Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்றோன் எனக்கேட்ட தந்தை! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2013 | , , , , , ,

"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்."

என்ற குறள் வரியை நடைமுறையில் உணரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.

நமதூர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகப் பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். Adirai Educational Trust கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது. அதுபோன்று அதிரை நிருபர் குழுவும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது.

மாநில அளவில் கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அதிரையிலிருந்து உருவாக்க வேண்டுமெனில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணாக்கர்களைப் பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸில் நானும் பொறுப்பேற்றிருந்தபோது மஷ்வரா செய்து, "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்" என்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம்.

இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது மகள் சுஹைமாவிடம்,அடுத்த ஆண்டு உங்கள் பெயர் அதிரை எக்ஸ்பிரஸில் வருமா? என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் வரும் என்று பதில் அளித்தாள். அதன்பின்னர், என் வணிகச்சூழல் காரணமாக, மகளின் கல்வியில் அதிக அக்கரை காட்ட முடியவில்லை. மாறாக அவளது தாய்வழிப் பாட்டனார் மிகுந்த அக்கரை காட்டினார்.

இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, மகளுக்குத் தொலைபேசினேன். "உங்க ஆசை நிறைவேறிடுச்சா வாப்பா? என்றாள். என் கண்கள் கலங்கின. அல்ஹம்துலில்லாஹ். முகநூல்,ட்விட்டர் போன்ற தளங்களிலும் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, முன்பின் தெரியாதவர்களும் வாழ்த்தி எனது மகிழ்ச்சியில் பங்கேற்றனர். ஜஸாகல்லாஹ்.

மாணவிகளில் என் மகள் முதலிடம் பெற்றது போன்று மாணவர்களில் என் காக்கா ஹாஃபிள் யஃகூப் ஹசன் அவர்களின் மகன் அப்துஷ் ஷகூர் முதலிடம் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக அதிக மதிப்பெண் பெறுவது மாணவிகளைவிட மாணவர்களுக்கு சற்றே கடினம்தான். மாணவிகளைவிட குறைவு என்றாலும் அதிரை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகபட்ச மதிப்பெண்களை மகன் அப்துஷ் ஷகூர் பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவி யாஸ்மீன் என் அன்புச் சகோதரர் முபீன் அவர்களின் மகள் என்றறிந்து மிகவும் மகிழ்ந்தேன். யாஸ்மீனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, முதலிடம் பெற வேண்டும் என்று மாணவ - மாணவிகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த என் மகளின் தோழிகளுக்கும் மகனின் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

என் மக்கள் மட்டுமின்றி நமதூரின் கல்வி நிலையங்களில் பயின்று சாதிக்கும் அளவிலான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உந்துதலாக இருந்த அதிரை எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியபோது உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்தளிக்க முன்வந்தவர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திய அதிரை நிருபர் குழுமத்ததாருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோருக்கும் நன்றியையும் துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம் 
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

33 Responses So Far:

Shameed said...

//நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.//

இன்னும் இரண்டு வருடம் கழித்து +2 விலும் இதைவிட மேலான ஒரு உந்துதல் ஏற்ப்பட துவா செய்கின்றோம்

அதிரைக்காரன் said...

தகுந்த ஊக்குவிப்பு இருந்தால் மென்மேலும் சாதனைகள் படைக்கலாம். நமதூருக்கு பெண் மருத்துவர் அவசியம் என்பதை கவனத்தில்கொண்டு மகளின் ஆர்வத்திற்கேற்ப வழிநடத்தவும். பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

Unknown said...

மாஷா அல்லாஹ் எனது மருமகன் அப்துஸ் ஷகூர் மார்க்க கல்வியிலும் உலக கல்வியிலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

தகுந்த ஊக்குவிப்பு இருந்தால் மென்மேலும் சாதனைகள் படைக்கலாம். நமதூருக்கு பெண் மருத்துவர் அவசியம் என்பதை கவனத்தில்கொண்டு மகளின் ஆர்வத்திற்கேற்ப வழிநடத்தவும். பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

அன்று காலை உம்மா வீட்டு அப்பா அவர்களின் உறுதியும் அதற்கு சுஹைமா கொடுத்த நம்பிக்கைக்கையும் பரீட்சை முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் அப்படியே நிருபிக்கப்பட்டது !

எங்கள் மூதத சகோதரரின் மகளும் ஒரு பாடத்தில் 100/100 வாங்கியதை அன்று காலை பர்த்ததும் ஆனந்தக் கண்ணீர் !

Unknown said...

என் பேத்தி A.K. சுகைமாவின் தாய் வழிப்பாட்டனின் தம்பி என்ற முறையில் (அபு ஆசிப்) இதை பதிவு செய்கிறேன். என் மகள் ராபியா சென்னை மியாசி மெட்ரிக்குலேசன் ஸ்கூல் , மண்ணடி யில் + 2 வில் ஸ்கூல் அளவில் முதலிடத்தை பெற்றபோது இருந்த சந்தோசத்தைக் காட்டிலும் இதில் அதிக அளவு சந்தோசமடைந்தேன். ஏனனில். இது சாதாரண மதிப்பெண் அல்ல . மாறாக மாநில அளவில் முதலிடத்தை பெற்றவர்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்றுஎன்று அறைகூவல் விடுக்கும் மதிப்பெண்.

அல்ஹம்து லில்லாஹ். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

பிள்ளையை நன்றாக அது விரும்பும் துறையில் மேல் படிப்பு படிக்க வைக்க
என் மகள் கரீமாவையும் , மருமகன் அப்துல் கரீம் அவர்களையும் கேட்டுகொள்கிறேன்.

பெற்றோர்கள் விரும்பினால் , அதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தால்
கண்டிப்பாக நம் ஊரில் ஒரு பெண் டாக்டரோ, , வக்கீலோ , பொறியில் வல்லுனரோ,உருவாகப்போவது திண்ணம்.

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பன் கரீமின் மகள் 12thல் முதலிடம் பெற்று இதே போன்று மகிழ்வை பகிரும் அதே வேளையில் என் மகள் அந்த வருடத்தில் 10thல் முதலிடம் பெற என் மற்றும் எனது மகளின் நிய்யத். அல்லாஹ் நாடுவானாக. ஆமீன்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

சாதனைகள் மலரட்டும் - வேதனைகள் ஒழியட்டும்.
கடந்து போக இன்னும் அனேக படிகள் இருந்தாலும் இறை நம்பிக்கையோடு இருக்கின்ற பெலத்தோடு முன்னேற பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ், தங்களின் மகிழ்ச்சியில் மீண்டும் நானும் பங்குகொள்கிறேன்.

இது போல் மேலும் நிறைய வெற்றி பல கண்டு, பெற்றோருக்கும், நம் சமுதாயத்திற்கு, நம் ஊருக்கும் நற்பெயர் பெற்றுத்தர துஆ செய்கிறேன்.

நல்லா படிக்கும் பிள்ளைகள் படித்து மார்க்க வாங்குவதோடு தங்களுடைய படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். மேல் படிப்பு படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் தமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில்லை என்பதும் வேதனையை.

மருமகள் சுஹைமாவின் சாதனை வருங்கால மாணவ செல்வங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழும்.

நம் அதிரைக்கு பெண் மார்க்க பிரச்சாரகர்கள் மிகவும் குறைவு, சுஹைமா போன்ற திறமையுள்ள இந்த மாணவ செல்வங்களை மார்க்க தாயிக்களாக உருவாக்க பெற்றோர்கள் நிய்யத் வைக்க வேண்டும்.

பெண்களுக்கு அழகிய முறையில் மார்க்கத்தை எடுத்துச்சொல்ல பெண் தாயிக்கள் அவசியம் அதிரைக்கு தேவை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பொதுவாக நம் முஸ்லீம் சமுதாயத்தில் ஓரு பழக்கம் உள்ளது, உலகக்கல்வியில் திறமையில்லாதவர்கள், படிப்பை பாதியில் விட்டவர்கள் போன்றவர்களைதான் (ஆண் / பெண்) மார்க்க கல்வி கற்க அனுப்புகிறார்கள். அத்திப்பூத்தாற்போல் திறன் படைத்தவர்கள் அதில் துளிர்விட்டு மிளிர்கிறார்கள்.

இந்த வருடம் அதிரை மாணவர்களின் சாதனையாளர்களில் மார்க்க கல்வியோடு தொடர்புடைய சூழலில் உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்பது சந்தோசமான செய்தி. திறமையுள்ள இந்த மாணவர்கள் இரு கல்வியிலும் தேர்ச்சிபெற்று, சமுதாய பணியையும் தங்களின் வாழ்வில் ஓர் அங்கமாக எடுத்து செய்ய வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்

KALAM SHAICK ABDUL KADER said...

தகுந்த ஊக்குவிப்பு இருந்தால் மென்மேலும் சாதனைகள் படைக்கலாம். நமதூருக்கு பெண் மருத்துவர் அவசியம் என்பதை கவனத்தில்கொண்டு மகளின் ஆர்வத்திற்கேற்ப வழிநடத்தவும். பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

என் நண்பனின் மகளின் அளப்பெரிய வெற்றியை கொண்டாடுவோரில் நானும் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..

என் வகுப்புத் தோழன் அன்று என் வகுப்பில் முதலிடம் அவரின் மகள் அதிரை அளவில் முதலிடம். நேற்று இரவு முழுவதும் நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் சிலாகித்துப் போனேன்.. எனக்கே அப்படியென்றால் பெற்ற தந்தைக்கு எப்படியிருக்கும்? இது ஏதோ அதிகப் படியாகத் தெரியலாம் ஆனால் இது அப்படியில்லை..உணர்சிகளையும் சந்தோஷங்களையும் கொண்டாட வரும் தருணங்களை அல்லாஹ்வின் நினைவுகளோடு அவனுக்கு நன்றி நவிழ்ந்தவாறு மகிழ்வதில் ஒரு ஆணந்தமே.

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திவரும் கல்வி விருதின் இலக்கை இதோ தொடும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதை வெறும் 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் மட்டுமே என எண்ணும்போது..நம்துர் மாணவி என் நண்பனின் மகள் தொட்டது சிகரம் என்றே தோன்றுகிறது.

உறவுகளை உள மகிழ வைத்து அகிலம் போற்ற எதிர்காலக் கல்வியில் மேலும் பல வெற்றிகள் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Meerashah Rafia said...

அலி ஆலிம் அப்பா குடும்பத்தில் பிறந்திருக்கும் என் சாச்சி வீட்டு தங்கத்'தங்கையும் சரி,தமையனும் சரி மார்கக்கல்வியிலும் சிறந்திருக்கும் என்றே எண்ணுகின்றேன்.. ஆகையால் நமதூருக்கு பயனளிக்கும்வன்னம் மருத்துவ துறையில் சாதித்து பெண் மருத்துவராக உருவெடுத்து நம் பெண் மக்களை தங்கை காக்கவேண்டும் என்ற அவா..

Ebrahim Ansari said...

அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

என்கிற நிறைவுக் கையெழுத்துப் பகுதியைப் படித்தபோது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. முகம்மது அலிய ஆளிம்சா அவர்களின் நினைவு வந்துவிட்டது.

அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் செய்த து ஆ போய்ச் சேர்ந்து இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

சகோதரர் அபூ சுஹைமா அவர்கள் இந்த முறை பல வெற்றிக் கோப்பைகளை தட்டிச் சென்றுள்ளார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்று இருப்பது பெரும் பாக்கியம்.

பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை. அல்லாஹு அக்பர்.

ZAKIR HUSSAIN said...

பெரியோர்களின் துஆ ...இந்த குழந்தையின் முயற்சி..வீட்டில் எல்லோரும் அந்த குழந்தை முன்னனியில்தான் வரும் என்ற பாசிட்டிவ் எண்ணம் எல்லாம் கைகூடி வந்திருக்கிறது. இறைவன் அருளால் இனிமேல் வரும் தேர்வுகளிலும் மாநில அளவில் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள்.

அப்படியே ஏன் இப்படி பசங்கள் எல்லாம் மார்க் சீட் வரும்போது தலைமறைவாக இருக்கிறாய்ங்கன்னு கண்டுபிடிக்கனும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

புதுக்குற‌ள்:

//ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்-சுஹைமாவை சான்றோள் எனக்கேட்ட வாப்பா//வுக்கு என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ளும், து'ஆவும் சென்ற‌டைய‌ட்டுமாக‌...

நமதூரில் பெண்கள் சம்மந்தமான (தோல்)நோய்நொடிகள் மற்றும் பிரசவம் போன்ற அதிமுக்கிய மருத்துவ சிகிச்சைகளுக்கு(தேவைகளுக்கு) இன்று நம் சமுதாயத்திலிருந்து நம் சுற்றுவட்டாரத்தில் பெயர்சொல்லி சுட்டிக்காட்டக்கூடிய ஒரு பெண் மருத்துவரை இதுவரை காண இயலாதது நம் சுற்று வட்டாரத்திற்கு ஒரு பெரும் குறையாக காலம்,காலமாக இருந்து வருகிறது. இந்த அத்தியாவசிய பெரும் குறையை (என் சாச்சாவின் பேத்தி) ஒரு முறைக்கு மருமகள் சுஹைமா நிறைவேற்ற வேண்டும் என்பதே இங்கு என் தனிப்பட்ட அவா/ஹாஜத்து/கோரிக்கையாக வைக்கின்றேன்.....

ந‌ம‌தூர் பாழாய்ப்போன மார்க்கத்திற்கு புற‌ம்பான ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ள் இந்த‌ த‌ங்க‌ ம‌ங்கையை தொந்த‌ர‌வு செய்திட‌ வேண்டாம்.....

எங்கிருந்தோ, யாரோ ஒரு முகம் தெரியாத இந்த மாமாவின் கோரிக்கையை நிறைவேற்றுவியாம்மா தங்கச்சி???

இப்னு அப்துல் ரஜாக் said...

என் நண்பனின்(அப்துல் கரீம்) மகளின் அளப்பெரிய வெற்றியை கொண்டாடுவோரில் நானும் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..
மதிப்புக்குரிய அலி ஆலிம் அவர்களின் வாரிசும்,மதிப்புக்குரிய அப்துஸ் சுக்கூர் ஆலிம் அவர்களின் வாரிசும் மாஷா அல்லாஹ் கலக்குகிறார்கள்.அல்லாஹு அக்பர்

Abdul Razik said...

லேட் பின்னூட்டமாக இருந்தாலும் அவசியம் எழுதியாக வேண்டிய கட்டாய சூழலில் எழுதுகிறேன். அபூ சுஹைமா(என் பெறியப்பா வீட்டு தம்பியின் மகள்) இவருடைய தாய், சின்னம்மா, பெரியம்மா அனைவருமே படிக்கும் காலத்தில் வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் எடுத்து வந்தார்கள். அப்பொதே நினைப்பேன், இவர்களுடைய வாரிசுகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்று. நினைத்தது நிறைவேறி இருக்கிறது.இன்னும் கொஞசம் முயற்சி செய்து இருந்திருந்தால் STATE FIRST எடுத்து இருக்கலாம். அதை +2வில் அடைவதற்கு என்னுடைய துஆக்கள்.

Abdul Razik said...

லேட் பின்னூட்டமாக இருந்தாலும் அவசியம் எழுதியாக வேண்டிய கட்டாய சூழலில் எழுதுகிறேன். அபூ சுஹைமா(என் பெறியப்பா வீட்டு தம்பியின் மகள்) இவருடைய தாய், சின்னம்மா, பெரியம்மா அனைவருமே படிக்கும் காலத்தில் வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் எடுத்து வந்தார்கள். அப்பொதே நினைப்பேன், இவர்களுடைய வாரிசுகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்று. நினைத்தது நிறைவேறி இருக்கிறது.இன்னும் கொஞசம் முயற்சி செய்து இருந்திருந்தால் STATE FIRST எடுத்து இருக்கலாம். அதை +2வில் அடைவதற்கு என்னுடைய துஆக்கள்.

Yasir said...

மாஷா அல்லாஹ்...மிகப்பெரிய சாதனை அதனை செய்த மாணவச்செல்வங்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களும் துவாக்களும் இன்ஷா அல்லாஹ் சமுதாயத்திற்க்கு உதவக்கூடிய துறைகளில் இவர்கள் ஜொலிக்க துவாக்கள்...

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மாஷா அல்லாஹ் அம்மாணவிக்கு வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் சம்பாதிச்சு தரும் பணத்தைவிட ஒரே சந்தோஷம் மற்றவர்கள் போற்றுவதுதான்...

அதிரை தாருத் தவ்ஹீத் said...

செல்வி சுஹைமாவுக்கும் உண்மையான அக்கரையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வென்ற மாணவ-மாணவியர் அனைவர்க்கும் வாழ்த்துகள்!

நம் சமுதாயச் செல்வங்களுக்குப் பயனுள்ள கல்வியைப் பெருக்கிக் கொடுப்பதற்கு, படைத்தோனிடம் பிரார்த்தனை.

Meerashah Rafia said...

தங்கை சுஹைமாவின் தாயிடம் நான் அந்தக்காலம்(3ம் வகுப்பைலாம் அந்தக்காலம் என்றுதான் சொல்லுவோம்) பயிற்சி வகுப்பில்(டியூசன்) படித்துள்ளேன்..

படித்துக்கொடுக்க பணம் வாங்கமாட்டார்கள்.. அமல்களின் சிறப்பு புத்தகம்போல் ஏதோ ஒன்று எப்போதும் படிக்கும் அறையில் இருக்கும்.. அதனுள் பணத்தை சொருகி வைத்துவிட்டு ஓடிவிடுவேன்..

அக்குடும்பத்தில் கல்வி சிந்தனையுடன் மார்க்கம் இருப்பதற்கு இதுவெல்லாம் ஓர் சான்று..

N. Fath huddeen said...

//அதிரைக்காரன் சொன்னது…
தகுந்த ஊக்குவிப்பு இருந்தால் மென்மேலும் சாதனைகள் படைக்கலாம். நமதூருக்கு பெண் மருத்துவர் அவசியம் என்பதை கவனத்தில்கொண்டு மகளின் ஆர்வத்திற்கேற்ப வழிநடத்தவும். பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.
sabeer.abushahruk சொன்னது…
தகுந்த ஊக்குவிப்பு இருந்தால் மென்மேலும் சாதனைகள் படைக்கலாம். நமதூருக்கு பெண் மருத்துவர் அவசியம் என்பதை கவனத்தில்கொண்டு மகளின் ஆர்வத்திற்கேற்ப வழிநடத்தவும். பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.//

ஜோ, "பெண் டாக்டர் உருவாகிக்கொண்டு இருக்கிறார்" என்பதை சொல்லிட வேண்டியதுதானே!

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மதிப்பிற்குரிய அபுபக்கர் ஆலிம்சா அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் தீன், துன்யா ஆகிய இரு கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கு இவர்கள் இருவரும் எடுத்துக்காட்டுக்கள். நமது ஊரில் உள்ள ஏனைய மாணாக்கர்களும் இவர்களைப்போல் வரவேண்டும் என மன உறுதி கொள்ளவேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

N. Fath huddeen சொன்னது…
//ஜோ, "பெண் டாக்டர் உருவாகிக்கொண்டு இருக்கிறார்" என்பதை சொல்லிட வேண்டியதுதானே!//

அதானே ! சொல்லிட வேண்டியதுதானே.... அதுவும் (படிப்பில்) அனைத்திலும் ஃபர்ஸ்ட் கிளாஸ் (வகுப்பில் முன்னிலையுடன்) டாக்டர் உருவாகி வருகிறார் என்று !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் அந்தக்காலம்(3ம் வகுப்பைலாம் அந்தக்காலம் என்றுதான் சொல்லுவோம்) பயிற்சி வகுப்பில்(டியூசன்) படித்துள்ளேன்..//

ஓ.. கம்யூட்டர் தோன்றி ஐ-பேட் தோன்றா காலமா !? சரி சரி !

Meerashah Rafia said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
//ஓ.. கம்யூட்டர் தோன்றி ஐ-பேட் தோன்றா காலமா !? சரி சரி !//

எஸ்..எஸ்.. கிட்டி பில்லும்,கலுச்சிக்காயும் உரு மாறாமல் உறவாடிய காலம் 1990's..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


மகன் மீராசா!!! //கிட்டி பில்லும்// என்பதன் மூலம் கொஞ்ச காலம் நீ வெளியூரில் படித்தாய் என்பதை இங்கு தெள்ளத்தெளிவாக்குகிறாய் நீயே. எனவே நம்மூர் பாஷையில் "கிட்டிக்கம்பு" என்று தர்த்திரிப்பா சொல்லிப்பழகவும்........

அதிரைக்காரன் said...

கில்லித்தன்டா என்பது மரியாதைக்குறைவாக இருப்பதால் மீராஷா கிட்டிபில்லு என்று சொல்லிட்டார். சரி பாட்டம் வச்சுடலாமா நெய்னா. :)

sabeer.abushahruk said...

////ஜோ, "பெண் டாக்டர் உருவாகிக்கொண்டு இருக்கிறார்" என்பதை சொல்லிட வேண்டியதுதானே!//

அதானே ! சொல்லிட வேண்டியதுதானே.... அதுவும் (படிப்பில்) அனைத்திலும் ஃபர்ஸ்ட் கிளாஸ் (வகுப்பில் முன்னிலையுடன்) டாக்டர் உருவாகி வருகிறார் என்று//

அல்ஹம்துலில்லாஹ்!

N. Fath huddeen said...

மேலும் ஒரு கூடுதல் தகவல்: நமதூரின் குழந்தை டாக்டரின் மகள்கள் ரெண்டு பேர் டாக்டர்களாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் எனக்கேள்வி. கூடிய விரைவில் மூத்த மகள் சேவை செய்ய வருவார் என எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு