Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மகளுக்கொரு மனு 53

அதிரைநிருபர் | February 15, 2011 | ,

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!

வீடு முழுதும்
ஊடுருவினாய் - நீ
இல்லாத நேரத்திலும்
உன்
நினைவை விட்டுச் சென்றாய்!

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பகுத்தறிவு பெற்றாய்!

அலிஃப் பே தே உன்
அழகுவாய் கற்கயில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!

நீ
புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சி குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு மனிதனானேன்!

இவ்வாறு வளரும்
என் மகளே,
என்னிடம் ஒரு மனு உண்டு
உன்னிடம் தர...
எல்லா தந்தையர் சார்பாகவும்...

உலகக் கல்வியின்
உல்லாசம் தவிர்
மார்க்கக் கல்வியில்
வாழ்கையைப் படி!

புறத்து ஆணின்
பார்வையை தவிர் -அது
கழுத்துச் சுறுக்கின்
முடிச்சென உணர்!

தோழிகள் மத்தியில்
வாழ்வியல் விவாதி
திரைப்பட தொலைக்காட்சி
தூண்டல்கள் ஒழி!

திருமறை வேதம்
பலமுறை ஓது
நபிவழி பயின்று
நன்னெறி போற்று!

படிக்கும் காலத்தில்
பெற்றோர் சொல் கேள் -மண
முடிக்கும் காலத்தில்
கணவனைப் படி!

அன்னையாய் நீயும்
உன்னையே காணுகையில்
கற்றவை அனைத்தையும்
பாலோடு புகட்டு!

ஒழுக்கக் கோட்பாடு
கொண்டு
தாலாட்டு பாடு!
கதைப்பாட்டில்கூட
கண்ணியம் கற்பி

மனுவின் வேண்டுகோள்
மனதினில் கொள்
உன்னைப் பார்த்தே
உன் இளையவர் வளர்வர்
ஏனெனில்...

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணாவாய்!

- சபீர்

  Sabeer.abuShahruk

53 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முத்தான மகளுக்கு..

முதல் விண்ணப்பம்..

ஈன்ற பயன் கண்டிட..

என்றுமே இனியமகளுக்கு வைத்த வேண்டுகோள்...

அருமை மட்டுமல்ல... அறிவுரையின் அகம் கொண்ட கவி வரிகள் !

அதிரை ஆலிம் said...

மகளுக்கு அருமையான அறிவுரைகள்

Meerashah Rafia said...

போருக்கு சென்ற தந்தை
தன் மகளுக்காக
ஒளிவு,மறைவில் இருந்து
தான் ஒரு வீரன் என்பதையும் மெய் மறந்து
மென்மை படர்ந்து வருடிய
வீர வரிகளைப்போல் ஓர் உணர்வு..

சரி...கேக்குரேநேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு உண்மையில் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றதா?

MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சரி...கேக்குரேநேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு உண்மையில் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றதா?//

தம்பி MSM(mr): உணர்வுகளுக்கு உயிரோட்டமே மூத்த மகள் என்று இருப்பதனாலே !

Unknown said...

புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சி குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு மனிதனானேன்!
------------------------------------------------------------------
ஆஹா உண்மையோ உண்மை !
ஆழமாகா பதியபெற்ற
உணர்வுகள் ...........

அதிரை அபூபக்கர் said...

மகளுக்காக...கவிதையின் வடிவில் கருத்துக்கள்.- அருமை..

hajenakatheja said...

படிக்கும் காலத்தில்
பெற்றோர் சொல் கேள் -மண
முடிக்கும் காலத்தில்
கணவனைப் படி!

ஆஹா எனன.அழக்சான வரிகள்.ஸ்கூள்,விட்டு.வந்ததும் .இத்தொகுப்பு.முழுவதையும்.என்மகலுக்குபடித்துகாட்டனும்.என்றூ.நினைத்து.இருக்கிறேன்.இன்ஸாஅல்லஹ்

Yasir said...

ஆஹா ஒஹோ ..கவிக்காக்கா எப்படி மனதில் உள்ள உணர்வுகளை இப்படி வார்த்தையில் வடிக்க முடிகிறது..நான் அனுபவித்து கொண்டு இருக்கும் உணர்வுகளை உங்கள் கவிதை வாயிலாக படிக்கும் போது கிடைக்கும் சந்தோசம் அளவிட முடியாதது....//புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சி குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு மனிதனானேன்!///
என்ன ஒரு வலிமைமிக்க வரிகள்...
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது இதானோ....அருமையான ,அறிவான,அவசியமான அறிவுரை....மெல்லிய தமிழில்

sabeer.abushahruk said...

நன்றி:
அபு இபுறாஹீம்: கவிதையை விமரிசிக்க கவித்துவமான பின்னூட்டமே சிறப்பு என்று துவங்கியதற்கு.

அதிரை ஆலிம்: உள்வாங்கி சிலாகித்தமைக்கு.

MSM (MR):வார்த்தைகள் வருடியதை உணர்ந்தமைக்கு. (என் முதல் மகளுக்கென துவங்கி எல்லா தந்தை சார்பாகவும் தத்தமது மகளாருக்கு என முடித்தது)

Harmys: அர்த்தம் பொதிந்த "ஆஹா"வுக்கு

அதிரை அபுபக்கர்: வாசித்து கருத்திட்டமைக்கு.

Sis.katheeja: மகளுக்குப் படித்துக் காட்ட விளைந்தமைக்கு. கவிதையின் நோக்கமும் அதுதான்.

Yasir: //மெல்லிய தமிழில்//என்ற வர்ணனைக்காக

அ.நி.: சிறந்த புகைப்படத்தோடு பதிந்தமைக்கு.

(கிரவுன், ஜாகிர், அலாவுதீன், ஹமீது, தாஜுதீன் ஆகிய ஜாம்பவான்கள் எங்கே?)

Meerashah Rafia said...

அட போங்கப்பா, பொறாமையா இருக்கு. (கல்வி/அறிவில் பொராமைபடுவது தப்பில்லை)நானும் கவிதை எழுதலாம்னு இருக்கேன்.

என்னா....ஒரே ஒரு விசயம்தான் இடிக்கிது..
நமக்கு கல்யாணம் ஆகாததால மகலபத்தியோ,மனைவிய(வருங்காளையும் சேர்த்துதான்) பத்தியோ எழுதி எக்குத்தப்ப மாட்டிகுவோமோனு லைட்ட்டா ஒரு பயம்தான்..ஹ்ம்ம்..

MSM(MR)

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அசைவுகளை கவிதையாய் வடிக்கும் உங்கள் கவிதைக்கு தரமான பின்னுட்டம் இடவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம்.

உங்களின் அசைவுகளை
நாங்கள் அவதானித்துக்கொண்டுதான் உள்ளோம்

வாப்பாவிற்கு ஒரு கவிதை

உம்மாவிற்கு ஒரு
கவிதை

மனைவிக்கு ஒரு
கவிதை

மகனுக்கு ஒரு கவிதை

இப்போது மகளுக்கு ஒரு
கவிதை

அடுத்து சகோதரனுக்கு ஒரு கவிதை

நண்பனுக்கு (எங்களுக்கு ) ஒரு கவிதை
என்று
உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்

ZAKIR HUSSAIN said...

காலையிலிருந்து கொஞ்சம் பிசி. பிசியின் பரபரப்பில்..காபி கொட்டிய என் வெள்ளை கலர் முழுக்கைசட்டை, கையெல்லாம் ப்ரின்டர் இன்க் [ கேனன் ப்ரின்டெர் இன்க் வழியாது...காரித்துப்பும்] அதோடு நான் கார் ஒட்டும்போது மட்டும் எனக்கு முன்னால் கார் ஒட்டும் "L" டிரைவர்கள் இதையெல்லாம் மீறி கமென்ட்ஸ் எழுதுவது ஏறக்குறைய சவுதி விசாவுக்கு தாராவியில் தங்கியிருப்பதை விட கொடுமையானது]

மகள் இருக்கும் எல்லாதகப்பனுக்கும் உள்ள உணர்வை அழகிய தமிழில் வடித்தமைக்கு பாராட்டுக்கள்.

மகளின் பாசத்தைப்பற்றி நான் ஆச்சர்யப்பட்ட விசயத்தை எனது அடுத்த
" இன்று.......' ஆர்டிக்கிள் தொகுப்பில் எழுதுகிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா,

நேரமின்மையே கருத்திட தாமதம்.

ஜாஹிர் காக்கா சொன்னதையே நானும் சொல்லுகிறேன்.

மகள் இருக்கும் எல்லாதகப்பனுக்கும் உள்ள உணர்வை அழகிய தமிழில் வடித்தமைக்கு பாராட்டுக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///காலையிலிருந்து கொஞ்சம் பிசி. பிசியின் பரபரப்பில்..காபி கொட்டிய என் வெள்ளை கலர் முழுக்கைசட்டை, கையெல்லாம் ப்ரின்டர் இன்க் [ கேனன் ப்ரின்டெர் இன்க் வழியாது...காரித்துப்பும்] அதோடு நான் கார் ஒட்டும்போது மட்டும் எனக்கு முன்னால் கார் ஒட்டும் "L" டிரைவர்கள் இதையெல்லாம் மீறி கமென்ட்ஸ் எழுதுவது ஏறக்குறைய சவுதி விசாவுக்கு தாராவியில் தங்கியிருப்பதை விட கொடுமையானது]///

அசத்தல் அசத்தல்(தான்) காக்கா !

கடப்பாசியை தட்டில் ஊற்றி உறைய வைத்துவிட்டு கத்தியோட நிக்கிறாய்ங்க ஆஃபீஸிலே.......

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பெற்றவன் என்னிடம்
பகுத்தறிவு பெற்றாய்!//

அப்பனின் கடமைகளை ஒரே வரியில் சொல்லியது பிரமாதம்.

வாப்பா, உம்மா, மனைவி, மகன், மகள் என்று எழுதியது போல் சுற்றியுள்ள மற்ற கேரக்ரக்டர்களை பற்றியும் எழுதுங்கள் காக்கா, ஹமீது காக்காவுடன் சேர்ந்து நானும் கேட்கிறேன்.

Yasir said...

"[ கேனன் ப்ரின்டெர் இன்க் வழியாது...காரித்துப்பும்]" காக்கா இந்த அசத்தல் வரிகளை தற்செயலாக சந்திப்புக்கு வந்திருந்த மத்திய கிழக்கு நாடுகளின் கேனன் மேனஜரிடம் சொன்னேன்,அவர் சிரித்த சிரிப்பு இருக்கே.....ஆனாலும் பிராண்ட்டை விட்டு கொடுக்காமல்...உடனே மலேசியாவின் கேனன் சர்வீஸ் சென்டரை காண்டக்ட் செய்ய சொன்னார் ( அவருக்கு தெரியாது நீங்க இந்த பிரிண்டர் வாங்கி ஒரு மாமாங்கம் முடிய போகுது என்று )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(mr): நீங்கள் எழுதியது கூட கவி(தாகமா)த்தான் இருக்கிறது இப்படி(யும்) வாசித்தால் (விகட காக்காவுக்குத் தெரியும் எப்படி இழுத்தோம் அவர்களையும் கவி(தாகம்)தீர்க்க).

//
meerashah சொன்னது…

அட!
போங்கப்பா,
பொறாமையா இருக்கு..

நானும் கவிதை
எழுதலாம்னு இருக்கேன்.

என்னா....
ஒரு விசயம் - இடிக்கிறது..

கல்யாணம் வரை
காத்திருக்க வேண்டுமே
மகளை (வரும்)மனைவியை
பத்தியோ எழுதி
எக்குத்தப்ப ஆகிடுமோன்னு
ஒரு பயம்தான்..ஹ்ம்ம்..

MSM(MR)

Yasir said...

//நீங்கள் எழுதியது கூட கவி(தாகமா)த்தான் இருக்கிறது...//ஒரு முடிவோடுதான் இறங்கி இருக்கீங்க..சூப்பர் அபு இபுராஹிம் காக்கா...எப்ப எனக்கு கவி எழுத வகுப்பு எடுக்கிறீங்க...ஜெபல் அலியில் எந்த கேட்டுக்கு வரச்சொன்னாலும் வர்றேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எப்ப எனக்கு கவி எழுத வகுப்பு எடுக்கிறீங்க...ஜெபல் அலியில் எந்த கேட்டுக்கு வரச்சொன்னாலும் வர்றேன் //

தம்பி யாசிர்: கேட்டு(கிட்டுதான்)பக்கமா(தான்) வரனுமா !? சூப்பர் குடும்பம் சுற்றியிருக்கும்போது பிடிக்கின்ற வழி கேட்டு(தான்) வரனுமா என்னா !?

ZAKIR HUSSAIN said...

To Bro Yasir,

//( அவருக்கு தெரியாது நீங்க இந்த பிரிண்டர் வாங்கி ஒரு மாமாங்கம் முடிய போகுது என்று ) //

இல்லை நான் வைத்திருப்பது போன வருடம் வாங்கிய canon pixma 1980.இதை எந்த நாட்டு டவலையும் போட்டு தாண்ட நான் தயார்.
[ துண்டு எல்லாம் இங்கு கிடைக்காது, அப்படியே வாங்க வேண்டும் என்றால் 10 கி .மீ போக வேண்டும்]

//உடனே மலேசியாவின் கேனன் சர்வீஸ் சென்டரை காண்டக்ட் செய்ய சொன்னார்.//

அதற்க்கு பதிலாக சென்னை எம்ப்ளாய்மென்ட் எக்ஸேஞ்சில் வேலைக்கு பதிய சொல்லலாம்....ரெண்டும் ஒன்னுதாந் உருப்படியா எதுவும் ஆகாது

sabeer.abushahruk said...

MSM (MR): அபு இபுறாஹீம் சொல்றமாதிரில்லாம் கவிதை எழுதினா கோவக்கார பொண்ணுதான் கிடைக்கும் ஜாக்கிரதை.

நான் சொல்வதைக் கேளுங்க தம்பி:
தலைப்பை மட்டும் அபு இபுறாஹீமிடம் வாங்கிக்கொண்டு, கற்பனையை அப்துர்ரஹ்மானிடமும், சொல் வளத்தை கிரவுனிடமும், குறிப்புகளை குட்டிக் கிரவுனிடமும், நகைச்சுவையை ஜாகிரிடமும், நக்கலை ஹமீதிடமும், ஊக்கத்தை யாசிரிடமும், கோபத்தை முஜீபிடமும், வரம்பை அலாவுதீனிடமும், கான்செப்ட்டை என்னிடமும் வாங்கி உங்கள் ஸ்டைலில் visualize செஇது தாஜுதீனிடம் கொடுத்தால்... கவிதை ரெடி.

sabeer.abushahruk said...

//இல்லை நான் வைத்திருப்பது போன வருடம் வாங்கிய சனொன் பிக்ஷ்ம 1980.இதை எந்த நாட்டு டவலையும் போட்டு தாண்ட நான் தயார். //

யாசிர்,
துண்டோ டவலோ தாண்டினால் மட்டுமே நம்பவும். பார்ட்டி பழசுல லயிக்கிற ஆள்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் சொல்வதைக் கேளுங்க தம்பி:
தலைப்பை மட்டும் அபு இபுறாஹீமிடம் வாங்கிக்கொண்டு, கற்பனையை அப்துர்ரஹ்மானிடமும், சொல் வளத்தை கிரவுனிடமும், குறிப்புகளை குட்டிக் கிரவுனிடமும், நகைச்சுவையை ஜாகிரிடமும், நக்கலை ஹமீதிடமும், ஊக்கத்தை யாசிரிடமும், கோபத்தை முஜீபிடமும், வரம்பை அலாவுதீனிடமும், கான்செப்ட்டை என்னிடமும் வாங்கி உங்கள் ஸ்டைலில் visualize செஇது தாஜுதீனிடம் கொடுத்தால்... கவிதை ரெடி.//

கவிக் காக்கா உங்க(இந்த) approach எனக்கு புடிச்சிருக்கு (சொந்தமாக சொல்லியது எங்கிருந்தும் காப்பி பிரஸ் பேஸ்ட் போடவில்லை) ! அதுக்காக, வரிகளை வெட்டி வெட்டி கட்டிடம் கட்டிகாட்டியதற்காக இப்புடியா !???

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//இதை எந்த நாட்டு டவலையும் போட்டு தாண்ட நான் தயார்.//




அஸ்ஸலாமு அழைக்கும்

எந்த துண்டையும் போட்டு தாண்ட வேண்டாம்

எதாவது ஒரு துணியை போட்டு பிரிண்டரை மூடி வையுங்க

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//நான் சொல்வதைக் கேளுங்க தம்பி:
தலைப்பை மட்டும் அபு இபுறாஹீமிடம் வாங்கிக்கொண்டு, கற்பனையை அப்துர்ரஹ்மானிடமும், சொல் வளத்தை கிரவுனிடமும், குறிப்புகளை குட்டிக் கிரவுனிடமும், நகைச்சுவையை ஜாகிரிடமும், நக்கலை ஹமீதிடமும், ஊக்கத்தை யாசிரிடமும், கோபத்தை முஜீபிடமும், வரம்பை அலாவுதீனிடமும், கான்செப்ட்டை என்னிடமும் வாங்கி உங்கள் ஸ்டைலில் visualize செஇது தாஜுதீனிடம் கொடுத்தால்... கவிதை ரெடி.//


அஸ்ஸலாமு அழைக்கும்

மேற்கண்ட எல்லாம் சேர்ந்த கூட்டு கலவைதாங்க
நம்ம அதிரை
நிருபர்

sabeer.abushahruk said...

//எதாவது ஒரு துணியை போட்டு பிரிண்டரை மூடி வையுங்க//

ஹாஹ்ஹா ஹீஹீஹி ஹோஹோஹோ ஹய்யோ ஹய்யோ (ஜாயிரு மாட்டிகினியா)

Meerashah Rafia said...

ஆஹா..காக்காமார்கல்லாம் இப்ப comments conferencingல 'ஒரு கவி கடிப்பது எப்படி? என்று ஒரு short term(time) course ஆரம்பித்துவிட்டார்களே!!

நடக்கட்டும் நடக்கட்டும்.. இப்போதிற்கு உங்கள் வார்த்தைகளை வைத்து பழைய கவி பதிவுகளை reference பார்த்து ஒரு கவியோடு வருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்போதிற்கு உங்கள் வார்த்தைகளை வைத்து பழைய கவி பதிவுகளை reference பார்த்து ஒரு கவியோடு வருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

MSM(MR)//

காத்திருக்கோம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மேற்கண்ட எல்லாம் சேர்ந்த கூட்டு கலவைதாங்க
நம்ம அதிரை
நிருபர்///

சபைய நிறைக்க நீங்க வேனும்கிறது இதுக்குதான் காக்கா

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) --- விஸாவை புதுப்பிக்கும் வேலையாக அலைந்து கொண்டு இருப்பதால் அ.நி சரியாக (சில தினங்களாக --- மாதங்களாக) பார்க்க முடியவில்லை. (கடன் கட்டுரையையும் தொடர முடியவில்லை. இன்ஷாஅல்லாஹ் விரைவில் தொடர்வேன்).

ஒவ்வொரு தந்தையின் எதிர்பார்ப்பு, உள்ளணர்வு, பாசப்பிணைப்பு இப்படி அனைத்தையும் மகளுக்கொரு மனுவில் வடித்த அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள். நாம் நம் மகளிடம் எதிர்பார்க்கும் நல்ல பண்புகளை வல்ல அல்லாஹ் தர போதுமானவன்.

அதிரை நிருபருக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்ற பகுதியை அதிரை நிருபரில் ஆரம்பித்து சேவை செய்யலாம் என்பது எண்ணுடைய எண்ணம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் காக்கா:

//அதிரை நிருபருக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்ற பகுதியை அதிரை நிருபரில் ஆரம்பித்து சேவை செய்யலாம் என்பது எண்ணுடைய எண்ணம்.//

நல்ல ஆலோசனை.. அடிமேல் அடி எடுத்து வைக்க வேண்டியதையும் மனதில் ஏற்று கால அவகாசத்தோடு செய்யலாமே இன்ஷா அல்லாஹ்...

அதிரை முஜீப் said...

என் மூத்த மகள் இந்நேரம் என்னுடன் இருந்திருந்தால், ஆஸ்தானக்கவியின் அத்துணை வரிகளையும் அவளுக்கு அறிவுரையாய் கொடுத்திருப்பேன். ஆனால்....

கவிதையின் மூன்றாம் பாராவோடு ......முற்றுப்பெற்றது அவளின் வாழ்க்கை!. அது, உன் நினைவை விட்டுச் சென்றாய்!........

முதல் மகளே நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!

வீடு முழுதும்
ஊடுருவினாய் - நீ
இல்லாத நேரத்திலும்
உன் நினைவை விட்டுச் சென்றாய்!........

மீதமுள்ள வரிகளை ரசிக்க அவள் இல்லை இனி என்னுடன்.......

sabeer.abushahruk said...

முஜீப், மன்னியுங்கள்:

அத்தனை அவசரம்
ஏன் அவளுக்கு?
புத்தக
பக்கங்களுக்குள் மயிலிறகாய்
கண்ணாடிக்
குடுவைக்குள் மின்மினியாய்
தீப்பெட்டி
வீட்டுக்குள் பொன்வண்டாய்
பத்திரப்
படுத்திய நினைவுகளை
மீண்டும் கீறி விட்டதற்கு...

மன்னியுங்கள், முஜீப்!

abufahadhnaan said...

தோழிகள் மத்தியில்
வாழ்வியல் விவாதி
திரைப்பட தொலைக்காட்சி
தூண்டல்கள் ஒழி!
இந்த வரிகள் நமதுபெண்களுக்கு அவசியம் கற்பிக்கப்படவேண்டும்:நமதூரில் கேபிள் தொலைகாட்சி வந்த நேரம் எங்கள் தெருவில் நடந்த நகசுவையான உண்மையான சம்பவம் கணவன் மனைவி இருவரும் சண்டை இட்டபொழுது 9 மணி அந்த மனைவி சொன்னால் இப்ப ஏதும் சத்தம் போடாமல் இருங்கள் ராஜ் டிவில் கங்கா யமுனா நாடகம் போடா போறான் அப்புறமா நாம பேசிகிலம் என்று கணவன் கோபத்தை அடக்கி கொண்டு சிரித்துவிட்டார்

ZAKIR HUSSAIN said...

To Bro Thajudeen,




//:நமதூரில் கேபிள் தொலைகாட்சி வந்த நேரம் எங்கள் தெருவில் நடந்த நகசுவையான உண்மையான சம்பவம் கணவன் மனைவி இருவரும் சண்டை இட்டபொழுது 9 மணி அந்த மனைவி சொன்னால் இப்ப ஏதும் சத்தம் போடாமல் இருங்கள் ராஜ் டிவில் கங்கா யமுனா நாடகம் போடா போறான் அப்புறமா நாம பேசிகிலம் என்று கணவன் கோபத்தை அடக்கி கொண்டு சிரித்துவிட்டார் //

சீரியல்களினால் என்ன நன்மை என ஒரு முறை கேட்டிருந்தீர்கள் ..இதோ சகோதரர் அப்துர்ரஹ்மான் எழுதியிருக்கிறார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Bro Thajudeen,
// ராஜ் டிவில் கங்கா யமுனா நாடகம் போடா போறான் அப்புறமா நாம பேசிகிலம் என்று கணவன் கோபத்தை அடக்கி கொண்டு சிரித்துவிட்டார் //

சீரியல்களினால் என்ன நன்மை என ஒரு முறை கேட்டிருந்தீர்கள் ..இதோ சகோதரர் அப்துர்ரஹ்மான் எழுதியிருக்கிறார். ///

தென்றல் சுடுவதில்லை என்றும் சொல்கிறீர்களா ?..

ஒருவேலை கங்கா யமுனா ஆற்றில் ஓடுவதுதானே கண்களிலும் வரப்போகிறது என்று அந்தக் கணவர் அமைதியாகியிருக்கலாமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் முஜீப் : இங்கே கவிக் காக்கா சொன்னதுபோல்..

//வீட்டுக்குள் பொன்வண்டாய்
பத்திரப்
படுத்திய நினைவுகளை//

படைத்த வல்ல நாயன் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஏதும் நிகழ்வதில்லை !

கவிக் கக்காவோடு நானும் உங்களின் உணர்வுகளோடு கலக்கிறேன் !

Riyaz Ahamed said...

சலாம்
sabeer Fwd இப்படி வந்தது மெயில், இரு வரி படித்ததும் இது சபீரின் கவிதையாசே என்றது உள்மனம், மணம் பொய் சொல்லவில்லை.மகளுக்கு மனு (அறிவுரை) மானத்தை ரொம்ப நெகிழ வைத்தது.மகனுக்கும் ஒரு மனு முன்பே கிடைத்தது. இப்பொ மகளுக்கும் கிடைத்தது. இனி..?

sabeer.abushahruk said...

அழைத்ததும் வந்துவிட்ட ஜாம்பவான்களுக்கும், கருத்துச் சொன்ன ரியாஸ் அப்பாவுக்கும் (அப்பாக்கள்தான் மெல்ல நடந்து கடைசியில் வருவார்கள்), வலியைப் பகிர்ந்துகொண்ட முஜீபுக்கும்,கருத்திட நேரம் வாய்க்காவிட்டாலும் நிச்சயம் வாசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரவுனுக்கும் ஹிதாயத்துல்லாஹ்வுக்கும், அ.நி.வாசக வட்டத்திற்கும் நன்றி!

சபையை கலகலப்பாக்கிய என் ஜாகிருக்கும், ஹமீதுக்கும், அப்துர்ரஹ்மானுக்கும், மீராஷாவுக்கும், யாசிருக்கும், அபு இபுறாஹீமுக்கும், (எனக்கும்?) ஒரு சபாஷ்!!!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//அழைத்ததும் வந்துவிட்ட ஜாம்பவான்களுக்கும், கருத்துச் சொன்ன ரியாஸ் அப்பாவுக்கும் (அப்பாக்கள்தான் மெல்ல நடந்து கடைசியில் வருவார்கள்)//

அப்(பா)போ பேத்திக்களுக்கும் கவிதை உண்டு!!!

Riyaz Ahamed said...

சலாம் அய்யா.
பேத்திக்கும் மனு கிடைக்கும் பெரியண்ணன் மனது வைத்தால், இருந்தாலும் எதிர்பார்போமே?

abufahadhnaan said...

அடுத்த மனு யாருக்கு?
மகள் வீட்டு பேத்திக்க?
மகன் வீட்டு பேத்திக்க?

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.எல்லா புகழும் அல்லாஹுக்கே! ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் குறுக்கே அனை போட்டது போல் பணியின் குறுக்கீடுகள் கருத்து பதிய தாமதம்.மூத்த பெண் என்பது நினைத்தாளே இனிக்கும் விசயம்.எல்லா பெண்,ஆண் பிள்ளையும் கன்னலே! ஆயினும் மூத்த பெண்வாழ்வின் சன்னலில் சந்தோசமின்னல்.
எனக்கு முன்னே இரண்டு மூத்தசகோதரர்கள்,எனக்கு பின்னே மூன்று இளைய சகோதரர்கள்.சகோதரர்க் குலாம் சூழபிறந்தவர்கள் நாங்கள்.எங்கள் எல்லோருக்கும் மூத்ததாய்,என் தாயுக்கு அடுத்ததாய் வந்த என் மூத்தவள் .அவள் அரசி ஆளுகையில், அடுத்த தாய் அன்பில் கனிவில்(இது கவிதைக்கான சின்ன கருத்தல்ல- நிசம் ,எதார்தம்).இப்படி பெண்பிள்ளைக்கு ஏங்கிய ஏக்கங்கள் என் பெண் பிள்ளைகள்.வந்த வசந்தம்,மிகப்பெரிய சொந்தம். வந்ததும் சந்தோசத்தில் அசந்தோம்.அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!
-----------------------------------------------------------------
உன்னை அடைய வரம் பெற்றோம்,பின் உன்னை பெற்றோம். நீ வாழ்வில் வாரிசுகளின் "முதல்"உன்னால் சந்தோசம் கொள்ளையோ கொள்ளை அன்பு செல்வம் நீ. என்றும் முதல். சும்மா கிடந்தவனை வா வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வாப்பா என தோழ(ழி)மையோடு அழைத்தவள்.எங்களுக்காய் உதித்தவள்.

crown said...

வீடு முழுதும்
ஊடுருவினாய் - நீ
இல்லாத நேரத்திலும்
உன்
நினைவை விட்டுச் சென்றாய்!
------------------------------------
நீ இல்லாத பொழுது! பொல்லாத பொழுது. நேரம் போகத பொழுது!. இருந்தாலும் நீ இல்லாத நேரத்திலும் உன்னை அழுத்தமாய் பதிந்துவிட்டு சென்றிருப்பாய்.வெற்றிடத்திலும் உன் நிழல்கள் ஓடி விளையாடுவதை பாச கண்ணாடி வழி பார்த்து மகிழ்வோம்.

crown said...

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பகுத்தறிவு பெற்றாய்!

அலிஃப் பே தே உன்
அழகுவாய் கற்கயில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!

நீ
புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சி குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு மனிதனானேன்!
-------------------------------------------------------------------
நீ கற்ற கல்வி,பெற்ற ஞானம்,செய்த குறும்பு,சின்ன சின்ன தவறு.இப்படி எல்லாம் பார்த்து பூரித்து போன எங்கள் மனது.உன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் தேடி,தேடி மகிழ்ந்தது. உனக்காக என்னை உருமாற்றிகொண்டேன். உன் சந்தோச உலகத்தில்,சிலனேரம் நான் ,யானை,பூனை,கரடியாக கூட மாறி இருக்கிறேன். சில நேரம் பபூனாக ,காமெடியனாக எல்லாம் உன் சந்தோசத்திற்கே!

crown said...

அருமை மகளே!இப்படி உனக்காக வாழ்ந்த, வாழும் நாங்கள் வேண்டுவது சிலதே! இதை நீயும் நன்கு கடை பிடி,உன் உடன் பிறந்தவர்களும் கடைபிடிக்கவழி பிடி. கோரிக்கைகள் உங்கள் மாமா சபீர் அவர்கள் அதிரை நிருபரில் கவிதை வடிவில் சொன்னதை கடை பிடியுங்கள். எங்கள் வாழ்வில் சந்தோசம் ஏற்றுங்கள் எங்கள் இறப்பிற்கு பின்னும் நல்வழி நடந்து நாயன் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று மஹ்சரில் வெற்றி கான அல்லாஹ்விடம் வேண்டிகொள்கிறேன் ஆமீன்.யாரப்பல் ஆலமீன்.எல்லா பிள்ளைகளூம் பிள்ளையின் வழிதோன்றல்களூம் சுவன பதி அடைய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

Mohamed Meera said...

ஒவ்வொறு தந்தையும் -தன் மகளுக்கு சொல்ல நினைப்பதை
ஒரு அழகிய கவிதை நடையில் வடித்து தந்த சபீர் காக்கவிற்கு நன்றி

சபீர்காக்காவின் கவிதை ஒன்று (உன்னப்பனின் விண்ணப்பம் )
'அமீரக தமிழ் மன்றத்தின்' 11 வது ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ளது

sabeer.abushahruk said...

தகவலுக்கு மிக்க நன்றி தம்பி மீரா! நானும் பார்த்தேன்! என்னை தூண்டிய என் ஜாகிரையும் ஊக்குவித்த அதிரை நிருபர் உரிமையாளர்களையும் கிரவுன் யாசிர் அபு இபுறாஹீம் தாஜுதீன் ஹமீது அப்துர்ரஹ்மான் ரியாஸ் ஹிதாயத்துல்லாஹ் முஜீப் மீராஷா உன்னைப்போல் ஒருவன் நெய்னா அபு பக்கர் அதிரை ஆலிம் இர்ஷாத் ஜலீல் உள்ளிட்ட சகோதரர்களையும் இன்னேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன்!

sabeer.abushahruk said...

கவிதை புனைவில் மார்க்க விஷயங்களில் தடுமறாமல் வழிகாட்டிய அலாவுதீனுக்கும், எழுத்து மற்றும் இலக்கண பிழையின்றி எழுத ஊக்கப்படுத்திய அஹ்மது காக்கா மற்றும் ஜமீல் ஆசானுக்கும் என் தமிழ் அங்கீகரிக்கப்பட்டதில் பங்குண்டு! நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா உங்கள் ஆக்கம் "உன்னப்பனின் விண்ணப்பம்" நம் அதிரைநிருபரில் பதிவான கவிதை 'அமீரக தமிழ் மன்றத்தின்' 11 வது ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ளது என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

உங்களை ஊக்கப்படுத்தியவர்களை ஞாபகப்படுத்தி நன்றி கூறியிருக்கிறீர்கள்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கவிக் காக்கா நான் ரெம்ப லேட்...

புரட்சி தலைவர் இமாம் ஆயதுல்லாஹ் கொமைனி (ரஹ்) அவர்கள் சைத்தான் ஷாவை விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக மாற்றியதும் "நாட்டை மேம்படுத்த உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது...?" என்று சர்வதேச ஊடகங்கள் இமாம் அவர்களிடம் கேட்டது.

இமாம் அவர்கள் சொன்னார்கள், "தொழில் சாலைகளை கட்டுவோம், தார் சாலைகளை அமைப்போம்,மாட மாளிகை எழுப்புவோம் என்பதல்ல எங்கள் திட்டம்.

பொண்கள்தான் சமுதாயத்தின் சொத்து. அவர்களை ஈமானிய பலமூட்டி மேம்படுத்துவோம். அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பாலோடு ஈமானையும் புகட்டுவர்.அப்படி வளரும் குழந்தை இந்த இஸ்லாமிய குடியரசையும் இந்த நாட்டையும் இஸ்லாமிய வழியில் மேம்படுத்தும்" என்றார்கள்.

சொன்னது போலவே செய்தார்கள். இன்று அவர்கள் நம்பியதுபோலவே நடக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.

கவிக் காக்கா உங்களின் "மகளுக்கொரு மனு" அப்படியொரு சிறந்த சிந்தையின் வெளிப்பாடு.

இமாம் அவர்கள் கவிப் பாடியிருந்தால் இப்படிதான் பாடியிருப்பார்களோ...
கவிக் காக்காவின் கவிதைகளுக்கு இது மகுடம் என்பதில் சந்தேகமில்லை.
நன்றிகள் காக்கா...நல்ல கவி தந்தற்கும் இமாமை நியாபகமூட்டியதற்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தக் கவிதைக்கு முன்னுரை எழுத வேண்டிய தம்பி (ஹிதாயத்துல்லாஹ்).. அருமையான பதவுரை தந்திருக்கிறாய் ! உன் வருகை என்றுமே வரலாற்றில் ஓர் ஏடு என்ற அன்றைய இலங்கை வானொலியின் இரவு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு