"வரூ...ம், ஆனா வராது" என்று எங்கோ கேட்ட நினைவு வருகின்றதா? அது போன்றதில்லை இது!
சான்றோர் வாயிலிருந்து பொய்யே வருவதில்லை. இந்த உண்மை, அவர்களின் சாதாரணப் பேச்சுகளிலும் வெளிப்பட்டிருப்பதை நாம் கண்டும் கேட்டும் உள்ளோம்.
"உங்கள் பிள்ளைகளுக்குப் பொய்யுரைத்து வாக்களிக்காதீர்கள்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள் அல்லவா? அதனால், நம் முன்னோரும் விளையாட்டுக்குக்கூட, தம் பிள்ளைகளிடம் பொய்யுரைத்து, அவர்களை நெறிப்படுத்தியதில்லை.
நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, எங்களை உறங்க வைக்க எம் தந்தையார் அச்சுறுத்தும் தோரணையில், "வெளியிலே தந்தலை சொமந்தான் நிக்கிறானாம்; தூங்குங்கோ!" என்பார்களாம். சில வேளைகளில், "கொல்லையிலே தென்னை நிக்கிதாம்; பெசாமெத் தூங்குங்கோ!" என்றும் சொல்வார்களாம். அச்சத்தில் உறைந்து உறங்கிப் போய்விடுவோமாம்.
மேற்காணும் சொற்களின் பொருள் தெரிகின்றதா? 'தன் தலை சுமந்தான்' – அதாவது, மனிதன். யாரோ ஒரு மனிதன் அல்லது மனுஷன் என்று பயம் காட்டினால் பிள்ளைகள் தூங்குமா? அதற்காகத்தான் இந்தத் தந்திரோபாயம். 'கொல்லையில் தென்னை மரம்' நிற்பது ஒரு புதினமா? பயங்கரமா? இல்லை. ஆனால், இந்த உண்மையை ஓர் ஆச்சுறுத்தல் போல் காட்டித் தூங்க வைக்கும் தந்திரம்தான் அது.
இன்றும்கூட நமதூரில் துடுக்குப் பிள்ளைகளை அடக்கி வைக்க, அவர்களைத் திட்டுவது போன்று வாழ்த்துவதை நம் முதியோர்கள் ஆத்திரத்துடன், "அட நாசமத்துப் போவா!" என்று கூறுவதைக் கேட்க முடியும். 'நாசமாய்ப் போ' என்பதற்கும், 'நாசம் அற்றுப் போ' என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்தானே.
ஆங்கிலத்தில், 'Not without' என்பது எதிர்மறை போன்று தோன்றும்; ஆனால், இது negative அன்று; positiveதான் என்பதை நாமறிவோம். இந்த முறையைத்தான் நம் முன்னோர் கடைப்பிடித்தனர். அந்தப் பாரம்பரியம் போற்றிப் பாராட்டத் தக்கது; பாதுகாக்கத் தக்கது.
தொட்டு வைத்தேன். தொடருங்கள் பின்னூட்டக்காரர்களே!
-- அதிரை அஹ்மது
14 Responses So Far:
அன்பின் மாமா, இது புதுத்தகவல் எனக்கு "நாசம் அற்றுப் போ" வைத்தான் இப்படி "நாசமாபோ"ன்னு மருவி வாழ்த்து வதற்குபதில் இன்றைய வழக்கில் திட்டுகிறார்களோ !?
/// இன்றும்கூட நமதூரில் துடுக்குப் பிள்ளைகளை அடக்கி வைக்க, அவர்களைத் திட்டுவது போன்று வாழ்த்துவதை நம் முதியோர்கள் ஆத்திரத்துடன், "அட நாசமத்துப் போவா!" என்று கூறுவதைக் கேட்க முடியும். 'நாசமாய்ப் போ' என்பதற்கும், 'நாசம் அற்றுப் போ' என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்தானே. //
எனது மகனிடம் அவனைத் தூங்க வைக்க இப்படித்தான் குக்கர் விசில் சத்தம்காட்டி பயம் காட்டினேன் அது எங்கிருந்து வருகிறது என்று தெரிந்ததும் இந்த தடவை அவன் என்னிடம் சொன்னது "போதும் வாப்பா வயைப் பொத்துங்க" சத்தம் எங்கிருந்து வருகிறதை கவனித்து விட்டதால்.
என் 2 வயது கடைசி மகள்..எங்கள் வீட்டின் கீழே இருக்கும் டெய்லர் கடையின் ஷட்டர் இரவு 10 மணிக்கு முடும் சத்ததை கேட்டததும் பெட்டுக்கு ஒடிச்சென்று உறங்கி விடுகிறாள்..3 மாதமாக இந்த கூத்து நடக்கிறது..என்று உண்மை தெரிந்து எங்கள் உறக்கத்தை கலைக்க போகிறாள் என்று தெரியல..அகமது காக்கா...நன்றாக தொடங்கி வைத்து இருக்கிறீகள்...எங்கள் உம்மா எங்களை சிறு வயதில் குறும்பு செய்தால் திட்டும் போது “ கலுச்சல்ல போவாம இருப்பா” என்று பாசமாக திட்டுவார்கள்
இப்போது எந்த புள்ளையையும் பயங்காட்ட தேவையே இல்லை.. நம்மள பயங்காட்டாம இருந்தாச் சரி..
