Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தாய்மார்களே உஷார் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2011 | ,

சமீபத்தில் மிகப் பிரபலமான ஒரு வாரப் பத்திரிக்கையில் “மம்மி வேண்டாம் டிவி போதும்” என்ற எச்சரிக்கை கட்டுரையைப் படித்ததும் சில விஷயங்களை அதிலிருந்து உள்வாங்கி அதோடு நமது வட்டார மொழியுடன் கோடிட்டும் காட்டிடத்தான் இதனை பதிகிறேன்.

''உம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி. பதாகைகள் முன் அமரவைத்துப் பழகும் ம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள்.

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், ஆட்டோ டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம்.

இவைகள்தான் இன்றைய நிலையில் நிஜம், இப்படியாக சர்வசாதரமாக நமது இல்லங்களில் நடந்தேறும் அன்றாட நிகழ்வுகளை எத்தனை பேர் கண்கானிக்கிறீர்கள் அல்லது வீட்டிலுள்ளவர்களிடம் கலந்து பேசிக் கொள்கிறீர்கள்?

இன்னொரு அதிர்ச்சி இந்த விஷயத்தை அப்படியே அமோதித்த மனோதத்துவ மருத்துவர் இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தங்களைத்தானே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரிஎன்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.

ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட்செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?

'உம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்கஎன்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான்.

நல்ல விஷயங்களை டிவியில் அல்லது கணினியில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தச் சம்வங்களைச் சொல்ல வேண்டும். நல்ல விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.

தொடர் தொலைக் காட்சிகள் கானும் பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. தொலைக் காட்சி பார்ப்பதைக் குறைத்துக் கொள்!என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காதுஎன்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'அம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரி!என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. 'தப்பு செய்தாலும், உம்மா மன்னித்துவிடுவாங்க!என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டி லும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!'' என்று அறிவுறுத்துகிறார்.

நம் குழந்தை நமது வளர்ப்பில்தான் நமக்கு நன்மை செய்யும் ஆக... ஒவ்வொரு தருனத்தையும் பயனுல்லதாக பயண்படுத்திக் கொள்ள முயலுங்கள் உங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள், இனிமேல் யாருடைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள் ? உங்களுடையது சந்தோஷம் என்றால் உங்கள் குழந்தைகளை உங்கள் வசப் படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் சந்தோஷம் என்றால் நீங்கள் மாறிக் கொண்டு அவர்களை வசப் படுத்திடுங்கள்.

சரி, இதுமட்டுமா இன்னும் இருக்கிறதே சொல்வதற்கு சமீபகாலமாக திடீரென்று சிறு குழந்தைகளின் பார்வை இழைப்பு, கோளாறு, மழலையிலிருந்தே முகக் கண்ணாடி ! இவைகள் ஏன் !? சிந்தீர்ப்பார்களா பெற்றோர்கள் ?

- அபுஇபுறாஹீம்

22 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாய்மார்களுக்கு நல்ல பலனுள்ள உஷார்படுத்தும் கட்டுரை.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

எத்தனை விளக்கமாக சொல்லித் தருகிறீர்கள்! இத்தகு பழக்கம் எங்களுக்கு இல்லை எனினும், அதாவது, பிள்ளைகளைத் தனியே தொலைக்காட்சி பார்க்க விடுவதில்லை எனினும் நாமும் சேர்ந்து பார்ப்பதை குறைக்க வேண்டும் என்பதே விருப்பம்.

இவனோடு சேர்ந்து பார்த்து பார்த்து டாம் அன்ட் ஜெர்ரியின் அத்தனை மூவ்மென்ட்ஸும் எனக்கு மனப்பாடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு மருத்துவ பரிசோதனையின்போது மகனைப் பற்றி மருத்துவர் கேட்ட பையன் சுறுசுறுப்பாக இருக்கானா என்ற கேள்விக்கு அதற்கென்ன வீட்டின சுவரெல்லாம் இவன் கிறுக்கல்கள்தான் அதோடு டாம் அன்ட் ஜெர்ரி இறந்துபோனால் இவன் மனசு ஒடிஞ்சு போய்டுவான் என்று சொன்னேன்.

அதற்கவர் "டாம் அன்ட் ஜெர்ரி' பார்க்க விரும்பவில்லையென்றால்தான் அப்னார்மல்" என்கிறார்.

ஒரு தீர்வு சொல்லுங்களேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல உஷார்படுத்தும் ஆக்கம்.

சபீர் காக்கா, சீரியலுக்கும் கார்ட்டூனுக்கும் டாம் & ஜெர்ரி சண்டை அன்றாடம் பல வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடைப்பெறுவதாக அன்மையில் ஒரு வலைப்பூவில் படித்த ஞாபகம். விசாரித்துப்பார்த்தால் அது உண்மை.

பிள்ளைகளே உஷார் என்று தாய்மாருகளுக்கு நிறைய புத்தி சொல்ல வேண்டியுள்ளது இன்றைய சீரழிக்கும் மெகா சீரியல் சினிமா சனியன்களால். ஜாஹிர் காக்கா மற்றும் கிரவுன் காக்கா ஒரு அதிரடி ஆக்கம் சீரழிக்கும் மெகா சீரியல் தொடர்பாக எழுதினால் பயனுல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ரொம்ப நாளா யாராச்சும் இந்த சீரழிக்கும் சீரியலுக்கு அடிமையாகியுள்ள நம் குல ஆண் பெண்களுக்கு எப்படியெல்லாம் நம்மை சீரழிக்கிறது என்று புரியும்படி எழுத மாட்டாங்களா என்ற வெறுப்பான ஏக்கம்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அபுஇபுறாஹீம் காக்கா அருமையான விழிப்புணர்வு,எச்சரிக்கை ஆக்கம்!

இஸ்லாம் குழந்தை வளர்விற்கு கொடுத்துள்ள முக்கியதுவம், வழிக்காட்டல் மிகவும் முக்கியமானது!

"ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)

குழந்தையை டிவிக்கு 'தந்து' கொடுத்துவிடுகிறார்கள்.அது ஆபாசம், வன்முறை,யூத,கிரித்துவ கலாச்சாரத்தையும் இன்னுமின்னும் ஆகாத செயல் அனைத்தையும் உள்வாங்கி செயல்படுத்துகிறது.பின் எப்படி அதனை முஸ்லிம் குழந்தை என்று சொல்லமுடியும்?

பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

குழந்தையை நல்லொழுக்கமுள்ளதாக வளர்தால்தான் பெற்றோருக்கும் நன்மை;பயன். இதைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன:
1. நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்கள்தான் பொருப்பு.விழிப்புடன் செயல்படவேண்டியது நமது கடமை முன்வருவோமா?

crown said...

Assalamualikum. plz check this :http://riyaf11.blogspot.com/2010/04/home.html

Unknown said...

//இன்றைய சீரழிக்கும் மெகா சீரியல் சினிமா சனியன்களால். ஜாஹிர் காக்கா மற்றும் கிரவுன் காக்கா ஒரு அதிரடி ஆக்கம் சீரழிக்கும் மெகா சீரியல் தொடர்பாக எழுதினால் பயனுல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.//
தாஜுதீன் காக்கா, அவங்க வரமுன்னாடி சில வரி ஆய்வு தகவல் சொல்லிட்டு ஓடிர்றேன்.

பெண்களின் கண்ணீர் ஆண்களின் பாலியல் ஆசையை குறைத்துவடும் என்று 'சயன்ஸ்' http://www.sciencemag.org/ பத்திரிக்கை ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. சினிமா,தொலைக்காட்சியில் வரும் சோக காட்சியினால் பெண்களுக்கு வரும் கண்ணீரிலிருந்து வரும் ஒருவித வேதியல் சமிக்ஞைகள், ஆண்களுக்கு பாலியல் ஆசையை தூண்டும் 'டெஸ்டோ ஸ்டாரொன்' ஹார்மோன் குறைந்ததாம்.
என்ன இன்னும் சீரியல் பார்த்து அழுனும் நினைக்கிறிங்களா? உங்க வாழ்கைக்கு நீங்களே வேட்டு வச்சிக்கிடாதிங்க!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// அதற்கவர் "டாம் அன்ட் ஜெர்ரி' பார்க்க விரும்பவில்லையென்றால்தான் அப்னார்மல்" என்கிறார்.//

கவிக் காக்கா: டாம் மடிக் கணினி கீபோர்டை தட்டினால் ஜெர்ரி அந்த கீயையே எடுத்து விடுகிறார்... இதுவும் அதன் பாதிப்பே (அனுபவம் பேசுகிறது)...

ZAKIR HUSSAIN said...

//ஜாஹிர் காக்கா மற்றும் கிரவுன் காக்கா ஒரு அதிரடி ஆக்கம் சீரழிக்கும் மெகா சீரியல் தொடர்பாக எழுதினால் பயனுல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.//

நான் எழுதி நமது பெண்களை T V சீரியல் பார்ப்பதை குறைத்து விட முடியும் என்று நம்பிக்கை எனக்கு இருந்தால் இந்நேரம் அமெரிக்க அதிபர் புஷ் இடம் பேசி ஈராக் போர் நடக்க விடாமல் தடுத்து இருப்பேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் எழுதி நமது பெண்களை T V சீரியல் பார்ப்பதை குறைத்து விட முடியும் என்று நம்பிக்கை எனக்கு இருந்தால் இந்நேரம் அமெரிக்க அதிபர் புஷ் இடம் பேசி ஈராக் போர் நடக்க விடாமல் தடுத்து இருப்பேன்.//

செய்திருந்தால் ஒருவேளை அப்படிக் கூட நடந்திருக்கலாம் ! :)

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம் கொழுத்திப்போட்டிருக்கும் விசயம் இப்போது பல பேர் வீட்டில் பிரச்சினையாக உள்ள விசயம் இதைப்படிப்பவர்கள் மறவாமல் தன் வீட்டுப்பெண்களிடம் மறவாமல் படித்து காண்பிக்கவும். [ தென்றல் , செல்லமே, திருமதி செல்வம், நாதஸ்வரம் ஸ்லாட் எல்லாம் முடிந்தபிறகு]

இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் இது பற்றி பேசினால் கீழ்கண்ட எச்சரிக்கையை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு வாயை திறக்கவும்.

1. இரவு சாப்படு ரெடியாகி விட்டதா என உறுதி செய்து கொண்டு பேசவும். எந்த நேரத்திலும் உங்கள் ரேசன் கட் ஆகலாம். [ அறிவுரை ரொம்ப சீப் பாக கிடைப்பதால் அதற்க்கு மறியாதை இல்லை]

2.தொடர்ந்து [ டெய்லி ] இது போன்ற அறிவுரைகளை பெண்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் நாளடைவில் கல்யாண விருந்தில் குறவனுக்கு தரும் முக்கியத்துவம்தான் உங்களுக்கு கிடைக்கும்.

3. டிஸ்கவரி சேனல் , நேசனல் ஜியாகிரபி போன்ற சேனல்கள் எல்லாம் நல்ல சேனல் தெரியுமா...அறிவு வளர்ச்சிக்கு நல்லது என்று தமிழ் சிரியலில் "தொடரும்' போடும்போது நீங்கள் திருவாய் மலர்ந்துவிடாதீர்கள். 'அறிவு இல்லாதவங்க பார்க்கும் சேனல் அதுதானா?' என டிஸ்கவரி சேனலுக்கே "டேக் லைன்" ஐ நமது பெண்கள் வழங்களாம்.

4.எமர்ஜென்ஸியாக என்ன விசயம் ஏற்பட்டாலும் 'தொடரும்' போடும்போது சொல்லாதீர்கள். அடுத்த சீன் உங்களை வார்டில் வைத்து எடுக்க வேண்டி வரும்.

அதிரை என்.ஷஃபாத் said...

/*ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்..*/

கோடியில் ஒரு வரி!!! நல்ல பயனுள்ள கட்டுரை!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜாஹிர் காக்கா: வாய்விட்டு சிரித்தாலும், இவைகள் யாவும் இன்றைய நிகழ்வு நிஜமே... Sequence மாறுதே... (மாதவி, சன் செய்திகள், நாதஸ்வரம், திருமதி செல்வம், தங்கம், தென்றல், செல்லமே.. இப்படின்னு சொல்லித்தான் மறுப்பு offlineல் வருது )

ZAKIR HUSSAIN said...

மன்னிக்கவும் ..சீக்வன்ஸ் அடுத்தமுறை எழுதும்போது எங்கள் வீட்டு பெண்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அப்துல்மாலிக் said...

//நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான்.//

இதற்கான காரணத்தை நானும் இப்போதான் உணரத்தொடங்கினேன். நல்ல ஆக்கம் சகோ

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சிரழிக்கும் சீரியல் சீக்குவன்ஸ் மேட்டர், எல்லா உண்மையும் இப்போதான் வெளிவருகிறது.

சீரியல்களுக்கு அடிமையாகியுள்ள நம் மக்களின் (ஆண், பெண்) நிறைய சீக்குவன்ஸை மாற்றியே ஆகனும்

sabeer.abushahruk said...

அனுபவம் பேசுகிறது: அத்தனை வியாதியும் இல்லையெனினும் தென்றலும் செல்லமேவும் 'எங்கூட்டு' வியாதி..

தென்றலின் டைட்டில் ஸாங்கில் சப்பாத்தி மாவோடு டிவி முன் இடம் பிடித்தால் செல்லமே முடியும்போது உருண்டைகள் தயாராகிவிடும். அன்றைய எபிசோடில் துளசிக்கோ செல்லமாவுக்கோ பிரச்சினை என்றால் (கோணத்தில் பிரதிபலிப்பாக) மாவு நல்லா அடிவாங்கி பிசையப்பட்டு சப்பாத்தி மெதுவா சூப்பரா இருக்கும். இல்லேனா உங்க வீட்டு சப்பாத்தி மாதிரி கடிக்கும்போது மொறுமொறுன்னு சப்தம் வரும் அல்லது ஒரு முனை பிடித்தால் மருமுனைவரை சப்பாத்தி வளையாம ஸ்ட்ரைட்டா நிக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எல்லா சகோதரர்களுக்கும் ஓர் கேள்வி. நான் ஏற்கனவே அதிரை வலைத்தளத்தில் கேட்ட கேள்வி தான் இதுவரை தெளிவான பதில் இல்லை.

யாராவது குறைந்தபட்சம் 3 நன்மைகள் சொல்லமுடியுமா டிவி சீரியல்கள் பார்ப்பதால்?

ZAKIR HUSSAIN said...

//யாராவது குறைந்தபட்சம் 3 நன்மைகள் சொல்லமுடியுமா டிவி சீரியல்கள் பார்ப்பதால்? //

1. அப்பவாவது நிம்மதியாக நமக்கு பிடித்தமான விசயங்களை எழுதலாம்.

2. வெங்காயம் வெட்டும் வேலைகளிலிருந்து விடுதலை.

3. கடையில் போய் மளிகை சாமான்கள் வாங்க சொல்லாத நேரம்

குறிப்பு; மேற்கண்ட நன்மைகள் நம் வீட்டு பெண்கள் சீரியல் பார்க்கும்போது நமக்கு கிடைக்கும் நன்மைகள்

sabeer.abushahruk said...

01) சீரியலின் எண்ணிக்கையை பொறுத்து அரை மணியோ ஒரு மணியோ பிக்கல் பிடுங்கள் இல்லாமல் ஜாகிரின் முதல் பாயின்டை காப்பி அடிக்கலாம்.

02) அவங்களுக்கு மிகப் பிடித்த கதாநாயகியைக் கொடுமைப் படுத்தும் மாமியாரைவிடவா நம்ம உம்மா மோசம் என்று சரியான சமயத்தில் கேட்டு நம் தாய்க்கு நல்லபெயர் வாங்கித்தரலாம்.

03)அப்பிரானியாக வந்து மகளிரிடம் நல்ல பேர் வாங்கும் நாயகனின் முகபாவம் கற்று மனைவியிடம் நல்ல பேர் வாங்கலாம்.

அதிரைநிலா said...

இருக்கிற வேதனையை தொலைக்க வழி தெரியல இதுல இலவச டிவி வேற என்னமோ நம் சமுதாயத்தை அல்லாதான் காப்பாத்தனும்

அதிரைBBC said...

தலைப்பு தாய்மார்களே உஷார்(ன்னு) ! மீண்டும் மீண்டும் வாசித்தேன் ஆனா தந்தைமார்கள் எந்த நேரத்தில் உஷாரா இருக்காங்கன்னு போட்டு உடைச்சுட்டாங்களே !!

தென்றல் அடிக்கும் நேரத்தில் விரும்பியவர்களுடன் ஃபோனில் பேசினால் யார் பேசியதுன்னு சொல்லத் தேவையில்லை (அப்படித்தானே தந்தைமார்களே) தென்றல் வேறொங்கோ வீசினாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை ! :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தாய்மார்களே உஷார்..

இங்கே கருத்திட்ட யாவரும் விழித்துக் கொண்டனர் ஆக அவர்கள் யாவருக்கும் இட்ட கருத்திற்கு நன்றி...

ரிமோட் எங்கிருக்கிறது / எங்கிருக்க வேண்டும் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருப்பதே சாட்சி..

இன்னும் Sஹமீத் காக்காவைக் காணோம் அவங்களுக்கு பிடித்த சீரியல்களின் பெயரை குறிப்பிட விட்டு விட்டோமோ என்ற ஐயம்... ஆதலால் எங்கிருந்தாலும் இங்கு வந்து உள்ளேன் ஐயா சொல்லிடவும் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு