Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புதைக்குழி தினம்! 14.02.2011 21

அதிரைநிருபர் | February 13, 2011 | , ,

ரெண்டாவது மாதத்தின்
ரெண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த
கருப்புக்கரை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!

காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வறையருத்த தினம்!

களவியென்று களித்தது
கற்காலக் காதல்...
குளவியென கடிப்பது
தற்கால காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்
கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்
அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துறைக்க?

காதலர்தினம் எனும்
கன்றாவிப் புறக்கனிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு
இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்...
கன்னியர்க்கு கண்ணிவெடி
காளையர்க்கு கள்ளுக்குடி
பெற்றோருக்கு பேரிடி
பொதுவில் ஒரு புதைகுழி!

-- சபீர்
Sabeer.AbuShahruk

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எவனோ தோண்டி வைத்த குழியில் வீழ்ந்து மாயும் இளசுங்களே...

இருட்டுக்குள் இருளைத் தேடும் இளமையே என்றுதான் இருட்டை விட்டு வெளிச்சம் தேடுவீங்க !

கவிதையின் வரிகள் சாடியது..

கழற்றிவிடும் தினத்தின் !
களவுக்குரிய முகவரிகள் !

கவிக் காக்கா சொல்லித் தெரிவதில்லை உங்களின் வரிகளை !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

கள்ளத் தொடர்ப்புக்களையும்
கயவாளி தனங்களையும்
பொது இடத்திற்கு கொண்டு வருவதே
காதலர் தினம்

இது அசிங்கங்களின் அரங்கேற்றம்
என்பது யாருக்கும் புரியவில்லை

இதற்க்கு போலீஸ் பாதுகாப்பு வேறு
இதனால் தான் போலிசை மாமா என்று அழைகின்றார்களோ!!

sabeer.abushahruk said...

தவிர,
எல்லாரும் கமுக்கமா இருப்பதைப் பார்த்தால் வசமா எங்கேயோச் சிக்கி இருக்கிறமாதிரில்ல தெரியுது. மாட்டிக்காதீக மக்கா!

இல்லேனா சொல்லிடுங்கய்யா... சூப்பரா ஒரு கா.க. எழுதிடுவோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா காதிருப்போமே !

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
புதைக்குழிக்குள் புதைத்துக்கொள்ளும்
உயிர் பிணம் !
நேரம் கூடி வரும் போது கருத்துடன்
ஓடிவருவோம்.
காத்திருக்கவும் உன்மை காதலுடன்(அன்புடன்).

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா, சரியான சாட்டையடி,

//களவியென்று களித்தது
கற்காலக் காதல்...
குளவியென கடிப்பது
தற்கால காதல்!//

//இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!//

இது போன்ற கவிதை எனக்கு புதுசு, கேடுகேட்ட காதலர் தினத்துக்கு ஆதரவான கவிதைகளே அதிகம் கண்டதுண்டு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இது அசிங்கங்களின் அரங்கேற்றம்
என்பது யாருக்கும் புரியவில்லை

இதற்க்கு போலீஸ் பாதுகாப்பு வேறு
இதனால் தான் போலிசை மாமா என்று அழைகின்றார்களோ!! //

ஹ் ஹா ஹா உண்மை ஹமீது காக்கா,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னது…

இதற்க்கு போலீஸ் பாதுகாப்பு வேறு
இதனால் தான் போலிசை மாமா என்று அழைகின்றார்களோ!! ///

Sஹமீத் காக்கா : இன்றைய புதைக்குழி தின விகடம் !

விகட கவி(ன்னா) சும்மாவா ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தவிர,
எல்லாரும் கமுக்கமா இருப்பதைப் பார்த்தால் வசமா எங்கேயோச் சிக்கி இருக்கிறமாதிரில்ல தெரியுது. மாட்டிக்காதீக மக்கா!

இல்லேனா சொல்லிடுங்கய்யா... சூப்பரா ஒரு கா.க. எழுதிடுவோம்.//

கவி காக்கா, இதுவரை எந்த கன்றாவியிலும் சிக்கவில்லை, இனி சிக்கப்பபோவதுமில்லை. நம்மளை விட்டுடுங்க ... அல்லாஹ் பாதுகப்பானாக.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வெள்ளைக்கார கொள்ளையர்கள் வியாபாரத்திற்காக கண்டுபிடித்ததுதான் இந்த கன்றாவி தினம்.

எதையுமே இறக்குமதி செய்து பழக்கப்பட்ட இந்தியாவில் உள்ள தொழில் கொள்ளைக்கார கும்பல்கள் வருடா வருடாம் புதுவிதமான விளம்பரங்கள் செய்து சதை வியாபாரம் பெருகுவதற்கு இந்த நாளை விடாமல் மக்களை கொண்டாடச் சொல்கிறது பண்பற்ற கொள்ளைக்கூட்டங்கள்.

மூளை இல்லாத ஆட்டு மந்தை கூட்டங்களும் எந்த கேள்வியும் கேட்காமல் கொண்டாடி வருகிறார்கள். இதில் பெண்கள் விட்டில் பூச்சியாய் மடிந்து வீழ்கிறார்கள்.

கன்றாவி தினத்தை புதைகுழித்தினமாக வரைந்து - இது நல்லதினம் இல்லை ------- சதைக்கும்பல்களின் வக்கிரம் பிடித்தவர்களின்,கொள்ளையர்களின் தினம் என்ற விழிப்புணர்வை வெளியாக்கிய : சபீருக்கு வாழ்த்துக்கள்.

Zakir Hussain said...

//வசமா எங்கேயோச் சிக்கி இருக்கிறமாதிரில்ல தெரியுது.//

குடும்பத்திலெ கொழப்பத்தெ கெளப்பிவிட்ராதப்பு...

நண்பர் ஒருவர் இன்று சொன்னது....இன்னிக்கு என் மனைவி கிட்டே சொல்லிட்டேன்
வேலை முடிஞ்சி 5 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன் ஏன்னா இது அன்பாளர் தினம்..

வரும்போது நிச்சயம் அன்றைக்கு நீ கேட்ட பூ வாங்கி வர்ரேன்...

"என்ன பூ அன்றைக்கு கேட்டேன்...'

' வேரெ என்ன புதுசா கேட்க போறெ..தேங்காப்பூ தான்'

எப்டியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...

ஜாகிர் ...நீங்க அன்பாளர் தினம் கொண்டாடுவீங்களா?

" இல்லே...ஏன்னா நாங்கள்ளாம் அடிச்சிக்கிட்டு விழுறவைங்க...'

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜாகிர் ...நீங்க அன்பாளர் தினம் கொண்டாடுவீங்களா?

" இல்லே...ஏன்னா நாங்கள்ளாம் அடிச்சிக்கிட்டு விழுறவைங்க...'///

ஆஹா ! காக்கா... அடிச்சிகிட்டாலும் எங்களுக்குள எல்லாமே புடிச்சுக்கும்(தானே) காக்கா ! :}}

Yasir said...

கவிக்காக்காவின் காரசாரமான கவிதை..ஆமா காக்கா இன்னைக்கு மாட்டிக்கிட்டேன்தான்.ஒரு நெருங்கிய ஆங்கிலேய நண்பனுக்கு இந்த கேடு கேட்ட தினத்திற்க்கு உதவுமாறு போய்விட்டது...அவன் ஆளுக்கு “பிங்” கலர் சாம்சங் கையடக்ககணினி பரிசளிக்க வாங்கிக்கொடு இல்லையென்றால் இன்றைய இரவுபார்ட்டியுடன் என் வாழ்க்கை பாழகிவிடும் என்று சொன்னதால் அலைந்து திரிந்து வாங்கி கொடுத்தப்புறம்தான் விட்டான்.இது வழியில்லாக புதைகுழி மாட்டிக்கிட்டால் எல்லாத்தையும் இழந்துவிடுவோம்......கல்யாணம் ஆன ஒரு சில பெண்கள் தன் கள்ளமாப்பிள்ளையுடன் கா(மம்)தல் புரிய இந்த கேடுகேட்ட தினத்தைதான் தேர்ந்தெடுக்கிறார்கள்...வாலண்டைனின் இறந்த தினத்தை கொண்டாடும் உயிருள்ள பிணங்கள் இந்த காதலர்கள்..எப்படி உருப்படும் இவர்களது காதல் ////காதலர் தினம்...
கன்னியர்க்கு கண்ணிவெடி
காளையர்க்கு கள்ளுக்குடி
பெற்றோருக்கு பேரிடி
.பொதுவில் ஒரு புதைகுழி!/// சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..அல்லாஹ் நம் சமுதாயத்தை இந்த அனாச்சார விசயங்களில் இருந்து காப்பற்றுவானக..ஆமீன்

Meerashah Rafia said...

