எந்த ஒரு இரவும்
விடியாமல் முடிவதில்லை
எந்த ஒரு வனமும்
மலராமல் உலர்வதில்லை!
புன்னகை விதைத்தவன்
பூசல்களை அறுத்ததில்லை
பூக்களை ரசிப்பவன்
புழுக்களை புசிப்பதில்லை!
காற்றின் திசை அறிந்தால்
கரை சேரத் தடையில்லை
முத்தெடுக்கக் குதிப்பவனுக்கு
முழுக் கடலும் ஆழமில்லை!
விழுவோம் என பயந்தால்
உயரம் தொட முடியாது
எழுவோம் என உணர்ந்தவர்
விழுந்தாலும் மீண்டெழுவர்!
வகுத்த வரம்புகளுக்குள்
வாய்க்காலாய் ஊறாதே
கரைகளை வரையறுக்கும்
காட்டாறாய் ஓட்டம் காண்!
நடக்கும் வழியெல்லாம்
நன்மைகளை விதைத்துச் செல்
ஒற்றைப் பனைகூட உனக்கு
கற்றையாய் நிழல் பரப்பும்!
இல்லாத சிறகுகளை
இப்பொழுதே விறித்துப் பற
வாய்க்காத வாழ்க்கையெலாம்
வாசல் வரும் வாரியெடு!
உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!
விடியும் வரை காத்திருக்க
இரவின் இருளல்ல நீ
சுட்டெரிக்கும் சூரியனையே
சித்தரிக்கும் கிழக்கு!
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்!
-- Sabeer abuShahruk
26 Responses So Far:
கவிக் காக்காவின் ஊட்டச் சத்து !
இதுதான் அசையா மனசுகளை அசத்தும் அற்புதச் சொத்து !
ஒவ்வொரு வரியும் மிளிரும் முத்து(க்கள்) !
கவிதையின் ரகசியம் கவிக் காக்காவிடம் மட்டுமே !
காக்காவை கவிபாடச்சொன்ன நரிபோல் காத்திருந்தேன் (உயரத்தின் அடிப்படையில் பார்த்தல் நான் குள்ளநரித்தான்)..வடைக்காக அல்ல,கவிக்காக..
கவிக்காக்காவின் கவிகளை AEACயில் புத்தகமாகவே வெளியிடலாம் போலிருக்கே..
MSM(MR)
நடக்கும் வழியெல்லாம்
நன்மைகளை விதைத்துச் செல்
ஒற்றைப் பனைகூட உனக்கு
கற்றையாய் நிழல் பரப்பும்!
நான் மிகவும் ரசித்த வரிகள் ...........வழக்கம்போல் சபீர்காக்காவின் அசத்தல் வரிகள்
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்!
அஸ்ஸலாமு அழைக்கும்
பிரளயம் கண்டிப்பா வரும்
ஆனால் பிரார்த்தனைகள் உனைக்காக்கும்.
பாக்கியை நம்ம
crown பார்த்துக்கொள்வார்
எந்த ஒரு இரவும்
விடியாமல் முடிவதில்லை
எந்த ஒரு வனமும்
மலராமல் உலர்வதில்லை!
புன்னகை விதைத்தவன்
பூசல்களை அறுத்ததில்லை
பூக்களை ரசிப்பவன்
புழுக்களை புசிப்பதில்லை!
காற்றின் திசை அறிந்தால்
கரை சேரத் தடையில்லை
முத்தெடுக்கக் குதிப்பவனுக்கு
முழுக் கடலும் ஆழமில்லை.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.எந்த ஒரு பிரட்சனைக்கும் ஒரு தீர்வு, முடிவு உண்டு.எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் வெற்றி வசப்படாது. நடவாமல்,ஓடாமல்,பறக்காமல் எல்லை கடக்க முடியாது.முயன்று தோற்றாலும் ஒருனாள் தோல்வி முடிவுறும் வெற்றி கிட்டிடும்.புன்னைகை பூ உன் உதட்டில் நட்டு வைத்தால் பல இதய வண்டுகள் வந்து மொய்துகொள்ளும்.பகுதறிபவன் வாழ்கை பாழாய் போனதில்லை.இலக்கு வைத்து முன்னேறு,லட்சியம் என்னும் விளக்கு ஒளித்தரும்.துனிந்தவனுக்கு இமயமும் இடுப்பளவே!(இப்படி தேடி,தேடி எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.என்ன ஒரு சிந்தனைஆக்கம், ஊக்கம் தரும் ஊட்டச்சத்து!!!!!)
விழுவோம் என பயந்தால்
உயரம் தொட முடியாது
எழுவோம் என உணர்ந்தவர்
விழுந்தாலும் மீண்டெழுவர்!
-----------------------------------------------------------------------
அப்பாடா! என்ன ஒரு சிந்தனை! நாளுவரிக்குள் வாழ்விற்கான பாடபுத்தகம். எல்லாஹ் புகழும் அல்லாஹுக்கே! அவனே மெய் சிந்தைனை தந்தவன். எல்லாம் அவன் செயலே! நாம் சின்ன ஒரு கருவிதான்,காரிய கர்தா அவனே! அல்லாஹ்வே உன்னை மேலும் துதிக்கிறேன். இப்படி நீதான் காக்காவின் மண்டை சுரப்பிக்குள் இந்த சிந்தனை உதிக்கவைத்தாய். அல்லாஹ் அக்பர்...உன்னை புகழ வார்தை இல்லை எங்களை பாதுகாப்பாயாக, நேர்வழி அடையச்செய்வாயாக ஆமீன்.
கருத்து களத்தில் ஆழ உழுது பார்தால் மெய் சிலிர்கிறது.ஒவ்வொரு சொல் மணியும் சோறுடைக்கும் நெல்மணி. அதிரை நிருபர் மூலம் நல்ல தொரு ஆசான்.ஆக்க சக்தியாய் கவி மூலம் கருத்துக்கள். அத்தனை பாக்களும், இனிய பால் பாயசம்.....
விழுவதும்,உயரமும் எதிர் ,எதிர் திசையில் வெற்றி என்பது எளிதல்ல முயற்சி செய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்,முடியும் (இன்சாஅல்லாஹ்) என முடிவு செய்துவிட்டால் முடிவு கிடைத்துவிடும்.(எண்ணி துனிக கருமம் துனிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு)
வகுத்த வரம்புகளுக்குள்
வாய்க்காலாய் ஊறாதே
கரைகளை வரையறுக்கும்
காட்டாறாய் ஓட்டம் காண்!
நடக்கும் வழியெல்லாம்
நன்மைகளை விதைத்துச் செல்
ஒற்றைப் பனைகூட உனக்கு
கற்றையாய் நிழல் பரப்பும்!
இல்லாத சிறகுகளை
இப்பொழுதே விறித்துப் பற
வாய்க்காத வாழ்க்கையெலாம்
வாசல் வரும் வாரியெடு!
உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!
விடியும் வரை காத்திருக்க
இரவின் இருளல்ல நீ
சுட்டெரிக்கும் சூரியனையே
சித்தரிக்கும் கிழக்கு!
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்!
---------------------------------------------------------------------
இலக்கை குறுக்காதே,உன் எல்லையை சுருக்காதே,குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதே!
வாழ்வின் பயணத்தில் தானம்,தியானம் செய்துவைத்தால் மருமையில் உனக்கு சுவர்கத்தில் அந்த பூஞ்சோலை நிழல் கிடைக்கும்.இந்த பூமியில் உன் சந்ததிகளு சுபிட்சம் நிலைக்கும்.
---------------------------------------------------------------------நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும் இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும் மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும் அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும் வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164 )
(நபியே)கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் அவனுக்கு பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்) நம்பிக்கைக் கொண்டோருக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 22:54).
"விழ விழ எழுவோம்
நாம் விழ விழ எழுவோம்
ஒன்று விழ நாம் ஓராயிரமாய் எழுவோம்" என்ற வரிகளைத்தான் கவிக் காக்காவின் 'எழு' நினையூட்டுகிறது.
ஒருவர் கற்காவிட்டால் ஓராயிரம் கற்றவரை உருவாகுவோம்' என்ற சபதம் ஏற்க கல்வி விழிப்புணர்வு மாநாடு.
"விடியும் வரை காத்திருக்க
இரவின் இருளல்ல நீ
சுட்டெரிக்கும் சூரியனையே
சித்தரிக்கும் கிழக்கு!"
என்ன சொல்லட்டும் உங்கள் வரிகளைப் பற்றி...
மூடனையும் சிந்திக்கச் சொல்லும் வரிகள் என்றா?
நோஞ்சான் கூட 'எழு'வான் இவ்வரிகளில் என்று சொல்லட்டுமா?
நான் என்ன சொல்லட்டும் கவிக் காக்கா?
"எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம்
எஃகைப் போல உறுதியாக இருக்கிறதோ,
அந்த இனத்துக்கு வாள் தேவையில்லை"
"இரவின் பயங்கர இருளிலே
களைப்படைந்த என் ஒட்டகப் படையை
வழி நடத்திச் செல்வேன்;
என் மூச்சு தீச்சுடரைக் கொளுத்தும்;
என் பெருமூச்சு தீப்பொறியைக் கக்கும்"
என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய அல்லாமா இக்பால்(ரஹ்) அவர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு சொல்லவா?
என்ன சொல்லட்டும் உங்கள் கவிதையை?
உங்கள் கவிதைகளுக்கு என்மன வரிகளை பதிய விருப்பம்தான். ஆனால், உணர்ச்சி,தன்னம்பிக்கை என்ற தீ ஜுவாலையில் எம் பேனா முனை நெருங்க முடியவில்லை.
உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!
----------------------------------------
mind blowing....................
நிச்சயமாக இந்த வரிகள் எல்லோராலும் எழுத முடியாது ....
இந்த வரிகளை எழுத கவிதை திறமை இருந்தால் மட்டும் போதாது .....நல்லகூர்மையான சிந்தனையும் வேண்டும்
இந்த வரிகள் தனிமனிதனின் பழக்க வழக்கங்களை பற்றி போதிக்கிறது ...
நம் attitude டை எப்படி காண்பிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்
வாழ்வில் நல்லதும் கெட்டதும் அமையபெருகிறது...
சபீர் காக்கா உங்களின் இந்த ஆக்கம்...இதுவரை நீங்கள் எழுதி நாங்கள்
படித்ததில் இதுதான் நம்பர் ஒன்
எந்த துறையை சார்ந்த மாநாடாக இருந்தாலும் இந்த கவிதையை வாசித்துவிட்டு ஆரம்பித்தால் [ தமிழ்தாய் வாழ்த்து மாதிரி] அந்த நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை சபீரின் தமிழ் நிச்சயம் தரும்.
Particularly in the field of sales , schooling, and of course.. our Education awareness seminar in Adirampattinam on this month.
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும். வலைந்தவர்களே ( வாழ்க்கையில் சோர்வாக ) நிமித்திய கவிதை அருமை....அருமை ...அருமை.
அன்பு கவி காக்கா, அருமை...அருமை... அருமை...
//விழுவோம் என பயந்தால்
உயரம் தொட முடியாது
எழுவோம் என உணர்ந்தவர்
விழுந்தாலும் மீண்டெழுவர்!//
//இல்லாத சிறகுகளை
இப்பொழுதே விறித்துப் பற
வாய்க்காத வாழ்க்கையெலாம்
வாசல் வரும் வாரியெடு!//
மேல் உள்ள வரிகள் எனக்கு பிடித்தது, உற்சாகமூட்டும் வரிகள், கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்க இருக்கும் இந்த நேரத்தில் ஊர்சாகமூட்டி கவிதையை தந்த கவி காக்காவுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர்களின் பின்னூட்டங்கள் மிக தத்துவார்த்தமாக போய்க்கொண்டிருப்பதால், சூழ்நிலையை லேசாக்க என் பாணியில் நகைச்சுவை கலந்து கற்பனை செய்துள்ளேன். ஆக்கம் எழுதியவர் நிச்சயம் ரசிப்பார்.
>
> எந்த ஒரு இரவும்கோழி சுடும் போது
>
> விடியாமல் முடிவதில்லை
>
> எந்த ஒரு வனமும்
> மலராமல் உலர்வதில்லை!
>
கரி அடுப்பை பத்த வைத்த உடன்
> புன்னகை தான்!
> பத்த வைத்தவன் கோழியை திங்காமல்
> புழுக்களை புசிப்பதில்லை!
>
> காற்றின் திசை அறிந்தால் கரி
அடுப்பை 5 நிமிடத்தில் பத்தி விடுவான்
>
> சுட்ட கோழி எடுக்க குதிப்பவனுக்கு
> சுடும் நெருப்பும் ஆழமில்லை!
>
> விழுவோம் என பயந்தால்
> ராஜம்படம் பாலத்தின் கீழே போய் கோழி சுடுவோம்
> மண்ணில் கோழி விழுந்தாலும் மீண்டெழந்து சாப்பிடோவோம்
>
> வகுத்த வரம்புகளுக்குள் சுட்ட கோழியை சரியாக பங்கு போட்டுக்கொள்வோம்
> வாய்க்கால் உள்ளே இறங்கியும் NAS சும் நாசர் சாரும் சுட்ட கோலிவுடன்
> கரைகளை வரையறுக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி!
>
> காட்டறே ஒட்டம் காணும்!
>
>
> நடக்கும் வழியெல்லாம் அடுப்புக் கரியை கொட்டி
> நன்மைகளை விதைத்துச் செல்வோம்!
> ஒற்றைப் பனை அருகே மொத்த கரியையும் கொட்டிவிடுவோம்!
>
> இல்லாத ஜட்டியை கழட்டிவிட்டு வாய்காலில்
> இறங்கும் லாவகம்மே தனி !
>
> கோழி சுட வராதவர்கள் எல்லாம் வாய்க்காத வாழ்க்கை எனலாம் !
>
>
> உன்னைச் சுற்றி யொரு கோழி வாடை வரும் அடுத்தநாள் காலை !
விடியும் வரை காத்திருக்க இது ஒன்றும்
உயிர் கோழி அல்ல
சுட்டெரிக்கும் சூரியனை போல் அடுப்பை
கொளுத்தாமல்
தொண்டு செய் யன்று பக்குவமாய்
மசாலா போட்டு வருபவனுக்கு
உண்டு பிரயள்யம் உப்பில்லை
உரைபில்லை என்று
என்றாலும் நன்மை உண்டு
கோழி சுட்டு கொடுத்தான் என்று !
சுட்ட கோழி எடுக்க குதிப்பவனுக்கு
> சுடும் நெருப்பும் ஆழமில்லை!
கீழே போய் கோழி சுடுவோம்
> மண்ணில் கோழி விழுந்தாலும் மீண்டெழந்து சாப்பிடோவோம் ///
யார் (பெத்த புள்ளையோ)வீட்டு கோழியோ !?
சூடுபட்டதும் பறக்கத் தெரியாத சோம்பல் கோழி மாட்டி விட்டது :)
வாய் விட்டுச் சிரிக்க வைத்த வரிகள் உங்களிடமிருந்து சுட்டதே !
கவிக்காக்காவிற்க்கு கமெண்ட் எழுத வார்த்தைகள் போதாது..அதான் அழைத்து வாழ்த்திவிட்டேன் (வயது இல்லை ஆனால் அவரின் ரசிகர் மன்ற தலைவர் என்ற முறையில் )
என்ன கவிதை !!! படித்தவுடன் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு விதமான உற்சாக உணர்வலைகள்,உற்சாகம்…வீடு மாத்தியதில் இருந்த அசதி,உடம்பு வலி ஒரு கன நிமிடத்தில் மறைந்த மர்மம்
அப்பப்பா !!! என்ன அர்த்தம் ஒவ்வொரு வரிகளிலும்..கடலின் அழத்தை சோனர் கொண்டு அளந்து விடலாம் ஆனால் இக்கவி வரிகளில் புதைந்து இருக்கும் அழத்தை அறிய எந்த டெக்னாஜியும் பத்தாது
வைர வரிகள்
//
விழுவோம் என பயந்தால்
உயரம் தொட முடியாது
எழுவோம் என உணர்ந்தவர்
விழுந்தாலும் மீண்டெழுவர்!
உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு! //
அபு இபுறாகீம், //ஊட்டச் சத்து//:
நன்மையை ஊட்ட விளைந்தேன். அது பன்மையில் பெருகி உண்மையில் ஊட்டமானது. உற்சாகமூட்டலுக்கு நன்றி.
MSM(MR), //கவிகளை AEAC புத்தகமாகவே வெளியிடலாம் போலிருக்கே..//:
...என்கிற அளவுக்கு ஊன்றிப் படித்தமைக்கு நன்றி தம்பி. ரசனை ஒன்றுபடும்போது நான் சொன்னால் உங்களுக்கும் நீங்கள் சொன்னால் எனக்கும் பிடித்துப் போவது இயற்கையே!
harmys,
//நான் மிகவும் ரசித்த வரிகள்//:
எனக்கும், இன்னும் நன்மையை ஏவி தீமையைய் தடுக்கும் எவற்கும் பிடிக்கும் தம்பி இக்கருத்து.
SHameed, //பிரளயம் கண்டிப்பா வரும்
ஆனால் பிரார்த்தனைகள் உனைக்காக்கும்//:
நிச்சயமாக ஹமீது, தன்னைக் காக்க பிரர் தனக்காக பிரார்த்திக்கும்படி நடப்பதே சரி.
crown, //முயன்று தோற்றாலும் ஒருனாள் தோல்வி முடிவுறும் வெற்றி கிட்டிடும//::
கண்டிப்பாக கிட்டும். மாற்றுக்கருத்துக்கு வாய்ப்பே இல்லை தம்பி. நான் தொட்டு வைக்க நீங்கள் வழக்கம்போல் தூக்கி நிறுத்திவிட்டீர்கள். நன்றி.
//அதிரை நிருபர் மூலம் நல்ல தொரு ஆசான்.ஆக்க சக்தியாய் கவி மூலம் கருத்துக்கள். அத்தனை பாக்களும், இனிய பால் பாயசம்.....//::
...எனில், பருகிய சகோதரர்களை நான் விருந்தாளிகளாயல்ல, பங்காளிகளாய் பார்ப்பவன் தம்பி.
Adirai post,
//ஒருவர் கற்காவிட்டால் ஓராயிரம் கற்றவரை உருவாகுவோம்' என்ற சபதம் ஏற்க கல்வி விழிப்புணர்வு மாநாடு//
அதிரை போஸ்ட்,
உங்கள் அஞ்சல் கிடைத்தது; நெஞ்சு விடைத்தது; புஜங்கள் புடைத்தன; பாட்டுக்குப் பலனும் கிடைத்தது.
//உணர்ச்சி,தன்னம்பிக்கை என்ற தீ ஜுவாலையில் எம் பேனா முனை நெருங்க முடியவில்லை.//
ஊதா மைய்யூற்றிய
சாதா பேனாவல்ல உமது, ஜுவாலையில் தீய்ந்துபோக.
மெய் மட்டும் எழுத
நெய்யூற்றிய பேனா.
தீயும் திணறிப்போகும் உமது உத்வேகம் கண்டு.
வரலாற்றுக் குறிப்புகளுக்கும் நன்றி.
க்ரவுன்,
சரியாகச்சொன்னீர்கள் உங்கள் / நம்ம தம்பியைப் பற்றி-க்ரவுன், சரியாகச்சொன்னீர்கள் உங்கள் / நம்ம தம்பியைப் பற்றி- ஏற்புரை சொல்வதற்குள் மூச்சு வாங்கிடுச்சு. (ஆமா அந்த பின்னூட்டம் எங்கே)
அபு இபுறாஹிம் காக்கா ...அதிரை நிருபரின் துபாய் வாசர்கள் சார்பாக “ கோழி சுடும் (காபாப்) “ புரோகிராம் ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன ?? ஒவ்வொருரின் மனங்களை சுட்டு கொள்ள வாய்ப்பாக அது அமையும்..சாகுல் காக்காவிற்க்கு ஒரு பீஸை கூரியரில் அனுப்பி விடுவோம்
தம்பி யாசிர் : (மனங்களை)சுடுவதில் கிள்ளாடி கவிக் காக்கவிடம் இந்த கேல்வியை pass செய்கிறேன் - பதில் positive ஆக வருமென்ற நம்பிக்கையில் :) (Sஹமீத் காக்கா : என் பங்கிற்கு செய்திட்டேன் சேவையை)
harmys::
//நம் attitude டை எப்படி காண்பிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்
வாழ்வில் நல்லதும் கெட்டதும் அமையபெருகிறது...// இந்த கருத்தை நம் தம்பிகள் யாராவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
எம் எஸ் உதயமூர்த்தி, அப்துர்ரஹீம் ஆகியோரின் வாழ்வியல் புத்தகங்களை விரும்பி வாசிக்கும் காலத்திலும், தற்போது என் நண்பன் ஜாகிர் பயின்றுவரும் மனோதத்துவ பாடங்களின் போதனைகளை அவன் அவ்வப்போது சொல்வதிலிருந்தும் தெறிந்து கொண்டதைத்தான்
உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!
என்று எழுதினேன்.
அவர்கள் கூற்றின்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி மிதக்கவிட்டிருக்கும் உணர்வலைகள் அந்த கட்டுக்குள் வந்தவரையும் பாதிக்கும் என்பதாகும். அந்த வைப்ரேஷன் எப்பவும் நல்லதாகவே இருக்க வேண்டும். இந்த விளக்கம் தர வாய்ப்பை எற்படுத்திதந்த harmys நன்றி. இந்த vibration பற்றி ஜாகிருக்கு ரொம்ப தெரியும். he can tell us better.
Zakir //[ தமிழ்தாய் வாழ்த்து மாதிரி]//
நீ ஃபோனிலும் தனி மடலிலும் விமரிசித்ததுவும் இங்கு சொல்வதும் உன்னை இந்த கவிதை பாதித்தது தெரிந்துகொண்டேன். ( என் எந்த எழுத்தும் நீ முதல் வாசகனாக தனிப்பட்ட முறையில் வாசித்த பிறகுதான் நான் யாருக்கும் அனுப்புவேன் என்பது நமக்குள் இருக்கட்டும்.)
nishathmeera, //நிமித்திய கவிதை அருமை//
நன்றி மீராஷா
thajudheen,//உற்சாகமூட்டும் வரிகள்//
நன்றி thajudheen.
hameed, //இல்லாத ஜட்டியை கழட்டிவிட்டு வாய்காலில்
இறங்கும் லாவகம்மே தனி//
இந்த எல்லாவற்றிலும் நானும் இருந்திருக்கிறேன் என்பதால்உண்மையிலேயே ரொம்ப ரசித்து சிரித்தேன். ஃபர்ஸ்ட் க்ளாஸான கற்பனை
Yasir,
//அதான் அழைத்து வாழ்த்திவிட்டேன்//
நீங்கள் ஃபோனில் விமரிசித்ததும் வாழ்த்தியதும் பெருமிதமாக இருந்தது தம்பி. அன்பிற்கு நன்றி.
கோழி சுடுதல் இன்ஷாஹ் அல்லாஹ் நம் கனவு மாநாட்டிற்குப் பிறகு செய்வோம்
"எழு" பிரசுரித்த அ.நி.
"குழு"வுக்கு நன்றி.
சபீரின் எழு... அற்புதம், உண்மையில் இருக்கையின் ஓரத்தில் நிமிர்ந்து உட்காரவைத்துவிட்டது.எல்லா வரிகளுமே அசத்தளான வரிகள்.
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்!
இத்தருனத்தில் இதுதான் அவசியம். வாழ்த்துகள்
sabeer சொன்னது…
"ஊதா மைய்யூற்றிய
சாதா பேனாவல்ல உமது, ஜுவாலையில் தீய்ந்துபோக.
மெய் மட்டும் எழுத
நெய்யூற்றிய பேனா.
தீயும் திணறிப்போகும் உமது உத்வேகம் கண்டு.\"
அப்படியே ஆகட்டும். இன்ஷாஅல்லாஹ்!
"க்ரவுன்,
சரியாகச்சொன்னீர்கள் உங்கள் / நம்ம தம்பியைப் பற்றி-க்ரவுன், சரியாகச்சொன்னீர்கள் உங்கள் / நம்ம தம்பியைப் பற்றி- ஏற்புரை சொல்வதற்குள் மூச்சு வாங்கிடுச்சு. (ஆமா அந்த பின்னூட்டம் எங்கே) "
ஊருக்கு வந்தவனை ஊட்டில் மட்டும் பூட்டிவைக்க நினைப்பதேனோ?னு க்ரவுனுட்ட கேட்ட கேள்வி, பின்னூட்டம் கானோம்!
//அதில் ஒரு சிலர் "என்னத்த சாதிக்க போகிறீர்கள்?" இப்படியும், "ஏனிந்த பொழப்பு" இப்படியும் கேளிகள் உதிரத்தான் செய்கிறது... பாவம் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே... இவர்கள் !
---------------------------------
simply just ignore them......... //
To Bro. Harmy,
இப்படி எந்த நல்ல விசயங்களிலும் "ஙே" என்று சிரத்தை இல்லாமல் இருப்பவர்கள் ஹார்மோன் பிரச்சினைகளில் இருக்கலாம். ஆண்களாய் இருந்தால் இவர்களுக்கு பெண்களுக்கான ஹார்மோன் அதிகம் சுரக்க ஆரம்பித்து இருக்களாம். [This is "Harmon Imbalance]
Do not ignore them. try to give better treatment if possible.
அதிரைக்கவி சபீருக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தன்னம்பிக்கை ஊட்டும் அனைத்து வரிகளும் அருமை! வாழ்த்துக்கள்!
எழு
விழுமுன் எழு!
நம்பிக்கையுடன் எழு!
நாளை உனதென்று எழு!
தன்னம்பிக்கை உன்னிடம்
பாடம் படிக்க எழு!
ஜலீல்: நன்றி.
அலாவுதீன்: நன்றி. உடல்நிலை தேவலாமெனில் "கடன்" தொடரை தொடரலாமே?
சலாம்
நடக்கும் வழியெல்லாம்
நன்மைகளை விதைத்துச் செல்,
தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்! வாழ்கையின் தத்துவத்தை இதை விட வேறு யார் சிறப்ப கவி ஸ்டைலில் சொல்ல முடியும் பெரியண்ணா
Post a Comment