அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரையில் வர்த்தக & கலாச்சார பொருட்காட்சி மற்றும் திருவிழா சீறும் சிறப்புமாக(!!!) நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே.
பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் வரவேற்கத்தக்கவை. மேலும் ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய கந்தூரியையும் அதனை தொடர்ந்த அனாச்சாரங்களையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட ஓர் மாற்று ஏற்பாடு என்ற நோக்கமாக இருந்தால் வரவேற்கத்தக்கது, பாராட்டுதற்குரியது.
அதே சமயம், கந்தூரி ஷிர்க் அதனை தொடர்ந்த அனாச்சாரங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கு இன்னொரு சமூக சமுதாய சீர்கேடுகளான இன்னிசை கலை நிகழ்ச்சி, இசை, ஆட்டம் பாட்டம், இரட்டை அர்த்தமுள்ள உரையாடல்கள் & பாடல்கள், அதிலும் ஆண் பெண் ஒருசேர கலந்த பார்வையாளர்கள் கூட்டம் மேலும் இதன் மூலம் ஏற்படக்கூடிய தேவையற்ற அசாதாரண சூழ்நிலை இவை அனைத்தையும் எண்ணி பார்த்தால் கந்தூரியில் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இங்கு நடக்கும் செயல்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. மேலும், வெடி வெடிக்கப்பட்டு பணத்தை வீண் விரையம் செய்யாமல், அதை மற்ற நல்வழிகளான இஸ்லாமிய அழைப்பு பணி, ஷிர்க் மற்றும் பித்'அத் ஒழிப்பு பிரசுரங்கள் வெளியிட்டால் இதை காண வரும் அனைவரும் பயனடைவார்கள்.
மிக முக்கியமாக, இந்நிசை நிகழ்ச்சியின் மேடையில் (நேற்று முன் தினம்) 28.04.2013 முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. ஆண் பெண் ஒருசேர கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை காணும்போது ஏற்படும் வீண் விபரீதங்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
இத்திருவிழாவிற்காக, ஊரில் தினமும் ஆட்டோ விளம்பரம் செய்யப்படுகிறது, அதில் அன்றைய தினம் எந்த திரையுலக பாடகர் மற்றும் பாடகி கலந்துகொண்டு பாட இருக்கிறார் என்றும் மேலும் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் சேர்ந்து பாடலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறார்கள்.
இந்த அதிரை வர்த்தக & கலாச்சார திருவிழா ஏற்பாட்டளர்களின் நோக்கம் சேவை மனப்பான்மையாக தெரியவில்லை, இலாப நோக்கத்திற்காக எற்பாடு செய்யப்படுகின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமியர்களால் அதிலும் கந்தூரிகளுக்கு மாற்றமாக என்று மக்களிடம் பரப்பி கந்துரி நிகழ்ச்சிகளையே விஞ்சும் அளவிற்கு அனாச்சாரங்களை அரங்கேற்றுவது எவ்வகையில் நியாயம்.
மேலும், அவசிய தேவைகளை தவிர பெண்களை இதுபோன்ற காரியங்களுக்கு வெளியில் அழைப்பது திருமறையின் வரிகளுக்கு மாற்றமாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்;
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல் குர்ஆன்: 33:33)
பணத்திற்காக நம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு பொருட்காட்சி என்ற பெயரில் அதனோடு சேர்த்து மேலே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களை அரங்கேற்றும் இந்நிகழ்சியின் ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளவேண்டும்.
குற்றம் பிடிப்பது நமது நோக்கமல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இடப்படுகின்ற இந்த ஆக்கம் நல்லதை ஏவி தீமையை தடுக்கவேண்டும் என்ற இறை மறையின் கூற்றிற்கு இணங்க எழுதப்பட்டது.
இதில் ஏற்பாட்டாளர்கள் கவனிக்கவேண்டியது என்னவெனில், இசை மற்றும் அனாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் நடத்தினாலும் இந்த பொருட்காட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்பதுதான். ஆதாரமாக, குர் ஆன் மாநாடுகளுக்கு வரும் கூட்டத்தையும் வர்த்தக மையங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் சொல்லலாம். அநாச்சாரங்களுக்குச் செலவு செய்யும் பணமும் மிஞ்சும், வருபவர்கள் கவனம் சிதறாமல் வாங்குவதில் மும்முரமாவதால் வியாபார நோக்கமும் விருத்தியாகும்.
குறிப்பு: அதிரையிலிருந்து சகோதரர்கள் பகிர்ந்து கொண்ட காணொளி காட்சிகள் உங்களின் பார்வைக்காக.
மேலும் விபரங்கள் (இன்ஷா அல்லாஹ்) விரைவில்...
அதிரைநிருபர் பதிப்பகம்
59 Responses So Far:
அதிரையில் பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் வரவேற்கத்தக்கதுதான். இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்கள் ஆடல்,பாடல்,இசை மற்றும் ஆணும்,பெண்ணும் ஒரே இடத்தில் திரை யில்லாமல் கூடுவது. இந்த மாதிரியான செயல்களுக்கு எல்லாம் நிச்சயம் நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகவேண்டும்.
விளம்பரம் படுத்தலாம் அதில் தப்பு இல்லை பாடகர்,பாடகிகளை எல்லாம் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வர வேண்டும். இதை நடத்துபவர்கள் ஆடல்,பாடல்,கூத்து,கும்மாளம், மோளம் என்றல்லாம் இல்லாமல் அல்லாஹ்வுக்கு பயந்து நடத்த வேண்டும் இல்லை என்றால் நிச்சயம் அல்லாஹ்விடம் நாம் பிடிபடுவோம். இந்த பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடப்பதுடன் எந்த விதமான தீமைகளும் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பானாகவும். இதனைக் கொண்டு தீங்குகள் எதுவும் ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய கோப பார்வை வந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் இதை எல்லாம் குறிப்பிட்டது குறை கூரைக்கூருவதற்கோ,குற்றம் சொல்வதற்கோ இல்லை. நம் பெண்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு இவ்வளவு விசயத்தையும் குறிப்பிட்டு உள்ளேன். பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் எங்கும் போகக்கூடாது என்பதற்கு மேலே உள்ள திருக் குர் ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இதை படித்தாவது பெண்கள் திருந்துவார்களா? எவ்வளவு நம்ம ஊர் பெண்களுக்கு வீட்டுக்கு வீடு போகுவது ஒரு பொழுது போக்காக ஆக்கிவிட்டார்கள்.
பெண்கள் வீட்டுக்கு வீடு செல்வதால் அடுத்தவர்களை பற்றி புறம்,பசாத் என்றல்லாம் பேசப்படுகிறது இதற்கு எல்லாம் நாம் நிச்சயம் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும் ஆமீன்.
அதிரையில் பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் வரவேற்கத்தக்கதுதான். இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்கள் ஆடல்,பாடல்,இசை மற்றும் ஆணும்,பெண்ணும் ஒரே இடத்தில் திரை யில்லாமல் கூடுவது. இந்த மாதிரியான செயல்களுக்கு எல்லாம் நிச்சயம் நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகவேண்டும்.
விளம்பரம் படுத்தலாம் அதில் தப்பு இல்லை பாடகர்,பாடகிகளை எல்லாம் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வர வேண்டும். இதை நடத்துபவர்கள் ஆடல்,பாடல்,கூத்து,கும்மாளம், மோளம் என்றல்லாம் இல்லாமல் அல்லாஹ்வுக்கு பயந்து நடத்த வேண்டும் இல்லை என்றால் நிச்சயம் அல்லாஹ்விடம் நாம் பிடிபடுவோம். இந்த பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடப்பதுடன் எந்த விதமான தீமைகளும் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பானாகவும். இதனைக் கொண்டு தீங்குகள் எதுவும் ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய கோப பார்வை வந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் இதை எல்லாம் குறிப்பிட்டது குறை கூரைக்கூருவதற்கோ,குற்றம் சொல்வதற்கோ இல்லை. நம் பெண்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு இவ்வளவு விசயத்தையும் குறிப்பிட்டு உள்ளேன். பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் எங்கும் போகக்கூடாது என்பதற்கு மேலே உள்ள திருக் குர் ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இதை படித்தாவது பெண்கள் திருந்துவார்களா? எவ்வளவு நம்ம ஊர் பெண்களுக்கு வீட்டுக்கு வீடு போகுவது ஒரு பொழுது போக்காக ஆக்கிவிட்டார்கள்.
பெண்கள் வீட்டுக்கு வீடு செல்வதால் அடுத்தவர்களை பற்றி புறம்,பசாத் என்றல்லாம் பேசப்படுகிறது இதற்கு எல்லாம் நாம் நிச்சயம் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும் ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
வர்த்தக பொருட்காட்சி என்று பொய் சொல்லி, கந்தூரியை மிஞ்சும் அனாச்சாரங்களுக்கு துணை நிற்கும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.
“விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
“இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 பார்க்க: தஹ்ரீமு ஆலாத்தித் தர்ப் – 52)
“மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத் தடை செய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு, அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள், ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான், ”ஆம்” என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது, அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்றும் கூறினார்கள். (நூல்: அஹ்மத் – 4307)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)
அனாச்சாரங்களை மூலதனமாக நடைபெறும் இடத்தில், அதை காணவரும் மக்களிடம் தங்களின் வியாபாரத்தை செய்தால் அதில் பரக்கத் இருக்குமா என்பதை அங்கு கடை வைத்திருக்கும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்?
இது வர்த்தக பொருட்காட்சி, இதில் இசை இருக்கத்தான் செய்யும், சினிமா பாடல்கள் இருக்கத்தான் செய்யும், சினிமா நகைச்சுவை இருக்கத்தான் செய்யும், ஆணும் பெண்ணும் கலக்கத்தான் செய்வார்கள் என்றி வெட்டி வியாக்கியானம் செய்பவர்கள் சில கூறும் மற்றுமொறு அறிவாளித்தனமான காரணம் இதோ...
"வெளியூருக்கு நம்மூர் பெண்கள் வீட்டு பொருட்கள் வாங்க செல்கிறார்கள், அங்கு அனாச்சாரங்கள் செய்கிறார்கள் அதை தடுக்கவே இது போன்ற வர்த்தக கண்காட்சிகள்."
வெளியூர்களில் கள்ளத்தொடர்பு, இசை நடனங்கள் நடைபெறுகிறது, சிரமப்பட்டு அங்கெள்ளாம் செல்லவேண்டாம் நாங்களே நம்மூரில் அதை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று சொல்லும் அளவுக்கு முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குறியது.
பொருட்க்காட்சி சம்பந்தமாக ஒரு சில புகைப்படங்களை சகோதர வலைத்தளங்களில் காண முடிந்தது...ஆண்/பெண் அருகே அருகே நிற்ப்பதையும் காண முடிந்தது....”கண்கள்” செய்யும் விபசாரத்திற்க்கு துணைபோகும்.மார்க்க வரைமுறை பேணாத இந்த மாதிரியான பொருட்காட்சிகள் தடை செய்யப்படவேண்டியவை..இது பெருதீங்கிற்க்கு வழிவகுக்கும்....இதன் ஏற்ப்பட்டாளர்கள் மீது இறைவனின் சாபம் இறங்கும்...அல்லாஹ் பாதுகாப்பான்...பெண்கள் நாள் / ஆண்கள் நாள் என்று பிரித்து வைத்து செய்தால் ஒரளவாது பாதுகாப்பாகவும்/கண்ணியமாகவும் இருக்கும்.....
சிந்தியுங்கள் சகோதர்களே...மாற்றங்கள் கொண்டுவருகின்றேன் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்,தவறான கலாச்சார போதையை வருங்கால சமுதாயத்திற்க்கு அளிக்காதீர்கள்....
”அல்லாஹ்” என்றால் உறுதியான மலைகளே பிளந்துவிடும் அந்த வார்த்தைக்கு அனாச்சாரங்களுக்கு துணை நிற்கும் சகோதரர்கள் பயந்துகொள்ளட்டும்..
வர்த்தக பொருட்காட்சிகள் என்பது ஒவ்வொரு வர்த்தகமும் புதுப்புது பொருட்களை சந்தையாக்கவும் அதை வியாபார ரீதியாக விரிவுப்படுத்தவும் மட்டுமே, கலாச்சாரம் என்பது அங்கு வரும் மக்களுக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸாக விளையாட்டுகள் (அன்னலூஞ்சி, கொடவூஞ்சி, கேபிள் கார்,....) மட்டுமே. அதைவிடுத்து மேடை போட்டு ஆடல், பாடல் அனாச்சாரங்கள் என்பது தேவையில்லாதது, அப்படி இருக்கும்பட்சத்தில் எங்கே கூட்டம் கூடும் என்பது சொல்லித்தெரிவதில்லை. கந்தூரி வேண்டாம் என்று கொடி தூக்குவதால் இப்படி ஒரு பெயரில் அதையே செயல்படுத்த முயற்சிப்பது அனாகரிகம். இஸ்லாத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் போன அதிரையின் பெயரை இப்படிதான் பரப்புவதா?
//பெண்கள் நாள் / ஆண்கள் நாள் என்று பிரித்து வைத்து செய்தால் ஒரளவாது பாதுகாப்பாகவும்/கண்ணியமாகவும் இருக்கும்.....// இதை நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.....
நல்லதொரு யோசனை, அதை செயல்படுத்துவிதத்தில்தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது
//பெண்கள் நாள் / ஆண்கள் நாள் என்று பிரித்து வைத்து செய்தால் ஒரளவாவது பாதுகாப்பாகவும்/கண்ணியமாகவும் இருக்கும்.....// இதை நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.....
நல்லதொரு யோசனை, அதை செயல்படுத்துவிதத்தில்தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது
நானும் இதை ஆதரிக்கிறேன்
பதிவுக்கு நன்றி.
மது குடிப்போர் இருப்பதினால் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
அனாச்சார விரும்பிகள் இருப்பதினால் அனாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது.
வருமுன் காப்பது நம் கடமை.
இப்படி எலாம் நடக்கும் என்று வருமுன் தெரியாதா?
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்காட்சி நடைபெறும்,
இதன் மூலம் அதிரை வளர்ச்சி அடையும்,
வெளியூர் செல்லும் பயண வீண் விரயமும் குறையும்
என்ற நம்பிக்கையில் அன்று ஆதரித்தேன்.
இது சம்பந்தமாக ஹமீதாக்காவின் ஹைலைட்ஸ் பதிவில் கூட நெய்னா தம்பி காக்கா மற்றும் மு.கி அபூபக்கர் காக்கா கருத்துக்கு மாற்றுக் கருத்து பதிந்தேன். நம்மவர்கள் இந்த அளவுக்கு போய்விட மாட்டர்கள் என்ற நம்பிக்கையில்!
அதற்காக இன்று வருந்துகிறேன்!
நல்ல எண்ணத்தில் முதன் முதலாக அப்பவே ஃபேஸ் புக்கில் கூட உற்சாகப் படுத்தும் நோக்கில் விளம்பரத்தை பல தடவை (சேர்) பதிந்தேன். அதற்கும் வருந்துகிறேன்!
நம்மவர்கள் ஒரு அமைப்பு துவங்கி சமுதாய நோக்கில் அமைப்பு பெயரில் சேவை, பொழுது அம்சமாக நினத்ததற்கு மாறாக இது தனி நபர்கள் சிலரின் லாப நோக்கில் செயல்படுவதாக இப்ப அறிய முடிகிறது.
இஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டு நடக்குமென நம்பி முதல் பின்னூட்டமாக எக்ஸ்பிரஸ்ஸில் வரவேற்று பதிந்தேன்.
நடந்ததை அறிந்து பின் கண்டனத்தையும் அங்கு பதிந்து விட்டேன்.
இனி வரும் நாளிலாவது தவறுகளை களைவார்கள் என்ற நம்பிக்கையில்...
இன்சா அல்லாஹ்!
மேலேச் சொன்னதிலிருந்து நிறைய டெம்ப்ளேட் டவுண்ட்லோட் செய்ய முடிந்தாலும்...
நானும் ஏதாவது சொல்லனும்ல !
"இதுக்குதான் பாஸ் அப்பவே சொன்னேன்...!"
கலாச்சாரம் - கள்ளச் சாராயமாவதும்...
கந்தூரி காவலர்கள் - .................................
உருவாக்கி கொண்ட சூழலைப் பொருத்தது !(ன்னு)
நம்பலையே யாரும் !
தயை கூர்ந்து அப்படியே ப்ளேட்டை மாத்திப் போடுங்க...
வருமானம் கருதி, வருபவர்களின் மானம் காக்க கைகொடுங்கள் !
வர்த்தக பொருட்காட்சி என்ற பெயரில் துவங்கி நடன மேடையமைத்து திருவிழாவாக மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வர்த்தக பொருட்காட்சியுடன் பொழுது போக்கு அம்சங்களாக FUN CITY போன்று விளையாட்டுக்களும், அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் விதமான சில போட்டிகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேடையில் அரங்கேற்றலாம்.
கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற திருவிழாக்கள் தேவையா?
ஹந்தூரிக்கு மாற்று என்றால் ஹந்தூரியை நிறுத்தி விட்டோம் அதற்கு பதிலாக கொண்டாடுகிறோம் என்பது அர்த்தம். ஆனால் இனி வரும் காலங்களில் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய ஹந்தூரியும் நடக்கும்.
ஹந்தூரி மட்டும் போதுமா? கலாச்சார சீரழிவு வர்த்தக திருவிழாவும் இனி நடக்கும்.
இந்த திருவிழாவின் மூலம் அல்லாஹ்வின் மேல் உள்ள அரை குறை அச்சமும் மக்களின் மனதிலிருந்து விலகி விடும்.
வல்ல அல்லாஹ்விடம் - - மனிதர்களை பல வழிகளிலும் வழிகெடுப்பேன் என்று ஷைத்தான் அனுமதி வாங்கியுள்ளான்.
''ஷைத்தானின் நண்பர்களை'' மட்டும்தான் ஷைத்தான் வழிகெடுப்பான். அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுபவர்களை ஷைத்தான் வழி கெடுக்க முடியாது.
இந்த திருவிழாவின் மூலம் அதிகம் சந்தோஷப்படுவது ஷைத்தான்தான். மனிதர்களை எப்படி வழி கெடுக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ஷைத்தானுக்கு சிரமம் இல்லாமல் காரியங்கள் நடக்கிறது அல்லவா
//பெண்கள் நாள் / ஆண்கள் நாள் என்று பிரித்து வைத்து செய்தால் ஒரளவாவது பாதுகாப்பாகவும்/கண்ணியமாகவும் இருக்கும்.....//
இந்த ஷைத்தானிய திருவிழாவே சீரழிவு என்றால் - தனித்தனியாக நடத்தலாம் (((எப்பொழுது ஆட்டம், பாட்டம் என்று போய்விட்டதோ))என்பதும் தீமைக்கே வழி வகுக்கும்.
//அலாவுதீன்.S. சொன்னது…
இந்த ஷைத்தானிய திருவிழாவே சீரழிவு என்றால் - தனித்தனியாக நடத்தலாம் (((எப்பொழுது ஆட்டம், பாட்டம் என்று போய்விட்டதோ))என்பதும் தீமைக்கே வழி வகுக்கும்.//
இந்த கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகிறேன்...
சைத்தானிய திருவிழாவில் தங்களின் வியாபாரத்தை பெருக்க முடியும் என்று உன்மை முஸ்லீம் நம்பமாட்டான்..
"இதுக்கு அந்த பூனக்கொல்லையே எவ்ளோவ்க்கோ தேவலயா ஈக்கிம் போல ஈக்கிதே" என்று நம் ஊரில் சமுதாய நலன் கருதும் ஆண், பெண்களை இந்த அதிரை பெஸ்டிவல் எக்காரணம் கொண்டும் முணுமுணுக்க வைத்து விடக்கூடாது.....
அடுப்பங்கரையும், வீட்டு வேலையும் என முடங்கிக்கிடக்கும் நம் வீட்டு கண்மணியான பெண்மணிகளுக்கு அவரவர் வீட்டிலுள்ள பெரியவர்களும், ஆண்களும் மாதமொரு முறையோ அல்லது வருடம் சில முறையோ வெளியில் அழைத்துக்கொண்டு போய் கொஞ்சம் பொழுது போக்கு அம்சங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து ஆசுவாசப்படுத்த விரும்புவோர் தாராளமாக ஆள் ஆரவரமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் நமதூர் அல்லது மல்லிப்பட்டிண கடல்கரைக்கு அழைத்துச்சென்று (வீட்டிலேயே தயார் செய்த கொலக்கட்டை, கொண்டக்கடலை, முறுக்கு, முட்ட பஜ்ஜி, கோழி பஜ்ஜி, சிக்கன் 65 என....அவரவர் வசதிக்கு தகுந்தார் போல் எடுத்துச்சென்று) சுத்தாமான முறையில் பொழுதை கழித்து அதே சமயம் நேரம் வந்தால் அங்கேயே ஒளு செய்து எல்லோரும் சேர்ந்து தொழுது படைத்த இறைவனையும், அவர்களையும் அட் எ டயத்தில் சந்தோசப்படுத்தலாம் என்பது என் கருத்து. நீங்க என்னா சொல்றிய?????
பெண்கள், குழந்தைகள் மட்டும் பாதுகாப்பாக பொழுது போக்காக இருந்து வருவதற்கு சிறந்த நிரந்தரமான பூங்காவை அமைத்தால் நலம் அளிக்கும் என்பது என் கருத்து.
பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான அனைத்து விளையாட்டு கருவிகள் இருப்பது போல் செய்து விட்டால் இந்த வர்த்தக திருவிழா பக்கம் மக்களின் கவனம் செல்லாது.
சீரழிவைத் தரும் வர்த்தக திருவிழா தேவையில்லை - இப்பொழுது தேவை நிரந்தரமான பாதுகாப்பான பெண்கள், குழந்தைகள் மட்டும் சென்று வரக்கூடிய பூங்கா மட்டுமே.
இந்த திட்டத்தை செயல்படுத்த --- செயல் திட்டம் தீட்ட யாராவது முன் வருவார்களா?
//இந்த ஷைத்தானிய திருவிழாவே சீரழிவு என்றால் - தனித்தனியாக நடத்தலாம் (((எப்பொழுது ஆட்டம், பாட்டம் என்று போய்விட்டதோ))என்பதும் தீமைக்கே வழி வகுக்கும்.// ஆமாம் காக்கா இந்த டண்ணக்கா டணக்குடக்கா இல்லாமல் இருந்தால்
கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என்பவை உண்மையில் கலாச்சாரத்துக்கு எதிரானவையாகவே நடத்தப் படுகின்றன. இவைகளை தவிர்த்துவிட்டு ஒரு வர்த்தக கண்காட்சி என்கிற அளவில் இருந்தால் இவ்வளவு எதிர்ப்பு வராது.
அதே நேரம் ஒரு கேள்வியை வைக்க விரும்புகிறேன். ஆண்கள் பெண்கள் ஒன்று சேர்ந்து திரியும் நிகழ்ச்சிகள் எக்காலத்திலும் எல்லோராலும் ஏந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாதவைதான் .
ஆனால் போராட்டம் நடத்துகிறோம் என்கிற பெயரில் ஆண்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி ஆபாசமான கோஷங்கள் போடவைப்பதை எந்த இயக்கம் நடத்தினாலும் ஏற்கலாமா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்களும் திருந்தவேண்டும். கூட்டம் கூடிக் காட்டுவதற்காக பெண்களை பேருந்தில் ஏற்றி தொலை தூரங்களுக்கு அழைத்துச்செல்லும் பழக்கமும் நிறுத்தப் படுமா?
கலை நிகழ்ச்சிகள் ஓரங்கட்டப் பட்டு ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் தனித்தனியான நாட்கள் என்று வியாபார வளர்ச்சி என்கிற முறையிலும் புதிய தொழில்கள் அல்லது சேவைகள் அறிமுகம் என்கிற முறையில் மட்டும் நடத்தப் பட்டால் ஏற்கலாம்.
குத்தாட்டம், கும்மியடி கூட்டாஞ்சோறு என்று போனால் நம்மை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
துபாயில் நடத்தப்படும் ஷாப்பிங்க் பெஸ்டிவலில் நடைபெறாத அனாச்சாரங்க்களா என்று ஒரு கேள்வி அதிரையிலிருந்து அலை பேசியில் வந்தது.
ஆக அதிரை துபாய் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று சொல்லுங்கள்.
ஆக அதிரை துபாய் ஆகிக் கொண்டு இருக்கிறது என்று சொல்லுங்கள்.- இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மட்டும்.
//துபாயில் நடத்தப்படும் ஷாப்பிங்க் பெஸ்டிவலில் நடைபெறாத அனாச்சாரங்க்களா என்று ஒரு கேள்வி அதிரையிலிருந்து அலை பேசியில் வந்தது.//
என்னது ? அப்படின்னா... ஐக்கிய அதிரை எண்டர்டெய்ன்மெண்ட்.... (UAEன்னு மாத்திடுவாங்களோ)...
அமைப்பாளர்களுக்கு இசுலாத்தோடு வர்த்தக ரீதியிலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்று எண்ணியிருந்தால் ஆண்,பெண் கலக்காமல் அத்தர் முதல் ஆஸ்திரேலியாவில் படிக்க ஆலோசனை படிப்பு வரை சென்னையில் IRF நடத்திய Peace நிகழ்ச்சியை பார்த்திருக்கலாம்..
பொதுவில் சில நிகழ்சிகளில் நடத்தும்போது இசுலாமிய எல்லையை தாண்டக்கூடிய சூழ்நிலை உருவாகுவது இந்தியாவை பொருத்தவரை வாய்ப்புகள் அதிகம்ப்தான்.. இருப்பினும் இந்த கலாச்சார நிகழ்ச்சி இசுலாமிய எல்லையை ஒரு படி மேலேயே தாண்டிவிட்டதாக தெரிகின்றது.
//குற்றம் பிடிப்பது நமது நோக்கமல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இடப்படுகின்ற இந்த ஆக்கம் நல்லதை ஏவி தீமையை தடுக்கவேண்டும் என்ற இறை மறையின் கூற்றிற்கு இணங்க எழுதப்பட்டது.//
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் வேலை குறைவதால் அனாச்சாரங்கள் பெருகிவருகிறது. மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் நடக்கக்கண்டால் கையால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள் அல்லது மனதால் வெறுத்து ஒதுக்கிவிடுங்கள். என்பது ஹதீஸ். ஆலிம்களை அதிகமாகக் கொண்ட நமது ஊரில் எத்தனை பேர் கையால் தடுக்கும் பொருட்டு அவர்களிடம் சென்றார்கள். நாவால் தடுக்கும் பொருட்டு எத்தனை பேர் அவர்களிடம் எடுத்து சொன்னார்கள். குறைந்த பட்சம் மனதால் வெறுத்து ஒதுங்கியதை(?) வல்ல அல்லாஹ்வே அறிவான்.
அதிரை மக்களே - மக்களை நன்மையில் ஏவவும் தீமையிலிருந்து விலக்கவும் ஒன்று படுங்கள்.
சகோதரர்களே....
உங்களின் வர்த்தக நோக்கமும் அதற்காக பக்கபலமாக நிற்க யாவரும் தயாராகத்தான் இருப்பார்கள் அங்கே பொறாமை இல்லாத பட்சத்தில்....
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், இந்த திருவிழா மாற்று என்று சொல்லிவிட்டு இப்போ மாற்று(ங்கள்) என்று எதிர்ப்பு கிளம்ப வைத்ததற்கு யார் பொறுப்பு !?
ஒன்றும் சிதறிப்போகவில்லை... கொஞ்சம் சிரத்தை எடுத்து சரிசெய்து விடுங்களேன்... உங்கள் அனைவரின் வியாபாரம் விருத்தியடைய இன்னும் ஏராளமான கரங்கள் உயரும் அல்லாஹ்வின் புறத்தில் இன்ஷா அல்லாஹ் !
சவூதி அரேபியாவை பொருத்தவரை இரு பாலர் கலப்பதை தன்னால் முடிந்த அளவு அரசே தடுக்கின்றது.. இந்த நாட்டில் எமக்கு பிடித்தவைகளில் இதுவும் ஓன்று..
Note: ஒரு மூணு நாட்களுக்கு ட்ரேன்சிட்டில் UAE வந்துபார்த்தேன்.. உம்மாடியோவ்....
கந்தூரிக்கு மாற்றாக கருதப்பட்ட adirai festival இப்படி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்தது வருத்தத்தை தருகிறது.
சினிமா ஆடல் பாடல் கொண்டாட்டம் சைத்தானின் பயிற்சி அறை.இதற்கான எதிர் பிரச்சாரம் செய்ய வேண்டும்.பெண்கள்,சிறார்கள் நலன் கருதி இக்கேடுகெட்ட திருவிழாவை உடனே நிறுத்த வேண்டும்.
கந்தூரி சைதானிலிருந்து விடுபட சைத்தானுக்கு மாற்று வழிதான் இந்த திருவிழா கொண்டாட்டம்
அதிரை உலமா சபை முன்பே தடுத்ததை நாமெல்லாம் உதாசீனப்படுத்தினோம் பட்டு தெரிகிறோம். இது மூன்றாவது கந்தூரியாகி விட்டதாய் நம்மவர்கள் சொல்கிறார்கள். கடை வைத்து நடத்துபவர்களும் சங்கடப்படுகிறார்கள் காரணம் கூட்டம் எல்லாம் கச்சேரி பார்பதிலேயே இருப்பதால் வியாபாரம் ஆகவில்லை.
இஸ்லாமிய வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்படத்துவங்கியமைக்கு எனது கண்டனம்!
வர்த்தகம் மற்றும் கலாச்சார பொருட்காட்சி என்று பெயரளவில் விளம்பரம் செய்துவிட்டு,வர்த்தகம் மற்றும் கலாச்சார சீரழிவிற்கு வழி வகை செய்யும் இதுபோன்ற, மானம் மற்றும் ஒழுக்கச்சீரழிவிர்க்கு காரணமாக அமையப்பெறும் நிகழ்வுகள் காலம் காலமாக கண்ணியத்திற்கும் ஒழுக்க மேன்மைக்கும் பெயர் பெற்ற, சிறு மக்கா என்று பெயர் பெற்ற நம் ஊருக்கு இது தேவையா?
இதுபோன்ற சீரழிவு நகழ்ச்சிகள் இருந்தால்தான் கூட்டம் வரும் , வியாபாரம் நடக்கும் என்றால், அதற்கும், விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துபவருக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
பெரும் பெரும் ஆலிம்கள் உலமாக்கள் அலங்கரித்த , அலங்கரித்துகொண்டிருக்கின்ற , தஞ்சை மாவட்டத்திலேயே மிகப்பெரும் முஸ்லிம் ஜமாஅத் உள்ள ஊர் என்று பெயர் பெற்ற, எத்தனையோ சுற்றுவட்டார நம் சமுதாய மக்களுக்கு மார்கத்தீர்ப்பு சொன்ன , நம் ஊரிலா இது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ? என்று நினைக்கும்போது உண்மையிலேயே, நம் ஊரில் தீன் தேய்ந்து கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அல்லாஹ் காப்பாற்றவேணும்.
நம் ஊரின் பாரம்பரிய கண்ணியத்தை காக்க நினைப்பவர்கள் , ஒன்று இதனை முற்றாக ஊரை விட்டு எடுத்துவிடவேண்டும், அல்லது அல்லவைகளை நீக்கி , நல்லவைகளை , அதுவும் உபயோகம் உள்ள , பயனுள்ள , அறிவுள்ள விஷயங்களை வைத்து , மீதமுள்ள நாட்களை நடத்தி முடிக்க முயற்சி செய்தால்., நம் ஊரின் பாரம்பரியமிக்க , கண்ணியம் காக்கப்படும். அப்படி தவறும் பட்சத்தில், கந்தூரி எடுக்கும் நம் ஊர்வாசிகளுக்கு , இது ஒரு சாக்காக போய்விடும். இங்குள்ள அனாசாரத்தைவிடவா நாங்கள் எடுக்கும் கந்தூரியில் நடந்துவிட்டது ? என்று எதிர் கேள்வி கேட்கும் நிலைமைக்கு போய்விடும்.
ஆதலால், இதை முன்னின்று நடத்துபவர்கள், உண்மையில், அல்லாஹ்வின்மீதும்,நாளை மக்ஷரின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், கேலி, கும்மாளம், அரைகுறை, நடனம், பாலுனர்வைதூண்டும் பேச்சுக்கள், மற்றும் ஆண் மற்றும் பெண்கள் ஓரிடத்தில் கூடும் வாய்ப்பை ஏற்படுத்தி, அதனால் வரும் விளைவுகள் , இவைகளை நீக்கி நடத்திக்கட்டினால், இதை வரவேற்கலாம்.
இல்லையெனில் ,அல்லாஹ்வின் கோபமும், அவனது, சாபமும் நம் மீது ஏற்பட நாமே காரணமாகிவிட நேரிடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்.
இந்த கேடுகெட்ட காட்ச்சிகள் ஊரை விட்டு தொலையட்டும்.
ஆமீன்.
அபு ஆசிப்.
இது போன்ற கலாச்சார சீரழிவிற்கு கல்வி கற்கக்கூடிய பள்ளி கூட மைதானத்தில் இடம் கொடுப்பது வருங்கால மாணவர்களை சீரழித்துவிடும் .
பள்ளி கூட விழாக்களிலும் ஆட்டம் பாட்டத்தை நிறுத்த வழி செய்ய வேண்டும்
"அதிரை உலமா சபை முன்பே தடுத்ததை நாமெல்லாம் உதாசீனப்படுத்தினோம் பட்டு தெரிகிறோம்"
உதாசினப்படுத்தியது நாம் அல்ல கந்துரி கலாச்சார திருவிழா கமிட்டியர்கள்
//Abdul Khadir Khadir சொன்னது… கந்தூரி எடுக்கும் நம் ஊர்வாசிகளுக்கு , இது ஒரு சாக்காக போய்விடும். இங்குள்ள அனாசாரத்தைவிடவா நாங்கள் எடுக்கும் கந்தூரியில் நடந்துவிட்டது ? என்று எதிர் கேள்வி கேட்கும் நிலைமைக்கு போய்விடும். //
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் காதர் காக்கா,
மிகச் சரியாக சொன்னீர்கள், இதுவே தற்போது அநேகரின் கவலையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வர்த்தகம் கண்காட்சி என்றால் அதில் இசையில்லாமல் இருந்தா நல்லாவா இருக்கும் என்று வெட்டி வியாக்கியானம் பேசி கலாச்சார சீரழிவு திருவிழாவை நியாப்படுத்த நினைக்கும் சிலரை அல்லாஹ் நேர்வழி படுத்துவானாக.
எவ்வளவோ கல்வியாளர்களை நன்னெறியோடு, நல்லொழுக்கதோடு உருவாக்கிவருகிற ஓர் அற்புத பொக்கிசம் நம் காதர் முஹைதீன் மேல் நிலை பள்ளிக்கூடம். இந்தப் பள்ளிக்கூட வளாகத்தை கூத்தாடிகளுக்கும், சினிமா அடிவருடிகளுக்கும்,ஆணும் பெண்ணும் கலக்கும் இடமாக மாற்றி விட்டு அனாச்சாரத்தை ஆரங்கேற்றிவிட்ட சகோதர்களும், அதற்கு உறுதுனையாக இன்னும் இருந்து சகோதரர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
இவனுக உருப்படற மாதிரி தெரியலெ...நாம் உட்கார்ந்து கருத்து எழுதியெல்லாம் புண்ணியமில்லை.
ஏதாவது நடவடிக்கை எடுத்தால்தான் கீழ்க்கண்ட செய்திகள் இனிமேல் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
* அதிரை வர்தக கலாச்சார பொருட்காட்சியில் வன்முறை.
* இரண்டு தெரு / பிரிவினருக்குள் சண்டை
* பெண்களை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி உதை
Co education இல்லாத கல்வி நிலையத்தில் co festival (கூத்தாட்டம்)நடப்பது கண்டனத்துகுறியது
கலாச்சாரம் அறிய வரும் விருந்தினர் ..
நையாண்டி மேளத்துடன் கூத்து பார்த்து செல்லும் அவலம்
நிகழ்வது ..அருவருக்க தக்கது ..பொருள் காட்சியை சிறப்பாக
நடத்த அதிரை நிருபரில் ஒரு கலந்துரையாடல் வைத்து கருத்தை
அறியலாமே
வர்த்தக பொருட்காட்சியில் கூத்தும் கச்சேரியும் தேவையில்லை.எனினும் நுகர்வோராக வருபவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் என்பதால் இதில் இஸ்லாமிய அடையாளத்தை எதிர் பார்ப்பது நியாயமல்ல. இத்தகைய பொருட்காட்சிகள் சென்னையிலும் துபாயிலும் நடக்கும்போது குடும்பத்துடன் சென்று பார்த்தவர்கள் அதற்கு ஏதேனும் நியாயம் வைத்து இருக்கிறீர்களா? நமக்கு ஒவ்வாத விடயத்தை மட்டும் தவிர்த்து நல்லதை எடுத்துக்கொள்வோமே.
அதிரையில் மூன்றாவதாக ஒரு கந்தூரி திருவிழா கப்ரு மற்றும் இல்லை .இது இஸ்லாமிய கலாசாரத்திற்கு முற்றிலும் அவசியமற்றதே........
பொருள் காட்சியால்
பொருளாதார மேம்பாடு அடையுமா .
கலாச்சார மேம்பாடு அடையுமா ..
இது போன்ற கேள்விக்கு பதில் தேவை
முந்தய பதிவொன்றில் அதிரை ஆலிம்கள் அனாச்சாரங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை என்று அவதூறு சொன்னவர்கள். இந்த பதிவை வாசித்தார்களா?
அதிரையின் கல்வித்தந்தை என்று போற்றப்படும், காதிர் முஹைதீன் கல்லூரியிலா இந்த கேடு கெட்ட நிகழ்வுகள் ?
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து அனுமதி கொடுத்தார்களா ?
அல்லது அவர்கள் பார்வைக்கு வராமல் இந்தக்காட்சிகலெல்லாம் அரங்கேருகின்றனவா ?
அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகம் , வரும் நாட்களைப்பற்றி யோசிக்கலாமே?
நல்லதையே யோசிப்போம்,
நல்ல முடிவையே எடுப்போம்.
அபு ஆசிப்.
வர்த்தக பொருட்காட்சி என்று சொல்லி துவங்கி கந்தூரியையும் மிஞ்சும் வகையில் நடப்பதை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக உள்ளது. ADIRAI FESTIVAL என்ற இந்த வர்த்த பொருட்காட்சியை பெண்களும், பள்ளி விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பொழுது போக்காக இருக்குமென்று கருதினேன். இப்படி கலாசார சீரழிவுக்கு வழி வகும் என்றும் சற்றும் எதிர் பார்க்கவில்லை சினிமா ஆடல் பாடல் கொண்டாட்டம் இவைகல்லெல்லாம் தேவை இல்லை. கந்தூரியையும் மிஞ்சும் வகையில் இருக்கிறது ஆகையால் இந்த கலாச்சார சீரழிவை உடன் நிறுத்த வேண்டும். இதன் நிற்வாகிகள் உடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் சொன்னால் நாங்கள் உடன் நிறுத்த வேண்டுமா என்று இருமாப்பு கொல்லாமல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494) உடன் நிறுத்துங்கள் பெண்கள் ஒரு நாள் ஆண்கள் ஒரு நாள் என்று வைப்பது நல்லது.
நண்பர் அதிரைக்காரனோடு மோதுகிறேன்!
//நுகர்வோராக வருபவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் என்பதால்//
அதற்காக கச்சேரி வைத்து காசு பெருக்கலாமா?
இசை பாடி வியாபாரம் பெருக்கலாமா?
வெடி வைத்து நுகர்வோரை ஈர்க்கலாமா?
இத்தகைய செயலால் பெருகிய லாபம் ஹலாலாக இருக்குமா?
//பொருட்காட்சிகள் சென்னையிலும் துபாயிலும்//
உலக முன்னணி சீரழிவு நாடுகளோடு சீரழிவில் போட்டி போடும் சென்னை,
பெயரளவில் முஸ்லிம் நாடு, செயலளவில் கலாச்சார சீரழிவில், உலகில் முதலிடம் வகிக்கும் துபை,
இவர்களை ஒப்பிட்டு, இங்கெல்லாம் நம்மவர்கள் போகிறார்களே நாமலும் செய்தால் என்ன என்பது வாதத்துக்கு வலு சேர்க்கும்! ஆனால் நாளை மறுமைக்கு....!
//நமக்கு ஒவ்வாத விடயத்தை மட்டும் தவிர்த்து//
இந்த கூற்றை வேண்டுமானால் சென்னை, துபையில் (மனைவி,மக்கள்) மன மகிழ்வுக்காக வேறு வழியின்றி உபயோகிக்கலாம். ஆனால் இங்கே நாமே கூத்து, வெடி, ஆடல், பாடல் அத்தனைக்கும் ஏற்பாடு செய்து நியாயப் படுத்துவது எந்த வகையில் நியாயம்?
................................................................................
சித்தீக் காக்கா,
//பொருள் காட்சியால், பொருளாதார மேம்பாடு அடையுமா,கலாச்சார மேம்பாடு அடையுமா?//
கலாச்சாரம் சீர் கெட்டு, கொஞ்சம் பொருளாதார மேம்பாடு அடையலாம் ஆனால் ஈட்டிய ஆதாயத்தில் ஹலாலில் கேள்வி வந்து விடும்!
Idhai thadutthu niruttha yenna vazh?
M.H.Jahabar Sadhiq bro, u r 100 % correct.ungalai pol samudhaya noakodu yosipavar yetthanai per.....masha allah idhil palar nalla karuthai share seidhullarhal...allah yellorukum narkooli koduppanaga...
Sago.abdul kadhir kadhir avarhal karuthu masha allah netthiyadi.sammandha pattavargaluku uraithaal saridhan.
http://adiraiwestnews.blogspot.in/?m=1
http://adiraiwestnews.blogspot.in/?m=1
நண்பன் ஜாஃபர் சாதிக். நம்மவர்கள் நடத்தும் இத்தகைய நிகழ்வுகளில் மார்க்கவிரோத விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நானும் பதிவு செய்துள்ளதை கவனிக்கவில்லையா? இங்கு கச்சேரியை எதிர்த்து கருத்திட்டவர்களில் அதைவிட மோசமான துபாய் பெஸ்டிவலுக்கு நண்பர்கள். குடும்பத்தினர் சகிதம் இதுவரை சென்றதில்லை என்று எத்தனைபேர் நெஞ்சில் கைவைத்து சொல்வர்? உள்ளூரில் ஒரு வேஷமும் ஊர் எல்லை தாண்டியபிறகு மற்றொரு வேஷமும் தரிக்கும் சிலரது முரண்பாட்டையே குறிப்பிட்டேன்.
முழுமுழுக்க இஸ்லாமிய பொருட்காட்சி நடத்தினாலும் அதிலும் குறை காண்பர்கள் உண்டு. PEACE நிகழ்ச்சியிலும் குறைசொன்னவர்கள் இருக்கின்றதை மறுப்பீர்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பன் அதிரைக்காரன்,
// கூத்தும் கச்சேரியும் தேவையில்லை.எனினும் நுகர்வோராக வருபவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் என்பதால் இதில் இஸ்லாமிய அடையாளத்தை எதிர் பார்ப்பது நியாயமல்ல.//
மேற்கண்ட உங்கள் வரிகளால் எழுத வேண்டுயதாயிற்று.
//மார்க்கவிரோத விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நானும் பதிவு செய்துள்ளதை//
கவனித்தேன் ஆனால் பின் தொடர்ச்சி நியாயமல்ல என்று எழுதினீர்களே!
நடப்பது நம்மூரு, நடத்துனர்கள் நம்மவர்கள் கலந்துகொள்ளப்போவதோ பெரும்பாலும் நம்மவர்கள் இதில் கூட இஸ்லாமிய அடையாளத்துடன் நடத்த முடியாதா?
//உள்ளூரில் ஒரு வேஷமும் ஊர் எல்லை தாண்டியபிறகு //
உள்ளுரில் தான் வேசம் போட முடியும்! அவர்கள் பிறந்த மண்ணின் புனிதமாவது காப்போமே என குரல் கொடுக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.
//நமக்கு ஒவ்வாத விடயத்தை மட்டும் தவிர்த்து நல்லதை எடுத்துக்கொள்வோமே.//
ஊர் கடந்து, நாடு கடந்து மாற்றார் நிகழ்ச்சியில் மட்டும், உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் ஊரில் ஒவ்வாத விடயம் எதுவும் நடக்கக் கூடாது.
//முழுமுழுக்க இஸ்லாமிய பொருட்காட்சி நடத்தினாலும் அதிலும் குறை காண்பவர்கள் உண்டு.//
அன்று ஆங்கிலத்தை எதிர்த்தது, தாலுக்காவும் வேண்டாம், துறைமுகமும் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு நிகராக இவர்களை நினைக்க வேண்டி இருக்கிறது.
// PEACE நிகழ்ச்சியிலும் குறைசொன்னவர்கள்//
அது பற்றி எனக்கு தெரிய வில்லை.
---------------------------------------------------------------------------
இப்படிக்கு அதிரைகாரனில் ஒருவன்
உலமாக்கள் கடுமையாக தடுத்ததால் அதிரை ஷைத்தான் festivel-லில் பாட்டு கச்சேரி நிறுத்தப்பட்டது. இன்ஷா-அல்லாஹ் இனி வரும்காலங்களில்festivel நடைபெறாமல் இருக்க துஆ செய்யவும்.
உலமாக்கள் கடுமையாக தடுத்ததால் அதிரை ஷைத்தான் festivel-லில் பாட்டு கச்சேரி நிறுத்தப்பட்டது. இன்ஷா-அல்லாஹ் இனி வரும்காலங்களில் festivel நடைபெறாமல் இருக்க துஆ செய்யவும்.
அபூ ஹம்னா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலமாக்கள் சபை எடுத்துக் கூறியதால் ஆடல்-பாடல் நிறுத்தப்பட்டன என்பதை உறுதியாகத் தெரிந்து கருத்திடவும்.
எனக்குக் கிடைத்த தகவல்படி மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பப்பட்டு, அவை நிறுத்தப்பட்டன. விபரம் தனிப்பதிவாக வரும், இன்ஷா அல்லாஹ்.
Mariyadhaikuriya jameelaka avaigale....ulamaakal sabai aarambathil irundhe indha muyarchiyai aakapoorvamaga merkondu irundhadhu 1.or 2.5.2013 kaalai sammandha pattavarhalai varavaithu pesi irukiraargal. Mattuminri jumma bayangalilum podhu makkalidaye ingu povadhu thavaru yenbadhu pol kadumayaga yeccharikumbodhu dhan sammandhabpattavarin moolam thundu seetu yezhidhi kodukappatu arivippu seyyapattulladhu. Unmayana dha e nalla vishayatthai seidhu vittu thannai maraithu kolvar.nandhan seidhean nan dhan sedhean yenru thannai munnilai padutthuvadhu unmai muslimuku azhahalla. Yenave idhai periya saadhanayaga ulamaakal velisolla maattargal. Yedh yeppadiyo thavaru kalayappattal saridhan.Alhamdhulillah.avar avar yennappadi avaruku kooli. Valla Allah namakkim yenaya nam sagodharargalukum narkooli vazhanguvaanaga.......Aameen...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் உதவியாலும், உலமாக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அனைவரின் முயற்சியாலும் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலமாக்கள் இதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது நாமனைவரும் அறிந்த உண்மை, அதே போல் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களும் உலமாக்களின் குரலை செவிசாய்க்காமல் உதாசீனப்படுத்தி வந்தார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் 02.05.2013 அன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கூட்டிய உலமாக்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டாத பட்சத்தில் எப்படி அவர்கள் உலமாக்களை மதித்தார்கள் என்று சொல்ல முடியும். ஆனால் அல்லாஹ்வுடைய ஏற்பாடும் உலமாக்கள் மற்றும் இதை எதிர்க்கக்கூடியவர்களுடைய கவலையும் துஆவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மற்றவர்கள் மூலமாக ஓர் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்..
இதற்கு எப்படி உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய நல விரும்பிகள் முயற்ச்சியும் துஆவும் செய்தார்களோ அது போல் இன்னும் சில நாட்களில் அரங்கேறவுள்ள கந்தூரிக்கும் செயல்பட்டு அனாச்சாரம், ஷிர்க், பித் அத் ஆகியவற்றை ஒழித்து, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து மற்றவர்களுக்கும் எத்திவைத்து, நன்மையை ஏவி தீமையை விட்டும் ஒதுங்கும் கூட்டத்தாரில் நாமும் ஒருவராக ஆக வேண்டும்.
Post a Comment