என்னத்த சொல்ல!! இந்த வருஷம் சவூதி அரேபியாக்கு வந்துட்டதால இந்த கன்றாவிகள பத்தி எதுவும் தெரியல. ரொம்ப சந்தோசம்.

MSM(MR)

Unknown said...

இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துறைக்க?
----------------------------------------------------------------------
I LIKED IT

crown said...

ரெண்டாவது மாதத்தின்
ரெண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த
கருப்புக்கரை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!

காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வறையருத்த தினம்!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.உன்னை மெழுகாய் உருகி காதலிக்கிறேன் அன்பே என்பான் ஆனால் அதையே ஆயிரம் பேரிடம் சொல்லியிருப்பான். நீயும் உருகி போவாய் பின் காமதீயில் கருகிபோவாய். பிப்ரவரி மாதத்தின் பதினான்காம் நாள்.அவளுக்கு நீ யும் ஒரு கள்ள காதல் பதி,இப்படி மாட்டியவெனெல்லாம் பதி(கணவன்).இதில் அன்பு என்பது சரிபாதி எல்லாம் பொய்வாக்கு மூலம்.

crown said...

களவியென்று களித்தது
கற்காலக் காதல்...
குளவியென கடிப்பது
தற்கால காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்
கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்
அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துறைக்க?
---------------------------------------------------------------------
அதானே அப்படி கேளுங்க கவிஞரே ! யாரடா நீதி வகுப்பது? நல்ல நாள்,தீய நாளெண்று? சாதிக்கும் சங்கம், சமூக நீதி போர்வையில் பணவசதிக்கும்,வசூலுக்கும் சங்கம்,காதலுக்கும் சங்கம் இப்படி அசிங்கம் அள்ளவா நிறைவேருகிறது.சாதிக்கும் சங்கமாவது அரசியலில் சாதிக்கும். காதல் கன்றாவி என்றும், கலவி சங்கம் எல்லாம் சாமூக கேடு.

crown said...

காதலர் தினம்...
கன்னியர்க்கு கண்ணிவெடி
காளையர்க்கு கள்ளுக்குடி
பெற்றோருக்கு பேரிடி
பொதுவில் ஒரு புதைகுழி.
-----------------------------------------------------------------
சரியாக சொல்லபட்ட கவிதை!
கா(காய்)தல்(தள்ளிவை)!
பெற்றோர்கள் முறையாய் சொன்ன கனி(திருமணம்)யில் நம்பிக்கைவை!
நல்லவை,தீயவை! தெரிந்து வாழ்வில் அடியெடுத்துவை. பின் வையகம் போற்ற வாழ்வு வசந்தம் வீசும்.

sabeer.abushahruk said...

கா.தி. ஒரு கழிசடை தினம் என்று ஒத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.

பதவுரை விற்பன்னர் கிரவுனுக்குப் பிரத்யேக நன்றி!
(நல்லவேளை வந்தீங்க, காதலர் தினமும் அதுவுமா உங்களை இங்கேயும் காணலை அங்கேயும்(உங்க ப்ளாக்) காணலைன்னா நாங்க என்னாத்தை நினைக்கிறது?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பதவுரை விற்பன்னர் கிரவுனுக்குப் பிரத்யேக நன்றி!
(நல்லவேளை வந்தீங்க, காதலர் தினமும் அதுவுமா உங்களை இங்கேயும் காணலை அங்கேயும்(உங்க ப்ளாக்) காணலைன்னா நாங்க என்னாத்தை நினைக்கிறது?)//

அதெப்படி கவிக் காக்கா.. அவரைப் பற்றி எனக்குத் தெரியும்.. சொல்லியபடி வந்து அடிச்சார்லா !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு