Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 21 28

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2013 | , ,

தொடர் : இருபத்தி ஒன்று

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (வட்டி தவிர்த்த  வாழ்வு) 

ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு 
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு 
அது இல்லையென்றால் எதுவுமில்லை !
தொழிலில்லை !முதலில்லை! கடனுமில்லை! 
சொல்லப் போனால் உலகமெங்கும் 
வரவில்லை! செலவில்லை! வழக்குமில்லை! 

அதன் ஆயுள் கெட்டி 
மெல்லப் பார்க்கும் எட்டி 
அது போடும் குட்டி 
அதன் பேர் வட்டி. 

உலகை  ஆசைதான் ஆட்சி செய்கிறது. அதிலும் பேராசை . பேராசைக்கு நமது கண்முன்னே  நடமாடும் எடுத்துக் காட்டாக இருப்பவர்கள் சில மூசாக்கள் அவர்களே வட்டி மூசாக்கள்.  தீய வழியில் கூட பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசை தனி நபர்  தொடங்கி உலகம் தழுவிய காட்டுத் தீயாகப் பரவி விட்டது.  தீமை என்று தெரிந்தும் பல நாடுகளின் அரசுகளே இந்த வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல், லாட்டரி, குதிரைப் பந்தயம், மதுவணிகம் ஆகியவற்றில்  வரை முறை இன்றி ஈடுபடுகின்றன. இத்தகைய அரசுகளுக்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிவதால் சமூகத்தை சுரண்டி சமூகத்துக்கே இலவசம் என்ற பெயரில் திருப்பித் தருகின்றன . 
   
அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப் பெரிய இழப்பாகும்.

சாதிகளில் பல சாதிகள் இருப்பதைப் போல் வட்டியிலும் பலவகை வட்டிகள் உள்ளன. கந்து வட்டி, மீட்டர் வட்டி, மில்லி வட்டி, நெல்லு வட்டி என்றெல்லாம் வட்டியை வகைப்படுத்தி வணிகம் செய்கிறார்கள். வட்டிக்கடை என்கிற போர்டு ஊரெங்கும் தொங்குகின்றன . அரை மணி நேரத்தில் நகைக் கடன் என்ற விளம்பரப் பதாகைகள் ஊரெங்கும் மாளிகை கட்டி முளைத்துவிட்டன. ஒரு சமுதாயமே வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சமுதாயம் என்று முத்திரை குத்தப் பட்டு இருக்கிறது. சில குடும்பங்களுக்கு வட்டிப் பணமே வருவாய் என்கிற நிலை இருக்கிறது. அரசுப்பணியோ அல்லது தனியார் பணியோ அவற்றில் இருந்து ஒய்வு பெற்றபின் வட்டிக்கு கொடுத்து வாங்கும் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்றாடம் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் தங்களின் கூலியின்  பெரும் பகுதியை அன்றாடம் தின வசூல் வட்டிக் காரர்களிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கு வழியற்று நிற்கிறார்கள். வட்டிப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோர்  அதுவும்  ஒரு வியாபாரம்தானே  என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.   

உலகின் வளர்ந்த நாடுகள் என்று கணக்கிடப்படுபவை பெருமளவில் உலக நிதி நிறுவனங்களில் இருந்து பெரும் பணத்தை வட்டியாகப் பெற்று தாங்கள் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்துகின்றன. அவ்விதம் செய்கின்ற நேரங்களில் நிதி நிறுவனங்கள் இடும் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணிந்து கையொப்பமிடுகின்றன. பல நேரங்களில் இத்தகைய உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கட்டளைகளுக்குப் பணிந்து தாங்கள் நாட்டின் அரசுப் பணிகளின் கட்டணத்தை கூட்டுகின்றனர். தமிழ்நாட்டில் பேருந்து கட்டணமும் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப் பட்டபோது இந்தக் காரணமும் கூறப்பட்டதை நாம் மறந்து இருக்க முடியாது. 

ஏன் வட்டி கூடாது என்று சொல்கிறோம்? இதற்கான பொருளாதாரக் காரணங்களும் சமூக அவலக்  காரணங்களும் நிறைய உள்ளன. பலவற்றைப் பட்டியல் இடலாம்.
  • வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், கடன் வாங்கிய பணத்தை பயன்படுத்துவோனுக்குப் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவே இலாபம் அவன் கையில்  கிடைக்கிறது . பல நேரங்களில் வட்டிக்குக் கொடுத்தவனுக்கு வேளாண்மை  செய்த விளை பொருள்கள்கூட வட்டியாக சென்றுவிடுகிறது.   
  • வியாபார நடவடிக்கைகளில் விற்பவன் ஒரே ஒரு தடவைதான் இலாபம் பெறுகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான நடவடிக்கைகளில் கடன் கொடுத்தவன் தன் மூலதனத்தின் (அசல்) மீது தொடர்ச்சியாக இலாபம் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டியாகி அதிகரித்து இறுதியில் கடன்பட்டவனைப் பாழாக்கி விடுகிறது. நிலம் , தங்கம் ஆகியவற்றின் மீது கடன் வாங்கியவன் வட்டியின் அதிகரிப்பால் இறுதியில் தனது வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிடுகிறான்.
  • வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஒருவன் தன் உழைப்பு, அறிவு இவற்றின் பலனாக இலாபத்தை அடைகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான தொழிலில் கடன் கொடுத்தவன் கடன்பட்டவனுடைய வருமானத்திலிருந்து கொள்ளை இலாபம் பெறுகிறான். மேலும், கடன் வாங்கியவனுக்கு இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமேற்பட்டாலும் சரி, கடன் கொடுத்தவன் இலாபமே அடைகிறான். அப்படியே அவனுக்குக்குக் கிடைக்க வேண்டிய இலாபம் தாமதித்தால் இன்னும் அதிகமான இலாபம் வரவேண்டுமென்று கணக்கு வைத்து கழுத்தை நெறிக்கிறான்.
  • வட்டித்தொழில்  செய்வோரிடம் கஞ்சத்தனம் , சுயநலம், இரக்கமின்மை, பணத்தைப் போற்றிப் பூஜித்தல் முதலான தீமைகள் இயல்பிலேயே அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடுகின்றன . பச்சாதாபம் , அனுதாப உணர்ச்சி, பரஸ்பர உதவி செய்தல், கூட்டுறவு ஆகியவற்றையும் அது அழித்து விடுகிறது. மக்கள் பணத்தைச் சேர்த்துத் தங்கள் சொந்த நலத்திற்காக மட்டும் அதைச் செலவு செய்யும்படி தூண்டுகிறது. செல்வம் சமுதாயத்தின் எல்லாப் பாகங்களிலும் தடையின்றிச் சுற்றி வருவதைத் தடுக்கின்றது. 
  • ஏழைகளிடம் இருக்கும் சிறு செல்வமும் அவர்களிடமிருந்து  பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதைக்கு நான்குவழிப் பாதையை  உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் ஏற்றத்தாழ்வான  பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.
  • ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு முன் பணம் வாங்கிய  தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. பல தொழிலாளர்கள் கொத்தடிமையாக வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது.
  • சட்டங்களின், அதிபதியான எல்லாம் வல்ல இறைவன்  வியாபாரத்தை  அனுமதித்து, வட்டியை  தடை செய்துள்ளான். அந்த இறைவனின்  வேதத்தில்  ஒன்று ஒளியுடனும், மற்றொன்று இருளுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் ஒரு தொழிலுமல்ல, வியாபாரமுமல்ல என்பது உண்மையிலும் உண்மையாகும். 
  • தனிக் கல்வியோ, தொழில் அறிவோ தேவையில்லாததால் அது ஒரு தொழில் அல்ல. அது ஒரு அலுவல். இதற்கான தகுதி காதில் ஒரு பென்சில்;  கையில் ஒரு நோட்டு; ஒலி எழுப்பக்கூடிய மணி வைக்கப் பட்ட சைக்கிள்.; இதயத்தில் இரக்கமின்மை; வாயில் வன்முறைப் பேச்சுக்கள்; தட்டிவைக்க சில அடியாட்கள்; சாரயவாடைவீசும் வாய்கள்.  அவ்வளவுதான்.  மனிதர்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதனால் வளர்ச்சியடையும் இந்த வேலை எப்போதும் இழிவு. இந்த அலுவலில் ஈடுபட்டவர்கள் பொதுவாக இரக்கமற்ற இழிவானவர்கள். பணக் கஷ்டத்திலுள்ளோரை பலவகைகளிலும் துன்புறுத்தி, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் பணத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சொத்துக்களை சூறையாடும் சூழ்ச்சிக்காரர்கள் தாலிக் கொடிகளைக் கூட சந்தியில் வைத்து வர வேண்டிய பாக்கிக்காக வன்முறையால் அறுத்து வசூலிக்கும் சாதி வலிமை உடையோர்  இந்தத் தொழிலை குலத்தொழிலாக செய்கிறார்கள். 
  • முதலாளித்துவ அமைப்பில் எந்த  சிரமமோ  அல்லது உழைப்போ இன்றி  மூலதனத்தின் அளவு பெருகுவதற்கு வட்டியே காரணமாக அமைந்துவிடுகிறது. 
  • சுருக்கமாக சொல்லப் போனால் , வட்டி எனும் கொடிய விஷம்  விளைவிக்கும்  நாசவேலைகள் கொஞ்சமல்ல.  அது இரக்கமின்மையை உண்டாக்குகின்றது. வீண் செலவையும் நீதி தவறிய வாழ்க்கையையும் விளைவிக்கின்றது. பேராசையைப் பெருக்குகின்றது. பொறாமைக்கு வழி வகுக்கின்றது. உலோபித்தனத்தை உற்சாகப்படுத்துகின்றது. வெட்கம் கெட்ட கேவலமான நிலைக்கு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றது. 
ஆனால், இறைவனின் மார்க்கமான இஸ்லாம்  மார்க்கம் ஒன்றே இந்த விஷச்செடியின் விளைவுகளை உலகுக்கு உணர்த்திக் காட்டி இந்த வட்டி வாங்கும் வழக்கத்தின் மேல்  ஒரு போர்ப்பிரகடனம் செய்து வட்டி என்பது  முற்றிலும் சட்ட விரோதமானதென்று பிரகடனம் செய்து தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 

கிரேக்க, ரோம நாகரீகங்களில் மக்கள் வட்டியின் பளுவால் நசுக்கப்பட்டார்கள். ஆனால், தற்கால ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்களைப் போன்றே, அந்த நாடுகளின் சட்டம் சமைத்தோர் அதை முற்றிலும் தடுக்கவில்லை. பைபிளில் வட்டி தடுக்கப்பட்ட போதிலும் யூதரல்லாதவர்களிடம் யூதர்கள் வட்டி வாங்குவதை அனுமதித்துள்ளது. இது ஏன் என்பதை நாம் சிந்தித்தால் விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். யூதர்கள் அல்லாதவர்களுக்கு வட்டிக்குக் கடனைக் கொடுத்துவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் மீது அக்கிரமத்தையும் அநியாயத்தையும் அடக்குமுறையையும் ஏவி விடுவது யூதர்களின் பழக்கம். இதனால்தான் “ஒரு யூதனுடன் கை குலுக்கினால்,  உன் விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள்” என்கிற பழமொழி உலகில் உலவுகிறது. 

திருமறையாம் திரு குர் ஆன் ஒன்றே எல்லா  வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.

 உலகமே வியந்து புகழும் மாபெரும் பெருமைக்குரிய அண்ணலார் நபி (ஸல்)  இந்த வட்டித் தொழில் செய்வோரால் ஏற்படும் துன்பத்தையும் அறிந்து கொண்டு, முஸ்லீம்களை  வட்டிக்குப் பணம் கொடுக்கலாகாதென்று உபதேசித்தார்கள். இறுதி மக்கா புனித யாத்திரை - ஹஜ் - செய்த புனிதமான தினத்தில், நபிபெருமானாரவர்கள் அறியாமைக் காலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய வட்டிப் பணங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டன என்று விளம்பரம் செய்ததோடு, அதற்கு உதாரணமாகத் தங்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு  வர வேண்டிய வட்டித்தொகை   முழுதும் தள்ளுபடியாகிவிட்டதென்று அறிவித்தார்கள்.  

மிகக் கடுமையான சட்டங்களை இஸ்லாமியப் பொருளாதாரம் வட்டிக்கு எதிராக வழங்கி இருக்கிறது. நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும் என உலகப் பொருளியல் வல்லுனர்கள் வியந்து கூறுகிறார்கள். . எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி விகிதம் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரமும் , மக்கள் நிலையும்   முன்னேற்றமடையவே  முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் இன்று  கூறுகின்றார்கள். 

அதுமட்டுமல்ல, இந்த வட்டியில் தொடர்புடைய எல்லோரும் - பத்திரம் எழுதுவோரும் - சாட்சிகளும் - அல்லாவின் சாபத்திற்குள்ளாவார்கள் எனவும் கூறியுள்ளார்கள். ரிபா - கடுமையான வட்டி மட்டும் தடுக்கப்பட்டுள்ளதெனவும், வேறுவிதமான முறைகள் அனுசரிக்கப்படலாம் என்பதும் இந்தக் கட்டளைகளின் பொருளல்ல. ஆனால், இந்தப் போதனைகளெல்லாம் முதலாளித்துவக் கொள்கையின் மனப்பான்மை, ஒழுக்க நிலைகள், கலாச்சாரம், பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அழிக்கவே வெளியிடப்பட்டன. மேலும் ஒரு புதிய அமைப்பை உண்டாக்கி, அதில் கஞ்சத்தனத்திற்குப் பதிலாகத் தானதருமம், சுயநலத்திற்கு பதிலாக ஈகை, இரக்கம்,  அனுதாபம், கூட்டுறவு, வட்டிக்கு மாற்றாக  ஜகாத், பாங்க் முறைக்குப் பதிலாக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், எதிர்கால நலனை நோக்கி ஏற்பட்ட சேமிப்பு முதலியன ஏற்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கவும் இந்தப் போதனைகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

“Makkan verses deal with certain pillars of the Islamic economic system, like obligation of Zakah and prohibition of Riba. “ என்று கூறுகிறார் முனைவர் மன்சூர் காப் என்கிற இஸ்லாமிய பொருளியல்  அறிஞர். அதாவது மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்துகளே இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு தூண்களாக நிற்கும் ஜகாத்தை கடமையாக்கி,  வட்டியை தடை செய்யும்    கருத்துக்களுடையவைகளாக  இறக்கப் பட்டன என்று கூறுகிறார். மேற்கோளாக ,

That which you lay out for increase  (by way of Riba) through the property of (other) people will have no increase with Allah; but that which you lay out for Zakah seeking the Countenance of Allah. (will increase); it is these who will get a recompense multiplied. (30:39)

மனிதர்களின் பொருள்களுடன் (சேர்ந்து) பெருக்குவதற்காக வேண்டி, வட்டிக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களே, அது அல்லாஹ்விடம் (நன்மையைக் கொண்டு) அதிகரிக்காது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நீங்கள் நாடியவர்களாக ஜகாத்திளிருந்து நீங்கள் கொடுப்பதானது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்)அத்தகையோர்தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 

என்பதைக் காட்டுவதுடன்,

It is noteworthy that while providing early hints of the forthcoming economic system of Islam, these Makkan verses associate economic behavior with the doctrine of accountability before God on the Day of Judgement.  

The building of economic system was completed in Madinah with the establishment of state by the Prophet  Muhammed (PBUH). 

இஸ்லாத்தின் பொருளாதார சட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்பதன் ஆரம்பக் குறிப்பை மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்தில் கோடிட்டுக் காட்டிய இறைவன் மதினாவில் நிறுவப்பட்ட  இஸ்லாமிய ஆட்சியில் அமுல படுத்திக் காட்டவைத்தான்  என்றும் கூறுகிறார். 

(Relevance Definition and Methodolagy of Islamic Economics- Dr. Monzer Kahf).

வட்டி கொடுப்போரையும் வாங்கி முடிப்போரையும் பற்றி திருமறை மற்றும் நபி மொழிகள் செய்துள்ள போர்ப் பிரகடனங்களையும் அவை பற்றிய பொருளியல் அறிஞர்களின் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக்களையும்  தொடர்ந்து பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

28 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வட்டியின் கொடுமைகளை ஆங்காங்கே சுட்டி, குட்டி தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
நம் சமுதாயம் அதன் பக்கம் எட்டி பார்க்காமல் ஹலாலான வழியை தருவானாக ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே உங்களின் ஒரு கட்டுரை ஒன்றில் கா.மு.மே.(ஆ).பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம்.ஹாஜா முகைதீன் சார் (மாமா) அவர்களை பிரியத்துக்குரிய மர்ஹூம் அலீய் ஆலிம் (மாமா) அவர்கள் அழைத்து கணக்குப் பாடத்தில் இருந்த வட்டிக் கணக்கு நடத்தியதற்கு எதிர்ப்பை பதிந்தார்கள் என்று...
இந்தச் சுட்டியில் http://adirainirubar.blogspot.ae/2012/11/5.html
வாசித்தது நினைவுக்கு வந்தது !

KALAM SHAICK ABDUL KADER said...

வட்டியைத் தெளிவாய்ச்
சுட்டிக் காட்டியதில்
கெட்டியாய் உணரலாம்
கெட்டிக்காரர் நீங்கள் என்று!

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள தம்பி ஜஹபர் சாதிக் முதல் பின்னூட்டத்துக்கு ஜசக் அல்லாஹ் ஹைரன்.

தம்பி அபுஇபுராஹீம் அவர்களுக்கு தாங்கள் சுட்டியுள்ள சுட்டியில் உள்ள செய்தியை உண்மையில் இந்தப் பதிவில் மேற்கோளாகக் காட்டியே இந்த அத்தியாயம் தொடங்கி இருந்தேன். ஆனால் அத்தியாயத்தின் நீளம் கருதி குறைத்துவிட்டேன்.

அன்பின் கவியன்பன், ஜசாக் அல்லாஹ். முதலில் பொறுத்தருள்க. நேற்று பள்ளி திறப்புவிழாவுக்கு வந்திருந்த தங்களை தொலைக் காட்சி பெட்டியில் மட்டுமே சந்திக்க முடிந்தது. அவ்வளவு கடுமையான கூட்டம் மாஷா அல்லாஹ். அதிரையில் பாதி அங்குதான் இருந்தது. நான் இயலாமை கருதி பத்தரை மணிக்கே உள்ளே சென்று அமர்ந்துவிட்டேன். ஆகவே சந்திக்க இயலவில்லை. என்னைப் புரிந்த நீங்கள் தவறாக எடுக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வட்டி சம்மந்தமான இபுறாஹிம் அன்சாரி காக்காவின் இவ்வாக்கத்தின் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு விரிவுரையே எழுதி தெரிந்தே வட்டி வாங்குவோர், கொடுப்போரின் முகங்களில் ஒட்டப்படவேண்டிய அழகிய ஆழமான பதிவு இது.

மிகவும் வேதனையோடு நான் ஊரில் இருக்கும் சமயம் ஏற்பட்ட ஒரு நிகழ்வை இங்கு பதிகிறேன். சாய்ங்காலம் புதுமனைத்தெரு வீட்டிலிருந்து சென்று கொண்டிருக்கிறேன். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் இரண்டு மாற்றுமத ஆண்கள் கையில் வீட்டின் விலாசம் எழுதப்பட்ட ஒரு பேப்பர் வைத்துக்கொண்டு என்னை கண்டதும் வாகனத்தை நிறுத்தி இந்த விலாசம் எங்குள்ளது? என சொல்ல இயலுமா? எனக்கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் தாங்கள் யார்? என தெரிந்து கொள்ளலாமா? எனக்கேட்டதற்கு நாங்கள் ஃபைனாஸிலிருந்து வருகிறோம் என்றனர். எனக்கு தூக்கி வாரிப்போட்ட‌து. பின்ன‌ர் அவ‌ர்க‌ள் கையில் உள்ள‌ பேப்ப‌ரை வாங்கி பார்த்தேன் அதில் நம் சமுதாயத்தின் ஒரு பெண்ணின் பெய‌ர் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. அதைக்க‌ண்ட‌தும் இத‌ய‌மே வெடித்துச்சித‌றிய‌து போல் இருந்த‌து அந்த‌ விலாச‌த்தில் குறிப்பிட்டுள்ள‌ பெண் யார் என்று தெரியாம‌ல் இருந்த‌ போதிலும். அவ‌ர்க‌ளிட‌ம் உண்மையில் தெரியாது என‌ சொல்லி அங்கிருந்து ந‌க‌ர்ந்தாலும் இதுவெல்லாமா ந‌ம் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கிற‌து? என‌ பெரும் ஆச்ச‌ர்ய‌த்துட‌னும், வேத‌னையுட‌னும் அங்கிருந்து ந‌க‌ர்ந்தேன்.

இந்த இழிநிலைக்கு அந்த‌ பெண்ணை ஆளாக்கிய‌து யார்? கையாளாகாத‌ க‌ண‌வா? இருந்தும் கொடுக்காத ச‌கோத‌ர‌னா? பெரும் பணங்காசுகள் இருந்தும் பண உதவி செய்யாத‌ அவள் குடும்ப‌த்தின‌ர்க‌ளா? அவ‌ளுடைய‌ பேராசையா? ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டா? ஏழை வ‌ரி (ஜகாத்) முறையே ப‌கிர்ந்து கொடுக்க‌ப்ப‌டாமையா? குடும்ப‌த்தின‌ர்க‌ளால் அவ‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ வேறேதேனும் துரோக‌மா? நாளை ம‌ர‌ண‌த்திற்குப்பின் அவ‌ளுடைய‌ அந்த‌ வ‌ட்டி வாங்கி/கொடுத்த‌ செய‌லுக்காக‌ அவ‌ள் ம‌ட்டும் தான் ப‌டைத்த‌ அல்லாஹ்வால் த‌ண்டிக்க‌ப்ப‌டுவாளா? இப்ப‌டி ஏராள‌மான‌ கேள்விக‌ள் எம் இத‌ய‌த்தில் தொட‌ர் வ‌ண்டி போல் தொட‌ர்ந்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ தொட‌ர் வ‌ண்டி இறுதியில் போய் சேர‌ வேண்டிய‌ இட‌ம் எதுவோ? அதுவே ம‌ஹ்ச‌ராக‌ இருக்குமோ? அல்லாஹ் அஹ்ழ‌ம்.

இதைவிட‌க்கொடுமை ந‌ம் இஸ்லாமிய‌ ச‌மூக‌த்தின‌ரே இத்தொழிலை ம‌றைமுக‌மாக‌வோ, வெளிப்ப‌டையாக‌வோ செய்து வ‌ருவ‌து அண்மைக்கால‌ங்க‌ளில் ப‌ர‌வ‌லாக‌ கேள்விப்ப‌டும் செய்தியாகி விட்ட‌து. அல்லாஹ்வின் க‌வ‌ன‌ம் அர‌பு பேசும் ச‌வுதி, துபாய் ம‌க்க‌ளின் ப‌க்க‌ம் ம‌ட்டும் தான் இருக்கும் என‌ நினைத்துக்கொண்டார்க‌ள் போலும்......

அல்லாஹ் என்ப‌வ‌ன் எதோ ஒரு குறிப்பிட்ட‌ எல்லைக்கு ம‌ட்டும் ஆட்சி அதிகார‌ம் செலுத்தும் எல்லைச்சாமி அல்ல‌. அகில‌ம் தாண்டி அனைத்தையும் ஆட்சி புரிப‌வ‌ன். யா அல்லாஹ்! எங்க‌ளை யாரோ, எவ‌ரோ போல், காஃபிர்க‌ள் போல் க‌ருதி எதிலும் த‌ண்டித்து விடாதே நாய‌னே......

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
அருமையான விளக்கங்கள். 
 
உலகப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளில் பிரதானமானதாகக் கருதப்படும் வட்டியைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் விளக்கும் இவ்வத்தியாயம் வட்டியின் விளைவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
 
பேசுபொருளைப் பற்றி எங்களுக்கு அறிவூட்டும் தங்களுக்கு கடப்பாடு உள்ளவர்களாக எங்களை ஆக்கிவிட்டீர்கள். பிரதிபலன் எதிர்பாராத தங்களின் இந்த எழுத்துப்பணிக்கான தங்களின் எதிர்பார்ப்பு இறைப்பொருத்தத்தையன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது, அல்லவா?
 
பெரும் ஆய்வுக் கட்டுரையை மிகுந்த சிரமங்களுக்கிடையே எழுதி வரும் தங்களின் உழைப்பிற்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தங்களுக்குத் தந்தருள்வான் காக்கா.
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
 

sabeer.abushahruk said...

காக்கா,
வட்டியினால் விளையும் லாபத்திற்காக, இஸ்லாமியர் பலர் வட்டியை அதன் நேரிடையான அர்த்தத்தோடு கையாளாமல், வேறு வடிவங்களில் புலங்குகிறார்கள்.  உதாரணத்திற்கு:
-ஒத்திக்கு வாங்குதல்
-கமிஷன்
-அன்பளிப்பு
எனக்கு ஓரளவு இவற்றைப் பற்றிய புரிதல் இருப்பினும் காக்கா பின்னூட்டமாகவோ அடுத்தப் பதிவிலோ இவற்றைப் பற்றி வரையறுத்தால் இந்தப் பதிவுக்கு அது இன்னும் வலு சேர்ப்பதோடு குழம்பியிருப்பவர்களுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்.
 
மேலும், இன்சூரன்ஸைப் பற்றிய நம் இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடு என்னவென்பதையும் தங்களின் எதிர்வரும் அத்தியாயங்களில் விளக்குங்கள் என்பது இப்பதிவின் தலைமை ரசிகனின் வேண்டுகோள்.
 
நன்றியும் துஆவும்.
 

Anonymous said...

வட்டி பற்றிய விரிவான விளக்கம் உலக பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தை நமக்கு நன்கு விளக்குகிறது. .பணத்தின் மீது மனிதனின் தீராத மோகம் வட்டியின் ஒருவிதை: சமுகம் பணம் வைத்து இருப்பவனுக்கு கொடுக்கும் மதிப்பு மரியாதை பணம் இல்லாத ஒரு நல்ல மனிதனுக்கு கொடுக்காமல் போனது நாடறிந்த உலகறிந்த உண்மை.

நல்ல மனிதர்கள் ஏழ்மையின் காரணமாக புறக்கணிக்கப்படும் போதும் அவமானப்படும் போதும் தன் ஏழ்மையை போக்கி பணத்தை பெருக்க குறுக்கு வழிதேட ஆரம்பிக்கிறார்கள் .அந்த வழிகளில் ஒன்றுதான் வட்டியின் வடிவில் தோற்றம் பெற்று திகழ்கிறது.

சமூகமோ, மதமோ, நாடோ' குற்றங்களின் ஆணிவேர் 'எங்கே இருக்கிறது என்று கண்டு குறைகளை நீக்கினாலே தவிர தீமைகள் ஒழியப் போவதில்லை. உலக சரித்திரத்தை மாற்றிய பிரெஞ்சு புரட்சிக்கு விதை வறுமையே.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

ZAKIR HUSSAIN said...

வட்டி தடுக்கப்பட்ட விசயம். ஆனால் இதை வைத்து உண்மையான முஸ்லீம்கள் இந்தியாவில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய முடியும்.

இந்தியாவில் 176,000,000 முஸ்லீம்கள் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

இவர்கள் அனைவருக்கும் சரியான முறையில் இஸ்லாமிய வங்கி [Islamic Banking ] / இஸ்லாமிய இன்சூரன்ஸ் [Takaful ] / இஸ்லாமிக் இன்வஸ்ட்மென்ட் [ Islamic Mutual Funds ] செய்து தரக்ககூடிய கம்பெனிகள் இல்லை. இதை சரியான முறையில் முதலீடு செய்பர்களை கண்டு பிடித்து ஆரம்பித்தால் நிச்சயம் உலக ரீதியில் முன்னனியில் இருக்கும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களை நடத்தி வெற்றி பெற முடியும்.

சில பெரிய கம்பெனிகள் இப்போது இந்தியாவுக்குள் இந்த விசயத்திற்காக நுழைய இதுவரை தயாராகி இருக்கும்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு அலைக்குமுஸ்ஸலாம் .

இன்ஷா அல்லாஹ் தாங்கள் குறிப்பிட்டுள்ள துறைகள் நம்முடைய செலபசில் இருக்கின்றன. தங்களைப் போன்ற அன்புடியோர்களின் து ஆ வால் அவற்றைப் பற்றியும் இன்னும் விளங்கும்படி எழுத இறைவன் துணை நிற்பானாக!

தம்பி ஜாகிர்! இந்தியாவின் பிரதம மந்திரியும் ஒரு பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் அண்மையில் இஸ்லாமிய அடிப்படையிலான வங்கி முறைகளைப் புகழ்ந்து பேசி இருக்கிறார். விரைவில் இந்தியாவில் பரவலாக இஸ்லாமிய வங்கி முறைகளுடைய வங்கிகளும் செயல்படப் போகின்றன. இஸ்லாமிய வங்கி முறைகளைப் பற்றி எழுதும் போது இவைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுத எண்ணி இருக்கிறேன்- நான் உணர்ந்தவைகளை.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி மண்வாசனை என்றும் மணக்கும் உள்ளம் கவர் மைந்தர் நெய்னா அவர்களுக்கு,

நமதூரில் பரவலாக நடைபெறும் அவலத்தை "நச் " என்று உங்கள் பாணியில் விவரித்து இருக்கிறீர்கள். நமதூரில் பெண்கள் - அதுவும் வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்கள்- பிற மத ஆண்களிடம் கொடுமையான வட்டிக்குப் பணம் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்கிற ஏழெட்டு கதைகள் என் கவனத்துக்கு வந்தன. எனக்குத்தெரிந்து ஒரு கணவர் மாதாமாதம் தேதி தவறாமல் கை நிறையப் பணம் அனுப்புகிறார். ஆனால் மனைவி பால்காரர், பைனானஸ்காரன், பிறமதத் தெருக்களில் தனிப்பட்ட கொடுவாள் மீசை வைத்திருக்கும் வட்டிக்காரர்களிடமும் பணம் வாங்கி பெரும் பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டன.

கணவரை கன்வின்ஸ் செய்து அந்தக் கடனை எல்லாம் ஒன்றுக்கு இரண்டாகக் கொடுத்து தீர்த்த பின்னும் மீண்டும் மீண்டும் அந்த சேற்றில் விழுந்த அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.

நமது பெண்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் இந்த வட்டிக்குக் கொடுப்பவர்கள், பைனான்ஸ்காரர்கள் உடனே தூக்கிக் கொடுத்துவிடுகிறார்கள். காரணம் வீட்டு வாசலில் போய் ஒரு சத்தம் போட்டால் யாராவது குடும்பத்தினர் தலையிட்டு அந்தக் கடனைத் தீர்த்துவிடுவார்கள் என்கிற தைரியத்தில் அப்படி அள்ளிக் கொடுக்கிறார்கள்.

Ebrahim Ansari said...

மற்றொன்று தம்பி நெய்னா,

இன்று நமது பகுதிகளில் பெண்கள் வாழ்வது தன் கணவரின் வருமானத்தின் அளவுக்கு தனது வாழ்க்கைச்செலவுகளை வகுத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் அல்ல. தனக்கு அடுத்த வீட்டில் அல்லது உறவினர்கள் வீட்டில் எப்படி வாழ்கிறார்களோ அப்படித்தானும் வாழவேண்டுமென்று நினைப்பது.

அடுத்த வீட்டுக் காரர் பெரிய சம்பளக் காரனாக இருப்பார். நிறைய நுகர்வோர் பொருள்களை தன் வீட்டுக்கு வாங்கிப் போட்டு இருப்பார். ஆனால் கடன் வாங்கியாவது குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்பவரின் மனைவியும் பிள்ளைகளும் கூட அவைகள் தாங்கள் வீட்டுக்கும் வந்தாக வேண்டுமென்று அடம்பிடிப்பார்கள். பொருள்களில் மட்டுமல்ல சுற்றுலா, திருமணம் முதலிய பல விஷயங்களிலும் இந்நிலை. இதற்காக அவர்கள் வாங்குவது வட்டிக்கு அல்லது வைப்பது வங்கிகளில் நகைகளை.

கனரா வங்கியிலும் இந்தியன் மற்றும் ஸ்டேட் வங்கிகளிலும் நமது பெண்களின் கூட்டத்தைப் பாருங்கள். ஏன்?

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய மச்சான் பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் ஒரு கருத்துப் பெட்டகம்.

சூரியனிலிருந்துதான் வெளிச்சத்தை மற்ற கிரகங்கள் பெற்றுக் கொள்ளுமாம்.
எனது எழுத்துக்கள் சிறு வெளிச்சம் தருமென்று நீங்கள் கருதினால் அந்த வெளிச்சம் என்னில் வரக் காரணம் கம்பு ஊன்றி நடக்கும் இந்த சூரியனே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், E.A. Kaka,

வட்டிக்கு பயந்தே கடன் அட்டை வாங்காமல் காலம் கடத்தும் நபர்களில் நானும் ஒரிவன்.

தெளிவான விளக்கம். ஜஸக்கல்லாஹ் ஹைரன்

Unknown said...

இஸ்லாமிய பொருளாதார சிந்தனை என்னும் இத்தொடர் உண்மையில் ஒவ்வரு வரும் குறிப்பாக செல்வந்தர்கள் படித்து உணர வேண்டிய ஒரு தொடர்.

இவ்வளவு அழகாக வட்டியின் ஆணிவேரை பிடுங்கிய ஏறிய வேண்டியதின் முக்கியத்துவத்தை தெளிவாகச்சொல்லி அது அல்லாஹ்வோடு போர் தொடுப்பதற்கு சமம் ( நம்மால் போர் தொடுக்க முடியுமா என்பது வேறு விஷயம்)
என்ற ஒரு எச்சரிக்கையையும் அழகாக சொல்லி நம்மை இத்தீய பழக்கத்திலிருந்து தடுக்கப்போராடுகின்றீர்கள். உங்கள் முயற்ச்சிக்கு இறைவன் துணை நிர்ப்பான்.

ஒரு பொருளாதார மேதைக்கு சமமாக எழுதி வருகின்றீர்கள். உங்கள் ஆக்கம் அவ்வப்பொழுது எங்கள் சிந்தனைகளையும் தட்டி எழுப்பத்தான் செய்கின்றது.
ஜக்காத்தும் தான தர்மமும் உலகில் மிகைத்து விட்டால் வட்டி என்னும் அரக்கனை அடியோடு அழித்து விடலாம் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை இவர்கள் கையில் எடுத்தால் ஒழிய , இத்தீவினை உலக முடிவு நாள் வரை தொடரத்தான் செய்யும்.என்ற உங்கள் அழகிய சிந்த்தனை இக்கட்டுரைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.

வட்டியை அல்லாஹ்வுக்கு எதிரான போர்ப்பிரகடனமாக திரு மறை குரான்
பகிரங்கப்படுத்தி வட்டியின் தீமையை பறை சாற்றி உலக முடிவு நாள் வரை தன புகழை தக்க வைத்துக்கொண்டதில் என்ன ஆச்சரியம் ? ஏனனில் எல்லோரையும் விட மிகப்பெரிய பொருளாதார மேதையால் இறக்கப்பட்ட தல்லவா இந்த அறிவுக்கலஞ்சியமான குரான். ஆதலால் என்று ஆட்சியாளர்கள் கையில், குற்றவியல் சட்டமாகட்டும், பொருளாதார சட்ட மாகட்டும், அரசியலாகட்டும், ஆன்மீக மாகட்டும், திருக்குர்ஆன் முன்னே விரிகின்றதோ அன்று தான் இவ்வுலகிற்கு விடிவு காலம்,

அதுவரை, எத்தனை மேதைகள் வந்தாலும், எத்தனை சட்டங்களை இயற்றினாலும், மனிதன் இயற்றியது அனைத்தும் மாற்றத்திற்குரியதே என்பதற்கு இலக்கணமாக அனைத்தும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
அல்லாஹ்வின் சட்டம் அமுலுக்கு வரும் வரை.

அபு ஆசிப்.

Unknown said...

The literal meaning of interest or Al-RIBA as it is used in the Arabic language means to excess or increase. In the Islamic terminology interest means effortless profit or that profit which comes free from compensation or that extra earning obtained that is free of exchange.


"Riba` is a loan with the condition that the borrower will return to the lender more than and better than the quantity borrowed."

Unknown said...

ஒரு முஸ்லிம் வட்டி எனும் கொடிய நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் அவன்

இறையச்சம் உள்ளவனாகவும்
மனிதாபிமானம் உள்ளவனாகவும்
உறவினர்களை ஆதரிக்கக் கூடியவனாகவும்,
உழைப்பைக் கையில் கொண்டவனாகவும்
தகுதி இருப்பின் ஜகாத்தை முறையாகக் கொடுக்க கூடியவனாகவும் தானும் மாற வேண்டும்; தன் சமுதாயத்தையும் மாற்ற வேண்டும்.

மேலும் தன் சமுதாயத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு வட்டியில்லா வங்கியைத் தொடங்க வேண்டும். அந்த வட்டியில்லா வங்கியை இறையச்சம் மிகுந்தவர்கள் நிர்வகிக்க வேண்டும். இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும் இதுவே ஆகும். இதனைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக இறைவன் நம்மை மாற்றி, வட்டி எனும் இக்கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி அபூ ஆசிப் அவர்களின் அன்பான கருத்துரைகள் நான் மட்டுமல்ல இந்தத் தளத்தில் எழுத்தும் அனைவரும் எதிர்பார்ப்பவை. காரணம், அவற்றில் பாராட்டுக்கள்- ஊக்கப் படுத்துதல் மட்டும் இருக்காது. பதிவுக்கு வலு சேர்க்கும் கருத்துக்களும் இருக்கும்.

ஜசாக் அல்லாஹ் தம்பி.

நீங்கள் ஒரு சிறந்த பாடகர் என்று உங்களின் வகுப்புத் தோழர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

விதவைக்கு மணம் வேண்டுமென்றார்
விக்கிரக ஆராதனை கூடாதென்றார்
மது சூது கொலை களவு பாவம் - கொடும்
வட்டியும் வாங்காதீர் என்றுரைத்தார்.

என்ற வரிகளை நினைவூட்டுகிறேன்.

சிறந்த கருத்துக் கருவூலமான நீங்கள் ஒரு தனி ஆக்கம் எழுத வேண்டுமென்ற எனது ஆசையை தெரிவித்துக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

Abdul Razik said...

//திருமறையாம் திரு குர் ஆன் ஒன்றே எல்லா வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.//


அழகிய பொருளியல் ஈட்டல் , அதை பெருக்கல் செலவழித்தல் சேமித்தல் என்று, முறையான வழி முறைகளை கற்றுத்தந்த நபி அவர்களை தாயிப் நகர மக்கள் கள்ளால் அடித்தார்கள். இன்னாலிலில்லாஹி........

வட்டியின் பாவங்களைப் பற்றியும் இஸ்லாம் வட்டியின் தீமையை எப்படி விளக்கி உள்ளது என்றும் மிக அழகான முறையில் எழுதி இருக்கிறீர்கள். மாஷா அல்லாஹ். மேலும் இஸ்லாமிய பொருளியல் சம்மந்தமான விளக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

Ebrahim Ansari said...

சகோதரர் அப்துல் ராசிக் அவர்களுக்கு,

அடுத்த அத்தியாயமும் அவசியம் படித்து கருத்திடும்படிக் கோருகிறேன்.
இன்ஷாஅல்லாஹ்.

ஜசக் அல்லாஹ் ஹைரன்.

அப்துல்மாலிக் said...

நெய்னா சொன்ன அந்த விடயம் தொண்டுதொட்டு இருக்கிறது, சைக்கிளில் வந்த அவர்கள் இப்போவெல்லாம் காரில் வந்து வசூல் செய்கிறார்கள் என்ற செய்தி வருத்தம் தருவதுதான். தத்தமது குடும்பத்தை அதன் தலைவன் ஆண்மகனால் மட்டுமே இதை தடுக்க முடியும்.

மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் அலைக்களிப்பால் எப்பாடுபட்டாவது இன்னிக்கே வாங்கிடனும் இல்லேனா அந்த இடம் கிடைக்காது, நாளைக்கு வேல்யூ 3 மடங்காகிடும் என்று ஆசை வார்த்தையால் எல்லா வங்கி வாசலிலும் நகைகளுடன் காத்துக்கிடக்கும் மக்கள் கூட்டம்.............

இதில் சம்பந்தப்பட்ட எல்லோருமே இந்த பாவத்துக்குட்படுறோங்க என்ற வருத்தமும் இருக்கதான் செய்கிறது...

Unknown said...

greatest doctorines of economics in the light of Islam, much appreciable article Kaka, my precious duvas for your health and more innovative & bewitching chapters add to its. we would also expect from your acumen on the Credit cards. We are still in rudimentary on these cards funda. As you know most of Islamic banks operating in Gulf Countries that we believe their system has been developed truly as per Sharia. But they too offering CR cards as same as conventional banks - please add this also in your agenda. It would be great help to people away from...
Shahul Hameed (AES)

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு,
கடன் அட்டைகளைப் பற்றி கேட்டு இருக்கிறீர்கள். வட்டி போட்டு வரும் பல வேஷங்களில் இந்த கடன் அட்டை ஒரு கொடிய முகம் கொண்டது. தீங்கிலும் மிகத் தீங்கு.

இது பற்றி மிக அண்மையில் அதிரை நிருபரில் ஒரு விவாதக்களம் நடந்தேறியது. இதன் சாதக பாதகங்களை நமது பதிவாளர்களும் படிப்போர்களும் விவாதித்தார்கள். அவற்றை மீண்டும் படித்தால் அனுபவபூர்வமான பல செய்திகளை நீங்க விளங்கிக் கொள்ள இயலும். நானும் தொடரில் நீண்டுவிடாத அளவுக்கு குறிப்பிடுவேன். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாமிய வங்கி முறைகள் பற்றிய அத்தியாயம் வரும்பொழுது இது பற்றிய விபரங்கள் வரும்.

தம்பி நெறியாளர் அவர்களுக்கு கடன் அட்டை பற்றிய விவாதக் களத்தின் இணைப்பை சாகுல் ஹமீது அவர்கள் படிப்பதற்காகத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

//Ebrahim Ansari காக்கா சொன்னது…

தம்பி நெறியாளர் அவர்களுக்கு கடன் அட்டை பற்றிய விவாதக் களத்தின் இணைப்பை சாகுல் ஹமீது அவர்கள் படிப்பதற்காகத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். //


http://adirainirubar.blogspot.ae/2013/04/blog-post_26.html

Unknown said...

JAZAKALLAH KHAIRAH, Kaka I shall go through AN link on CR cards debates. May ALLAH shower his blessings on you for your worthful efforts to community...

Unknown said...

JAZAKALLAH KHAIRAH for providing the link as EA kaka recommended.

Yasir said...

வட்டியின் அசலை தோலுரித்துக்காட்டி...அச்சம் கொள்ள வைத்த ஆக்கம்...கீப் கோயிங் மாமா...

Ebrahim Ansari said...

//வட்டியின் அசலை தோலுரித்து// ஆஹா
கலக்குறீங்க அன்பு மருமகனார் யாசிர் அவர்களே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு