Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்" 25

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2013 | , , , , , , , ,

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம் ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும் விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து நடத்திய கடைகளும் அதில் இடம் பெற்ற விற்பனைப்பொருட்களும் (நீங்களெல்லாம் பெரும், பெரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று மேலாளராகவோ, மேற்பார்வையாளராகவோ பணி செய்து வருவதால் அவற்றையெல்லாம் முற்றிலும் மறந்திருப்பீர்கள். அதனால் அவை இங்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தப்படுகிறது) நம் நினைவுகளில் டெமரேஜ் ஏதும் தராமல் நிரந்தமாய் தஞ்சமடைந்துள்ளன.


(லிஸ்டெ போட்ற வேண்டியது தான்)

1. கல்கோனா
2. கடலை மிட்டாய்
3. மஞ்ச கலரு கொடலு
4. தேன் முட்டாயி
5. பால் பன்னு
6. மைசூர் பாக்கு (அப்பொ கரிங்கல்லு மாதிரி இருக்கும். மன்சூராக்க கோவிச்சிக்கிடாதிய)
7. கொத்து மாங்கா (தோப்லேர்ந்து பறிச்சதுனால கூடுதல் லாபம் கிடைக்கும்)
8. மோரு (கருவாப்பிள்ளை, பச்ச மொளவா, கொத்து மாங்கா, கடுகு போட்டு தாளிச்சது)
9. சர்வத்து (ஜம்ஜா விதை ஊற வைத்து, ரோஸ் கலரு பாவு காச்சி வித்தாலும் ஐஸ் போட்டு விக்கிற அளவுக்கு வசதி இல்லை)
இன்னும் இங்கு விடுபட்ட விற்பனை பொருட்களை நீங்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்.

நாளாக, நாளாக விற்பனை நன்கு சூடு பிடிக்கும். பெரிய பசங்க சிலர் நம் கடையின் (அலங்கோலத்தை பார்த்து) சூழ்நிலையை பார்த்து இரக்கப்பட்டு (மொகத்தாச்சனைக்காக) நம் கடையில் ஏதேனும் வாங்கிச்செல்வர்.

பள்ளி திறக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த கூட்டாண்மை வியாபாரம் வரவு, செலவுகள் போக கணக்கு பார்க்கப்பட்டு முதலீட்டிற்கு தகுந்தாற்போல் (ரூபாய் 20 அல்லது 30க்குள்) லாபம் பிரித்து கொடுக்கப்படும் அல்லது எடுக்கப்படும். (வருமான வரி பயமோ, ஆடிட்டிங் தொல்லையோ, பணியாளர் சம்பள பிரச்சினையோ இங்கில்லை).

இந்த மாதிரி வியாபாரம் நாம் எஸனல் குர்'ஆன் ஓதப்போகும் வீட்டுப்பள்ளிகளிலும் அந்த ஒஸ்தார் மூலமே நடத்தப்பட்டது. என்ன செய்வது? அப்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கு இது போன்ற சிறு வருமானங்கள் கொஞ்சம் வீட்டுத்தேவைகளுக்கும் தோள் கொடுத்து உதவியது. இப்பொழுதுள்ள விலைவாசி, பொருளாதார சூழ்நிலைக்கு இதுபோன்ற வியாபாரங்களும், அதன் வருவாயும் வீட்டு கொல்லையில் மேயும் கோழிகளுக்கு தவுடு வாங்கி கொழச்சி வக்க கூட பத்தாது.

இதுபோல் நாம் சிறு பிராயத்தில் தொடங்கிய கடைகள் இப்பொழுது அதை நினைத்துப்பார்க்க சிலருக்கு வெட்கமாகவும், கொஞ்சம் கேவலமாகவும் (அரீர்ப்பாகவும்) கூட தெரியலாம். ஆனால் அன்று அது போல் கடை வைத்து தன் வாழ்க்கையில் வியாபாரம் என்றால் என்னவென ஆரம்பித்தவர்களில் பலர் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அல்ஹம்துலில்லாஹ் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றும், சிலர் அரபுலகத்திலும் குடும்பத்துடன் நல்ல சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும் படுறதில்லை.

இந்த கட்டுரை எழுத காரணம், சகோ அர.அல அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் இணைத்திருந்த இந்த அரிய புகைப்படமே காரணம். கொட்டகைக்குள் 5 பாட்டில்களும், 5 முதலாளிகளும் நமக்கெல்லாம் இங்கு ஃபோஸ் கொடுத்து ஏதோ சொல்லவர்ராங்க. கேட்டுக்கிடுங்க.....

தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு சர்வத்து கலக்கி குடும்மா.....

இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்திப்பில் சந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

25 Responses So Far:

sabeer.abushahruk said...

கடை கட்டியிருப்பது
கலை கட்டுகிறது - அதை
நெய்னா
கதை கட்டியிருப்பதோ
கலகலப்பு!

சென்ட்ரிங்கில் கொஞ்சம் கவனமும் பிள்ளரைக் கொஞ்சம் நேராக நிமித்தியும் இருந்தால் கட்டியது எஞ்ஜினியர்தான். இன்ட்டீரியர் டெக்கரேஷனுக்காக ஒரு கேர்ள் ஃபிரன்டையும் சேர்த்திருக்கலாம். தொப்பி போட்டிருக்கும் முதலாளியின் வேட்டி உடுத்தலில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. ஃபோட்டோ எடுத்த ஆள் அதட்டாமல் இருந்திருந்தால் கண்களில் தெரியும் அந்த மிரட்சி இல்லாமல் போயிருக்கும். கடைக்கு ஒரு பெயர் வைத்திருந்தால் அதிரை நிருபரிலோ அதிரை எக்ஸ்பிரஸ்ஸிலோ விளம்பர நோக்கமில்லாத ஒரு அறிவுப்பு செய்திருக்கலாம்.

ஒரே ஒரு குறை:

ஐந்து முதலாளிகளுக்கும் ஒரே ஒரு, ஒக்கே ஒக்கடு, ஏக்கி ஏக், ஒன்லி ஒன், ஒற்ற, பஸ் வாஹித் கஸ்ட்டமர்கூட இன்னும் வாய்க்காதது அதிரையின் பொருளாதார பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது.

குட் ஹேங் ஓவர், நெய்னா.

நன்றி.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு சர்வத்து கலக்கி குடும்மா.....//

வெரசன வாங்கடா யாவராம் செய்யலாம் !

எம்.எஸ்.எம்(என்) ! போட்டோவின் வண்ணம் மாறாமல் சொல்லும் எழுத்தின் வண்ணம் அற்புதம் !

அடே இந்தா... வெரசனம் கொடுங்கடா... ன்னு பின்னாடி மரப்பை நீக்கிட்டு கேட்கிறது காதுல விழலையா ?

Ebrahim Ansari said...

வேறு யாரும் முந்திக் கொள்ளும் முன் "எலந்த வடையை" பட்டியலில் சேர்த்துவிடுகிறேன்.

மற்றவை பின்னர்.

Saleem said...

மஞ்ச கலரு கொடலு (ஆமாம் இப்போ ஆரஞ்சு கலரா மாத்திட்டாங்க!!)
அதோட லாலா ஊறுகாய் தொட்டும் சாப்பிடும்போது அது ஒரு தனி டேஸ்ட்!!!

Fareed said...

அஞ்சு பாட்டல்ல கலர் தண்ணிய வச்சுகிட்டு ஒரேஒரு பாட்டல்ல மட்டும் பாவு ஊத்தி வச்சுகிட்டு சர்வத் யாவாரம் செஞ்ச யாஃபுவம் வந்துடுச்சு

Anonymous said...

''ஏண்டி பாட்டி மஞ்ச குளிக்கிறே''ன்னு கேட்டானாம்.

''பழைய நெனப்புடா பேராண்டி'' என்றாளாம்.

எனக்கும் தம்பி முனா.சேனா.முனா. சொன்ன ''வெர்சன வாங்கடா! யாவாரம்'" படிச்சதும் என்னோட இளமைக் கால நினைவுகள் என் நெஞ்சை உடைத்து வெளியே வந்தது.

முனாங்கிளாஸ் முழுப்பரிட்சை லீவுலே 'சும்மா இருக்கபடாது' ன்னு காலங்காத்தாலே நானும் என் மச்சானும் எந்துரிச்சு முடுக்குகாடு போயி பனங்கெளங்கு வாகியாந்து அவுச்சு வித்தோம் ''பனங்கிலங்கை பனங்கெளங்கு''ன்னு door to door கதவை தட்டி தட்டி கேட்டதில் என் முகத்துக்காக சிலரும் அவர்கள் சொந்த, வாய் வயத்துக்காக சிலரும் வாங்கினார்கள். ஒருவாரம் யாவாரம் நல்லாதான் ஓடியது. கல்லா கட்டி பாத்ததில் கணிசமான ஆதாயம்.

ஆதாய காசெல்லாம் நம் ஊர் டெண்டு கொட்டாயில் ஓடிய ''ஆயிராம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' 'படத்தை அஞ்சு தடவை [வசனத்தை மனப் பாடம் செய்ய] பாத்ததில் கொஞ்சம் கறைந்தது அப்புறம் ''அம்பிகாபதி அமராவதி'' படம் பாத்து பாக்கியும் போனது. [இந்த இடத்தில் ஒரு முக்கிய செய்தி சொல்ல விரும்புகிறேன் இந்த படத்தில் நடித்த M.K.தியாகராஜ பாகவதர் சாதாரண நடிகர் அல்ல. தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் அவர் புகழ் கொடி கட்டி பறந்தது. அவர் நடித்த அம்பிகாபதி அமரவதி படத்தை டைரக்ட் செய்தவர் EllisR.Dungen என்ற தமிழே தெரியாத அமெரிக்கர்.

தமிழ் காதல் காவியத்தை தமிழே தெரியாத அமெரிக்கர் அற்புதமாக டைரக்ட் செய்தது ஆச்சரியமல்லவா!? தியாகராஜ பாகவதர் நடித்த இன்னொரு படம் ஹரிதாஸ். இது மதராசில் ஒரு திரை அரங்கில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓடியது]

இப்போ பனங்கிழங்கு யாவரத்துக்கு வருவோம்.
ஒருத்தி சொன்னால் "அடேபாரக் வாப்பா! பனங்கிளங்கே திண்டு திண்டு வாய் எப்புடியோ ஈக்கிது. நுங்கு இருந்தா கொண்டு வாவேண்டா!'' நுங்குக்கு பின்னாடிதான் பனங்கிளங்குங்கற சிம்பிள் botany ஓடுற நாயே கேட்டாலும் சொல்லும் இந்த பொம்பளைக்கு தெரியலே .மூனு கெளங்கு வீசரூவாய்க்கு விக்கிறதுக்கு நான் இந்த கெழவிக்கு பாட்டனி நடத்த முடிமா? அல்லது எனக்குதான் பட்டாணி தெரியுமா?

அப்புறம் இன்னொரு கெழவி சொன்னா "பனங்கிளங்கே திண்டு திண்டு பள்ளு ஆடி போச்சுடா! வாய்க்கு மெதுவா வேறே எதாச்சும்சும் கொண்டுகிட்டு வாவேண்டா!" யோசனை பண்ணி பாத்தேன். வாய்க்கு எது மெதுவா இருக்கும் தண்ணிதான் இருக்கு குடத்தை எடுத்துகிட்டு. மன்னப்பன் குளம் போகவா? கிளவிகளாலேதான் பிசினேசுக்கும் இடைஞ்சல்.

பள்ளிக் குடத்திலேயும் இடைஞ்சல்.'' பள்ளிகூடத்தில் எந்த.கெளவி இடைஞ்சல் கொடுக்குற''? என்று கேக்குரியலா!. அந்த அவ்வைக் கிளவிதான். அவ ஊர்ஊற எவன் எவனுக்கோ சொல்லிக்கிட்டு போன அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் எல்லாத்தையும் நான் மனப்பாடம் செஞ்சு வாத்தியார்கிட்டே ஒப்பிக்கனுமாம்'.

அவ்வையார் சொன்னது சரி ஒத்துக்குவோம். ஆனா இதை எல்லாம் மனப்பாடம் செஞ்சு வாத்தியார் கிட்டே சொல்லுனு அவ்வையார் சொன்னாங்களா? என்பதே இப்போ என் கேள்வி. என் கேள்விக்கு பதில் வரும் வரை பள்ளிக்கூடம் போகமாட்டேன்'' என்று வீட்டிலே படுத்துகிட்டேன் பனங்கிழங்கு யாவரத்துலே படம் பாக்க. காசு வந்துச்சுலோ! செய்தி என்மாமா காதுக்குபோனது. என் முதுகுக்கு அடியும் கண்ணதுக்கு வீக்கமும் வந்தது.

பனங்கெளங்கை விட்டு பையே புடிச்சுகிட்டு பைய-பைய பள்ளிக் கூடம் போனேன். இதுதான் சினவயசு பள்ளிப் பருவத்தில் செஞ்ச பனங்கிழங்கு யாவரம்.

S.மு ஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவ்வையார் சொன்னது சரி ஒத்துக்குவோம். ஆனா இதை எல்லாம் மனப்பாடம் செஞ்சு வாத்தியார் கிட்டே சொல்லுனு அவ்வையார் சொன்னாங்களா? என்பதே இப்போ என் கேள்வி. //

ஹா ஹா ஹா ! காக்கா உங்க யாவாரம் சூப்பர்!,

மேலே கேட்டே இதே கேள்விதான் எங்க எல்லோருக்கும் இருக்கு !

வொளவையார் (ஒளவையார்) சின்ன வயசு புள்ளையளுவொல ரொம்பவே படுத்தியிருக்கிறார்...

Unknown said...

"Q" வில் நின்னு காசுக்கு வாங்கி திண்ணதோட சரி.

வியாபாரம் செஞ்ச பழக்கம் இல்லை.

முக்கியமாக "நானா ஹத்தம் " லிஸ்ட் ல் விடுபட்டு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். உடன் ஸ்டாக் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளவும்.

அபு ஆசிப்.

Unknown said...

சபீர்,

இவர்களுக்கு எதற்கு கஸ்டமர் .?

கொஞ்ச நேரம் பார்ப்பானுவோ, கஸ்டமர் யாரும் வரவில்லையென்றால், இவர்களே கஷ்டமர்கலாக மாறி, லாபத்தை பங்கு போடுவதற்கு பதிலாக,
கல்கொனாவையும் , கடலை மிட்டாயும் பங்கு போட்டு அதன் இடத்திலேயே
கடைக்கும் மூடுவிழா நடத்தி , கிட்டி பில் அல்லது பம்பரம் விளையாடப்போய் விடுவார்கள்.

adiraimansoor said...

நமெக்கெல்லாம் கடந்த கால சிறு பிராயத்தின் அனுபவங்கள் பேசினாலும், இன்னும் மிகவும் வருமை கோட்டுக்கின் கீழ் உள்ள சில பேர் தனது சிறு பிராயத்தில் செய்த இதே மாதிரி கடைகளை வைத்து தன் வயிற்றை கழுவும் அனாதையான முதியோர்களை இந்த நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை
இந்த காட்சிகளை கடலோர கிராமங்களில் மட்டுமல்லாது நிரைய குக்கிராமங்களிலும் பார்க்கலாம் இவர்களிடம் எதுவும் வாங யருக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிகமாக காசு கொடுத்து வாங்குங்கள் இவர்கள் அடுத்தவர்களிடம் கை நீட்ட வெட்கப்பட்டவர்கள்
முதியோர்கள் என்ன பொருள் விற்க வந்தாலும் தயவு செய்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்

அதிரைக்காரன் said...

யான் நெய்னா நாக்கு ரொட்டி என்னா பாவம் செஞ்சது? அதையும் பட்டியலில் சேர்த்துக்கமா. ஓமரொட்டி தெரியும்ல? 1990க்கு அப்புறம் பிறந்த புள்ளையலுவொலுக்கு இந்தப்பதிவு நிச்சயம் புரியாது. :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


மெனுவில் இருக்கும் வர்த்தக சரக்குகளில் அதிகம் லாபம் தருபவை:
கடலை முட்டாய் 80 பைசாக்கு பர்ச்சேஸ் பண்ணி 1 ரூபா 20 காசுக்கு விற்று 50% லாபம் தரும் பொருள்.
அடுத்து கொத்து மாங்காய் இதை முழுசாக வாங்கி கொத்து போட்டு 200 - 300% லாபம் சம்பாரித்த வரலாறும் உண்டு.

பல தடவை பல வருசம் செய்த இத்தொழிலில் ஒரே ஒரு தடவை பேரிடர் ஒன்றும் நடந்தது. எங்கள் தொழிலில் சிறுவர் சத்தம் அதிகம் இருந்ததாக சொல்லி விற்பனை சரக்குகள் அனைத்தையும் பாட்டிலோடு உடைத்து எங்கள் மனதையும் உடைத்த ஒரு கல் நெஞ்சகரும் அன்று இருந்தார் என்பது அன்றைய வர்த்தகத்தில் வருந்தத்தக்க செய்தி.

அன்று வைத்த கடையின் சில பெயர்கள்
AJM ஸ்டோர், AJA ஸ்டோர், AJM ஊறுகாய்.

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க எஸ் முஹம்மது ஃபாரூக் மாமாவுக்கு....நானும் படிக்கும்போது இந்த அவ்வைக்கிழவியின் குடைச்சல் இருந்தது....நான் "சாய்ஸி"ல் அந்த அம்மாவை "விட்டு" விடுவேன்.

ZAKIR HUSSAIN said...

எம் எஸ் எம்....பழைய நினைவுகள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது. நான் வியாபாரம் செய்ய வில்லை. ஆனால் வி.ஐ.பி கஸ்டமர். கொஞ்சம் காசு புழக்கம் என்னிடம் எப்போதும் இருக்கும்.

Abdul Razik said...

1982 என நினைக்கிறேன், 6 பேர்கள் சேர்ந்து கடை வைதோம், ஆளுக்கு 10 ரூபாய் பங்கு. பள்ளி 2 மாதம் விடுமுறயில் வைத்தோம். கொள்முதல் செய்த பொருள்கள்.
1. முறுக்கு
2. கடலை மிட்டாய்
3. தேன் மிட்டாய்
4. குடல்
5. இலந்த வடை
6. கல்கோனா
7. ரஸ்க்
8. பொறி உறுன்டை
9.பலிங்கி
10. வெற்றிலை
11. காசு கட்டி
12. சுண்ணாம்பு
13. புகையிலை
14. பாக்கு
15. செய்யது பீடி
19. சார்மினார் சிகரட்
20. நைஸ் (ரோஸ் களரில் வட்டமாக இருக்கும்)


இன்னும் ஏராளமான சாமான்கள். பள்ளிக்கூடம் திறக்க 10 நாள் முன்னதாக, பங்கு தாரர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக கடை மூடப்பட்டது.

Anonymous said...

''வெரசன வங்கடா யாவாரம் செய்யலாம்'' தலைப்புக்கு நான் எழுதிய commentiல் 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' சினிமா பார்த்ததையும் சொன்னேன். ''ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி தக்குவா பள்ளி ஓரத்தில் சூப்புகடை போட்டு இருந்தாளோ? அல்லது அல்அமீன் பள்ளிக்கு அருகில் சூப்புகடை போட்டு யாபாரம் செய்தாள்? ஆயிரம் தலையை என்ன செய்வாள்? ''என்று அ.நி. அன்பர்கள் கேள்வி எழுப்பலாம்.

கேள்வி வரும் முன்னே பதில் போட்டு விடுவோம் என்றே கீழே விளக்கம் எழுதுகிறேன். //அபூர்வ சிந்தாமணி ரெம்ப அழகான ராணி. அவள் கழுத்தில் தாலி கட்ட ''நீ-முந்தி நான்-முந்தி என்று அடிச்சு புடிச்சுகிட்டு பக்கத்து நாட்டு இளவரசர்கள் குதிரையிலேயும் தேருலையும் ஓடி ஓடி வந்து பொண்ணு கேட்டானுக. அவ ஒன்னுக்கும் மசியலே. அவ ஒரு கண்டிசன் போட்டா ''எவன் நான் கேக்குற கேள்விக்கு சரியான பதில் சொல்றானோ அவன் என்க ழுத்தில் தாலி கட்டலாம்.

சரியா பதில் சொல்லலேன்னா அவன் கழுத்தை வெட்டித் தலையே வாங்கிடுவேன்'' என்பதுதான் அவள் போட்ட கண்டிசன்.

இந்த கண்டிசனுக்கெல்லாம் கொஞ்சம் கூடபயப்படமே ஒருத்தனுக்கு பின்னாலே ஒருத்தன் ஒருத்தனுக்கு பின்னாலே ஒருத்தன்னு 'Q' வரிசையில் நின்றானுக. ஒருத்தன் போயி சிந்தாமணி முன்னே நின்றான். நின்றவன் நின்றவன் தான் கையும் ஓடலேகாலும் ஓடலே. அவள் அழகு அவனை அப்புடியே ஒரு அமுக்கு அமுக்கிடிச்சு .சிந்தாமணிமணிக்கு தெரிஞ்சு போச்சு வந்தவன் ஒரு கேணப்பயல்' என்று டயத்தை வேஸ்ட் ப'ண்ணாமே வந்தவனிடம் சிந்தாமணி கேள்வியை போட்டா. சிந்தாமணி போட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் வந்தவன் 'பேக்கே-பேக்கே' என்று விழித்தான். சிந்தாமணி கையில்இருந்த வாள் வந்தவன் கழுத்தில் விழுந்தது.

அவன் கழுத்தில் இருந்த தலை கீழேவிழுந்தது .சிந்தாமணியை கட்டிக்க வந்த ஆயிரம் பேரும் தலையை கொடுத்துட்டு 'தலைப்பா மிஞ்சுனாபோதும்'னு ஓடிட்டான்னுக. இதுதான் 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

அப்துல்மாலிக் said...

தலைப்பை படிச்சவுடனே புரிஞ்சுக்கிட்டேன் இந்த பதிவை எழுதியது சந்தேகமேஇல்லாமல் நெய்னா தான் என்று..

அந்த 2 மாசம் கூட வீணாக்காமல் ஏதாவ்து தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வல்ல இறைவன் நமக்கு கொடுத்திருக்கான். அந்த அனுபவத்தில் இன்று உயர்ந்து நின்னவனங்க நிறையபேர்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்கு தத்தமது கருத்துக்களை கச்சிதமாக கவ்விய,கவ்வச்செய்த ஜனாப் எஸ். முஹம்மது ஃபாரூக் காக்கா அவர்களுக்கும், இ.அ. காக்கா அவர்களுக்கும், கவிக்காக்கா சபீர் அவர்களுக்கும், மச்சான் ஜஹபர் சாதிக்கிற்கும், எடிட்டராக்கா, ஜாஹிர் காக்கா, மன்சூர் காக்கா, அப்துல் காதர் சாச்சா, நண்பன் ராஜிக், மாலிக், சலீம், சகோ. ஃபரீத் அவர்கள் அனைவருக்கும் "கொத்து மாங்காயெ, மொளவா பொடி போட்டு அந்த பூவரச எலையில வச்சி சுருக்கன குடுங்கடா". கடைக்கு வந்து சாமான்கள் வாங்கிய அனைவருக்கும் ரொம்ப தேங்க்ஸ்...

வேலை வெட்டி இல்லாம‌ல் சும்மா இருப்ப‌தனால் அன்றாட‌ ப‌ண‌த்தேவைக‌ளுக்கும், வசதியான ஆடம்பர வாழ்க்கைக்கும் ந‌ம் நாட்டில் சிறுவ‌ர்க‌ள் முத‌ல் கிழ‌வ‌ர்க‌ள் வ‌ரை எப்ப‌டியெல்லாம் திருட்டு, கொள்ளை, கொலை, வ‌ழிப்ப‌றி, வ‌ங்கியில் கைவ‌ரிசை, ந‌டைபாதையில் செல்லும் பெண்க‌ளிட‌ம் சையின் ப‌றிப்பு என்று எப்ப‌டியெல்லாம் உழைக்காம‌ல் அடுத்த‌வ‌ன் பொருளை ஆட்டைய‌ப்போட‌ இராப்ப‌க‌லாய் ஒரு கூட்ட‌ம் தெருவில், ஊரில், நாட்டில் நல்லவர்கள் போல் நடித்து சுற்றிக்கொண்டு தான் இருக்கிற‌து. எப்ப‌டி ரைட் பிர‌த‌ர்ஸ் ப‌ற‌வைக‌ள் சிற‌க‌டித்து ப‌ற‌ப்ப‌தை முன்மாதிரியாக‌ வைத்து ம‌னித‌ர்க‌ள் அம‌ர்ந்து வானில் ப‌ற‌க்கும் விமான‌த்தை க‌ண்டு பிடித்து இவ்வுல‌க‌ ப‌ய‌ன்பாட்டிற்கு அர்ப‌ணித்தார்க‌ளோ அது போல் தான் இந்த‌ சிறுவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுமுறைக்கால‌ங்க‌ளை வீணாக‌ சுற்றித்திரியாம‌ல் தன் சொந்த முயற்சியில் வியாபாரம் செய்து உழைக்க‌ வேண்டும் என்ற‌ விதையை அந்த‌ பிஞ்சு உள்ள‌ங்க‌ளில் விதைக்க‌ச்செய்து இறைவ‌னின் கிருபையில் அது அவ‌ர்க‌ளின் உள்ள‌த்தில் இன்று செடியாய், ம‌ர‌மாய், காய்க‌னிக‌ள் த‌ருந்து நிழ‌ல் த‌ரும் ந‌ல்ல‌தொரு விருச்ச‌மாய் வ‌ள‌ர்ந்து நிற்கிற‌து.

ந‌ம் நாட்டில் ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளால் துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ "சுய‌ உத‌விக்குழுக்க‌ள், ந‌ம‌க்கு நாமே திட்ட‌ம், இளைஞ‌ர்க‌ள் வேலைவாய்ப்பு திட்ட‌ம், 90 நாட்க‌ள் வேலை வாய்ப்பு திட்ட‌ம், ப‌ட்ட‌தாரி இளைஞ‌ர்க‌ள் சுய‌ தொழில் துவ‌ங்க‌ திட்டம்" என‌ ஏராள‌மான‌ திட்ட‌ங்க‌ள‌ தீட்டி நாட்டு ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை மேம்ப‌டுத்த‌ அவ‌ர்க‌ள் ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ள் செல‌விட‌ மூல‌ கார‌ண‌மாய் இந்த‌ பிஞ்சுக‌ளின் கிழிந்து போன‌ கீத்துக்கொட்டகை முடுக்குக்க‌டைக‌ள் ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையாகாது என்ப‌தே என் வாத‌ம்.

இப்பொழுதுள்ள‌ ஜென‌ரேச‌னில் அன்று இது போன்று பிஞ்சு உள்ளங்களில் முளைத்த‌ ந‌ல்ல‌ முய‌ற்சிக‌ளெல்லாம் இன்று ஒரு கைய‌ட‌க்க‌ ஸ்மார்ட் ஃபோனில் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌வோ? என‌ எண்ணி வ‌ருந்த‌ வேண்டியுள்ள‌து.

KALAM SHAICK ABDUL KADER said...

//இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும் படுறதில்லை.//

நெத்தியடி
சுத்தியலடி
ஆக்கத்தின்
ஆணிவேர்

என்று தணியும் அன்னிய மோகம்?

Anonymous said...

ஒரே ஒரு சந்தேகம்.!

போட்டாவுளே பாத்தேன்! தொப்பி போட்ட முதலாளிக்கி வலதுபுறம் உக்காந்துகிட்டு இருக்கும் சின்ன முதலாளி கால்லே கெடக்குற செருப்பு ஒன்னுக்கு ஒன்னு வித்யாசமா இருக்கே! அவங்க ஜோடியை எங்கே பிரிஞ்சாங்கன்னு கேட்டு சொல்றியளா ? பாத்தா பாவமா இருக்கு! தேடிபாத்து அவங்காளை சேத்து வைப்போம்!.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//ஒரே ஒரு சந்தேகம்.!

போட்டாவுளே பாத்தேன்! தொப்பி போட்ட முதலாளிக்கி வலதுபுறம் உக்காந்துகிட்டு இருக்கும் சின்ன முதலாளி கால்லே கெடக்குற செருப்பு ஒன்னுக்கு ஒன்னு வித்யாசமா இருக்கே! அவங்க ஜோடியை எங்கே பிரிஞ்சாங்கன்னு கேட்டு சொல்றியளா ? பாத்தா பாவமா இருக்கு! தேடிபாத்து அவங்காளை சேத்து வைப்போம்!.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்//

நீங்க ஒன்னு ஹாக்கா, புள்ள எவ்ளோவ் செருப்பு வாங்கி குடுத்தாலும் வெளையாடப்போற எடத்துல காணாக்கிப்புட்றான். அதான், உம்மா காரவோ முன்னாடி காணாப்போன ரெண்டு செருப்புல மீதி இருந்த வெவ்வேற ரெண்டு செருப்பெ மாட்டி அனுப்பிக்கிறாஹ வெலக்கி........(இப்பொ அவ்வொள்ளாம் சேந்து தான் வாழ்றாஹ....நாம்ம ஏதாவது தந்துமந்து செஞ்சி அவ்வொலை பிரிச்சி வெக்காம இரிந்தா சரி தான்......)

Adiraipage said...

பழைய நினைவுகள் ஞாபகம் வருதே அது மீண்டும் கிடைக்குமா

Unknown said...

பழைய நினைவுகள்!!!!

Unknown said...

குசேலன், மலேசியா
”வெரெசன வாங்கடா, யாவாரம் பாக்கலாம்”
2013 ஆம் ஆண்டு பதிவு.
2020 ஜூனில் பார்த்தேன்...படித்தேன்...பகிர்கிறேன்.
மிகவும் பெருமிதமாக இருந்தது. உன்னால் முடியும்...உன்னால் முடியும் என்று தன்முனைப்பு கருத்தரங்குகள் நடத்திகொண்டு பணம் பண்ணிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒன்றுமே திட்டமிடாமல் அந்தநாளில் உருவான இதுபோன்ற கூட்டாஞ்சோறு முயற்சிகள்தான் இன்று தமிழ் முஸ்லிம் அன்பர்களை வெளிநாடுகளில் பெரும் சொத்துகளுக்கு அதிபதிகளாக்கியது என்றால் மிகையாகாது. ஒருகாலத்தில் பிழைப்புத் தேடி மலேசியா உட்பட வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழ் முஸ்லிம்கள் பிற சமூகத்திடம் கைகடடி வேலை பார்த்ததாக சரித்திரமில்லை. வட்டிக்கு வாங்கியாவது எங்காவது ஒரு மூலையில் சின்னமாக ஒரு கடைவைத்து சொந்தமாக வியாபாரம் பார்த்து பெரும் முதலாளி ஆனவர்கள்தான் மேலே குறிப்பிட்ட ”கூட்டாஞ்சோறு” முனைப்பாளர்கள். அவர்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த வியாபார வெற்றியே வெளிநாட்டில் அவர்கள் அடைந்த வெற்றி! அதற்கு எங்கள் மலேசியாவும் ஒரு சான்று.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு