Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகள் !? :: விவாதக்களம் 30

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2013 | , , , ,

குழந்தைப் பருவத்தில் பள்ளியில் / தெருவில் விளையாடி விட்டு கரைபடிந்த வேட்டியோடும் அழுக்கடைந்த பேன்டோடும் வீட்டுக்குள் நுழைந்தால் நிறையபேருக்கு விழுவது காரமான திட்டு, அதில் எங்கிருந்தோ ஒரு மூலையிலிருந்து குரல் வரும் "யாவ்வுள புள்ளைய திட்டுறே இப்போதான் வெளியிலேயிருந்து வர்ரான், தம்பி நீ போயீ கைகால் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வாம்மா" இப்படியாக கனிவான இதமான குரல் ஒன்று ஒலிக்கும்.

அவ்வாறான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ? "சீக்கிரம் சாப்புடு, உம்மா வந்திடப் போறா / வாப்பா வந்திடப் போறாங்க" என்று அறக்க பறக்க சாப்பிட வைக்கும் பெரிசுகளின் மூச்சுக் காற்று உங்களின் மீது நிச்சயம் பட்டிருக்கனுமே ! அந்த சுகமான சூழல் திரும்பிடாதா என்று ஏங்க வைத்திருக்கனுமே !?

"புள்ள வந்திருக்கா ஏதாவது கொண்டுவாவுள" என்று குரல் கொடுத்து விட்டு அப்படியே நம்மை வாரிச் சுருட்டும் வாப்பிச்சோ / பெரியம்மாவோ அல்லது அப்பாக்களோ அமையப் பெற்றவர்கள் நம்மில் ஏராளம் இருந்தாலும், இந்தச் சூழல் நமது குழந்தைகளுக்கும் கிடைக்கப் பெறுகிறதா ? இன்றையச் சூழலில் என்று சிந்திக்கவே தூண்டுகிறது.

ஆண் / பெண் குழந்தைகளாகட்டும், வீட்டில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நிச்சயம் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள், அதில் அவரவர் வீட்டுச் சூழலின் இறுக்கம் / தளர்ச்சி இவைகளைப் பொறுத்தே அமைகிறது.

நீங்கள் யாருடைய செல்லப் பிள்ளை !? அப்படின்னா உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகளாக வலம் வருகிறார்கள் !?

வாருங்களேன் நெருக்கமாகவே விவாதிக்கலாம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

30 Responses So Far:

sabeer.abushahruk said...

வேறாரு?
வாப்புச்சாதான்!

வாப்புச்சா!

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!

வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!

வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்

வாப்பா  மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்

சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து 
எனக்கு மட்டும் கொட்டும்

முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்

புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்

சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத் 
தேடிவரும் வாப்புச்சா

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!

Abdul Razik said...

எனக்கு வாப்பா, என் மகனுக்கு வேறாரு?
வாப்புச்சாதான்!

வேதனை வந்தவனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம் என் பிள்ளைக்கு

சபீர் காக்கா எது சம்மந்தப்பட்ட விவாதக்களமாக இருந்தாலும் எப்படி கவிதை அருவியா கொட்டுது? இதன் இரகசியம் என்ன?


نتائج الاعداية بسوريا said...

//காக்கா எது சம்மந்தப்பட்ட விவாதக்களமாக இருந்தாலும் எப்படி கவிதை அருவியா கொட்டுது? இதன் இரகசியம் என்ன? //

ராஜிக்,

நான் (உன் மாமா ) சொல்கின்றேன், கவிதை என்பது, இன்று நேற்றல்ல ,
இளம் வயதிலேயே அவனில் ஊறியது, இது உனக்கு தெரியாது.

எந்த சூழ்நிளையைச்சொன்னாலும் , உடன் கவியால் பதில் தருவான், நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு கவி எழுது என்றாலும் எழுதுவான். இன்று நேற்றல்ல, அவன் இளம் வயதிலிருந்தே.

அபு ஆசிப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எத்தனை தடவை கேட்டாலும் அதே பதில்தான்...

பெரியப்பாவின் செல்லப் பிள்ளையான நான் அப்பாவின் வாப்பிச்சாவின் உள்ளம் முழுவதும் ஆளுமையில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும் !

கேட்டது மட்டுமா கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும், கற்றதும் ஏராளம்.

சிறுவயதில் ஃபேமிலி கார்டாக கண்டிப்பதற்கு (அடி கொடுக்க) மட்டுமே இரண்டு அப்பாக்கள் (மர்ஹூம் LMS அப்துல் ஜப்பார் அப்பா, மற்றும் LMS அப்துல் சமது அப்பா) இருப்பார்கள் ஆனால் அவர்கள் என்னிடம் நெருங்க மாட்டார்கள்... வாப்பிச்சாவின் கெடுபிடி இருக்கும் அங்கே ! :)

சிலநேரங்களில் அதிகாலை எழுந்ததும் வலது கையில் இறுக்கமாக இருக்கும் உற்று நோக்கினால் கறுப்பு கயிறு கட்டியிருக்கும் "கண்ணு படாம இருக்கதாம்மா" ன்னு சொல்லிட்டு வாப்பிச்சா கெஞ்சும் பார்வையோடு பார்க்கும்போது அமைதியாக அங்கிருந்து நகர்ந்ததும் கத்தியை கொண்டு அறுத்துப் போட்டுட்டு செல்வதும் மறக்க முடியாத சிறுபிள்ளைப் பருவம் !

கவிக் காக்காவின் கவிதை எல்லோருக்குமே பொருந்தும் ! :)

எங்கள் குழந்தைகளுக்கும் உம்மாவீட்டு அப்பாக்கள்(தான்) அதோடு பெரியம்மா(க்களின்) கட்டுண்ட கரிசனம் மாஷா அல்லாஹ் !

Abdul Razik said...

//நான் (உன் மாமா ) சொல்கின்றேன், கவிதை என்பது, இன்று நேற்றல்ல
இளம் வயதிலேயே அவனில் ஊறியது, இது உனக்கு தெரியாது.//

சபீர் காக்காவை வளைத்தளத்தில் உங்களுடன் இணைய வைத்தது என் மூலமே, இருந்தாலும் நீங்கள் இளம் வயதிலிருந்தே பழகி இருப்பதால் உங்களுக்கு தெரிகிறது. மென்மேலும் புதுக்கவிதைகள் உருவாக்கி நம்மை ரசிக்க வைக்க வாழ்த்துக்கள்.

நீங்க, மேலே குறிப்பிட்ட Subject பற்றி ஒன்றும் எழுவில்லையே? உங்க உம்மா , வாப்பாவை எனக்கு தெரியும்...வாப்ச்சா எப்படி? உங்க கூட்டாளி வாப்ச்சா , வாப்ச்சானு எழுதி இருக்காஹலே?

Abdul Razik
Dubai

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

A debate plate form well organized here for a mind touching nice matter. I have seen in an article that a female baby is showing it's pure attachment to the father more than the mother. If father has gone away from her for any purposes, she will be wandering with waiting, I mean looking for the father eagerly without exposing any proper words until he comes back to the home. Always the female childs are in need of more protection and consolation from the father with pure love.

We ought to love our beloved parents as well as our life parter and children by heart not by force.

This is not a subject to conclude neither in an article nor a debate. It's the boundary that is spreaded without any line.

We love them all without any line. Our Islam also insists it in it's holy book Qur'an in several times and in several places.


sabeer.abushahruk said...

காதரு,
அப்பா வாப்புச்சா போன்ற வயதானவர்களைப் பற்றி பேசும் இடத்தில் என்னைப் பற்றி அதிகம் பேசாதே.   என் இளமை கேள்விக்குறியாவதும் என் இமேஜ் (?) பாதிக்கப் படுவதும் நல்லதல்ல.  மீறிப் பேசினால் கீழ்க்கண்ட வார்த்தைகளால் உன்னைத் திட்ட வேண்டி வரும்:
ஷாம்ப்பூ
ஹேர் க்ரீம்
சீப்பு
ட்டவல்
ஹேர் கட்டிங் சலூன்
 

Abdul Razik said...

சபீர் காக்கா எவ்வளவுதான் கூட்டாளியா இருந்தாலும் சலூன் கடையில இருக்குற பொருள்களை compare செய்து மாமவ திட்டுறது அவ்வளவு நல்லா இல்ல ஆமா...............!


//If father has gone away for any purposes, she will be wondering to see him and too wondering to get something from him while he come back // You are right brother Naina....

இருந்தாலும் ,நானும் எவ்வளவோ அதிரை நிருபர்ல வாக்குவாதம் செஞ்சி கமெண்ட்ஸ் Englishல ஒரு சிலர் எழுதுவது தப்பல்லனு சொல்லி இருந்தேன், என்னை தமிழுக்கு மாற்றிவிட்டு, நல்ல தமிழ் எழுதுரவங்கெள்ளாம் Englishல கமெண்ட் எழுதுராங்க, ஒறு பக்கம் ரொம்ப பொறாமையாகவும் மறு பக்கம் ரொம்ப happiyaகவும் இருக்கு. I am really wondering to expect some valuable articles or poems from Mr. Ameen like “Dare to Dream”.

Congrats Brother Naina....

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

சபீர் காக்கா எவ்வளவுதான் கூட்டாளியா இருந்தாலும் சலூன் கடையில இருக்குற பொருள்களை சொம்பரெ செய்து மாமவ திட்டுறது அவ்வளவு நல்லா இல்ல ஆமா...............!


ஹலோ,
நீங்க சொல்ற மாதிரி அல்ல. இது மேட்டரே வேற.

அந்தப் பொருட்களெல்லாம் யூஸ் பண்ண முடியலயேன்னு கோவம் வர்ர அளவுக்கு "கொட்டிப்போச்சு".

வெளங்குதா? நான் இதெல்லாம் அடிக்கடி யூஸ் பண்றேன்ல!!!

Unknown said...

Assalamu Alaikkum

I am ranked as a best son in the world of my mother, moulded by her unconditioned love, encouragement, and duas to be an achiever and humanitarian. So, I guess I am mother's beloved son.

I am unconditioned loving and friendly father for my kids. But kids take advantage of it, expecting freedom. So, little strictness is necessary with unconditional bond and affection for our children. However, I guess that my children are more fond of me.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Naina Mohammed

//female baby is showing it's pure attachment to the father more than the mother//

Your writings and concepts are true and the opposite is also true.

Dear brother Mr. Abdul Razik,

Thanks a lot for unconditional encouragement, valuing my ideas and writings. Sooner or later I will post my articles or poems. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abdul Razik,

//என்னை தமிழுக்கு மாற்றிவிட்டு, நல்ல தமிழ் எழுதுரவங்கெள்ளாம் Englishல கமெண்ட் எழுதுராங்க,ஒறு பக்கம் ரொம்ப பொறாமையாகவும் மறு பக்கம் ரொம்ப happiyaகவும் இருக்கு//

I think our brothers of 'Tamil activists' are gonna become more anxious and more resistant, because your highlight shows that there are little more bit English writings started budding in Adirai Nirubar.

Thanks and regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Abdul Razik said...

சபீர் காக்கா

//ஹலோ,
நீங்க சொல்ற மாதிரி அல்ல. இது மேட்டரே வேற.

அந்தப் பொருட்களெல்லாம் யூஸ் பண்ண முடியலயேன்னு கோவம் வர்ர அளவுக்கு "கொட்டிப்போச்சு".// எனக்கும் தெரியும்..

ஆனா இங்க நீங்க தப்பு செஞ்சிட்டீங்க, இவ்வளவு திட்டு வாங்கிய அந்த அழகிய பொருட்கள் எல்லாத்தையும் நீங்க Use பன்னும்போது கொஞ்சம் கவனமா இருங்க, கோவத்துல எதாச்சும் செஞ்சிடப்போவுது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவியானாலும் பெருமிதம்
கொள்ளும் ஆங்கிலமானாலும்
சபீர் காக்கா முன் திட்டுமுட்டு
செரவடி கொள்ளும்
எம் நுனி மூக்கையும்
ஆள் காட்டி விரலையும்
ஒன்றோடொன்று பேச வைக்கும்

(ஏதோ நம்மனால ஏன்ட கவிதை (மாதிரி)

ZAKIR HUSSAIN said...

நான் என் தந்தை வழியிலும் தாய் வழியிலும் முதல் பேரப்பிள்ளை. [ தந்தையுடன் கூடப்பிறந்தவர்கள் 5 பேர் , தாயுடன் கூடப்பிறந்தவர்கள் 4 பேர் ]

அதிலும் முதல் பேரப்பிள்ளை [ ஆண்பிள்ளை என்றால் அப்போது செல்லம் அதிகம் ] ..இந்த செல்லம் கொடுத்து கெடுத்ததால் ஒரு வருடம் தாமதமாக ஸ்கூலில் சேர்த்து.

பள்ளியில் ஓதிக்கொண்டிருக்கும்போது அப்பாவுடைய செல்லத்தால் நூர் லாட்ஜ் கடையில் இடியாப்பம் / இறைச்சி ஆனம் வாங்கி கொடுத்தால் புள்ளைங்க ஒழுங்கா ஒதாமல் உருப்டாமெ போயிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் ...நான் தான்.

نتائج الاعداية بسوريا said...

என்னதான் கருத்துப்பரிமாற்றத்தின் வலையில் என் தலை சிக்கினாலும், என் ஸ்டைலே தனிதான், ( வழுக்கையிலும் ஒரு ஸ்டைல் உண்டு (கலைஞரைப்போல). அப்படி ஒன்னும் எனக்கு வழுக்கை விழுந்து விடவில்லை ,ரெண்டு சைடுளையும் இன்னும் கொஞ்சம் முடி இருக்குது.

//அப்பா வாப்புச்சா போன்ற வயதானவர்களைப் பற்றி பேசும் இடத்தில் என்னைப் பற்றி அதிகம் பேசாதே. //

ஒன்றை தெரிந்து கொள் இன்னும் நான் பேரன் பேத்தி எடுக்கவில்லை ( அது வரைக்கும் இன்னும் நான் ஒரிஜினல் தாத்தாவாக மாற ரொம்ப காலம் இருக்குது .

ஆனா நீ ..... கொஞ்சம் யோசிச்சு பேசுங்கனும் என் டுபுக்கு .......

அபு ஆசிப்.

Unknown said...

Assalamu Alaikkum


//உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகள் !? //
This question can be taken as sensitive and serious.

Sometimes, asking a child directly "Whose child are you(my child or umma's child)?" is a blunder mistake. And its a sure sign of separation or broken love of husband and wife.

Eventhough there could be conflicts between husband and wife. As a responsible father or a mother of children, he/she should avoid such addressing to children. A small crack on a child's heart would be the result. The future of child's emotional security would be broken.

Thanks and regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Yasir said...

நான் யாருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது கிடையாது...உம்மா பாசத்துடன் வைத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்....மற்ற வாப்புச்சா/உம்மாம்மா கொடுப்பினையெல்லாம் எங்களுக்கு இல்லை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் பிள்ளைகள் பெரியம்மா, அப்பா செல்லப்பிள்ளைகள்.

நான் உம்மாவின் செல்லப்பிள்ளை.

:)

Anonymous said...

குழந்தைகள் உம்மாவுடைய செல்ல பிள்ளையாகவும் ஒரு சில குழந்தைகள் வாப்பிச்சாவுடைய செல்ல பிள்ளைகளாகவும் பிள்ளையாகவும் வளர்ந்து வருகின்றன. வாப்பாவுடைய செல்ல பிள்ளையாக மட்டும் பிள்ளைகள் வலரது கஷ்ட்டம் ஏனென்றால் வாப்பாமார்கள் தன்னுடைய பிள்ளைகளை கண்டிசனாக வளர்ப்பார்கள். அதை சமையத்தில் குழைந்தையின் தாயோ,வாப்பிச்சாவோ செல்லம் கொடுத்து வளர்ப்பது இயல்பு. அதிகமாக செல்லம் கொடுப்பது அந்த பிள்ளையின் தாய் தான் குழந்தையின் தந்தை பெரும்பாலும் பக்கத்தில் இருப்பதில்லை. வெளிநாட்டிற்கு போய் பணம்,பணம் என்று ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கின்றனர். குழந்தையின் தந்தையர்களுக்கு பணம் மீது தான் செல்லம் இருக்கிற தவிர தன்னுடைய பிள்ளைகளின் மீது எங்கே செல்லமும்,பாசமும் இருக்க போகிறது.

அப்படியும் அந்த குழந்தையின் மீது செல்லம் ஏற்பட்டாலும் அவர் ஊரில் இருக்கும் வரைதான். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு வெளிநாட்டிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வார். அப்போதைக்கு மட்டும் அந்த குழந்தையின் மீது செல்லம் ஏற்படும். பிறகு அவர் திரும்பி வெளிநாட்டிற்கு புறப்பட்டு விடுவார் அந்த செல்லாம் எல்லாம் போய் அந்த குழந்தை தன்னுடைய தந்தையை மறந்து விடுகிறது. இப்படி இருந்தால் எப்படி தன்னுடைய குழந்தையின் மீது செல்லம் எதிர் பார்க்க முடியும். என் பெரியப்பா அவர்கள் அவர்களுடைய பேர பிள்ளைகளுக்கு நூர் லாட்ஜ் கடையில் ரொட்டி,இடியப்பம்,ஆட்டு மூளை,ஆட்டு இறைச்சி என்று மஃரிபுக்கு பிறகு மற்றும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய பேர பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வந்தார்கள்.

Shameed said...

Yasir சொன்னது…
//நான் யாருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது கிடையாது...உம்மா பாசத்துடன் வைத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்....மற்ற வாப்புச்சா/உம்மாம்மா கொடுப்பினையெல்லாம் எங்களுக்கு இல்லை//

இப்புடி சொன்னா எப்புடி நாங்க உன்னை செல்லப்பிள்ளையாய் தூக்கி வளர்த்ததை வீடியோ எடுத்து போட்டா காட்ட முடியும்

Yasir said...

///இப்புடி சொன்னா எப்புடி நாங்க உன்னை செல்லப்பிள்ளையாய் தூக்கி வளர்த்ததை வீடியோ எடுத்து போட்டா காட்ட முடியும்// காக்கா நாம ரெண்டு பேரும் ஒரு சுமார் 25 வருடம் அல்லது அதற்க்கு முன் எடுத்துக்கொண்ட போட்டோ உள்ள அனுப்பிவைக்கின்றேன்..பாருங்கள்

Shameed said...

Yasir சொன்னது…
///இப்புடி சொன்னா எப்புடி நாங்க உன்னை செல்லப்பிள்ளையாய் தூக்கி வளர்த்ததை வீடியோ எடுத்து போட்டா காட்ட முடியும்// காக்கா நாம ரெண்டு பேரும் ஒரு சுமார் 25 வருடம் அல்லது அதற்க்கு முன் எடுத்துக்கொண்ட போட்டோ உள்ள அனுப்பிவைக்கின்றேன்..பாருங்கள்//



என்னப்பா இப்புடி அதிரை நிருபரிலே பழசு பட்டையெல்லாம் போட்டு கொளப்பி உடுறாங்க

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

எனக்கு மகன்கள்; உண்டு மகள் உண்டு; பேரன் உண்டு; பேத்திகள் உண்டு தான்.

இவர்களில் யார் எனக்கு செல்லம் என்று சொல்வதைவிட நான்
யாருக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக' இருந்தேன் என்று என்னையே நான் 'ஒரு கதாநாயகன்' ஆக்கி செல்லத்தின் விளைவுகளை சொல்ல நினைக்கிறேன்.

//சீக்கிரம் சாப்பிடு உம்மா வந்துடு வா// என் உம்மம்மாவின் குரல் கேட்கிறது.

//உம்மம்மா செல்லம் கொடுத்தா. தாய்வழி பாட்டனார் செல்லம் கொடுத்தார். மாமன்மார் இருவர் தம்பி மார்போடு அணைத்து செல்லம் கொடுத்தார்கள். தந்தை? இரண்டாம் உலகப்போரில் மலேயாவில் மாட்டிக் கொண்டார்.

ஊரில் இருந்தால் செல்லம் கொடுப்பாரா அல்லது அவரே பூட்டி வைத்து கொண்டு கொடுக்காமல் அடம்பிடிப்பாரா? தெரியாது!

நாலுபக்கம் துன்பம் வந்தால் நாஸ்திகர்க்கும் தெய்வம்உண்டு!

நாலுபக்கம் செல்வம் வந்தால் ஆஸ்திகர்க்கும் தெய்வம் இல்லை.

எல்லோரும் செல்லம் கொடுத்தால் அரிசி விலை தெரியாமல்
வளர்ந்தேன். கோபம் என்னோடு கூட்டாளி போட்டது. ''ஓடுற பாம்பை புடிக்கிற வயது 'ஒன்றுமே புரியவில்லை.காலம் மாறியது.
செல்லம் வந்த பாதை அடைபட்டது.

செல்லம் தந்தவர்கள் கண்ணீரை தந்து விட்டு கண்கானா திசையில்
காணாமல் போனார்கள். சொந்தக் கையே ஊன்றிப் பிழைக்கப்போன இடத்தில்' பாம்பு திங்கிற ஊருக்கு போனா
நடுத்துண்டம் நமக்குத்தான்' என்ற பிழைக்கும் வழியை எற்க மறுத்தது. நாலுபக்கம் வந்த செல்லம் நடுத்தெருவில் விட்டது. பசியியே ருசிதிருந்தால், பட்டினியை புசித்திருந்தால் எதிர்நீச்சல் போட்டு இருக்கலாம். வெளுத்ததெல்லாம் பால்யென நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். காரணம் இளமைக் காலச் செல்லம் தென்மேற்க்கு பருவ காற்று திசை மாறியபோது காற்று வீசிய திசை நோக்கி கப்பல் போனது.

நீச்சல் தெரியாதவன் வெள்ளம் வந்தால் என்ன செய்வான்?. படகு வருமுன் நீச்சல் தெரிந்தால் பிழைத்து இருக்கலாம்.

பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பதும் நீச்சல் தெரியுமுன்னே படகு கொடுப்பதும் ஒன்றே.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாய் தந்தைக்கு நான் செல்லப்பிள்ளை.
எனக்கு என் பிள்ளைகள் செல்லப்பிள்ளை.
அதோடு தங்கை பிள்ளைகளும் செல்லப்பிள்ளைகளே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பன் ராஜிக் சொன்னதிலிருந்து...

//என்னை தமிழுக்கு மாற்றிவிட்டு, நல்ல தமிழ் எழுதுரவங்கெள்ளாம் Englishல கமெண்ட் எழுதுராங்க,//

எவரையும் முன்னிறுத்தி ஆங்கில ஆசை வேண்டாம் இங்கே!
முதலில் நம்ம தமிழையும் நல்லதாக்குவோம்.

அப்துல்மாலிக் said...

//நான் யாருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது கிடையாது...உம்மா பாசத்துடன் வைத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்....மற்ற வாப்புச்சா/உம்மாம்மா கொடுப்பினையெல்லாம் எங்களுக்கு இல்லை//

அதே எனக்கும், ஏனென்றால் பேரன் பேத்திகளில் நானும் ஒரு புள்ளியாகவே இருந்திருக்கேன்.

உம்மாவின் செல்லமும், வாப்பாவின் அடக்கமும், ராத்தாக்கள்/காக்காவின் பாசமுமாக மட்டுமே வளர்ந்திருக்கேன். மேலும் வாப்புச்சி மூலம் கந்தூரிக்கும், பெருநாளைக்கும் 5 ரூபாய் வரை காசு சேரும், அதிகம் கேட்டால் மரம் இப்போதான் பிஞ்சு விடுது காய்ச்சதும் பணத்தை பறித்து தருகிறேன் என்றதையெல்லாம் உண்மையென எண்ணி சமாதானமாகிய காலம் அது.

மேலதிக வருத்தம்: என் பிள்ளைகளின் வாப்புச்சி/உம்மம்மா/அப்பா தொலைபேசியில் மட்டுமே ஒன்றிருக்காங்க

Web Master ( Excellent in Salesforce, Drupal 7, Python with Django, Wordpress) said...

நான் என் பெரியம்மா, அப்பா சொல்லப்பிள்ளை. என்னை வளர்த்ததே என் பெரியம்மா, அப்பாதான். நான் உன்மையான பாசத்தை என் அப்பா மற்றும் பெரியம்மாவிடம் கண்டேன். என் தந்தை எனக்கு வாழ் நாளிள் ஒரு முத்தம்கூட தந்தது இல்லை, அதனல் என் மகனை தினமும் முத்தம்யிடுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு