Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழ் வழக்கில் உள்ள அரபி சொற்கள் 40

அதிரைநிருபர் | February 21, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் உள்ள அரபி மொழி வார்த்தைகள். இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறு மொழி சொல்லாகவும் இருக்கலாம். பின்னுட்டம் இடும் சகோதரர்கள் மேலும் விபரம் தந்து தாங்கள் அறிந்த சொற்களை அறியத்தந்து கட்டுரையை செம்மை படுத்துங்களேன்.


அரபி சொற்கள்  -  தமிழ் உதாரணங்கள்

சாமான் - அதாங்க நாம ஊருக்கு போகும் போது வாங்கி செல்வது

வக்காலத்து - நீ என்னடா அவனுக்க வக்காலத்து வாங்குறே

வக்கீல் - நம்வூர் வக்கீல் முனாப்

மகசூல் - இந்த வருடம் வயல் நல்ல விளைச்சல்

சமூசா - நோன்பு திறந்தவுடன் 4 அல்லது 5 உள்ளே தள்ளிவோமோ

பிரியாணி - நூர் லாட்ஜ் பிரியாணி

ஹல்வா - நூர் லாட்ஜ் அதுக்கும் நூர் லாட்ஜ்தாதானா?

நபர் - மர்ம நபரை போலீஸ் வலை வீசி தேடுகின்றனர்

அசல் - அசல் அக் மார்க் நெய் (ஒரிஜினல்)

நகல் - காபி (COPY) அட்டு

குத்தகை - செக்கடிகுளம் குத்தகைக்கு விடுறாங்களாம்!

குதிர் -அப்பன் குதுருக்குள்ளே இல்லை என்பது போல் உள்ளது!

சுக்கர் - சக்கரை தூக்கலா ஒரு டி போடுப்பா

பாக்கி - பாக்கிய வச்சிட்டு மறுவேலையை பார்

சவால் - நீயா நானா போட்டு பாத்துருவோமா .

ஜவாப் - நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் (பதில்வரவில்லை)

தரப்பு - இருதரப்பு பேச்சு சுமுகமகா முடிந்தது.

அமானத் - கொண்டு வந்த சாமான்களை கஸ்டம்ஸ் எடுத்துக்கொண்டான் என்று பொய் சொல்லாமல்.

அமீனா - கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்.

ரசீது - பணம் கட்டிவிட்டு மறக்காமல் வாங்க வேண்டிய ஒன்று .

கடுதாசி (கிருதாசி) - காக்கை கத்துது கடுதாசி வருமோ.

ஆஜர் - (கோர்டில்) ஒப்படைப்பது

நமுனா - இரண்டும் ஒன்றை போல் இருப்பது.

அத்தர் - அத்தர் வாசம் தூக்குதுப்பா.

சால்னா - அப்பாகடை சால்னாவை அடிச்கிட வேறுகடை கிடையாது .

தபேளா(தப்ளா) - ஜாகிர் ஹுசைன்.

சுக்கான் - கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று.

சர்பத் - மெயின் ரோடு MP கடை நினைவுக்கு வரும்.

ச்சாயா - கடக்க ஒரு ச்சாயா போடுப்பா.

ஜமா பந்தி - போட்டும் பட்ட சிட்ட கிடைக்கவில்லை.

சாதா - முட்டை தோசை சாதா தோசை.

காலி(ஹாலி) - ஒரு ஷஹன் சாப்பாட்டை காலி செய்துவிட்டான்.

சைத்தான் (சாத்தான்) - வழி கெடுப்பவன்.

--shameed
    dammam

40 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன Sஹமீத் காக்கா... மற்றதை நாங்கதான் சொல்லனுமா (ஹிதயாத்துல்லாஹ் சீக்கிரம் வா(டா)ப்பா)...

இதுவும்தானே.. ஜில்லா - மாவட்டம், ஜாமீன் (இது வேற மீனுங்க இறச்சிக்கு பதிலாக அல்ல)...

மவுத் = இறப்பு ? சரியா !?

சரி மத்தவங்களும் வருவாங்க தானே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பதியப் பட்டிருக்கும் படத்தில் எந்த மொழியை போட்டாலும் புரியும்படி வார்த்தை வருதே...

sabeer.abushahruk said...

என்ன ஹமீது...இப்புடி போட்டுத் தாக்குரிய? இவ்வளவும் அரபியிலிருந்து வந்தவையா? ஆச்சரியமாக இருக்கிறது.

சொல் விளக்க உதாரணங்களில் உம் நக்கலான குறிப்புகள் சிரிப்போ சிரிப்பு.

ஜமாய்ச்சிட்டீங்க் அப்பு . நானும் விசாரித்து பின்னர் பதிய முயல்வேன்>

Unknown said...

அபுஇபுறாஹீம் காக்கா லப்பைக்...(இதோ வந்துட்டேன்).

வசூல், தபா, ரஜா, இலாக்கா,உருசுகாயம், ஜேப்பி,தாக்கீது, தவாலி, நகரா,
மக்கர், மகால், இசும்,ஆஜர், இரிசால்,மௌஸ், முகாம், முசாபர், முன்ஷி, மொபசல், மஹார்,யுனானி, லாயக்கு, ரத்து, ஹிக்கிம், ஷராப், ஜப்தி,
ஜபர்தஸ்து, ஜாமீன், தணிக்கை, மகசூல், முசாபயு, ஜில்லா,
கொசுவர்,(சில வார்த்தைகளுக்கு தமிழ் சொற்கள் தெரியவில்லை)

அசல்- முதல்
கஜானா- கருவூலம்
இனாம்- நன்கொடை
சவால்- அறைகூவல்
சாமான் -பண்டம்
ஜாஸ்தி- மிகுதி
நகல்- போலி
பதில்- மறுமொழி
பாக்கி- நிலுவை
மாமூல்- வழக்கம்

//சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் துறைமுகத்தை பந்தர் என்று அழைக்கின்றன.

“இன்னிசை புணரி இரங்கும் பெளவத்து
நங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”

என பதிற்றுப் பத்து கூறுகிறது. பந்தர் என்பது அரபுச் சொல் ஆகும். இச்சொல் துறைமுகத்தைக் குறிக்கும். அக்காலத்தில் துறைமுகங்களாக இருந்த ஊர்கள் சில இன்றும் பந்தர் என வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தென்னாற்காடு மாவட்டம் பரங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) மஹ்மூது பந்தர் எனவும், சென்னைக்கு அருகிலுள்ள கோவலம், ஷஹீதுபந்தர் எனவும் அழைக்கப்படுகிறது.//

என்பதும், //ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்பினால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன. அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட சில சொற்களை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

அசல், அத்தர், அண்டா, அமல், அல்வா, அமினா, அயன், அனாமத்து, அக்கப்போர், ஆசாரி, இனாம், இலாகா, ஊதுபத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குமாஸ்தா, கைதி, குத்தகை, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பூந்தி, பைசல், பேஷ், மசோதா, மராமத்து, ,மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம் ஆகியன. என்பதும், டாக்டர் ஜெ.ராஜா முகமது அவர்களின் ஆய்வாகும்.

இத்துடன் (தமிழ் அல்லது இந்திய‌)முஸ்லிம்களுடன் தொடர்புடைய துருக்கி,ஃபாரசீ மொழிகளையும் சேர்த்து பார்பது நலம்!

துப்பாக்கி என்பது துருக்கிய மொழியாகும் இன்னும் பல சொற்கள் அமிழ்ந்து கிடக்கின்றன அவற்றையும் தொடராலாம்.

தமிழில் ஃபாரசீ சொற்கள்:

அலாதி- தனி
கம்மி- குறைவு
சர்க்கார்- அரசு,அரசாங்கம்
சந்தா- கட்டணம்.
தயார்- ஆயத்தம்
கிஸ்தி-வரி, நிலவரி
குமாஸ்தா- எழுத்தர்
புகார்- குறை
ரஸ்தா- சாலை
வாபஸ்- திரும்பப் பெறுதல்

ஷாஹுல் காக்கா அரபி சொற்களுக்கு தமிழ் உதாரணங்கள் அருமை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஹிதாயத் இத இதத்தான் எதிர்பார்த்தோம்... வியக்கும் ஆய்வுக் குறிப்புகள் தேடித் தருவதற்கு(த்தான்)!

Unknown said...

சாகுல் காக்காவின் மொழியும் மறுமொழியும் அட்டக்காசம் ...
தம்பி ஹிதயாதின் ஆழமான விளக்கம் நிசமா நமக்கு புதுசுதான் ............

sabeer.abushahruk said...

ஹிதாயத்துல்லாஹ்,
மூச்சு முட்டுதைய்யா வாசிக்கவே! எப்படி தொகுத்தீர்? அல்லாதான் உங்க ஹயாத்தைப் போட்டு வைக்கனும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அரபி வார்த்தைக்கு சகோ. சாகுல் நகைச்சுவையுடன் கூடிய விளக்கம் கலக்கல். சகோ. ஹிதாயத்துல்லா பின்னூட்டத்திலும் நிறைய வார்த்தைகளை காண முடிந்தது. ஏற்கனவே இந்த வார்த்தைகளை படித்து இருந்தாலும். மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சியே.

காரணம் இஸ்லாம் இந்தியாவிற்குள் வரவில்லை யென்றால் இந்தியாவில் உள்ளவர்கள் இன்னும் பழங்குடி மக்களாகவே இலை தழைகளை பறித்து சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பார்கள்.

இஸ்லாம்தான் இந்தியர்களுக்கு நாகரிகத்தை, பண்பாட்டை
நேர்மையை, வாழும் முறையை, நிர்வாக அமைப்பு முறையை கற்று கொடுத்தது. பஞ்சாயத் இதுவும் அரபி வார்த்தையே - முனீசிப் இதுவும் அரபி வார்த்தையே. வக்காலத், வாய்தா, வக்கீல், இது போன்ற தமிழில் ஒன்றாக கலந்து விட்ட அரபி வார்த்தைகளை பிரிக்க முடியாது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று குழப்புவர்கள் சுத்த தமிழ் என்று சொல்பவர்கள் தரும் தமிழ் விளக்கம் மக்கள் மனதில் நிற்பதில்லை.

உதாரணத்திற்கு வக்கீல் அரபி வார்த்தை இதற்கு தமிழில் வழக்கறிஞர் என்று சொல்கிறார்கள். ஆனால் அதிகம் பேர் மனதில் இருப்பது வக்கீல்தான். தமிழில் கலந்த நமக்கு தெரிந்த அரபி வார்த்தைகள் சிறிதளவுதான். தெரியாதது நிறைய இருக்கும்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ ஹிதயாத்துல்லா வின் பின்னுட்டம் நம் ஆக்கத்தை விட அருமையான விளக்கங்களை தந்துள்ளார் மாஷா அல்லாஹ்

அபூ கதீஜா said...

ஹைவான் - சரியான ஹைவான(பைத்தியம்) இருப்பான் போலிருக்கு
சூஃபி - ரொம்ப சூஃபி இருக்காறப்ப.
சவாரி -
முசாபிர்(مسافير) - (Traveller)அம்மா ரெண்டு முசாஃபரு வாசல்ல நிக்கிறோமா
(القميص)கம்ஸு சட்டை- முழுக்கை சட்டையை போடு வாப்பா

இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கிறது, ஆபிஸ் முடிஞ்சுத்தான் எழுதனும்

abufahadhnaan said...

ஹிதாயத் அவர்கள் பின்னுட்டம் பதிந்தற்கு பதிலாக ஒரு கட்டுரை பதிந்து இருக்கலாம் மேலும் பல அரபு தமிழ் சொற்களை நாங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் !

Yasir said...

என்ன காக்கா...மறுபடியுமா இந்த மொழி விளையாட்டு....என்னா “கொதரத்துமா “ இது...கலக்குங்க காக்கா
என்ன அவருக்கு “சூரத்து “ மங்கி போச்சு என்றும் நம்மூரில் சொல்வார்கள்

சகோ.ஹிதாயத்துல்லாஹ்...இது பின்னூட்டமா இல்லை மின்னூட்டமா..படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்...இவ்வளவு அரபி வார்த்தைகளா நம் தேன் தமிழில் கலந்துருக்கு...தொகுத்தளித்தமைக்கு பாரட்டுக்கள்

Yasir said...

கொதரத்து - அதிசயம்
சூரத்-----முக அழகு ( அப்படிதான் என்று நினைக்கிறேன் )

ZAKIR HUSSAIN said...

மலாய் மொழியிலும் இதே ஒற்றுமைதான்..உதாரணமாக

அசல்- முதல்
கஜானா- கருவூலம்
பாக்கி- நிலுவை

ஹைவான் = மிருகம் [இது மட்டும் வேறுபடுகிறது]

Unknown said...

தேடலை ஊக்கப்படுத்தும் அனைத்து காக்காமார்களுக்கும் மிக்க நன்றி‌கள்...

sabeer.abushahruk said...

ஹமீது/அதிரை போஸ்ட்/அலாவுதீன்:
தங்களின் தொகுப்பில் உள்ள வார்த்தைகள் அத்தனையும் அரபி மூலம்தான் என உறுதியாகச் சொல்கிறீர்களா? ஏனெனில், மரியாதைக்குறிய அரபி ஸ்காலர் ஒருவர் இவற்றில் பல வார்த்தைகள் அரபியே அல்ல; பாரசீகம் மற்றும் உறுது வார்த்தைகள் என என் தலையில் ஒரு குட்டு வைத்தார்கள்.

பரிசீலிக்கவும்.

உதாரணத்திற்கு; சாமான் ஒரு உருதுச்சொல்; அரபியல்ல. பொருட்களுக்கு அரபி வார்த்தை "அஃராத்" என்பதாகும்!

என்னங்கப்பா கண்ண கட்டுதா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன கவிக் காக்கா "நான் அரபின்னு" (أنا العربي)சொல்லிடுவாங்களோன்னு பதற்றமா ?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

good டாகவே குட்டு வைத்துள்ளார்.
அதிரை ஆலிம் ஜாகிரும் இதை போன் மூலம் எனக்கு தெரிவித்தார்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//தங்களின் தொகுப்பில் உள்ள வார்த்தைகள் அத்தனையும் அரபி மூலம்தான் என உறுதியாகச் சொல்கிறீர்களா? ஏனெனில், மரியாதைக்குறிய அரபி ஸ்காலர் ஒருவர் இவற்றில் பல வார்த்தைகள் அரபியே அல்ல; பாரசீகம் மற்றும் உறுது வார்த்தைகள் என என் தலையில் ஒரு குட்டு வைத்தார்கள்//

அஸ்ஸலாமு அழைக்கும்
அவை யாவை என எடுத்துப்போட்டால் யாவருக்கும் அறிந்து கொள்ளலாம் அல்லவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Sஹமீத் காக்கா: என்னிடம் இந்த goodஆன பதிவுக்கு இரண்டு குட்டுக்கள் விழுந்தது கருத்துக்குள் வாரும் அங்கே சொல்லித் தாரும் என்ன என்னவென்று வ்ழிந்தேன்.. நேரமில்லை என்றும் சொல்லிட்டான் என் தோழன் !

இப்படியும் குட்டினால்தான் நம்ம தலை(யை) பாதுகாத்திட உணர்வு வருதாமே !

இருப்பினும் ஒவ்வொரு குட்டும் Goodதான் ஆக எல்லாமே இந்த ஆக்கத்திற்கு கிடைத்திடும் சொட்டு(க்களே) !

கோடு போட்டா Roadடு போடும் நாம் ஆங்காங்கே வழிகாட்டியையும் வைக்கிறோம் தானே !? (அப்படித்தானே நேசங்களே)

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//இருப்பினும் ஒவ்வொரு குட்டும் Goodதான் ஆக எல்லாமே இந்த ஆக்கத்திற்கு கிடைத்திடும் சொட்டு(க்களே) !//



அஸ்ஸலாமு அழைக்கும்

ஒவ்வொரு குட்டும் வாழ்க்கையில் ஒரு எட்டு

Shameed said...

அதிரைpost சொன்னது…

//தேடலை ஊக்கப்படுத்தும் அனைத்து காக்காமார்களுக்கும் மிக்க நன்றி‌கள்... //


அஸ்ஸலாமு அழைக்கும்

தேடல் இருந்துகொண்டே இருக்கவேண்டும்
அப்போதுதான் வாழ்க்கை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீது காக்கா, கருத்திடம் நேரம் கிடைக்கவில்லை.

நீங்கள் தொடங்கி வைச்சீங்க, மற்றவர்கள் ஒரு கலக்கு கலக்குறாங்க வார்த்தை விளையாட்டால், நீங்களும் தான்.

இது போல் வித்யாசமாக நிறைய எழுதுங்கள்,

ஜூனியர் கிரவுனின் விளக்கமும் அருமை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது…
மலாய் மொழியிலும் இதே ஒற்றுமைதான்..//

ஜாஹிர் காக்கா,

தமிழுக்கு, மாலாய்க்கும் உள்ள வார்த்தை ஒற்றுமைகள் உள்ளதா?

Yasir said...

அசத்தல் காக்கா அரபியில் “ ஹைவான் “ என்றால் தமிழில் “மிருகம்” தான்..இதை படித்ததும் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது ...ஒரு தடவை இங்குள்ள ஹை வேயில் கார் ஓட்டும் போது..என் காருக்கு பின்னால் வந்த ஒரு அரபு தேசத்துகாரர் டிம் லைட்டை ஆன்/ஆஃப் செய்து கொண்டே வந்தார் அவர் வீட்டில் நெருப்பு எரியுதோ என்னமோ அந்த அளவு அவசரம்...நான் வழி கொடுக்கவில்லை...பின்னர் நிறுத்தி அவர் கார் விண்டோவை திறந்து என்னை “ ஹைவான்” என்று விளித்தார்...நான் பதிலுக்கு “இன்த ஹைவான் கபீர்(நீ ஒரு பெரிய மிருகம் ) “ என்றேனே பார்க்கலாம்...மனிதர் முகத்தில் ஈயாடவில்லை..இறங்கிவருவார் என்றுதான் நினைத்தேன்..ஆனால் அவர் அவசரம் அவரை விடவில்லை சென்று விட்டார்....

துபாய் போலிஸ் அவர்கள் டிஜிட்டல் போர்டில் போட்டு இருக்கும் வாசகம் " Speed kills "

ZAKIR HUSSAIN said...

யாசிர்...உங்களுடைய துணிச்சல் ஆச்சர்யம்தான். நான் இங்கு[மலேசியாவில்] அரபிகள் வெக்கேசன் நேரத்தில் வந்து இங்கு உள்ள வெய்ட்டர்களையும் , மஸாஜ் பார்லரில் வேலை பார்க்கும் பெண்களையும் வதைத்து விட்டு போவதை பார்த்திருக்கிறேன்.

சாப்பாட்டில் ஒரு ஒழுங்கு இல்லாமல் இந்த மூலையில் உட்கார்ந்து கொண்டு அந்த மூலையில் [ சாப்பாட்டு மேஜையில் ] உட்கார்ந்து இருக்கும் தனது பிரம்மாண்டமான மனைவிக்கு பொறித்த கோழியை தட்டில் தூக்கி வீசிய நிகழ்ச்சியை பார்த்தபோது ZOO முதலைக்கு மாமிசம் போடுவது ஞாபகம் வந்தது.

சாலையில் வித்யாசமானான அணுகுமுறை: ஒரு முறை என்னுடன் வந்த தாடி வைத்த நண்பர் [அவர்தான் கார் ஒட்டிவந்தார்] இன்னொரு கோபக்கார டிரைவருக்கும் போட்டியில் எதோ கோபமாக கை உயர்த்தினான்....உடனே இந்த 'தாடி' அவனுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு போஸ் கொடுத்தாரே பார்க்கலாம்...நானும் அந்த கோபக்கார டிரைவரும் குழம்பி விட்டோம்.

நீதி: கோபப்படுபவரை குழப்பினால் உலகத்தில் அமைதி நிலவும்.
["புத்தம் சரணம் கச்சாமி' என பேக்ரவுண்டும் ம்யூசிக் வருதா?]

ZAKIR HUSSAIN said...

//தமிழுக்கு, மாலாய்க்கும் உள்ள வார்த்தை ஒற்றுமைகள் உள்ளதா? //

நிறைய இருக்கிறது; மலாய் மொழியில் உள்ள பல வார்த்தைகள் அரபி, சமஸ்க்ருதம், தமிழ் மொழிகளில் சுட்டது..

Yasir said...

//யாசிர்...உங்களுடைய துணிச்சல் ஆச்சர்யம்தான்/// அவர் லோக்கல் (UAE national )இல்ல காக்கா...அவங்ககிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் பேசனும்....இவர் பைத்துல் முகத்தஸ் உள்ள நாட்டை சேர்ந்தவர்..அப்புறம் இன்னொன்று காக்கா...இந்த அமீரக நாட்டு பிரஜைகளை...நீங்கள் எந்த நாட்டில் வைத்து சந்தித்து “ which country you are from " என்று கேட்டால் “ i am local " என்றுதான் பதில் வரும்...

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//பிரம்மாண்டமான மனைவிக்கு பொறித்த கோழியை தட்டில் தூக்கி வீசிய நிகழ்ச்சியை பார்த்தபோது ZOO முதலைக்கு மாமிசம் போடுவது ஞாபகம் வந்தது.//


அஸ்ஸலாமு அழைக்கும்

zoo மேட்டரை ஜூம் செய்து இங்கு பிரின்ட் போட்டதுதான் அசத்தல்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Zoo(ம்) சுட்டக் கோழி முதலை தட்டிற்கு தாவியது - சிரிப்பை அடக்க முடியவில்லை(யே) !

Unknown said...

ஷபீர் காக்கா சொன்னார்கள்...
தங்களின் தொகுப்பில் உள்ள வார்த்தைகள் அத்தனையும் அரபி மூலம்தான் என உறுதியாகச் சொல்கிறீர்களா? ஏனெனில், மரியாதைக்குறிய அரபி ஸ்காலர் ஒருவர் இவற்றில் பல வார்த்தைகள் அரபியே அல்ல; பாரசீகம் மற்றும் உறுது வார்த்தைகள் என என் தலையில் ஒரு குட்டு வைத்தார்கள்//

1) உறுதியாக சொல்லும் அளவு அரபு மொழியை நான் அறிந்தவன் அல்ல.

2) ஃபாரசீயும் உருதுவும் துருக்கிய மொழியும் கல‌ந்துள்ளது உண்மையே.

3) இரு மொழி ஆளுமை மிக்கவர்கள்தான் இந்த விசயத்தில் நமக்கு உதவி
செய்ய வேண்டும்.

4) அரபு மொழியில் இல்லாதது என்று நாம் நினைக்கும் சொற்கள் கூட 'அரபு' மொழியாக இருக்கும்! ஏனெனில் திராவிட அல்லது தமிழின நாக்கு அமைப்பு(செயல்பாடு) அப்படி!!( உச்சரிப்பு பிரச்சினை அல்லது தனித்தமிழ் ஆர்வம்)

5) ஸ, ஷ, ஜ, ஹ உள்ளிட்ட வடமொழி எழுத்துக்களின் சொற்கள் எந்த சொல்லாக இருந்தாலும் மாறும் அல்லது மாற்றப்படும்.

6) "சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன. அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளன." என்ற டாக்டர் ஜெ.ராஜா முகமது அவர்களின் கூற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Shameed said...

அதிரைpost சொன்னது…

//இரு மொழி ஆளுமை மிக்கவர்கள்தான் இந்த விசயத்தில் நமக்கு உதவி
செய்ய வேண்டும்.//

அஸ்ஸலாமு அழைக்கும்

பலமொழி ஆளுமை மிக்க கவிக்காகா அவர்களே நீங்களே இந்த விசயத்தில் உதவி செய்யலாமே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காத்திருக்கவும், அரபு தமிழ் கண்டறிவிப்பாளர்களே... !

கவிக் காக்கா வருகிறார் காவிக் காவியம் படைக்க ! (யாணை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே - என்ன பழமொழி மாறிடுச்சேன்னு யோசிக்க வேணாம்... மாற்றி யோசிக்கச் சொன்னதே நீங்களுவோதானே)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மன்னிக்கவும் : கவி(க்குள்) காலைப் போட்டுட்டேன் (காவின்னு) மாத்தி வாசிச்சுடுங்களேன்..

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//மன்னிக்கவும் : கவி(க்குள்) காலைப் போட்டுட்டேன் (காவின்னு) மாத்தி வாசிச்சுடுங்களேன்//



அஸ்ஸலாமு அழைக்கும்

நாங்க வாசிக்கும்போதோ காலை எடுத்துட்டுதான் வாசித்தோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அங்கேயும் உங்களின் வேகம் எங்களுக்கும் தெரியும் தானே Sஹமீத் காக்கா !

RAFIA said...

இங்கு ஜித்தா மியூசியத்திலே ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியிலே ஆறு தொன்மை வாய்ந்த மொழிகளிலே அரபி , லாடின் அமெரிக்கன் ,க்ரீக்,சைனீஸ், மற்றும் நம் தமிழில் - அரிசி என்றும் குறிப்பிட்டு இருந்ததறிந்து ஆட்டோமெடிக்கா காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.
________________________________________________________________________
ஒரு சிறு குறிப்பு : தமிழிலே "சோறு "-அரபிலே " றூசு " .

Shameed said...

RAFIA சொன்னது…

//ஒரு சிறு குறிப்பு : தமிழிலே "சோறு "-அரபிலே " றூசு " //

அஸ்ஸலாமு அழைக்கும்

சிறு குறிப்பனாலும்
சுறு சுறுசுறுப்பா இருக்குது

JAMAL MARAICAYAR said...

கொண்டாமாத்து கொடாமாத்து - பெண் கொடுத்து பெண் எடுப்பது
பெழுத்து கட்டிடுவேன் - அடிச்சிடுவேன்
வெடுக்கு வெடுக்குண்டு நடக்குராறு மா- விரைந்து நடக்கிறார்
கைலிய ஒசரொ உடுத்து - உயரமாக ஆடை அணி
தூத்த போடுது-மழை தூருகிறது
பித்து புடிச்சோ மாறி மாரிட்டருமா - ஒரு மாதிரியா ஆவிட்டாறு
பெரிய படமாயமா - எல்லாத்துக்கும் அதிர்ச்சி அடையறது
பிதிக்கி எடுத்துட்டான் - வெளியே எடுத்துட்டான்
ரோதை - சக்கரம்
திருவாப்பலை-தேங்காய் துருவும் சாதனம்
மளார் கத்தை - செத்தை - சவுக்கு மற துளிர்கள்
சோக்கா கீறாரே - அளஹா இருக்காரு
வாய் கட்ட முடிலே - பத்தியமா இருக்க முடிலே
பிரவுட்டுக்கு பொஇகீராரு - டியூஷன்க்கு போயிருக்காரு
பெரிய வொசுவாசு - சுத்தமா இருப்பவர்
பெதளிசிட்டான் - பயந்துட்டான்
வொண்டியா கீராஹோ - தனியா கீராஹோ

ஜமால் மரைக்காயர்
பரங்கிப்பேட்டை
கடலூர் மாவட்டம்

JAMAL MARAICAYAR said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு