இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு என்ற தலைப்பைப் பார்த்ததும் எல்லோரும் ஆவலுடன் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா. ஆம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் அபிராமம் நத்தம் என்ற ஊரில் 19.02.2011 அன்று மாபெரும் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் டாக்டர் அபீதீன் அவர்கள் கலந்துக்கொண்டு அறிமுகமில்லாத அற்புத கல்விகள் என்ற தலைப்பில் வந்திருந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கு எளிதில் புரியும்படி மிக அருமையான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி எல்லோருக்கும் பயன்படும்படியாக இருந்தது என்ற செய்தி நம் அதிரைநிருபர் வலைப்பூவுக்கு வந்தும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமிராமம் நத்தம் கல்வி அரகட்டளையில் (ANET) உள்ள அனைத்து சகோதரர்கள் அனைவரும் நிச்சயம் பராட்டப்படவேண்டியவர்கள். குறிப்பாக சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு அளித்த அனைத்து சகோதரர்களின் கடின முயற்சியால் இந்த முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே வெற்றியுடன் முடிவுற்றது. இறைவனுக்கே எல்லா புகழும்.சரி ஏன் இந்த செய்தியை  அதிரைநிருபரில் பதியவேண்டும்? எல்லா ஊர்களிலும் தான் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறுகிறதே என்று எல்லோரும் கேட்கலாம்,  ஆனால் காரணம் உள்ளது.

சென்ற மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில்  நம்மூர் அதிரைப்பட்டினத்தில் சமூக அக்கறையுள்ளவர்களின் முயற்சி மற்றும் உதவிகளுடன் கல்வி விழிப்புணர்வு மாநாடு மிகச்சிறப்பாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது, இந்த மாநாட்டு நேரலையை உலகெங்கும் உள்ள சகோதரர்கள் காணும்படியும் செய்யப்பட்டது. மாநாடு முடிந்தவுடம் சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் அதிரைநிருபர் வலைப்பூவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள், அதிரையில் நடைப்பெற்ற மாநாடை பாராட்டிதோடு அல்லாமல், எப்படி இது போன்ற மாநாடு நடத்துவது, நேரலை எப்படி இவ்வளவு பிரமாதமாக செய்தோம் என்றொல்லாம் கேட்டு எழுதியிருந்தார்கள். நாம் அவர்களுக்கும் முடிந்தவரை நாம் செய்தவைகளைப் பற்றி மின்னஞ்சல் மூலம் பதில் அளித்தோம், நேரலை செய்வது தொடர்பாக சகோதரர் மொய்னுதீன் அவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தோம்.

அபிராமம் நத்தம் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு நிறைவுற்றவுடன், சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களிடமிருந்து நமக்கு மீண்டும் ஒரு மடல் வந்தது, இரண்டு வருடங்களாக மாநாடு நடத்த திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் போய்விட்டது, அதிரைநிருபர் வலைப்பூவில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுச் செய்திகளையை பார்த்தபிறகு தான் தமக்கு ஊக்கமும் உற்சாகமும் வந்து இந்த மாநாடு நடத்தியே தீர்வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டோம் என்றும், இந்த மாநாடு நடைப்பெறுவதற்கு அதிரைநிருபர் வலைப்பூவும் ஒரு காரணம் என்று எழுதியுள்ளார்கள். இந்த மடல் நம் அதிரைநிருபர் குழுவுக்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை. இந்த செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இச்செய்தியை நாம் இங்கு பதிவு செய்வதற்கு மற்றுமொரு காரணம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆர்வத்துடன் நாமும், இவர்களும் மற்றும் இதை படிக்கும் பார்க்கும் கேட்கும் அத்துனை முஸ்லீம் ஊர்வாசிகளாலும் நடத்தப்படவேண்டும் என்பதற்காவும் தான்.

இது போன்ற கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் தமிழக முஸ்லீம்கள் அதிகம் உள்ள எல்லா ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும். யார் நடத்தினாலும் மாணவ செல்வங்களுக்கு பயனுல்லதாக இருக்கும் பட்சத்தில் அனைவரும் கல்வி நிகழ்ச்சிகளுக்கு அரசியல் சாயலின்றி ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வரும் அபிராமம் நத்தம் கல்வி அரக்கட்டளையின் சேவை மென்மேலும் தொடர அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களையும் அனைத்து ANET சகோதரர்களையும்  நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். சகோதரரே உங்களுக்கும், இந்த கல்வி சேவையில் ஈடுபடுத்திவரும் அனைத்து ANET சகோதரர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து மேலும் இச்சேவையை தொடர அல்லாஹ் நல்லருபுரிவானாக.

-- அதிரைநிருபர் குழு

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களின் முகவரி

V.A. Syed Abdul Hameed
No 5/1, 3rd Street, Eswar Nagar
Kodambakkam - Chennai 600 024
Tel 044-24814466 / 23780252
Mob 9445110544
Mob 9094833511
Email: hameed.unicon@gmail.com

Please visit http://www.anet2010.webs.com/   &   http://www.uniconchennai.webs.com/

11 கருத்துகள்

UNICONCHENNAI சொன்னது…

Dear Brother,

Assalamu alikum.

Thanks to ALLAH THE ALMIGHTY for the grant success of our educational awareness program.

The real hero for the success of the event is Dr. Abideen who is one of the best scholar and I love his simplicity.

I feel embraced to see my name is high lighted instead the team work by all our volunteers and others who worked with me directly or indirectly to make the event successful.

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

நமதூரில் நடந்த கல்வி மாநாட்டின் தாக்கம் இது போல் பல ஊர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது

நல்ல விசயங்களை யார் செய்தாலும் அதை மன மாற பாராட்டவேண்டும் என்பதற்கு இந்த பதிவு நல்ல ஒரு எடுத்துக்காட்டு

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ் !

இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ் !

இனிமே அதிரைப்படினம் எல்லா வகையிலும் முன்னின்று நடத்திக் காட்டும் எல்லா வகையிலும் சாதிக்கவும் செய்யும் இன்ஷா அல்லாஹ்...

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது மற்றும் ANET அனைத்து சகோத்ரர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும் எங்கள் துஆ உண்டு!

அதிரைநிருபர் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் செய்யது அப்துல் ஹமீது அவர்களுக்கும்,

தங்களின் தன்னடக்கம் எங்களை மேலும் நெகிழ வைத்தது. நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல் கூட்டு முயற்சியில்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. இந்த கல்வி மாநாட்டுக்கு உதவியவர்கள் அனைவரைரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எங்களுடன் தொடர்பில் இருந்தது நீங்கள் ஒருவர் மட்டுமே என்பதால் உங்களின் பெயருடன் பொதுவாக அனைத்து சகோதரர்களையும் வாழ்த்தி செய்திவெளியிட்டுள்ளோம்.

//The real hero for the success of the event is Dr. Abideen who is one of the best scholar and I love his simplicity.//

நீங்கள் சொல்வது சரியே, பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் போன்று நிறைய இஸ்லாமிய பேராசியர்கள் கல்வி விழிப்புணர்வில் ஆர்வம் காட்ட வேண்டும்.

sabeer.abushahruk சொன்னது…

Dear brother Syed,
Assalaamu alaikkum varah...

I think it is bit of too much to say that you were embarrassed when a noble and wise team appreciate you for your efforts in bringing educational awareness in our community. Though it is a team work, can you please name any team which did a work without a leader or captain?

Therefore, you deserve appreciation so that to motivate others to work like you. Meanwhile, if you feel shy to accept the prize then it is understood that you are a very wise person and I wish all the best for you.

otherwise Adirai nirubar group never embarrassed anyone and it would never do in the future as well.

wassalam.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//otherwise Adirai nirubar group never embarrassed anyone and it would never do in the future as well.//

well said... we all agree with you கவிக் காக்கா !

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கல்வி விழிப்புணர்வு மாநாடு அபிராமம் நத்தத்தில் நடந்தது குறித்து மகிழ்ச்சி. கல்வி மாநாடுகள் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் நடத்தப்பட வேண்டும்.

யார் ஒருவர் நல்ல காரியத்தை ஆரம்பித்து வைக்கிறார்களோ அவர்களுக்கு தொடர் நன்மை வந்து கொண்டே இருக்கும். அவர்களைப் பின்பற்றி செய்கிறவர் காரியங்கள் மூலமும் தொடர்ந்து நன்மைகள் வந்தடையும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (அல்குர்ஆன் : 4:57)

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அல்குர்ஆன் : 4:85)

Yasir சொன்னது…

அ.நி வைத்த விழிப்புணர்வு என்ற தீப்பொறி..இன்று பெருநெருப்பாக மாறி...நம் சமுதாயம் முன்னேற தடையாக இருக்கும் தடங்கல்களையெல்லாம் சுட்டெரிக்க கிளம்பிவிட்டது....வாழ்த்துக்கள் “அமிராமம் நத்தம்” கல்வி விழிப்புணர்வு மாநாட்டு ஏற்பாட்டளர்களுக்கு

ZAKIR HUSSAIN சொன்னது…

To Brother V.A. Syed Abdul Hameed,

While others are thinking and planning what to do for their community you have done something great [ of course with a good team effort ] there fore you deserve an appreciation.

I hope you might have done a 'road map' to achieve whatever you have come across to up lift the education fraternity of the Abiramam Natham.

remember people will some how rather comment your work as useless, nor going to work and so on. NEVER EVER GIVE UP

Allah is always there to help you...because you are doing some thing noble.

ZAKIR HUSSAIN

UNICONCHENNAI சொன்னது…

Dear All,

Alhamdullilah.

I never expected such a wide circulation and positive comments for the team work headed by me. Any way I thank all of the Adirainirubar team and others personally and on behalf of ANET for encouraged me to be a part of this team work. We are planing to do such seminar at least every six month with other scholars so that our community can get more benefit. At this point I want to thank and remember brother Muduvai hidayat for his valuable advise to conduct this seminar and to have more schemes for the education.

I never feel that it is too late to start any good deed but we need to do it and continuously try to do be a part.

If we share our experience like this it may be an useful tips for other to be united.

Yasir சொன்னது…

"Success is not a destination,its a journey " let us contact more awareness program as a team and make our new generation get all the benefits that we are missed and missing now..INSHA ALLAH