட்டு வைப்பவைகளாகத்தான் இன்றைய படங்கள்,   பாடல்கள் உள்ளது. காசுதான் கடவுளென்றும், ஓடிப்போய் கல்யாணம் செய்வது தவறில்லை மதுதான் சோகத்திற்கு மருந்து  என்றும் திட்டமிட்டு  புதுவிதிகள் புகுத்தப்படுகின்றன. இந்த முரண்பாடுகளைப் சிறுபிள்ளைகள் அறியாமலேயே  பாடல்களாக மனப்பாடம் செய்கிறார்கள் பின்னாளில் பொருளறியும் போது நன்னெறிகளுக்கு முரண்பட்டு வாழ்கையில் பிறழ்ந்திருப்பார்கள். இல்லை  பிறழச்செய்கிறார்கள். அநேக பெற்றோர்கள் தன் குழந்தை பாடும்  இதுபோன்ற விஷமூட்டும் பாடல்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் பாடச்செய்து மகிழ்கின்றனர். பகிரங்கமாக அங்கீகரிக்கின்றனர்.

பாடபுத்தகத்தின் நடுவே பாட்டு புத்தகத்தை மறைத்து வைத்திருந்து ஆசிரியரிடமோ அல்லது அப்பாவிடமோ மாட்டிக்கொண்டால் பெருங்குற்றம் புரிந்தவன் போல தடுமாறுவதும், அவர்களின் வசைப்பாட்டை வாங்கிக்கொள்வதுமான காலம் காலமாகிவிட்டது.

இன்று வன்முறை, ஆபாசம், தரக்குறைவான நகைச்சுவை, மது, புகை  இவையெல்லாமே தவறில்லை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்றும் சமூகத்தில் விதைக்கப்படுகிறது. 

சமீபத்திய ஆய்வு ஒன்றில் 90 சதவீத திரைப்படங்களில் 68 சதவீத வீடியோ விளையாட்டில் 60 சதவீத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் 15 சதவீத இசை ஆல்பங்களிலும் வன்முறை மற்றும் ஆபாசங்கள் தலைவிரித்து ஆடுகிறது என கணிக்கப்பட்டுள்ளது. மேலும்  இதுபோன்ற உள்ளீடுகனின் விளைவு எதிகால சந்ததியினரை சமூக அக்கறையற்றவர்களாகவும் சமூகத்திற்கெதிராக குற்றம் புரிவோராகவும்  மாற்றிவிடுகிறது என்றும் கண்டித்துள்ளனர் 

மேலைநாடுகளில் காலத்திற்கேற்ப திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு மதிப்பீடு போடப்படுகிறது. இது எந்த வயதினருக்கு பொருத்தமானது? சிறுவர்கள் மட்டும் காணக்கூடியதா? பெற்றோரின் வழிகாட்டுதலுடன் காணக்கூடியதா? என்று தரம் பிரித்து மதிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று வைத்துக்கொள்வோம்.

அதில் இடம்பெறும் காட்சிகளில் ஆபாசம், வன்முறை, கொலை, மது, புகை மற்றும் போதை போன்றவைகள் இடம்பெறாதிருக்குமாயின் அந்த நிகழ்ச்சிக்கு அல்லது படத்திற்கு "G" அதாவது General Audiences - குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு  பார்வையாளருக்கும் உகந்தது என்று மதிப்பிடப்படுகிறது.இதுபோல "PG" Parental Guidance Suggested பெற்றோர் அணுசரனையுடன் காண உகந்தது அல்லது பெற்றோர் பார்த்துவிட்டு இது பிள்ளைகளுக்கு பரவாயில்லை என்று  பரிந்துரைக்கக்கூடியது. 

அடுத்து  "PG-13" - Parents Strongly Cautioned இப்படி ஒரு தரம். இது 13 வயது பூர்த்தியடையாதவர்கள் பார்க்க  கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த தரமுத்திரை இடப்பட்ட படங்களில் ஆபாசம் ,வன்முறை,மது,புகை,போதை மற்றும் அருவருப்பான சொல்லாடல்கள் இருக்கும். (கிட்டத்தட்ட நம்மூர் 'குடும்ப' படமென்று சொல்லி வெளிவரும் படங்கள் போல - நமது தணிக்கைத்துறை தாராளமாய் அனுமதிக்கும் படங்கள்). இன்னும் R - Restricted என்றொரு மதிப்பீடு. இது 17 வயதுக்குட்பட்டவர்கள் கண்டிப்பாக பெற்றோர் அல்லது பெரியோர்களுடன் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்  மேலும் இந்த மதிப்பீடிட்ட படங்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காண்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தவும் செய்கிறார்கள்.

எல்லா அக்கிரமங்களும் அநியாயங்களும், தடித்த வார்த்தைப் பிரயோகங்களும் நிரந்த படங்களுக்கு NC -17 No one 17 and under Admitted. அதாவது 18 வயதிற்கு கீழுள்ளோரை ஒருபோதும் அனுமதிக்கவே வேண்டாம் என்ற மதிப்பீடு.

நம்நாட்டில் சினிமா காலடி எடுத்துவைத்தது 1896ம் ஆண்டு. ஆனால் திரைப்படங்களுக்கான மதிப்பீட்டினை நிர்ணயிக்க சென்சார் போர்டு எனும் தணிக்கைத்துறை நிறுவப்பட்டது எப்போது தெரியுமா? நாடு சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1952ம் ஆண்டு தான். அன்று நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடு இவ்வாறு உள்ளது:-

U - Unrestricted - 4 வயது குழந்தை முதல் அனைவரும் எந்த தடையுமின்றி பார்க்கலாம்;

A - Adults only - 18 வயது மற்றும் மேற்பட்டோர் பார்க்கலாம் (இது மேலைநாடுகளில் உள்ள R க்கு நிகரானதாம்!) அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1983ம் ஆண்டு,

UA - Under Adult Guidance - 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பெரியோர்களின் துணையுடன் பார்க்கலாம்; (இது மேலைநாடுகளில் உள்ள PG -13க்கு நிகரானதாம்!)

S -Specialised Audience - சில சிறப்பு பார்வையாளர்கள் அதாவது மருத்துவர்கள் போன்ற நிபுணர்களுக்கான பிரத்யேகமான படங்கள் என சில சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டதோடு நின்றுவிட்டது. சரி, இவையெல்லாம் மேற்சொன்ன அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட அந்தக்காலத் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தியிருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு எந்த சமூக அக்கறையுமின்றி இலாப நோக்கில்  தயாரிக்கப்படும்  இன்றைய திரைப்படங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த அதே மதிப்பீட்டு அளவுகோல்களும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பின் சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழைந்து அனைத்து வயதினரின் முன்பாக வரும்போது எந்த மதிப்பீடு கண்காணிக்கிறது என்பதும் இன்றளவும் கேள்விக்குறியே.

மிகவேகமாக மக்களைச் சென்றடையும் ஊடகத்தினை சரியான நெறிமுறைகளுக்கு உட்படுத்தத் தவறியாதால் பெருகும் குற்றங்கள்தான் இமயம் தொட்டிருக்கிறது.

”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா”, என மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். - இது 2010ம் ஆண்டு செய்தி.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,1953ம் ஆண்டில் நாட்டில் பதிவான குற்றங்கள் எண்ணிக்கையையும் அதேபோல் 2011ம் ஆண்டில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு  வளர்ச்சியினை(!) பட்டியலிட்டுத் தரும் விகிதாச்சாரமோ கதிகலங்க வைக்கிறது.

கொலைக்குற்றம் - 250%, கற்பழிப்பு - 873%, ஆட்கடத்தல் - 749%, வழிப்பறி - 194% மற்றும் சமூக வன்முறை - 234% ஆக மொத்த குற்றங்களின் வளர்ச்சி 286% வளர்ந்திருப்பதாக புள்ளிவிபரம் அலறுகிறது.

விழித்துகொண்டு வழிசொல்ல வேண்டிய தணிக்கைத்துறை உறங்கிக்கொண்டிருக்கிறதே.....

விதியென்று சொல்லிக் கொண்டிராமல் நாம் இனி செய்ய வேண்டியதென்ன?

விபரீதங்களை விளையாட்டாய் பார்க்கிறோமே..... விளங்கி அவற்றிற்கு விலங்கிடுவது எப்போது??

விருட்சங்களுக்கான விதை இங்கே; விதைப்பவர் எங்கே???

புதுசுரபி

13 Responses So Far:

அப்துல்மாலிக் said...

U, UA, A, S எல்லா வகை கருமாந்திரத்தையும் தான் டிஸ் லே போட்டிப்போட்டுக்கினு போடுறானுவோலே...

//உரிமையுடன் நம் மொபைல் போனை ஆராய்பவர்கள் இல்லை இல்லை ஆள்பவர்கள் நமது பிள்ளைகள்தானே? // அதுலே என்னா புது ஆப்ஷன் இருக்கு என்பது முதல் கொண்டு... :(

N.A.Shahul Hameed said...

Indian girl with swollen head needs 'miracle'

A desperate Indian father whose young child suffers from a condition that caused her head to swell up to an enormous size said Saturday he is praying for a "miracle" to save her life.

Eighteen-month-old Roona Begum was diagnosed with hydrocephalus, in which cerebrospinal fluid builds up in the brain, just weeks after her birth in a government-run hospital in remote Tripura state in northeast India.

The potentially fatal illness has caused Roona's head to swell to a circumference of 91-centimetres (36-inches), putting pressure on her brain.

Her father, Abdul Rahman, 18, who lives in a mud hut with his family in the village of Jirania Khola, told AFP he prays for "a miracle" that will save his only child.

"Day by day, I saw her head growing too big after she was born," said the illiterate labourer who works in a brick-making factory.

Doctors told him to go to a specialist hospital in a big city such as Kolkata in eastern India to get medical help but Rahman, who earns 150 rupees ($2.75) a day working in the brick plant, said he does not have the money to take her.

"It's very difficult to watch her in pain. I pray several times a day for a miracle -- for something to make my child better," he said.

The US government's National Institute of Neurological Disorders and Stroke estimates about one in every 500 children suffers from hydrocephalus.

The most common treatment involves the surgical insertion of a shunt system to drain cerebrospinal fluid away from the brain and towards another part of the body where it can be easily absorbed into the bloodstream.

Cases like Roona's, where the head has doubled in size in a relatively short span of time, are extremely rare, according to leading Indian neurosurgeon Sandeep Vaishya.

"It's difficult to assess the situation without seeing the patient, but a surgery, even at this late stage, would give her brain the best chance it has to grow and develop normally," Vaishya told AFP.

Vaishya, who is the head of neurosurgery at the privately run Fortis flagship hospital in Gurgaon, a satellite city of the national capital Delhi, said that surgeries to treat hydrocephalus cases are "not particularly risky".

Although the cost differs from case to case, he estimated that a complex surgery like this one would cost about 125,000 rupees ($2,300) and require a three-day hospital stay.

Roona now is confined to her bed and unable to move her head but she is a playful child, quick to smile and giggle and is able to move her limbs, according to her father.

She has outlived an initial prognosis by doctors that she would survive only two months.

But her mother, Fatema Khatun, 25, says the little girl's health is getting worse and that she urgently needs help.

"She is deteriorating. She eats less and less, vomits often and I can see that she is getting thinner," Khatun told AFP.

http://sg.news.yahoo.com/indian-girl-swollen-head-needs-miracle-000145253.html
Did you see any news from Indian Media?
Why this partiality?
N.A.Shahul Hameed

KALAM SHAICK ABDUL KADER said...

நல்லதொரு விதை விதைத்தீர்!

Ebrahim Ansari said...

//மிகவேகமாக மக்களைச் சென்றடையும் ஊடகத்தினை சரியான நெறிமுறைகளுக்கு உட்படுத்தத் தவறியாதால் பெருகும் குற்றங்கள்தான் இமயம் தொட்டிருக்கிறது.//

நெத்தியடி.

சகோதரர் புதுசுரபி மீட்டி இருக்கும் இந்தப் புதுசுரம் பல சமுதாய ஜூரங்களுக்கு மருந்தாகும்.

sabeer.abushahruk said...

நல்லதொரு விதை விதைத்தீர்.

amazing statistics on the subject.

well done and greetings, Pudhusurabi.

Meerashah Rafia said...

வலிக்காமல் விதைத்த விதைகள்..

இந்த பதிவில் ஒரே ஒரு திருத்தம் என்று நினைக்கின்றேன்..
அதாவது 1896 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு சினிமா வரவில்லை..மாறாக இந்த உலகிற்கே அப்போதுதான் முதன்முதலில் வந்தது.. விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் போல் லூமியர் சகோதரர்களால் கண்டுபிடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கு 1913 ல் ராஜா ஹரிசந்த்ரா என்ற படம் (silent film) தாதா சாஹேப் பால்கே என்பவரால் இயக்கப்பட்டது(இவர் பெயரில் கடந்த வாரம் கூட விருது கொடுத்தார்கள்).. 1937 ல் ஆலம் அரா என்ற படம் ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய வடிவில் வந்தது.. அப்போ ஆரம்பிச்சதுதான் இன்று வரை நாடும், உலகமும் சினிமா என்ற மாயையில் நாசமா ஆகிக்கொண்டிருக்கு..

அப்பாடா கல்லூரியில் 5 மதிப்பெண் வினாவிற்கு படிச்சத அப்புடியே இங்கு ஒப்பிச்சாச்சு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஃப் லைனில் வாசிக்கும்போது சட்டென்று ஏதாவது சொல்லத் தோனும் வாசிப்புகளில் அட என்று அதனை உடணடியாக மின்னஞ்சலில் சொல்லவும் வைத்தது இந்த விதை !