நீங்கள் மேற்கோள் காட்டிய விதம் அருமை.. பாஸிட்டிவ் போஸ்ட் :)
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் சொல்லும் விதம் என்றுமே வித்யாசம் தான்.
//"கொல்லையிலே தென்னை நிக்கிதாம்; பெசாமெத் தூங்குங்கோ!" //
கேட்பதற்கு புதியதாக இருந்தாலும், ரசிக்கும்படி உள்ளது.
இன்றைய காலத்து பெண்கள் டிவீ சீரியல் கொடூர வில்லன்களை காட்டி பிள்ளைகளை பயம் காட்டுகிறார்கள்.
நல்ல கதைகள் சொல்லி குழைந்தைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் இன்று குறைவு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து.
நம்ம பய எதுக்கும் பயப்பட மாட்டேங்கிறான். தூங்க வைக்க அவங்கம்மா டைனோஸர் கதை சொல்லியே தீறனும். அவங்கம்மா சொல்கிற கதைகளில் டைனோஸர் படும் கேவலத்தை அவைகள் அறிந்தால் பிறகு கார்ட்டூனில்கூட நடிக்க ஒத்துக்கொள்ளாதுக.
அதுசரி, யாசிரின் பின்னூட்டத்தில் ஒரு பொருட்குற்றம் இருக்கிறது:
//என் 2 வயது கடைசி மகள்..//
2வயது சரி: கடைசி ??? யாரைக்கேட்டு கடைசி என்றீர்கள்?
///2வயது சரி: கடைசி ??? யாரைக்கேட்டு கடைசி என்றீர்கள்?// ஹாஹாஹா... ஆமா காக்கா...எழுத்தில் பிழை வந்து விட்டது
Yasir சொன்னது…
///2வயது சரி: கடைசி ??? யாரைக்கேட்டு கடைசி என்றீர்கள்?// ஹாஹாஹா... ஆமா காக்கா...எழுத்தில் பிழை வந்து விட்டது .
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .யாசிர் நலமா? எழுத்தில் பிழையா? என்னியதில் பிழையா
சகோதாரர் தாஜுதீன் சொல்வது போல கொஞ்சம் மாற்றி! தொடர்ந்து முயற்சியில்
இருங்கள் இன்சா அல்லாஹ் 3 ஆகட்டும்.(தாஜுதீன் சொல்வது தொடர்ந்து தொடர்
பில் இருங்கள். தொடர்பில் இருந்தால் தான் எல்லாம் நலம்.ஹஹஹ்ஹஹ்)
sabeer.abushahruk சொன்னது…
நம்ம பய எதுக்கும் பயப்பட மாட்டேங்கிறான். தூங்க வைக்க அவங்கம்மா டைனோஸர் கதை சொல்லியே தீறனும். அவங்கம்மா சொல்கிற கதைகளில் டைனோஸர் படும் கேவலத்தை அவைகள் அறிந்தால் பிறகு கார்ட்டூனில்கூட நடிக்க ஒத்துக்கொள்ளாதுக.
-----------------------------------------------------------------------அஸ்ஸலாமுஅலைகும் காக்கா! நலமா? நான் முன்பு எழுதிய கவிதையை
இங்கே பதிகிறேன் படித்து விட்டு கருத்து சொல்லவும்.
-------------------------
பாட்டியும் அவள் சொன்ன கதைகளும்.
-------------------------------------
நேற்று நண்பர்களுடன் குசாலம் படம் பார்த்தேன் !
கதை? ஆ... ஊ... சூப்பர்! யென்றனர்...
பரவாயில்லை ரகமே!.
சென்ற மாதம் தசாஅவதாரம் கதையில்லை நல்ல கலை நேர்த்தி!
தி டார்க் நைட் ஆங்கிலப்படம்-பிரம்மாண்ட பொழுது போக்கு!
ஹாரிப்பாட்டர் நம்ப முடியாத சாகாச சித்திரம்.
பல மொழிப்படம் ,பல நாட்டுப்படம் -
பார்த்ததும்,படித்ததும்,கதை கேட்டதும்...
இன்னும் என் ஜீவனில் ஓடிக்கொண்டிருக்கும்...
அதீத கற்பனை யற்ற !திரை வடிவம்,எழுத்துவடிவம் பெறாத..
காலம் கடந்தும்,கண் கொட்ட இரவில் விழித்திருக்கச் செய்ததும்!
என்னை பல நேரம் தாலாட்டுக்கு பதில் கேட்டுக்கொண்டே தூங்க வைத்ததும்!
நான் என்னுள் திருப்பி,திருப்பி அசைப்போட்ட....
பாட்டி சொன்னக் கதைகளே!!!
என்றும் என்னை கவர்கிறது.
பாவம் இக்கால பிள்ளைகள் பாட்டி கதைகளும் இல்லை,
கதை சொல்லக்கூடிய பாட்டிகளும் வீட்டில் இல்லை!
எல்லாப்பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்!.
----(crown)தபால் காரன்.
அஹ்மது சாச்சாவின் ஆக்கம் எப்போதுமே அசத்தல்; தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைப்பது அவர்களின் கலை. நமக்குமே அதுவும் ஒரு பாடமாக அமைகிறது, எழுதவும் வாழவும்.
“ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்” என்று மூத்தோர் சொல்வார்கள். சொற்களின் பொருள் தெரிந்து அதன் விளைவுகள் அறிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு யாசகரிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? இதுதான் நமது உயர்ந்த பண்பாட்டு.
ஆனாலும் இன்று நல்ல விஷயங்களை நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் இருப்பது கண்கூடு.
“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, இதுபோன்ற வசைமொழிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் காணலாம். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.
ஒருகாலத்தில் “டயேரியா” என்ற ஒரு கொடுமையான வியாதி பரவி தொடர்பேதி வந்து உயிரைக் குடித்தது. அவ்வியாதி வந்து மாய்ந்துப்போ என்ற அர்த்தத்தில் அமையப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த “களிச்சல்லே போவா” என்ற வசைமொழி. இன்னும் ஒரு படி மேல் சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்தில் உடனடியாக ஒரு வயிற்றுப்போக்கிலே நீ செத்து மடி என்ற பொருள் பதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.
கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் இதைத்தான் குறிக்கும்.
Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.
மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் சென்று மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.
மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்லுவதும் இக்கொடிய நோய் தாக்கி அவலட்சணமடைந்து சாவாயாக என்ற பொருள்தான்.
இப்படியாக நாம் புழங்கும் சொற்களில் இரண்டும் கலந்தே இருக்கிறது.
நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவது இதனால்தான்.எனவே ஒவ்வொரு சொற்களையும் மிக எச்சரிக்கையுடன் பயன் படுத்துங்கள்.
(எல்லா வார்த்தைகளும் முஸ்லிம்களிடம் மட்டுமே உள்ளது அதிலும் கடலோரம் வாழும் முஸ்லிம்களிடம் தான் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.இந்த சொற்களை மாசற்ற தமிழ் சொற்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.) தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது.
///அஸ்ஸலாமு அலைக்கும் .யாசிர் நலமா? எழுத்தில் பிழையா? என்னியதில் பிழையா/// வ அலைக்க முஸ்ஸலாம் பல்மொழி வித்துவானே,இன்ஸ்டண்ட் கவிஞனே....நலம் ..தாங்கள் நலமா...யாரு வச்ச கண்ணுண்டு தெரியல உங்க கூட இப்ப சாட் பண்ண முடியல...கூடிய விரைவில் உங்கள் கூட பேசும் பாக்கியம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்...தொடர்ந்து முயற்ச்சி செய்வோம்...குழந்தைக்கு அல்ல..உங்களிடம் பேசுவதற்க்கு
சகோ அதிரை போஸ்ட....நம் மக்கள் பேசும் வசை வார்த்தைகளுக்கு பிண்னணியுல் இவ்வளவு அடங்கி இருக்கா ? படிக்கும் போதேகுலை நடுங்குகிறது நாம் இதை ஒழிக்க முயற்ச்சிக்க வேண்டும்...கற்றோர் எல்லாம் இதற்க்கு உதவிட வேண்டும்
//Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.//
This will not happen [mostly] due to natural cause.
தம்பி ஹிதாயத் : உன்னிடம் கற்க நிறைய இருக்கிறது ஆகவே தொடர்ந்திடு உன் தேடலோடு எங்களுக்கும் தந்திடு என்றுமே...
அசத்தல் காக்காவின் மருத்துவக் குறிப்பும் அவ்வப்போது !
ஏன் என்கிட்டே சொல்லுங்களேன் கவிக் காக்கா அந்த டைனசர் கதையை நான் வரைந்து தருகிறேன் :)
கிரவுனின் கதைக் கவிதை, இதுவரை நம் சமுதாயத்தை தொட்டிடவில்லை.. முதியோர் இல்லங்களை உறைவிடமாக்கும் பிள்ளைகள் குறைவே / இல்லவேயில்லைன்னு சொல்ல மனமும் இல்லை !
தம்பி கிரவுன்,
நல்ல சிந்தனை - வழக்கம்போல்!
முதியோரே
இல்லாத இல்லங்கள்தான்
பாவப்பட்டவை... !
Post a Comment