நான்காம் ஆண்டிலும்
நன்மையே வேண்டி !
மூன்றாண்டு காலம்
முத்துக் குளித்தோம்
இணையக்கடல் எமக்கு
எத்துணைத் தந்ததோ
அத்துணையும் உங்களுடன்
அன்புடன் பகிர்ந்தோம்
கண்டெடுத்துக் கரைசேர்த்தது
ஏராளம்
ஒத்துழைத்த உங்கள் மனம்
தாராளம்
மொழியை மெருகேற்றினோம் -நல்
வழியைக் கருவாக்கினோம்
அரசியலை அலசினோம் - அதன்
விரிசல்களில் வெளிச்சமிட்டோம்
இஸ்லாத்தை எத்தி வைத்தோம் - இதில்
பிரிவுகளைக் குட்டி வைத்தோம்
சமுதாயச் சீர்திருத்தமும்
சீர்கேட்டில் சிறு திருத்தமும் சொன்னோம்
உள்ளத்திற்கு
உரமூட்ட "படிக்கட்டுகள்"
அமைதியூட்ட "அருமருந்து"
மகிழ்வூட்ட "நபிமணியும் நகைச்சுவையும்"
நெகிழ்வூட்ட "அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்"
ஆஃப்ரிக்கா முதல்
அமெரிக்காவிலிருந்து அதிரை வரை
அழகிய "பயணக் கட்டுரைகள்" பல கண்டோம்
பேச்சற்ற இடங்களைப்
"பேசும் படங்களாக்கினோம்"
கற்றோரும் மற்றவரும்
மெச்சுகின்ற "கவி" படைத்தோம்
"மனுநீதி மனிதகுலத்திற்கு நீதியா"
ஆய்வுக்கட்டுரையை
அகிலத்தின்
புத்தியைப் புதுப்பிக்கப்
புத்தகமாய்ப் பதிப்பித்தோம்
"பழகு மொழி"யெனத் தமிழை
அழகாய்க் கற்பிக்கிறோம்
அற்ப உலகின்
பொருளாதாரக் கொள்கைகளை
மண்டியிட வைக்கப் போகும்
"இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்"
ஆராய்ச்சி தொடர்கிறது
ஆங்கிலத்தின் அவசியத்தை
அவ்வப்போது வலியுறுத்துகிறோம்
குருட்டுப் பார்வை
மாறுகண்
மங்கியப் பார்வை
என
எல்லாப் பார்வைகளையும்
ராஜபார்வையால்
சீராக்கி
மருண்டும் மருகியும்
உழன்ற இஸ்லாமிய
இக்காலக் கவிஞர்களுக்காக
வக்காலத்து வாங்கினோம்
"கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை"யில்!
விதி மீறலைச் சுட்டினோம்
வீதி யெங்கும் பேசவைத்தோம்
சதி யேதும் நிகழாமல்
நீதி கேட்டு நிமிர வைத்தோம்
விவாதக்களம் அமைத்தோம்
விரசமில்லா விமர்சனமும்
துணிவான தூண்டல்களே என
தனியொரு விதி படைத்தோம்
அதிரையின்
வட்டார மொழி
தனிப்பட்ட வாழ்வியல் தோரணை
என
எல்லாவற்றையும்
உங்களோடு
உள்ளன்போடு பகிர்ந்தோம்
இனிவரும் காலங்களில்
இன்னும் சாதிக்க
இருகரம் ஏந்தி
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
இணைந்திருங்கள்
இன்ஷா அல்லாஹ்!
அதிரை நிருபர் பதிப்பகம்
நன்மையே வேண்டி !
மூன்றாண்டு காலம்
முத்துக் குளித்தோம்
இணையக்கடல் எமக்கு
எத்துணைத் தந்ததோ
அத்துணையும் உங்களுடன்
அன்புடன் பகிர்ந்தோம்
கண்டெடுத்துக் கரைசேர்த்தது
ஏராளம்
ஒத்துழைத்த உங்கள் மனம்
தாராளம்
மொழியை மெருகேற்றினோம் -நல்
வழியைக் கருவாக்கினோம்
அரசியலை அலசினோம் - அதன்
விரிசல்களில் வெளிச்சமிட்டோம்
இஸ்லாத்தை எத்தி வைத்தோம் - இதில்
பிரிவுகளைக் குட்டி வைத்தோம்
சமுதாயச் சீர்திருத்தமும்
சீர்கேட்டில் சிறு திருத்தமும் சொன்னோம்
உள்ளத்திற்கு
உரமூட்ட "படிக்கட்டுகள்"
அமைதியூட்ட "அருமருந்து"
மகிழ்வூட்ட "நபிமணியும் நகைச்சுவையும்"
நெகிழ்வூட்ட "அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்"
ஆஃப்ரிக்கா முதல்
அமெரிக்காவிலிருந்து அதிரை வரை
அழகிய "பயணக் கட்டுரைகள்" பல கண்டோம்
பேச்சற்ற இடங்களைப்
"பேசும் படங்களாக்கினோம்"
கற்றோரும் மற்றவரும்
மெச்சுகின்ற "கவி" படைத்தோம்
"மனுநீதி மனிதகுலத்திற்கு நீதியா"
ஆய்வுக்கட்டுரையை
அகிலத்தின்
புத்தியைப் புதுப்பிக்கப்
புத்தகமாய்ப் பதிப்பித்தோம்
"பழகு மொழி"யெனத் தமிழை
அழகாய்க் கற்பிக்கிறோம்
அற்ப உலகின்
பொருளாதாரக் கொள்கைகளை
மண்டியிட வைக்கப் போகும்
"இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்"
ஆராய்ச்சி தொடர்கிறது
ஆங்கிலத்தின் அவசியத்தை
அவ்வப்போது வலியுறுத்துகிறோம்
குருட்டுப் பார்வை
மாறுகண்
மங்கியப் பார்வை
என
எல்லாப் பார்வைகளையும்
ராஜபார்வையால்
சீராக்கி
மருண்டும் மருகியும்
உழன்ற இஸ்லாமிய
இக்காலக் கவிஞர்களுக்காக
வக்காலத்து வாங்கினோம்
"கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை"யில்!
விதி மீறலைச் சுட்டினோம்
வீதி யெங்கும் பேசவைத்தோம்
சதி யேதும் நிகழாமல்
நீதி கேட்டு நிமிர வைத்தோம்
விவாதக்களம் அமைத்தோம்
விரசமில்லா விமர்சனமும்
துணிவான தூண்டல்களே என
தனியொரு விதி படைத்தோம்
அதிரையின்
வட்டார மொழி
தனிப்பட்ட வாழ்வியல் தோரணை
என
எல்லாவற்றையும்
உங்களோடு
உள்ளன்போடு பகிர்ந்தோம்
இனிவரும் காலங்களில்
இன்னும் சாதிக்க
இருகரம் ஏந்தி
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
இணைந்திருங்கள்
இன்ஷா அல்லாஹ்!
அதிரை நிருபர் பதிப்பகம்
33 Responses So Far:
வாழ்த்துகள், அதிரை நிருபர்.
(இப்பத்தான் மூனு வயசு முடியுதா? யப்பா... முப்பது வயதின் முதிர்ச்சியோடு கலக்கிட்டீங்களேப்பா!
நேற்றுத்தான் உங்களோடு இணைந்ததுபோல் இருப்பினும் நிறைவான மன திருப்தியையும் அருமையான இலக்கியத் தோழனாக மாறிப்போய் தவிர்க்க முடியாத அன்றாடத் துணைகளில் ஒன்றாக இருக்கும் அதிரை நிருபருக்கு நன்றியும்கூட.
மூணு வயசுதான் முடிந்து இருக்கின்றது.
30 வயதுக்குள்ள அனுபவத்தைச் சொல்லி இருக்கின்றது
மூணு வயதுதான் முடிந்து இருக்கின்றது
முக்குளித்து ஆழ்கடல் முத்துக்களை அள்ளித்தந்து இருக்கின்றது.
மூணு வயதுதான் முடிந்து இருக்கின்றது
மொழியை கூழாங்கற்களாக்கி, கொஞ்சும் வடிவத்தில் மனசு முழுவதும் எச்சில் படிய நுழையும் மழலையருவியில் நனைவதற்காகவே அவர்களைப் பேச வைத்து காது கொடுக்கலாம். ‘பெண் குழந்தை சீக்கிரம் பேசிவிடும்... ஆண் குழந்தை மெதுவாகத்தான் பேசும்’ என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இக்குழந்தையோ (ஆண் குழந்தையாக இருந்தும்),அழகாக பேசிய குழந்தை.
இரண்டு வயது வரை கூட குழந்தையால் பேச முடியவில்லை என்றால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.என்பார்கள், ஆனால் முதல் வயதிலேயே முத்துக்களை அள்ளி வந்த குழந்தை. குழந்தையை ஆரம்பத்தில்
L.K.G. U.K.G. யில் சேர்ப்பார்கள். ஆனால் இக்குழந்தையோ ஆரம்பமே கல்லூரியில் சேர்ந்து பயின்ற குழந்தை .
நான்காவது வயதில் அடி எடுத்து வைக்கும் இக்குழந்தை ( A.N என்னும் இவ்வலைத்தளம்) மேன்மேலும் தன் அனுபவத்தையும், தங்கள் அறிவுக்கு எட்டியதையும், (அரசியல் மற்றும் ஆன்மிகம் உட்பட ) எங்களுடன் வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.
I wish you all the best by the grace of almighty Allah for the successful step-up in the 4th Anniversary of the blog of the town (Talk of the town) encouraging everyone with gentle and neutral manners.
//கற்றோரும் மற்றவரும்
மெச்சுகின்ற "கவி" படைத்தோம்//
இதில் தமியேனின் பங்களிப்புகளும் உள; இதனை எண்ணும் போதில், “கற்றவர் சபையில் எனக்கோர் இடம் வேண்டும்” என்ற பாடல் வரிகளே ஞாபமூட்டும்! உங்களோடு கைகோத்ததில் உளம்நிறைவுடன் என் வாழ்த்துகளை இவண் பதிவதில் ஈடிலா மகிழ்ச்சியடைகிறேன்:
வாழ்க வளமுடன்
சூழ்க பலமுடன்
Assalamu Alaikkum
Adirai Nirubar is one of the greatest platforms from our community for our community of brothers and sisters living all over the world now.
I have been observing its niche is similar to an university of different faculties, which are more than daily normal news.
Adirai Nirubar recognizes and values the knowledge and spreads awareness and improve our knowledge and skills.
I appreciate the editorial team, contributors, active(one who write comments and interacts) and passive readers for their good intentions and thirst for sharing knowledge.
May Allah accept our good intentions and efforts for our community and reward us.
Jazakkallah Khairan,
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை நிருப(ணம்)ர்!
இந்த வெற்றிகிட்டியது நிதர்சனம்!
சமூகத்தின் மேல் கொண்ட கரிசனம்!
தினம்தோறும்
வாசகர்களுக்கு தரிசனம்!
அறிந்த சனமும், அறியாத சனமும்
தினமும் அறிந்து கொண்ட
அறிஞர்கள் வீற்றிருக்கும்
அரியாசனம்.
மேலும் பல வெற்றி படி கட்டும்!
இனி வரும் சமுதாயமும் அதிரை நிருபரை படிக்கட்டும்!
அதிரை மேலும், மேலும் வெற்றி படிக்கட்டும்!
திசையெங்கும் பரவட்டும் இத் தளத்தின் செய்தி!
அல்லாஹ்வின் துணையுடன் தொடரட்டும் இந்த தொடரோட்டம். வாழ்த்துக்கள்.
நான்காம் ஆண்டை தொடும் நடுத்தர வலை, அனைத்து துறைகளையும் அலசிய இம்மைக்கும் மறுமைக்குமொறு மைல்கள் கொடுத்த வலை, அழகிய ஹதீஸ்கள், அழகிய வாதங்கள் அற்புத படைப்புகள் சிந்திக்க வைத்த சித்திரங்கள், சிரிப்பூட்டிய வாதங்கள், வைரமுத்து (Mr. சபீர்), வாலி,( Mr . கலாம்) மேத்தா (Mr. க்ரவுன்) போன்ற கவிஞர்களின் கவிதையால் என்னையும் சிறிய கவிதை எழுத வைத்த வலை, ஊரில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திய வலை.
ஆங்கிலத்தின் அவசியம் பற்றி விவாதக்களம் இட்டு ஆங்கில மொழி கற்றல் மிக அவசியம் என்பதை அதிக பட்ச பின்னூட்டங்களின் மூலம் சுட்டிக்காட்டிய வலை. (இனி வரும் காலங்களிலும் இது போன்ற அவசியமான விவாதக்களங்கள் வரும் என நம்புகிறேன்)
டி வி சீறியல்களினால் பொய்க்கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் பெண்கள், கண்மணி நாயகம் சிந்திய அர்த்தமுள்ள கண்ணீர்களை அழகிய தொகுப்பாக தந்து சிறப்பித்த இவ்வளையின் தொட்ரை படித்து வந்திருந்தால் உண்மையான நண்மை தரக்கூடிய கண்ணீர்களை சிந்தி இருக்கலாம். மொத்தில் அனைத்து தரப்புகளையும் அலசி ஆராய்ந்து வரும் இவ்வலை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
My hearty congrats to the Mediators to run this site for moral will . Great Almighty Allah will grace and support them to run their social gratifies as an immortal.
Abdul Razik
Dubai
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்....அயராது உழைத்து அருமையான ஆக்கங்கள் வெளிவர முதுகெலும்பாக இருந்த எடிட்டர் குழுவிற்க்கும்..அ.நி.யின் அமீருக்கும் மற்றும் உன்னத ஆக்கங்கள் மூலம் அதிரை நிருபரை அலங்கரித்த,ஆன்மிகத்தை வளர்ந்த,அழகு சேர்த்த,அசத்திய,பாடங்களை நடத்திய,பக்குவமாக தவறுகளை சுட்டிக்காட்டிய அதிரையில் இவ்வளவு திறமை வாய்ந்தவர்களெல்லாம் இருக்கின்றார்களோ ? என்று வாய் பிளக்க வைத்த எழுத்தாளர்களுக்கும் அதற்க்கு ஊக்கமும்,உற்சாகமும் கொடுத்து ஆதரவளிக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள்.....அதிரை நிருபர் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கின்றேன்
மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததா !! மாஷா அல்லாஹ்
இந்த அதிரை நிருபர் எனும் குழந்தை பிறந்ததுமே நடக்க ஆரம்பித்துவிட்டது வயது ஆகா ஆக பறக்க ஆரம்பித்துவிட்டது
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகச் சிறப்பாக செயல் பட்டு தனக்கென்று ஒரு தனி பாணியை கடை பிடித்து. அதன் மூலம் தொய்வின்றி வெற்றி நடை போடும் அதிரை நிருபர் தளத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
மேலும் உங்கள் பணி சிறக்க ஆதரவும் துஆவும் என்றென்றும் உண்டு
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
என்னாது!
மூனு வயசுதான் முடிந்து இருக்கிறதா? இடுப்பை தடவி பார்த்தேன் அருணா கொடி இல்லை; வீட்டு வாசல்லே நடவண்டியை காணோம்; கூடத்லே தொட்டில் தொங்கலே.
மூனு வயது புள்ளே வீட்டுலே வளருர அடையாளமே இல்லையே. வயசு மூனு முடுஞ்சு நாலாவது இப்போதான் ஆரம்பிக்கிதுன்னு சொல்றிங்க!
ஹோண்டாஸ் ப்லேண்டேர் அப்பாச்சி பைக்கு எல்லாம் வீட்டு வாசல்லே கிடக்கு; வயசு நாலுன்னு சொல்றியா. அப்போ. இந்த 'பைக்' எல்லாம் யார் ஓட்டுறா? பெத்து வளத்தவுக நீங்க சொன்னா வம்பு பண்ண என்ன வழி இருக்கு?
நம்பித்தான் ஆகணும்! சும்மா பேச்சுக்குதான் கேட்டேன்! கோவிச்சுகாதிய !
மூன்றரண்டு கால. சாதனை வரிகள்!..!....!....!!! தருகிறது.
நான்காம் ஆண்டில் அதிக!.! ! ! ! ! யங்களையும் சாதனைகளையும் படைக்க அல்லாஹ் துணை செய்வான். "
இதயம் கனிந்த நான்காம் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மீண்டும் சந்திப்போம்.
S.முகம்மது பாரூக்அதிராம்பட்டினம்
Congratulations! for 4th Anniversary
ADIRAI NIRUBAR is one of the best friends for me since last 6 months
As You collected over all “ADIRAIYAR” feelings both in local and out
of the town.
I invocate Allah, for forth Coming (4th Anniversary) will be the best
choice for A.N. To extend their feelings and knowledges in each and
every sector. Hoping Inshaa Allah it will touch all hearts with full of joy
and good sensation.
Best of Luck.
Abu Asif.
கிண்டர் கார்டனில் சேர்க்க வேண்டிய (நான்கு வயது) குழந்தை இன்று ஒரு பல்கலைக்கழகமே வைத்து நடத்துகிறது.....
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிரை நிருபர் வலைதளத்துக்கு அன்பான வாழ்த்துக்கள்.
பங்களிப்பாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளவும், படிப்போர்கள் பாராட்டவும்
போடப்படும் பீடு நடை என்றும் தொடர து ஆச செய்கிறேன்.
முத்துக்குளிக்க நானும் வாரேன்! சேத்து குவியளா? தூத்துக்குடிதானே! காலைலே கட்டி சோத்தை கட்டி கைலே புடிச்சுகிட்டு பொடி நடையா நடந்தா. சோத்து நேரத்துக்கு தூத்துக்குடி போய்டலாம். சோத்தை முடிச்சு கை கழு கடல்லே எறங்குனா கரைக்கு வரும் போது கை நிறைய முத்து.
அந்த காலத்துலே எண்ணி வித்தா முடியாதுன்னு படிபோட்டு அலாந்து வித்தாகலாம்முத்தே. இப்போ படிக்கி எங்கே போறது?
எகிப்து நாட்டு கிளியோபாத்ரா தமில் நாட்டு முத்தே சாராயத்துலே கரச்சு குடிச்சாலம்.
அப்புடியே தூத்துகுடிலே கப்பல் ஏறி முத்தே ராணிகிட்டே வித்துட்டு'', வந்தது வந்துட்டோம் அப்புடியே பிரம்மீடுகளையும் ஒரு பார்வை பாத்துட்டு'' காசோட ஊர் வந்துடலாம். ஒரே கல்லுலே மூனு மாங்கா கண்ணுலே பிரமிடு.... கையிலே காசு., மனசிலே கிளியோபாத்ரா [ஹஹஹஹா, கிளியோபாத்ரா அழகு மனசுக்குள்ளே ஹன்தூரி கூடு எடுக்குதா?] ஆனா ஒன்னு. கிளியோபத்ரவே நாம பாத்த சங்கதி ஜூலியஸ் சீசருக்கு தெரிஞ்சுச்சுனா நாற்பெரும்படையோடு வந்து அதுராம்பட்டணத்தை அலங்க மலங்க அடிச்சுபுடுவான்.
யோசனை செஞ்சு முடிவு எடுங்க...... ஆமா...... ரெம்ப ரிஸ்கான வேலை
முகம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
ஜாஹிர் காக்கா உங்கவூரை பொக சூழ்ந்திடுச்சாம்ல....ஈர ஓலையை போட்டு கொளுத்தி இருப்பானுங்களோ.......பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்
http://www.bbc.co.uk/news/world-asia-22981890
எல்லாப்புகழும் இறைவனுக்கே...
இதில் குறிப்பிட்டு சாதனையாக நான் நினைப்பது, மூத்த / நடுத்தர வயது உடையவர்களையும் இளைஞர்களாக்கியது இந்த வலைத்தளத்தில் எழுதுவதன்மூலம்.
இன்னும் பல எழுத்தாளர்களை இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தும்.
[ அதுபற்றி இப்போதைக்கு ஒரு ஆர்டிக்கில் பாதியில் எழுதி நிற்கிறது என் கம்ப்யூட்டரில் ]
எல்லோருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
எண்ணங்களின் வானவில் எழுத்துகளாய் வர்ணம் பூசி நிற்கிறது.
//ஜாஹிர் காக்கா உங்கவூரை பொக சூழ்ந்திடுச்சாம்ல....ஈர ஓலையை போட்டு கொளுத்தி இருப்பானுங்களோ.......பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்
http://www.bbc.co.uk/news/world-asia-22981890 //
To Brother Yasir,
இப்போதுதான் 400 கிலோமீட்டர் போய் [ ஜோகூர் பாரு எனும் ஊரில் ] கீழே இறங்கி 2 நிமிடம் பேசி டாக்குமென்ட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு அதே மூச்சில் 400 கிலோமீட்டர் திரும்பவும் வீடு வந்து சேர்ந்தேன்.
கார் கண்ணாடியை திறந்தால் மூக்குக்கு பக்கத்தில் காட்டை எரிக்கும் வாசனை. பார்வைக்கு 50 மீட்டரை தாண்டி எதுவும் தெரியவில்லை. அந்த ஏரியாவில் ஸ்கூல் விடுமுறை இன்று.
இந்தோனேசியாவில் செம்பனை காட்டை வருடா வருடம் எரிக்கும் விவசாயிகளின் முட்டாள்தனம் இந்த வருடமும் தொடர்கிறது.
நிரூபர் ஆரம்பித்த அதே நேரத்தில் நான் வளைகுடா வந்தேன்..
இரண்டிற்கும் மூணு வயசுதான் முடிஞ்சிருக்கு.. முப்பது வருஷம் மாதிரி இருக்கு..
ஒரே ஒரு வித்தியாசம்
வலை தளத்தில் வாக்கிங் போனதுபோல் இருக்கின்றது..
வளைகுடாவில் என் வாழ்க்கையே வீண் போனதுபோல் தெரிகின்றது..
MSM(Meerashah Rafia)
அல்ஹம்துலில்லாஹ்....நான்காம் ஆண்டை அடியெடுத்து வைக்கும் அதிரை நிருபர் இணையத்திற்கு வாழ்த்துக்கள்
நான்காம் ஆண்டல்ல நாற்பதாம் ஆண்டு என்று சொல்வதே மேல் அந்த அளவிற்கு பலதரப்பட்ட தகவல்களை கவியானாலும் சரி! கட்டுரையானாலும் சரி! அனைவரின் மனதை கொல்லைக்கொண்ட அற்புதமான வரிகளின் களஞ்சியம் இந்த அதிரை நிருபர்
பதிவாளர் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்
என்னவொன்று வருத்தம் இந்த கட்டுரைகள் / பதிவுகள் பலராலும் காணப்பட மாற்றுமதத்தினற்கு ஏற்றார் போல் அமையும் தொடர் பதிவுகளின் வரிசை மேலும் அறிய பல தகவல்கள் எடுத்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆவா
உலாவரும் வலைத்தள பட்டியலில் அதிரை நிருபரும் ஒன்று சேர்ந்து பலராலும் போற்றப்பட வேண்டும்.
இன்டலி,தமிழ் மனம் போன்ற பலராலும் தினந்தோறும் வரக்கூடிய இணையத்தில் அதிரை நிருபரையும் இணைத்துக்கொள்ள வேண்டியது நன்று என்பது என்னுடைய கருத்து.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காத தளம் என்ற பெயருடன் வீர நடை போடும் நம்ம ஊரு சஞ்சிகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதிரையின் இலக்கியவாதிகளையும். சிந்தனையாளர்களை பொதுதளத்தில் எழுதவைத்து சாமான்யர்களின் கருத்தையும் பகிர்ந்துகொண்டு நன்மையான விசயங்களில் பொதுக்கருத்துருவாக்கும் தளம் வேண்டும் என்றவகையில் அதிரைநிருபரின் 1000 நாட்களைத்தாண்டிய பயணம் மகிழ்வளிக்கிறது. வாழ்த்துகள். (தனிப்பட்ட முறையில் இதன் நிர்வாகிகள் சிலரால் எனக்குள் சிலவருத்தங்கள் உண்டு என்றாலும் ஒட்டுமொத்த செயல்பாடுகளை குறிப்பாக அதிரையர்களை உற்சாகமாக வைத்திருக்கும் சூழலைப் பாராட்டுவதில் எத்தகைய தயக்கமும் இல்லை.)
அன்புடன்,
N.ஜமாலுதீன்
எனக்கு தெரிந்து இன்று வரை நம் அதிரையர்களின் வலைதலமாகட்டும், அல்லது மற்ற ஊர்களிலிருந்து செயல்படுகின்ற வலைதலமாகட்டும், கருத்துச்செரிவுடன் பல துறைகளையும் ஆழ்ந்து ஊடுருவி தொட்டு பேசுகின்ற ஒரு இணைய தளம் நம் அதிரையரின் ( A.N ) நிருபர் வலை தளமே என்று சொல்வேன்.
சொல்லவந்த எந்தத்துறையை எடுத்தாலும், அதை முழுமையாக, இது வரை யாரும் அறிந்திராத விஷயங்கலைஎல்லாம் ,அள்ளித்தருகின்ற ஒரு அமுத சுரபியாகத்தான் இதுநாள்வரை A.N. வலம் வந்து கொண்டிருக்கின்றது. அது ஆன்மீகமாகட்டும், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும் கல்வியாகட்டும், கவியாகட்டும் அனைத்திலும் கால் பதித்து, அதனிடையில் , தன் பங்களிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தி , இது போன்ற இணைய தளங்கள் தேவை என்ற அவசியத்தையும் உணர வைத்த இந்த A.N. (அழகிய நினைவலைகளின் ) தளம் தன் வீறு நடையில் வெற்றி நடை போட்டு, நான்காம் ஆண்டை இனிய ஆண்டாக துவக்க,
அந்தத்துவக்கம், எங்களைப்போன்ற பின்னூட்டம் மூலம் A.N. உடன் இணைந்திருப்போருக்கு ஒரு ஊக்கத்தையும் , தெளிவற்ற விஷயங்களில் தெளிவையும் தந்து , மேன்மேலும், பங்களிப்பாளர்களும், பின்னூட்டக்காரர்களும் அதிகமாக்கி இதன் ஆக்கம் உலகில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் சென்றடைய இந்த நான்காம் ஆண்டு துவக்கத்தில் என் இனிய நல வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
அன்புடன்,
அபு ஆசிப்.
Thanks to Naina thambi and Sabeer kaakaa for keeping this blog always to be LIVE....
Best Regards
Harmys
I Congratulate A.N. and it’s remarkable touches with the 4th Anniversary.
Impressive achieved than any other "ADIRAIYAR" websites inspire great respect. HoldingTh the top position in among the Adiraiyar Websites .
I express honor to the A.N. which has been bringing warm touch to Adiraiyar for last three years. Now you were always able to carry out the high thoughts To the pleasure of participants and readers. You are rightly proud of the rich Feelings and remarkable time proved of the Websites. Your amicable collective makes desirable example of all other tamil websites .
Happiness and well-being to you and to the editor group. I wish Adirai Nirubar, and invocate Allah for Strong to stand and new achievements.
Abu Asif.
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிரை நிருபருக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களிலும் என்றும் போல் தொடர துஆவும் வாழ்த்துக்களும்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
மூன்று வருடங்கள் கடந்தது போல் பல வருடங்களும் இதைவிட வலுபெற்று, நிறைய உள்ளங்களை இணையத்தின் மூலம் இணைத்து, சிறப்பாக வளர்ந்து சமுதாயத்திற்கு நன்மை தரும் இணையக் கடல் பயணம் வெற்றிபெற வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.
தொடர்ந்து இணைந்திருப்போம்... இன்ஷா அல்லாஹ்.
தவிர்க்க முடியாத அன்றாடத் துணைகளில் ஒன்றாக இருக்கும் "அதிரை நிருபர்" நாளுக்கு நாள் இன்னும் வலுப்பெற்று வளர்ந்திட வாழ்த்துக்களும் துஆவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு:
கருத்துகளோடு வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும், தனி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனித் தூதுகள், மின்னாடல் குழுமம் வழியாக வாழ்த்திய சகோதர சகோதரிகளுக்கு எங்கள் நன்றிகள்.
பரிந்துரைகள், ஆலோசனைகள் என்று தொடர்ந்து வழங்கிவரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் !
அமைதியின் ஆளுமைப் பயணத்தில் புதிய வளர்ச்சியுடனும் செரிவுடனும் உள்ளம் கவரும் மாற்றங்களும் இடம்பெரும் விரைவில் !
எங்கள் பணி தொடரும், தனித் தன்மை என்றும் மிளிரும், தன்னடக்கம் பேசும், தயவு தாட்சனைகள் தகர்க்கும், தவறுகள் சுட்டப்படும், திருத்தப்படும், இவைகளெல்லாவற்றையும் விட இஸ்லாமியச் சூழலோடு இனிமை பாராட்டுவதும், நட்புகளோடு நிமிர்ந்த நடைபோடும், இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்...!
வருத்தங்கள் கலைந்து
திருத்தங்கள் மிளிர்ந்தது !
இன்னுமா உறுத்தல் ?
அடங்காத அலையும்
கலையாத தலையும்
கடற்கரைச் சந்திப்பில்!
நற்றமிழ் நாவில்
நல்லவர்(கள்) நடுத்தெருவில்
நல்லதைச் சொல்லவே !
கொள்கை கொள்வோம்
நளினமாகச் சொல்வோம்
நெஞ்சம் நிமிர்வோம் !
நாற்றத்தின் தோற்றத்தை
தோலுரித்து காட்டிடுவோம்
நன்மைக்காவே செயல்படுவோம்
குற்றமுள்ள உள்ளம்
காண்பதெல்லாம் கள்ளம்
அவர்தம் சுட்டும்
காட்டுகள் கற்பனையே !
அன்புடன்
நெறியாளர்
அதிரைநிருபர் வலைத்தளம்
www.adirainirubar.in
அஸ்ஸலாமுஅலைக்கும்[வறாஹ்]
//என்னவென்று ஒரு வருத்தம்..//....
அதிரை தென்றல்[Irfan] அவரகளின் கருத்து நல்லதாகவே படுகிறது.
ஒரு வட்டத்துக்குள்ளேயே நம்மை நாமே முடக்கிப் போட்டு கொள்வது நம் வளர்ச்சிக்கு நாமே போட்ட தடையாக அமையும். அறிவுக்கும் அறிதலுக்கும் எல்லைக் கோடுகள் இல்லை.
கற்றலுக்கு கரைகட்டியதும் கற்றவர் சொன்னால் கல்லெறிந்து துரத்தியதும் [சாக்ரடீஸ்] எங்கோ மறைந்து போனகாலம்.
கால ஓட்டத்துக்கு ஏற்ப நாமும்' அதிரை நிருபரை' அதிரையின் எல்லைக் கோடுகளுக்கு அப்பாலும் போவோமாக.
தயவு செய்து இதை அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். வேண்டுகோள்யென எடுத்துக் கொள்ளவும்.
S.முகம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்!
"எண்ணங்களின் வானவில் எழுத்துகளாய் வர்ணம் பூசி நிற்கிறது".
என்ற நண்பன் ஜாகிரின் வரி ரசிக்கத்தக்கது!
மாஷா அல்லாஹ், மனமார்ந்த வாழ்த்துக்கள்
எந்த பதிவுமே காலம் கடந்து நிற்கும்
எத்திக்கும் புகழ் சேர்க்கும்
தமிழ் பேசும் பிற ஊரார்களெல்லாம் விரும்பி படிக்கும்
அனைவராலும் விரும்பப்பட்ட பதிவுகள் நூல் வடிவில் புத்தகமாக அழியாச்சுடராய்
எப்பவுமே அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும்
அதிரை நிருபரை வாழ்த்துகிறேன்
தொடரட்டும் உமது தொண்டு
மேலும் நல்ல பல கருத்துக்களை நயம்பட உரைத்திடுங்கள்
நான்காம் வடுடத்தின் துவக்கத்தில் நான்கு திசைகளின்
செய்திகளை சிறப்பாய் தந்திடுங்கள்
வாழிய பல்லாண்டு அல்லாஹ்வின் அருளோடு
அனைவருக்கும் எனது அன்பான சலாத்தினை உரித்தாக்குகிறேன்
Post a Comment