Meerashah Rafia said...

இளைநிலை பட்டப்படிப்பான காட்சி வழித்தொடர்பியல் (B.Sc.,Visual Communication) படித்துக்கொண்டிருந்தபோது திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் எங்களுக்கு கருத்தரங்கில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்திருந்தது.. இதுபோல் பலமுறை அழைப்பு வந்து கலந்துக்கொண்டிருக்கின்றோம்..

இம்முறை கருத்தரங்கின் இறுதி நிகழ்ச்சியாக நடிகர் நாசர் பேசினார்.. மாணவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.. அவரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது..

அப்பொழுது நான் ஒரே ஒரு கேள்வி கேட்டேன்..
"தமிழ்நாட்டில் சில இயக்குனர்கள் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் சென்னையில் உள்ள ஒரு சென்சார் போர்டை அணுகாமல் மகாராஷ்ட்ராவில் உள்ள சென்சார் போர்டை அணுகி "U" சான்றிதழ் வாங்குகின்றார்களே இது யாரை ஏமாற்றுகின்றது. சென்னையில் உள்ள சென்சார் போர்டை அணுகினால் "A" சான்றிதல் கொடுப்பார்கள் என்று அறிந்தே செய்யும் செயல்தானே இது "..என்று கேட்டுபுட்டேன்..

இந்த கேள்விக்கு அவருடைய பெரிய்ய மூக்கிற்கு மேல் கோபம் வர... நிகழ்ச்சி சீக்கிரமே முடிந்தது..அதிளிருந்து எந்த நிகழ்ச்சிக்கும் ஹோலி கிராஸ் எங்களை அழைக்கவே இல்லை..

மொத்தத்தில் இவர்கள் நம்மை பலமாதிரி ஏமாற்றி பிழைக்கும் ஒருமாதிரி பிழைப்புதான்..

Unknown said...

புது சுரபி அவர்களே,

தணிக்கைத்துறை, என்று ஒன்று உள்ளதா ?

என்ற கேள்வி எழும்போது, வரும் விடை,: உள்ளது. ஆனால் அது தன் சுதந்திரத்தை இழந்திருக்கின்றது இல்லையெனில், அது குறுக்குவழி சம்பாத்தியத்தை kurikkolaagakkondavargalin கூடாரமாகி அது எந்த
நோக்கத்த்திர்க்காக ஏற்ப்படுத்தப்பட்டோதோ , அதனினின்றும் விலகிப்போய் நிற்கின்றது என்று பொருள்.

இன்றைய காலகட்டத்தில் வரும் படங்கள் இதைத்தான் காட்டுகின்றன.
குடும்பத்தோடு பார்க்க தகுதியான படம் என்று ஒன்றைக்காட்ட முடியுமா?
குடும்பத்தோடு பார்த்தாலும், தனியாகப்பார்த்தாலும், சகோதரனோடு சகோதரன் பார்த்தாலும் , சகோதரி சகோதரியோடு பார்த்தாலும், கணவன்,மனைவியுடன் பார்த்தாலும், யார் யாரோடு பார்த்தாலும் மொத்தத்தில் , அனைத்தும் கழிசடையாக யாரும் யாரோடும் உட்கார்ந்து பார்க்க முடியாத தரங்கெட்ட படங்கள்தான் இன்றைய காலங்களில் வரும் படங்கள் அனைத்தும்.

புது சுஅரபி அவர்களே, தாங்கள் குறிப்பிட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,வெளியிட்ட பட்டியல் பிரகாரம்

,கொலைக்குற்றம் - 250%, கற்பழிப்பு - 873%, ஆட்கடத்தல் - 749%, வழிப்பறி - 194% மற்றும் சமூக வன்முறை - 234% ஆக மொத்த குற்றங்களின் வளர்ச்சி 286% வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், அனைத்திற்கும், முழு முதல் காரணம் இந்த தரங்கெட்ட சினிமாக்கள்தான் என்பதை ஏன்தான் இவர்கள் கண்ணுக்கும், அறிவுக்கும், சிந்தனைக்கும், எட்டாமல் போகிறதோ ? என்று தெரியவில்லை. அல்லது தெரிந்திருந்தும் காசுக்காக விலை போகிறார்கள் என்று சொல்லத்தோன்றுகிறது.

நம் பிள்ளைகளை இதிலிருந்து காப்பாற்றி ,ஒழுக்க சீலர்களாக மாற்ற , விபரீதங்களுக்கு விளங்கிட ஒரே வழி. ஒழுக்கத்தை போதித்து, இறை அச்சத்தை விதைத்தால் , எல்லாம் நன்மையானதாக , நம் இறப்புக்கு முன்பே நம் கண்குளிரப்பார்த்து , இவ்வுலகை விட்டு விடைபெறலாம்.

இன்ஷா அல்லாஹ் அப்படியே நடக்கவேணும் என்று நம்பிக்கையுடன்,

அபு ஆசிப்,
ரியாத், சவுதி அரேபியா.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Yasir said...

நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் ஆக்கம் இது...நன்றி சகோ.ரபீக்

புதுசுரபி said...

கருத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

@ Meerashah Rafia: சகோ. நீங்கள் சொன்ன அந்த லூமியர் சகோதரர்களால் 1890ம் ஆண்டு திரைப்படத்திற்கான கேமிராவை கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பின் சினிமா எடுத்து பிரபலமாகி, 1896ம் ஆண்டு அவர்கள் இந்தியா வந்து பாம்பே (இன்றைய மும்பை)யில் உள்ள பிரபலமான வாட்சன் ஹாலில் திரையிடப்பட்ட அவர்களின் திரைப்படமே இந்தியா கண்ட முதல் திரைப்படம். பின்னாளில் ”ஹரிசந்ரா” இந்தியாவில் இந்தியரால் தயாரான முதல்படம்.

@ Abdul Khadir Khadir : சகோ. இன்று இந்தியாவில் தணிக்கைத்துறை இருந்தும் இறந்திருப்பதால் தான் இந்த கட்டுரை பிறந்தது.

Yasir said...

http://gulfnews.com/news/world/india/indian-hospital-to-help-child-with-swollen-head-doctor-1.1170671

Indian hospital to help child with swollen head: doctor
Decision raises hope that 18-month-old Roona Begum, who suffers from hydrocephalus, will get life-saving surgery
AFPPublished: 15:01 April 15, 2013
Share on linkedinShare on facebookShare on twitterShare on emailMore Sharing Services3

Image Credit: AFP
Indian labourer, Abdul Rahman, 26, holds his 18 month old daughter, Roona Begum, suffering from Hydrocephalus, a buildup of fluid inside the skull that leads to brain swelling, in front of their home in Jirania village on the outskirts of Agartala, the capital of northeastern state of Tripura on April 12, 2013.
New Delhi: A top private Indian hospital offered on Monday to examine an 18-month-old girl suffering from a rare but treatable illness that has caused her head to swell to more than double its normal size.
The decision raises hope that eighteen-month-old Roona Begum, who suffers from hydrocephalus, a disorder which causes cerebrospinal fluid to build up on the brain, will get the life-saving surgery she urgently requires.
She was discovered last week living with her impoverished parents who are too poor to pay for treatment for the condition, which has resulted in her head swelling to a circumference of 91-centimetres (36-inches).
The publication of pictures taken by an AFP photographer in remote Tripura state in northeast India last Friday led numerous well-wishers to step forward offering donations, while a website has been set up to collect money for her.
Article continues below

Leading Indian neurosurgeon Sandeep Vaishya, who is the head of neurosurgery at a flagship hospital for the Fortis group near the capital, said that he would examine the girl and see if surgery was possible.
“Fortis will fly her down and while we will have to do an MRI to check the condition of her brain, I am hopeful that we will be able to carry out a surgery and relieve the pressure on the poor child’s brain,” said Vaishya.
The group has a charitable foundation which carries out surgery free of charge.
Her 18-year-old father, Abdul Rahman, who lives in a mud hut with his family in the village of Jirania Khola, said earlier that only a “miracle” could save his daughter’s life.
The swelling is putting pressure on her brain and has made it impossible for her to sit upright or crawl on the ground.
Local doctors had told the family to take the newborn to a private hospital in a big Indian city but the costs were too high for Rahman, an illiterate labourer who earns 150 rupees ($2.75) a day working in a brick plant.
The US government’s National Institute of Neurological Disorders and Stroke estimates about one in every 500 children suffers from hydrocephalus.
The most common treatment involves the surgical insertion of a mechanism to drain cerebrospinal fluid away from the brain and towards another part of the body where it can be easily absorbed into the bloodstream.
Extreme cases like Roona’s are very rare, according to Vaishya, who said he had been deluged with calls about the child after he spoke to AFP on Saturday.
“The child must be in a lot of pain because her head is so heavy. Still, in the images I could see that she was smiling sometimes, which makes me think that her cognitive functions might still be intact,” Vaishya said.
Surgery to treat hydrocephalus is not particularly risky, Vaishya said.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு