* அதிரையில் கொடிமரம் ஏற்றி அதனைத் தொடரும் கந்துரியால் இதுவரை மூன்று உயிர்கள் பலியாகி உள்ளது. சமீபத்தில் சந்தனம் பூசப் போன ஒருவர் மூச்சி மூட்டி மண்ணறைக்கு சென்று விட்டது பற்றி இந்த கொடி(ய)மரம் ஏற்றிய மரமண்டைகள் துளிகூட அலட்டிக் கொள்ளாமல் இன்னும் சுதந்திரமாக ஊர் சுற்றி வருவது எழுந்து நிற்கும் இந்தக் கொடிமரத்தை விட கொடூரமாக இருந்தது அவர்களின் தொடர் செயல்கள்.
* தரகர் தெரு பிரச்னை ஆங்கங்கே கொழுந்து விட்டு எரிகின்றது இதற்கு முக்கிய காரணம் பஞ்சாயத்துக்கு கட்ட வேண்டிய ரூபாய் 10 ஆயிரத்தை கட்டவில்லை என்று சொல்லி பஞ்சாயத்தும், அபராதம் கட்ட வேண்டிய வரும் மோதிக் கொண்டதில் பலருக்கு காயமும். வீடுகளுக்கு சேதமும் இதனால் இரு தரப்புக்கும் பல லட்சங்கள் செலவுடன் நிம்மதியும் இழந்தது தான் மிச்சம்.
*ஊரில் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் முன்னணியில் இருப்பவைகளான, போலீஸ் ஸ்டேஷன், டாஸ் மாக் என்று ஸ்டைலாக அழைக்கப்படும் கேடுகெட்ட சாரயக்கடைகள், ஹாஸ்பிடல்ஸ் மற்றும் மெடிக்கல் ஷாப்ஸ் ஆகியவை.
* முன்பெல்லாம் வெளியூர்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஊருக்குள் நுழையும்போது சற்றே நிமிர்ந்து பார்த்தால் பட்டென்று கண்ணில்படுவது பள்ளிவாசல்களின் மினாராக்கள். இப்போது எந்தப் பக்கம் ஊருக்குள் நுழைந்தாலும் நேர் கொண்டு பார்த்தால் கண்ணில் படுவது அரசு நடத்தும் டாஸ் மாக் சாராயக்கடைகள் அன்னாந்து பார்த்தால் செல்ஃபோன் டவர்கள் தான்.
* இந்த முறை ஊரில் அதிகமதிகம் பஸ் பயணம் மேற்கொண்டதில் நிறைய அனுபவம் கிடைத்தது. அதில் ஒன்று இராமநாதபுரத்தில் இருந்து பஸ் புறப்பட்டதும் ஒருவர் போனில் "அப்பத்தை சுட்டுவை" என்று சத்தமாக சொன்னவர் மூன்று மணி நேரம் கழித்து மல்லிபட்டினத்தில் கைலி அவிழ்ந்தது கூட தெரியாமல் பஸ்ஸை விட்டு இறங்கிப் போனார் குடிகளில் பலவகை உண்டாம் அதில் ஒருவகை பயணக்’குடி’யாம் இது.
* SP பட்டினம் என்ற ஊரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம் அந்த பக்கம் பஸ்ஸில் போகும் போதுதான் அதன் முழு அர்த்தம் தெரிந்தது சுந்தர பாண்டியன் பட்டினம் இதைத்தான் சுருக்கி SP பட்டினம் என்று வைத்துள்ளார்கள். இந்த ஊருக்கு அடுத்த ஊர் ‘பாசி பட்டினம்’ நல்லவேளை இந்த ஊரின் பெயரை சுருக்கி வைக்கவில்லை அப்படி சுருக்கி வைத்திருந்தால் மூக்கை மூட வைத்திருக்கும்.
* ஊரில் ஏராளமான வீடுகளில் பகல் சாப்பாட்டுடன் சமையல் சட்டி சாப்பாட்டு பொட்டிகள் எல்லாம் கழுவி கவிழ்த்தி வைத்து விடுகின்றார்கள். காரணம், ஊரில் இரவு கடைகள் பெருத்துப் போய் விட்டதால் .இரவு கடைகள் தற்போது இலவச டோர் டெலிவரியும் செய்து வருகின்றார்கள்.
* நம் ஊரில் பெரும் பாலான கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் எல்லை தாண்டி பட்டுக்கோட்டையில் உள்ள ராஜக்களிடமும் தம்பிகளிடமும் கட்டப் பஞ்சாயத்து வைத்து தீர்த்து வைத்து விடுகின்றனர். பணம் கொடுக்கக்காமல் டிமிக்கி கொடுப்பவரிடம் கிடிக்கி பிடி போட்டு பணத்தை வாங்கி பணம் கொடுத்தவருக்கு தங்களை கழிவுத் தொகையை கரைத்துக் கொண்டு திருப்பி கொடுத்து விடுகின்றனர் ராஜாக்களும் தம்பிகளும்..
* காசை கரியாக்குவதை கேள்விப்பட்டுள்ளோம் கரியை காசாக்குவதை இராம்நாட்டில் இருந்து தூத்துக்குடி போகும் பாதையில் பார்க்கலாம் அதாவது கருவங் காட்டை வெட்டி கரி மூட்டம் போட்டு கரியை காசக்குகின்றனர்.
* எந்தவொரு வேலைக்கும் இப்போது ஊரில் ஆள்கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கு. இதற்கு காரணம் 25 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை குறைக்க அரசு கொடுத்த விளம்பரம் அதாவது நாம் இருவர் நமக்கு இருவர். அதன் பின் நாம் இருவர் நமக்கு ஒருவர் (நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்று விளம்பரம் கொடுக்காமல் இருந்தார்களே!!) என்று ரப்பரை பயன்படுத்த சொல்லி இப்போ ரப்பர் தோட்டத்திற்கே வேலைக்கு ஆள் கிடைக்காமல்அரசு செய்து விட்டது !
* ஒரு முறை ஊரில் இருந்து வெளி ஊர் செல்லும்போது போகும் வழி நெடுக எல்லா ஊரிலும் ஒரே MGR திரைப்பட பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது காரணம் விசாரித்தபோது அன்றைய தினம் MGR பிறந்தநாளாம் செத்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஈன பிறவிகளை நினைத்து நொந்து கொள்ளத்தான் முடிந்தது நம்மால், இவர்கள் திருந்த இந்த நூற்றாண்டில் வாய்ப்பே கிடையாது.
* இப்போது ஊரில் பெரும் பணக்காரர்களும் சிறு பணக்காரர்களும் கூட்டணி போட்டு செய்யும் தொழில் வியாபாரத்திற்கென பல லட்சங்களை வாங்கி கொண்டு மாதம் முடிந்ததும் லாபம் என சொல்லி ஒரு லட்சத்திற்கு 2 ஆயிரம் முதல் மாதாமாதம் கொடுத்து விடுகின்றனர். இதில் பலரும் பல லட்சங்களை கொடுத்து விட்டு மாதம் முடிந்ததும் பல ஆயிரங்களை வாங்கிக் கொண்டு உல்லாசமாக ஊர் சுற்றுகின்றனர் இவ்வகை வரவுகள் கூடுமா கூடாதா என அதிரைநிருபரில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம்.
* நம் ஊர் பிரபலமான மார்கெட் தற்போது மார்க்கெட் இழந்து தவிக்கிறது. காரணம் வட்டிக்கு வாங்கி மீன் வியபரம் செய்யும் வியாபாரிகள் வட்டிக்கான காசையும் மீன் தலையில் கட்டுவதால் ஊர் வாசிகள் பலரும் மார்கெட் பக்கம் தலை வைத்து கூட படுப்பது கிடையாது.
* தினமும் விபத்து செய்திகள் தலைப்பு செய்திகளக வந்த வண்ணம் உள்ளது முக்கியமா ECRல் நடக்கும் விபத்துக்கள் வெளிநாட்டில் நடக்கும் விபத்துகளுக்கு நிகராக உள்ளது.
* நம்ம ஊரில் பிரியாணியில் கறி துண்டு பெருசா போடுறாங்க, நம்ம ஊரில் போடும் மனைக்கட்டில் ரோடு சின்னதா போடுறாங்க.
அதான் திரும்பி வந்துட்டேனே….! இருந்தாலும் இனி சும்மா இருக்கப் போவதில்லை !
Sஹமீது
27 Responses So Far:
ஹமீதாக்கா வந்துட்டாஹ!
விபரீதங்கள் கூடிப்போய் விட்டது பற்றிய தமிழ் வசனங்கள் ரொம்ப விமர்சையாயிருக்கு!
//நம் ஊர் பிரபலமான மார்கெட் தற்போது மார்க்கெட் இழந்து தவிக்கிறது.//
அதான் மெளலிது ஓதியாச்சே, இனி சரியா வரும் தானே?
மீண்டும் மேற்கண்டது போன்ற கொடிமர ஏற்றல் மே 8 ல் ஜமாத்துல் ஆகிர் பிறை 27 ல் பூனக்கொள்ளையில் நடைபெறா வண்ணம் அல்லாஹ் அவர்களுக்கு விளங்கச் செய்வானாக!
இது பற்றி நம்மூர் பிரபல ஆலிம்கள் மூலம் அவர்களுக்கு நல்லுபதேசம் கிடைக்க அல்லாஹ் அருள்வானாக!
நாமும் இதுபற்றி இன்றிலிருந்தே தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயத்தமாவோமாக!
--------------------------------------------------------------
ஜமாத்துல் ஆகிர் பிறை 11 / 1434
ஊர் செய்திகளை வாசிப்பதென்றாலே தனி சுகம்தான். அதுவும் ஹமீது அவற்றைச் சொல்லும் விதம் இன்னும் சொக்க வைக்கும்.
ஊரில் இருந்து அனுபவிக்க சீக்கிரம் அந்தி ஆகிவிடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//மீண்டும் மேற்கண்டது போன்ற கொடிமர ஏற்றல் மே 8 ல் ஜமாத்துல் ஆகிர் பிறை 27 ல் பூனக்கொள்ளையில் நடைபெறா வண்ணம் அல்லாஹ் அவர்களுக்கு விளங்கச் செய்வானாக!//
பூனக்கொல்லை கந்துரி கொல்லைலே போகணும்னு சொல்லுங்!
sabeer.abushahruk சொன்னது…
//ஊரில் இருந்து அனுபவிக்க சீக்கிரம் அந்தி ஆகிவிடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.//
தொந்தி பெருக்க பெருக்க அந்தி அருகே வந்து கொண்டே இருக்கும்
//மீண்டும் மேற்கண்டது போன்ற கொடிமர ஏற்றல் மே 8 ல் ஜமாத்துல் ஆகிர் பிறை 27 ல் பூனக்கொள்ளையில் நடைபெறா வண்ணம் அல்லாஹ் அவர்களுக்கு விளங்கச் செய்வானாக!//
அடங்கினவங்கள வச்சு இவனுங்க அடங்காம பன்ற அட்டூழியும் அழிக்கப்பட வேண்டும் !
//இது பற்றி நம்மூர் பிரபல ஆலிம்கள் மூலம் அவர்களுக்கு நல்லுபதேசம் கிடைக்க அல்லாஹ் அருள்வானாக!//
நம்மூர் ஆலிம்கள் சொல்ல வேண்டிய வகையில் சரியான மார்க்கத்தை தைரியமாக சொல்லியிருந்தால் அவர்கள் எப்போதோ திருந்தியிருப்பார்கள்.இன்னுமா அந்த ஆலிம்கள் நல்லுபதேசம் செய்வார்கள் என்று தம்பி ஜஹபர் சாதிக் நம்புகிறார்.
கந்தூரி அனாச்சாரங்கள் போல் யூத கிருஸ்தவர்கள் பாணியில்""ADIRAI FESTIVAL 2013"என்ற பெயரில் ஆண் பெண்கள் கலக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஷாப்பிங் விழா நம்மூர் பிரபலங்களின் ஆதரவுடன் இன்னும் ஆறு நாட்களில் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கா.மு.பள்ளி மைதானத்தில நடக்க இருக்கிறதை தடுப்பது அந்த அலிம்களுக்கு கடமையல்லவா?
ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் சகோதரர்களை மட்டும் பலவழிகளில் தடுக்கிறார்கள் அந்த ஆலிம்கள்.
//* இந்த முறை ஊரில் அதிகமதிகம் பஸ் பயணம் மேற்கொண்டதில் நிறைய அனுபவம் கிடைத்தது. அதில் ஒன்று இராமநாதபுரத்தில் இருந்து பஸ் புறப்பட்டதும் ஒருவர் போனில் "அப்பத்தை சுட்டுவை" என்று சத்தமாக சொன்னவர் மூன்று மணி நேரம் கழித்து மல்லிபட்டினத்தில் கைலி அவிழ்ந்தது கூட தெரியாமல் பஸ்ஸை விட்டு இறங்கிப் போனார் குடிகளில் பலவகை உண்டாம் அதில் ஒருவகை பயணக்’குடி’யாம் இது.//
இது போன்ற ஒரு அநாகரிகமான குடிகாரனின் செயலைக் காணும் வாய்ப்பு எனக்கும் தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் நாங்கள் மதுரையிலிருந்து ஊர் திரும்பும்போது அறந்தாங்கி பேச நிலையத்தில் கிடைத்தது.
இப்போது இது பரவலான அத்துமீறல். இரவுப் பயணம் செல்கிறவர்களுக்கு வழக்கமாகிவிட்ட காட்சிகள். பலர் பஸ்சில் வைத்தே குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். நெடுந்தூர பஸ்களில் இவை அதிகம். நடத்துனர்களால் கூட நிறுத்த முடியவில்லை. ஊரில் இப்போது குடியே பெரும் பிரச்னை. குடிகாரர்களே தீராத தலைவலி.
அறந்தாங்கி பஸ் நிலையத்தில் ...
கவிக்காக்கா சொன்னதுபோல் ஊர்ச்செய்திகளை படிப்பது சுகம் அதிலும் சாவன்னா காக்கா சொன்னா அது தனிசுகம்.....படிக்க படிக்க தெவிட்டாத கவலையளிக்கும் செய்திகள்.....அது சரி கரெண்ட்ட பத்தி ஒன்னும் சொல்லயே......
//காசை கரியாக்குவதை கேள்விப்பட்டுள்ளோம் கரியை காசாக்குவதை// இத இத தான் நான் சொல்வேன் டிரேட் மார்க் சாவன்னா காக்கா எழுத்து நடை
ஊர் செய்திகள் வாசிப்பதில் அலாதி ப்ரியமா ஈக்கிது.. இன்னும் ரொம்பா எழுதுனாலும் படிச்சிக்கிட்டே இருக்கலாம்போல தெரியுது அதுலே நல்லதா நல்ல விசயம் எழுதுனா மனதுக்கு சந்தோஷம் ஹாக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும், ஹமீத் காக்கா..
ஹைலைட்ஸ் சூப்பர்
//Ebrahim Ansari சொன்னது… இது போன்ற ஒரு அநாகரிகமான குடிகாரனின் செயலைக் காணும் வாய்ப்பு எனக்கும் தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் நாங்கள் மதுரையிலிருந்து ஊர் திரும்பும்போது அறந்தாங்கி பேச நிலையத்தில் கிடைத்தது. //
அஸ்ஸலாமு அலைக்கும், அ. இ காக்கா, மறக்க முடியாத சம்பவம், இன்னும் அந்த குடிகாரன் பேசிய வார்த்தைகளும், அவன் மனைவியின் முகத்தில் குத்தியதும் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அந்த அம்மாவை நினைத்து வருத்தம் மட்டுமே படமுடிந்தது நம்மால்.
