Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா? 20

ZAKIR HUSSAIN | February 04, 2011 | ,

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?....நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவைஇல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.

உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [ சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கவந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” or “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது...எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.

உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்களாம்...பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.

சரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி , காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேரவில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே “[ இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக்கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு...மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்களாம் என ஐடியா கேற்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.

Get the right advice from the right people, not the wrong advice from wrong people.

VISUALISATION

உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேரை அழித்துவிட்டு அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்.

இதைப் பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்.

நான் எழுதியுருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்க்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது நிருபிக்கப்பட்ட உண்மை.

உங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்சை சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.

உதாரணமாக:

1) இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், ஃபேஸ் புக் போன்ற 'மட்டையடிக்கிற' விசயங்கள்.

2) சாயங்காலம் கூடும் டீக்கடை / சலூன் வாசல்.

3) உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக்கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாரிடும்.

4) செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே..படிச்சி என்ன ப்ரொபொசரா ஆகப்போறெ...வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் பட்டுக்கோட்டை வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் ' மொபைல் செய்த்தான் மாப்லைங்க'அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமெ என்பதற்க்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.

ஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, அண்ணனோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.

5) மச்சான் வர்ராப்லெ , மாமா வர்ராக என திருச்சிக்கும் , சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப்போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை 'சென்ட்-ஆஃப்' செய்து விடாதீர்கள். [ போனவனுக்கு வரத்தெரியாதா?].

மேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனாம இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேர விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.
என்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல...ஆனால் பரீட்சைக்கு பக்கத்தில் பெரும் தவறு..

பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத்தேர்வுகள், அப்லிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.


ஓட்டப்பந்தயத்தில் ஓடத்துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை...ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.

நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

May Allah bless you for your Success

-- ZAKIR HUSSAIN

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைப்பு வைக்க நேரமில்லை - இப்போ பரீட்சை நேரமாக இருப்பதனாலே !

ஆக ! ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சரியானவர்களிடம் பெற்றிடுங்கள் ஆனால் தவறானவர்களை அங்கே நெருங்க விடாதீர்கள் !

அசத்தல் காக்கவின் ஆக்கம் மாணவர்களுக்கு மட்டுமல்ல இலக்கு வைத்து நகர்த்தும் யாவருக்கும் பொருந்தும்...

வெற்றியுடன் சாதிக்கவும் வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன பன்றது மாணவர்களுக்குத்தான் பரீட்சை நேரம் என்று அசந்திருக்க முடியவில்லை ஏன்னா நாம எடுத்த காரியம் அப்படி...

சற்று நேரத்திற்கு முன்னர் அதே தேடலில் இருக்கும்போது இப்படியும் வாசிக்க நேர்ந்தது ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையில்.

//'கறை நல்லது’ என்ற விளம்பர வாசகம்போல ஆக்கபூர்வமான சிந்தனையில், தேர்வுக்கால பயமான இந்த 'எக்ஸாம் ஃபீவரும்’ கூட நல்லதே!'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் வேலூர் மனநல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன். //

வாசித்து விட்டு அசத்தல் காக்காவின் Quoteஐம் வாசித்தேன்

"உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேரை அழித்துவிட்டு அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்."

Ahamed irshad said...

சிற‌ப்பான‌ கட்டுரை ஜாஹிர் காக்கா...

sabeer.abushahruk said...

கடந்துபோன வழிகேடுகளைப் பற்றி மட்டும் சொல்லிச்சொல்லியே நம்மை நாமே முடக்கிப் போடுவதை விட்டுவிட்டு, வெல்வதற்கான வழிகாட்டுதல்களை வரிசைப் படுத்தியிருக்கும் 'அசத்தல் காக்கா'(சொல்லிப்பார்க்க நல்லாத்தான் இருக்கு)வின் கட்டுரை நேரமறிந்து தரப்பட்ட நல்விருந்து. ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல்ஸ் சம்மந்தப்பட்ட எந்த சகோதரரையும் சாடவல்ல, தொடர்புடைய மாணவனுக்கு உணர்த்தமட்டுமே என்று கீழே சின்ன எழுத்தில் போட்டிருப்பதை வாசித்துவிடவும்.

தலைப்பு வைக்க நேரமில்லையா? ஏ ஐய்யா, கட்டுரை எழுத நேரமில்லை என்று சொல்லுமைய்யா. ஏனெனில், உன் எழுத்தின் ஒவ்வொரு கருத்து வீச்சும் தலைப்பாய் நிற்க தகுதியானவையே!

let's listen and implement when experience speaks.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜாகிர் காக்காவின் இக்கட்டுரை படிக்கும்போது,ஆசிரியரின் இலக்கணமாய் திகழும் ஹாஜி முஹம்மத் சாரின் ஞாபகம் எழுகிறது. .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

தங்களின் ஒவ்வொரு ஆக்கத்திலும் நகைச்சுவைகள் இருந்தாலும், உண்மையை சொல்லி நல்ல சிந்தனைகளை அடிக்கடி தூண்டுகிறீர்கள்.

MARK SHEET VISUALISATION மிக அருமை, நிச்சயம் பயனளிக்கும், புகைப்படத்தில் உள்ள சகோதரி ஜாஸ்மீன் அவர்களின் மார்க்குகளை எழுதிவைத்துக்கொள்ளலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத்தேர்வுகள், அப்லிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.//

மிக சரியான ஆலோசனை, பிள்ளைகளை பெற்றவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்துல்மாலிக் said...

நல்ல ஆக்கம், இந்த வருட பரீட்சை எழுதப்போகும் நம்மூம் அனைத்து சகோதர/சகோதரிக்கும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.//


இந்த கட்டுரையில் உள்ளது போல், அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பேராசிரியர் பரகத் அவர்கள் சொன்னது போல் நம் பிள்ளை எந்த குறிக்கோள்களும் இல்லாமல் இதான் இன்று ஒவ்வொரு பள்ளிகளிலும் படிக்கிறார்கள். பெத்தவங்களே நீங்களாவது அவர்களின் குறிக்கோளை நிர்ணையுங்களேன்... இந்த தேர்வு நேரத்திலாவது பெத்தவங்களே நீங்களாவது அவர்களின் குறிக்கோளை நிர்ணையுங்களேன்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும். லேனா தமிழ்வானன்
கட்டுரை ரொம்ப அருமை. அட சே மறந்துவிட்டேன். ஜாஹிர் காக்காவின் கட்டுரை
மிக அத்தியாவசமானது.மிகவும் அருமையாக் சிந்தித்து எழுதப்பட்ட அனுபவ
கட்டுரை. இதற்கு தலைப்பு குறிக்கோள் என்று வைக்க பரிந்துரைக்கலாம்னு
இருந்தேன் தாமத்தால் அவ்வாறு கோரமுடியவில்லை. இந்த கட்டுரையை
அப்பப்ப மாணவர்கள் ஓருமுறையேனுன் எடுத்து படித்து விட்டு பரிட்சைக்கு
தாயார் செய்தால் உந்துதலாக அமையும் என்பது திண்ணம்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மாணவர்களுக்கு நல்லா விழிப்புணர்வு கட்டுரை.இந்த கட்டுரையை அப்படியோ பிரிண்ட் எடுத்து பள்ளிக்கூட நோடீஸ் போர்டில் மாணவர்கள் பார்வைக்காகா வைக்கலாம் .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீது காக்கா, எங்கே போயிருந்தீங்க? சவுண்டே இல்லே..

நீங்க சொல்றது சரிடிஹான் காக்கா, கருணாநிதி காமராசர் பெயரை சொல்லியும் சொல்லாமலும் இருக்கும் கொடிப்பிடிக்கும் நம்மாளுக அனுமதிப்பார்களா?

நோட்டீஸ் அடித்து வெளியிடலாம்..

ZAKIR HUSSAIN said...

Tuan Haji சாகுல் சொன்ன விசயம் நானும் முயற்சிக்கிறேன்.

சகோதரர் அபு இப்றாஹிம் உஙகள் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி. உங்களுடன்
சமீபத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்.அதிராம்பட்டினத்து நலனில்
உங்களுடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் [ இன்ஷா அல்லாஹ்]

To Bro Thajudeen,
/உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.//

இந்த வார்தையை நான் எழுத காரணம் ஒருமுறை சவுதி வந்தபோது நம் நண்பர்கள்
குடும்ப சூழ்நிலை காரணத்தாலும் சொந்தமாகவே சரியாக படிக்காததாலும் அங்கு
பட்ட கஷ்டஙகளை நேரில் பார்த்து மனம் வேதனை அடைந்தேன்

மற்றும் சின்ன வார்த்தைகளானாலும் பெரிய அளவு உற்சாகம் தரும் சகோதரர்கள்

அப்துல் மாலிக், இர்ஷாத் , ஒருவனின் அடிமை யாவருக்கும் நன்றி.

சகோதரர் CROWN, லேனா தமிழ்வாணனின் எழுத்தை நானும் படிப்பதுதான்.

For Reference:

The visualisation, the technique is still taught in SYLVA MIND CONTROL, infact these kind of techniques are often taught in Islam. But unfortunately it was not known by all the teachers of islam.

We often pay the money for the teachings which we lost in earlier era.

அதிரை அபூபக்கர் said...

உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக்கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாரிடும்.//

சரியா சொன்னிங்க ஜாகிர் காக்கா..
---------------------

சரியான நேரத்தில். மாணவர்களுக்கு தேவையான்+அவசியமான பதிவு..

ZAKIR HUSSAIN said...

Thanx Bro Abu Bakar for your comments. seldom see you now a days ...busy?

Yasir said...

ஒரு தரமான ஆக்கத்திற்க்கு தாமதமாக கருத்திட்டதிற்க்கு வருந்துகிறேன்....எவ்வளவு பயன் உள்ள செய்திகள் அசத்தல் காக்காவின் அதிரடி நடையில்....இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல் இந்த செய்தியை ஒரு 10 பேருக்காவது எத்தி வைக்க வேண்டும்.வாழ்த்துக்கள் காக்கா

ZAKIR HUSSAIN said...

Thanx Bro Yasir. No need to worry for delay in posting comments. I do don't worry for my PC mother board is "gone". That's why my comments are in English since my lap top is working like steam engines of 70's

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//since my lap top is working like steam engines of 70's ///

அப்படின்னா ஹிப்பி முடி வைத்தங்க அங்கே தெரிவாங்களே !!! :)

Unknown said...

//ஓட்டப்பந்தயத்தில் ஓடத்துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை...ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.//
மிகவும் ஆழமான வரிகள்.நன்றி.

வளர்பிறை said...

மிகச்சரியான நேரத்தில் பதியப்பட்ட அருமையான பதிவு. நம் வருங்கால சந்ததிகளின் மேன்மைக்காக அக்கறையுடனும், கவலையுடனும் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் சகோ. ஜாகிர் அவர்களே! தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு