அதிரையின் பிரதான கடைத்தெரு (மார்க்கெட்) பாரம்பரியமிக்க தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை பலர் குறைபட்டுக் கூறினாலும், நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமை வாய்ந்த மீன்-மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியே மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அங்கே புதிய கட்டடம் ஒன்றை கட்டி எழுப்புவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக 17-06-2013 அன்று காலை 7 மணியளவில் அடிக்கல்(!!) நாட்டப்பட்டது. இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை.
தக்வா பள்ளி பிரதான மார்கெட் அடிக்கல் நாட்டு விழா.
பிற மதத்தவர்கள் செய்யும் பூமி பூஜையில் இடம் பெரும் சடங்குககள்.
பிற சமூகத்தவர் புனிதம் என்று கருதுவதை நாம் அதற்கு இணையாக செய்வது சரியா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நபி(ஸல்) அவர்களும் தங்களின் காலத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள் கட்டினார்கள், ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இவ்வாறான அடிக்கல் நட்டு கட்டினார்கள் என்று ஹதீஸ்களில் இருந்து காட்ட முடியுமா?
அடிக்கல் நாட்டு விழா என்ற இந்த சடங்கு இஸ்லாமிய மார்க்கத்தில்தான் உள்ளதா?
ஒரு குறிப்பிட்ட மனிதன் அந்தச் செயலை செய்தால்தான் அச்செயலில் பரக்கத்து (அபிவிருத்தி) உள்ளது என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் படிப்பினையில் என்ன ஆதாரம் உள்ளது?
எந்த ஒரு செயலை செய்தாலும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் இருந்தும், கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் விழா என்று ஒரு நிகழ்வை நடத்தி பாஃத்திஹா ஓதி ஆமீன் சொல்லி அடிக்கல் நாட்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில்தான் ஆதாரம் உள்ளதா?
ஏன் ஷாஃபி மத்ஹப் வழிபோற்றுகிறோம் என்று சொல்லுபவர்கள் தான் இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். கண்ணியத்திற்குறிய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு செய்வதற்கு அங்கீகரித்த அல்லது அனுமதித்த ஒரு ஃபாத்வாவையாவது ஆதாரமாவது காட்ட முடியுமா?
இது போன்ற மார்க்க விரோத நிகழ்ச்சிகளில் முன்னின்று ஃபாத்திஹா ஓதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வாங்காமல் அச்செயலை செய்வதில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உள்ளோம் என்று, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் ஜின் வைத்தியம், தாயத்து, தட்டு இன்னும் பிற குறி சொல்லி வைத்தியம் செய்யும் பேர்வழிகள் சிலர் அல்லாஹ்வின் புரோகிதர்கள் என்ற பிரம்மையை உண்டாக்கிக் கொண்டவர்களான இவர்கள் என்ன இலவசமாகவா தங்களுடைய சேவையை செய்கிறார்கள்?
இதெல்லாம் 100% வியாபாரம் ஒவ்வொரு மார்க்க விரோத போக்குக்கு பின்னாலும் பல்லாயிரம் ரூபாய் அல்லவா வீணடிக்கப்படுகிறது.
பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இதோ..
நபி(ஸல்)கூறினார்கள் யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என கூறினார்கள். நூல்: அபூதாவூத் 3512.
அடிக்கல் நாட்டு விழா என்னும் பெயரில் பூமி பூஜை என்ற அனாச்சாரமான பிறமத கலாச்சாரத்தை அப்படியே செய்து வருகின்றனர் என்பதை மேல் குறிப்பிட்ட தக்வாபள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்றதையும், பிறமதத்தை சேர்ந்தவர்கள் செய்த பூமி பூஜையில் நடைபெறதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.
மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊர் என்று அதிரையை பல வருடங்களாக சொல்லி வருகிறோம். மார்க்க அறிஞர்கள் குறைவாக உள்ள பிற ஊர்களில் இல்லாத மார்க்க விரோத போக்கு அளவுக்கதிகமாகிக் கொண்டே போவதற்கு யார் பொறுப்பு? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஏன் ஷிர்க் பித் அத்துக்களை எதிர்த்து பேச உள்ளூரில் மார்க்க அறிஞர்கள்தான் இல்லையா?
வெள்ளி மேடையில் ஷிர்க் பித்அத் அனாச்சாரங்களை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்யும் அதிரை இளம் ஆலிம்களும், பெரிய ஜும்மா பள்ளியில் பிரச்சாரம் செய்துவரும் ஆலிம் அவர்களும் தாங்கள் தொடர்ந்து செய்துவரும் தக்வா பள்ளி பயானிலும், பெண்கள் பயான்களிலும் இது போன்ற பூமிபுஜை அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அடியோடு இந்தக் கலாச்சாரம் விட்டொழிய பாடுபடவேண்டும்.
அதிரையில் உள்ள பழைமைவாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அரபி மதர்ஸாக்கள் என்றைக்கு மத்ஹப் பாடத் திட்டத்திலிருந்து விலகி தூய்மையான குர்ஆன் ஹதீஸ் அடிப்பையிலான மார்க்க கல்வி திட்டத்திற்கு வருகிறதோ அன்று தான் நமதூருக்கு இவ்வாறான மார்க்க புரோகிதர்களிடமிருந்து விடிவுகாலம் பிறக்கும் என்பது மட்டும் தெளிவு.
அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக. மார்க்கத்தில் இல்லாத புதினங்களிலிருந்து நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.
புரோகிதர்களின் சூழ்ச்சிக்கு எதிரான எச்சரிக்கை தொடரும். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் பதிப்பகம்
71 Responses So Far:
எவன் அந்நிய மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறானோ அவன் அந்த மதத்தையே சேர்ந்தவன். (நபி ஸல் )
இதைவிட வேறென்ன பின்னோட்டம் இதற்க்கு வேணும்.
இது எதோ ஊரின் தக்வா பள்ளி மார்கெட் கட்டிட அடிக்கல் நாட்டு விழா என்பதால் தெளிவான படத்துடன் போடப்பட்டு இன்னும் வர இருக்கும் காரசாரமான பின்னூட்டங்களை யாரும் இங்கு பொழிந்து தள்ளலாம். ஆனால் இதே போன்ற மாற்று மத கலாச்சாரம் நமதூரில் ஒவ்வொரு புது வீட்டிற்கு மனை போடும் பொழுதும், அல்லது கடை கட்டும் பொழுதும் அந்த வீட்டை/கடையை கட்ட இருக்கும் கொத்தனார் மூலம் வீட்டின்/கடையின் உரிமையாளர், குடும்பத்தினர், மார்க்கம் கற்ற உலமாக்கள் முன்னிலையிலேயே சில செங்கற்கல்லுக்கு சந்தனம் பூசி, மல்லிகைப்பூ அருகில் வைக்கப்பட்டு, ஊது பத்தி கொளுத்தப்பட்டு, கற்கண்டு கூடவே வைக்கப்பட்டு, மங்களம் என்று சொல்லி மஞ்சலும் வைக்கப்பட்டு அவனுடைய பிரார்த்தனைக்குப்பின் நம் ஃபாத்திஹா, து'ஆ ஓதி இன்று வரை நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மார்க்கம் தாண்டிய சடங்கு, சம்பிரதாய வைபவங்களை ஏன் இன்னும் யாரும் துணிந்து ஆணித்தரமாக தடுக்க முடியவில்லை? தடுக்க முற்படுவதில்லை?
சுமார் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் ஊரில் ஒரு வீடு கட்டுவதற்கு முன் மனை போட்டு அதற்கு அஸ்திவாரம் போட மேற்கண்ட சம்பிரதாயங்கள் அந்த கொத்தனார் மூலம் நடாத்தப்பட்டு பின்னர் ஃபாத்திஹா, து'ஆ ஓதியும் முடிக்கப்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆலிம் ஒருவர் என்னிடம் கூறினார். இது போல் தான் ஒரு வீட்டில் நடத்தப்பட்டு அந்த வீடு இன்று வரை சொல்லாத்துயரை அடைந்து வருகிறது என துயரங்களை பட்டியலிட்டு என்னிடம் தனியே சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டு சொன்னது போலவே மார்க்கம் தாண்டி செய்யப்பட்ட அந்த சடங்கு, சம்பிரதாயங்களால் மேற்கண்ட வீடும் இன்று வரை பல இன்னல்களை சந்தித்து வருவதை பார்த்து வருகிறோம். எல்லாவற்றையும் நம்மை விட அல்லாஹ் நன்கறியக்கூடியவன். அல்லாஹ் தான் நமக்கு அச்சமற்ற, அமைதியான நேரான அவன் வழியை காட்டித்தர போதுமானவன்.
கடைசியாக, ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். புது வீடு, கடை கட்டுவதற்கு நம் மார்க்கம் போதித்த மனையடி சாஸ்த்திரம் என்று ஏதேனும் உண்டா? மார்க்கம் விளங்கியவர்கள் இங்கு பின்னூட்டம் மூலம் தெளிவு படுத்தினால் எல்லோரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
சகோதரர் மேகோள் காட்டியா இந்த ஹதீஸை பெருமானார் (ஸல் ) பல முறை கூறிருக்கின்றார்கள்.அடுத்து ஒரு முக்கியமான் விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.ஜும்ஆ பள்ளியிலும் தக்வா பள்ளியிலும் இது போன்ற அனாச்சாரங்களை கண்டித்து பல முறை மெளலவி ஹைதர் அலி ஆலிம் பயான் செய்துள்ளார்கள் ஊரில் உள்ள இளம் மெளலவிகள்தான் இது போன்ற அனாச்சாரங்களை கண்டித்துசொல்ல வேண்டி ய து இருக்கின்றது
இதுபோன்ற ஒன்றுக்கும் உதவாத, ஷிர்க்கை ஒத்த அனாச்சாரங்களைச் செய்வதற்கு முன், பிடிவாதக்காரர்கள் ஒன்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உலகிலேயே உயர்ந்த கட்டடத்தையும் பல விண்முட்டும் ட்டவர்களையும் கொண்ட துபையில் பூமி பூஜை செய்வதில்லையே, ஒன்றையனா கட்டடம் கட்ட ஏன் இந்த அலம்பல்? இன்னும் மேற்கத்திய நாடுகளிலும் ஏனைய அரபு நாடுகளிலும் கீற்றுக் கொட்டகையிலா வாழ்கிறார்கள்? அவர்கள் பூமி பூஜை செய்யாது கட்டிய கட்டடங்கள் இடிந்து விழுந்து விட்டனவா?
இருப்பினும், கட்டடத்தைக் கட்டுவது மாற்றுமத சகோதரர்களும் சகோதரிகளும் என்பதனால் அவர்கள் நம்பிக்கையை நாம் தடுக்கக் கூடாது (லகும் தீனுக்கும் வலிய் தீன்). எனவே, ஒரு சமாதான உடன்படிக்கையாக அவர்கள் மனை போடும்போது அந்நிகழ்ச்சியை இஸ்லாமியர் முற்றிலும் புறக்கணித்து அங்கு செல்லாமல், கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லிணக்கமாகும்.
மனைபோடும் மாற்று மதக்காரர்களின் நம்பிக்கையைத் தடுத்தால் அவர்கள் மனோதத்துவ ரீதியாக தெய்வ குற்றம் என்னும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு அதனால் வேலையில் கவனமின்றி தரமற்ற கட்டடம் கட்டி முடிக்கும் அபாயமும் இருக்கிறது.
அதெல்லாம் முடியாது என்று வாதிடுபவர் யாராவது இருப்பின் அவர்கள் தாமே கச்சைக்கட்டிக்கொண்டு கொத்தனார் ஆவதைத் தவிற வேறு வழியில்லை.
புனித மக்கா ஹரம் ஷரீஃப்பின் உட்பகுதியின் பெரும் பகுதி கூட மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு இன்று இடித்துத்தள்ளப்பட்டு பிரமாண்ட ராட்சஷ இயந்திரங்கள் மூலம் விரிவாக்கப்பணிகள் எவ்வித சலசலப்பும், பூமி பூஜையும் இல்லாமல் தானே அங்கு நடந்து வருகிறது. அப்படி நம் மார்க்கமும், நபி முகம்மது ரசூல் (ஸல்) அவர்களும் போதித்திருந்தால் பூமி பூஜைகள் ஹஜ் (குர்பானி) போல் அல்லவா ஆச்சர்யப்படும் விதத்தில் நடந்தேறி இருக்கும்? ஏன் தான் இந்த தெளிவான நம் கண் முன்னே காணும் மார்க்க விளக்கங்கள் நம்மூர் பக்கம் வர மறுக்கின்றனவோ?
தலைவாசலை இப்படித்தான் வைக்க வேண்டும்? இந்த திசையில் ஜன்னல் வைக்கலாகாது? கக்கூஸ் இந்த பக்கம் தான் வைக்க வேண்டும்? என ஏதேனும் நம்மார்க்கத்தில் சட்டதிட்டங்கள் சொல்லப்பட்டுள்ளனவா?
இவ்வளவு விழிப்புணர்வு வந்த பின்பும் இன்றும் இப்படி என்றால் ஒரு காலத்தில் நாம் இருக்கும் வீடு, வாசல்கள் எப்படி கட்டப்பட்டிருக்குமோ? என எண்ணி ரொம்ப அஞ்ச வேண்டியுள்ளது.
மார்க்கத்திற்க்கு புறம்பான இந்த அடிக்கல்நாட்டு விழா என்ற “பூமி பூஜை “ வன்மையாக கண்டிக்கதக்கது...கற்றறிந்த (!!!) இந்த மேதைகளே இவ்வாறு செய்வது..வரும் தலைமுறைக்கு தவறான உதாரணமாக அமையும்......அல்லாஹ்வுக்கும்,அவனின் மறுமைநாள் விசாரணைக்கும் அஞசிக்கொள்ளுங்கள்.....
ஒரு கவலையான விசயத்தை இங்கே சொல்கின்றேன்.....இப்படிப்பட்ட “ஷிர்க்”கை ஊக்கப்படுத்தும் ஆஆஆலிம்களின் உதாரணங்களை எடுத்துக்கொண்டு வெளியூர்களில் முஸ்லிம்களும் “வாஸ்த்து”பார்த்து வீடு கட்டுவதாக / வாங்குவதாக கேள்விப்பட்டேன்...அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
தம்பி எம் எஸ் எம் நெய்னா அவர்களின் கருத்து
//ஆனால் இதே போன்ற மாற்று மத கலாச்சாரம் நமதூரில் ஒவ்வொரு புது வீட்டிற்கு மனை போடும் பொழுதும், அல்லது கடை கட்டும் பொழுதும் அந்த வீட்டை/கடையை கட்ட இருக்கும் கொத்தனார் மூலம் வீட்டின்/கடையின் உரிமையாளர், குடும்பத்தினர், மார்க்கம் கற்ற உலமாக்கள் முன்னிலையிலேயே சில செங்கற்கல்லுக்கு சந்தனம் பூசி, மல்லிகைப்பூ அருகில் வைக்கப்பட்டு, ஊது பத்தி கொளுத்தப்பட்டு, கற்கண்டு கூடவே வைக்கப்பட்டு, மங்களம் என்று சொல்லி மஞ்சலும் வைக்கப்பட்டு அவனுடைய பிரார்த்தனைக்குப்பின் நம் ஃபாத்திஹா, து'ஆ ஓதி இன்று வரை நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மார்க்கம் தாண்டிய சடங்கு, சம்பிரதாய வைபவங்களை ஏன் இன்னும் யாரும் துணிந்து ஆணித்தரமாக தடுக்க முடியவில்லை? தடுக்க முற்படுவதில்லை?//
இவை தொடர்ச்சியாக வரும் தவறுகள். இவற்றின் ஆரம்பம் மாப்பிள்ளைமார்கள் வீடு சீதனமாக வாங்குவது. இது எந்த மார்க்கத்தின் அடிப்படையில் என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு தவறுக்கு மறு தவறை சுட்டிக் காட்டுவது தவறுதான்.
அதே நேரம் ஆணிவேரை வெட்ட முயலாமல் சல்லிவேர்களை மட்டும் வெட்ட நினைத்தால் ஆணிவேர் போல் உள்ள குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை. அடிமட்டத்திலேயே களையப்பட வேண்டியவை / சீர் திருத்தப்பட வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன.
அது மட்டுமா?
மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக ரொக்கம் கரன்சி நோட்டாக வைத்து ஒரு கைக்கூளிவட்டா வில் வைத்து அதில் வெற்றிலை பாக்கு மஞ்சள் எல்லாம் வைத்துக் கொடுக்கும் பழக்கமும் இன்னும் இருக்கிறது.
இதை ஒரு மாலை நேர நிகழ்ச்சியாக வைத்து தெருப் பெரியவர்கள் முன்னிலையில் நடத்துகிறார்கள்.
இதற்கு பாத்திஹா ஓத அந்தத் தெருப் பள்ளியின் இமாம் அல்லது ஒரு லெப்பை வந்து அவரும் அமர்வில் இருந்து பணம் கை மாறியதும் பாத்திஹா ஓதுகிறார்.
தீயைத் தொடுவதற்கு சமமான அந்தப் பணத்தை அங்கு வந்து இருக்கும் அழைக்கப் பட்ட அனைவரும் தொட்டுக் கொடுக்கிறார்கள். இது முறையா? இது தவறு என்று அந்த இமாம் அல்லது லெப்பை எடுத்துச் சொல்கிறாரா அல்லது அவருக்கு தரப்படும் ஓதும கூலிக்காக மார்க்கத்தை விற்கிறாரா?
சில ஊர்களில் என்றோ இருபது வருடங்களுக்கு முன்பு கைக்கூலியாக வாங்கிய ஒரு இலட்சத்தை மாமனார் வீட்டுக்குத் திருப்பித்தருவதாக கூறி ஒரு நாடகம் நடக்கிறது. இருபது வருடத்துக்கு முன்பு பவுன விற்ற விலைக்கு கணக்குப் போட்டு இன்று அந்த விலைக்கு சமமான பணம் கொடுக்க வேண்டுமென்றால் இவர்கள் கொடுப்பார்களா?
சரி, பணத்தைக் கொடுத்தார்கள். வீட்டைத் திருப்பிக் கொடுத்தார்களா? கேள்விப் படவே இல்லை. இப்படி அடிப்படையில் கலையைப் பட வேண்டியவை ஆயிரம் உள்ளன அன்பதிராபட்டினத்தில்.( அன்பு அதிரா பட்டினம்)
சலாம்
சபீர் சொல்லும் மதநல்லிணக்கம் நல்ல கருத்து. இருந்தும் அந்நிகழ்ச்சியின் முழு செலவையும் பொறுப்புதாரியான முஸ்லிம் தான் ஏற்று கொள்கிறார் இது சரியாகுமா ? ஒன்னு நம்மவர்களே கொத்தனாராகி இந்த சடங்கை ஒழிக்கனும், தற்போது நடக்க கூடியதல்ல அல்லது நாத்திகர்கள் இந்த சடங்கு இல்லாமல் செய்பவர்கள் இவர்கள் பார்க்கலாம்
முஹல்லா/ஊருக்கே வழிகாட்ட வேண்டிய பள்ளி நிர்வாகம் இவ்வாறு கூடாதென்று அறிந்த ஒன்றை திட்டமிட்டு செய்வது கண்டிக்கத்தக்கது.
இந்த நிகழ்வில் நம்மூர் ஆலிம்கள் கலந்து கொள்ளாததின் (அல்லது அழைக்கப்படாததின்) நோக்கம் தெளிவு படுத்தப்பட வேண்டும். அல்லது அவர்கள் இதை புறக்கணித்திருந்தால் மகிழ்வே!
இஸ்லாத்தில் இருந்து கொண்டு தெரிந்தும், தெளிந்தும் திருந்த அடம்பிடிக்கும் எவரும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரின் சிறுபாண்மை (இஸ்லாமிய) பிரிவாகத்தான் இருக்க முடியும். காரணம், சில சமயம் இவர்களையும் எளிதில் தூக்கி போட்டு விழுங்கும் காரியங்களை முன் சஃபில் நின்று தொழும் நம்மவர்கள் சாதாரனமாகவும், கச்சிதமாகவும் (கேள்வி,கணக்கு, அல்லாஹ்வின் அதாப் அதெல்லாம் பாத்துக்கிடலாம்...) செய்து முடித்து விடுகின்றனர் நம் ஊரில்.
//இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை.//
இந்தச் செய்தி வெளியான பதிவில் சகோ.அதிரை மன்சூர் அவர்கள், இவ்விழாவிற்கு ஹைதர் அலி ஆலிமை ஏன் அழைக்கவில்லை? இதிலுமா அரசியல் என்று கேட்டிருந்த பின்னூட்டத்திற்கு,இந்த விழாவில் ஹைதர் அலி ஆலிம் கலந்துகொண்டிருந்தால் மட்டும் புனிதமாகி விடுமா? மார்க்கத்தில் இல்லாததைக் கண்டிப்பதை விடுத்து ஏன் ஹைதர் அலி ஆலிமை அழைக்கவில்லை என்று கேட்டிருப்பது கொள்கையில் தடுமாற்றமோ? என்றும் கேட்டிருந்தேன்.
இதை 'தீர விசாரிக்க' வேண்டிய அவசியமின்றி' புகைப்படங்களைப் பார்த்தாலே போதும். எனது பின்னூட்டமும் அந்தப் பதிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை என்பதும் தெளிவு.
முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மார்க்கத்திற்கு விரோதமாக இல்லாத வகையில் குறிப்பாக இணைவைப்பு இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இணைவைப்பு நடந்ததா என்பதை தீரவிசாரித்தவர்கள் உறுதி செய்யவேண்டும்.
மேலும், தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க பிறமதத்தவரின் பூமிபூசை புகைப்படத்தையும் இணைத்து வெட்டி-ஒட்டி வெளியிட்டு,செய்யாத ஒன்றைச் செய்ததாகச் சொல்வதும் மார்க்க விரோதச் செயலே!ஏனெனில்,இவ்விரு படங்களிலும் செங்கல், ஊதுபத்தி இருந்தாலும் நோக்கங்களும், அதைச் செய்தவர்களும் வெவ்வேறானவர்கள்.
அடிக்கல் நாட்டு நிகழ்வு மார்க்கப்படியான ஒன்றல்ல; ஆனால் மார்க்க விரோதமல்ல என்பது அடியேனின் புரிதல். நல்ல விசயங்களைத் தொடங்கும்போது வலது கையால் தொடங்க வேண்டும் என்பதும், பிஸ்மில்லாஹ் சொல்லியும், அல்லாஹ்வின் அருள்நாடியும் தொடங்க வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்திருப்பின் நிச்சயம் இதில் மார்க்க விரோதமில்லை.
மாறாக,பூமிபூசை என்பது அல்லாஹ்வை நம்பாத பிறமதத்தவர்கள் பூமியை தாயாக/கடவுளாகக் கருதி,அதைக்கொத்தி வேலை செய்வதால் பூமாதேவி?! கோபமடையாமலிருக்க பூசை செய்யவேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை. (புலால் உணவுகள் விற்கப்படும் கட்டிடத்திற்கு பூசை செய்வதும்கூட அவர்களின் நம்பிக்கையின்படி சரியல்ல என்பது தனிக்கதை.)ஆனால், அத்தகைய நம்பிக்கை நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது வெளிப்படை. ஆக, பூமிபூசை நடந்ததாகத் திருத்து பதிவிட்டிருப்பவர்கள் தீரவிசாரிக்கவில்லை என்றே கருத நேரிடுகிறது.
ஒருசாராரின் மீதுள்ள வெறுப்பு அவர்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து உங்களை தடுக்காமலிருக்கட்டும் - குர்ஆன் முஹம்மது நபியின் உம்மத்தினர் நடுநிலை சமுதாயமாகும் - நபிமொழி
இந்த விவகாரத்தில் அதிரைக்காரன் எழுதிய பின்னூட்டம் சரி என தோன்றுகிறது
அஸ்ஸலாமு அலைக்கும்,
யார் அந்த ஆலிம்? ஏன் அவர் முகத்தை கலங்கலாக அடையாளம் தெரியாதவாறு பிரசுரிக்கணும்? என்ன பயமா?
அல்லாஹ்வை மட்டும் பயப்படுவோம் சகோதரர்களே.
அதிரை எக்ஸ்ப்ரெஸில் அவர், முகமது குட்டி ஆலிம்?, தோன்றும் இதே படத்தை தெளிவாக போட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியை விழாவாக அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.
என்ன சொல்ல? அவர்கள் அறியாமையை.
கொசுறு:
2007 - ல் நான் வீட்டுமனை போட்டு கட்டியுள்ளேன். கொத்தனார் ராஜேந்திரன். அவரிடமும் ஆசாரி ராஜகோபாலிடமும் பூமி பூஜையோ எங்கள் வஸ்தாதுகளை வைத்து பாத்திகாவோ ஓதமாட்டேன் என்று சொல்லித்தான் அவர்களை நியமித்தேன். 'அன்று' அவர்கள் இருவரும் மற்றும் என் குடும்பத்தார்களை மட்டும் அழைத்து வந்திருந்தவர்களுக்கு டீயும் பிஸ்கோத்தும் கொடுத்து சாப்பிட்டு முடிந்தவுடன் கொத்தனார் கூட்டிவந்திருந்த கையால்களை விட்டு ப்ளூ பிரிண்ட்டின் அடிப்படையில் கயிறு கட்டச்சொன்னேன்.
அவ்வளவு தான். விழா இனிதே நடந்தேறியது.
அல்லாஹ்வின் கிருபையால் இன்று நல்லபடியாக அதை பூர்த்திசெய்து விட்டேன்.
இந்த தகவல் பெருமைக்காக அல்ல. சில சகோதரர்களுக்கு பதிலாக.
அல்லாஹ்வை மட்டும் நம்பி காரியமாற்றினால் எதுவும் சாத்தியமே.
அல்ஹம்து லில்லாஹ்!
எங்கள் வீடு கட்டும்போது இது போன்று எந்த சடங்குகளும் செய்யப்படவில்லை.
நாங்கள் கொத்தனார் வேலையும் பார்க்கவில்லை.
அல்ஹம்து லில்லாஹ்!
ஆகையால் இதை ஊதிப்பெரிதாக்குவதை விட அந்த ஊதுபத்தியை அணைப்பதே நல்லது...ஊதுபத்தி என்பது துர்நாற்றம் வீசும் இடங்களில் கொஞ்சம் நறுமணத்தை வரவழைக்கவும், கொசுக்களை விரட்டவும் என்ற நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை என்பது பெரும்பாண்மையானோரின் புரிதல் (அரபு நாட்டு ஊத் போல்). எனவே இந்த பிராண்டு ஊதுபத்தி தான் கொளுத்தப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
சகோ. குலாம் சொல்வது போல் (சுபுஹ் ஜமாத்தோடு தொழுத ஒருவர்) தன் வலக்கரத்தால் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி (இறைவா! உன் திருப்பெயரைக்கொண்டே இக்காரியத்தை ஆரம்பம் செய்கின்றேன். இந்த பணியை நீயே எவ்வித தடையின்றி சிறப்பாக முடித்துத்தந்தருள்வாயாக...என உருக்கமாக அவனிடம் மட்டும் வேண்டிக்கொண்டு) ஆரம்பிக்கும் ஒவ்வொரு காரியமும் நிச்சயம் வெற்றிகரமாக, சிறப்பாகவே முடியும் இடையில் சில தடங்கல்களும், சிரமங்களும் ஏற்பட்ட பொழுதிலும்......
அவன் திருப்பெயர் கொண்டு எந்த காரியமும் ஆரம்பிக்கப்படுகின்றனவா என்பது மட்டுமே அவனுக்கு முக்கியம். பிறகு, அவற்றை சிறப்பாக முடித்துத்தருவதும் அவன் கையிலேயே இருக்கின்றது.
சகோ.குலாம் செய்ததுதான் சரி...நானும் அப்படியேதான் செய்தேன் இன்று அல்லாஹ்வின் உதவியால் கம்பீரமாக நிற்க்கின்றது என் வீடு...வருகின்ற நோன்பில் இன்ஷா அல்லாஹ் குடியெறுவோம்...அதுவும் இஸ்லாமிய வழியாகவே இருக்கும்
மூன்றாவது தர்காவுக்கான அறிகுறியோ!!!!
நமதூரில் உள்ள ஆலிம்கள் ஷிர்க்கை பற்றி பயானில் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. பெண்களுக்கும் பயான்களில் எவ்வளவோ சொல்லப்படுகிறது அதில் என்ன சொல்லப்படுகிறது நாம் அதை நடைமுறைக்கு கொண்டு வரணும் என்ற எண்ணம் வருவதில்லை. அஸ்திவாரம் புதிதாக போடுவதாக இருந்தால் நமதூரில் நிறைய மூட நம்பிக்கைகள் இருந்து வருகின்றனர்.
அஸ்திவாரம் போடும்போது முதலில் குடும்பத்தாரர்களை எல்லாம் கூப்பிட்டு பிறகு லவுட்த்தம்பி அவர்களையும் கூப்பிட்டு பாத்திஹா ஓதி நாற்சா என்று குடுப்பார்கள். இந்த மூட நம்பிக்கை இன்னும் ஒழிய வில்லை ஆண்கள் முதலில் தெரியமாக இருக்க வேண்டும் இந்த மாதிரியான மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு அதற்கு ஏன் யாருக்கும் தெரியம் வருவதில்லை. நமதூரை பொருத்தவரை பெண்கள் என்னா சொல்கிறார்களோ அதைதான் ஆண்கள் கேட்கிறார்கள். ஆண்கள் தன்னிச்சையாக எதுவும் முடிவடுப்பதில்லை எதுவாக இருந்தாலும் வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டு அவர்கள் சரி என்று குரல் கொடுத்த பிறகு தான் ஆண்களுக்கு ஒரு தெரியம் வந்து விடுகிறது. ஆண்கள் உறுதியாக இருந்தால் எதுவும் அசைக்க முடியாது. நம் மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டு நாம் இஸ்லாத்திற்கு எதிரானதை செய்து வருகிறோம்.
Idealism பேசுபவர்களுக்கு நான் சொல்லும் யதார்த்தம் விளங்காது. மாறாக, உலகம் யதார்த்தவாதிகளால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. (உடனே அல்லாஹ்தான் இயக்குகிறான் என்று அமெச்சூர்தனமாக வாதிடாதீர்கள். அது எல்லோ முஸ்லிமுக்கும் தெரியும்) நான் மாற்று மதத்தவர் ஆட்சிசெய்யும் நாட்டில் வசிக்கிறேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்து பரிபாளிக்கிறான் என்று நம்பித்தான் நானும் முஸ்லிமாக இருக்கிறேன். ஆனால், துரதிருஷ்ட வசமாக என் நம்பிக்கை மட்டுமே சரி என்றாலும் அதை அப்படியே நடைமுறைப் படுத்த என்னைச் சுற்றி முஸ்லிம்கள் மட்டுமே இருப்பதில்லை. எனக்கு என் வழி; உனக்கு உன் வழி என்று குர் ஆனே சொல்லும்போது நான் ஏன் கொத்தனாரின் நம்பிக்கையை என் பலம் கொண்டு நசுக்க வேண்டும். எனக்கு வீடு கட்டுவதால் எனக்குத் தொழிலாளியென இறங்கியவனிடம் என் முதலாளித்தனம் கொண்டு அடக்க வேண்டுமா?. அல்லாஹ் தருகிறான், அல்லாஹ் செய்கிறான் என்று எல்லாவற்றிற்கும் அவனை இழுப்பது ஒருவிதமான தப்பிக்கும் யுக்தி என்பது என் கருத்து.
நமக்கு நம் நம்பிக்கை என்பதுபோல்தான் அவனுக்கு அவன் நம்பிக்கை. நம் நம்பிக்கையை எத்தி வையுங்கள்; அவன் நம்பிக்கையை நசுக்காதீர்கள். பிழைப்புக்காக அவன் பூமி பூசை செய்யாமல் கட்டியிருந்தாலும் அவனுக்குள் அந்த தெய்வ குற்றம் நினைப்பு நிச்சயம் இருக்கும் என்பதை மறுக்காதீர்கள்.
ஆனால், இந்தப் பதிவு அவர்களின் பூமி பூஜையைப் பற்றியது அல்ல. நம்மாட்கள் செய்யும் பூமி பூஜையைப் பற்றியது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது.
அதிரைக்காரன்,
ஒப்பீட்டுக்காக பதியப்பட்ட படங்களைக் கொண்டு செய்தியை திசை திருப்பாதீர்கள். பூமியை பூஜிப்பதை இஸ்லாம் தடுக்கிறது. எனவே இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து விலகியிருங்கள் என்று அறைகூவலிடும் இந்தப் பதிவை அரசியலாக்காதீர்கள். (யாராவது இவர் கையிலிருந்து மைக்கைப் பிடுங்குங்களப்பா)
//அடிக்கல் நாட்டு நிகழ்வு மார்க்கப்படியான ஒன்றல்ல; ஆனால் மார்க்க விரோதமல்ல என்பது அடியேனின் புரிதல்.//
இது அடிக்கல் நாட்டு விழாவல்ல . இது அடிக்கல் மார்க்க விழா. ஏன் என்றால் இது நடப்பது, அல்லாஹ்வின் இறை இல்லத்திர்க்குச்சொந்தமான ஒரு கட்டிடம் எனும்போது,
ஒவ்வரு விஷயத்தையும் செய்யும்போது, ( எல்லா விதத்திலும் பரிபூரணம் செய்யப்பட்ட இஸ்லாத்தில் இருந்து கொண்டு ) அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கும்போது, ஏன் இந்த அந்நிய கலாச்சார சடங்கு? வாழ்வின் ஒவ்வரு அங்குலம் அகுலமாக அழகுற வாழ்ந்து செல்ல இஸ்லாம் வழிகாட்டும்போது, சாதாரண ஒரு கட்டிடம் கட்ட எப்படி ஆரம்பம் செய்ய வேணும் என்று இஸ்லாத்தில் சொல்லித்தரப்படவில்லையா ?
அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் வழிகாட்டுதல் இல்லையா? அல்லது சில விஷயங்களை இஸ்லாம் சொல்லித்தர தவறி விட்டதா ? ( ந ஊது பில்லாஹி )
இஸ்லாத்தில் வழிகாட்டுதலுக்கு என்ன பற்றாக்குறை ? எவ்வளவு நாட்களுக்கு இந்த பிடிவாதம் ?
ஒரு நாள் உண்டு அந்த நாள் ,
ஒவ்வரு தாயும் தன குழந்தைக்கு பால் ஊட்டுவதை மறந்துவிடுவாள். ஒவ்வரு
கர்ப்பினிப்பென்னும் தன கர்ப்பத்தை சிதைத்துவிடுவாள். அனைவரும் போதை வயப்பட்டவர்களாக இருப்பார்கள். ( அது குடித்ததனால் ஏற்ப்பட்டதல்ல ) அல்லாஹ்வின் தண்டனை எப்படி இருக்குமே என்ற பயத்தினால் ஏற்பட்ட திடுக்கத்தினால் உருவான மயக்கமாகும் என்று அல்லா குரானிலே சொல்கின்றானே .......
அந்த நாளுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் .
ஒவ்வரு அணு அணு வாக கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றோம் என்பதை
மனதில் வைத்து ஒவ்வரு விஷயத்தையும் செய்வதற்கு முன் யோசியுங்கள்
முஸ்லிம் பெயர் தாங்கிகளே.
அல்லாஹ் உங்களையும் எங்களையும் பித் அத் என்னும் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து காப்பாற்றுவானாக ! ஆமீன் !
அபு ஆசிப்.
மைக் டெஸ்டிங். :) 1,2,3...
மற்ற தளங்களில் பூமிபூசையை மறைத்து செய்தியாக மட்டும் வெளியிட்டதாகச் சொன்னதோடு தீரவிசாரித்து? புலணாய்வு செய்ததுபோல் பதிவிட்டதற்கே என் மறுப்பு. நடந்தது பூமிபூசை என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக பூமியிடம் பிரார்த்திக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும். தீர விசாரித்தவர் செய்தாரா? செங்கல்லும் பத்தியும் அங்கு இருந்ததைவைத்து அங்கிருந்தவர்களின் உள்ளத்தைப் பிழந்து பார்த்ததுபோல் எழுதியிருப்பதும். அதற்கு வலுவூட்ட பிறமத சடங்கின் புகைப்படத்தை ஒப்பிட்டதுமே திசை திருப்பல். ஓவர்.
அபுஆசிப் காக்கா. இவ்வாறு அடிக்கல் நாட்டிதான் தொடங்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய வழிமுறை என்று யாரும் வாதிடவில்லை. அங்கு நடந்தது மார்க்கப்படியான வழிகாட்டல் இல்லை என்றாலும் மார்க்கவிரோத பூமிபூசை அல்ல என்பதே என் கருத்து. தவறான கருத்தைப் பதிந்ததையே நான் சுட்டிக்காட்டினேன்.
இது போன்ற அடிக்கல் நாட்டு விழாக்களும் அதில் ஓதப்படும் பாத்திஹாக்களும் பச்சை பித் அத்கள். இவை அனைத்தும் மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டானங்கள். எல்லா நூதன அனுஷ்டானங்களும் வழிகேடுகளே.
நிற்க,எனினும் இத்தைகைய பாத்திஹாக்களை ஷிர்க் எனச் சொல்வது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பது எனது கருத்து.பித் அதை பித் அத் என்று சொல்வோம். ஹராமை ஹராம் என்று சொல்வோம். ஷிர்கை ஷிர்க் என பறைசாற்றுவோம். மிகைப்படுத்தல் வேண்டாம்.
என்னைக் கேட்டால் இந்த நமதூர் பரலேவிகளை விட தங்களை தவ்ஹீதிகள் என சொல்லும் முஃதஜிலாக்களிடம் தான் அதிகமான வழிகேடுகள் உள்ளன.
2003ம் ஆண்டு வரை ஸஹீஹ் ஹதீஸ் என இந்த முஃதஜிலா தவ்ஹீதிகள்(???) சொல்லிவந்த கண் திருஷ்டி இப்போது இவர்களின் 2010ம் ஆண்டைய மறுஆய்வில் ஷிர்க் ஆகிவிட்டது. இவர்களின் இந்த 2010ம் ஆண்டைய மறுஆய்வை மறுத்து யாரேனும் கண் திருஷ்டி உண்மையே என்ற ஸஹீஹ் புஹாரியில் பதிவான நபி அவர்களின் ஹதீஸை நம்பினால் அவர்கள் முஷ்ரிக்குகள் என இந்த வழிகெட்ட தவ்ஹீதிகள் (??) அலறுகின்றனர்.
அ.நி குழுவுக்கு: நீங்கள் அல்லாஹ்வின் பொறுத்தத்தை நாடி இது போன்ற கருத்துக்களங்களை நடத்தினால், உண்மையில் அதிகமாக தோலுரிக்கப்படவேண்டியது புதிதாக இந்த முஃதஜிலாக்கள் பரப்பி வரும் அவர்களின் புதிய தீன் தான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இவர்கள் கண்டுபிடிக்கும் ஷிர்க்கும், புதிய ஈமானும் பல ஆண்டுகளாய் அறியப்பட்ட பரலேவிச கொள்கை என்ற வழிகேடு மற்றும் அதனையொட்டிய பித் அத்களை விட அதிகம் தோலுரிக்கப்படுவதற்கு தகுதியானது.
--அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா, UAE.
ஊரில் எத்தனையோ பித் அத் நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்நிகழ்ச்சியினை கட்டுரையாக எழுதி விமர்சிப்பதற்கு,மஸ்ஜிதுக்கு சொந்தமான இடத்தில் ஒரு ரஹ்மானியா மதரஸாவின் முதல்வரே பூமி பாத்திஹா என்னும் பித் அத் நடத்துவதுதான் காரணமாக இருக்கும்.இவர்தான் அதிரை உலமாக்கள் சபையின் தலைவராம்.இந்த முஸ்லி யார்தான் அதிரையில் ஷிர்க்,பித் அத் நிகழ்ச்சிகளை ஆதரிப்பதால்தான் இன்னும் சிலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தம்பி அதிரைக்காரரே! ஹைதர் அலி ஆலிமோ வேறு எந்த ஆலிம்சாக்களோ கலந்துகொண்டாலும் பித்அத் எனும் வழிகேடு புனிதமாகிவிடாது. நல்லவேளை அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.குட்டி ஹஜரத்தும் அவரின் அடிவருடி லெப்பைஆலிம்சாக்களை தவிர)
அதிரை வலைத்தளங்களில் வெளிவந்த இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை உற்று கவனித்தால், சகோ.மன்சூர் சொல்லும் அரசியல் விளங்கும்.
ஹைதர் அலி ஆலிம் அவர்களை தூக்கி பிடித்தவர்கள், அவர் வட்டி மற்றும் பித் அத் எதிர்த்து பிரச்சாரம் செய்ததினாலும் பள்ளிவாசல் சொத்தை மீட்க முயற்சித்தவர்களுக்கு ஆதரித்ததாலும் எதிரியானவர்கள் இந்த பூமி பாத்திஹாவில் அணி திரண்டு இருப்பதை காணலாம்.
//மேலும், தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க பிறமதத்தவரின் பூமிபூசை புகைப்படத்தையும் இணைத்து வெட்டி-ஒட்டி வெளியிட்டு,செய்யாத ஒன்றைச் செய்ததாகச் சொல்வதும் மார்க்க விரோதச் செயலே!ஏனெனில்,இவ்விரு படங்களிலும் செங்கல், ஊதுபத்தி இருந்தாலும் நோக்கங்களும், அதைச் செய்தவர்களும் வெவ்வேறானவர்கள்// அதிரைக்காரன்
பிறமதத்தவரின் பூமி பூஜையுடன் இந்த பூமி பாத்திஹா ஒட்டி இருப்பதால்தான் அவர்களின் படத்தை இணைத்து Comparition செய்து இருப்பதைகூட புரிந்துகொள்ள முடியவில்லையா அதிரைக்காரருக்கு.செய்பவர்கள் வெவ்வேறானவர்களானாலு ம் நோக்கம் ஒன்றுதானே!
பூஜையோ பாத்திஹாவோ செய்தால் கட்டிடம் நன்றாக வரும் என்பதுதானே.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறினார்கள் நூல்:முஸ்லிம்
அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேயடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான்.ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான். இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்கி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
நூல்: புகாரி 100
அஸ்ஸலாமு அலைக்கும்,
எனக்கு சொந்தமான நிலத்தில் பூமி பூஜையோ பாத்திகாவோ செய்ய அனுமதி இல்லை என்றால் மாற்று மதத்தவரின் நம்பிக்கையை நசுக்குவதாக எப்படி பொருள்படும்.
அவரவர் உரிமையை அவரவர் எல்லைக்குட்பட்டு நடத்தும்போது எந்த பிரச்சனையுமில்லை. அவன் இடத்தில் செய்கின்ற பூஜையை யார் தடுத்தா?
என் இடத்திலும் வந்து செய்வேன் என்றால் அதற்கு அனுமதி இல்லை.
அதை என்பலம் கொண்டு தடுக்க நான் சக்தி பெற்றிந்தேனானால் நிச்சயம் நான் செய்வேன். அதைச்செய்தேன். அதைத்தான் சரியான ஈமான் பலம்கொண்ட முஸ்லிமும் செய்வான்.
அல்லாஹ் தருகிறான், அல்லாஹ் செய்கிறான் என்று எல்லாவற்றிற்கும் அவனை இழுக்காமல் வேறு யாரை இழுப்பது.
இது என்ன மாதிரி இஸ்லாமிய புரிதல்.
எங்கள் இறைவா! எங்கள் அனைவருக்கும் உறுதியான ஈமானையும் அதன் விசாலமான அறிவையும் தந்தருள்வாயாக.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அகிலத்தின் முன்மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராத இது போன்ற அடிக்கல் நாட்டு விழா என்ற சடங்கு நடைபெறும் நிகழ்வுகளை நாம் புறக்கனிக்க வேண்டும்.
இஸ்லாத்தை வியாபாரமாக்கி கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.
அதிரையில் பிற மத கலச்சாரம் சடங்குகள் இன்றி கட்டிடங்கள் கட்டித்தர நிறைய நம் சகோதரர்கள் காண்டிராக்டர்களாக உள்ளனர். இணைவைப்பு பூமி பூஜை நடத்தாத காண்டிராட்டர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது அவர்களை பயன்படுத்தலாமே..
இங்கு நம்மவர்கள் பணத்திற்காக ஹக்கை மறைப்பது போல்,
பிற மத்தத்தை சேர்ந்த கொத்தனார்கள் பணத்திற்காக அவர்களின் பக்தியை விட்டுக்கொடுக்கிறார்கள் என்பது நடைமுறையில் நடந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாம்முடைய பொருளாதாரத்தில் கட்டப்போகும் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு என்னும் பூமி பூஜை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால், இன்றைய காலத்தில் பூமிபூஜை இல்லாமல் கட்டிடங்கள் கட்ட முடியும்.
வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ குலாம்.
ஒரு மாற்று மத முதலாளி முஸ்லிம் கொத்தநாரை வைத்து நீங்கள் சொல்லும் அதே
"என்பலம் கொண்டு தடுக்க நான் சக்தி பெற்றிந்தேனானால் நிச்சயம் நான் செய்வேன்"
என்னும் பானியில் முஸ்லீம் கொத்தநாரை அவரிடத்தில் அவர் பலம் பிரயோகித்து பூமி பூஜை செய்யச் சொன்னால்அந்த கொத்தநாரை பூமி பூஜை செய்யச்சொல்வீர்களா அல்லது, "இது என் நம்பிக்கைக்கு எதிரானது. செய்யமாட்டேன்" என்று சொல்லச்சொல்வீர்களா.
தங்கள் கூற்றின்படி பலம் கொண்ட மாற்றுமத முதலாளி முஸ்லிம் கொத்தநாரை பூமி பூஜை செய்யச்சொன்னால் செய்துதான் ஆக வேண்டும். மறுக்கக் கூடாது.
என் கூற்றின்படி, "இது என் மார்க்கத்தில் அனுமதியில்லை. இதை நான் செய்ய கட்டாயப்படுத்தாதீர்கள்" என்று அவரவர் நம்பிக்கையில் இருந்து விடுவது.
எது சரியானது என்றும் மத நல்லிணக்கம் என்றும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
//இது என்ன மாதிரி இஸ்லாமிய புரிதல்.//
எக்ஸ்யுஸ்மி மிஸ்டர் குலாம், என் மார்க்கத்தை நான் எப்படி புரிந்து வைத்திருக்கிறேன் என்பது எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்டது. எப்பேர்ப்பட்ட நம் தலைவர்களே புரிதலில் பிளவுண்டு கிடக்கும்போது சாமான்யர்களாகிய நமக்குள் புரிதலில் வித்தியாசம் இருப்பதில் வியப்பொன்றுமில்லைதானே.
//எங்கள் இறைவா! எங்கள் அனைவருக்கும் உறுதியான ஈமானையும் அதன் விசாலமான அறிவையும் தந்தருள்வாயாக.//
ஆமீன்.
//பிற மத்தத்தை சேர்ந்த கொத்தனார்கள் பணத்திற்காக அவர்களின் பக்தியை விட்டுக்கொடுக்கிறார்கள் என்பது நடைமுறையில் நடந்து வருகிறது//
பிரச்னையை நம்ம பாய்மார்களிடம் வைத்துக்கொண்டு மாற்று மத நம்பிக்கையை விமரிசிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
//நடந்தது பூமிபூசை என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக பூமியிடம் பிரார்த்திக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும்.//
அ.நி. விளக்கம் ப்ளீஸ்.
அதிரைக்காரன்: புகைப்படங்களை உண்ணிப்பாகப் பார்த்தீரா? பத்தி கொளுத்திய நோக்கம் நெய்னா சொன்னதுபோல் இருக்குமோ?. காமெடி பண்ணாதிய.
இப்டிலாம் ஓப்பனா வக்காலத்து வாங்கி பேசினியன்னா "காசு வாங்கிட்டான்யா" என்று இட்டுக்கட்டிடுவாய்ங்க நம்மூர்ல :)
(இப்பவாவது மைக்கை கீழே வச்சிடுங்க)
சகோதரர்களுக்கு. பூமிபூசையில் முன்னிறுத்தப்படுவது பூமி. ஆனால் இங்கு அதுவா நடந்தது என்பதே என் கேள்வி. உண்மையிலேயே பள்ளிவாசல் நிலத்தில் அத்தகைய பூசை நடந்திருந்தால் கண்டிப்பதும் முடிந்தால் தெளிவுபடுத்தி தடுப்பதும் நம் கடமை. ஆனால் அவ்வாறு நடக்காதபோது. நடந்ததாகச் சொல்வது தவறு. தீரவிசாரித்தவர்கள் இதை நிரூபித்தால் என்னுடைய கருத்துகளை வாபஸ் பெறுகிறேன். இல்லையெனில் தவறான கருத்தை பரப்பியதை சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக் கொள்ளட்டும்.
சபீர் காக்கா. பூமிபூசை செய்வது பிறமதத்தவரின் நம்பிக்கை+ உரிமை என்றாலும் அதைச்செய்வதனால் ஏற்படும் சங்கடத்தை எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள். விடாப்பிடியாக அவர்கள் நம்பிக்கையை நம்மீது திணித்தால் தோதான தொழிலாளியைத் தேடவேண்டும். இதை மென்மையாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள்தானே.
மதநல்லிணக்க விருதுக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறேண் ;)
இந்து முறைப்படி பூமிபூசை எப்படி இருக்கும்? என்பதை http://www.google.ae/url?sa=t&source=web&cd=1&ved=0CCgQFjAA&url=http%3A%2F%2Fpsssrf.org.in%2Fusfullastro%2Ftamilastrobooks.aspx%3Fid%3D91038&ei=94DIUbrkKs2ErAfx1YHQCg&usg=AFQjCNGwUCh-2SbYaQGaoYci5s9qVMLazQ&sig2=h1Ly9NN2R9T4CR5TYsbu0g விளக்கமாகச் சொல்லியுள்ளனர். கடைத்தெரு கட்டுமானத்தில் இப்படியா பூமிபூசை நடந்தது?
சபீர் காக்கா, ஊதுபத்தி எந்த மதம்? :)
இப்படிதான் அசலம் அவர்கள் தி மு க அலுவலகத்தில் ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் என்றார்கள் இப்போது பூமி பூஜை என்கிறர்கள் .இப்படியே ஒன்னு ஒன்ன பார்த்துகிட்டே போககூடாது
இரண்டாண்டுக்கு முன், எனக்காக வீடு கட்டத் துவங்கியபோது, என் மூத்தசகோதரர் யூசுஃப் ஸாலிஹ் 'பிஸ்மில்லாஹ்' சொன்னார். அவ்வளவுதான்! வீடுகட்டுபவரும் முஸ்லிமாக இருந்ததால் இதுபோன்ற மார்க்க விரோதமான விஷயங்களைத் தவிர்த்துக் கொள்வது எங்களுக்கு இறையருளால் எளிதாகிவிட்டது!
-தகவலுக்காக.
Assalamu Alaikkum
I would like to know about any 'foundation ceremony' happened particularly in any of Adirampattinam Masjids started constructing.
Please elder brothers, could you please recollect from your memories and provide your evidence here? Whether it was done or not.
I guess but I am not sure, that 'foundation ceremony' had been done even for Masjids in our town or other places too.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
//நடந்தது மார்க்கப்படியான வழிகாட்டல் இல்லை என்றாலும் மார்க்கவிரோத பூமிபூசை அல்ல என்பதே என் கருத்து//
இது மார்க்க விரோதமே
நான் எதிர்மறை விவாதம் செய்ய இதை சொல்லவில்லை. இஸ்லாத்தைபொருத்தவரை எந்த செயலுக்கும் ஒரு எளிமை, ஒரு அழகிய வழிகாட்டல் என்றிருக்கும்போது, ஏன் அதைப்பின்பற்றி நண்பன் இக்பால் வீடு கட்டும்போது "பிஸ்மில்லாஹ்" என்று கூறி கட்டியது போன்று கட்டக்கூடாது ?இன்றும் நல்ல பலமுள்ள கட்டிடமாகத்தானே அது இருக்கின்றது ? கொத்தனார் வருத்தபடுவார் , சித்தாள் வருத்தப்படுவார், மேஸ்தரி வருத்தபடுவார் என்று நம் கண்முன்னே நமக்காக வீடு கட்டும்போது, கொத்தனாரின் மனது வருத்தப்படும் என்று நரகில் கொண்டு பொய் சேர்க்கும் நூதனப்பழக்கத்திர்க்கு நாம் என்றும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. இது எங்கள் மார்க்கத்தில் இல்லாத செயல் என்று கொத்தனாருக்கு அந்த இடத்திலேயே இஸ்லாத்தைப் புரிய வைப்பதில் தப்பில்லை.
இப்படியே நாம் கொஞ்சம் இறங்கிப்போகும்போதுதான் பித் அத்துகள் தலை தூக்க ஆரம்பித்து விடுகின்றன என்பது என் கருத்து.
ஆதலால் குறிப்பாக அல்லாஹ்வின் இல்லத்திர்க்குச்சொந்தமான கட்டிடம் எழுப்பப்படும்போது, கண்டிப்பாக இந்தமாதிரியான விஷயங்களை தவிர்க்க
அல்லா நம் அனைவருக்கும் நெஞ்சுறுதி மிக்க ஈமானத்தருவானாக !
ஆமீன்.
.
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்..]
சகோதரர் அதிரைக்காரன் அவர்களுக்கு:
பதிவின் நோக்கம் இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் அனாச்சாரத்தை சுட்டிக் காட்டுவதும் அதுபோன்று இனியும் தொடர்ந்து நிகழாமல் இருக்க மட்டுமே.
அல்லாஹ்வுடைய மார்க்கத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயல் நடைபெற்றாலும் அவற்றை எதிர்த்து குரல் கொடுப்பதில் அதிரைநிருபர் வலைத்தளம் முன்னிலையில் இருக்கும் இன்ஷா அல்லாஹ் ! என்பதை மட்டும் முதலில் பதிவு செய்கிறோம்.
//அதிரைக்காரன் சொன்னது…
அபுஆசிப் காக்கா. இவ்வாறு அடிக்கல் நாட்டிதான் தொடங்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய வழிமுறை என்று யாரும் வாதிடவில்லை. அங்கு நடந்தது மார்க்கப்படியான வழிகாட்டல் இல்லை. //
அடிக்கல் நாட்டு விழா என்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை என்பதை உங்களின் கருத்து வாயிலாக ஒத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதற்கு மேற்கண்ட தங்களின் பின்னூட்டமே சொல்கிறது.
//பிற சமூகத்தவர் புனிதம் என்று கருதுவதை நாம் அதற்கு இணையாக செய்வது சரியா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.// - அதிரைநிருபர்
இந்த பத்தியில் எங்கேயாவது தக்வா பள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் இணை வைக்கப்பட்டது என்று மேற்கோல் காட்டப்பட்டுள்ளதா ? பிற மதத்தவர்களுக்கு இணையாக இவ்வாறு செய்வது சரியா? என்ற கேள்வியாக குறிப்பிட்டுள்ளதை, தக்வா பள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் இணை வைப்பு நடைப்பெற்றது போன்று பதிவில் கண்டதாக திரித்து சுட்டிக்காட்டுவது வருந்ததக்கது.
//அடிக்கல் நாட்டு விழா என்னும் பெயரில் பூமி பூஜை என்ற அனாச்சாரமான பிறமத கலாச்சாரத்தை அப்படியே செய்து வருகின்றனர் என்பதை மேல் குறிப்பிட்ட தக்வாபள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்றதையும், பிறமதத்தை சேர்ந்தவர்கள் செய்த பூமி பூஜையில் நடைபெற்றதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.// - அதிரைநிருபர்
அடிக்கல் நாட்டு விழா எனும் பூமிபூஜை போன்ற அனாச்சாராமான பிற மத கலாச்சாரத்தை பொதுவாகவே நம் மக்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி. பிற மதத்தவர்கள் பூமிபூஜை செய்வதையும், தக்வா பள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நம்மவர்கள் ஃபாத்திஹா ஓதி சடங்கை செய்ததையும் வாசிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளோமே தவிர இணை கற்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடவில்லை.
பிற மதத்தவர் செய்யும் செயலோடு அப்படியே நம்மவர்கள் செய்யும் செயலும் ஒத்துப்போகிறது என்பதனை விளக்கவே பதிவில் குறிப்பிட்ட / இட்ட படங்களின் ஒப்பீடே தவிர எவருடைய மனதை பிளந்து பார்த்தது போன்ற கற்பனைகள் அல்ல ! அதற்கான அவசியமும் இல்லை.
அங்கே, பிற மத்தத்தவர் புரோகிதரை வைத்து ஊதுபத்தி கொழுத்தி, சந்தனம் பூசி, மந்திரம் துதித்து, பூஜை செய்து அடிக்கல் நாட்டுகின்றனர். இதுபோன்றே நம்மவர்கள் புரோகிதரை வைத்து நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத ஃபாத்திஹா ஓதி அடிக்கல் நாட்டுகிறார்கள் அல்லது அஸ்திவாரம் போடுகிறார்கள்.
அங்கே, முதல் கல்லை புரோகிதரோ மந்திரம் துதித்து எடுத்து கொடுக்க வீட்டின் பெரியவர் அல்லது அவர்கள் சுட்டும் நபர் முதல் கல்லை வைக்கிறார். இதுபோன்றே நம்மவர்களின் புரோகிதர் ஏதோ ஒன்றை ஓதி முதல் கல்லை அவரே எடுத்துவைக்கிறார் / அல்லது சுட்டும் நபரை எடுத்து வைக்க வைக்கிறார்,
அங்கே அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு வந்தவர்களுக்கு பூஜித்தவற்றிலிருந்து பிரசாதம் கொடுக்கப்படுகிறது. இதே போன்று இங்கே அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு / அஸ்திவாரம் போட்ட பிறகு நார்சா என்று கொடுக்கப்படுகிறது.
அங்கே பூஜித்து அடிக்கல் நாட்டுவது ஒரு சம்பிரதாயம். நம்மவர்களிடம் காப்பியடிக்கப்பட்ட இஸ்லாமிய சாயல் காட்டி அடிக்கல் நாட்டப்படுவதும் சம்பிரதாயம் ஆனதும் வேதனையே !
அங்கே அடிக்கல் நாட்டு பூஜை செய்தவருக்கு சன்மானம். இதேபோன்று ஃபாத்திஹா ஓதியவருக்கு சன்மானம்.
இந்த நிலையில் அல்லாஹ்வின் பள்ளிக்குட்பட்ட நிலத்தில் இவ்வாறு நடக்க அனுமதிப்பது சரியாகுமா ? எங்கே நாம் இருக்கிறோம் என்பதை கொஞ்சம் சிந்த்துப்பார்க்க கடமை பட்டுள்ளோம் !
தக்வா பள்ளி மார்கெட் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிறமத கலாச்சார சாயல் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான முஸ்லீம்கள் கட்டும் வீடுகளாகட்டும், கட்டிடங்களாகட்டும் இது போன்ற சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இனியும் இவ்வாறான காரியங்கள் நடைபெறாமல் இருக்கவே மேற்கோள் காட்டிய ஒப்பீடும் சுட்டலும்.
இவ்வகை வழக்கம் வழிபாடு இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை என்பது தெளிவு. தக்வா பள்ளி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடந்தது தவறான முன்னுதாரணம் என்பது வெட்ட வெளிச்சமாக அறிந்த பின்பும், இந்த பதிவின் நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடரும் 1/2
தொடர்கிறது...2/2
சகோதரர்கள் அனைவரும் பதிக்கப்பட இந்த பதிவின் முழுமையாக நோக்கத்தை நன்கறிந்து கருத்தாடலில் எடுத்துரையுங்கள்.
மார்க்கத்துக்கு விரோதமான காரியம் ஒன்று பொதுவில் செய்தியாக வெளியிடப்பட்டதால், விமர்சனங்களை சந்தித்துதான் ஆகவேண்டும். அல்லது நடந்தது மார்க்க விரோதமல்ல என்று தெளிவான மார்க்க ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
ஃபாத்திஹா என்ற புதினம் (பித்அத்) மாப்பிள்ளை ஊர்வலத்தில், அஸ்திவாரம் போடுமிடத்தில், புதுவீடு குடிபோகுமிடத்தில், இறந்தவர்கள் வீட்டில், பயணப் புறப்பாடுகளிடத்தில், அடக்கஸ்தலங்களில், சந்தோஷத்திற்கும். அழுகைக்கும் என்று இஸ்லாத்தை கேளிக்கூத்தாக்கி கண்மணி நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்களை தன்னிச்சையாக செய்யும் புரோகிதர்களின் முகத்திரையை கிழிக்கவே இவ்வாறான ஒப்பீட்டு பதிவுகள் தொடரும்...
மார்க்கத்தின் பெயரால் சுரண்டும் புரோகிதர்களின் சூழ்ச்சிகள் அல்லாஹ்வின் துணையுடன் முறியடிக்கப்படும்.
மார்க்கத்துக்கு விரோதமான எந்த ஒரு சம்பவத்தையும் விவாதத்திற்காக பொதுவில் செய்தியாக பதிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம், அவைகளை வண்மையாக கண்டித்து செய்திகள் வெளியிட வேண்டும் என்று சகோதரர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
அதிரைநிருபர் பதிப்பகம்.
///m.liyakat ali சொன்னது…///
//இப்படிதான் அசலம் அவர்கள் தி மு க அலுவலகத்தில் ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் என்றார்கள் இப்போது பூமி பூஜை என்கிறர்கள் .இப்படியே ஒன்னு ஒன்ன பார்த்துகிட்டே போககூடாது ///
தி மு க அலுவலகத்தில் ராமசந்திரன் சிலைக்கு அசலம் மாலை அணிவித்து வணங்கியது உண்மையா யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்
வ அலைக்கும் ஸலாம். நடந்தது பூமிபூசையல்ல என்பதே என் வாதம். இல்லை பூமி பூசைதான் நடந்தது என்பதில் உறுதியாக இருப்பீர்களாயின் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் உள்ளது.
பிறதளங்களில் உண்மையை மறைத்தார்கள் என்றும் நீங்கள் மட்டுமே தீர விசாரித்தீர்கள் என்பதும் சரியல்ல. ஏனெனில் செய்தியாக வந்த அதேபதிவில்தான் கண்டிக்கப்பட்ட பின்னூட்டமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்திட்ட சகோதரர்கள் தங்கள் வீட்டைக்கட்டும்போது பிஸ்மில்லாஹ் என்று தொடங்கி வைத்ததாகச் சொல்லியுள்ளனர். கிட்டத்தட்ட இதேபோன்றுதான் அங்கும் நடந்துள்ளது. ஆக, உண்மையைத் திரித்தது நானல்ல.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சபீர்,
சுகமா. ரொம்ப நாள் ஆச்சு தங்களிடம் உரையாடி. நல்லது.
திரும்பவும் தங்கள் புரிதலில் சிக்கல் சகோ.
//முஸ்லீம் கொத்தநாரை அவரிடத்தில் அவர் பலம் பிரயோகித்து பூமி பூஜை செய்யச் சொன்னால்...//
//பலம் கொண்ட மாற்றுமத முதலாளி முஸ்லிம் கொத்தநாரை பூமி பூஜை செய்யச்சொன்னால்...//
ரொம்பவும் எதிர்மறையான புரிதல்.
முஸ்லிம் கொத்தனார் மாற்றுமதக்காரருக்கு வீடு கட்ட சென்றால் அவர் நம்பிக்கையின்படி பாத்திகா தானே ஓத முனைவார். இந்து கொத்தனார் நம்பிக்கையின்படி பூஜை செய்வதுபோல். இந்த நடைமுறை தானே இங்கு பேசுபடு பொருள்.
முஸ்லிம்களுக்கு வீடு கட்டவரும்போது இந்து கொத்தனார் பாத்திகா ஓதுவாரா?
நடைபெறாமல் தடுக்கப்பட்டது எது?
இந்து கொத்தனார் நம்பிக்கையின்படி பூஜை செய்வதையா அல்லது இந்து கொத்தனார் பாத்திகா ஓத முயன்றதையா?
என்ன Mr. சபீர், நிதானப்படுங்கள்.
சொல்லாததை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு....இப்படியே போனால் திசை மாறும்.
சகோ. தாஜுதீன் குறிப்பிட்டது போல்,
இனிவரும் காலங்களில்,
//அதிரையில் பிற மத கலச்சாரம் சடங்குகள் இன்றி கட்டிடங்கள் கட்டித்தர நிறைய நம் சகோதரர்கள் காண்டிராக்டர்களாக உள்ளனர். இணைவைப்பு பூமி பூஜை நடத்தாத காண்டிராட்டர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது அவர்களை பயன்படுத்தலாமே..//
இந்த மாதரி காண்டிராக்டர்கள் 2007 - ல் இல்லாத போதே என்னுடைய நம்பிக்கையின் உறுதிகொண்டு நான் பூஜையோ பாத்திகாவோ செய்ய அனுமதிக்காததை குறிப்பிட்டேன். இதில் என்ன பிரச்சனை. இதேபோல் சில சகோதரர்களும் செய்திருப்பது கண்டு உண்மையில் சந்தோசம் அடைகிறேன்.
ரொம்பவும் சந்தோசம் இக்பால்.
வஸ்ஸலாம்.
பாதிஹா எனபது அல்ஹம்தும் மற்ற சூராக்களும் தானே அதுவே உங்களுக்கு மாற்று வேதாம்மாக தெரியும்போது உங்களக்கு எதை சொல்லி புரிய வைப்பது பத்தியும் செங்கல்லும் எந்த மதம் செங்கல்லே சூளையில் கொளுதப்படும்போது அங்கே என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள் என்று யாருக்கு தெரியும் . அதனால் வீடு கட்டுவதற்கு செங்கல்லே வேண்டாம் என்பீர்களா .நெல்லை அறுவடை செய்யும்போதும் அதை பயிருடும்போதும் செய்யும் பூஜை புனஸ்காரங்களை பார்த்துவிட்டு எனக்கு சோறே வேண்டாம் என்பீர்களா சிந்திப்பீர் செயல்படுவீர்
//இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை.//
பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா போன்றவற்றை பலபேர் பின்னூட்டத்தில் பேசிவிட்டீர்கள்..ஆதலாம் எனது பின்னூட்டம் அதை சார்ந்ததல்ல..
எனது கேள்வி/கவலை "என்றுதான் இந்த சமூகம் அடுத்தவனை (அடுத்த வலைத்தளத்தை) சாடாமல் இருக்கும்? அடிக்கல்நாட்டுவிழாவைவிட அல்லாஹ்விற்கு, இறை தூதருக்கும் பிடிக்காத ஒரு செயல் இரு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் பிளவு.."இப்படி குத்திக்காட்டி,கில்லிவிட்டு உங்களுக்குள்லேயே(தளம் நிர்வாகிகளுக்குள்) பிளவை உண்டுபன்னிக்கொள்ளும் இசுலாமியர்களின் எண்ணம் இருக்கும்வரை ஊடகத்துறையில் நம்மால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பது என் ஆணித்தனமான நம்பிக்கை(அல்லாஹ் நாடினால் மாறும்)..
நமதூர் இயக்கங்களுக்கும், நமதூர் இணையதளங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பது நான் காணும் கசப்பான உண்மை.
அதிரை நிருபர் இணைய தளம் பல விசயங்களை அலசி ஆராய்கிறது.பாராட்டப் பட வேண்டியது.
ஆனால் நமதூரில் கட்டப் பட்டுள்ள, கட்டிக் கொண்டு இருக்கின்ற பல வீடுகள்,இங்கே பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கும் பலரின் வீடுகளும் பாத்திஹா ஓதி அடிக்கல் நாட்டி கட்டப் பட்டுள்ளதை மறுக்க முடியுமா? விளக்கம் அளித்த ஒரு சிலரைத் தவிர.
அதனால் மார்க்கத்திற்கு புறம்பான முறையில் அடிக்கல் நாட்டு(உங்கள் பாஷையில் பூமி பூஜை)நடத்தி கட்டி வாழும் வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டி வாழ எத்தனை பேர் தயார்? மார்க்கத்திற்காக இந்த தியாகத்தையும் செய்ய தயாராக யாரெல்லாம் இருக்கிரீர்கள்?
பல காலமாக கண்முன்னே நடைபெறும் இந்த சடங்குகளை மார்க்கத்துக்கு விரோதமான எந்த ஒரு சம்பவத்தையும் வன்மையாக கண்டிக்கும் அதிரை நிருபர் இணைய தளம் இத்தனை நாட்களாக சும்மா பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, தக்வா பள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டப் பட்டவுடன் சுருட்டி வாரிக் கொண்டு எழுந்ததுதான் புரியவில்லை.
இந்த கருத்து இந்த இணைய தளத்தை குற்றம் சாட்டவல்ல.. மார்க்கத்திற்கு புறம்பான காரியம் எங்கு நடந்தாளும் அது எப்போது நடந்தாலும் உங்கள் வீடாக இருந்தாலும் உடனே போட்டோ பிடித்து இங்கே போட்டு அநீதியை எதிர்க்க வேண்டும் என்பதெ என் வேண்டுகோள்.
யாரோ ஒருவர் செய்தால் மட்டும் அதை உதாரணமாக காட்டி அநீதியை எதிர்த்துவிட்டோம் என்று தப்பித்துக் கொள்வது ஊடக தர்மம் அல்ல
அதிரை பி பி சி என்றொரு அதிரையின் இணையதளம் அன்பு சகோதரர் துடிப்பான நிருபர் முஹம்மத் என்ன ஆனார் .பி பி சி என்றால் இப்போது லண்டன் பி பி சி தான் தெரியும் . இப்போது அதிரை பி பி சி யை லண்டன் மிசியத்தில் தேடவேண்டும் போல
தத்தமது சொந்த வீடுகள் கட்டும்போது இவ்வாறான தவறான செயல்கள் செய்தால் அவ்வளவு பிரபலமாகாது, ஆனால் ஒரு பொது இடத்தில் பொது வியாபார நோக்கில் கட்டப்படும் கட்டிடம் ஊர் மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடையும். இவ்வாறான காரியங்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழிப்படுத்துவானாகவும் ஆமீன்
Meerashah Rafia சொன்னது…
//
எனது கேள்வி/கவலை "என்றுதான் இந்த சமூகம் அடுத்தவனை (அடுத்த வலைத்தளத்தை) சாடாமல் இருக்கும்? அடிக்கல்நாட்டுவிழாவைவிட அல்லாஹ்விற்கு, இறை தூதருக்கும் பிடிக்காத ஒரு செயல் இரு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் பிளவு.."இப்படி குத்திக்காட்டி,கில்லிவிட்டு உங்களுக்குள்லேயே(தளம் நிர்வாகிகளுக்குள்) பிளவை உண்டுபன்னிக்கொள்ளும் இசுலாமியர்களின் எண்ணம் இருக்கும்வரை ஊடகத்துறையில் நம்மால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பது என் ஆணித்தனமான நம்பிக்கை(அல்லாஹ் நாடினால் மாறும்)..
நமதூர் இயக்கங்களுக்கும், நமதூர் இணையதளங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பது நான் காணும் கசப்பான உண்மை. //
Assalamu Alaikkum,
Dear brothers and sisters,
I have been monitoring several blogs from brothers of Adirampattinam.
Brother Mr. Meerasha's observation is generally true.
An individual or an organization is respected and valued, based on their good intentions, characters, originality, their capabilities and above all their pure God consciousness - God Almighty is seeing all our thoughts and actions.
An individual or an organization will sure loose their business one who is trying highlighting(contrasting) himself by degrading and defaming others. They cannot survive in the long run. Because they are not truly capable.
May Allah show us the straight path.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இது போன்ற பூமி பூஜை அப்பட்டமான பித்அத் என்று தெரிந்தும் கூட அதை திசை திருப்ப முயற்சி செய்வது வேதனையை தருகிறது.
இருபடங்களிலும் உள்ள வித்தியாசம் ஒரேமாதிரியே தவிர இதை இடுவதினால் தப்பெதுமில்லை என்பது நன்றாக தெரிகிறது. நோக்கம் ஒன்றுதான் நல்லபடியாக கட்டிடம் கட்டிமுடிக்க வேண்டும் மற்றும் வியாபாரம் பெருக வேண்டும் என்பதினால் மட்டுமே.
இதே போன்று தான் கந்தூரி மற்றும் திருவிழா மேலும் சந்தனக்கூடு மற்றும் தேர் இவைகளை ஒப்பிட்டு இணையத்தில் பார்க்க நேர்ந்தது அதே போன்று தான் இதுவும் அனைத்து ஒப்பிட்டளுக்கும் நோக்கம் ஒன்று தான் இதற்க்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை .
நம் முன்னோர்கள் செய்த தவறின் செயல்பாடுகள் வாழையடி வாழையாக வளர்ந்துக்கொண்டே போகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டுமே ஒழிய இதற்க்கு அதரவாக பேசுவது மடமையே.
அ.நி தளம் எந்த தளத்தையும் சாடி பதிவிடவில்லை இதுபோன்றொரு பித்அத் தன் பதிவினில் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் பதிவிட்டதே ஒழிய வேறொரு உள்நோக்கமும் ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
அவர்கள் மறுமையை விட, இவ்வுலக வாழ்க்கையை விரும்பினார்கள் என்பதே இதற்குக் காரணம். (தன்னை) மறுக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.1
Al-quran 16.107.
சத்திய கொள்கையில் இருந்து மரணிக்கும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏற்படுத்தி மறுமையில் வெற்றி அடையும் கூட்டத்தில் நம்மையும் சேர்ப்பானாக...ஆமின்!
Ibrahim சொன்னது…
//பாதிஹா எனபது அல்ஹம்தும் மற்ற சூராக்களும் தானே அதுவே உங்களுக்கு மாற்று வேதாம்மாக தெரியும்போது உங்களக்கு எதை சொல்லி புரிய வைப்பது பத்தியும் செங்கல்லும் எந்த மதம் செங்கல்லே சூளையில் கொளுதப்படும்போது அங்கே என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள் என்று யாருக்கு தெரியும் . அதனால் வீடு கட்டுவதற்கு செங்கல்லே வேண்டாம் என்பீர்களா .நெல்லை அறுவடை செய்யும்போதும் அதை பயிருடும்போதும் செய்யும் பூஜை புனஸ்காரங்களை பார்த்துவிட்டு எனக்கு சோறே வேண்டாம் என்பீர்களா சிந்திப்பீர் செயல்படுவீர் //
எதுவாகினும் தீர்ப்பு வழங்கும் உரிமையும் அதிகாரமும் இறைவனிடத்திலே உள்ளது.
பூமி பூஜை மட்டுமல்ல பூமி பாத்திஹாவும் அதற்கு ஒரு முஸ்லிம் புரோகிதர் முதல் கல்லை எடுத்து வைப்பதும் மார்க்கத்தில் இல்லாத நூதனம்(பித் அத்) அத்தகைய செயலை தனி நபர் வீடு கட்டும் போது செய்தாலும் கண்டிக்கப்படவேண்டும் அதனையே மஸ்ஜிதுக்கு சொந்தமான இடத்தில் மஸ்ஜித் நிர்வாகமே செய்வதால்தான் விவாதப்பொருளாகி விடுகிறது.
இச்செயலை ஆதரித்து சப்பைகட்டு கட்டுபவர்கள் அகிலத்தின் முன்மாதிரி நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையில் இவ்வாறு செய்ததாக ஆதாரம் காட்ட கடமைப்பட்டுள்ளார்கள்.பாலில் ஒரு துளி விஷம் கலப்பதுபோல் தான் மாற்றுமத கலாச்சாரத்தில் சிறு செயலை மார்க்கமாக செய்வதும் ஆகும்.
//முஸ்லீம் கொத்தநாரை அவரிடத்தில் அவர் பலம் பிரயோகித்து பூமி பூஜை செய்யச் சொன்னால்...//
//பலம் கொண்ட மாற்றுமத முதலாளி முஸ்லிம் கொத்தநாரை பூமி பூஜை செய்யச்சொன்னால்...//
முஸ்லிம் கொத்தனார் ஈமானில் உறுதி கொண்டவராக இருந்தால் பூஜை செய்ய மறுத்து வேலையை விடுவார். இணைவைத்தலில் சமரசம் செய்ய முடியாது. ரிஜ்க் தருபவன் அல்லாஹ் ஒருவனே!
படங்களை பார்க்கும்போதே சில கே.ஜி பிள்ளைகளுக்கும் புரிந்துவிடும் இது மார்க்க வரம்பை மீறியது என்று...இதற்க்காக புகழ்பெற்ற மதராஸாவில்சேர்ந்து 4 வருடங்கள் படித்துவிட்டு வரத்தேவையில்லை.....மற்றும் இது ஒன்றும் drone technology அல்ல..அந்த அளவிற்க்கு தீர விசாரித்துவிட்டு எழுதுவதற்க்கு நிற்க சகோதர“ வலைத்தளம்” என்ற ஒரு வார்த்தையை உபோயிகித்தற்க்காக அதில் ஆத்திரம் கொண்டு ஒரு மார்க்கத்தின் “பித் அத்” தான செயலுக்கு சில படித்த/பண்புள்ளவர்கள் வாக்காலத்து வாங்குவது வியப்புகுறியதாக உள்ளது....நடந்து பூமி பூஜை இல்லை என்று செய்தவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்...ஆனால் இதனை பார்க்கும் குழந்தைகள்கூட அதனை இது ஒரு பிற மத சம்பரதாயம் என்று தெளிவாக கூறும்...வானத்தை தொடும் கட்டிடங்கள் கட்டும் அரபு நாடுகளில் இது போன்ற பூஜைகளோ அல்லது அடிக்கல் நாட்டு விழாக்களோ நடந்தாக தெரியவில்லை
குடும்பிக்கு பதில் தலைப்பாகை அணிந்துகொண்டு யார் இந்த மாதிரியான செயலைச் செய்தாலும் அதனை அ.நி சாடும்...அதற்க்கு பின்புறம் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் ஒரு கூட்டம் பலமாக நிற்க்கும்
நலம்தான் சகோ குலாம். தங்களின் நலம் சிறக்கவும் என் துஆ.
நேரிடையாக விளங்கிக்கொள்ள அல்லது விளங்க வைக்க இயலாதவற்றின் எதிர்மறையை நிரூபிப்பது பெளதிக நியதி. கற்றது அதுவே; அதனால் நிற்க முயலுகிறேன் அதற்குத் தக.
என் முதல் பின்னூட்டத்தின் முதல் பத்தியிலேயே என் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டேன், ‘நானும் உங்காள்தான்’ என்று.
எனவே, ‘ஃபாத்திஹாவா பூமி பூஜையா’வுக்குள் போகாதீர்கள். நம்பிக்கையின் அடிப்படையிலான கிரியைப்பற்றி மட்டுமே பேசுங்கள்.
மாற்றுமத முதலாளி தன் மத நம்பிக்கையின் அடிப்படையில், தன் நிலம், தன் காசு என்னும் இருமாப்பில் முஸ்லிம் கொத்தநாரை பூமி பூஜை செய்யச் சொன்னால் அது எப்படி திணிப்போ; அதைப்போலவே முஸ்லிம் முதலாளி தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றுமதக் கொத்தநாரை அவன் தன் நம்பிக்கையின் கிரியையாகிய பூமி பூஜை செய்வதைத் தடுப்பதும் திணிப்புத்தான்.
என் வழி எனக்கு உன் வழி உனக்கு என்னும் இறைச்சொல்லில் முரண்படாமல்; தன் நிலமே ஆயினும் தானே பலசாளியாயினும் உன் சடங்கை நான் புறக்கணிக்கிறேன் என்று விலகிவிடுதலே மதச்சார்பற்ற நாடாக அறிவித்திருக்கும் (நடப்பில் இந்த நிலை உண்மையல்ல என்பது வேறு விஷயம்) நம் நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதே என் கருத்து.
“எந்த விதமான மார்க்க புரிதல்” என்னும் நிதானமற்ற கேள்விக்கு நிதானமற்று பதிலிறுத்துதல் இயற்கைதானே சகோ.
எந்தவிதமான மார்க்க புரிதல் என்பதற்கு அடைப்புக்குறிக்குள் உள்ள உரையாடல் சான்று. படிக்க வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. ஒரு குறிப்பு போல இணைப்பது என் கடமை.
(சபீர்: என்ன சகோ குலாம். பரீட்சைக்குப் படித்தாயிற்றா?
குலாம்: புத்தகத்தைத் தொடவே இல்லை. எல்லாம் அல்லாஹ் பார்த்துக்குவான்.
சபீர்: முதலில் நல்லா படியுங்கள். பிறகு அல்லாஹ் உன் தவக்கல் என்று பரீட்சைக்குப் போங்கள். படிக்காமலேயே அல்லாஹ்வை இழுப்பது படிப்பதிலிருந்தும் தப்பிக்க மார்க்கத்தை பிரயோகிக்கும் தவறான யுக்தி அல்லவா?)
ஆஸ்பத்திரி தெருவில் இருக்கும் மொளவி இப்றாஹும் அவர்கள் ஹைதர் ஆலிமை விரட்டுவதில்தான் குறியக இருக்கிறார்? இது மாதிரியன பூமி பூஜைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார்?
இதற்கு மேல் விவாதம் வேண்டாம். இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற பித்அத்தான காரியங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுக்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாக இருக்கின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சபீர்,
//மாற்றுமத முதலாளி தன் மத நம்பிக்கையின் அடிப்படையில், தன் நிலம், தன் காசு என்னும் இருமாப்பில் முஸ்லிம் கொத்தநாரை பூமி பூஜை செய்யச் சொன்னால்....//
‘’செய்யச் சொன்னால்’’... என்றே கொண்டு செல்கிறீர்.
நான் சொல்வது முஸ்லிமுக்கு சொந்தமான இடத்தில் இந்து கொத்தனார் பூஜை செய்வதை ‘’தடுப்பது’’.
ஒரு முஸ்லிம் கொத்தனார் செய்ய முனைவதை ஒரு இந்து முதலாளி தடுத்தால் அது அந்த இந்து முதலாளியின் உரிமை.
எப்படி ஒரு முஸ்லிம் முதலாளி இந்து கொத்தனார் செய்ய முனைவதை தடுக்க உரிமை பெற்று இருக்கிறாரோ அதுபோல். - இது தான் இந்த தொடர் பின்னூட்ட 'கரு'.
நீங்கள் எதிர் மறையாகவே புரிந்து கொண்டு கரு எதுவோ அதை விட்டு எதிர் திசையில் நகர்த்தி செல்லவே முனைகிறீர். இது விவாத அழகல்ல. இப்படியே நீங்கள் எதிர் திசையிலேயே தான் செல்வேன் என்று அடம் பிடித்தால் அதற்கு நானல்ல நீங்கள் தனியாகவே செல்லுங்கள்.
மேலும், நாம் புரியாத மிகவும் கடினமான Pythagoras theorem பற்றி எல்லாம் உரையாடிக்கொண்டிருக்கவில்லை எதுவும் புரியாமல் போகிறதற்கு. இங்கு பின்னூட்ட மிட்ட சில சகோதரர்களுக்கெல்லாம் நண்பர் இக்பால் உட்பட புரிந்து அதன்படி அவர்களும் அவர்கள் வீட்டில் நடந்து கொண்ட ஒரு சாதாரண விசயம் பற்றி தான் உரையாடிக்கொண்டிறோம்.
நீங்கள் எதிர்மறையாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மேலும், அடைப்புக்குறிக்குள் ஒரு கற்பனை உரையாடலை தந்து இருக்குறீர். அது விதி சம்பத்தப்பட்டது சகோ. சபீர்.
கவனம் சகோ. அங்கு இட்டுச்செல்ல வேணாம்.
மாட்டை கட்டிப்போட்டு அல்லாஹ்வின் மீது தவக்கல் வைக்கச்சொன்ன ரசூல் (ஸல்) அவர்களின் ஏவல் பற்றியெல்லாம் கேள்விபட்டிருப்பீர்.
இந்த விதிபற்றியா நாம் இங்கு விவாதிக்கறோம். இதற்கும் நானல்ல.
மற்றபடி, நீங்கள் வல்ல நாயனின் ரஹ்மத்தையும் பரக்கத்தையும் பெற்று நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அவனிடமே பிரார்த்திக்கிறேன்.
வஸ்ஸலாம்.
நேற்றைய தினம் தக்வா பள்ளியில் சபேபராத் என்ற பெயரில் நடைபெற்ற பித்அத் நிகழ்ச்சியை நமது ஊர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதே இணைய தளம் தான் தவ்ஹீத் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டு வருகின்றது.இது என்ன நம்பர் ஒன் பச்சோந்தி இணைய தளமாக இருக்கின்றது.
நம்ம ஊர் முஸ்லியாரைக்கொண்டோ அல்லது ஹைதர் அலி ஆலிமைக்கொண்டோ இயங்கவில்லை. ஆயிரம் சங்கடங்களுக்கிடையே, காஃபிர்களின் சதித்திட்டங்களுக்கிடையே, பாஸிச சக்திகளின் சூட்சிகளுக்கிடையே, பல அநியாய, அக்கிரமங்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது அரங்கேறினாலும் ஒரு நிராயுதபாணியாய் இந்த வானத்தையும், பூமிமையும் படைத்து பரிபாலிக்கும் அந்த வல்லோன் அல்லாஹ்வின் கொஞ்சநஞ்ச கருணையாலும், கிருபையாலும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே எந்த ஆலிமையும் தூக்கிப்பிடிப்பதனாலோ அல்லது இகழ்ந்து பேசுவதுனாலோ இஸ்லாத்திற்கு எவ்வித சாதகமும், பாதகமும் வந்துவிடப்போவதில்லை. எனவே இந்த விவாதக்களத்தை பின்னூட்டங்கள் மூலம் இழுத்துக்கொண்டே செல்லாமல் இத்தோடு முடித்துக்கொள்வோம் அல்லாஹ்வுக்காக. நாம் யாருடைய நெஞ்சையும் பிழந்து பார்த்து அதற்குள் இருக்கும் எண்ண ஓட்டங்களை அறியமாட்டோம் அந்த அல்லாஹ்வை தவிர (நல்லநாளு, பெரியநாளு வருது யான் ஊரு வதுவாப்பேரு வாங்கனும்?????)
தம்பி இர்ஃபான் & சகோ.யாசர். தொடக்கம் முதலே நான் சொல்வது என்னவென்றால் நடந்தது பூமிபூசை அல்ல என்பதே. ஏனெனில் பூமிபூசைக்கும் அங்கு நடந்தவற்றுக்கும் தொடர்பு செங்கலும். ஊதுபத்தியும்தான். தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது தவறான தகவல் என்பதே என் வாதமன்றி. அத்தகைய சடங்குக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளது என்பதல்ல. தயவுசெய்து இதைப்புரிந்து கொண்டு திசைதிருப்பியது யாரென்று அறியவும். (இன்னும் எத்தனைமுறைதா இதைச் சொல்லிக்கொண்டிக்கனுமோ:)
யான் நெய்னா. எம்ஜிஆர் தொப்பி போட்டிருந்ததாலும். திருவள்ளுவர் தாடி வைத்திருந்ததாலும். பாரதியார் தலைப்பாகை அணிந்திருந்தாலும் அவர்களும் முஸ்லிம்தான்என்று சொன்னால் நியாயமா? அதுபோன்றுதான் ஊதுபத்தியும். செங்கல்லும் இருந்ததால் பூமிபூசை என்று ஒப்பிடுவதும். கழுதையை குதிரை என்று சொன்னாலாவது ஓரளவு ஒப்புக்கலாம். ஆட்டைக் கழுதையாகச் சொல்வதை எப்படி ஒப்புக்க முடியும்? ;)
சகோ.குலாம் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் வருகையால், அதிரை நிருபர் மேலும் மெருகேறுகின்றது. அஹ்லன் வஸஹ்லன்!
1990களில் பெரியவர் K.M.இக்பால் மதனீ அவர்களுடன் துபையில் நாமிருவரும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில் இணைந்து பணியாற்றிய இனிய நினைவுகளை மறக்கத்தான் முடியுமா? அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்து அளித்த பெரும் பாக்கியமல்லவா அது! அல்ஹம்துலில்லாஹ்!
எனது கோரிக்கை என்னவென்றால், தாங்களும் சமீபகாலத்தில் தினமும் பின்னூட்டமிட்டுவரும் அருமை நண்பன் அதிரை மன்ஸூர், அதுபோல் நண்பன் அப்துல் காதிர் ஆகியோரும் உங்களால் இயன்ற பங்களிப்பை சிறந்த எழுத்துக்கள் மூலம் அ.நி.யில் வெளிப்படுத்த வெண்டும் என்று விரும்புகின்றேன்! முயற்சியுங்கள், இன்ஷா அல்லாஹ்!
இது நாம் நமக்குள்ளேயே சேற்றை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதாகவே தெரிகிறது.
இந்த சடங்கை செய்தவர்கள் நம்மில் ஒரு சகோதரர்களே. அவர்களிடம் இது போன்ற சடங்குகள் மார்க்கத்தில் இல்லாதது என்று கூறி அதற்கான ஆதாரங்களை காட்டி அவர்களுக்கு விளக்க மிகச்சிறந்த மார்க்க அறிஞர் அவசியம். அரைகுறையாய் மார்க்கத்தை தெரிந்துகொண்டு போய் அவர்களிடம் பேசினால் முகம் தொங்கிப் போய்தான் வரவேண்டும்.
இதுபோன்ற விசயங்களை தனி மெயிலில் பேசி தீர்வு ஏற்படுத்தனுமே ஒழிய பொது மேடையில் நமக்குள்ளேயே சேற்றை வாரி இறைத்துக் கொள்வதால் மிஞ்சுவது வீண் பகையே.
என்னதான் இதுபோன்ற சடங்குகள் இஸ்லாத்தில் மறுக்கப் பட்டது என்று ஒரு சிலருக்கு தெரிந்தாலும் இதுபோன்ற பகிரங்க எதிர்ப்புகளினால் மேலதிகமாக செயல்பட்டு முகம் சுழிக்க வைக்கிறார்கள். கந்தூரி போன்ற அனாச்சாரங்களிலேயே இது வெளிப் பட்டது.
இதுபோன்ற பித் அத்துகளை பகிரங்கமாக எதிர்க்க நாம் ஒன்றும் நபிமார்களோ.சஹாபாக்களோ அல்ல சாதாரண மனிதர்கள். இவற்றை சுமூகமாகவும் நாம் செய்யும் துஆக்கள் மூலமாகவும் மட்டுமே தீர்க்க முடியும்.
இனியாவது பொதுவில் போட்டு நாரடிப்பதை நிருத்துவோம். சகோதரத்துவம் பேணுவோம்.
சகோதரர் பரீத் அவர்கள் சரியாக சொல்லியுள்ளார்கள் நானும் அவர்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. இக்பால்,
ஜஸாகல்லாஹ் ஹைரா.
பெரிய வார்த்தையெல்லாம் போட்டிருக்கிறீர்கள். அதற்கு நான் பொருத்தமானவன் அல்ல, அது உங்கள் பெருந்தன்மை இக்பால்.
ஆனால், இப்படிச் சொல்வேன் பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்று, பல வருடங்கள் ஜமீல் காகா அவர்களுடன் இருந்தவன் என்கின்ற அடிப்படையில்.
மலரும் நினைவுகள் என்றும் பசுமையானவை. அந்த மாதிரியான வாய்ப்புகளை மேலும் தர வல்ல நாயனிடம் துவா செய்வோம்.
வஸ்ஸலாம்.
அந்த இணைய தளங்கள் இந்த செய்தியை பொதுவில் போடாமல் இருந்திருந்தால், கிட்டத்தட்ட பூமி பூஜை ரேஞ்சுக்கு நடத்தப்பட்ட அந்த நிகழ்வு, அது தவறு என சுட்டிக்காட்ட முடியாமல் மீண்டும் இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
செய்தியை பொதுவில் போட்டு உடைப்பதன் மூலம் இது தவறு அல்லது சர்ச்சைக்குரியது என்றாவது பலரால் அறிய வாய்ப்பு கிடைக்கும்.
குறைந்த பட்சம் இது போன்றதை செய்ய அச்ச உணர்வாவது நிச்சயம் வரும்.
சகோ.ஃபரீத் மற்றும் அவர் கருத்தில் உடன்படும் சகோ.லியாக்கத் அலி அவர்களே
இந்த பூமி பாத்திஹா சடங்கை ஏற்று நடத்திய தலைமை புரோகிதர் கேரளத்துக்காரர்தான் நமதூரில் நடக்கும் அனைத்து வழிகேடுகள், கந்தூரிகளுக்கும் காரணமாக இருக்கிறார்.சில பணக்காரர்களையும் ஆளும் வர்க்கத்தினரையும் தன் பிடியில் வைத்துக்கொண்டு 40 வருடங்களாக அனாச்சாரங்களுக்கு துணை போவதால் உள்ளூர் இளம் ஆலிம்கள்கூட இவருக்கு எதிராக பேச பயப்படுகிறார்கள்.வெளியூரிலிருந்து வந்து சத்தியத்தை சொல்லி வருவதால் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாக பொய்வழக்கு போடப்பட்டு கோர்ட்டுக்கு அலையவிட்டு விட்டார்கள்.
ஏகத்துவ இளைஞர்கள் புரோகிதரிடம் அவரின் செயல்களுக்கு குர் ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்க முயன்றால்,இன்றுவரை நழுவிக்கொண்டுதான் இருக்கிறார். அவர் அப்படி அவர்களை சந்தித்தால் அவரின் குட்டு வெளிப்பட்டு அவர் முகம்தான் தொங்கிப் போகும்.காஸ்லியான அவரின் புரோகிதத் தொழில் படுத்துவிடும்.
இந்த பணக்காரர்களின் வீடு, தொழில் நிறுவனங்களில் இந்த குட்டி ஹஜரத் மூலம் நடைபெற்று வரும் அனாச்சாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் அனைத்தும் விரைவில் வெளிவரும்
//இதுபோன்ற பித் அத்துகளை பகிரங்கமாக எதிர்க்க நாம் ஒன்றும் நபிமார்களோ.சஹாபாக்களோ அல்ல சாதாரண மனிதர்கள். இவற்றை சுமூகமாகவும் நாம் செய்யும் துஆக்கள் மூலமாகவும் மட்டுமே தீர்க்க முடியும்.//
நன்மையை ஏவி தீமையை தடுங்கள் என்ற என்ற குர் ஆன் வசனங்கள் நபிமார்கள் ஸஹாபாக்களுக்கு மட்டும் தானா? நமக்கில்லையா சகோதரரே?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு...
இங்கு பதிக்கப்பட்ட பதிவின் நோக்கம் மிகத் தெளிவக விளக்கப்பட்டு இருக்கிறது...
இஸ்லாத்தில் இல்லாத புதினங்களை (பித்-அத்), மற்றும் பிறமத கலாச்சார, அல்லது அவர்களின் வழிபாட்டுச் சாயல்கள் துளியேனும் நம் மார்க்க செயல்களில் அல்லது அன்றாட நிகழ்வுகளில் கலந்து விட்டால் கண்டிக்கப்பட வேண்டியதும் அடியோடு தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.
விஷம் என்று அறிந்தும் அதில் ஒரு துளிதானே என்று எந்த ஒரு சாமனியானாலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தூய மார்க்கத்தில் எதனையும் எவ்வகையிலும் கலக்க அனுமதிக்க கூடாது...
இது அனைவருக்கும் பொருந்தும்.
கருத்துகளை ஆரோக்கியமாக பதிந்த அனைத்து சகோதரர்களுக்கும் ஜஸாக்கலலஹ் ஹைர்...
இனி இந்தப் பதிவுக்கான கருத்தாடல் நிறுத்தப்படுகிறது !
அதிரைநிருபர் பதிப்பகம்
Post a Comment