தகப்பன் என்ற உயர் பதவியை அடைந்ததும் ஒவ்வோர் ஆணும் அதன் உள்ளார்ந்த விந்தையான புனித உறவின், சந்ததிக்கான சுழி போடப்பட்டதை உணர்கிறான்.
தனது பிள்ளைகள் எவ்வாறெல்லாம் வளர வேண்டும், இருக்க வேண்டும் என்ற கனவுக் கோட்டைகள் கட்டிய தந்தைகள், கட்டிய கோட்டையை கட்டிக் காத்த மக்களையும் கண்டிருப்பர் அதற்கு மாறாக அதனை இடித்தெறிந்த மக்களையும் பெற்றிருப்பர்.
இந்த உணர்வு இருக்கும் ஆண் தனது தந்தையை எவ்வாறு கண்டிருக்கிறான், அல்லது பெண்மக்கள் தங்களது தகப்பனை எவ்வாறு கண்ணியப்படுத்துகிறார்கள்.
உழைக்கும் வர்க்கமாக கண்ட தந்தையர்களை அதிமதிகம் கொண்ட நமதூரில் “இவன் தந்தை என்னோற்றான் கொள்” என்னும் சொல்லுக்கு அர்த்தமாக நம்மில் எத்தனைபேர் முன்மாதிரி மக்களாக நடந்து காட்டியிருக்கிறோம்?.
நினைவு கூறுவோம், கண்ணியப்படுத்துவோம் நமது ஹீரோவாக இருக்கும் தந்தையரை !
இனி உங்களனைவரின் கருத்தாடல்கள் செழிப்பாக்கட்டும் இந்த பதிவை இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
30 Responses So Far:
இன்று தந்தையர் தினம் ஜூன் 16 சரியான தேதியில் சரியான பதிவு இன்றைய தந்தையர் தினத்தில் போன வாரம் இரு தந்தையர்கள் அடைந்த சந்தோஷத்தில் நாமும் பங்கு கொள்வோம் ஒருவர் அபு சுஹைமா என்ற சகோ அப்துல்கரீம் மற்றோவர் என் பள்ளி தோழர் சகோ ஜாகிர்ஹுசைன் ஒருவர் அதிரை பள்ளியில் தன் மகள் முதல் மதிப்பெண் பெற்றதர்க்ககாவும் மற்றோவர் துபாய் பள்ளியில் தன் மகள் முதலிடம் பெற்றதர்காகவும் சந்தோசமடைந்தனர்.தம் தந்தைகளுக்கு தந்தையர் தின பரிசாக முதல் மதிப்பெண்ணை பெற்றுகொடுத்த இரு மானவிகளுக்ககவும் .துவா செய்வோம் .இறைவன் உதவியால் பல வெற்றிகலை அடைந்து தன் தந்தைகளுக்கு பெருமை சேர்க்கட்டும் .நான் தோளுக்கு உயர்தபிறகு நானும் என் தந்தையும் தோழர்கள் .ஆனால் தந்தை என்ற மரியாதை துளி அளவு கூட இன்றளவும் குறைந்தல்லில்லை .நானும் என் தந்தையும் ஒரே தேதி ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் வருடங்கள் வேறு இது எனக்கு கிடைத்த பாக்கியம் சான்றோன் எனக்கேட்ட தந்தை. தலைப்பு எனக்கு பொருத்தமே எனது தந்தை எனது நாயகனே
"வாப்பா" ஹயாத்தோடு இருந்து பிள்ளைகளுக்காக தன் வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் பல இன்னல்களுக்கிடையே அயல்நாடுகளில் செலவழித்து வயோதிகத்தில் ஊர் திரும்பி வந்திருக்கும் பொழுதும் அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் சுயநினைவின்றி இருக்கும் பாயில் மலம், சிறுநீர் கழிக்க நேரிடும் பொழுதும் என பல பரிணாமங்களில் தான் பெற்ற பிள்ளைகளின் மனோநிலையும், அவர்களின் முக பாவனையும், உபசரிப்பும் மரத்திற்கு மரம் தன் மேனியின் நிறம் மாற்றும் பச்சோந்தி போல் மாறிப்போவதை நாம் நம் ஊரில் பரவலாக காண முடிகிறது.
வாப்பா உசுரோடு இருக்கும் பொழுது உள்ளப்பூர்வமாக திரும்பி பார்க்காத எத்தனையோ பிள்ளைகள் அவர்கள் மரணித்து வீட்டின் நடுவே கட்டிலில் ஜனாஸாவாக கிடத்தப்பட்டு கிடக்கும் பொழுது இதுவரை பாராமுகமாக இருந்து வந்த அப்பிள்ளைகளுக்கு எங்கிருந்து தான் வருகிறதோ அந்த போலி பாசமும், நேசமும் இப்படி "என்னப்பெத்த வாப்பா, கண்ணான வாப்பா, சீதேவி வாப்பா, உட்டுட்டு போய்ட்டியளே" என வாய்விட்டு அழுது அவர்களின் பெரும் குற்றங்களையும், அடாவடி செயல்களையும், அநியாய, அக்கிரமங்களையும் கூட்டத்தின் நடுவே எளிதில் மறைக்க முயலுகின்றனர்.
நேற்று வந்த புருஷனை வானுயர உயர்த்தி அவன் சொல் கேட்டு தன்னை உலகுக்கு அறிமுகம் செய்ய காரணமாய் இருந்த பெற்றோரை வீட்டை விட்டு வெளியே போ அல்லது வீட்டை விட்டு அடித்து விரட்டிய பிள்ளைகள் தான் வயோதிகம் அடைந்ததும் தன் பிள்ளைகளால் அடித்து விரட்டப்படுமுன் திருந்திக்கொள்ளட்டும்....
உசுரு ஊசலாடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பளித்து கண்ணியப்படுத்துவோம் அவர்கள் கண் மூடி இம்மண் மூடுமுன்......
தந்தையர் தினத்தில் மட்டும் அவர்கள் போற்றிப்பணிவிடை செய்யப்பட வேண்டியவர்கள் அல்லர். வாழ்நாட்கள் முழுவதும் போற்றி பணிவிடை செய்து அவர்களின் து'ஆவைப்பெற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எல்லாத் தினங்களும் பெற்றோர்மீது அன்பு செலுத்துபவனே மனிதானாயிருக்க முடியும். மேநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கிப்போய் தந்தையரைப் புறக்கணித்து வருடத்தில் ஒரு நாள் மட்டும் நினைவுகூர்வது நன்றி கொல்வதாகும் நயவஞ்சகமாகும்.
ஒவ்வொரு தினமும் தந்தையர் தினமே!!!
அதிரையைப் பொறுத்தவரை இளமையான வாப்பாவுடன் வளர்ந்தவர்கள் மிகக் குறைவே. அதிரைச் சிறுவர்களுக்கும் வாலிப வயதை எய்தும் வரை வாப்பா என்னும் உறவு, ஏர்மைல் தபால், பிஸ்கோத்து ட்டின், ஐசோஃபி சட்டை, சுன்னத்து ஊர்வலம், கித்தாச் செருப்பு, க்ளைடாஸ்கோப், கப்பக்கல் பணம் போன்ற பொருட்கள் சார்ந்ததாகவே அமையப் பெற்றது.
அதற்குப் பிறகு வளைகுடாச் சபுராளியாகிப் போன மகன்களுக்கு வாப்பா என்னும் உறவு ஒரு எமர்ஜென்ஸி விடுமுறைக்கானக் காரணியாக, “வாப்பாக்கு ரொம்ப முடியல வாப்பா, ஒரு தடவை வந்து பார்த்துட்டு போயிடு”“ரூஃகு போறதுக்குள்ளே போயிட்டேன்”, “வாப்பா இருந்தப்ப வீட்டு நிர்வாகம் எதுவுமே எனக்குத் தெரியாது. எல்லாம் வாப்பா பார்த்துக்கிட்டாக, இப்பதானே தெரியுது வீட்டு நிர்வாகம் எவ்வளவு சிரமம் என்று” பொன்ற உணர்வுகளோடு வாப்பா உறவு தங்கிவிடுகிறது.
என் பிள்ளைகளுக்கு அப்படியில்லை என்றாலும் எனக்கு வாய்த்த வாப்பா உறவும் ஏறத்தாழ இப்படித்தான். அத்துடன், என்னை அதிகமாக பாதித்த வாப்பா உணர்வுகளைக் கீழே பகிர்ந்துள்ளேன்:
இதோ இந்த புகைப்படத்தில் உள்ளது போலவே, இதே ஸ்டைலில் நான் என் வாப்பாவை கையை பிடித்துக்கொண்டு போனது ( கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பு) இதைப்பார்த்ததும் , அவர்கள் சொன்ன ஒன்று என் நினைவுக்கு வந்து என் கண் முன்னே நிழலாடுகின்றது.
என் வாப்பா சொன்னார்கள், மகனே ! நான் உனக்கு சொத்து சுகம் எதுவும் சேத்து வைத்து விட்டு செல்லவில்லை. மாறாக ,! நீ முஹம்மது தம்பியின் மகனா என்று யாரும் உன்னை ஏளனமாக நினைத்துவிடக்கூடாது என்ற விதத்தில், சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்து இருக்கின்றேன். என்னைக்கொண்டு உனக்கு " நீ அவர் மகனா ?" உன் வாப்பா எல்லோருக்கும் ரொம்ப உதவியாக இருந்தவர்கள் , ரொம்ப கண்ணியத்தோடு வாழ்ந்தவர்கள் என்ற நல்ல பெயரை மட்டும் தான் நான் உங்கள்களுக்கு விட்டுச்செல்கின்றேன் என்று என் கை பிடித்து சொன்னது இன்று வரை ஞாபகம்.
பணம் காசு பெரிசில்லை . இந்த சமூகத்தில் ஒரு கௌரவ மிக்க ஒருவரின் மகன் என்ற பெயரில் எனக்கு இன்றளவும் திருப்தி. அவர்களுக்கெல்லாம் ,நாம் சம்பாதித்து பணிவிடை செய்ய நமக்கு வாய்ப்பை அல்லாஹ் தரவில்லை. ஆனால் என் தாயின் உயிர் உள்ளவரை, நம்மால் இயன்றதை செய்ய அல்லா வாய்ப்பு தந்தான் . அதற்க்கு அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
இவ்வுலகில் தாய் தந்தையரை மதித்து, அவர்களுக்கு பணிவிடை செய்வதில் உள்ள சந்தோசம் வேறு எதில் கிடைக்கும் ? உண்மையான முமின்கலுக்கு , தாய் தந்தையர் உயிரோடு உள்ளது பெரும் பாக்கியமே, ஏனனில், அபரிமிதமான நன்மைகளை அள்ளித்தரக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் இந்த தாய் தந்தையரை கண்ணியப்படுத்துவதில் வைத்து இருக்கின்றான்.
உயில் உள்ளவரை தாய் தந்தையரை கண்ணியப்படுத்துவோம்,
அபரிமிதமான நன்மைக்கு சொந்தக்காரர்கலாகுவோம்.
அபு ஆசிப்.
Assalamu Alaikkum
A father to his children is an inspiring leader. My father Mr. M.K. Bahurudeen (Allah yarham) was(is) an inspiring leader to me. He has taught me so many key and even minute things. I am grateful to him and pray for him always. And I would like to be an inspiration to my children.
No other person(s) in the world can love and care about their children than their parents. There is no equivalent to mother and father. The children must commit themselves to be grateful to the parents.
Parents' wishes and duas are key to children's prosperity and great future life. Hope all children would receive well wishes and duas from parents.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை என் தந்தையுடன் தொலைபேசியில் பேசிவிடுவேன் இரவில் இஷா தொழுதுவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட்டார்களா என்று கேட்டுவிட்டுதான் வேலைக்கு போவேன் என் தந்தை கை தொலைபேசி வைத்துகொள்ளவில்லை இரவு 9 மணி வரை வீடு வந்து சேரவில்லை என்றால். அலுவலகத்துக்கு அவர்கள் தங்கை வீடு எல்லாவற்றுக்கும் போன் செய்து கரண்ட் இல்லை என்றால் யாராவது ஆள் அனுப்பி மழை யாய் இருந்தால் குடை அனுப்பி வீடு வந்து சேர்ந்துவிட்டார்கள் என்றால் தான் மனது வேளையில் நாட்டம் கொள்ளும் .எனது ஒவ்வொரு பயணத்தின்போதும் விமானம் போய் நான் இருக்கும் நாட்டுக்கு போய் சேரும் நேரம் நம் நாட்டு நேரப்படி இரவு 3 மணியாக இருக்கும் அவர்கள் சொல்வார்கள் எந்த நேரமாக இருந்தாலும் போய் இறங்கியவுடன் போன்பண்ணு என்று சொல்லிவிட்டு அவர்கள் இரவு இரண்டு மணிக்கு எழுந்து தஹஜத் தொழுதுவிட்டு துவாவில்யே இருப்பார்கள் .எனது போன் போனவுடன் அப்போதே சுபுகு தொழுகைக்கு கிளம்பிவிடுவார்கள் நான் ஒவ்வொரு முறை லோகளில் விமானம் பயணம் செய்தாலும் என் தந்தைய்டம் சொல்லிவிட்டுதான் பயணம் செய்வேன் ஒருமுறை ஊருக்கு வெகேசன் போறபோது என்தம்பி துபைக்கு 14 டே டிரான்சிட் விசா அனுப்பி இருந்தான் 14 நாட்கள் துபையில் தங்கிவிட்டு எமிரட்சில் ஊருக்கு போவதற்காக நானும் என் தம்பியும் துபாய் ஏர்போர்ட் போனபோது போர்டிங் கார்டு வாங்கிய பிறகு உள்ளே கேட்டுக்கு போறதுக்கு லேட் ஆகியாதால் எங்களை விட்டுவிட்டே விமானம் புறப்பட்டுவிட்டது என்னுடைய விசா முடிந்துவிட்டதால் என்னை வெளியே விடமுடியாது என்று சொல்லிவிட்டார்கள் .அடுத்த விமானம் அடுத்த நாள் விடியற்காலை 3 மணிக்குதான் .என்னால் என் தம்பியும் துபாய் விமான நிலையத்திலேயே 24 மணி நேரம்......... .துபாய் இல் இருந்து கிளம்புபோது அவசரத்தில் எந்தந்தையிடம் போனில் சொல்லிவிட்டு கிளம்பவில்லை அன்றிலிருந்து ஒவ்வொரூ முறையும் அவர்களிடம் சொல்லிவிட்டுதான் லோகல் பயணம் கூட அல்லாஹுவின் உதவியும் தந்தையின் துவாவும் பெரிய பரக்கத்.ஒவ்வொரு நாளும் பஹல் 12 மணிக்குள் லுஹா
தொலுதுவிட்டும் ஒவ்வொரு நாளும் இரவு 2 மணிக்கு எழுந்து தகஜத் தொழுதுவிட்டு எனக்கும் என் தம்பி தங்கைக்கும் துவா செய்ய தவுருவதில்லை என் தந்தை......
எனது தந்தை எனது நாயகனே
தருணங்கள்
வாப்பா,
போய்ட்டீங்க...
மீண்டும் போய்ட்டீங்க...
எங்களை தவிக்க விட்டுட்டு
போய்ட்டீங்க...
இம்முறை-
எத்தனை முயன்றாலும்
மீட்க முடியாத இடம்...
எவ்வளவு நடந்தாலும்
தொடர முடியாத தூரம்!
அழுவது ஆணுக்கு அழகல்ல-
அழுவது நானல்ல...
என் உயிர்!
எத்தனை கனவுகள்
தேங்கிய கண்களை...
அத்தனை அருகில் தேடியும்-
வெற்றுப் பார்வையோடு
ஒற்றையாய் நீங்கள்!
சற்றேனும் கவனமின்றி
சிறு பிரயாசையுமில்லாத
அனிச்சை சுவாசம்
எங்கோ பிழைத்து
மூச்சு
இழுத்து விடுவது
இத்தனை சிரமாக
மாரிப்போயதா
ஆவி பிறிவதை - மிக
அருகில் பார்த்தேன் - உங்கள்
ஜில்லிட்ட விரல்கள்
பற்றிக்கொண்டே...!
வாழ்வியல் தத்துவத்தின்
தவிர்க்க முடியா தருணங்களை
இத்தனை விளக்கமாய்...
இதுவறை கற்றதில்லை!
உங்கள்...
இறுதி மூச்சுக்காற்றை
என் -
சுவாசமாய் இழுக்க...
அசைவற்றுப் போனீர்கள்!
போய்ட்டீங்க என
கதறிய
சொந்த பந்தங்களின்
சப்தங்களினூடே...
கேட்டதா உஙகள்
மகனின்
உயிர் அழும் ஓசை?!
உங்கள்
மரணம் சகித்து...
குளிப்பாட்டி...
நறுமணமூட்டி...
கோடித்துணி போர்த்தி...
கட்டிலிலிட்டு...
காண விரும்பாத காட்சியாய்-
உஙகள் கோலம் கண்டு...
போய்ட்டீங்களே வாப்பா!
நீங்கள் போட மறந்த
உங்கள் செறுப்பணிந்து...
நீங்கள் நடக்க மறந்த
நடை நடக்கிறேன்...
உங்களுக்கு மிக அருகில்...
இறுதி ஊர்வலத்தில்!
அடக்கம் செய்து
அடக்க முடியாத
அழுகையோடு
திரும்பி நடக்கிறேன்...
மயானம் விட்டு...
போய்ட்டீங்களே வாப்பா!
வந்தது வாழ்ந்தது...
தொட்டது விட்டது...
எல்லாம் அற்றுப்போய்
காற்றுக் குமிழியென...
வெடித்துப் போயிற்று உயிர்!
மயாணத்தில்
கற்றுக்கொண்ட பாடத்தோடு
எஞ்சிய நாட்களை வாழ
இதோ நான்!
-Sabeer
நன்றி: திண்ணை
வெறும் தோற்ற மயக்கங்களோ?
அதற்கப்புறம்
ஆறேழு மாதங்களாகியும்
அம்மாவுக்கு
அப்பாவின் மறைவு குறித்து
தீர்மானமாக ஏதும்
புரிந்துவிடவில்லை
அன்றாட வாழ்க்கையில்
அதிகப்படியான உரையாடல்களை
அம்மா அப்பாவிடம்
சொல்லிக் கொண்டுதானிருந்தாள்
அப்பா வாழ்ந்த வீட்டின்
அத்தனை இடங்களிலும்
நின்றதுவும் நடந்ததுவும்
மொத்த நேரமும்
கூடவே இருந்ததுவும்
சில்லறைக் காரியங்களைச்
செய்து தந்ததுவும்
மாடியில்
தண்ணீர்தொட்டி நிரம்பி
அருவியாய் கொட்டும்போதெல்லாம்
மோட்டாரை நிறுத்தச்சொல்வதும்
காய்கறிக் கடையில்
மறக்காமல் புதினா மல்லியோடு
கறிவேப்பிலைக் கொத்தும்
கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும்
அடமான நகைக்கு
வங்கியில்
கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும்
மாமா வீட்டில்
மண்ணெண்ணெய் வாங்க
இரவல் கொடுத்த
குடும்ப அட்டையை
மறவாமல்
அன்றாவது திரும்ப வாங்கச் சொல்வதும்
என
அப்பாவை
ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு
வீடு முழுவதும் அப்பா இருப்பதாக
தோன்றல்கள்
எனினும்
வீடே உறங்கும்
விடிகாலையில்
ஃபிளாஸ்க்கில் முக்கால்வாசிச் சூடு
நீர்த்துப் போன
காஃபி ஊற்றி
பிஸ்கோத்து நனைத்து
தனியாக
உண்ணும்போது மட்டும்
அம்மாவுக்கு
விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ளும்.
-Sabeer
நன்றி: திண்ணை
இருப்பு!
முற்றத்துக்
கயிற்றுக் கொடிக்கும்
வீட்டிற்கு மென
மாறிமாறி
உலர்த்தியும்
விட்டுவிட்டுப் பெய்த
தூறலின் ஈரம்
மிச்ச மிருந்ததால்
இரண்டு ஆண்டுகளுக்குமுன்
இறந்துபோன
வாப்பாவின்
சட்டை யொன்றை
உம்மாவிடம் கேட்க
‘வாப்பாவுக்கு
ரொம்பப் பிடித்த’தாக
தந்தச் சட்டை…
நான் பிரயோகித்துப்
புறக்கனித்துக்
கழட்டிப்போட்ட ஒன்று!
தென்னந் தோப்பில்
கரும் பச்சையாய்
செழிப்பா யிருந்த
ஒரு வரிசை மரங்களைக் காட்டி
புருவம் சுருக்க
‘அவை
வாப்பா நட்ட’வை என்றான்
தோட்டக் காப்பாளன்!
முன் முற்றத்தில்
தலைவாசலுக்கு வலப்புறம்
பந்தல் பிடித்து
மாடிவரைப் படர்ந்த
‘அவர் நட்ட’
மல்லிகைக் கொடியில்
மொட்டவிழும் போதெல்லாம்
வீட்டினுள்
வாப்பா வாசம்!
எதிர்மனையில்
‘அவர் நட்ட’
வேப்பமர நிழலில்
உம்மா அமர்ந்து
வெற்றிலை போடும்போதும்
‘அவர் விதைத்த’
சப்போட்டா
பழங்கள் கொழிக்க
பறித்துப் பாதுகாக்கும்போதும்
உம்மா
ஒற்றையாய் உணர்வதில்லை!
அவர் மாற்றியமைத்த
மாடி பால்கனி…
பிரித்து வேய்ந்த
பின்முற்றத்துக்
கீற்றுக்கொட்டகை…
வீட்டின்
இடமும் வலமுமாய்
‘இட்டு வளர்த்த’
கொய்யாவும் மாதுளையும்…
பேரனின்
முழங்காலைச் சிராய்த்ததால்
கற்கள் பொதிந்த
தெருவையே
‘மெழுகிய’
சிமென்ட் தளம்…
குடும்ப அட்டைத் தலைவராகப்
புகைப் படம்…
சொத்துப் பத்திரங்களின்
கீழே
இடது கோடியில் கையெழுத்து…
காரின்
உட்கூரை வேலைப்பாடுகள்…
வீட்டுக்
கதவின் கைப்பிடி…
உம்மாவின்
வெண்ணிற ஆடை…
வெறும் கழுத்து…
என
எங்கும்
எதிலும்
வாப்பாவின் இருப்பு!
-Sabeer
நன்றி: திண்ணை
sabeer.abushahruk சொன்னது…
அதிரையைப் பொறுத்தவரை இளமையான வாப்பாவுடன் வளர்ந்தவர்கள் மிகக் குறைவே. அதிரைச் சிறுவர்களுக்கும் வாலிப வயதை எய்தும் வரை வாப்பா என்னும் உறவு, ஏர்மைல் தபால், பிஸ்கோத்து ட்டின், ஐசோஃபி சட்டை, சுன்னத்து ஊர்வலம், கித்தாச் செருப்பு, க்ளைடாஸ்கோப், கப்பக்கல் பணம் போன்ற பொருட்கள் சார்ந்ததாகவே அமையப் பெற்றது.
நமதூர் இலங்கை பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ, அயல்நாட்டு அகதிகளாய் ஆகிவிட்டது அதிரையர்கள் வாழ்க்கை.
அகதிகள் கூட தாய், தந்தையரோடு சேர்ந்தே வாழ்கின்றனர்.. நமக்கு அந்த கொடுப்பனையும் இல்லை.. அதற்கு பெயர் அடிமை என்ற தமிழ் அகராதி கூறுகின்றது..
கவிக்காக்காவின் கருத்துடன் ஒன்றி நான் வளரும்போது வாப்பா பக்கத்தில் இல்லை...உம்மாதான் எங்களை பாசத்துடனும்,பண்புடனும் ,கண்டிப்புடனும்,கண்ணியத்துடனும் வளர்த்தார்கள்....என்னமா இருந்தாலும் "வாப்பா” பாசம் ரத்தத்தில் ஓடிக்கொண்டிருப்பதால்...அவர்களிடம் இன்றுவரை பேசும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியே ...பெருமையே...
ஏறத்தாழ பெரும்பாலான அதிரையர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் - அதில் கால அளவில் வித்தியாசங்கள் மாற்றமிருக்கும்...!
என்னுடைய குழந்தைப் பருவம் தொட்டு கல்லூரி இரண்டாம் ஆண்டு வரை அதிமதிகம் கழிந்தது என்னோட வாப்பாவின் வாப்பா (அப்பா) அவர்களோடுதான் !
என்னுடைய வாப்பா வார்த்தெடுத்தது அவர்களின் வாப்பாவோடு நான் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள் நானும் அப்படித்தான் இருந்தேன்... வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணங்கள் அவை !
MSM-Quote :
//உசுரு ஊசலாடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பளித்து கண்ணியப்படுத்துவோம் அவர்கள் கண் மூடி இம்மண் மூடுமுன்......
தந்தையர் தினத்தில் மட்டும் அவர்கள் போற்றிப்பணிவிடை செய்யப்பட வேண்டியவர்கள் அல்லர். வாழ்நாட்கள் முழுவதும் போற்றி பணிவிடை செய்து அவர்களின் து'ஆவைப்பெற நாம் கடமைப்பட்டுள்ளோம். //
இருவரின் வாழ்வு நிறைவுப் பயணத் தருவாயில் நான் அருகில் இல்லை, அந்த பாக்கியம் எனது தம்பிக்கு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ் !
வீட்டு நடுக்கூடத்தில் தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு தாய் ஊட்டும் அறிவுரைகள், நல்லறங்கள், நினைவலைகள், மூத்தோர் பெருமை என்று தொடரும் அந்த பொழுதுகள் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாத ஒன்று !
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக !
எங்கள் பிரார்த்தனையின் ஒவ்வொரு பொழுதிலும் நினைவுகூர்வதை தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் !
வாப்பாக்களின் வளத்திலும் வசதியிலும் வாலாட்டிக் கொண்டும், வம்பு பண்ணிக் கொண்டும் இருக்கும் மகன்கள், வாப்பாவின் வஃபாத்துக்குப் பின்னர் தான் “வாப்பா சொல்லைக் கேட்டிருக்கலாம்பா” என்று உணர்வார்கள்! ஆசை மகனின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் வரைக்கும் உயிரின் மீது ஆசை வைத்துத் தள்ளாத வயதிலும் தளராமல் உழைக்கும் வாப்பாக்களை வாழ்த்துவோமாக!
அஸ்ஸலாமு அலைக்கும். வாப்பாஆஆஆஆ=உயிர்!
நான் சொல்ல வந்த உணர்வுகளை கவிகாக்காவின் கவிதைகள் சொல்லிவிட்டது. மேலும் அதன் கவிதைக்கு நான் முன்பு எழுதிய கருத்துக்கள் என் நினைவில் மீண்டும் ஒரு அதிர்வை நினைவுறுத்துகிறது.அல்லாஹ் மிகப்பெரியவன். நம் பெற்றோரின் ஆயுளை ஆரோக்கியத்துடன் நீட்டிவைப்பானாக ஆமீன்.
தாய்,தந்தையர்களை அரவனிப்பதும்,கவனிப்பதும் பிள்ளைகளுடைய கடமை அப்படி தன்னுடைய தந்தையை கவனிக்கும் பட்சத்தில் அவர்களை ஒரு சில நேரங்களில் உதாசின படுத்துகின்றனர். பிள்ளைகள் தன்னுடைய தாய், தந்தையரை கோபத்தில் தூக்கி எரிந்து விடுகின்றனர். அதை சமையம் தந்தையர்களும் தன்னுடைய பிள்ளைகளை தூக்கி எறிந்து விடுகின்றனர். பிள்ளைகள் தன்னுடைய தாய்,தந்தையர் மீது அன்பும்,பாசமும் வைத்துருக்கும் போது தந்தையர்கள் ஒரு சில நேரங்களில் தன்னுடைய பிள்ளைகளை மௌத் வரைக்கும் கிடையாது என்று சாபம் விடுகிறார்கள்.
அப்படிபட்ட தந்தையர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் தன்னுடைய பிள்ளை என்று பார்க்காமல் வாய்க்கு வந்தது எல்லாம் பேசிவிட்டு பிறகு வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கோபத்தில் என்ன பேசுவது என்று தெரிய வில்லை. கோபத்தில் இருப்பவன் அர பித்தன் வார்த்தைகளை விட்டுவிடலாம் ஆனால் அதை அல்ல முடியாது. பேசுவதற்கு முன்பே நன்றாக கவனித்து,யோசித்து பேச வேண்டும். தந்தைக்கு மதிப்பும்,மரியாதையும் கொடுபார்கள் அவர்கள் அதை எல்லாம் தாண்டி அவர்களுடைய மதிப்பை இழந்து விடுவார்கள் ஒரு சில நேரங்களில். தந்தையர்களும் தன்னுடைய பிள்ளைகளை அரவனிப்பது மிக குறைவாக ஆகிவிட்டது. ஏனென்றால் தந்தையர்கள் ஒரு சில நேரங்களில் பிள்ளைகள் வெறுக்கும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர்.
என்னைப் பொருத்தவரை வாப்பாவை முதலில் பார்த்த நினைவு ஐந்து வயதில்தான். அப்போது கூட " இவர் தாண்டா தம்பி உன் வாப்பா! உனக்கு இஸ்கோத்து, பள்ளி முட்டாயி, சப்பாத்து எல்லாம் அனுப்புனாரே அவர்தான் இவர்- எங்கே வாப்பானு கூப்புடு! " என்றுதான் அறிமுகமான நினைவு.மடியில் தூக்கி வைத்து பட்டர் க்ரீம் பிஸ்கட் தந்த நினைவு.
அதன்பின் இரண்டு வருடங்களுக்கொருமுறை நாகப் பட்டினம் சென்று அழைத்து வரும்போது வாப்பாவைப் பார்ப்பதை விட வரும் வழியிலேயே அவர்கள் பிரித்துத் தரும் சாக்லேட் மீதுதான் அதிகப் பிரியம்.
வளர வளர எங்களுக்கு வாப்பா இல்லாமல் போனார்கள். ஆமாம் வாப்பாவே எங்களுக்கு நண்பர் ஆனார்கள். அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்தும் பேச முடியும் எங்களுக்கு எங்கள் வாப்பாவுடன். மனம் அறிந்து மணம் செய்துவைத்தார்கள். சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற உணர்வுடன் ஒன்றும் தராமல் வீட்டை விட்டு அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் கட்டித்தந்த கல்விப் பொட்டலம் கையில் இருந்து காலமெல்லாம் கை கொடுக்கிறது.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றும் , தந்தையர் நாடென்ற போதினிலே என்றும், மகன் தந்தைக்காற்றும் நன்றி என்றும் புலவர்கள் பல பாடல்களில் தந்தையை முன்னிலைப் படுத்துகிறார்கள்.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே - என்று புறநானூறும் புரிய வைக்கிறது.
இறுதி நாட்களில் உடன் இருந்து பிறவிக் கடன் தீர்க்க உதவி செய்த அல்லாஹ் இறுதி நாளன்று இருந்து முகம் பார்க்க முடியா தொலைவில் வீசிவிட்டான் என்பதே என்றுமே மாறாத வருத்தம்.
அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். " நீங்கள் மூன்று பேர்களாயிற்றே ? ஒற்றுமையாக இருக்கிறீர்களா? "
நான் சொன்னேன் " மாஷா அல்லாஹ் நல்ல ஒற்றுமையாக இருக்கிறோம். காரணம் வாப்பா எங்களுக்கு படிப்பைத்தவிர சொத்து எதுவும் சேர்த்துவைத்துவிட்டுப் போகவில்லை " என்று.
வாப்பாமார்கள் தேடிவைத்த பல சொத்துக்களின் பிரிவினைகளுக்காக எண்ணற்ற உடன்பிறந்த சகோதரர்களின் கூட்டங்கள் அடிதடி, அரிவாள் வெட்டு , கட்டைப் பஞ்சாயத்து, காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிமன்றம் என பரவலாக பிளவுபட்டுக் கிடக்கின்றன.
இவர்களைப் பார்த்து வாப்பாமார்கள் கபுரிளிருந்து கேட்பார்கள், " இதற்கா நான் கப்பலேறி கஷ்டப்பட்டு சொத்து சேர்த்துத் தந்தேன்?"
//இரண்டு ஆண்டுகளுக்குமுன்
இறந்துபோன
வாப்பாவின்
சட்டை யொன்றை
உம்மாவிடம் கேட்க
‘வாப்பாவுக்கு
ரொம்பப் பிடித்த’தாக
தந்தச் சட்டை…
நான் பிரயோகித்துப்
புறக்கனித்துக்
கழட்டிப்போட்ட ஒன்று!//
தம்பி சபீர் ! இந்த வரிகள் ஒவ்வொன்றுக்கும் என் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.
Ebrahim Ansari சொன்னது…
இறுதி நாட்களில் உடன் இருந்து பிறவிக் கடன் தீர்க்க உதவி செய்த அல்லாஹ் இறுதி நாளன்று இருந்து முகம் பார்க்க முடியா தொலைவில் வீசிவிட்டான் என்பதே என்றுமே மாறாத வருத்தம்.
----------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அப்பப்பா!ஆற்றாமையை இப்படியெல்லாம் வெளிப்படுத்த முடியுமா?சோகத்திலும் சொல்லாற்றல் பிரமிக்க வைக்கிறது.
எந்நாளும் என்னால் தாய்-தந்தையருக்கு திருப்தியளிக்கக் கூடியதாகவும், அவர்கள் ஆயுளை ஆரோக்கியத்துடன் நீட்டிவைத்து அவர்கள் அருகில் இருந்து தொடர்ந்து காண அல்லாஹ் நாடி வைத்து இருப்பானாக ஆமீன்.
யார் கண்டுபிடித்தார் இந்த தினங்களை? வாப்பாவை நினைவு கூற ஒரு நாள், உம்மாவை நினைவுகூற நாள்,இன்னும் பல எப்படி?
வாப்பாவை நினைவு கூற இந்த ஒற்றை நாள் போதுமா? அப்படியானால் மற்ற நாட்கள்?
இரு பெருநாட்களைத் தவிர மற்ற நாட்களை நாம் கொண்டாடலாமா? அல்லது நினைவு கூறலாமா?
தெரியாமல்தான் கேட்கிறேன் குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ இதுபோன்ற தினங்கள் கொண்டாலாம் என்று உள்ளதா?இல்லை இதற்கெல்லாம் விதிவிலக்கு உண்டு கொண்டாடலாம் என்றால் தயவு செய்து விளக்கம் அல்லது ஆதாரங்களை விபரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே
சகோதரர பரீத் அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும் தாங்கள்; கூறியது போல் இரு பெரு நாட்களை தவிர வேறு எந்த நாளையும் சிறப்பாக கொண்டாட எந்த விபரம் தெரிந்தவுறும் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது .நாம் இப்போது இருப்பது பொய்யான துனியாவில் .உலகம் இறைவனின் சந்தைமடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் அங்கே இருக்குது நமக்கோர் புனித இடம் .அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக ஆமின்.ஆனால் இந்த துனியாவில் ஒவ்வொரு தினத்தையும் அதாவது செப் 5 ஆசிரியர் தினம் மே இரண்டாவது ஞாயறு மதர்ஸ் டே ஜூன் மூன்றாவது ஞாயறு பாதெர்ஸ் டே.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டே ..ஐரோப்பிய நாடுகளில் தாய் தந்தையை விட்டு குழந்தை தனியாக வசிக்கிறான் பக்கதில் 10 மைல் தூரத்தில் வசிக்கும் தாய் தந்தைக்கு ஒரு போஸ்ட் கார்டு மூலம் தாய் தந்தையர் தினத்தில் வாழ்த்து கூறுவதோட சரி அப்படியல்ல நாம் .நாம் தின தினமும் தாய் தந்தையரை போற்றுகிறோம் இந்த தினங்கள் நாம் பொருட்காட்சி சினிமா என்பது போல ஒரு fun . நமக்குள் உள்ளதை பகிர்ந்துகொள்ள ஒரு rememberence ..தாய் தந்தையரை போற்றாவதர்களுக்கு இதை படித்தாவது தினம் தினம்
போற்றட்டும் என்று ஒரு advice தட்ஸ் ஆல்
ஹலோ தஸ்தக்கீர் அஸ்ஸலாமு அழைக்கும் திடிர்னு
வர்ர மு சே மு தொலைபேசி no என்னன்னு கேட்குரே போய்ய்ற. இப்ப வந்திருக்கா .சந்தோசம் ஆமா நீ இப்ப யூபா சிட்டியில இல்லையாமுல fresno க்கு மூவ் பண்ணி போயிட்டியாமுல தெரியவே இல்லை .சரி நான் யார்ன்னு உனக்கு குழப்பமா இருக்கா இதே குழப்பம் தானப்பா அதிரை நிருபர் வலைதளத்திலும் நிறைய பேருக்கு .
.
இப்ராகிம் அன்சாரி காக்கா அஸ்ஸலாமு அழைக்கும் ஆமா நீங்க மூன்று பேரு என்று சொன்னீர்களே உங்கள் சகோதரியை ( ரசாக் காகா மனைவி)சேர்த்து தானே .தலைமை ஆசிரியரை தெரியும் உங்களை தெரியுது மற்றொருவர்.
M.B.A.அஹமது சொன்னது…
ஹலோ தஸ்தக்கீர் அஸ்ஸலாமு அழைக்கும் திடிர்னு
வர்ர மு சே மு தொலைபேசி no என்னன்னு கேட்குரே போய்ய்ற. இப்ப வந்திருக்கா .சந்தோசம் ஆமா நீ இப்ப யூபா சிட்டியில இல்லையாமுல fresno க்கு மூவ் பண்ணி போயிட்டியாமுல தெரியவே இல்லை .சரி நான் யார்ன்னு உனக்கு குழப்பமா இருக்கா இதே குழப்பம் தானப்பா அதிரை நிருபர் வலைதளத்திலும் நிறைய பேருக்கு .
.
---------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம்.(எப்பவும் நான் சலாம் சொல்லித்தான் ஆரம்பிப்பேன்.இப்ப பதில் சொல்லும் படி சந்தோசம் ஏற்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ். ஆமாம் நான் இப்ப பிரஸ்னோ அருகில் கிளோவிஸ்சில் இருக்கிறேன். (பிரஸ்னோக்கு மூவ் பண்ணி போயிட்டியாமுல தெரியவே இல்லை.)தெரிந்தது நாலதானே கேட்டது???ஹஹஹ்ஹஹ்! மன்னிக்கவும். தாம் யார் விளங்கலேயே!
இதைவிட நான் என் வாப்பாவைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..., யாவற்றையும் இதுலேயே அடக்கி எழுதிவிட்டேன்...
அப்பா.....
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்...
நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..
அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்... அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று
நீயே ஆசானாய் இருந்து ஒரு மாணவனைப்போல்
பாடம் கற்றுக்கொடுத்தாய்..
சரியாக படிக்காத போது பெற்ற மகன் என்று பாராமல்
எல்லா மாணவர்களும் உரிய சம தண்டனையை அளித்தாய்...
மாலைப்பொழுது வந்து வாசல்தட்டும் முன்
வீடு வந்து சேரவேண்டும் என்ற
கட்டளையிட்டாய்.. அப்போதெல்லாம் வெறுத்த நான்
இப்பொழுதும் நினைத்து சந்தோசப்படுகிறேன்
காலத்தின் விசரத்தன்மையை நினைத்து...
பள்ளியில் பயின்ற காலத்தில்
ஒவ்வொரு துறையிலும்
முன் தரவரிசையில் தலைக்காட்டிய போதெல்லாம்
அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய்
அப்போதெல்லாம் பள்ளிப்பருவம் இப்படியே
தொடராதா என்று யோசித்திருக்கிறேன்...
தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்..
இல்லாதவர்கள் வேண்டி வந்தபொழுதெல்லாம்
தன் தகுதிக்கும் மீறி அள்ளிக்கொடுத்தாய்..
இப்பொழுது அழுது வருத்தப்படுகிறார்கள்
கொடுக்க ஆளில்லாமல்.?
ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்தாய்... !
ஆசான்களெல்லாம் உன் வழிப்பின்பற்றும்
ஆசானாய் வாழ்ந்தாய்... !
ஒரு பெற்றோர் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணமாய் திகழ்ந்தாய்..!!
தான தர்மத்தின் தலைமகனாய் இருந்தாய்...!
உலக கல்வி மார்க்க கல்வி இரண்டிலும்
சிறந்து விளங்கினாய்...!
பெரியவர்களை மதிக்கவும், ஏழை பணக்காரரை
சமநிலையில் பாவிக்கவும்,
எப்போதும் எந்த இடத்திலும் பொறுமையை
கையாலவும் கற்றுக்கொடுத்தாய்...
அதனுடைய பலனை அனுபவிக்கிறேன்... உன் வழிப்பற்றி
உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க விரும்புகிறேன்..
வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..
நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......
http://buafsar.blogspot.ae/2009/01/blog-post_14.html
தம்பி கிரவுன் ! அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் அஹமது அவர்கள் நம் அனைவரையும் அறிந்து கொண்டு அதாவது நம் வீட்டு குடும்ப அட்டையில் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் வரை தெரிந்து வைத்துக் கொண்டு தனக்கு மட்டும் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு நம்மிடையே உலவுகிறார். ஹஹஹாஹ்.
சகோதரர் அஹமது அவர்களே! வ அலைக்குமுஸ்ஸலாம். கேட்டதனால் சொல்கிறேன். சகோதரியை நான் சேர்க்க வில்லை. சகோதரர்களை மட்டுமே சொன்னேன் - அந்த இன்னொருவர்? கும்பகோணத்தில் நீண்ட் காலமாக குடியிருந்து வருகிறார். தேங்காய் மண்டி வைத்து வியாபர்ரம் செய்கிறார். அவர் பெயர் இக்பால் ஹாஜியார் . எனக்கு அடுத்த இளையவர். இவ்வளவும் சொல்கிறேனே நீங்கள் சொல்லக்கூடாதா?
Ebrahim Ansari சொன்னது…
//சகோதரர் அஹமது அவர்களே! வ அலைக்குமுஸ்ஸலாம். கேட்டதனால் சொல்கிறேன். சகோதரியை நான் சேர்க்க வில்லை. சகோதரர்களை மட்டுமே சொன்னேன் - அந்த இன்னொருவர்? கும்பகோணத்தில் நீண்ட் காலமாக குடியிருந்து வருகிறார். தேங்காய் மண்டி வைத்து வியாபர்ரம் செய்கிறார். அவர் பெயர் இக்பால் ஹாஜியார் . எனக்கு அடுத்த இளையவர். இவ்வளவும் சொல்கிறேனே நீங்கள் சொல்லக்கூடாதா?//
தந்தையர் தினத்திலாவது உண்மையை சொல்லிடுங்கோ இல்லாட்டி உங்க மகன் வந்து உண்மைய சொல்லிட போறார்(ன்)
TO Brother அப்துல் மாலிக்
உங்கள் தந்தையைப்பற்றி சொன்ன விசயங்களை படித்தவுடன் , உங்கள் தந்தையிடம் கல்வி பயின்ற மாணவன் என்ற முறையில் சில நினைவுகள்:
அப்துல் சமது சாரிடம் 5 வது வகுப்பில் ஆங்கிலப்பாடம் பயின்ற மாணவனாய் இருக்கும்போது [ வருடம் 1972 அல்லது 1973 என நினைக்கிறேன் ] ஆங்கிலத்தில் முதல் மார்க் 87% எடுத்ததற்கு எனக்கு கவிஞர் மு.தாஹா அவர்கள் எழுதிய 'நேரு மாமணி' என்ற புத்தகத்தை பரிசாக தந்தார்கள். எப்போது யாரிடமும் என்னை அறிமுகப்படுத்தினாலும் நான் முதல் மார்க் எடுத்த விசயத்தை குறிப்பிட்டு சொல்வார்கள்.
அதிர்ந்து பேசாத அற்புத மனிதர் உங்கள் தந்தை அப்துல் சமது சார்.
என்ன எழுதுவது என்று கருத்துக்கு தட்டுபடவில்லை. கைகொடுக்க ஒரு கதை கிடைத்தது. கணவன்-மனைவி 8-10வயசு ஒரு பெண்பிள்ளை.சின்ன குடும்பம் பெரிய வசதி.
-வீட்டு கொல்லையில் ஒரு கொட்டகை.கொட்டகைக்குள் ஒரு வயதான கிழவி வீட்டுலே திண்டு மிஞ்சிய சோறுதான் கிழவிக்கு. சில சமயங்களில் அரைவயறு, சில சமயங்களில் கால்வயறு.கொட்டகை பக்கம் தாய் பிள்ளையை விடுவதில்லை. கிழவிக்கு மண்சட்டியில் தான்சோறு. நல்ல கறிபுளி ஆக்கினா கிழவி வாய்க்கு எட்டாது. பாவம்! கிழவி யார் பெத்த பிள்ளையோ! இல்லே அநாதையோ? யார் கண்டா?
ஒரு நாள் வாப்பா உம்மா புள்ளே கடைக்கு பர்சஸ் செய்யப் போனார்கள் விலை ஒசந்த சாமான்கள் வாங்கினார்கள். அதோடு ஒரு மண் சட்டியும் வாங்கினார்கள். பிள்ளை கேட்டது ''அம்மா இந்த மண் சட்டி ஏதற்கு?''
அம்மாசொன்னது ''நம்ம வீட்டுக் கொட்டகைலே கிடக்குறாளே ஒருத்தி அவ சோறு உங்கத்தான். பழைய சட்டியே ஒடச்சு புட்டா. செத்து தொலயாமே உசுரை வாங்குறா" இது பிள்ளை இடம் தாய் சொன்ன பதில்.
பிள்ளை கேட்டது ''அந்த கிழவியாரும்மா?"
"அதே கேட்டு என்ன செய்யப் போறே? வாயே மூடிகிட்டு சும்மா வா'' அம்மாவின் அதட்டல்.
கொஞ்ச நாள் கழித்து உம்மா பிள்ளை வாப்பா கடைக்கு போனார்கள்.
பிள்ளை சட்டி பானைக் கடைக்கு போய் இரண்டு சட்டிகள் வாங்கி வந்தது..
பிள்ளை கையில் சட்டியே பார்த்த அம்மா ''இந்த மண்சட்டியே ஏன் வாங்கினா? அந்தகெழவிக்கா?''
பிள்ளை சொன்னது ''கேளவிக்கு தான் நீ சட்டி வாங்கி கொடுத்துட்டியே! இந்த ரெண்டு சட்டியும் உனக்கு ஒன்னு வாப்பாக்கு ஒன்னு கொடுக்க நான் வாங்கினேன்''..
வாப்பாவும் உம்மாவும் அதிர்ந்து போய் நின்றார்கள்.
பிள்ளை கேட்டது "புரியவில்லையா? நீ கொல்லைலே ஒதுக்கி போட்டு மண் சாட்டிலே சோறு போடுறது உன்னே பெத்த தாய் தானே? என் தாய்க்கு சோறு போட நான் சட்டி வாங்கியிருக்கேன்"
S.முஹமது பாரூக் - அதிராம்பட்டினம்.
To Bro ZAKIR HUSSAIN
மிக்க நன்றி காக்கா தாங்களின் நினைவுகூர்ந்தமைக்கும் மேலான துஆக்களுக்கும்.
Post a Comment