அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அழைக்கும்
இரவு பகலாக ஒருகணம் கூட தவறாது மனிதர்களால் சுற்றி வரப்படும் வழிப்பாட்டுத்தளம் உலகில் கஃபா மட்டுமே!
கடும் வெயிலானாலும் கொட்டும் மழையானாலும் கடும் குளிரானாலும் சரி வருடம் முழுவதும் இப்புனித இறையில்லத்தை சுற்றிச் சுற்றி மனிதர்கள் வளம் வரும் காட்சி காணகண்கொள்ளா காட்சியாகும்
தவாஃப் இடது புறமாக சுற்றுவது ஏன் என்பது தான் கேள்வி உலகிற்கோர் அருட்கொடையாக மட்டுமின்றி அனைத்து மனித குலத்திற்கும் ஓர் அழகிய வழிகாட்டியாக தென் கிழக்கு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத் என்கின்ற புனித கல்லை அடையாளமாக வைத்து தவாஃப் தொடங்கி ஏழு முறை கஃபாவை சுற்றிவர வேண்டும் .
தொடங்கிய அதே இடத்தில் ஏழாவது சுற்றை முடிப்பதே தவாஃப் ஆகும் இதை Anti Clockwise என்று சொல்லப்படும் அதாவது கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிராக சுற்றுவது . பூமி சுற்றும் அதே திசையில் நாமும் கஃபாவை சுற்றி வலம் வருவது இஸ்லாத்தில் ஒவ்வெறு செயலுக்கும் ஆழ்ந்த பொருள் புதைந்து இருப்பதை நாம் அறியலாம் ,
உடலின் இடது புறத்தில் இதயம் அமைந்துள்ளது உடலின் மையத்திற்கு எதிர் திசையில் செயல்படும் விசை ஆற்றல் நாம் இடது புறமாக ஓடும்பொழுது இவ்வாற்றல் வலது புறத்தில் இருந்து இடது புறமாக செயல் படும் .நமது உடலில் பாய்ந்தோடும் இரத்தம் இரண்டு வகைப்படும் ஒன்று சுத்தமான இரத்தம் இரண்டு அசுத்தமான இரத்தம் என இருவகைப்படும். இதய இயக்கம் அசுத்தமான இரத்தத்தை சுத்த இரத்த தமனிகள் மூலம் உடல் எங்கும் பாய்ச்சப்படுகின்றது .இவ்வாறுதான் மனிதன் உயிர் வாழும் வரை இச்சுழற்சிமுறை நடை பெற்றுக்கொண்டே இருக்கும் அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் இரண்டு முக்கிய தமனிகள் உள்ளது
1 மேல் புற தமணி
2 கீழ் புற தமணி
மேல் புற தமணி தலை நெஞ்சு உடலின் மேற் பகுதிகளில் பாயும் அசுத்த இரத்தத்தையிம் கீழ் புற தமணி மற்ற பாகங்களில் பாயும் அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு செலுத்துகின்றன (பம்பிங்) இதயத்தில் அசுத்த இரத்தம் உறிஞ்சிக்கொள்ளும் (Sucking Action) என்று சொல்லப்படும் இதயத்தின் உறிஞ்சும் சக்தியின் உதவியுடன் மேற் புற தமணி அசுத்த இரத்தத்தை இடது புறத்தில் இருந்து எடுத்து விடுகின்றது
உடலின் மையம் எதிர் திசை வினையாற்றல் இதயத்தின் உறிஞ்சும் தன்மைக்கு உறுதி செய்கின்றது .
இதன் காரணமாக இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது நாம் உம்ரா மற்றும் ஹஜ் செய்யும் போது எளிதில் களைபடைவதில்லை.
நம்மை படைத்த இறைவன் எல்லா வழிகளிலும் நமக்கு நல்லதையோ நாடிஉள்ளான் மேலும் இன்னும் எத்தனையோ நல்ல விசயங்களை நமக்கு இறைவன் வழங்கி உள்ளான் நாம் நம் அறிவை கொண்டு நல்லது எது கெட்டது எது என்று பிரித்தரிந்து நம் வாழ்கையில் நல்வழியை தேர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும் அதை மற்றவர்களுக்கும் எத்தி வைக்கவேண்டும், குறிப்பாக நமக்கு கிடைத்திருக்கும் இறை மார்க்கத்தை மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.
--SHAMEED
DAMMAM
22 Responses So Far:
Sஹமீத் காக்கா: சிலிர்க்கும் உணர்வுகளைத் தட்டி விட்ட அருமையான ஆக்கம்... இதயம் துளைத்த இதமான வரிகள்... நேற்று அசத்தல் காக்காவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதனை அப்படியே நினைவு கூர்ந்தார்கள் !
Tuan Haji Shahul, உங்களுடைய இந்த ஆக்கம் மிகவும் புதியது எனக்கு. இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஞ்ஞான உண்மைகள் ஏராளம். அதை மனிதன் அறிந்து கொண்டது அல்லது கண்டுபிடித்ததது மிகவும் குறைவு. இன்னும் கண்டுபிடிக்க , கண்டுபிடிக்க மனிதனின் கண்கள் ஆச்சர்யத்தில் எக்ஷ்பேன்ட் ஆவது நிச்சயம்.
அபு இப்ராஹிம், ஏன் நான் உங்களுக்கு சொல்லவேண்டும், Tuan Haji Shahul ஏன் இதை எழுத வேண்டும். அதை ஏன் நீங்கள் முதலாவதாக படிக்க வேண்டும். எனக்கு என்னவோ இறைவன் உங்களை அவனது இல்லத்துக்கு அழைக்கிறான் என்றே நினைக்கிறேன்.
பணவசதி, சூழ்நிலை எல்லாமே அவன் ஏற்படுத்துவது. அந்த வல்ல இறைவனிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் நிய்யத் ஸ்ட்ராங் ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உம்ரா , ஹஜ் செய்வது உறுதி.
இஸ்லாத்தின் எல்லா கிரியைகளிலும் அர்த்தம் பொதிந்திருக்கும். காரணம், இது இறைவனின் மார்க்கம். இவற்றை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க முனைந்த அத்தனை பரிசோதனைகளும் இஸ்லாத்தின் கோட்பாடுகள் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போவதையே உணர்த்தின.
அவ்வகையில், தொடராக எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன ஹமீது.
வெல்டன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹமீது காக்கா,
இறைமார்க்கத்தில் சொல்லப்பட்டவைகளை நாம் ஒவ்வொரு தருணமும் அறிவியலோடு ஒப்பிட்டுப் பார்த்தாள் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளது என்பது நாம் அன்றாடம் கண்டுவரும் காட்சி. தங்களின் சொந்த அனுபவத்துடன் இங்கு எல்லோருக்கும் பகிர்ந்து ஞாபப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
இது போல் தொடர்ந்து எழுதுங்கள் காக்கா..
மேலும் தகவலுக்காக
http://www.suvanathendral.com/science/rainwatr.html
http://www.suvanathendral.com/science/index.html
சுப்ஹானல்லாஹ் !!! நான் அறிந்திராத தகவல்கள்...இஸ்லாம் ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்வியல் முறை என்பதற்க்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன...நல்ல பயனுள்ள ஆக்கம் காக்கா
இஸ்லாமிய மார்க்கம் ஒரு உண்ணதமான மார்க்கம்.
நாம் நம்மைப்படைத்த இறைவனுக்கு தினம்தினம் தொழுகை+திக்ரு+ஜகாத் இன்னும் பல வணக்கங்களால் நன்றி செலுத்துவோமாக.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இஸ்லாத்தில் எந்த ஒரு சிறு காரியமானாலும் அதில் பல அறிவியல் உண்மைகள் இருக்கும். கண்டுபிடித்தது ஒரு சதவீதம்தான் கண்டுபிடிக்காதது 99% இருக்கு.
நாம் தொழுகைக்காக ஒளுச்செய்கிறோம். ஒளுச்செய்வதால் அடையும் பலன்கள் ஏராளம். ஆனால் பலன் அதிகம் பேருக்கு தெரியாது.
சீனாவில் நீரியல் மருத்துவம் என்று சொல்லி 50 டாலர் வாங்கிக்கொண்டு ஒளுச்செய்ய சொல்கிறார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளுச்செய்ய 50 டாலர் கொடுங்கள் என்று நம்மிடம் கேட்டால் கொடுக்க முடியுமா? நமக்கு வல்ல அல்லாஹ் கொடுத்தது எல்லாமே இலவசம்.
விஞ்ஞானிகள் புதிதாக ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. வல்ல அல்லாஹ் படைத்து வைத்திருப்பதை, வல்ல அல்லாஹ் மனிதனுக்கு எப்பொழுது தேவை என்று முடிவு செய்து வைத்திருக்கும் நேரத்தில் அறிவியல் என்ற பெயரில் வெளியாகிறது. கோடானு கோடி அதியசங்கள் உலகில் மறைந்த கிடக்கிறது. மனித அறிவோ ஒரு சிறு துளியைத்தான் வெளிக் கொண்டு வந்துள்ளது. மனிதன் எதையும் படைக்கவில்லை. வல்ல அல்லாஹ் படைத்து மறைத்து வைத்திருப்பதை. வல்ல அல்லாஹ் நாடிய நேரத்தில் அறிவியலாக வெளிவருகிறது.
மாசா.அல்லாஹ் அருமையான.ஆக்கம்.தவாபின்.மகத்துவத்தையும்,மருத்துவத்தை,அழகாகஎடுத்து.சொல்லி,இருக்கிறீர்கல்,வாழ்துகல்.இதனால்தான்.ரஸீல்லாஹ்(சல்}அவர்கல்.மக்காவருபவர்கலை.அதிகாமாகதவாப்செய்யாசொன்னார்கலொ?????????????????
அபுஇபுறாஹீம் சொன்னது…
நேற்று அசத்தல் காக்காவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதனை அப்படியே நினைவு கூர்ந்தார்கள் !
அஸ்ஸலாமு அழைக்கும்
அசத்தல் காகா எப்போதும் பழசை மறக்காதவர்
மனதில் உள்ளதையிம் மறைக்காதவர்.
//அசத்தல் காகா எப்போதும் பழசை மறக்காதவர்
மனதில் உள்ளதையிம் மறைக்காதவர். //
அசத்தல் காக்கா பலசை பேசினாலும் என்றும் புதுசாவே இருக்கும்.
ZAKIR HUSSAIN சொன்னது…
பணவசதி, சூழ்நிலை எல்லாமே அவன் ஏற்படுத்துவது. அந்த வல்ல இறைவனிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் நிய்யத் ஸ்ட்ராங் ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உம்ரா , ஹஜ் செய்வது உறுதி.
அஸ்ஸலாமு அழைக்கும்
வாருங்கள் இங்கு உங்களை எல்லாம் இந்த புனித பூமியில் வைத்து காண (பார்க்க)வேண்டும் என்ற ஆசை. வல்ல அல்லா துணை புரிவானகவும் ஆமீன்
//அஸ்ஸலாமு அழைக்கும்
வாருங்கள் இங்கு உங்களை எல்லாம் இந்த புனித பூமியில் வைத்து காண (பார்க்க)வேண்டும் என்ற ஆசை. வல்ல அல்லா துணை புரிவானகவும் ஆமீன்//
ஆமீன் ! நிச்சயம் விரைவில் - இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அழைக்கும்
அபு இப்ராகிம் & தாஜுதீன் ரொம்ப அலார்ட்டா இருப்பது போல் தெரிகின்றது!!
//ரொம்ப அலார்ட்டா இருப்பது போல் தெரிகின்றது!! //
ஆமாம் காக்கா, நல்ல கட்டுரை என்றுகூட விளங்காமல் அனாமத்து பின்னூட்டங்கள் வந்து குவிந்துவிடுது அதான் ரொம்ப அலார்ட்டா இருக்கோம். கம்பன் விரைவுவண்டி நம்ம ஊருக்கு வருதோ இல்லையோ, அனாமத்து பின்னுட்டங்கள் விரைவுவண்டியைவிட ரொம்ப வேகம சில நேரத்துல வந்து நேரத்தை வீணடிச்சிடுது.
தாஜுதீன் சொன்னது…
ஆமாம் காக்கா, நல்ல கட்டுரை என்றுகூட விளங்காமல் அனாமத்து பின்னூட்டங்கள் வந்து குவிந்துவிடுது அதான் ரொம்ப அலார்ட்டா இருக்கோம்
அஸ்ஸலாமு அழைக்கும்
கெட்ட செயல்களுக்கு யாரெல்லாம் முன் நிற்கிறார்களோ
அவர்கள் எல்லாம் நரகத்தில் நுழை வதிலும் முன் நிற்ப்பார்கள்.
மாசா.அல்லாஹ் அருமையான.ஆக்கம்.தவாபின்.மகத்துவத்தையும்,மருத்துவத்தை,அழகாகஎடுத்து.சொல்லி,இருக்கிறீர்கல்,வாழ்துகல்.இதனால்தான்.ரஸீல்லாஹ்(சல்}அவர்கல்.மக்காவருபவர்கலை.அதிகாமாகதவாப்செய்யாசொன்னார்கலொ?????????????????
மாசா.அல்லாஹ் அருமையான.ஆக்கம்.தவாபின்.மகத்துவத்தையும்,மருத்துவத்தை,அழகாகஎடுத்து.சொல்லி,இருக்கிறீர்கல்,வாழ்துகல்.இதனால்தான்.ரஸீல்லாஹ்(சல்}அவர்கல்.மக்காவருபவர்கலை.அதிகாமாகதவாப்செய்யாசொன்னார்கலொ?????????????????
நல்ல ஆக்கம் ....
இஸ்லாமிய முறைகளில் நிச்சயமாக
நன்மை புதைந்து இருக்கிறது ....
காக்கா நீங்கள் நிறைய எழுதணும்
தம்பி அப்துர்ரஹ்மான் உங்களை கண்டும்/ நீங்கள் இடுகையிட்டும்/கருத்திட்டும் நெடுநாட்களாகிவிட்டது ! நலமே என்றொரு நற்செய்தி என்றும் தொடரட்டும் !
harmys சொன்னது…
//காக்கா நீங்கள் நிறைய எழுதணும்//
அஸ்ஸலாமு அழைக்கும்
தம்பி harmys நிறைய எழுத சொல்லி உள்ளீர்கள் எனக்கு நா வன்மையை விட எழுத்து வன்மை மிக மிக குறைவு
தங்களை போன்ற சகோதரர்களின் ஊக்கம் தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் எழுத தூண்டுகின்றது.
மேலும் இன்னும் நன்றாக எழுத முயற்சிகின்றேன்
Sஹமீத் காக்கா : வன்"மை" "நா"வில் இருந்தால் உண்மை எனும் பட்சத்தில் எங்கும் எவரிடமும் எடுபடும் எவ்வித சந்தேகமுமில்லை...
உங்களின் "நா" வன்மையை எங்களின் மென்மையும் ஆளுமை செய்யும் ஆகவே உங்களின் எழுத்தும் வென்றெடுக்கும் அதிரைமணங்களை என்றும் அதிரை நிருபரில்.
அஸ்ஸலாமு அலைக்கும்.மெஞ்ஞானத்திலிருந்து (இஸ்லாம்)தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கும்.அதனை எழுதி முடியாது. நல்ல ஆக்கம்.வாழ்துக்கள் .தொடருங்கள். எழுத்தில் வடிக்க முடியவில்லை யென்றால் ஒலித்தட்டில் பதிந்து அதிரை நிருபருக்கு அனுப்புங்கள் அதனையும் அருமையாக் வெளியிடுவார்கள்.
Post a Comment