இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,
'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]
அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....
# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது
# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.
இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.
அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை ,
இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.
காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.
இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'
பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் ["பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்... [உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]
இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .
இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு போய்விடலாம் அல்லவா?
சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.
காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.
Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.
ZAKIR HUSSAIN
22-Jun-2010 - இது ஒரு மீள்பதிவு !
22-Jun-2010 - இது ஒரு மீள்பதிவு !
14 Responses So Far:
எதை,எதையோ எங்கிருந்தோ படம் பிடித்து தெள்ளத்தெளிவாக விரிவாக்கி, பெரிதாக்கி நம் கைகளில் கொண்டு வந்து தத்ரூபமாக காட்டும் இன்றைய ஸ்மார்ட் ஃபோன்களில் தன் கையில், மூக்கில், முகத்தில், நாக்கில், பல்லில், காதில், காலில், விரல் இடுக்கில், கம்கட்டில், நகத்திற்குள், சூத்தாமட்டையில் என நம் உடம்பின் அனைத்து பாகங்களிலும் பரந்து, விரிந்து கடை விரித்து எவ்வித லைஸன்ஸும் இல்லாமல் க்ளோபல் பிஸினஸ் நடத்தி ஆஸ்பத்திரிகளுக்கு நல்ல வருவாயைத்தேடித்தரும் இன்றைய ஃபேஷன் பேக்டீரியா, வைரஸ்களை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து அதை பெரிதாக்கி அதன் செயல்பாடுகளை நம் கைகளில் தவழும் ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் பார்க்கும் வசதி வாய்ப்புகளை அந்நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுக்குமேயானால் "எல்லாப்பயலும் தத்தமது சட்டெ பாக்கெட்லேயும், பேண்ட் பாக்கெட்லேயும் டெட்டாலு சோப்பையும், ஹேண்ட் வாஷ் கிரீமையும் வச்சிக்கிட்டு அலைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும்".
பெரும்பாலும் ஹோட்டல்களில் தோசைக்கல்லில் தன் வியர்வையை வடித்து கொஞ்சம் நெய்யையும் அத்துடன் சேர்த்து புரோட்டாவும், ரோஸ்ட்டும் ரெடியாகிறது கூடுதல் சுவையுடன்.
கம்க்கட்டை சொறிஞ்ச கையோடு தன் (மாவு பிசையும்) வேலையை துவங்கும் வரை பாக்டீரியா, வைரஸ்களுக்கெல்லாம் எந்நாளும் பொன் நாள் தான் போங்கள்......
ஜாஹிர் காக்கா, ஹைஜீனிக் பற்றி எழுத நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக உங்கள் பாணியில் எங்களுக்கு தாருங்கள். காலத்திற்கேற்ற நல்ல விழிப்புணர்வு கட்டுரை. தொடருங்கள் படிக்கட்டு போல்........
தன் உடம்பில் அன்றாடம் ஒட்டி உறவாடும் பேக்டீரியா, வைரஸ்களை பெரிதாக்கி அதன் உருவங்களை அவரவர் பார்க்க வாய்ப்பு கிடைக்குமேயானால், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வானிலிருந்து வந்த பெரிய விண்கற்களால் உலகில் வாழ்ந்து பின்னர் அழிந்ததாக சொல்லப்படும் கொடிய, கொம்பு முளைத்த ராட்ச்ச டயனோஸர்கள் எல்லாம் தன் மேனியில்லல்லவா மினி சைஸில் மேய்ந்து கொண்டிருக்கிறது என ஒவ்வொரு மனிதனுக்கும் நினைக்கத்தோன்றும்.
பென்சில் பேனாவைப் போல இங்குள்ள ஸ்கூல்களில் ஹேன்ட் சானிட்டைசர் அவசியம் புத்தகப் பையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சுத்தமாக இருந்தாலே பாதி வியாதி வராமல் போகும்.
//இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் ["பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்... [உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]//
அதெல்லாம் இருக்கட்டும் ஹோட்டல்களிலும் ஒரு சில இடங்களில் ஊரில் கை கழுவ ஹேன்ட் வாஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் கை துடைக்க வைத்திருக்கும் துணி எப்போ கழுவினதுன்னு சொல்லவேயில்லை !
சுகாதாரம் என்பது மிக கேடு கேட்டு போய்விட்டது மக்கள் மத்தியில் நாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோமே தவிர அதை யாரும் நடை முறை படுத்துவதில்லை. ஹொட்டல்ஹலில் செய்யும் முறையை பார்த்தால் நம்மவர்களுக்கு சாப்பிடுவதற்கே மனம் வராது.
அப்படி கண்ணுக்கு தெரிந்தாலும் மக்கள் கூட்ட கூட்டமாக போய் அந்த அசுத்த சாப்பாடை தான் சாபிடுகின்றனர். ஹோட்டலில் தோசை என்று கேட்டால் தோசை சுடு முன் முதலில் அந்த தோசை கல்லில் தண்ணீரை ஊற்றி பிறகு வெளக்கமாரை வைத்து நல்லா தேச்ச பிறகு வியர்வையும்,மாவும் கலந்த டிபன் சுவையாக ரெடியாகி விடுகிறது. இந்த டிபனை நன்கு ருசித்து,ரசித்து சாப்பிடுகின்றனர். ஹோட்டலுக்கு போய் தோசை என்று கேட்டால் வெளக்கமார் தோசை கிடைக்கும். மனிதனுக்கு சுத்தம் தான் முக்கியம் சுத்தம் இருந்தாலே எந்த விதமான நோய்கள் வராது.
//சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.//
நம்பினால் நம்புங்கள் அரைமணி நேரம் சிரித்து இருக்கிறேன்.
//Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.//
இதைப் பற்றி நீதான் தம்பி எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
ரொம்ப சிந்தித்து படித்தது,
காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.]
அடுத்த வரியே ரொம்ப சிரித்து படித்தது,
அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஓசியில் சுகாதார மருத்துவம் சொல்லிக்கொடுக்கும் ஜாஹிர் ஹுசைன் காக்கா அவர்களுக்கு ஒரு வாழைத்தார் பார்ர்ர்ர்ர்சல்ல்ல்ல்ல்ல்ல்....(சாவன்னா பரோட்டா கடைல ஆர்டர் பன்ற ஸ்டைல கூவி படிங்க)
இங்கே கூட உச்சா போய்ட்டு அவனுடையதை கழுவ வேண்டாம் அட்லீஸ்ட் ஃப்ளஸ் செய்துவிட்டுப்போனால்தான் என்னே????
பொது இடங்களில் சிலர்நடந்து கொள்ளும் முறை அநாகரீகத்தின் எடுத்துகாட்டு. சாப்பாட்டுக் கடைகளில் பலர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது 'குவா-குவா' என்ற சத்தத்துடன் வாஷிங் பேசனில் காறி துப்புவதும் மூக்கை '-ஸல்-ஸல்' என்று சிந்துவதும் பாரம்பரிய வாடிக்கையாகி விட்டது.
இந்த கு'வா-குவா' சத்தத்தை கேட்டவைய்றோ 'உள்ளே வந்த சோத்தை வெளியே அனுப்பவா'?' என்று உண்டவரை கேட்கும்.''
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' - தத்துவத்தை உண்டவர் வயிற்றுக்கு போதித்து விட்டு பாதி வயிற்றோடு 'கை' கழுவி இடத்தைக் காலி செய்வார்.
சிலர் பள்ளியில் தொழுகைக்கு ஒது செய்யும் போது வாய்க்குள் தன் மூன்று விரல்களையும் விட்டு ஒரு ஓசை எழுப்புவார்கள்.
சாப்பாட்டு கடையில் கேட்ட அதே 'குவா-குவா' மறு ஒலிபரப்புதான். யார் என்ன சொல்லி விட்டர்களோ! தெரியவில்லை.
நாக்கை பிடுங்கிக் கொண்டுதான் நிற்பார்கள், ரோசக்காரர்கள்.
சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நம் ஊர் பள்ளிவாசல்களில் ஹாவூதுக்கு மேலே தாழ்வாரத்தில் இரண்டு அடி கனத்த கையிறு ஒரு-ஒரு இருக்கைக்கும் மேலேயே கட்டி தொங்கும். ஒரு சிலர் அந்த கையிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் கால்களை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ஒரு சிலாப்பு சிலாப்பு வார்கள். சிலாப்புற சிலாப்பில் இரண்டு பக்கமும் உள்ளவர்களின் கைலிகளில் தண்ணீர் தெளிக்கும். இதை பற்றியெல்லாம் நினைத்து பார்க்கும் பொதுநல உணர்வோ, அறிவோ அவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. தன் வேலை முடிந்தால்சரி. அதோடு விட்டார்களே அதற்க்கு நன்றி கூறவேண்டும். இல்லையென்றால் கைற்றை பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஊஞ்சல் ஆடி அமர்க்களம்-ஆர்ப்பாட்டம் செய்யாமல் விட்டதற்கே நாம் அல்லாஹ்வை சுக்கூர் செய்துகொள்ளவேண்டும்.//
அடுத்து ஒரு விஷயம். ஜும்மா தொழுகை ஆரம்பிக்க அந்தா இந்ததா என்று இருக்கும் போது வரும் ஆசாமிகள் அவசர அவசரமாக ஒழு முடித்து விட்டு ஏற்கனவே வரிசையில் இருப்பவர்களை தாண்டி முன்வரிசையில் இடம் பிடிக்க போவார் அவர் கால் எடுத்து தாண்டுவதை பார்த்தால் வயளில் கொக்கு தன் கால்களை எப்படி தூக்கி கொக்கு தூக்கி வைத்து நடக்குமோ அந்த கொக்கின் நடை பலருக்கு நினைவு வரும்.
கடல்கரை உப்பளத்தில் கண்ணி வைத்து கொக்கு பிடித்தவர்களுக்கு இதை விளக்க தேவை இல்லை. அந்த கொக்கு நடை ஆசாமி வரிசையை தாண்டி தாண்டி நடக்கும் போது அவர் முகத்தில் இருந்த தண்ணீரும் கைகளில் இருந்த தண்ணீரும் மற்றவர்கள் மேலே சிந்துவதை கொக்கு நடை ஆசாமி கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை.
மருமகன் ஜாகிரின் கட்டுரை topics மிகச் சிறப்பானது. அது போன்ற கட்டுரைகள் இன்றைய தேவை.தொடரவும். என்னுடைய நீண்ட comment ''பழைய நெனப்புடா பேராண்டி!''
மீண்டும்சந்திப்போம்.
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.
//Personal Hygiene பற்றி எழுத நிறைய விஷயம் இருக்கிறது//
அப்படியே public Behaviour பற்றியும் கொஞ்சம் விவரித்து எழுதலாமே!
அதுவும் இன்றைக்கு I.C.U. வார்டில்தானே இருக்கிறது. நேற்றுதான் போய் பழம் வாங்கி கொடுத்துட்டு பாத்துட்டு வந்தேன் டாக்டர் கையே விருச்சுட்டராம்.
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.
//காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.//
காருக்குள்ளே தும்முறது இருக்கட்டும் கார் கதவை ஓங்கி சாத்துவதில் கார் வாங்கியவருக்கு ஈரக்கொலோ அறுந்து விழுந்துரும்
//இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .//
எம்புட்டு நாளைக்கித்தான் டாக்டர் நோயாளிக்கு குளோரோ பாம் கொடுக்குறது
நோயாளி பீஸ் வாங்காம டாக்டருக்கு குளோரோ பாம் கொடுக்கும் டெக்னிக்கை எல்லாம் அதிரை நிருபரில் போட்டு உடைக்க கூடாது
2010 ல் வெளியான விசயத்தை மீள்பதிவு செய்தாலும் இன்னும் சூழ்நிலைகள் மாறவில்லை என்பது வந்திருக்கும் கமென்ட்ஸில் தெரிகிறது.
வாசகர்களின் இந்த உற்சாகம்தான் எனக்கு இவ்வளவு எழுத தூண்டுகிறது.
அதிரை நிருபர் 4 ஆண்டுகள் கடந்ததும் வாசகர்களின் வழிகாட்டலும் , உற்சாக வார்த்தைகளும்தான்.
எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமாவுக்கு.... நீங்கள் சொன்ன விசயம் முன்பு ஒரு தொடாராக எழுதினேன் [ வித்தியாசமானவர்கள் ]
இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.
Brother MSM NainaMohamed என் பாணியை விட உங்கள் பாணிக்கே நான் ரசிகன். நான் மட்டுமல்ல , அதிரை நிருபர்களின் வாசக வட்டமே.
Bro Abu Ibrahim....அது மாதிரி டவலில் நுணியில் கை துடைப்பதை விட கொழுவி இருக்கும் ஆரம்பத்தில் துடைப்பது நல்லது.
To bro Meerasha Rafia...வாழைத்தார் அளவு சாப்பிட மாட்டேன் நான். இருப்பினும் தார் தாராய் உங்கள் அன்புக்கு நன்றி.
Bro Abu Bakar , Abdul Malik , and Shahul ..Thanx for your comments.
Bro Ebrahim Ansari, உங்களை இந்த ஓய்வான காலத்தில் சிரிக்க வைத்ததில் எனக்குத்தான் சந்தோசம்.
மீள் பதிவும் நல் பதிவே!
Post a Comment