* காசை கரியாக்குவதை கேள்விப்பட்டுள்ளோம் கரியை காசாக்குவதை இராம்நாட்டில் இருந்து தூத்துக்குடி போகும் பாதையில் பார்க்கலாம் அதாவது கருவங் காட்டை வெட்டி கரி மூட்டம் போட்டு கரியை காசக்குகின்றனர்.-
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . சகோ.யாசர் நலமா? நம்ம நட்சத்திர எழுத்தாளர் வந்துவிட்டார்! இங்கே சின்னதாய் ஒரு தகவல் முன்பு நம்மூரில் சலவைகாரர் ஒருவரை பார்த்து நான் சொன்ன சின்ன
ஹைக்கூ"காசை கரியாக்கும் உலகில் கரியை காசாக்கும் கூட்டம்!
-------------------------------
வியாபாரிக்கு,வியாபாரம் சூடுபிடித்தால் சலைவை நோட்டு மின்னும் சட்டைப்பையில்!! இவர்களுக்கோ சூடு(இஸ்திரி பெட்டி)பிடித்தால்தான் வியாபாரம்!!! மேலும்,
சலவை செய்தால்தான் சில சில்லரை நோட்டுக்கள்.
-------------------------------------------------------
(கவியரசுவிடமிருந்து இனி அருவியா வந்து விழும் நான் இப்ப நடைய கட்டுகிறேன் பிறகு வருகிறேன்).இன்சாஅல்லாஹ்.அபு.இபு காக்கா நான் பத்தவச்சிட்டேன் இனி தொடரும் கவிகளின் அணிவகுப்பு, கவிதைத்தொகுப்பு!.
//அஸ்ஸலாமு அலைக்கும் . சகோ.யாசர் நலமா? நம்ம நட்சத்திர எழுத்தாளர் வந்துவிட்டார்!
இங்கே சின்னதாய் ஒரு தகவல் முன்பு நம்மூரில் சலவைகாரர் ஒருவரை பார்த்து நான் சொன்ன சின்ன ஹைக்கூ
"காசை கரியாக்கும் உலகில்
கரியை காசாக்கும் கூட்டம்!"//
இது ஹைலைட்ஸ்'க்கு ஹைலைட் !
'கிரவ்னு' இருக்க வேண்டிய இடத்திலதான் இருக்கு...
இன்னொன்றை கவனித்தாயா ?
கந்தூரிக்கு கச்சல் கட்டுவதற்கு முன்னர்
ஒத்திகை பார்க்க ஒரு திருவிழா ஊரில் !
nainathamby said -
//அடங்கினவங்கள வச்சு இவனுங்க அடங்காம பன்ற அட்டூழியும் அழிக்கப்பட வேண்டும் !//
அடக்கபட்டவர்களை வச்சு இவனுங்க பன்ற அட்டூழியம் அழிக்கப்பட வேண்டும் - இவன்கள் அடங்கி ஒடுங்கின பின் தான் தெரியும் இதற்குரிய பலன் என்னவென்று.
nainathamby said
//கந்தூரிக்கு கச்சல் கட்டுவதற்கு முன்னர்
ஒத்திகை பார்க்க ஒரு திருவிழா ஊரில் !//
இது போன்ற அனாச்சாரங்களை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் போகப்போக தடுப்பது கடினம்தான்.
mk.aboobacker said-
//ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் சகோதரர்களை மட்டும் பலவழிகளில் தடுக்கிறார்கள் அந்த ஆலிம்கள்.//
ஏகத்துவம் பேசும் சகோதரர்கள் ஒன்றுபட்டு இல்லாததால் தான் ஏகப்பட்ட பிரச்சனையோ?
ஒன்றாக இருந்தால் நண்பன் சாவன்னா கழிப்பிட கபுரை இடித்த செய்தியையும் தந்திருப்பாரில்ல..
என்ன சாவன்னா அப்படித்தானே?
எஸ். ஹமீத் காக்காவின் அதிரைச்செய்திகளின் நக்கல் கலந்த வழங்கல் படிக்கும் நமக்கெல்லாம் வெயில் நேரத்தில் பெய்யும் மழைபோல் கவலையுடன் சிரிப்பும் வர வைக்கிறது.
"கொடி மரத்து மேலே பத்தி,பத்தி அமர்ர ஒரு சிகப்பு லைட் வக்க சொல்லுங்க. இல்லாட்டி யாரு மினாம்ல யாச்சும் வந்து MINIMUM SAFETY PRECAUTIONS கிளாஸ் எடுக்கப்போறாங்க". சந்தனம் பூசி ஒருத்தர் மவுத்தா போன மாதிரி கொடிக்கம்பம் கீழே உழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதல்லவா?
"ரோட்ல லாரியிலேர்ந்து ஜல்லி,தார்க்கலவையைத்தானே கொட்ட வப்பாங்க. இது என்னா புதுசா லாரியே ரோட்ல கொட்டிக்கெடக்குது? என்னா ஹைட்ராலிக் ஃபைலியலரா? கவிக்காக்கா, உங்க கம்பெனியிலேர்ந்து ஒரு புது ஹைட்ராலிக்கு ஸ்பேர் அனுப்பி வைங்க....ராலிய எசவு பண்ணனும்.........."
நம்ம ஊர் ஆலிம்களின் டயலாக் -
'வெளிச்சம் வந்துட்டா இருட்டுத் தன்னாலேயே போய்விடும்' அப்படின்னா நன்மையை மட்டும் ஏவினால் போதும் தீமை தன்னாலேயே போய்விடும்னு சொல்வாங்க -
முகி அபுபக்கர் காக்கா மார்க்கத்துலே நன்மையை ஏவித் தீமையையும் தடுக்கனும்னு தானே இருக்கிறது?
அவங்க சொல்றதும் மார்க்கம் சொல்வது எப்படி ஒன்றாகும்?
ஹமீது,
இப்பவும் ஒரு கொடிமரம்தானா? மருமகளாருக்காக மண்டகப்படியில்லையா? இதுசம்மந்தமாக நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?
கொடிமரத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு ஒன்று:
நேற்றிரவு சந்தனக் கூடு
கலாட்டா வொன்று
கலவரத்தில் முடிய
கால வரையறை யற்ற
கல்லூரி அடைப்பினால்
விடுதியின் உணவகமும்
சடுதியில் மூட
எதிர்பாராத தருணமொன்றில்
ஊர்போக நேர்ந்தது
அதிகாலை ரயில்
நிலையம் அடைந்தபோது
குட்டைக் கம்பளி போர்த்தி
மூட்டை மூட்டையாய்
மனிதர்கள்
தர்கா மைதானத்தின்
வழி நடக்கயில்
பெண்கள் பக்கம்
ஆண்கள் செல்லாமலும்
ஒரு பார்
ஆனந்தம் சோப் வாங்குபவரகளுக்கு
ஒரு க்ளாஸ் இனாமும் கொடுத்தும்
பீம புஷ்டி அல்வாவின்
வாள்வீச்சுமாயும்
நடந்து முடிந்திருந்த
சந்தனக் கூட்டிரவின் மிச்சமிருந்தது
துப்பாக்கிச் சுடும் கடையில்
சுடப்படாமல்
விடப்பட்ட பலூன்களில்
வறுமானம் பாக்கியிருந்தது
முட்டாசுக் கடையின்
ஈக்களுக்கு
உறங்கும் கடைக்காரரின்
பிளந்த வாயில்
இனிப்பு மீதமிருந்தது
முதுகு தேய்ந்த
குதிரை புலிகளோடு
குடை ராட்டினமும்
உழைத்துக் களைத்திருந்தது
சாக்கரீனில் நாட்டமில்லத
எறும்புச் சாரையொன்று
மண்ணில் ஊற்றியிருந்த
ரோஸ் மில்க்கை தவிர்த்து
வளைந்து தொடர்ந்தது
தர்காவிற்கு
எதிரே அமைத்திருந்த
அனாச்சாரம் அரங்கேறும் மேடையில்
பின்னணி திரைகள் அகற்றப்பட்டிருந்தாலும்
முன்னால்
மனித மூட்டைகள்
இன்னும் தூக்கத்தில் கிடந்தன
பரோட்டாக் கொத்தும் சட்டியைச் சுற்றி
பொறிந்த வெங்காயச் சருகுகள்
சிதறிக்கிடந்தன
தர்காவின் உட்புறம்
வேண்டுதல்களை சமர்ப்பித்த
திருப்தியில்
உறங்கிக்கொண்டிருந்த
மக்களுக்குத் தெரியாது
அவை
தவறான
முகவரியிட்டவை
என்று...
அவுலியாவுக்கும்தான்!
ஊரை பற்றிய 'பயங்கர செய்தி" செய்திகளுக்கு நன்றி. அதுதான் அதிராம்பட்டினத்தில் பிறந்தவர்கள் வெகு நாட்கள் வெளிநாட்டில் / வெளிஊரில் தங்கி விடுகிறார்களா?..
ibn abdulwahid சொன்னது…
//நம்ம ஊர் ஆலிம்களின் டயலாக் -
'வெளிச்சம் வந்துட்டா இருட்டுத் தன்னாலேயே போய்விடும்' அப்படின்னா நன்மையை மட்டும் ஏவினால் போதும் தீமை தன்னாலேயே போய்விடும்னு சொல்வாங்க //
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.- அல்குர் ஆன் 3:104
//இன்னுமா அந்த ஆலிம்கள் நல்லுபதேசம் செய்வார்கள் என்று தம்பி ஜஹபர் சாதிக் நம்புகிறார்//
அபூபக்கராக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.
அதான் நஜாத் காரவங்க எடுத்து சொன்னா வீம்புக்கு டபுளா செய்பவர்களாக இருக்கார்களே. இனியாவது ஆலிம்களுக்கு எடுத்துச் சொல்லும் துணிவு வரும் என்றே நம்புகிறேன். இன்சா அல்லாஹ்.
//"ADIRAI FESTIVAL 2013"என்ற பெயரில் ஆண் பெண்கள் கலக்கும் கலை நிகழ்ச்சி//
//கந்தூரிக்கு கச்சல் கட்டுவதற்கு முன்னர்
ஒத்திகை பார்க்க ஒரு திருவிழா ஊரில் !//
ஸ்கூல் லீவில் பிள்ளையின் மனமகிழ்வுக்காக பல்வேறு வெளியூர்களுக்கு சென்று மாற்றுமத கலாச்சாரம் கலந்த பல்வேறு பாவங்களில் மூழ்குவதை விட நம்மவர்களால் FESTIVAL நடப்பதால் அதுக்கு இது மேலாகவே தெரிகிறது.
இதன் மூலம் இஸ்லாமிய 'தாவா' செய்வதற்கு சிறு வாய்ப்பு கிடைக்குமே!
அதே சமயம் அங்கு இசை இல்லாமல் வேளைக்கு தொழுகை வசதியும் கட்டாயம் செய்தல் நல்லது.
சமாதிக்கு அருகில் நடக்கும் கூத்துகளுக்கும் சமாதி கட்டும் வாய்ப்பும் இதன் மூலம் வரச் செய்யலாமே!
இது எனது கருத்தே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹமீது காக்காவின் ஊர் செய்தி ஊதா கம்பத்தில் அட்டகாசமா பறக்குது.வாழ்த்துக்கள்.
கொடி கம்பத்தை அன்னார்ந்து பார்த்தால் கூட கழுத்து வலிக்க வில்லை.
உண்மையான செய்தியை படிக்கும் போதுதான்.நெஞ்சு துடிக்கின்றன.
//நம் ஊரில் பெரும் பாலான கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் எல்லை தாண்டி பட்டுக்கோட்டையில் உள்ள ராஜக்களிடமும் தம்பிகளிடமும் கட்டப் பஞ்சாயத்து வைத்து தீர்த்து வைத்து விடுகின்றனர். பணம் கொடுக்கக்காமல் டிமிக்கி கொடுப்பவரிடம் கிடிக்கி பிடி போட்டு பணத்தை வாங்கி பணம் கொடுத்தவருக்கு தங்களை கழிவுத் தொகையை கரைத்துக் கொண்டு திருப்பி கொடுத்து விடுகின்றனர் ராஜாக்களும் தம்பிகளும்..//
என் கடைக்கு கஸ்டமறாக வந்த மாற்று மத சகோதரி திடிரென்று உங்க முஸ்லிம் பொண்டுன்கதான் ரொம்ப ஏமாத்துறாங்க என்று கூறியவரிடம் என்ன என்று விசாரித்தேன். நம் சகோதரியின் பெயரை சொல்லி சீட்டு பணம் எடுத்து ஒரு வருடமா எமாற்றிகிட்டே இருக்கிறா.நாங்கள் ஆளை கூட்டிக்கிட்டு போய் கேட்டால் மத பிரச்சனை வந்திடும் என்று பயப்புடுகிறோம்.என்று சொன்னதும் வாரி போட்டது சில நொடிகள்.மனித குலத்திற்கு முன் மாதிரியான நம் சமுதாயத்தின் நிலைமையை நினைத்து.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹமீது காக்காவின் ஊர் செய்தி ஊதா கம்பத்தில் அட்டகாசமா பறக்குது.வாழ்த்துக்கள்.
கோடி கம்பத்தை அன்னார்ந்து பார்த்தால் கூட கழுத்து வலிக்க வில்லை.
உண்மையான செய்தியை படிக்கும் போதுதான்.நெஞ்சு துடிக்கின்றன.
//நம் ஊரில் பெரும் பாலான கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் எல்லை தாண்டி பட்டுக்கோட்டையில் உள்ள ராஜக்களிடமும் தம்பிகளிடமும் கட்டப் பஞ்சாயத்து வைத்து தீர்த்து வைத்து விடுகின்றனர். பணம் கொடுக்கக்காமல் டிமிக்கி கொடுப்பவரிடம் கிடிக்கி பிடி போட்டு பணத்தை வாங்கி பணம் கொடுத்தவருக்கு தங்களை கழிவுத் தொகையை கரைத்துக் கொண்டு திருப்பி கொடுத்து விடுகின்றனர் ராஜாக்களும் தம்பிகளும்..//
என் கடைக்கு கஸ்டமறாக வந்த மாற்று மத சகோதரி திடிரென்று உங்க முஸ்லிம் பொண்டுன்கதான் ரொம்ப ஏமாத்துறாங்க என்று கூறியவரிடம் என்ன என்று விசாரித்தேன். நம் சகோதரியின் பெயரை சொல்லி சீட்டு பணம் எடுத்து ஒரு வருடமா எமாற்றிகிட்டே இருக்கிறா.நாங்கள் ஆளை கூட்டிக்கிட்டு போய் கேட்டால் மத பிரச்சனை வந்திடும் என்று பயப்புடுகிறோம்.என்று சொன்னதும் வாரி போட்டது சில நொடிகள்.மனித குலத்திற்கு முன் மாதிரியான நம் சமுதாயத்தின் நிலைமையை நினைத்து.
ஊரில் முஸ்லிம் என்ற போர்வைக்குள் ஆர்.எஸ்.எஸ். தாண்டிய அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும் சில/பல நம்மவர்கள் இன்றும் பகிரங்கமாகவோ அல்லது திரைமறைவிலோ அரங்கேற்றிக்கொண்டு இருப்பது என்னவ்வோ மறுக்க முடியாத உண்மையே......முஸ்லிமாக பிறந்து விட்டதால் நாளை மஹ்ஷரில் அல்லாஹ் ஏதோ கொஞ்சம் பாத்து போடுவான் (இரக்கம் காட்டுவான்) என்ற நப்பாசையில் காலம் கடத்தி வருகின்றனர்.
Post a Comment