அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள்.
ஒருவேளையில், "ஒருநிமிஷம்", என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார்.
"ஒண்ணுமில்லே, ரொம்ப 'போர்' அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாட வேண்டுமென்று கேட்டாள்" என்று சொன்னார்.
"நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு 'போர்' அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல" என்று தனது ஐந்து வயது மகளுக்கென ஒரு பத்து இருபது கார்டூன் சி.டிக்கள், வீடியோகேம், பொம்மைகள் என்று வாங்கி குவித்திருப்பதாகவும் தகவல் தந்தார்.
அவர்மட்டுமல்ல, இன்று நம்மில் பெரும்பாலோனரும் இதைத்தான் செய்கிறோம். இன்றைக்கு, ஆண்பிள்ளையோ அல்லது பெண்பிள்ளையோ வித்தியாசம் இல்லாமல் சொல்லும் ஒருவார்த்தை- 'ஒரே போரடிக்குது'
அநேக குழந்தைகள் 'போர்'அடிப்பதை போக்குவதற்கு அமர்வது அல்லது அமர்த்தப்படுவது தொலைக்காட்சியின் முன்பாகவோ அல்லது கணினியின் முன்பாகவோதான் என்பதை மறுப்பதிற்கில்லை.
ஆக மொத்தம் ஏதோ ஒரு திரை அவர்களின் வாழ்க்கைக்குத் திரைபோட துடிக்கிறது. ஆனால் 'போரடிக்கட்டும், அவர்களுக்கு எந்த திரையும் வேண்டாம் ' என்கிறார்கள் கல்வியியல் வல்லுநர்கள்.
"கனவு காணுங்கள்" என்று சொன்னாரே கலாம்; அந்த கனவுக்கு அதிகம் வழிவகுப்பது 'போரடிக்கும்' காலம்தானம்!
பொதுவாக, சலிப்படையும் (போரடிக்குது... இனி தமிழில்) தன்மைக்கும் தனிமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தனிமையே சலிப்பினை தோற்றுவிக்கிறது.
அதேவேளையில்,சலிப்படைந்து இருக்கும்போது "என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு" என்று தனிமையையும் தேடுகிறது வித்தியாசமாய் சிந்திப்பவர்களைப் பார்த்து 'ரூம் போட்டு யோசிப்பாய்களோ?' என்று கிண்டலாய் சொல்வதுண்டு.
நாம் தனிமையில் விடப்படும்போதுதான் நமக்குள் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்பாக்கத்திறன் வெளிவருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர்.போல்டன் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். புகழ்பெற்று விளங்கும் பல நூலாசிரியர்கள்,கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியில் ஆச்சரியமான அந்த உண்மையினை போல்டன் நிரூபித்துள்ளார்.
சலிப்படையும் காலத்தில் ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து சிகரம் தொட்டவர்களில்,ஆய்வுக்காக டாக்டர்.போல்டன் சந்தித்த அஷ்டாவதானி மீரா சியல் பற்றிபார்ப்போம்..
இவர்,இங்கிலாந்தின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர், சிறந்த நூலாசிரியர், நாடக ஆசிரியர், உள்ளங்கவரும் பாடகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், குணச்சித்திர நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்.
(இவரின் நாவல்தான் 'பாம்பே ட்ரீம்ஸ்" ஆக மாறி ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய எல்லையினை தாண்ட வைத்தது.)
குக்கிராமத்தில் வளர்ந்தது இவரது இளம்பிராயம், சலிப்பூட்டும் காலங்களில் திரைகளுக்குமுன் செல்லாமல்,சன்னலின் திரைகளை பின்னுக்குத் தள்ளி இயற்கையை ரசித்திருக்கிறார், வயல்வெளியில் நடந்திருக்கிறார், தன்னை நெருங்கும் காலங்களை உணர்ந்திருக்கிறார். அந்த நினைவுகளை தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்.
இளம்வயதில், சலிப்பூட்டும் காலங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுதான் தன்னை பின்நாளில் ஒரு எழுத்தாளராக உருவாக்கியது என்று மனப்பூர்வமாய் நம்புகிறார். இதேபோல,டக்டர்.போல்டன் சந்தித்த நபர்களில் இன்னொருவர் உலகின் தலைசிறந்த மூளைநரம்பியல் மற்றும் மூளையின் செயல்திறன் ஆராச்சியாளர் பேராசிரியர்.சூஸன் க்ரீன்பீல்டு ஆவார்.
ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு, பொம்மைகள் வாங்கி விளையாடும் அளவிற்கு கூட வசதியில்லையாம். தன்னுடைய 13 வயதுவ்ரையிலும் சகோதர சகோதரிகளின்றி (இயற்கையாகவே)தனிமையில் வளர்ந்திருக்கிறார்.
இவர் தன்னுடைய சலிப்பூட்டும் காலங்களில் கதைகேட்பது , கதைசொல்வது, தான் சொன்ன கதைகளுக்கேற்ப ஓவியங்கள் வரைவது மற்றும் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தை செலவிட்டிருக்கிறார்.
தன்னுடைய கற்பனைத்திறன் அதனை வெளிப்படுத்தும் ஓவியத்திறன் ஆகிய இரண்டும்தான் மூளைத்திறன் பற்றி ஆராய்வதற்கான உள்ளீட்டினை தனக்கு தந்ததாக சொல்கிறார்.
"ஆழ்ந்த சிந்தனையினைத் தூண்டும் எந்தவொரு செயலும், நம் வாழ்க்கையினை நகர்த்துவதற்கு தேவையான உள்ளீடைத்தரும் உந்து சக்தியாய் அமையும்" என்பது இவரது நம்பிக்கை,
"இயற்கை ஒருபோதும் நம்மை, சிந்திக்காத வெற்றுமதி கொண்டோராயிருக்க அனுமதிக்காது என்றும், நமக்கு கிடைத்த உள்ளீடுகளை வைத்து நாமே நம்முடைய சிந்தனைக்கலனை நிரப்பிக்கொள்கிறோம்" என்பது இவரது தத்துவம்.
தவறான உள்ளீடுகளின் காரணத்தினாலேயேதான் சில இளைஞர்கள், பொதுச்சொத்துகளுக்கு குந்தகம் விளைவிப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்கள் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது இவரின் குற்றச்சாட்டு.
முன்பு ஒரு ஆய்வில், ஏதும் வேலையில்லாமல் இருக்கும் குழந்தை உடனடியாக நாடுவது தொலைக்காட்சி, விடீயோ, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் போன்ற ஏதோ ஒரு திரையைத்தான் என்றும், நாளடைவில் இதில் செலவழிக்கும் நேரம் கணிசமாக உயர்ந்துவிடுகிறது என்றும் இதனால் குழந்தைகளின் எழுதக்கூடிய திறன் குறைந்துவிடுவதையும் கண்டறிந்தனர்.
இப்போது அவசரத்தேவை தேவை
குழந்தைகளின் சலிப்பூட்டும் காலத்தினை ஆக்கப்பூர்வமாய் மாற்றுதல்.
எழுத்துக்கும் எழுதுவதற்கு உறுதுணையாய் இருக்கும் கற்பனைத் திறனை வளர்த்தல்.
கற்பனைக்கு ஆணிவேராய் இருக்கும் தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாய் உட்கிரகிக்க சிந்திக்கச் செய்தல்.
கற்பனைத் தூண்டலுக்கு வேட்டு வைக்கும் உள்ளீடு தரும் தளங்களைத் தவிர்த்தல்.
போரடிக்குதா?????
புதுசுரபி
23 Responses So Far:
யார் இந்த புதுசுரபி?
இப்படி வெளுத்து வாங்கி இருக்கிறார்
நான் கேட்கிறேன் சலிப்புத்தட்டுவதையும் , சோம்பலையும் இப்படி ஆக்க பூர்வமான சிந்தனைக்கு உட்படுத்த முடியும் என்ற உறங்கிக்கிடந்த ஒரு அழகிய உண்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைத்திரிக்கிரீர்கலே , அதுவும் அனுபவபூர்வமாக சாதித்துக்காட்டியவர்களின் பட்டியலோடு.மிகவும் அருமை.
இனி யாரும் சலிப்புக்கொண்டால் அவர்களைப்பார்த்து , டேய் என்னடா சலிப்புத்தட்டுகிறது என்கிறாய்? என்றுகூட சொல்லமுடியாது, அவனிடம் அந்த நேரத்தில் எனன்ன திறமைகள் உள்ளிருந்து வெளிவருமோ சொல்லமுடியாது.
மொத்தத்தில் ஒரு அருமையான சிந்தனைக்குரிய செய்தி புது சுரபி மூலம் புதிதாய் வெளிப்பட்டதில் மட்டற்ற மகிழிச்சியே.
வாழ்க சலிப்பு, , வளர்க அதன் மூலம் ஊற்றெடுக்கும் கர்ப்பனை
மரியம்மா அப்துல் காதருக்கு இந்த கருத்தை முடிக்கும்போது சலிப்புத்தட்டியது.
அன்புடன்,
அபு ஆசிப். ( அப்துல் காதர் - மரியம்மா )
ரியாத், சவுதி அரேபியா.
.
//போரடிக்குதா?????//
இல்லே, இல்லவே இல்லே. சும்மா நச்சுன்னு இருந்தது.
//போரடிக்குதா?????//
இல்லே, இல்லவே இல்லே. நல்லாவே நச்சுன்னு இருந்தது. நற்சிந்தனைகள் .
//நாம் தனிமையில் விடப்படும்போதுதான் நமக்குள் இயற்கையாகவே பொதிந்துள்ள படைப்பாக்கத்திறன் வெளிவருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.\\
முக்காலும் உண்மை; என் அனுபவத்தை அப்படியே சொல்லி, புத்தெண்ணம் சுரந்திட வைத்த புதுச் சுரபி என்னும் அன்புச் சகோதரர் ரஃபீக் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். வாருங்கள் இதுவே போன்ற ஆக்கங்களை அள்ளித் தாருங்கள் என்று கோருகிறேன்.
.நண்பா சபீர் !
இந்த சலிப்பு தமிழ் அர்த்தத்தில் உள்ள சலிப்பல்ல
புது சுரபிமூலம் கற்றுக்கொண்ட சிந்தனைக்குரிய சலிப்புடா.
அபு ஆசிப் ( இனி இப்பெயரில் உலா வருவேன் ),
ரியாத் சவுதி அரேபியா
சிந்திக்க அருமை போரடிக்குது!
போரடிக்குதா? இல்லை அச்சமயங்களில் புதுப்புது சிந்தனைகளும் உருவாகின்றன. அது ஆக்கப் பூர்வமானதாகவும் இருக்கலாம்.
அப்ப சடப்பா வருது 'ன்னா என்னா?
-------------------------------------------------------------------------
ஜமாத்துல் அவ்வல் பிறை 23 /1434
என் இனிய உறவினர் ஜஹபர் சாதிக்,
இந்த நிருபர்மூலம் தங்களின் தொடர்பு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.
சடப்பு என்றால் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த வார்த்தையிலிருந்தே நீங்கள் அதிரையில் பிறந்தவர் என்பது நிரூபணம். ஏனெனில், சடப்பு என்ற வார்த்தை, அதிரைக்கே உள்ள ட்ரேட் மார்க்கான வார்த்தை. இது தமிழ் மொழியிலே இல்லாத ஒரு அதிராம்பட்டினம் அடுப்பாங்கரையில் உள்ள ஒரு வார்த்தை.
இப்பொழுது புரிகிறதா சடப்பு என்றால் என்ன?
நினைவில் கொள்ளுங்கள் உண்மையான சோம்பேறித்தனமான புது சுரபியின்
சிந்தனைக்கு appaarpatta உண்மையான சோம்பேறிகளின் வார்த்தை.
இனிமேல் சடப்பு படவேண்டாம், உங்களுக்கு சலிப்பு தட்டட்டும் .
அன்புடன்,
அபு ஆசிப்
ரியாத், சவுதி அரேபியா.
Abdul Khadir Khadir சொன்னது…
என் இனிய உறவினர் ஜஹபர் சாதிக்,
இந்த நிருபர்மூலம் தங்களின் தொடர்பு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.
சடப்பு என்றால் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த வார்த்தையிலிருந்தே நீங்கள் அதிரையில் பிறந்தவர் என்பது நிரூபணம். ஏனெனில், சடப்பு என்ற வார்த்தை, அதிரைக்கே உள்ள ட்ரேட் மார்க்கான வார்த்தை. இது தமிழ் மொழியிலே இல்லாத ஒரு அதிராம்பட்டினம் அடுப்பாங்கரையில் உள்ள ஒரு வார்த்தை.
இப்பொழுது புரிகிறதா சடப்பு என்றால் என்ன?
நினைவில் கொள்ளுங்கள் உண்மையான சோம்பேறித்தனமான புது சுரபியின்
சிந்தனைக்கு appaarpatta உண்மையான சோம்பேறிகளின் வார்த்தை.
இனிமேல் சடப்பு படவேண்டாம், உங்களுக்கு சலிப்பு தட்டட்டும் .
அன்புடன்,
அபு ஆசிப்
ரியாத், சவுதி அரேபியா.
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இது நம் ஊருக்கு மட்டும் சொந்தமான வார்தை இல்லை என்பதைசொல்ல வேண்டிய சூழ்னிலையில் நம்மூரில் அதிகம் உபயோகிக்கும் (சடப்பே இல்லாமல் சடப்பு உபயம் செய்யும் ஊர்)சொல் .இது நான் அறிந்தவகையில் இங்கே பதிந்துள்ளேன். விபரம் அறிந்த அறிஞர்கள் சபை இது என் கூற்று தவறு எனில் மன்னிக்கவும்.
சடத்தல்,சடப்புதல் என்பது ஒரு இடத்தில் நிறுத்திக் காட்டுவது (உயிரில்லாத
உடம்பு அசையாமல் நிலை நிறுத்திக் கிடப்பதால் தான் சடம் எனப்படுகிறது).சடப்பு என்பது இயக்கம் இல்லாது இருத்தல்.
தம்பி ஜகஅபர்,
தங்களைவிட வயதில் மூத்தவன் என்றமுறையில், நான் பெரும்பாலும் தமிழ்நாட்டு அனைத்து மாவட்ட மக்களோடும் பழகியவன் என்ற முறையில்
சொல்கிறேன் , நான் பழகிப்பார்த்த்வகையில் , இந்த "சடப்பு" என்ற வார்த்தையை நான் என் நண்பர்கள் மத்தியில் உச்சரித்துவிடும்போது என்னை ALLAMAL MATRA அனைவரும் சிரித்து விடுவதையோ அல்லது என்னை MATTUM இந்த ஒரு வார்த்தைக்காக விமர்சனம் செய்வதையோ கண்டிரிக்கிரேன்.
அன்றிலிருந்துதான், இந்த சடப்பு என்ற வார்த்தை அதிரைக்கே உரிய ஒரு
தமிழ் அஹராதியிலேயே இல்லாத ஒரு வார்த்தை என்பதை உணர்ந்தேன்,
இன்றும் உணர்கிறேன்.
இந்த வார்த்தை உணர்வில்லாத வார்த்தையோ அல்லது உயிரற்ற ஜடத்திற்கு உரிய வார்த்தையோ எனக்குத் தெரியாது. ஆனால் அதிரைக்கே உரிய ஒரு
அரை வேக்காட்டு வார்த்தை என்பது மட்டும் திண்ணம்.
இனிமேல் எனக்கு சடப்பு வரவே வராது, சலிப்பு தான் வரும் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டு விடை பெறுகிறேன் என் இனிய உறவினர்
ஜகபரே !
அபு ஆசிப்,
ரியாத், சவுதி அரேபியா.
நிறைய சிந்திக்க வைத்துவிட்டீர்,
நான் கூட நினைப்பதுண்டு சின்ன பசங்களுக்கு எப்படி “போரடிக்குது” என்ற வார்த்தை தெரியும்னு, இப்போதான் தெரியும் எதுக்கு அடித்தளம் போடுறாங்க என்று..
نتائج الاعداية بسوريا சொன்னது…
தம்பி ஜகஅபர்,
தங்களைவிட வயதில் மூத்தவன் என்றமுறையில், நான் பெரும்பாலும் தமிழ்நாட்டு அனைத்து மாவட்ட மக்களோடும் பழகியவன் என்ற முறையில்
சொல்கிறேன் ,
---------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
மிக்க நலம்! வாழ்க பல்லாண்டு வல்ல அல்லாஹ்வின் அருள் கொண்டு!
அதிரைக்கே உரிய ஒரு
""""அரை வேக்காட்டு வார்த்தை"""" என்பது மட்டும் திண்ணம்.
---------------------------------------------------------------------
அப்படியா! நல்லது!
Assalamu Alaikkum
Dear brother Mr. Pudhusurabi,
Thanks for sharing your thoughts on boredom and how to tackle the boredom with real life stories.
I think boredom is a kind of thirst in the mind to relieve from monotonous or empty thoughts. So a boring person is in need of satisfying the thirst with some stuff(play, chat, going out for walking, non-creative or creative work).
Does anyone of us observe public(even in Masjid's) toilets scribbles on the walls and doors. Its a sign of boredom.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
http://www.dubaibuyer.blogspot.com
சடப்பா ஈக்கிது ங்குறதுக்கு சடப்பில்லாமல் இவ்வளவு விளக்கம் தந்த அப்துல் காதர் காக்கா நன்றி.
அதுபோல வார்த்தை வித்தகர் நம்ம க்ரவ்னாரின் சடப்புடமில்லா இனிய மொழிபெயர்ப்பும் அர்த்தமுள்ளவை. தொடர்ந்து வந்து வார்த்தையை கொட்டிச் செல்லுங்களேன்!
”போரடிக்குது” இது வெட்டி ஆபிசர்களின் வார்த்த்தை...குழந்தைகளுக்கும் இந்த வார்த்தையை தெரியாமல் வளர்க்க வேண்டும்,அவர்களின் உடலும் உள்ளமும்,மூளையும் எந்நேரமும் பிஸியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்...கஷடம்தான் ...ஆனால் முடியும்...நல் சிந்தனை தந்த புது(அமுத)சுரபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்
Assalamu Alaikkum
The word "Sadappu-சடப்பு" could be derived colloquially by twisting the tamil word "Sadaivu-சடைவு" which means weariness.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
http://www.dubaibuyer.blogspot.com
Ahamed Ameen சொன்னது…
Assalamu Alaikkum
The word "Sadappu-சடப்பு" could be derived colloquially by twisting the tamil word "Sadaivu-சடைவு" which means weariness.
--------------------------------------------------
மிக்கச் சரி.
போரடிக்குது......???? !!!
இல்லை..இல்லை.. போர் நடக்குது :))
'பிஸி' கட்டுரைக்கு சிறப்பான வரவேற்பும் ஊக்கமும் தந்து பின்னூட்டமளித்த
அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள்!!!
Regards,
Rafeeq.
+971506767231
புது சுரபி எப்போதும் போல் அலசி ஆராய்ந்து தெளிவாக எடுத்து எழுதியிருக்கிறார்.
நண்பர் புதுசுரபி - சென்னையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.
சகோ ரஃபீக், எந்த ஒரு விடயத்தை தொட்டாலும்... அங்கே ஒரு விதையை தூவி விட்டுச் செல்வார், அந்த வகையில் இதுவும் ஒன்று !
//நண்பர் புதுசுரபி - சென்னையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.//
இருந்தார், இப்போது நம்மோடுதான் இருக்கிறார் !
போரடிக்குதுன்னு புலம்ப ஆரம்பிதாலே... போரடிக்காமல் இருக்க புதியதொரு சிந்தனை உதயம் என்பது நிறைய பேருடைய அனுபவ உண்மை !
போரடிக்குதே சீஷனில் விளைந்த சுவையான சம்பவங்களை தொகுத்து பதிவுகூட எழுதலாம் ! :)
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///போரடிக்குதா????? /// --- இல்லை!!!
--)) போர் அடிக்காமல் தெளிவாக கட்டுரையைத் தந்ததற்கு சகோ. ரபீஃக்கிற்குக்கு - வாழ்த்துக்கள்!
சகோ ரஃபீக் அவர்களே!!
கலக்கிட்டீங்க! அழகாகவும் ஆழமாகவும் சிந்தித்து இக்கட்டுரையை வடித்துள்ளீர்கள்!!மனமார்ந்த வாழ்த்துக்களுடன் கோடி நன்றிகள்!
Post a Comment