Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சார் பதிவு அலுவலகம் இடம் மாற்றம்? 9

அதிரைநிருபர் | February 07, 2011 | , ,

தற்போது அதிரை ஆஸ்பத்திரி ரோட்டில் இயங்கி வருகிறது சார் பதிவாளர் அலுவலகம். இது ஊரின் மையப் பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு குறிப்பாக வயதானோர் மற்றும் பெண்களுக்கு மிக வசதியாக இருந்தது. நம் ஊரைப் பொறுத்தவரை காலங் காலமாக ரியல் எஸ்டேட் தொழில்வளமாக நடைபெற்று வரும் ஊராகும். இதனால் அடிக்கடி நம் மக்கள் போய் வர வசதியாக இருந்தது என்றால் மிகை அல்ல.

ஆனால் தற்போது வேறு இடம் மாறப் போவதாகவும்,நம் ஊரின் எந்தப் பகுதியிலும் சார் பதிவு அலுவலகம் அமைய இடம் கிடைக்கவில்லை என்றும் அதனால் அதிராம்பட்டினம் சார்பதிவு அலுவலகம் தாமரங்கோட்டை நோக்கி இடம் மாறப் போவதாகவும் செய்தி வந்துள்ளது.

இது உண்மை எனும் பட்சத்தில், ஒரு வில்லங்க சர்டிபிகடே என்றாலும் பதிவு என்றாலும் நாம் தாமரங்கோட்டை செல்ல வேண்டி வரும்.இதனால் பெரியவர்களுக்கும், பெண்களுக்கும் மிக கஷ்டமானதாக் இருக்கும் என்பதோடு நம் பெண்களுக்கு கண்ணியக் குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது .

அத்துடன்,நேர விரையம், பயண செலவு (ஆட்டோ) அலைக்கழிப்பு என்பது வேறு இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு - நம் ஊரில் இடம் வைத்துள்ளவர்கள் சார் பதிவு அலுவலக் கட்டிடம் அமைய வாடகைக்கு கொடுத்து உதவலாமே? இதன் மூலம் வருமானம் கிடைப்பதோடு நம் மக்களுக்கும் பேருதவி செய்தது போன்று ஆகும் அல்லவா?

இதற்கு நம் ஊரில் உள்ள இயக்கங்கள் (TMMK,TNTJ,SDPI,MUSLIM LEAGUE ETC...), சங்கங்கள் (SHAMSUL ISLAM,WEST STREET,BEACH STREET JAMAATH ETC...)சட்டாம்பிள்ளையாகவும்,பத்திர வரைவுகள் செய்து வரும் வக்கீல் முனாப், இஞ்சீனியர் சாகுல் போன்றவர்கள் ஒன்று கூடி ஆவன செய்ய வேண்டும்.

எத்தனை ஆயிரம் கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருப்பினும், அல்லாஹ்வுக்குக்காக இதற்கு நாம் ஒத்துழைப்போமே..

-- ஒருவனின் அடிமை

9 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு பதியப்பட்டுள்ள செய்தி தொடர்பாக அதிரையில் உள்ள தற்போதைய நிலவரத்தை அறிந்து யாராவது இங்கு தகவல் தரலாமே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊர் நலன் கொண்ட நல்ல பரிந்துரை... யாராவது கோடு போடுங்களேன் !

Yasir said...

இடம் பதிவு பண்ணும் ஆபிஸீக்கு இடம் இல்லையா ? என்ன கொடுமை ....கைவிட்டு போன பிறகு கை சேதப்படுவதற்க்கு பதில்...துரிதமாக முடிவெடுக்க வேண்டியது நமது கடமை

sabeer.abushahruk said...

no comments please!

(ஏனெனில், இப்படித்தான் நம் தபால் நிலையமும் தனலஷ்மி வங்கிக்கு அருகிலிருந்து மாற்றுமத சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குப் போக இருந்த காலத்தில் இப்படியொரு நந்நோக்கு வேண்டுகோளை நம்பி கல்லூரிக்கு எதிரில் கட்டிடம் கட்டி தபால் நிலையத்துக்கு இடம் கொடுத்தேன்.

அதன்பிறகு என்ன நடந்தது? முன்பைவிட பல மடங்கு(?) நந்நோக்கு கொண்ட எவர் எவரோ 'கல்லூரி வெகுதூரம்' என ஆய்ந்தறிந்து அங்கிருந்து மாற்றக்கோரி அரசுக்கு மனு அனுப்பிவிட்டார்கள். எனக்கு உள் கட்டமைப்பை மற்றி கடைகளாகவும் வீடாகவும் மாற்ற கொஞ்சம் நட்டம்.)

எனவே நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும் .

நான் நமதூர் மார்கெட் அருகே எனது நண்பருக்காக ஒரு பெரிய பில்டிங் கட்டினேன்
அது கட்டிக்கொண்டு இருக்கும்போது சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகி

நீங்கள் எங்கள் பில்டிங்கில் வாடகைக்கு வரும் படியும் மேலும் உங்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் வேண்டுமோ அதன் படி பில்டிங் அமைத்து தருவதாக கூறினேன்

அதற்கு அவர்கள் சொன்னார்கள் பெண்கள் அங்கு வந்து செல்வது சிரமம் நாங்கள் பைத்துல் மால் பில்டிங்கில் வாடகைக்கு செல்கின்றோம் என்று சொன்னார்கள்,

தாமரங் கோட்டையில் பைத்துல் மால் பில்டிங்கில் எங்கு உள்ளது என்பது தான் புரியவில்லை!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த மாதிரி தொந்தரவுகள் வருங்காலத்தில் இல்லாமல் இருப்பதற்கு தான் அரசு வேலைகளில் நம் மக்கள் அதிகம் இருக்க வேண்டும். இப்படியே போனால் பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்றால் தாமரங்கோட்டையில் தான் கட்ட வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

பொதுநலனை வைத்து சுயநலத்தை முறியடிக்க வேண்டும்.

Yasir said...

///தாமரங் கோட்டையில் பைத்துல் மால் பில்டிங்கில் எங்கு உள்ளது என்பது தான் புரியவில்லை!!//// ஹாஹாஹா சிரியஸான மேட்டர்லையும் நாங்க சிரிப்பை வர வைப்போம்ல

Meerashah Rafia said...

உங்கள் தூய்மையான ஆதங்கம் இன்ஷா அல்லாஹ் நல்லவிதமாக நிறைவேறட்டும்.
_____________________________________________________________________

ஊர் இசுலாமிய ஊர்தான்..
ஊரில் பணிபுரிபவர்கள் மட்டும்தான் மாற்று மதத்தினர்.


ஹும்ம்..
முறுக்கு விற்கும் கடையில் பருப்பு கேட்கிறதுபோல்தான் நம் சமுதாய நிலை..


புரியலையா? நம் ஈமானை காப்பாற்றிகொல்வதற்கு ஹிந்துக்கள்/கிருஸ்தவர்களிடம் (பெரிய பதவிகளில் இருப்பவர்கள்) உதவி கேட்கின்றோம்..
இப்படிப்பட்ட (பிறமத) தேவைக்கு நம்மில் எத்துனைபேருக்கு மனம் வரும்?அதே நிலைதான் அவர்கள் மனதிலும் இருக்கும். நம் மதத்திற்கு முக்கியத்துவம் கிடைக்காது, மதம் தாண்டி மனிதம் என்ற அடிப்படையில் ஒருவன் பிற மதத்தினற்கு முக்கியம் கொடுத்தாள் அது அத்தி பூத்தாற்போல்..இதில் நாம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதற்குத்தான் கல்வியில் நாம் முன்னேறி பல துறைகளில் நாம் தலை தூக்கி நம் சமுதாயத்தை பிறரிடம் கையேந்தாமல் நாம்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.

MSM(MR)
MEERASHAH RAFIA

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலையில் இப்பொழுது சூழ்நிலை உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை அதிகம் கொண்ட ஊர். பல செல்வந்தர்களை கொண்ட ஊர். பல சங்கங்களை கொண்ட ஊர். உலகம் முழுவதும் அதிரை சகோதரர்களை கொண்ட ஊர்.

அதிகமாக பெண்களின் பெயர்களில்தான் சொத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. சார்பதிவு அலுவலகம் இங்கிருக்கும்பொழுது துணைக்கு சிலரை அழைத்துக்கொண்டு போக வேண்டியுள்ளது. தாமரங்கோட்டைக்கு சென்று விட்டால் நமது வீட்டுப்பெண்கள்தான் சிரமமப்பட வேண்டும். பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். சீரியஸாக தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒட்டு மொத்த அதிரைவாசிகளுக்கு சிரமம் தரக்கூடியது. இதற்காக முயற்சி செய்பவர்களுக்கு வல்ல அல்லாஹ் நன்மையை தருவான். செல்வாக்கு உள்ளவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்????

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு