Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்றேனும் சிந்தித்ததுண்டா எதிர்கால வீட்டைப்பற்றி?... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2013 | , , , ,

இது ஒரு மீள்பதிவு - மரணங்கள் நிகழ்வது அல்லாஹ்வின் நாட்டமே ! நாம் சந்திக்கும் மரணங்கள் அதன் தாக்கம் எப்படியெல்லாம் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன. மரண தருவாயில் நிகழும் சூழலும் அங்கே இந்த அற்ப உலகிற்கும் மறுமைக்கும் நடக்கும் போராட்டத்தில் தவிக்கும் உயிருக்கு நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நிச்சயமாக நாமும் அந்த மரணத்தை ஒருநாள் சந்தித்தே தீருவோம் இன்ஷா அல்லாஹ் !.

சற்று நேரம் நம் அன்றாட அலுவல்களை நிறுத்தி விட்டு நமக்கு நாமே இந்த கேள்வியை என்றைக்கேனும் கேட்டிருக்கிறோமா எதிர்கால வீட்டைப்பற்றி?

மண்ணறையில் (கப்ரில்) எனக்கு முதல் இரவில் என்ன நடக்கப்போகிறது?

நான் அதற்காக என்ன தயார் செய்து வைத்திருக்கின்றேன்?

நான் சொர்க்கத்தில் இருப்பேனா? இல்லை நரகத்தில் இருப்பேனா?

எவ்வாறெல்லாம் நான் மரணத்தை அடிக்கடி வாழ் நாளில் நினைவு கூர்ந்தேன்?

சற்று சிந்தித்த பொழுது மய்யித்தான உடல் நன்கு கழுவப்பட்டு கப்ருக்கு எடுத்து செல்ல தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்த நாள்/நேரம் வரும் பொழுது உடலை மக்கள் (உற்றார், உறவினர்) சுமந்து நமக்கான மண்ணறைக்கு எடுத்துச்செல்வர்.

குடும்பத்தினரின் அழும் குரல்களுக்கிடையே உடல் மண்ணறையில் இறக்கி வைக்கப்படுகிறது.

சற்று சிந்திப்போம் நமக்கு நாமே. மண்ணறையைப் பற்றி. ஆம் நிச்சயம் அது ஒரு இருண்ட மரணப்படுகுழி தான் சந்தேகமில்லை.

தனிமை...இருள் சூழ்ந்த இருட்டறை...உதவிக்காக அழுதிடுவோம் நம் அழுகுரல் யாருக்கும் கேட்காமலேயே...யாரும் நமக்கு உதவிட இயலாது..அந்தோ பாவம் நம் வேதனைகளும் உலகுக்கு சொல்ல விரும்பும் உண்மைகளும் யாரும் அறிந்திடமாட்டோம்... உடலின் எலும்புக்கூடுகள் நெருக்கப்படும்/நொறுக்கப்படும் அவ்வேளையில்...

நிச்சயம் வருந்துவோம் நாம் வாழ்நாளில் செய்த எல்லாத்தீய காரியங்களை எண்ணி...வருந்துவோம் பொடுபோக்காக காரணமின்றி விடப்பட்ட ஐங்காலத்தொழுகையை எண்ணி....

வருந்துவோம் உலகில் இன்னிசைகளை தன் செவியில் தன்னை மறந்து கேட்டனுபவித்ததற்காக...

வருந்துவோம் நம் அவமரியாதையான குணத்தை பிறர் மீது காட்டியதற்காக குறிப்பாக பெற்றோர்களை அவமரியாதை செய்ததற்காக...

பெண்கள் வருந்துவார்கள் தன் மேனியை உலகம் பார்த்து மகிழ ஹிஜாப் அணியாமல் சுற்றித்திரிந்ததற்காக...

வருந்துவோம் இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காமல் விட்டதற்காக....

வருந்துவோம் மார்க்க அறிவை பெறாமல் உதாசீனப்படுத்தியதற்காக...

நிச்சயம வருந்துவோம்...நம் எல்லா துர்குணங்களுக்காகவும், செய்த தீய காரியங்களுக்காகவும்...

அங்கு தப்பிக்க வழியில்லை. கைக்கொடுக்க ஆட்கள் இல்லை... சிபாரிசு செய்ய நாதியில்லை...எல்லா தீய காரியங்களுக்காக தண்டணையை அனுபவித்தே தீர வேண்டியுள்ளது. தனிமையாக்கப்பட்டோம் நம் அமல்களுடன்... அங்கு பணமில்லை, ஆபரணஙகளில்லை... ஒன்றுமில்லை.... நம் அமல்கள் மட்டும்...

மரணப்படுகுழி மூடப்படும் பொழுது... அலறிக்கொண்டே நம்மைவிட்டு செல்பவர்களிடம் கெஞ்சுவோம்... என்னவர்களே தயவு செய்து என்னை தனியே விட்டு, விட்டு போகாதீர்கள். என் மரணப்படுகுழி அருகிலேயே இருங்கள்... யார் கேட்பார் உயிரற்ற உடலின் உள்ளக் குமுறலை...

ஆனால் நம் கதறலை எவரும் கேட்டிலர்...அவர்கள் வந்த வேலை முடிந்தவர்களாய் திரும்பி செல்ல அடி எடுத்து வைப்பதை நாம் செவியுறுவோம்... கதறுவோம்.

நாம் நினைத்தோம் ஒரு போதும் இவ்வுலகை விட்டு செல்லமாட்டோமென்று.  நாம் நினைத்தோம் நம் நண்பர்கள், உறவினர்களுடன் என்றும் நிலைத்திருப்போமென்று. நாம் நினைத்தோம் என்றுமே மகிழ்ச்சிக்கடலில் மிதப்போமென்று...இல்லை...நாம் நினைத்ததில் உண்மையேதுமில்லை... முற்றிலும் தவறானதைத்தவிர....வந்தவர்கள் சென்றுவிட்டார்கள் வந்த வேலை முடிந்தவர்களாய்...தனிமையில் இருளில் அகப்பட்டுக்கொண்டோம்... தினம், தினம் இன்றே சிந்தித்திடுவோம்... நம் எதிர்கால வீட்டைப்பற்றி.... அங்கே நேர்த்தியான வீட்டைப்பெற இங்கு நம் வாழ்நாளில் உழைத்திடுவோம்...


நாம் ஒரு போதும் இதை உதாசீனப்படுத்திட இயலாது. இது நம் நினைவில் என்றும் வந்து போகும் ஒன்றாகட்டும்...ஒவ்வொரு தடவை தவறுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்பொழுதெல்லாம் நாம் இந்த நினைவை முன்னிறுத்தி தடுத்திடுவோம் தவறுகளை தகர்த்தெறிவோம் தீய துர்க்குணங்களை..நினைத்திடுவோம் அணுதினமும் தற்காலிக சந்தோஷங்களுக்கு நிரந்தர ஆப்படிக்கும் இந்த அழையா விருந்தாளியை (மரணம்) ஒரு போதும் மறந்திடல் வேண்டாம்...

"ஏழையாக நாம் பிறந்தது நம் தவறல்ல; மாறாக இறுதியில் ஏழையாக நல்ல அமல்களின்றி வெறுமனே செத்து மடிவது நிச்சயம் நம் தவறே".

அல்லாஹ் வர இருக்கின்ற புனித ரமளானின் பொருட்டு காலஞ்சென்ற நம் எல்லாக்கப்ராளிகளின் கப்ருகளை சொர்க்கத்தின் பூஞ்சோலைகளாக்கி எஞ்சியுள்ள நம் யாவரின் இறுதிப்பயணத்தை இனிய பயணமாக்கி தந்தருள நாமெல்லாம் நம்மைப்படைத்தவனிடமே இறைஞ்சிடுவோம்....

எனக்கு வந்த ஒரு மின்மடலின் தோராயமான தமிழாக்கம்.. தயவு செய்து இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.

மு. செ. மு. நெய்னா முகம்மது

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அணுதினமும் அதுபற்றி சிந்தித்து அல்லாவுக்கு அஞ்சி நடப்போமாக. ஆமீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

காலஞ்சென்ற நம் எல்லா முஸ்லீம்களின் கப்ருகளை சொர்க்கத்தின் பூஞ்சோலைகளாக்கி எஞ்சியுள்ள நம் யாவரின் இறுதிப்பயணத்தை இனிய பயணமாக்கி தந்தருள நாமெல்லாம் நம்மைப்படைத்தவனிடமே இறைஞ்சிடுவோம்....

Shameed said...

இந்த சிந்தனைகள் அனுதினமும் இருந்தால் நாம் அனைத்து பாவங்களிலும் இருந்து விலகி இருப்போம் என்பது நிச்சயம்

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா அவர்கள் சிரிக்க மட்டும் எழுதுபவரல்ல இப்படிப் பட்ட உணர்வு பூர்வமான - ஆழமான சிந்தனைகளையும் எழுதுபவர் என்பதை நிருபிக்கும் ஆக்கம்.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பதிவு. இதயத்தை ஒரு உலுக்கு உலுக்குகிறது. படைத்தவனிடம் இறைஞ்சுவோம்.

Unknown said...

முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம் நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்,இந்த சிந்தனை கட்டுரை அதற்க்கு சான்று.

Unknown said...

காலஞ்சென்ற நம் எல்லா முஸ்லீம்களின் கப்ருகளை சொர்க்கத்தின் பூஞ்சோலைகளாக்கி எஞ்சியுள்ள நம் யாவரின் இறுதிப்பயணத்தை இனிய பயணமாக்கி தந்தருள நாமெல்லாம் நம்மைப்படைத்தவனிடமே இறைஞ்சிடுவோம்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.