அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பானவர்களே, கடந்த சில நாட்களாக மாணவிகள் தற்கொலை என்ற செய்தி அன்றாடம் தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அன்மையில் பள்ளி ஆசிரியர் கண்டித்ததால் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவரும், கும்பகோணத்தில் பள்ளி தலைமையாசிரியர் திருட்டு விசாரனை என்று ஒரு மாணவியை கண்டித்து தண்டித்ததால், தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர், இந்த மாணவிகள் மன உளச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது மிக வேதனையான செய்தியே.
பெற்றோர்களே பள்ளிக்கு செல்லும் தங்களின் பிள்ளைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் விதிமுறைக்கு உட்பட்டு கண்டிப்பது சகஜமே என்றாலும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் தம் பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் stress levelயை கண்டறியவேண்டும்.
மாணவிகள் தற்கொலை என்ற செய்தி, மக்களிடையே அந்த மாணவிகளுக்கு அனுதாபங்கள் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை. ஆசிரியர்களின் கண்டிப்புகளால் சிறிதளவு பாதிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளின் மனதில் இது போன்ற செய்திகள் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோர்கள் மனம்திறந்து தங்களின் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி பேசவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். உங்களின் ஹிட்லர் அராஜகத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டி அவர்களிடையே மன உலைசலை ஏற்படுத்தி அவர்களின் மனதை சிதைத்துவிட நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை விதிமுறைபடி கண்டிப்பது சகஜமே, விதியைமீறி தண்டிக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் நிச்சயம் புகார் கொடுக்கவேண்டும். தவறுகள் செய்வது மனித இயல்பு, அப்படியே மாணவர்கள் பள்ளிகளில் தவறு செய்தால் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு கடினமான தண்டனையோ அல்லது கடினமாக கண்டிப்பதோ வழியல்ல, செய்தது தவறு என்பதை அம்மாணவர்களுக்கும் பக்குவமாக புரியவைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் தங்களிடம் இருக்கும் நேரம் முழுவது அவர்கள் தங்களின் பிள்ளைகள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நாம் ஆசிரியர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை.
பெற்றோர்களே, நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் மனவிட்டு பேசுவதில் என்ன தவறு உள்ளது? பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வகையான பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்து, மன உளச்சல் இல்லாத நிம்மதியான சூழலை படிக்கு நம் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நம் எல்லோரின் கடமை. கல்வியிலும், சமூகத்தில் உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டுமானால் பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் உங்கள் பிள்ளைகளிடம்.
இஸ்லாமிய மார்க்க சிந்தனை நிறைந்த அதிரைப்போன்ற ஊர்களில் தற்கொலை என்ற செய்திகள் அறவே இல்லை என்றாலும், இந்த சனியன் புடிச்ச டிவீ மெகா சீரழிக்கும் சீரியல்களின் காட்சிகள், இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புவோம். காலம் போகிற போக்கில் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம், இதற்காக நாம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமே. அல்லாஹ் நம்மையும், நம் பிள்ளைகளையும் பாதுகாப்பானாக.
- அதிரைநிருபர் குழு.
4 Responses So Far:
பிள்ளைகளும் பெற்றோரிடம் மனம் திறக்க வேண்டும்... இல்லையேல் மன அழுத்தம் வாட்டிடும், அதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கும் !
பிள்ளைகள் ஒரு வயதை அடைந்ததும் அவர்களிடம் நண்பர்களை போல பழகும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்..அவர்களின் ஒவ்வொரு விசயத்திற்க்கும்,கவலைகளுக்கும் ஒரு நல்ல ஆலோசகராக இருக்க வேண்டும்..ஒரு நியாமான பிரச்சனையன்றால் நமக்கு அதரவளிக்க,அரவணைக்க பெற்றோர் உண்டு என்ற மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டியது..நமது கடமை...இது போல் நடந்தால் pressure மறைந்து pleasure உண்டாகும்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நம் உயரத்திற்கு மேல் பிள்ளைகள் வளர்ந்து விட்டால் தோழன், தோழியாக அழைக்க வேண்டும். (என்பது பழமொழி)
சில பெற்றோர்கள் பிள்ளைகளை அடிமையாகவும் சொன்னதை கேட்க வேண்டும், எதிர் கருத்துக்களை கூறக்கூடாது என்று நினைக்கிறார்கள். சரியான புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது.
மனம் திறந்து பேசி விட்டால் எல்லா பிரச்சனைகளும் எல்லார் மத்தியிலும் தீர்ந்து விடும்.
தற்கொலை ஒரு திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் திடீர் முடிவு என்றுதான் மனோதத்துவ வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
அந்த ஒரு நிமிட நேர முடிவுக்கு தள்ளுவது எது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகளிடம் சகஜமாக பழகி மட்டுமே அறிய முடியும்.
மார்க்கம் கடுமையாக கண்டிக்கும் தற்கொலை ஒரு பாவமான காரியம் என்பதயும் இளம் தலைமுறை அறியத் தர வேண்டும்.
Post a Comment