Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாம் நன்றாக இல்லை ! 6

அதிரைநிருபர் | February 04, 2011 | ,

நாம் நன்றாக இல்லை !

காரணம் நாம் ஒன்றாக இல்லை !

ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !

மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது!

முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !
காலமெல்லாம் நாம் கதறினோம்!

கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம்!

பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !

இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள்!
வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள்!
இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !
சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமைக்காகப் பிரார்த்திப்போம்!

- சமுதாய ஒற்றுமை புத்தகத்திலிருந்து….
 
-- அதிரை முஜீப்

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீங்கள்!
வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள்!
இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் ! //

இதுதான் காலத்தின் கட்டாயம் !

இதனைத் தேடித் தந்த அதிரை முஜீப் எங்கே மவுனமாக இருக்கிறீர்கள் ?

Meerashah Rafia said...

"ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் ! "

இது வருடா வருடம் வரும் கார்கில் போரைபோல்தான் இருக்கிறது.

இதனால் என் நெருங்கிய சொந்தத்தில் ஒரு மிகப்பெரிய குழப்பம்.

அதாவது ஒன்னும் இல்லைங்க "பெருநாள் அன்றைக்கு கல்யாணம் வைகனும்கிற சூழ்நிலையாம், ஆனால் மூன்று பெருநாள்ல(DAY1-JAQ,DAY2-TNTJ,DAY3-THABLEEQ) எந்தப்பெருநாள்ல வைக்கிறதுன்னு தினர்றாங்க..என்னதான் மாப்பிளைக்கு மூணு வகை கூட்டத்தாரோடும் நட்பு இருக்கிறதுன்கிரத்துகாக மூணு கரி சாப்பாடு போடலாம், ஆனால் மூணு நாளைக்கு வலிமா போடமுடியாதுல!!"

-மு.செ.மு. மீரஷாஹ் ரஃபியா

sabeer.abushahruk said...

//ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !//

வெட்கம்.
வெட்கமாயில்லை நமக்கு?

கருத்து வேறுபாடு என்கிற
துருப்புச் சீட்டை வைத்து
வெறுப்பு வளர்க்கிறான் முஸ்லிம்!
வேலியே மேயும் பயிரென
வெதும்பிக் கிடக்கிறது மார்க்கம்!

இந்த பேதமை மாபெரும் தவறெனச் சுட்டிக்காட்டினால் (முஜீப் டாட் காமைப்போல) நீயும்தான் தவறு செய்கிறாய் என ஏதாவதொரு சிறு சர்ச்சை கொண்டு இதற்கு அது சரியென சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் முஸ்லிம்கள். வேறு யாருமல்ல, உன் என் சகோதரன் தான்.

shame on us!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வேறு யாருமல்ல, உன் என் சகோதரன் தான். //

இது தான் மிக்க வேதனையை தருகிறது காக்கா.

அடுத்தவரின் குறையை சுட்டிக்காட்டுவதற்கு என்றே மிக அதிகம் அவர்களின் நேரத்தையும் அனியாத்துக்கு மக்களின் நேரங்களையும் தான் வீணடிக்கிறார்.

அல்லாஹ் தான் நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடுக்கனும். இன்ஷாஅல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அல்லாஹ், அல்லாஹ் என்று உர‌க்க‌ச்சொல்லி

அவன் சொல்லாததை செவ்வனே செய்து முடிப்பான்

மார்க்க‌த‌ரிசி போல் போலி வேச‌மிட்டு

பின்னால் சின்ன‌ப்ப‌ட்டு சேத‌ம‌டைவான்

மார்க்க‌ கார‌ண‌ம் ப‌ல‌ கூறி‍ ‍‍ அவ‌ன் த‌ன்

காரிய‌த்தில் க‌ண்ணும் க‌ருத்துமாய் இருப்பான்

கோட்டையைப்பிடிக்கலாமென்று கூறி

ச‌ன்மார்க்க‌த்தை கோட்டை விடுவான்.

விழிப்புண‌ர்வு என்று கூறி வெந்த‌ புண்ணில் வேலைப்பாய்ச்சுவான்

எழுச்சி என்று சொல்லி இறுதியில் ஏமாற்ற‌த்தை கொடுப்பான்

ஒற்றுமை என்று கூறி உய‌ர்மார்க்க‌த்தை பிரித்து மேய்வான்

ஓரிறை என்று கூறி த‌ன் பேரை வ‌ள‌ர்க்க‌ முய‌ற்சிப்பான்

இது தான் ந‌ம் சித‌றுண்ட‌ ச‌முதாய‌த்தான் இன்றைய‌ நிலை.

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!.

சகோதரர் அபு இபுராஹிமின் எங்கே முஜீபை காணவில்லை என்ற தேடலுக்கு, இறைவனால் ஏற்படுத்தப்பட்ட சிறு உடல் நலக்குறைதான் காரணம்!. அல்ஹம்துலில்லாஹ்! தற்போது அதே இறைவனின் நாட்டப்படியும், நல்லோர்களளின் துவாவினாலும், மாமி (Anti)பயாட்டிக் மருந்தின் மூலமாகவும் குணமே!.

சகோதரர் ஷபீர் அவர்களுக்கு!
இந்த பேதமை மாபெரும் தவறெனச் சுட்டிக்காட்டினால் (முஜீப் டாட் காமைப்போல) நீயும்தான் தவறு செய்கிறாய் என ஏதாவதொரு சிறு சர்ச்சை கொண்டு இதற்கு அது சரியென சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் முஸ்லிம்கள். வேறு யாருமல்ல, உன் என் சகோதரன் தான்.shame on us!

ஒருசில விஷயங்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது!. ஏனெனில் தூங்குறவனை எழுப்பிவிடலாம்!. ஆனால் தூங்குவது போல் நடிக்கும் கூட்டத்தினை எழுப்பவே முடியாது!. சிறிது காலம் பொறுத்திருந்தால் அவனாகவே எழும்பி சென்றுவிடுவான்!. ஏனெனில் உண்மையாக தூங்குபவனுக்கு எட்டு மணிநேரம் கூட போதாது!. நடிப்பவனால் அரைமணி நேரம் கூட தூங்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை!.

எனவே நம் கருத்தை சொல்லுவதில் தயக்கம் கூடவே கூடாது!.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு