அதிரை தக்வா பள்ளியில் சமீபத்தில் நடந்தேறிய மவ்லூது கச்சேரிக்கான போட்டியல்ல இது, மாறாக அதற்கு நேர் எதிரானது, அதுவும் கிரவ்னுடைய வரிகள் நிரம்ப சுடத்தான் செய்யும் அது நெருப்பென்று தெரிந்தும் அங்கே குளிர் காய்பவர்களுக்கு மட்டுமே.
இது
மடைமை பாடும் ராகம்!
கபுரில்
இருளை நாடும் சோகம்!
மார்க்க அறிவினை
அழித்திடும் கரையான்!
மெய்ஞானமில்லாத்
தேடல்!
------------------------------
சலவாத்துச் சொல்லும் வாயில்
ஷிர்க்கின் வாசனை!
வல்லவன் அல்லாஹ்வின் ஆற்றைலை
சந்தேகிக்கும் கேனை!
சிறப்பான இஸ்லாம் வழியில்
நடவாத ஊனம்!
உயிருக்கு மேலான நபி(ஸல்)க்கு வேண்டாமே
சாத்தான் கானம்!
------------------------------
வெற்று கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?
------------------------------
நடந்தவரை போகட்டும்
தவ்ஹீத் ஒளியில் நன்மைதேடு!
இப்படிதான் செல்வேன் என்றால்
இம்மையிலும் மறுமையிலும் தொடரும் கேடு!
உன் சகோதரன் என்பதால்
உரக்கச்சொல்கிறேன்!
இப்படித்தான் சாவேன் என்றால்
உன் வழி நாசம்!
------------------------------
உயிர் உள்ள போதே
தெளிந்து தேறு!
சந்தனம் என்று எண்ணி
பூசுவது சேறு!
கண்னை மூடிக்கொண்டு
வெளிச்சம் தேடுவதா?
------------------------------
சகோதரா!!
என் கடமை
நன்மையை ஏவி தீமையை தடுப்பது!
கேட்டுத் தெளிந்தால்
சுவர்கம்!
இல்லையேல்
நிரந்தர நரகம்!
CROWN
14 Responses So Far:
\\வெற்று கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?//
நறுகேர்ன்று கொட்டியது போலுள்ள வரி -- அசத்தல் வரி
\\சகோதரா!!
என் கடமை
நன்மையை ஏவி தீமையை தடுப்பது!
கேட்டுத் தெளிந்தால்
சுவர்கம்!
இல்லையேல்
நிரந்தர நரகம்!//
அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் ... ஏக இறைவன் இவர்களுக்கு ஹிதாயத் கொடுத்து நல்லதையே செய்ய தவ்பிக் செய்வானாக ஆமீன்!
கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள். கவலை மேலோங்கும் கருத்துகள். என் சமுதாயமே என்று தட்டிக்கேட்கும் பொறுப்புணர்ச்சி என உச்சகட்டமாக சப்தம் போடுகிறது கவிதை.
வார்த்தைகளில் பிரம்படி கலந்து உங்களால்தான் எழுத முடியும் கிரவுன்.
வாழ்த்துகள்.
(ட்டைமிங் கவிதையோடு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி)
//வெற்று கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?//
பதில் தெரிந்த கேள்விகளைக் கேட்டு வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கும்கூட பதில் தெரியும் என்று? இருந்தாலும் வீம்புதான்.
கல்லறைப் பரீட்சை? புத்தம் புது வார்த்தை. புதுமைதானே உங்களின் எழுத்து யுக்தி?
//வார்த்தைகளில் பிரம்படி கலந்து உங்களால்தான் எழுத முடியும் கிரவுன்.//
வழிமொழிகிறேன்.
வார்த்தைகளின் வடிவமைப்பாளரை வரவேற்கிறேன். இந்தப் பிரம்படி தொடர்ந்து கிடைக்க கை நீட்டிக் காத்து இருக்கிறோம்.
இப்படி வார்த்தைப் பிரம்பால் அடிப்பது சிலருக்குப் பிடிக்காது ஆனால் இந்தக் கருத்துக்கள் பலரின் மனதில் நீர் இல்லாமலே வேர் பிடிக்கும். உங்களின் கவிதைத் தேர் அதிரை நிருபரில் அடிக்கடி தடம் பதித்தால் வடம் பிடிக்க நாங்கள் தயார்.
மடைதிறந்த வார்த்தைகளின் காட்டாற்று வெள்ளம் மடைமைச் செடிகளை வேரோடு அழிக்கும் வேகம் உங்கள் கவிதையில் காண்கிறேன்.
தொடர்ந்து உங்களின் கவிதைகளைப் பதியுங்கள்; நான் சற்று ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால் உங்களின் கவிதைகள் என்னிடத்தை நிரப்பும்; “என்னைப்போல் ஒருவன்” நீயல்லவா?
கிரீடமே!
நீங்கள் இதில் மடமையைச் சுடவில்லை, தெரிந்து தவறு செய்தால், அது மடமை
அதிலிருந்து மீளலாம். இது பச்சைத்தவரு என்று தெரிந்தும் அதை வீண் பிடிவாதத்தின் காரணமாக செய்வதால்,
நீங்கள் வீம்பைச்சுட்டிரிக்கின்றீர்கள்.
வீராப்பைச்சுட்டிரிக்கின்றீர்கள்
பிடிவாதத்தைச்சுட்டிரிக்கின்றீர்கள்.
மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்தை சுட்டிரிக்கின்றீர்கள்.
நாளை மஹ்ஷரில் நூற்றுக்கு நூறு நஷ்டத்தை
தரப்போகும் வார்த்தை ஷிர்க்கைச்சுற்றிக்கின்றீர்கள்
கப்ர் என்னும் இருள் நிறைந்த வீட்டை நோக்கி ஒவ்வரு நாளும் அடி எடுத்து வைக்கின்றோம் என்ற உணர்வில்லை. ஷிர்க் என்று தெரிந்தால் அல்லவா இவர்கள் தெளிவடைவார்கள். இதை ஒரு புனிதம் என்று கருதும் அந்த
மார்க்க ஞான மில்லா நிலைமை என்று மாறுமோ. அன்றுதான் இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வரும், அதுவரை இதற்க்கு கமா (,) தான் .
தங்களின் ஆணி அறைந்தார்ப்போன்ற இந்த வரிகள் கொஞ்சம் இவர்கள் நெஞ்சில் தைத்தால்கூட மாற்றம் ஏதும் வருமோ என்று என் மனம் எண்ணுகிறது. அதுதான் ,
வெற்று கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?
இதை இவர்கள் வெற்றுக்கத்தலாக நினைக்கவில்லையே,
வேதவாக்காக அல்லாவாக நினைக்கிறார்கள்.
இக்கவிதையின் நோக்கம் எப்படி நிறைவேறும்.?
கடையில் இருக்கும் வரை அது பொருள். அது பள்ளிவாசலுக்குள்
வந்துவிட்டால் , அது புனிதம் என்று கருதும் போலித்தன பக்தி உள்ளவர்கள் இருக்கும் வரை, இந்த அவலநிலை தொடரத்தான் செய்யும்.
உன்மையைச்சொல்வதென்றால்
இவர்களெல்லாம், ஒருகாலத்தில் குரானைவிட, மௌலூது கித்தாபை போற்றிப்பாதுகாத்து வந்தவர்களில் உள்ளவர்கள். இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமல்ல, உண்மையில் கண்ணீர் மல்கக் கூறுகிறேன் . இதுதான் உண்மை.
அல்லாஹ் இவர்களையும், நம்மையும், இந்த போலியான,
ஒன்றுக்கும் உதவாத,எந்தப்பரிந்துரையும், இல்லாத, எந்த அங்கீகாரமும் இல்லாத நாளை மஹ்ஷரில் நஷ்டமாகப்போகின்ற நூதன பழக்கத்தை விட்டும்
தூரமாக்கி வைப்பானாக ! ஆமீன் !
ஏக்கப்பெருமூச்சுடன்,
அப்து ஆசிப், என்ற அப்துல் காதர்,
ரியாத், சவுதி அரேபியா.
கிரவ்னு, இதை
கோவமா படிக்கவா ?
ராகமா படிக்கவா ?
எப்படி வாசித்தாலும்
இதையும் மவ்லத்துன்னு
நெனச்சுட்டு நார்சா கேட்பாங்களே !
என்ன பன்னலாம் ?
செருப்பால் அடிக்காத குறைதான்
ஒவ்வொரு அடிகளும்
முள்ளென தைக்கின்றது
இதை ஒவ்வொரு வீட்டு சுவர்களில் இதை வடிக்கவேண்டும்
இந்த உண்மை கவிததையயும் பார்த்துவிட்டு இவர்கள் திருந்தவில்லை என்றால்?
நஷ்டம் யாருக்கு?
காது இருந்தும் செவிடர்கள், கண்ணிருந்தும் குருடர்கள்.
அவர்கள்தான் இவர்கள்
தவ்ஹீதை எதிர்கின்றோம் என்று நினைத்துக்கொண்டு தாம் அடிக்கும் வீம்பிலே தன் தலையிலேயே தன்னைத்தானே மண்ணை வாரி இரைத்துக்கொண்டு தம்மை அறியாமலே ஷியாக்கலாக மாறிவிடுகின்றனர்.யா அல்லாஹ் இவர்களை காப்பாற்றுவாயாக
என்னமா எழுதியிருக்கீங்க...என் எண்ணமா எழுதியிருக்கீங்க.
உங்கள் கவிதை படித்தது.....மிகுந்த வருடங்களுக்கு பிறகு அதிகாலையில் ஊருக்குள் ரயிலில் வந்திறங்கிய அனுபவம்..எங்கோ ஒரு ஒரத்தில் பதிவான குதிரை வண்டிக்குள் மனத்த புல்லின் வாசனை.
crown,
மனிதனால் எழுதப்பட்ட மவ்லூது பாடல்களில் குப்பையான, இணைவைக்கும் கருத்துகள் மல்கிக்கிடப்பதால் வேண்டாம் என்று வெறுக்கிறோம்.
எதிர்வாதம் செய்யத் தெம்பில்லாமல் ஊமைக்குசும்பர்கள் காரியத்தில் கண்ணாக ஓதியும் ஆடியும் பேயாட்டம் போடுகிறார்கள்.
நாமோ, நமக்குள் மவ்லூது வேண்டாம் என்கிற ஒத்தக் கருத்தையே, வழக்கமான விதண்டாவாதத்திற்காக, "இவர் சொல்படி வேண்டாம், அவர்தான் ஆதரபூர்வமாக சொல்கிறார், அதன்படி வேண்டாம்" என்று மண்டையை உடைத்துக்கொள்கிறோம்.
இந்த கேப்பில, மெள்லூதை எழுதியவருக்கு தர்கா கட்டிவைக்கப்போறாங்க, பாருங்க
இதற்கு மேலேயும் தெளிவா சொல்லனுமா?
அருமை சகோ. க்ரவுன்
அ.நி.: படத்தில் மெளலூதுக்கான பாய் சுருட்டப்படுகிறதா விரிக்கப்படுகிறதா?
மெளலிது வடிவில் (இப்படித்தான் அறிஞர் PJ சொன்னார்) சரியா குறி வைத்து தாக்கி இருக்கிறீர்கள். அருமை.
வரும் ஜமாத்துல் ஆகிர் மாச கடைசியில் பூனைக்கொள்ளையில் கபுருக்கு சந்தனம் பூச வேண்டியதும் கொடி மரம் ஏத்தி ரத ஊர்வலம் எடுத்து கச்சேரியும் நடத்த வேன்டியதும் இருக்குதாம் அதுக்கு ஒரு குறி வைத்து ஒரு மெளலிது எழுதினால் மக்களை இப்போதே விழிப்புணர்வுப்படுத்தலாமே!
------------------------------------------------------------------------------------------------------
ஜமாத்துல் அவ்வல் பிறை 29 ஹிஜ்ரி 1434
Post a Comment