தொடர் : இருபது
இஸ்லாமிய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். (வணிகத்தில் நேர்மை)
ஆன்லைன் வணிகம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆன்லைனில் வியாபாரத்தில் இஸ்லாத்தின் பொருளாதார கண்ணோட்டம் என்ன ? என்று கேட்டால் ஒன்று வெளி இடங்களில் அல்லது வெளி நாட்டில் உள்ள ஒரு பொருளை இணையதளம் மூலம் வாங்குவது என்று சொல்லலாம். அதற்குரிய விலையைக் கொடுத்து அந்தப் பொருளை நம் வீட்டுக்கு வரவைத்து பெற்றுக் கொள்ளலாம். இது இஸ்லாமிய விற்பனை (ஹராம் ஹலால் போன்ற) நிபந்தனைகளுக்குட்பட்டு இருந்தால் கூடும் என்று சொல்லலாம்.
எடுத்துக் காட்டாக ஆன் லைனில் சுற்றுலா முதலிய வணிக நடைமுறைகள் இன்று நடைபெறுகின்றன. ரயில், பேருந்து மற்றும் விமானப் பயண சீட்டுகள் , தங்குமிட வசதிகள் ஆகியன ஆன்லைனில் இருந்த இடத்தில் இருந்தே பதிவு செய்யப்பட்டு வாங்கப் படுகின்றன விற்கப்படுகின்றன. இவைகள் நவீன காலத்துக்கு தேவையானவை மற்றும் வசதியானவை என்ற அடிப்படையில் இத்தகைய சேவைகளை மற்றும் உற்பத்தியாகி குவிக்கப்பட்டு இருக்கும் வீட்டு உபயோகப் பொருள்களை நமது வசதிக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு ஆன்லைனில் வாங்குவதில் தவறு இல்லை என்றே இஸ்லாமிய பொருளாதார ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் உற்பத்தியான பொருள்களை உரிய விலைகொடுத்து வாங்கிக்கொள்வதில் தவறு தென்படவில்லை. ஆனால் உற்பத்தியே ஆகாத பொருள்களை வாங்குவதை விற்பதை இஸ்லாம் தடுக்கிறது.
நபி மொழி கூறுகிறது ,
தாவூஸ் ( ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள் உணவுப் பொருள் கைக்குவந்து சேர்வதற்கு முன் அதை விற்பதற்கு நபி ( ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்கள் கூறினார்கள் . எவ்வாறு என்று கேட்டேன் இப்னு அப்பாஸ் ( ரலி) கூறினார்கள் உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய் சேராத நிலையில் விற்கப்படுவதால் உணமையில் அது காசுக்கு காசை வைற்பதாகும் ( புஹாரி 2/2131).
மேலும்,
நபி ( ஸல்) காலத்தில் குத்து மதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்களின் இருப்பிடத்துக்குக் கொண்டு சென்று சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக கண்டிக்கப் பட்டார்கள் என்று இப்னு உமர் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( புகாரி . 2137)
தன்னிடம் இல்லாத சரக்கை விற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். அன்றைய அரபகத்தில் “நஜ்ஷ் “ என்கிற வியாபார முறை இருந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். ஒருவருக்கு தேவைப்பட்ட பொருளை அவர் விலை பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கு தேவை இல்லாவிட்டாலும் அந்தப் பொருளை விலை ஏற்றி விடுவதற்காகவே மற்றொருவர் கூடுதல் விலைக்கு கேட்பார். இதனால் உண்மையில் தேவைப்படுபவரின் தலையில் அதிக விலைக்கு அந்தப்பொருள் கட்டிவிடப்படும். அநியாயமான கூடுதல் இலாபத்தை பொருளின் சொந்தக்காரரும் விலையை ஏற்றிவிடுபவரும் பிரித்துக் கொள்வார்கள். இந்த முறையே தடைசெய்யப்பட்டது. அப்படியானால் ஆன்லைன் வர்த்தக முறையும் தடை செய்யப்பட வேண்டியதே.
இப்னு உமர் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறியாமை காலத்தில் கருவில் உள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குட்டி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக ஒட்டகத்தின் இறைச்சியை விற்று வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் கூடாது என்று தடை விதித்தார்கள் ( புகாரி)
மற்றொரு ஹதீஸில்,
“சரக்குகளைக் கொண்டுவரும் வணிகக் குழுவினரை எதிர்நோக்கிச் செல்லாதீர்கள். ஒருவர் செய்துள்ள வியாபாரத்துக்கு நஷ்டத்தை உண்டாக்கும் வகையில் மற்றவர் நடந்து கொள்ள வேண்டாம் “ என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். ( புஹாரி, முஸ்லிம்)
வியாபாரம் என்பது பண்டமாற்று அடிப்படையிலோ அன்றி பணத்தை பரிவர்த்தனை ஊடகமாகக் கொண்டோ வாங்குவோரும் விற்போரும் பண்டங்களைக் கைமாற்றிக் கொள்வதனைக் குறிக்கும்.
“மேலும் அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான்” எனக் கூறுகிறது அல்குர்ஆன் (2:275)
வியாபாரப் பண்டத்தைப் பொறுத்த வரையில் அது கீழ்க்காணும் ஆறு நிபந்தனைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
1. சுத்தமானதாக இருத்தல்
2. பயனுள்ளதாக இருத்தல்
3. விற்பவருக்குச் சொந்தமானதாக இருத்தல்
4. பண்டத்தை வாங்குபவருக்கு ஒப்படைக்கும் சக்தி இருத்தல்
5. பண்டமும், அதன் விலையும் குறிப்பாக அறியப்பட்டிருத்தல்
6. கையிருப்பில் உள்ளதாயிருத்தல்
வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவை
1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்
2. அபகரிக்கப்பட்ட திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்
3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்
4.. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்
5. விலைக் கட்டுப்பாடு
6. பதுக்கல்
7. வட்டி
அளவை நிறுவையில் மோசடி செய்தல்
அளவை நிறுவையில் முறையாக நடத்தல் வேண்டும்.
‘நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள். நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்”
“அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும் போதும் குறைத்து விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன் (விசாரணைக்காக) நிற்பர் (83.1-6) என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
பேராசையும், பிறர் நலன் பேணாத் தன்மையுமே பதுக்கலைச் செய்யத் தூண்டுகிறது.
ரிபா அஹ் இப்னு ராபி ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
“நிச்சயமாக வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவார்கள் – அல்லாஹ்வை பயந்து நன்முறையில் உண்மையாக நடந்து கொண்டோரைத் தவிர .” ( முஸ்தத்ரக் அல் ஹக்கீம் )
பதுக்கலை பல நபி மொழிகள் கண்டிக்கின்றன.
“பதுக்கியவன் பாவி” (முஸ்லிம்: அபூதாவூத்)
“உணவுப் பொருளை நாற்பது நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும் அவனை விட்டு நீங்கிக் கொள்கிறான்.” (அஹ்மத், அல்ஹாகிம்)
இந்த அத்தியாயத்தை முடிக்க முன்பு நான் உணர்ந்த ஒரு உள்ளம் நடுங்கும் ஹதீஸை பகிர விரும்புகிறேன். உலகமயமாக்கல் என்கிற வேண்டாத பிள்ளையைப் பெற்று எடுத்து அதற்கு காண்டா மிருகம் என்று பெயர் வைத்ததுபோல் வைத்திருக்கும் அமெரிக்க யூதக்கூட்டணியின் குதர்க்க மூளையில் உருவானதே இந்த ஆன் லைன் வர்த்தகம் என்கிற வர்த்தக சூதாட்டம். ஆனால் இதை பல இஸ்லாமிய நாடுகளும் தடை செய்யாமல் கடைப்பிடித்து வருகின்றன. இந்த நபி மொழியைப் படிக்கும்போதுதான் நம் உள்ளம நடுங்குகிறது சகோதரர்களே. அல்லாஹ் நம்மை முறையற்ற வியாபாரங்களில் இருந்து காப்பானாக!
அபூ சயித் அல் குத்ரி ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
"யூதர்களையும் கிருத்தவர்களையும் பின்பற்றுவீர்கள் எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு உடும்பின் பொந்துக்குள் புகுந்து இருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுந்து கொள்வீர்கள்" ( புகாரி 3456 )
எப்படியும் பொருளீட்ட வேண்டுமென்று நினைப்பது ஒருவகை; அது பொருளாதாரத்தை வளர்க்கலாம். ஆனால் அருளாதாரத்தை வளர்க்காது. இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடிப்படை , பணம் குவிக்கும் பொருளாதாரம் அல்ல. அல்லாஹ்வின் அருள் குவிக்கும் பொருளாதாரமே.
இன்ஷா அல்லாஹ் தொடரும். ..
இபுராஹீம் அன்சாரி
30 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... காக்கா,
ஆன் லைன் எல்லாம் அறிவுக்கு எட்டியிறாத காலகட்டத்திலேயே இஸ்லாம் பூடகமாகச் சொல்லி வைத்துள்ளச் சட்டங்களைத் தங்களின் கட்டுரைக்கு ஏதுவாக எடுத்தாண்டிருக்கும் யுக்தி வாய் பிளக்க வைக்கிறது, மாஷா அல்லாஹ்.
ஒரு புதினத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களோடும் பயணிக்கும் இந்தத் தொடர் என்னை நாளுக்குநாள் மிகவும் ஈர்க்கிறது.
காக்கா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
ஆன் லைன் Bisiness எல்லாம் தொழி நுட்பம் வளராத காலகட்டத்திலேயே இஸ்லாம் பூடகமாகச் சொல்லி வைத்துள்ளச் சட்டங்களைத் தங்களின் கட்டுரைக்கு ஏதுவாக எடுத்தாண்டிருக்கும் யுக்தி வியக்க வைக்கிறது, மாஷா அல்லாஹ்.
இஸ்லாமியப்ப் பொருளியல் பற்றிய மிக அருமையான தொடர், இத்தொடரில் வரும் அனைத்து பதிவுகளிலும் உள்ள நல்ல கருத்துக்களை கருவாகக்கொண்டு, Law of Islamic Fiscal Policy இஸ்லாமியப் பொருளாதார சட்டம் என்று தலைப்பிட்டு வெளியிடலாம், அவ்வளவு அழ்கிய கருத்துக்கள். தொர்ந்து எழுத வாழுத்துக்கள்
Abdul Razik
Dubai
அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,
அலைக்குமுஸ் ஸலாம். பிசி ஓய்ந்து ப்ரீ ஆகிவிட்டீர்களா?
தங்களின் முதல் பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
அலைக்குமுஸ் ஸலாம். பிசி ஓய்ந்து ப்ரீ ஆகிவிட்டீர்களா?
கொஞ்சம் பரவால்ல காக்கா.
பதுக்கலைப் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் காக்கா.
இஸ்லாம் தடுக்கும் பதுக்கலின் வரையறை யாது?
கேள்விக்கான காரணம்: விலை குறைவாக இருக்கும்போது மொத்தமாக வாங்கி விலை கூடும்போது சில்லறையாக விற்பது வியாபாரத் திறமைபோலத் தோன்றுகிறதே?
காட்டாக: ஒரு மூட்டை அரிசியை அறுவடையின்போது 1,000 ரூபய்க்கு (?) வாங்கி 5 மாதங்கள் கழித்து நியாயமான லாபத்தில் சில்லறையாக விற்பது பதுக்கி விற்றதாகுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... காக்கா,
ஆன் லைன் எல்லாம் அறிவுக்கு எட்டியிறாத காலகட்டத்திலேயே இஸ்லாம் பூடகமாகச் சொல்லி வைத்துள்ளச் சட்டங்களைத் தங்களின் கட்டுரைக்கு ஏதுவாக எடுத்தாண்டிருக்கும் யுக்தி வாய் பிளக்க வைக்கிறது, மாஷா அல்லாஹ்.
ஒரு புதினத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களோடும் பயணிக்கும் இந்தத் தொடர் என்னை நாளுக்குநாள் மிகவும் ஈர்க்கிறது.
காக்கா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
முதலில் ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !
அற்புதமான ஆய்வுகள் அடங்கிய பொக்கிஷமாக்காப்பட வேண்டிய கட்டுரையை தொடர்ந்து தருவதற்கு !
வழக்கமாக வாசித்ததும் சட்டென்று கருத்தைப் பதிந்துவிடுவேன், ஆனால் இந்தக் கட்டுரை பள்ளிப்பாடம் படித்து பரீட்சைக்கு தயாராவது போன்ற உணர்வு ! (நல்லதொரு பாடநூல் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்...]
// தன்னிடம் இல்லாத சரக்கை விற்க வேண்டாம் // இது தடை...
ஆனால் நாம் ஆண்-Lions அதோ கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கே கல்லு அதுவரைக்கும் நம்ம இடம் தான், என்று காட்டிவிட்டு ஈடுபடும் இடைத் தரகர்களின் நிலை என்ன ?
ஒவ்வொரு பதிவுக்கும் தாங்கள் எடுக்கும் சிரத்தையை நன்கறிவேன்... அல்லாஹ் அதற்கான நற்கூலியை எல்லா வகையில் வழங்குவானாக !
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
''எப்படியும் பொருளீட்ட வேண்டும், என்பது ஒருவகை அது பொருளாதாரத்தை வளர்க்கலாம். ஆனால், அருளாதாரத்தை ''வளர்க்காது''
இந்தவரிகள் தீயவழியில் பணம் குவிப்போர் செவிகளில் புகுந்து பேராசை இதயத்தை நேர் ஆசை இதயமாக மாற்ற எல்லாம் வல்ல அல்லாவிடம் கை ஏந்தி கேட்போமாக! ஆமீன்
S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்
நீண்ட நாட்களுக்குப் பின் தம்பி இக்பால் ! வ அலைக்குமுஸ் ஸலாம்.
மரியாதைக்குரிய மச்சான் வ அலைக்குமுஸ் சலாம்.
அன்பின் தம்பி சபீர் அவர்கள் அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன். பொதுவான பொருளாதாரம் என்றால் உடனே பதில் தந்துவிட முடிந்திருக்கும். மார்க்கம் தொடர்பான கேள்வியாகையால் சில மார்க்க அறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகே பதில் தருவது சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் அதனால் பயன் விளையும். இன்ஷா அல்லாஹ் விரைவில்.
தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு , இடைத்தரகர்கள் அதிகம் ஆகக் காரணம் அவர்கள் முடைத்தரகர்கள் ஆவதே. அவர்களுக்கு முடை ஏற்படும்போதெல்லாம் யாரையாவது எதிலாவது ஒரு வம்பில் மாட்டிவிட்டு கொஞ்சம் குடும்ப செலவுக்கென்று கறந்து கொடுவாப் பிசுக்கு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
காக்கா,
ட்டீ இன்னும் வரல.
குர் ஆன் ஹதீஸ் ஆதரங்களை நான் கேட்கவில்லை காக்கா.
பொருளாதார ரீதியில் பதுக்கலுக்கான மார்க்க வரைமுறை என்னவாக இருக்கும்/இருக்கலாம் என்கிற தங்களின் அனுமானத்தை மட்டுமே கேட்கிறேன்.
மேலும், நூலுருவில் நாம் கண்டிப்பாக "பதுக்கலை"ப் பற்றிய இஸ்லாமிய கோட்பாடுகளை உள்ளடக்கியாக வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
Please take your time kaakkaa. I did not make a proper note of your response where you said that you are preparing an answer.
Forgive me for my anxiety but it is just a matter of curiosity.
//உணவுப் பொருள் கைக்குவந்து சேர்வதற்கு முன் அதை விற்பதற்கு நபி ( ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்//
To Brother Ebrahim Ansari,
அடுத்த நிமிடம் நடக்கப்போகும் நிலை தெரியாமல் திமிர் பிடித்து நடக்காமல் இருக்க நபி[ஸல்] அவர்களின் தூர நோக்கு சிந்தனையாகத்தான் இருக்க வேண்டும் இது. 10 ஆயிரம் சம்பாதிக்கும் ஒருவன் 11 ஆயிரம் சம்பாதித்தாலே கால் தரையில் பட மறுக்கும் இந்த காலத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இக்பால் ....நீயும் பிசிதான் அதற்காக இப்படியா சபீர் பேப்பர பார்த்து இப்படி எழுதிக்கொடுப்பே...அவன் பிசிக்ஸ்டா...நீ லிட்டரேச்சர்...ஏன் இப்படி ஈரான் ஸ்டூடன்ட் மாதிரி எழுதிக்கொடுக்கிறே...
இடைவேளைக்குப்பிறகு படம் பார்க்க வந்தவர்களுக்கு:
நியூ காலேஜில் படிக்கும்போது SEKAR GUIDE என்று ஒரு கைடு இருக்கும் அதில் "SEKAR FOR SUCCESS" என்று ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியிருக்கும். பிட் அடித்த ஈரான் ஸ்டூடன்ட் அவன் எழுதிய ஒவ்வொரு பேப்பரிலும் "SEKAR FOR SUCCESS" என்று எழுதி வைத்து விட்டான். பிறகு என்ன.... அந்த பரீட்சை ரிசல்ட் அம்போ தான்.
ஹா ஹா ! இதுக்குத்தானே தேடிகிட்டு இருக்கோம் !
காக்கா, அப்படின்னா ஈரான் அமெரிக்காவைத்தான் காப்பியடிக்குதா ?
அடிப்பான் ஆனா அடிக்க மாட்டான் ! பூச்சாண்டி காட்ட ஒரு மாடு ஸாரி நாடு தேவைதானே !
ஹா ஹா ! இதுக்குத்தானே தேடிகிட்டு இருக்கோம் !
இஸ்லாத்தில் வணிகத்தை அழகாக சொல்லி வரும் ஒரு அழகிய தொடர்.
இஸ்லாத்தை பொறுத்த வரை.வணிகம் என்பது வாங்குபவரும், விர்ப்பவரும், பகிரங்கமாக விர்ப்பனைப்பொருளை, வாங்குபவரை கண்ணால் பார்க்கச்செஇய்ய வேணும்.யூகத்தின் அடைப்படடையில் செய்யப்படும் வணிகத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.
எதிலுமே தெளிவு இருத்தல் வேணும். குறிப்பிட்ட பொருளை வாங்குபவனும் , அப்பொருளினால் மனதாலும், விலைய்யாளும், திருப்தி கொண்டால்தான் அந்த வியாபாரம் இஸ்லாத்தின் வரம்புக்கு உட்பட்ட வியாபாரமாகும்.
ஒரு பொருள் ஒருவனுக்கு ரொம்ப அவசியத்தேவை இருக்கின்றது . அது ஒருவனிடம் விலை பேசும்போது, அன்று மார்க்கெட்டில் இதன் விற்பனை விலை என்னவோ அதைச்சொல்லிதான் விர்க்கவேனும் . வாங்குபவனின் அவசியத்தேவையை தெரிந்து கொண்டு அதை விற்ப்பவன், இவன் என்ன விலை சொன்னாலும் வேறு வழியே இல்லாமல் வாங்கியே தீருவான் என்று கருதி அவனிடம் கடும் விலையை ஏற்றி விற்பதும் ஹராம் .
சுருக்குமாகச்சொன்னால்
இஸ்லாம் போதிக்கும் வியாபாரம்,
வாங்குபவன் அதை விற்ப்பவன், இரண்டு பேரின் மன திருப்தியின் முன்னே
தன அழகிய சட்டத்தை அமுலாக்க விரும்புகின்றது.
அபு ஆசிப்.
Islam places great emphasis on the code of lawful and unlawful in business transactions. Many Qur’anic verses disapprove the wrongful taking of the property.
Says the Holy Qur’an:
Do not devour one another’s property wrongfully, nor throw it before the judges in order to devour a portion of other’s property sinfully and knowingly. (2:188)
Do not devour another’s property wrongfully – unless it be by trade based on mutual consent. (4:29)
The above verses prohibit the believers in no uncertain terms to devour the property of others by illegal means. The Prophet (sws) endorsed the importance of legitimate ways of earning in the following words:
Asked ‘what form of gain is the best? [the Prophet] said, ‘A man’s work with his hands, and every legitimate sale’. (Ahmad, No: 1576)
From the above it is clear that a Muslim trader must be determined to earn only through legitimate means. He should not only avoid illegitimate means in earning his provisions and livelihood but also distance himself from matters dubious and doubtful. The Prophet (sws) is also reported to have said:
Leave what makes you doubt for things that do not make you doubt. (Tirmidhi, No: 2442)
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
அல்லாஹ்வின் அருளோடு பெருளீட்ட அருமையான வழிகாட்டல் இந்த பதிவு காக்கா.. ஜஸக்கல்லாஹ் ஹைர்..
பொருளாதார மேதை என்று சொல்லப்படும் அம்ர்தியாசன் போன்ற ஆயிரம் மேதைகளுக்கு மேல் விதவிதமான பொருளாதார திட்டத்தை சொன்னாலும், உலக பெருளாதார மேதைகளுக்கு வழிகாட்டி, வட்டி மனித இனத்தை வெட்டி சாய்க்கும் என்று உலகுக்கு உறக்க சொன்ன தைரியமான பெருளாதார நிபுணர், எங்கள் தலைவர்,அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொல்லும் பொருளாதார திட்டம் மட்டுமே மனித வாழ்வுக்கு சரியான திட்டம், அவர்கள் சொன்னவை மட்டுமே இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் வெற்றியை தரும்.
இஸ்லாத்தில் பொருளீட்டலுக்கு சிறப்பான விளக்கங்கள்! ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
ஆசைக்கும் ஒரு வரையறை வைத்துக்கொண்டால் நிச்சயம் இஸ்லாமிய அடிப்படையில் வியாபாரம் செய்ய முடியும்.
பேராசை என்று வரும்போது இப்படித்தான் பொருளீட்டனும் என்ற விதிமுறையிலிருந்து வெளியேறி ஆகுமாக்கப்படாத வழியை தேடுகின்றனர்.
அளவோடு இறைவழியில் பொருளீட்டி அல்லாஹ்வின் அருளை பெறுவோமாக.
இஸ்லாத்தின் வியாபார நெறி முறைகள் பற்றிய ஒவ் ஒரு செய்திகளும் ஆச்சர்யப்பட வைக்கின்றன
அன்பின் தன்பி சபீர் அவர்களுக்கு,
//பொருளாதார ரீதியில் பதுக்கலுக்கான மார்க்க வரைமுறை என்னவாக இருக்கும்/இருக்கலாம் என்கிற தங்களின் அனுமானத்தை மட்டுமே கேட்கிறேன்.//
முதலாவதாக என்னுடைய அனுமானம் என்பதை குறிப்பிட இயலாமை. // பதுக்கலுக்கான மார்க்க வரைமுறை// என்று தாங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆகவே என்னுடைய அனுமானம் என்பது அடிபட்டுப் போகும். ஆனாலும் பொதுவாக ஏற்கக் கூடிய கருத்து இருக்கும் அதை நீங்களும் சொல்லலாம் நானும் சொல்லலாம். அதற்கு முன், சில மார்க்கம் படித்தவர்களுடன் கலந்து பேசியதின் அடிப்படையில் உங்களுக்கான பதில்,
சில வியாபாரிகள் தங்களின் லாபத்தை பெறுக்குவதற்கு கையாளும் வழிமுறை வியாபாரப் பொருளை பதுக்கல் செய்தல்.
மக்களுக்குத் தேவையான பொருளை உரிய நேரத்தில் மார்க்கெட்டிற்கு கொண்டு வராமல் பதுக்கி வைத்துவிட்டு, விலை ஏறும்போது மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து அதிக விலையில் விற்று லாபம் அடைகிறார்கள். இந்த பதுக்கல் தன்மை மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிவிடும். பதுக்கல் செய்தவன் சாபத்திற்கு ஆளாகக் கூடியவன் என்று இஸ்லாம் கூறுகிறது.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).
அதிக லாபம் கிடைக்கவேண்டும், தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும், மற்றுவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணி சிலர் வியாபாரிகள் பதுக்கிவைக்கிறார்கள். பதுக்கல்காரர்களால் இந்தச் சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பும், பணவீக்கமும் ஏற்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளை பதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).
பதுக்கல்காரன் என்பவன் பாவி. நாட்டிலுள்ள அனைவரும் குறைந்த விலையை எதிர்ப்பார்ப்பார்கள். எப்போது தங்கம் விலை இறங்கும். எப்போது குறைந்த விலையில் உணவுபொருட்கள், துணிமணிகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பதுக்கல்காரன் எப்பொழுது பொருளின் விலை உயரும் என்று எதிர்ப்பார்ப்பான். ஒரு பொருளின் விலையில் சரிவு ஏற்பட்டால் முதலில் வருத்தப்படுபவன் பதுக்கல்காரன்தான். அதேப் போன்று ஒரு பொருளின் விலையில் உயர்வு ஏற்பட்டால் முதலில் சந்தோஷப்படுபவன் பதுக்கல்காரன்தான். இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).
அன்பின் தம்பி என்று படிக்க வேண்டுகிறேன். தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.
அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,
இன்னும் நீங்கள் கேட்பது
// கேள்விக்கான காரணம்: விலை குறைவாக இருக்கும்போது மொத்தமாக வாங்கி விலை கூடும்போது சில்லறையாக விற்பது வியாபாரத் திறமைபோலத் தோன்றுகிறதே//
சாதாரணமாக அறுவடைக் காலங்களில் உணவுப் பொருள்களின் அளிப்பு/ வரத்து அதிகமாக இருக்கும். விளையும் குறைவாக இருக்கும். அந்நேரம் வாங்கி வைத்து இருந்து அறுவடை ஓய்ந்து போன நேரங்களில் விலை கூடுதலாக இருக்கும் போது விற்கலாம் என்று வைத்திருப்பது ஒரு வியாபார உக்திதான். ஸ்டாக் வைப்பதற்கும் பதுக்கல் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. முதலில் உள் நோக்கத்தை இறைவன் கவனிப்பான்.
வியாபாரி பொருள்களை குறைந்த விலையில் வாங்கி வைப்பதன் நோக்கம் பதுக்கல் செய்வதாகவும் கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கத்திலும் வைத்திருந்தால் அது தவறுதான். பாவப் பட்டியலில் சேரும்.
மாறாக கிடைக்கும்போதே வாங்கி வைத்து கேட்டு வருபவர்களுக்கு அன்றைய சந்தை விலையில் பொருளை வைத்துக் கொண்டே இல்லை தீர்ந்து விட்டது என்று சொல்லாமல் விற்பது தவறல்ல.
சந்தைவிலையில் விற்காமல் போனால் , சந்தை விலையை அனுசரித்து இருப்பு வைக்காமல் அவ்வப்போது வாங்கி விற்கும் மற்ற வியாபாரிகளையும் இந்த நடைமுறை பாதிக்காது.
எண்ணமே வாழ்வு என்று சொல்வார்கள். நபி ( ஸல்) அவர்களிடம் " இஹ்சான் " என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. " அல்லாஹ்வை நீ நெறி பார்ப்பதைப் போன்று அவனுக்கு நீ வழிபாட்டு நடப்பதாகும் . நீ அவனைப் பார்க்கா விட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான் " என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதே எண்ணம் வியாபாரத்திலும் தேவை.
எண்ணத் தூய்மை இருந்தால் பொருளாதார நடவடிக்கைகளும் இறை வணக்கத்தின் தரத்துக்கு உயரும். வியாபார உக்தி என்கிற பெயரில் கொள்ளை இலாபம் அடிக்க வழிதேடுவது இறைப் பொருத்தத்தை இல்லாமல் செய்துவிடும்.
மேலும் கேட்க விரும்பினால் அறிவுமுத்திரையுடன் கூடிய தங்களின் அன்பான கேள்விகளை வரவேற்கிறேன்.
Mashaa Allaah!
Very much satisfying lecture.
Thanks, kaakkaa.
அற்புதமான ஆய்வுகள் அடங்கிய பொக்கிஷமாக்காப்பட வேண்டிய கட்டுரையை தொடர்ந்து தருவதற்கு !
அன்பின் இப்றாஹிம் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் "இஸ்லாமிய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். (வணிகத்தில் நேர்மை)" என்ற கட்டுரையில் ஆன்லைன் வர்த்தகம்பற்றிய கருத்தில் தவறான புரிதல் உள்ளதோ என்று நினைக்கிறேன்.அதாவது இஸ்லாமிய வணிக நடைமுறையில் ஹலாலான எந்தப் பொருளையும் வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக்கொண்டால், அதில் தவறில்லை. ஏனெனில் பொருளில் விலை இன்னதென தெளிவாக அறிவித்தபின்னரே பொருள் விற்கப்படுகிறது.
மேலும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆன்லைன் வர்த்தகம் அனேகமாக AUCTION SALE குறித்தது என்று கருதுகிறேன். இதில் ஒரு பொருள் பலராலும் விலைகோரப்பட்டு, அதிக விலை கோரப்படுபவருக்கு விற்கப்படும். உதாரணமாக, என்னிடமுள்ள செல்பேசியை நான் விற்க விரும்பி விளம்பரம் செய்கிறேன். அதன் விலை இன்னதென தெரிந்தாலும் பலர் அதை வாங்க விரும்புகின்றனர். அவ்வாறான சூழலில் அதிகவிலை தரமுன்வருபவருக்கு விற்பதில் தவறேதும் இருப்பதாக அறிய முடியவில்லை.ஏனெனில்,இங்கும் பொருளை வாங்குபவர் ஒப்புதலுடனேயே வர்த்தகம் நடக்கிறது.
தகவலுக்காக, souq.com இல் நான் கடந்த ஓரிரு வருடங்களாக ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை வாங்கி வருகிறேன். அதில் கடைகளில் கிடைக்கும் விலையைவிட குறைவாகவும், கூடுதல் வாரண்டியுடனும் கிடைக்கிறது. இத்தகைய ஆன்லைன் வர்த்தகம் மூலம் இடைத்தரகரின் தலையீடு இல்லை என்பதால் இஸ்லாமிய அடிப்படையில் இது தவறல்ல என்பதோடு, வாங்குபவருக்கு லாபமானதும் ஆகும்.
அலுவலகத்தில் இணைய தேடல் சாத்தியமில்லை என்பதால் தேவையெனில் கூடுதல் தகவல்களுடன் மடலிடுவேன். என் புரிதலில் தவறு இருந்தால் தயவு செய்து அறியத்தருக. பின்னூட்டமாக வெளியிட்டு அங்கு பதிலிட்டாலும் நல்லதே.
அன்புடன்,
N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்)
Jamaludeen,
The essay doesn't speak about auction or bidding on line, but virtual trading.
People try to sell something which they do not own or doesn't exist.
Full of assumptions which is not allowed in Islam.
Sabeer AbuShahruk
அன்புள்ள தம்பி ஜமாலுதீன் அவர்களுக்கு, வ அலைக்குமுஸ் ஸலாம்.
முதலில் தங்களின் தனி மின் அஞ்சலுக்கு நன்றி. அடுத்து தாங்கள் இந்தத் தொடரை ஆழ்ந்து படித்து வருகிறீர்கள் என்று அறியவும் மிக்க மகிழ்ச்சி.
மிகச் சுருக்கமாக, தம்பி கவிஞர் சபீர் அவர்கள் குறிப்பிட்டபடி நான் ஏலம் விடுவதைப் பற்றி எழுதவில்லை. உற்பத்தியே ஆகாத பொருள்களை ஆன் லைனில் கற்பனையாக விற்பதைப் பற்றியும், யூகமாக வணிகம் செய்வது பற்றியுமே எழுதி இருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் இருந்து பொருள்கள் வாங்கினால் அவை உங்களுக்கு டெலிவரி செய்யபப்டும். இத்தகைய முறைகள் தவறில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன்.
வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக் கொண்ட விலையில் வர்த்தகம் நடை பெறுவது தவறில்லைதான். ஆனால் தேவைக்கு வாங்கும் வாங்குபவரை அவரது அத்தியாவசியத் தேவையை உணர்ந்துகொண்டு அநியாய விலைக்கு அவர் தலை மீது கட்டுவது தவறுதானே? உதாரணமாக ஒரு லிட்டர் பால் எனது குழந்தைக்கு அவசியம் . குழந்தையைக் காப்பாற்றுவதற்காக என்ன விலைக்குக் கிடைத்தாலும் வாங்க நான் தயார்.அதற்காக இலகுவாக குறைந்த விலைக்கு விற்க முடியும் என்றாலும் என்னிடம் கறக்க நினைப்பது ஹலால் ஆன வியாபாரம் ஆகுமா? எனது தேவை மற்றும் சூழ்நிலைகளை பயன்படுத்தி கொள்ளை இலாபம் அடிப்பது தவறல்லவா?
இவையே எனது பதிவின் அடிப்படை.
தாங்கள் இன்னும் விளக்கம் கேட்டால் இன்ஷா அல்லாஹ் விளக்க முயற்சிக்கிறேன்.
மீண்டும் தங்களின் அன்பான கேள்விக்கு நன்றி.
நெறியாளர் அவர்கள் வேண்டுமானால் இந்த தனி மின் அஞ்சல் கருத்துப் பரிமாற்றங்களை பதிவிலேயே வெளியிடலாம்.
வஸ்ஸலாம்.
இப்ராஹீம் அன்சாரி.
Post a Comment