இப்போது நான்
கேள்விப்படும் சில விசயங்கள் நம் இனமக்களின் எதிர்காலத்தை நினைத்து கவலை ஏற்பட
வைக்கிறது. எப்போது நம் வீட்டுக்குள் வந்திருக்கும் டெலிவிசனையும் / புதிதாக
ஏற்பட்டிருக்கும் மொபைல் போன்களின் அளவுக்கு அதிகமான டெக்னாலஜி முன்னேற்றமும்
உறவுகளையும் சமுதாயத்தையும் எந்த அளவு பிரித்து வீசியிருக்கிறது என்று முன்பு நான்
எழுதியதாக ஞாபகம்.
ஆனால் இப்போது
நான் எழுதும் விசயம் காலம் காலமாக நம் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பொருள்களின்
மீதான மோகம் என்னும் பாக்டீரியா. இது தன்னால் அழிக்கப்பட வேண்டும். பொருள்களின் மீதான
மோகம் மனிதர்களுக்கு ஏற்படுவது இயற்கை. அது ஒரு வயதுடன் அல்லது கால கட்டத்துடன்
ஒரு முடிவுக்கு வர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் பல கேவலத்தை
கொண்டுவரும்.
இப்போதைய நமது
ஊர் மக்கள் தொகை பெருக்கத்தால் குடும்பங்களின் உறுப்பினர்களின் பட்டியல் நீண்டு
கொண்டே போகிறது. பெரிய அளவு நிகழ்ச்சிகள் என்றால் கல்யாணம்தான். ஆனால் அதற்காக
பெண்கள் செலவுகளை ஏற்படுத்தி வைத்திருப்பது மிகவும் அதிகமாக தெரிகிறது.
ஆண்கள்
நினைத்தால் இதை கட்டுப்படுத்த முடியும். ஆனாலும் பெரும்பாலான ஆண்கள் இதை கேட்க
முடியாமல் இப்படி குடுகுடுப்பை மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டிருப்பதால்
வெளிநாட்டில் தலையை அடமானம் வைத்தாவது பிழைக்க வேண்டியிருக்கிறது.
[தலையை எந்த
சேட்டும் அடமானத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது வேறு விசயம்].
முன்பெல்லாம் ஒரு
கல்யாணம் என்றால் பெண் வீட்டில் 2,
3 பெரியவர்கள் மாப்பிள்ளை
வீட்டில் 2, 3 பெரியவர்கள்
இதுதான் மணப்பெண் / மண மகன் என்று நிச்சயம் செய்வதோடு முடியும் விசயம் இப்போது சில
ஆயிரங்களை தாண்டி முடிவாகிறது. [நான் சொல்வது அன்றைய செலவு மட்டும் தான்]. பெண்கள்
“என் பிள்ளைக்கு செலவு செய்ய இவன் என்ன சொல்வது?” என்ற எண்ணத்தில் போட்டி போட்டு செலவு
செய்கின்றனர். ஆனால் ஆண்களால் போட்டி போட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்
சம்பாதிக்க முடிவதில்லை. எனவே கடன் ஒன்றே உடனடித்தீர்வு.
பணக்கஷ்டம் வந்தால்
மனக்கஷ்டமும் சேர்ந்துகொள்ளும்.
ஒரு சாதாரண
குடும்பத்தில் வருடத்தில் 3 அல்லது 4 கல்யாணம் நடக்கலாம் - [இதில் மற்ற மினி
ஃபங்ஷன் எல்லாம் கணக்கில் இல்லை - காது குத்து, சுன்னத், வீடு குடிபுகல் - மற்றும் கல்யாண தேவைகளில்
ஏற்படுத்தப் பட்டிருக்கும் இலவச இணைப்பு ஃபங்ஷன்கள்]
பெண்கள்
கல்யாணத்து ஒரு புடவை அதற்கு தகுந்தாற்போல் அதே கலரில் காதுக்கும் கழுத்துக்கும்
கைக்கும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் நியமான அளவு பொருளாதாரப் பின்னடைவு
ஏற்படுகிறதாகவே நான் நினைக்கிறேன். “என்ன
லட்சக்கணக்கில் தோப்பு வைத்திருப்பவர்களுக்கு இதை போய் பெரிதாக சொல்கிறீர்கள் ?” என்று நினைக்கலாம்.
ஆனால் இந்த
பொருள்கள் மீதான மோகம் சாதாரண சம்பளத்தில் இருக்கும் ஆண்களின் மனைவியையும்
ஆட்டிப் படைக்கிறது. இதனால் மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு சண்டையிடுவதும் பிறகு
விவாகரத்தில் முடிவதும் அதற்கு தகுந்தாற்போல் விவாகரத்தை ஞாயப்படுத்தி சில ஹதீஸ்களை தன்
திருவாய் மலர்வதும் இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.
ஆண்கள் ஆண்களாய்
இல்லாமல் இப்படி "பிரிமனை" மாதிரி "ஙே" என்று இருந்தால்
இப்படித்தான் போய் முடியும்.
இப்போதெல்லாம் வீடு குடி போனால் கூட அதற்காக சொந்தம் பந்தம் எல்லோருக்கும்
புடவை செட் என்றும் ஒரு சாதாரண கல்யாணத்துக்கு என்று 3 , 4 விருந்து , மற்றும் ஒன்று கூடுதல் என்று ஊர் ஒட்டுமொத்தமாக
சம்பாதிப்பவர்களை மொட்டையடிக்க கற்றுக்கொண்டு விட்டது.
இதில் செலவு
அழிவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சைட்
எஃபெக்ட்கள் அதிகம். காலையில் புறப்பட்டு திருச்சி / தஞ்சை என்று பேயாய் அலைந்து
திரிந்து வாங்கும் துணிமனிகளுக்காக வீட்டில் வயது வந்த பிள்ளைகளை விட்டு விட்டு
செல்வதும் பின்னாளில் அதனால் வரும் பிரச்சனைகளும்
தலைவலிகளும் அதிகம். இதை எல்லாம் எப்படி நெறிப்படுத்துவது என்பதை
இதைப்படிப்பவர்களின் விவாதத்திற்கு விட்டு விடுகிறேன். அதற்காக பெண்களை
தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கும் நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை.
பெண்கள்
பெரும்பாலும் நகை வாங்க சொல்லும் காரணம் ' ஆத்திர
அவசரத்துக்கு அடமானம் வச்சுக்கலாம்" வாங்கும் போதே ஏன் தான் இந்த
தரித்திரம் பிடித்த வார்த்தை. சொன்ன மாதிரியே அடமானம் போகும்போது. "எண்ணம்போல் வாழ்க்கை".
நகைகளின் மாடல் மாறும்போது வாங்க வசதியிருந்து
வாங்குவதில் தவறில்லை. அதற்காக சம்பாதிக்கும் ஆண்களை கடன் வாங்க
கட்டாயப் படுத்துவதும், அதை ஏன் என்று கேட்க திராணியில்லாத
ஆண்களும் காலக் கொடுமை. சிலர்
புடவையின் டிசைன் மாறும்போது சின்ன சின்ன நகைகளை விற்று வாங்குவதும்
ஆரம்பித்திருக்கக் கூடும்.
இப்போது
பெண்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
தொடர்ந்து பொருள்களின் மீதான மோகம் தன்னை உயர்வாக மதிக்க பொய் சொல்ல பழகித் தரும்.
பிறகு அந்த பொய்களே அதே பெண்களின்
வாழ்க்கைக்கும் மரியாதைக்கும் எதிராக திரும்பும் என்பதை வீட்டில் இருக்கும் ஆண்கள்
உணர்த்த வேண்டும். காலம் கடந்த அறிவுரை ஒரு "கிரிமினல் வேஸ்ட்".
இதில் பெண்கள் கவனிக்க வேண்டிய விசயம் இப்படி ஒவ்வொரு விசயத்துக்கும் பேயாய் அலைந்து வாங்கும் நேரம் உங்கள் வாழ்க்கையில் எத்தனை உருப்படியான மணி நேரத்தை வீணடித்திருக்கிறது என்ற கேள்விதான் உங்களை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும். ' நான் என்ன ஆபிசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேனா? நேரக் கணக்கெல்லாம் பார்க்க என்று கேட்டால், ஒரு சின்ன டெய்லரிங் கூட தெரியாமல் எல்லா வேலைகளுக்கும் கடையையும், அதை செயல்படுத்த மற்ற ஆட்களையும் நம்பியிருக்கும் வாழ்க்கை [Dependent Life] இந்த மாதிரி மூடத்தனமான கேள்வியில்தான் ஆரம்பிக்கிறது.
மார்க்க விசயங்களிலும் Tahfiz / Fardhu Ain போன்ற விசயங்கள் கற்றுக் கொள்ளாமல் போய் இன்றும் மார்க்கத்தை முழுமையாக தெரியாமல் போன வர்க்கங்களை உருவாக்கியதற்கும் 50% பங்கு இது போன்ற பெண்களையே சேரும்.
இதில் பெண்கள் கவனிக்க வேண்டிய விசயம் இப்படி ஒவ்வொரு விசயத்துக்கும் பேயாய் அலைந்து வாங்கும் நேரம் உங்கள் வாழ்க்கையில் எத்தனை உருப்படியான மணி நேரத்தை வீணடித்திருக்கிறது என்ற கேள்விதான் உங்களை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும். ' நான் என்ன ஆபிசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேனா? நேரக் கணக்கெல்லாம் பார்க்க என்று கேட்டால், ஒரு சின்ன டெய்லரிங் கூட தெரியாமல் எல்லா வேலைகளுக்கும் கடையையும், அதை செயல்படுத்த மற்ற ஆட்களையும் நம்பியிருக்கும் வாழ்க்கை [Dependent Life] இந்த மாதிரி மூடத்தனமான கேள்வியில்தான் ஆரம்பிக்கிறது.
மார்க்க விசயங்களிலும் Tahfiz / Fardhu Ain போன்ற விசயங்கள் கற்றுக் கொள்ளாமல் போய் இன்றும் மார்க்கத்தை முழுமையாக தெரியாமல் போன வர்க்கங்களை உருவாக்கியதற்கும் 50% பங்கு இது போன்ற பெண்களையே சேரும்.
இதையெல்லாம்
ஆலிம் உலமாக்கள் தனது உரை நிகழ்த்தும் போதுதான் பேச முடியும் என்ற சூழ்நிலை
இருந்தால் பெரும்பாலானவர்கள் கேட்க முடியாமல் போய் விடும். இது ஒவ்வொரு வீட்டிலும்
தெரிந்து தெளிய வேண்டிய விசயம். கடந்த 10, 15 வருடமாக ஊரில் உருவாக்கப்பட்டிருக்கும் வழமைகள் தேவையற்ற அலப்பரை ஃபங்சன் கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவரகளை கேனயன் மாதிரியும்
ஊரில் உள்ளவர்கள் தான் முழு அத்தாரிட்டி என்ற ஒரு மாயை-யை
ஏற்படுத்தியிருக்கிறது. இதை தட்டிக் கேட்கப் படாமலேயே போய் விட்டதால் நடுத்தர /
மற்றும் ஏழைகளின் கல்யாணம் என்பது ஒரு குடும்பத் தலைவனுக்கு பாரமாகவே போய்விட்டது.
பிரச்சாரங்கள் என்று பள்ளிவாசலிலும் , தெரு முனைகளிலும் சொல்லப்படும் விசயங்களில் இது பேசப்பட வேண்டும். வீண் விரயம் செய்பவர்களை இறைவன் ஒருபோதும் விரும்புவதில்லை.தான் விரும்பாத யாருக்கும் செல்வத்தை இறைவன் வழங்குவதுமில்லை. இது பற்றி குர் ஆன் / ஹதீஸ் எந்த வசனத்தில் எந்த அத்யாயத்தில் சொல்லியிருக்கிறது என்பதை விளக்கமாக சொல்ல நண்பன் இக்பால் சாலிஹ் / நண்பன் அலாவுதீன் சொல்ல முடியும், கேட்டால் நமக்கு நல்லது. கேட்காவிட்டால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.
ஏற்கனவே
அதிராம்பட்டினம் போன்ற கீழ்தஞ்சை மாவட்டங்களில் சரியான முறையில் வருமானம் ஈட்ட
வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. இந்த லட்சணத்தில் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய
அளவுக்கு அதிகமான நிகழ்ச்சிகளையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்திக் கொண்டே
சென்றால் அதன் கடைசி எல்லைதான் என்ன?.
இன்றைக்கு தனது
இயலாமை / முதுமை காரணமாக ஊரில் வந்து தங்கிவிட்டவர்கள் ஏன் எல்லோரும் வசதியாக
இல்லை. ஏன் இன்னும் எல்லாவற்றையும் எதிர் பார்த்தவர்களாக இருக்கிறார்கள். எனக்கு
தெரிந்து இது போன்ற விசயங்களை வளர விட்ட பிறகு 'செலவை குறை"
என்றால்' இந்தாளு ஒருத்தன் , இன்னைக்கு
சொல்லிட்டு நாளைக்கு புறப்பட்டு போயிடுவான் , ஊர் நிலவரம்
எங்கே தெரியப்போவுது " என்ற தெனாவட்டான ஊரில்
இருப்பவர்களின் பேச்சுகள்தான். நமக்கு தெரியாமலேயே நம் வருமானத்தை சுரண்டி
செல்லும் தேவையற்ற செலவுகள் நிறைந்த "கூடி கூடி செலவளித்து
திரியும்" ஃபங்ஷன் கள் நம் ஊர்
பகுதியில் ஒழிய வேண்டும்.
இல்லா விட்டால் நமக்கு தெரியாமலேயே நமது இடுப்புத்துணி
அவிழும் அவலம் வெகு தூரத்தில் இல்லை.
ZAKIR HUSSAIN
29 Responses So Far:
சகோ .ஜாக்கிர் அவர்களின் இந்த ஆக்கம் காலத்திற்கேற்ற அருமையான பதிவு நம்மின் எல்ல குடும்பத்தினராலும் சரிசெய்யப்படவேண்டிய அவசியமான ஒன்று .
இல்லா விட்டால் நமக்கு தெரியாமலேயே நமது இடுப்புத்துணி அவிழும் அவலம் வெகு தூரத்தில் இல்லை.//
ஜாகிர், நீ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
தேவையற்ற செலவுகளை ஏற்ப்படுத்தி செலவு செய்பவர்கள் , அந்த செலவுகளுக்காக பணத்தை அனுப்புபவன் என்ன சூழ்நிலையில் இந்த பணத்தை சம்பாதித்து அனுப்புகின்றான் என்று அவன் நிலையில் நின்று பார்ப்பதில்லை.
அதாவது இந்த சூழளுக்குக்காரணம் ,
ஒன்று, நாம் நடுத்தரக்குடும்பமாக இருந்தாலும் , பக்கத்து வீட்டுக்காரன் செய்ததுபோல் நம் வீட்டுக்கல்யானத்தையும் சிறப்பாக ( இஸ்லாத்தில் கல்யாணத்தில் என்ன சிறப்பு இருக்கின்றது ? என்று தெரியவில்லை) செய்யவேண்டும் என்று நினைத்து சக்திக்கு மீறி (கடன் பட்டு ,) வறட்டு கெளரவம் பார்ப்பாதினால் ஏற்படும் விளைவு.
இரண்டு, , ஒரு பொருள் ஒரு வீட்டிலிருந்து நம் வீட்டுக்கு, புடவையோ, வேறு ஏதோ பொருள் வந்தால், திரும்ப அவர்களுக்கு ஏதாவது செய்ய வேணும் என்று
கௌவரம் பார்த்து செய்யும்போது, முன்பு பொருள் வந்த வீட்டிலிருந்து, உண்மையான அன்புடன் வந்ததாக இவர்கள் அந்தப்பொருளை கருதவில்லை என்று தான் தோன்றுகின்றது. இந்தப்பொருளுக்கு பதிலாக வேருள் பொருள் அவர்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்றால் .. உண்மையான அன்புக்கு அங்கே இடமில்லாமலே போய்விடுகின்றது.பொருள் பெற்றவர்கள் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்தாலும் கௌரவத்திர்க்காகவாவது, கடன் பட்டாவது ஏதாவது கொடுக்க வேண்டியது இருக்கின்றது.
இந்த சூழல் முற்றிலும் நம் சமுதாயத்தை விட்டும் துடைத்தெரியப்படவேண்டிய விஷயம்.
மூன்று : சிக்கனத்திற்க்கும், சேமிப்பிற்கும்,
தாராள மனசுக்கும், ஊதாரித்தனத்திர்க்கும்
வேறுபாடு தெரியாத அறிவீனம்.
இந்த அறியாமை என்னும் இருள் கலைந்தால் ஒழிய நம் சமதாயத்தின்
மீது ஹிதாயத் என்னும் ஒளி வீசுவது கடினமே.
அறியாமை அகலும் என்று நம்புவோம்,
நம் சமுதாயப் பெண்களுக்கு இஸ்லாத்தின் தெளிவான அறிவை போதிப்போம்.
ஆமீன்
வழக்கம் போல் படித்தோம் பாராட்டினோம் என்று இல்லாமல் தம்பி ஜாகிர் உடைய இந்தப் பதிவு மனப்பாடம் செய்யப்பட்டு செயல் படுத்தப் படவேண்டியதாகும்.
//ஆண்கள் ஆண்களாய் இல்லாமல் இப்படி "பிரிமனை" மாதிரி "ஙே" என்று இருந்தால் இப்படித்தான் போய் முடியும். // ஹஹஹஹஹாஹ்.
அப்படி ஆண்கள் பிரிமனை மாதிரி இல்லாமல் இருந்தால் மனைவி பிரிந்துவிடும் ஆபத்தும் உண்டு.
அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியைப்போல் நமதூர் பெண்களும் கலியாண வைபவங்களின் செலவுகளையும் நன்கு வளர விட்டுள்ளனர். நமதூர் பெரும் பணப்புழக்கமும், வர்த்தகமும் நிறைந்த பெரு நகரங்களைப்போல் இருந்தால் வெளிநாட்டு சம்பாத்தியம் இல்லையெனினும் உள்நாட்டிலேயே, சொந்த ஊரிலேயே தத்தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள எதையேனும் செய்ய முடியும். ஆனால் நமதூரோ வெறும் உப்புக்காற்றில் பெரும் தேவைகளில் மட்டும் வானுயர பறந்து கொண்டிருக்கிறது அதற்கான வருமான ஈட்டுதலின்றி.
வெறும் மாத சம்பள வருவாயை மட்டும் ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்களின் ஆண் வர்க்கம் ஆறு மாத அல்லது மூன்று மாத விடுமுறையில் ஊர் சென்றாலே அங்குள்ள செலவழிவுகளைக்கண்டு கண்ணு முழியெல்லாம் பிதுங்கி "மக்கசக்கரத்தில்" சுற்ற வைத்து விடுகிறது. திட்டுமுட்டு கொள்ள வைத்து விடுகிறது.
அன்றாட உலக நிகழ்வுகளால் நாணய மதிப்பு கூடிக்குறைவது போல் அன்றாடம் உலகில் ஏறும் பொருட்களின் (குறிப்பாக தங்கம், பெட்ரோலியப்பொருட்கள்) விலை ஏற்றத்திற்கும் நாம் வாங்கும் சம்பளத்திற்கும் நேரடி தொடர்பு இருந்து அதுவும் ஏற்றத்திற்கு தகுந்தாற் போல் ஏற்றப்பட வேண்டும்.
ஜாஹிர் காக்காவின் இக்கட்டுரை நமதூரின் தற்பொழுதைய நிலையை நன்கு படம் பிடித்துக்காட்டி பாடம் நடத்துகிறது. வாழ்த்துக்கள்.
பொறுப்புணர்வோடு எடுத்தியம்புகிறது கட்டுரை. பண விரயம், பொருற்சேதம் மற்றும் நேரம் கடத்துதல் போன்ற வீண் பழக்க வழக்கங்கள் அதிரையில் கூடிப்போய்விட்டது உண்மைதான். ஒன்றைப் பார்த்து ஊரே செய்வது செம்மறி ஆட்டுக்கூட்டத்தை நினைவு படுத்துகிறது.
தத்தம் தகுதிக்கேற்பவே செலவு செய்ய வேண்டும் என்பது அடிப்படை அறிவு. இதை வலியுறுதுகிறது கட்டுரை.
Assalamu Alaikkum,
//அது சரி பெரும் கூட்டத்தின் நடுவே ஒரே ஒரு சிறுவன் மட்டும் எழுந்து (சுன்னத்) தொழுகிறானே என்னா சங்கதி? நிறைய ராத்தா, தங்கச்சிமாரு இருக்குமோ? பாவம்.....//
//தம்பி நைனாவுக்கு ........சிறுவனுக்கு ஒது முறிந்து விட்டதால் இடையில் வந்து ஜமாத்தை பிடித்தியிருப்பான் போலும் இதனால் அவனுக்கு ஒரு ரக்கா அத் தாமதம் என நினைக்கிறேன் . very sincere boy ??????????? //
Making fun of our(muslim) spiritual acts shows our weakness in spirituality.
//அந்த ஒருவன் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். மூன்று தங்கைமார்களுக்கு வீடு கட்டி கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவன். அதனால் கூடுதலாக தொழுது அல்லாஹ்விடம் வல்லமை தேடுகிறான் போலும். //
Making fun of our brothers of town and degrading him shows our level of dignity.
I used to notice few brothers who make fun out of a brother one who is sitting and making duas after Juma prayer.
I request brothers not to make fun of spiritual activities which is disrespecting and disappointing one.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
எனக்கும்...என்னமோ தெரியலே......ஒரு ரெண்டு,மூணு வாரமாக ஜாகிர் ஹுசைனின் பதிவுகள் காணவில்லையே .....அந்த படிக்கட்டுகளையாச்சும் மீள்பதிவு போடச்சொல்லி அ.நி.க்கு எழுதிக் கேட்கலாமென்றிருந்தேன்.ஒரு நல்ல பதிவும் வந்துவிட்டது.அல்ஹம்துலில்லாஹ்....அடிக்கடி எழுதுங்கள்.ஒரு நல்ல பதிவு இது. எப்படி எழுதி அறிவுரை சொல்லி எழுதினாலும் எங்கே நம்மாளு..கேட்கப் போறாங்க..முன்னெயெல்லாம் அஞ்சுகறி,பிரியானின்னுதான் கொடுத்தாங்க.....இப்போ..ஃ ப்ரைரைஸ்,பொரிச்ச கோழின்னு ட்ரெண்டை மாத்திருக்காங்க.....
மன்னிக்கவும். என்னுடைய மேற்கண்ட கேள்வியில் நம்மூரின் எதார்த்தத்தை படத்துடன் ஒப்பிட்டு எழுதினேன். தனிப்பட்ட யாரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது நம் தனிப்பட்ட, கூட்டு நல்லமல்களை கொச்சைப்படுத்தி கேலி,கிண்டல் செய்வதற்காக அல்ல. நம்மூரில் இரண்டு, மூன்று பெண் பிள்ளைகளுடன் பிறந்த சகோதரர்கள் (அவர்கள் பணக்கார குடும்பத்திலிருந்தாலும் சரி, நடுத்தர, ஏழை குடும்பத்திலிருந்தாலும் சரி) படும்பாட்டை அந்த அல்லாஹ்வே நன்கறிவான். இதில் மச்சான்மார்கள் சூட்டிக்கை இல்லாதவர்களாக வந்து விட்டால் இங்கு வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை.
Assalamu Alaikkum
Dear brother Mr. Zakir Hussain,
The attitudes and behaviours of women are almost universal.
//தொடர்ந்து பொருள்களின் மீதான மோகம் தன்னை உயர்வாக மதிக்க பொய் சொல்ல பழகித்தரும். பிறகு அந்த பொய்களே அதே பெண்களின் வாழ்க்கைக்கும் மரியாதைக்கும் எதிராக திரும்பும் //
Your above observation is absolutely true.
As far as the built in greediness of women, proud and showing mentality, giving 'motivation' to their men by comparing others, are changed, its impossible to stop this artificial luxurious trend.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
http://www.dubaibuyer.blogspot.com
ஊரின் அனாவசியமான தேவைகள் எப்படியெல்லாம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணங்கள். ஜெய்சா காக்கா சொன்னது போல் உங்க பதிவுகளை காண வில்லையே என்ற ஏக்கமும் தொடர்ந்தது.
தொடர்ந்து தாருங்கள் விழிப்புணர்வுத் தமிழ் ஊற்றை!
//பொருள்களின் மீதான மோகம் மனிதர்களுக்கு ஏற்படுவது இயற்கை. அது ஒரு வயதுடன் அல்லது கால கட்டத்துடன் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் பல கேவலத்தை கொண்டுவரும்./// கொண்டு வந்துகொண்டிருக்கின்றது....ஒரு சில சம்பவங்களை கேள்விப்பட்டு வாயடைத்து போய் இருக்கின்றேன்...கணவன்மார்கள் நிரப்பமாக அனுப்பிய பணம் பத்தாமல்....மோகப்பேய் பிடித்து பல லட்ச ரூபாய் கடன் வாங்கி குடும்பத்திற்க்கு “கேவலப்” பெருமை சேர்த்து உள்ளார்கள் நம்மூரில் சில பெண்கள்...ஜாஹிர் காக்கா “முளையில” கிள்ளி எறிய வேண்டிய விஷயம் ஒரு சிலரின் “ஆண்மை” இல்லாததனத்தால் இன்று விருட்சமாக வளர்ந்து பல துன்பங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது.....இனிமேல் இதனை கட்டுப்படுத்துவது கடினம் என்றே நினைக்கின்றேன்...நல்ல விழிப்புணர்வு பதிவு காக்கா
தம்பிகள் சொன்னால் தட்டாமல் கேட்கணும். அன்புத்தம்பி அமீன்! உள்நோக்கம் இல்லாமல் போடப்பட்டாலும் உங்களின் கருத்தை வரவேற்று என் கருத்தை நீக்கிவிட்டேன்.
பதிவுக்கு நன்றி.
அருமையான ஆக்கம், அழகான பின்னூட்டங்கள்.
ஆக, எல்லோரும் இதில் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர், மாற்றம் வரணும் என்றால் என்ன மாறனும்?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும், ஜாஹிர் காக்கா,
//இதையெல்லாம் ஆலிம் உலமாக்கள் தனது உரை நிகழ்த்தும்போதுதான் பேச முடியும் என்ற சூழ்நிலை இருந்தால் பெரும்பாலானவர்கள் கேட்க முடியாமல் போய் விடும். இது ஒவ்வொரு வீட்டிலும் தெரிந்து தெளிய வேண்டிய விசயம். கடந்த 10 , 15 வருடமாக ஊரில் உருவாக்கப்பட்டிருக்கும் வலமைகள் தேவையற்ற அலப்பரை ஃபங்சன் கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவரகளை கேனயன் மாதிரியும் ஊரில் உள்ளவர்கள்தான் முழு அத்தாரிட்டி என்ற ஒரு மாயை யை ஏற்படுத்தியிருக்கிறது. இதை தட்டிகேட்கப்படாமலேயே போய் விட்டதால் நடுத்தர / மற்றும் ஏழைகளின் கல்யாணம் என்பது ஒரு குடும்பத்தலைவனுக்கு பாரமாகவே போய்விட்டது.//
100க்கு 100 உண்மை காக்கா, தட்டிக்கேட்க வேண்டும். பொருளாதார வர்க்கம் திருமணங்களில் செய்யும் அளவில்லா வீண்விரையங்கள் ஏழைகளின் கால்யாண காரியங்களையும் சிரமப்பட வைக்கிறது என்பது உண்மை.
ஜஸக்கல்லாஹ் ஹைர்
//இது பற்றி குர் ஆன் / ஹதீஸ் எந்த வசனத்தில் எந்த அத்யாயத்தில் சொல்லியிருக்கிறது என்பதை விளக்கமாக சொல்ல நண்பன் இக்பால் சாலிஹ் / நண்பன் அலாவுதீன் சொல்ல முடியும், //
ஜாஹிர் காக்கா என்னுடைய தேடலில் கிடைத்தது பின் வரும் குர் ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. திருக்குர்ஆன் 07:31
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.திருக்குர் ஆன் 17:27
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புகாரீ)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரீ)
பின் வரும் இந்த ஹதீஸை பெண்களுக்கு வாசித்துக்காட்டலாமே...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கு நரகம் காட்டப்பட்டது அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள் எனக் கேட்கப்பட்டது , அதற்கு நபி (ஸல் ) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களின் ஒருத்திக்கு காலம் முழுவதும் நீ நன்மைகளை செய்து கொண்டேயிருந்து, பின்னர் ஒன்றை உன்னிடம் கண்டு விட்டாளானால் உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)
http://www.tnpsc.gov.in/
வரும் தேர்தலில் பெண்கள் ஓட்டு கட்டுரையாளுருக்கு கிடையாது என்று பெண்கள் சங்கத்தில் முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன
To Brother Shahul,
//வரும் தேர்தலில் பெண்கள் ஓட்டு கட்டுரையாளுருக்கு கிடையாது என்று பெண்கள் சங்கத்தில் முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன//
அப்பாடா......நான் வெளக்கமாறு / பூக்கமலெ ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்
To Brother K.M.A. JAMAL MOHAMED
//ஆக, எல்லோரும் இதில் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர், மாற்றம் வரணும் என்றால் என்ன மாறனும்?//
நாம் தான் மாற வேண்டும். நடக்கும். இதுபோன்ற எத்தனையோ நல்ல விசயங்களை படிப்பறிவில் பின் தங்கிய ஊர்க்காரர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். நம்மாலும் முடியும்.
To Brother தாஜுதீன்,
உங்களைப்போல் எனக்கும் இந்த சமுதாயத்தின் மீது ஆத்திரம் உண்டு. சமயம் வரும்போது எல்லோரும் ஒன்று பட்டால் முடியாத ஒன்றில்லை.
To Brother Yasir
//மோகப்பேய் பிடித்து பல லட்ச ரூபாய் கடன் வாங்கி குடும்பத்திற்க்கு “கேவலப்” பெருமை சேர்த்து உள்ளார்கள்//
நான் இதை எழுத இப்படி ஒரு சம்பவம் கேள்விப்பட்டதும் ஒரு காரணம்.
To brothers ZAEISA & MHJ
பதிவுகள் இடையில் எழுதாமல் இருந்ததன் காரணம் , கொஞ்சம் வேலை.,..மற்றும் சரியான "லீட்' கிடைக்கவில்லை. ஏதாவது எழுதுவோம் என்று எழுதி சரியான 'ஹிட்' இல்லை என்றால் மறுபடியும் எழுத மனசு நொண்டும்.
Thanks brother Ahamed Ameen, you have successfully noted my important point in that article.
To Brother MSM Naina Mohamed
//நமதூரோ வெறும் உப்புக்காற்றில் பெரும் தேவைகளில் மட்டும் வானுயர பறந்து கொண்டிருக்கிறது அதற்கான வருமான ஈட்டுதலின்றி.//
இந்த ஒற்றை வரியில் நான் 5 பக்கம் எழுதிய விசயத்தை கொண்டு வந்துவிட்டீர்கள். இதுதான் [ இந்த வரிகள்தான் ] நம் ஊரின் இன்றைய நிதர்சனம்.
To brother Ebrahim Ansari,
நீங்கள் சொன்ன மாதிரி மனப்பாடத்துடன் ' நடைப்பாடமும்" செய்தால் நம் ஊருக்கு நல்லது.
அப்துல்காதர்... உன் நீண்ட கமென்ட்ஸ் எனக்கு உற்சாகம் தருகிறது. அதே சமயம் ஏதாவது எழுதேன். ஒரு ஆக்கமாக வெளியிடலாம் அல்லவா?
To Brother Aboobakkar, ..thanx for your very first comments.
Sabeer your comments shows you are busy.
காக்கா, இந்த ஆராய்சிக்கு நீங்கள் ஊரில் இருந்திருக்கனும்.... ஆனால் இல்லாமலே எப்படி !?
//Sabeer your comments shows you are busy.//
அப்போ நான் என்னவாம் ? துப்பட்டி பின்னாடி ஒளிந்து கொண்ட மாதிரியில இருக்கு உங்க ஏற்புரை ! :)
//Sabeer your comments shows you are busy.//
ஆமாடா.
வேலையிலும் வீட்டிலும் (பரீட்சை நேரம்)
//துப்பட்டி பின்னாடி ஒளிந்து கொண்ட மாதிரியில இருக்கு உங்க ஏற்புரை !//
அபு இப்ராஹிம் ...மைன்ட் வாய்ஸ் கேட்டுடுச்சா??
சபீர்....பரீட்சை முக்கியம் , கமென்ட்ஸ் எப்போது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பில் மட்டும் எந்த காம்ப்ரமைஸும் இருக்க கூடாது.
மாடு வளக்கலே!, பாலுகறக்கலே!, தயிரு கடையலே!! வெண்ணை எடுக்கலே! விளக்குலே எண்ணைய ஊத்தி கொளுத்தலே, உலக்கை பிடிக்கலே, மாவு இடிக்கலே, மண்சட்டி கலுவலே சொந்த துணிகளே சோப்புலே கலுவலே, தண்ணி கொடத்தை தலையிலே தூக்கலே, பாயே விரிக்கலே, படுக்கை சுருட்டலே, ஓரலுலே உக்காந்து ஒரு புள்ளே பெக்களே, கொளத்துலே போயி குளிச்சு முளுவலே! இப்போ சொன்னதெல்லாம். புதிய தலைமுறை காதுலே படாதசங்கதிகள்.
இப்ப கும்மாளம் கொட்டுறா! கும்மி அடிக்கிறா! குலுக்கி நடக்குறா! குதிகாலு மண்ணுலே குந்த மறுக்குது! கொலுசு சத்தத்தில் சந்தம் பொறக்குது! காலம் இப்ப இப்புடி மாறி போ.........ச்..........சு!
மருமவனே! நீ' அல்லிராணி 'தெருகூத்து பாத்து இருக்கிய? அந்தக் காலத்துலே கடல்கரை தெரு ஹந்தூரியில் இந்த நாடகம் போடுவாங்க. நாடகத்திலே அல்லி ராணிதான் நாட்டை ஆட்சி செய்வா. ராணியே கல்யாண முடிச்சவரு ராஜாதானே?நாடகத்திலே ராஜாக்கு 'பவர்' இல்லே. அப்போவும் 'பவர்' கட்டான்னு கேக்கப்பாடாது.. ராஜா ராணிக்கு தாலி கட்டலே, ராணிதான் ராஜாக்கு தாலி கட்டுனா. அதனாலே ராணி வச்சதுதான் சட்டம்.
கப்பல் எறுனவன் கதயும் அதே கதேதான். இங்கே எல்லாமே பெண்களால் நிச்சயிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ஆள் வரும் வாய்ப்பு இல்லாததால் மூடி நாளாச்சு. அதனாலே எல்லாமே நிச்சயிக்கப்படுவது இங்கே.
மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வெளிநாடுக்கு நாலுகாசு தேடலாமேன்னு போனவன் போலப்பே போலப்பு பொண்டாட்டி முந்தானையில் தொங்கிகிட்டு ஆடுது காசுபணம் எல்லாம் கல்யாண விருந்துலேயும் பொடவை துணிமணி ஆடம்பரங்களிலேயும் தொங்கிகிட்டு ஆடுது. [விளக்கமான சமுக ஆர்வளர்கட்டுரை கடலில் பெய்தமழை.] இன்றையமோகம் – நாளைய சோகம்.
S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்
//இன்றையமோகம் – நாளைய சோகம்//
அன்புமிக்க எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு...
உங்கள் கமென்ட்ஸ் ஏன் இன்னும் வரவில்லை என்று எதிர்பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட "நாளைய சோகம்" பல குடும்பங்களில் இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.
மற்றும் முன்னாளில் பெண்களின் கஷ்டங்களை எழுதியிருந்தது இப்போதைய சந்ததியினர் புரிந்து நடந்து கொண்டால் சரி.
அன்பு மருமகன் ஜாகிருக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]
என்னுடைய கமெண்டுக்கு உன் பதில் கண்டு மகிழ்ச்சி முதலில் வந்திருக்க வேண்டியது என்னுடைய தாகவே இருந்து இருக்க வேண்டும். சனி இரவே செய்த இமெயில் எழுத்து பிழை காரணமாக அனுப்பியது மூனு-முறை எல்லாம் பத்து நிமிடங்களில் திரும்பி விட்டது. email எனக்கு ரெம்ப தூரமான சமாச்சாரம்.
நான் சிலேட்டு பலகைலே எழுதி தப்பு இருந்தா விரல்லே எச்சியே தொட்டு அழிச்சு படிச்ச ஆளு.. திரும்பி வந்த கமெண்டை திரும்ப எடுக்க ராத்திரி ஒரு மணிக்கு மேலேதான் அதை தட்டி இதைத் தட்டி எப்படியோ எடுத்துட்டேன். ஆனா, அதை திரும்ப அனுப்ப முடியலே கடைசிலே சிறுபிள்ளையா இருக்கும் போது படிடா படிடா என்று முரட்டுதனமா அடிச்சு விரட்டிய மச்சினன் அன்சாரி 'செல்'லில் பாடம் சொல்ல காரியம் ஒருவாறு 'கை'கூடியது'.
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்''. என்பது காலம் மெய்ப்பித்த பாடம் / பழாமொழி என்ன வந்தாலும் computeraஐ கைவிடப் போவதில்லை Swim With Sharks.
இன்ஷா அல்லாஹ் சிந்திப்போம்.
குறிப்பு : இன்று காற்று வாங்க [ஊர் புரணி பேச ] போகும் போது நான் உன்னை நெனச்சேன்.
S.முஹம்மது.பாரூக்..அதிராம்பட்டினம்...
சலாம்,
நம் சமுதாயத்தில் வளர்ந்து வரும் ஒன்னே ஒன்னு அறியாமை.நகைகள் வாங்கும் போதே "அடகு வைக்கணும்" பலரின் குறிக்கோள்.தகுதிக்கு மேல் ஆடபர செலவு செய்து கெளரவம் பார்த்தவர்களின் நிலை படிப்பினையாக இருந்தாலும் யார் இதை பார்ப்பது ?
மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.95:4-6. மறுமைக்காக வாழும் மக்களுக்கு இப்பதிவு ஒரு விழிப்புணர்வே
சம்பிரதாயம் பேசும் சாத்தான்களுக்கு சாட்டையடி!!!!
விளாசுங்கள் விடியல் வரும்வரை!
Post a Comment