Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மார்க்க வரம்புக்கு உட்பட்டு…! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2013 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. சமீப காலங்களில் நம்மவர்களால் பல சந்தர்ப்பங்களில் அடிக்கடி பேசப்படும் வார்த்தைதான் ‘மார்க்க வரம்புக்கு உட்பட்டு, மார்க்க வரம்பை மீராமல், மார்க்கம் புறக்கணித்தவைகள், மார்க்கம் அனுமதித்தவைகள்’. சரி, அப்படி என்றால் என்ன? வரம்பு என்று எதை குறிக்கிறது என்பதை ஒரு சில அண்மை கால நிகழ்வுகளை வைத்து சிறிய அலசல் !.

இஸ்லாமிய வரம்பு என்பதை நாம் இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய நெறிமுறை. இவைகளில் நன்மையானவைகளுக்கு மற்றும் தடுக்கப்பட்டவைகளுக்கு என்று வரம்புகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளுட்பட்டே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை.

இஸ்லாமிய வரம்பு என்று சொல்லி நாம் எதை எடுக்கிறோம் என்பதில் தான் நம்முடைய ஈமானின் பலம் மற்றும் பலகீனத்தை எடைபோடமுடியும்.

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 4:14)

“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 5:77)

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 5:87)

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 7:55)

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (திருக்குர்ஆன் 9:112)

வரம்பு என்ற வார்த்தையோடு மேல் குறிப்பிட்ட சில இறைவசனங்களைத் திரும்ப திரும்ப வாசித்தால், நமக்கு இரண்டு விசயங்கள் மட்டுமே புலப்படும், அல்லாஹ்வின் கட்டளையும் அவன் தூதரின் வழிகாட்டல்களும் என்பது மட்டுமே.

நபி(ஸல்) அவர்கள் சுயமாக இஸ்லாமிய கட்டளையை இடவில்லை, அவர்களுக்கு அல்லாஹ் வஹீமூலம் அறிவித்ததையே சட்டமாக்கினார்கள் என்பதற்கு பின் வரும் இறைவசனம் சாட்சியாக உள்ளது.

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 53:1 முதல் 53:4 வரை)

திருக்குர்ஆனின் வழிகாட்டல்களும் நபி ஸல் அவர்களின் வழி முறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட சட்டங்களும் கொள்கைகளும் மட்டுமே இஸ்லாமிய மார்க்க வரம்பாக கருத்தப்படுமே தவிர. இவைகளுக்கு மாற்றமாக எவருடைய வார்த்தைகளும், எந்த நிறுவனங்களின் பத்வாக்களும் இஸ்லாமிய வரம்பாக முடியாது என்பதை நம் மனதில் வலுவாக நிலை நிறுத்திக் கொண்டால் இதில் எந்தவிதக் குழப்பமும் இருக்காது.

ஆனால் இங்கு நாம் தவறவிடுவது என்னவென்றால், இஸ்லாமிய வரம்பு சட்டம் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அதை ஆய்வு செய்வது கிடையாது. அந்த பெரியவர், அந்த ஆலிம், அந்த மகான் சொல்லுவது சரி தான் என்று கண்மூடித்தனமாக நம்பி வரட்டு பிடிவாதத்துடன் அதனை நிலைநிறுத்த வியாக்கியானம் பேசி இதுதான் இஸ்லாமிய வரம்பு என்று மல்லுக்கட்டுவதில் தான் மிகுந்த அக்கறை செலுத்துகிறோமே தவிர நம்முடைய மார்க்க அறிவை வளர்த்து, இஸ்லாமிய வரம்புகள் எவை என்பதை ஆய்வு செய்வதில் அக்கறை செலுத்துவதில்லை.

ஒரு காலத்தில் அரபு மொழியைக் கற்றவர்கள் அல்லது கற்ற பின்னர் மட்டுமே மார்க்க அறிவை பெறமுடியும் என்ற நிலை இருந்தது, ஆனால் இன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொருத்தரின் தாய் மொழியிலேயே நம்முடைய அடிப்படையான மார்க்க மூலங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் மூலம் மார்க்க அறிவை வளர்க்க, மார்க்க வரம்புகள் என்னவென்பதை அறிய, வேறு எந்த சந்ததிகளுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான் எனபதை நம் சிந்தனையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆய்வு செய்தோமேயானால், அன்மையில் நடந்தேறிய இசை கச்சேரி கலந்த வர்த்தக கண்காட்சியாகட்டும் அல்லது கந்தூரிக் கன்றாவியாகட்டும், மார்க்க வரம்புக்கு உட்பட்டு உள்ளதா என்பதை அடுத்தவர்கள் சொல்லி அறியாமலே சுயமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

ஒருவன் ஒரு செயலை தடுக்கும் போது, இது மார்க்க வரம்புக்கு உட்பட்டு நடக்கவில்லை என்று சொல்லும் போது ஏன் மார்க்க வரம்புக்கு உட்பட்டு இல்லை என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்க வேண்டும். அது போல் ஒரு செயலை இது மார்க்க வரம்புக்கு உட்பட்டு நடைபெறுகிறது என்றால், குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அவற்றை நியாயப்படுத்த வேண்டும். வெறுமனே மார்க்க வரம்பு என்று வார்த்தை அளவில் மேலோட்டமாக கருத்துச் சொல்லுவது அது தனிமத கருத்தே அன்றி மார்க்க அடிப்படையில் எடுத்து வைக்கப்படும் முடிவாக ஏற்க இயலாது.

இசை கச்சேரி கலந்த, ஆணும் பெண்ணும் கலக்கும் கண்காட்சிகள்/  பொருட்காட்சிகள். கந்தூரி எனும் கன்றாவிகள், தர்கா வழிபாடுகள் இவைகள் அனைத்தும் ஏன் கூடாது என்பதை மார்க்க வரம்புகளுடன் மற்றுமொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.. 

அதிரைநிருபர் பதிப்பகம்

9 Responses So Far:

Unknown said...

"மார்க்க வரம்பு" என்றால் என்ன ? இந்த வார்த்தையை , ஒரு நிகழ்வு நடக்கும்போது , இது இஸ்லாமிய மார்க்க வரம்புக்கு உட்பட்டு நடக்கின்றதா ? இல்லையா ? இது கூடுமா கூடாதா? என்பதை ஆராய்ச்சி செய்து தான் அதற்கு தடையோ அல்லது அனுமதியோ கொடுக்கலாம் என்றால் , நாம் தெருவில் செல்லும்போது , 30 வினாடிக்குள் ஒரு ஏதோ ஒரு காரியம் நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் , அது நம் அறிவுக்கு சரிப்பட்ட காரியம் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம், அப்படி இருக்கையில் ,இது மார்க்கம் அனுமதித்த , வரம்புக்கு உட்பட்ட காரியம் இல்லை எற்று சொல்லித்தடுக்க , அந்த நேரத்தில் ( 30 வினாடிக்குள்) அந்த இடத்தில் , குரான், ஹதீஸ், தொகுப்புகளான, புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத் , நசஈ, தாரகுத்னி , பைஹகி இன்னும் எத்தனை ஹதீஸ் கிரந்தங்கள் உண்டோ அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டா அந்த 30 வினாடிக்குள் நடைபெறும் அந்த ஹராமான நிகழ்வை ,எல்லா புத்தகங்களையும் ஆராய்ந்து முடிவு சொல்லி வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தடுக்க முடியுமா ?

அந்த இடத்தில் அல்லாத நமக்கு தந்த அறிவை பயன்படுத்தி, இது "வரம்பல்ல" என்ற முடிவை (அல்லாஹ்வை பயந்து) எடுக்கக்கூடாதா ?

கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்

அபு ஆசிப்.


அபு ஆசிப்.


Ebrahim Ansari said...

CHARITY BEGINS AT HOME என்று சொல்வார்கள். நல்ல காரியங்கள் உங்கள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன என்று பொருள்.

அதே போல் மார்க்க வரம்பு மீறுதலும் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. அதாவது மாமனாரிடம் வீடு கட்டி வாங்குவதில் இருந்து. நடந்தவை போகட்டும் இனியாவது மனமாற்றம் வருமா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மார்க்க வரம்புக்கு தெளிவான இலக்கணம்!

அல்லாஹ்வின் கட்டளையோடு, அவன் தூதரின் வழிகாட்டல்களின் படி முழுமையாக நடப்போமாக. ஆமீன்.

Unknown said...

வேதக்காரர்கள் என்றால் யார்?

வேதக்காரர்கள் எதைக்கொண்டு வரம்பு மீறினார்கள்?

என்பதை விளக்கவும்.

sabeer.abushahruk said...

மார்க்கத்தில் மட்டுமல்ல, மனிதன் அன்றாட வாழ்க்கையில் எதிலுமே வரம்பு மீறக் கூடாது. வரம்பு என்பது ஓர் நிலையான அளவீடல்ல. அது இடத்திற்கு இடம் காரியத்திற்குக் காரியம் இயல்புக்கு இயல்பு சற்றே அனுசரித்து மாறுபடும்.

ஆனால், மார்க்கத்தில் வரம்புகள் எந்தச் சூழலிலும் மாறாமல் காப்பதே ஈமானை ஸ்திரப்படுத்தும். இதர்கும்கூட மார்க்கம் விலக்குகள் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

Unknown said...

// வேதக்காரர்கள் என்றால் யார்?

வேதக்காரர்கள் எதைக்கொண்டு வரம்பு மீறினார்கள்?

என்பதை விளக்கவும்.//
"வேதக்காரர்கள்" என்றால், தௌராத், ஜபூர், இன்ஜீல், குரான் , இந்த வேதங்கள் அல்லாஹ்வால் இறக்கப்பட்டபோது, அந்தந்த கால கட்டங்களில் வாழ்ந்த சமூகங்கள் அந்தந்தக் காலங்களின் வேதக்காரர்கள். நாம் எப்படி குரானுக்கு சொந்தக் காரர்களோ , அதே போல அந்தந்த வேதங்களுக்கு சொந்தக்காரர்கள் அந்தந்தக்கால வேதக்காரர்கள்.

வேதங்கள் கொடுக்கப்படுவதற்கு முன் சுகுபுகள் என்னும் ஏடுகள் கொடுக்கப்பட்ட நபிமார்களும் உண்டு. இவர்கள் வழியில் வந்தவர்களை வேதக்காரர்கள் என்று சொல்வதில்லை. மாறாக சொற்ப எண்ணிக்கையில் இவர்களை பின்பற்றுபவர்கள் இருந்ததால், இவர்கள் நபிமார்களை பின்பற்றி இருந்தாலும் வேதக்காரர்கள் என்று சொல்வதில்லை.

அல்லாஹ் தன் திருமறையில் 25 நபிமார்களைப்பற்றியே குறிப்பிடுகின்றான். இவர்களில் வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களும், சுகுபுகள் கொடுக்கப்பட்டவர்களும் உண்டு.

வேதக்காரர்களில் அல்லாஹ் வரம்பு மீறியதாக சொல்வது , ஒவ்வரு கால கட்டத்திற்கு தேவையான போது, அதாவது, மக்கள் இறைவனை மறந்து தங்கள் சமூகத்திர்ற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களின் நடைமுறைகளையும், போதனைகளையும் மீறி தங்கள் மனம் போன போக்கில் வாழ தலைப்பட்டு, தங்கள் சமூகத்தில் நல்லவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று யார் யாரை கருதினார்களோ , அவர்கள் மறைவுக்குப்பின் , அவர்களை தங்கள் நேசர்களாக்கி அல்லாஹ்விடம் நாம் நேரிடையாகக்கேட்பதைவிட இந்த இறை நேசர்கள் மூலம் கேட்டால் அல்லாஹ் நம் தேவைகளை செவி ஏற்ப்பான் என்று அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து ,அல்லாஹ்வுக்கும் அவன் அடியார்களுக்கும் இடையில் ஒரு இடைத் தரகை ஏற்ப்படுத்தி
தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக்கொண்டார்கள் அல்லவா ? இவர்களைத்தான் அல்லாஹ் வரம்பு மீறியவர்கள் என்கின்றான்.

ஆதலால் வரம்பு என்ற சொல்லுக்கு அன்றும் இன்றும் என்றும் ஒரே பொருள் தான் அல்லாஹ்வின் கட்டளை, அவன் அனுப்பிய நபிமார்கள் மற்றும் தூதர்கள், நடைமுறை வாழ்க்கை இவைகளில் முரண்பட்டு தன் மனம் போன போக்குக்கு அடிபணிவதுதான் "வரம்பு மீறல்"..

அல்லாஹ் நம் அனைவரையும் , அவன் நிர்ணயித்த வரம்புக்கு உட்பட்டு வாழும்
நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக !

ஆமீன்.

அபு ஆசிப்.



Anonymous said...

இன்று போல் அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதிஸ் போன்ற மார்க்க விளக்க நூல்கள் தமிழில் வராததால் சாதாரண மக்கள் அறியாமை இருளில் மூழ்கி கிடந்தனர். மார்க்கம் ஒரு சில ஆலிம்களின் கையில் சிக்கி ஆயுள் கைதியாகவே இருந்தது. அந்த ஆலிம்கள் அறியாத மக்களை தங்கள் வசதிக்கு ஏற்ப ஆட்டிவைதார்கள்.

மார்க்க விளக்கங்களை எளிமையுடனும் அன்புடனும் எடுத்து சொல்லவில்லை.. என்று பார்த்தாலும் கடுகடுப்பான முகம்.. அறியாத மக்களின் சந்தேகங்களுக்கு தங்கள் வசதிப்படி ரீல்விட்டார்கள். விளக்கம் கேட்டவர்களை'' *****, காஃபீர்'' என்று திட்டி விரட்டி அடித்தார்கள்.

''உங்களுக்கெல்லாம் நரகம்தான்'' என்றும் சப்பித்தார்கள். அந்த காலத்து ஜும்மாவில் seventy thirty பார்முலாவில் அரபு-தமிழ் ஜும்மா மொழி ஒலித்துக் கொண்டிருக்கும் போது இதமான அரைகுறை தூக்கம் கண்ணை சொறுகும்.

''ஓ......மனிதர்களே!'' என்று ஒரு இடிமுழக்கம்..பாதி தூக்கம் பாதியோடு போச்சு. அந்த இடி ஒன்றுமில்லை ஹோத் பாகலியின் அழைப்புதான். பிறகு மவுத்து cafan இடுதல், குழியில் வேதனையை விவரித்தல் விளக்க உரை, இத்தோடு ஜும்மா முடிந்தது. எல்லாம் சரிதான். என் கேள்வி அல்லா நல் அடியார்களுக்குசொர்கத்தை படைக்கலையா? ஏன் அதை சொல்லவில்லை.? ஹஜ் செய்து வந்தவர்கள் கொடுக்கும் பேரீச்சம் கனி' 'விதையே கீழேபோடக்கூடாது. கால் மிதி பட்டால் அல்லா அடிப்பான்". என்று ஒரு ரீல் விட்டார்கள் [அல்லா கம்பை கையில் பிடித்து கொண்டுதான் இருப்பான?]

நீங்கள் நான் கேட்டேன் ''பேரீச்சமரம் வானத்திலேயா முலைக்கிது?'' எனக்கு கிடைத்த பதில்"" நீ ஒரு ஹராம்ஜாதா. காபீர்!'' போதுமா? பல ஆண்டுகளுக்கு முன் நம் ஊரில் நடந்த நபிகள் நாயகம் [சல்லளஹு] அவர்கள் பிறந்தநாள் விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னார் ''இஸ்லாமிய நண்பர்கள் இங்கு இஸ்லாத்தை பற்றி விரிவாக பேசியதை கேட்டு இஸ்லாத்தின் சிறப்பை நான் நன்கு தெரிந்து கொண்டேன் எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டுதான் அவர்களோடு நெருங்கிபழகி இருக்கிறேன் அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லிய இஸ்லாத்தின் வழியில் நடந்து இருந்தால் ஜெயாபிரகாஷ் நாராயணன் என்ற என் பெயர் அப்துல்காலம் என்றோ முஹமது அலி என்றோ எப்போதோ மாறி இருக்கும்'' என்றாறம். J.P.நாராயணன் இதை சொன்னதும். டெல்லியில் நடந்தமீலாத் விழாவில்தான்,

S,முஹமமதுபாரூக்,அதிராம்பட்டினம்

Adirai pasanga😎 said...

அல்லாஹ் அவனது மார்க்கத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து அதன்படி நடக்க நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாகவும்

Unknown said...

எதைக் கொண்டு அந்த வேதக்காரர்கள் வரம்பு மீறினார்கள் சரியான முறையில் விளக்கவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு