ஏற்கனவே ஒருவர் எழுதியதை அப்படியே மாறாமல் திருப்பி எழுதுவது அல்லது செய்வது என்பது காப்பி அடிப்பது என்று பொருள் படலாம் .படம் எடுப்போர் தழுவல் முறை கையாள்வர் .
யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்- என்று சினிமா நடிகர் சொல்வார், அது அவர் நம்புவது. அது அவர் தன்னம்பிக்கை. அந்த திறமையை எங்கிருந்து பெற்றார். அவர் சொல்வார் `பரம்பரை ஜீன்ஸ் வழி வந்தது அல்லது வளர்த்துக் கொண்டது` என்று. வளர்த்துக் கொள்ள வழி வகுத்தவர் யார்?கதைக்கு ஏற்றபடி இப்படி நடிக்க வேண்டும் என்று நடிக்க சொல்லிக்கொடுத்தவர் யார் ! டைரக்டர் பின் ஏன் ! இதுவும் ஒரு வகை காப்பிதான்.
என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் காப்பி அடிப்பது தவறு என்று மட்டும் சொல்லாதீர்கள் . சில நாடுகளில் புத்தகம் அல்லது கால்குலேட்டர் வைத்துக்கொண்டு தேர்வு எழுத அனுமதிகின்றார்கள் . காப்பி அடித்த மாணவர் மீது நடவடிக்கை அதனால் அவர் மனம் உடைந்து இறந்தார் என்ற செய்தி வேண்டாம் . ஆசிரியர் தன் மாணவனை அல்லது தகப்பன் தனது மகனை பார்த்து சொல்வது “ஏன்டா இப்படி இருக்கே மற்றவரை பார்த்தாவது உன்னை மாற்றிக்கொள் ” இதற்கு என்ன பொருள்? தனித்துவம் வேண்டாம் நல்லதனை காப்பி செய்துகொள் என்பது உள் அடங்கும். இன்டர்வியு என்று உள்ளது .அப்பொழுது அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்.
கல்லூரியில் படிக்கும் பொழுது தேர்வுக்காக மட்டும்தான். பின்பு படிப்பதுதான் அறிவினை பெறுவதற்காக இருக்கும்.
காப்பி பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிடுவது ஒரு வகை. மற்ற இணையதளங்களிலிருந்து எடுத்து அதனை அப்படியே போடுவது. ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதனை தெரிவிக்காமல் விடுவது ஒரு வகை குற்றம். மற்ற சிலர் தலைப்பினை மாற்றி தனது ஆக்கமாக காட்டிக் கொள்வர் . அது தவறு. ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டதோ அதனை அவர் எங்கிருந்து எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆங்கில தளத்திலிருந்தா! அல்லது பல கட்டுரைகளின் சாரமா! நாம் அறியோம் !காப்பி அடிக்கும்பொழுது அவர் அறியாமலேயே அவருக்கு அறிவு கிடைக்கும் .அதுவும் ஒரு நல்ல விளைவுதான் . ஒரு சிலர் அசலைவிட காப்பி அடித்து தருவதனை சிறப்பாக செய்வர்.
நல்லோர் வழி வாழ் என்று இயன்புவர் .திருக்குறளை இன்ன பிற காவியங்களை அப்படியே எழுத வேண்டும். அவர்கள் தடை விதிக்கவில்லை . அவர்கள் பெயரை போடுகின்றோம் .எழுதியவர் யார் என்று தெரியவில்லையென்றால் “யாரோ” என்று போடுகின்றோம்.
அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டு மனித முயற்சியால் அபிவிருத்தி செய்யப்பட்டது . அதன் உரிமையாளர் இறைவன் மட்டும்தான். அறிவு வளர தடை வேண்டாம் . எப்படியாவது மக்கள் அறிவு பெறப்பட வேண்டும். அறியாமை பல தீமைகளை உருவாக்கிவிடும்.
-- நீடூர் அலி
Thanks: SEASONSNIDUR
தன் ஆக்கத்தை நம் வலைப்பூவில் பதிய அனுமதியளித்த எங்கள் அன்பு பாசம் நிறைந்த மூத்த சகோதரர் நீடூர் அலி அவர்களுக்கு மிக்க நன்றி.
மேலே சொல்லப்பட்ட சினிமா நடிகர் உதாரணம் கட்டுரையாளர் இன்றைய காலகட்டத்தில் எளிதில் புரிந்துக்கொள்வதற்காக எழுதியுள்ளார். நாம் சினிமாவை ஆதரிக்கவில்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என்பதை மட்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
மேலே சொல்லப்பட்ட சினிமா நடிகர் உதாரணம் கட்டுரையாளர் இன்றைய காலகட்டத்தில் எளிதில் புரிந்துக்கொள்வதற்காக எழுதியுள்ளார். நாம் சினிமாவை ஆதரிக்கவில்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என்பதை மட்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
--அதிரைநிருபர் குழு.
7 Responses So Far:
காப்பி பேஸ்ட் ஃபோட்டோ அருமை போங்க !
Ctrl+Z, Ctrl+V and Ctrl+X = படங்கள் சிந்தனையை தொட்ட தேடல்... சரியான பேஸ்டிங்...
கலை மக்களுக்கானது. அதனை மறைப்பதும் ஒழிப்பதும் ஆகாத செயல்! கட்டுரையாளர் சொல்வது போல்,எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதனை தெரிவிக்காமல் விடுவது ஒரு வகை குற்றம். மற்ற சிலர் தலைப்பினை மாற்றி தனது ஆக்கமாக காட்டிக் கொள்வர்.அது தவறு.
அறிவாக்கத்தை திறந்துவைப்பதும் பொதுவுடமையும் படுத்தவேண்டும்.நல்ல பகிர்வு!
நல்ல விஷயங்களை காப்பியடிப்பது ஆரோக்கியமானதுதான். அத்துடன், அந்த விஷயத்தை நமது சிந்தனையையும் கொண்டு ஒரு படி நகர்த்துவதே பரிணாம வளர்ச்சிபோலதொரு செயல்பாடாகும்.
பதிவர் உலகத்தில் Copy&Paste பிரச்சினையும்
மரபுக்கவிதை Vs புதுக்கவிதையும் ஒரே மாதிரி. தொடர்ந்து விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
கட்டுரையைப்படிப்பதற்கு முன்பு , படங்களே உணர்த்துகிறது. அருமையான பதிப்பு...
----
மற்றும் இந்த வலைப்பூவை (adirainirubar) இன்றுதான் பார்க்க நேர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்.. இது தொடரட்டும்..
குழந்தைகள் வளரும் போது பெரும்பாலான தனது செயல்களை பெற்றோர் உற்றோர்களை பார்த்து அமைத்துக்கொள்கிறது...ஆக காப்பி பேஸ்ட் என்பது...எல்லோரின் வாழ்விலும் வந்து போகும் விசயம்..நல்ல விசயங்களை காப்பி அடித்து நம்முள் பேஸ்ட செய்து கொள்வது வரவேற்க தக்கதே
//மற்றும் இந்த வலைப்பூவை (adirainirubar) இன்றுதான் பார்க்க நேர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்.. இது தொடரட்டும்.. //
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அபூபக்கர் தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
மற்றும் தொடர்ந்து வருகை தந்து நம் அதிரைநிருபர் வலைப்பூவை பார்வையிட்டு வரும் அனைவருக்கும் மற்றும் கருத்துக்கள் தொடர்ந்து தெரிவித்துவரும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து இணைந்திருங்கள் அன்பு நெஞ்சங்களே...
Post a Comment