அங்கோ அங்காடி ஊழியர்களின் அவலநிலை. இங்கோ அரபுநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் கவலை நிலை.
பாசமிகு குடும்பப்பெரியவர்களின் இறப்பில் பங்கெடுக்க முடியவில்லை.
உற்றார், உறவினர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. அதற்கு காரணம் ஒன்றும் புரியவில்லை.
பாசத்துடன் குடும்பச்சுமை என்னும் வேசத்தையும் ஒரு சேர கட்டி அனுப்பப்பட்ட பொதிகள் நாங்கள்.
விடுமுறையில் மாதங்கள் வாரங்களாகும், வாரங்கள் நாட்களாகும். நாட்களெல்லாம் மணித்துளிகளாகிப்போகும். விடுமுறை கழித்து இங்கு வந்த பின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.
வெயிலோ வறுத்தெடுக்கும்; குளிரோ நடுங்க வைக்கும். பாலைவனப்புயலோ கண்ணில் மண்ணை வாரி தூவும்.
அரவணைக்க இங்கு தாயுமில்லை, மனைவியும் இல்லை. தலையணை உண்டு.
பால் இருக்கும் இங்கு பழம் இருக்கும். அதை வெட்டிக்கொடுக்க ஆள் இருக்காது. பஞ்சணையில் குளிர் காற்றும் வரும், தூக்கமும் வரும். நம் ஏக்கம் தீராது.
கடும்காய்ச்சல் வரும் தலைவலி வந்து இடையிடையே தலையை தட்டும். ஆனால் ஒரு நாள் சம்பள துண்டிப்பு நினைவில் வந்து சகல நோயுக்கும் இலவசமாய் சிகிச்சை அளித்துச் செல்லும்.
கடல் இருக்கும், கரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது. சுற்றிப்பார்த்தாலும் உள்ளச்சுகம் தீராது.
கார் இருக்கும் கம்பெனியில் நல்ல பெயர் இருக்கும் ஆனால் இவற்றின் சுவை காண நம் ஊர் இருக்காது.
பெரும் தவறேதும் செய்யாமல் தம்மைத் தாமே நாடுகடத்தினோம். அதிலே ஆனந்தமும் கண்டோம். சுதந்திரமாய் தாய் நாட்டில் சுற்றித்திரிய மறந்து போனோம்.
இங்கு விளையாட பரந்த திடல்கள் இருந்தும் விளையாட மனம் இல்லாமல் போனோம். அறையிலேயே முடங்கிப்போனோம். அதிலே போலி ஆனந்தம் கண்டோம்.
இங்கு மிளிரும் விளக்கில் மயங்கிப்போனோம். பிள்ளைப்பாசத்தை பரணியில் கட்டி வைத்தோம்.
கணிப்பொறி முன் அமர்ந்து கைதட்டிச்சிரித்தோம். வார விடுமுறையில் விழாக்கோலம் கண்டோம்.
குடும்பத்துடன் இருந்தாலும் குதூகலத்தில் குறைகள் கண்டோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
11 Responses So Far:
நாம் அனைவரின் அவல நிலையை நச்சென தனக்கே உரிய பாணியில் சகோ.நெய்னா அள்ளித்தந்து இருக்கிறீர்கள்..என்று தீரும் இந்த அவலம்....கல்வி விழிப்புணர்வில் கவனம் செலுத்துவோம்
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது துன்பங்களை துல்லியமாக சொன்னிர்கள்.
விடுமுறையில் மாதங்கள்
வாரங்களாகும்
வாரங்கள் நாட்களாகும்.
நாட்களெல்லாம் மணித்துளிகளாகிப்போகும்.
விடுமுறை கழித்து இங்கு வந்த பின்
எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.
இந்த வரிகள் அரபு தேச சகோதர்களுக்கு மட்டும் சொந்தம்;
ஐரோப்பா தேச சகோதர்களுக்கு இந்த வரிகளும் ஒரு கனவுதான்!
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது துன்பங்களை
மிக துல்லியமாக
சொன்னிர்கள்
நாம் துவண்டு விடாமல்
துள்ளி எழுவோம்
"கல்வி விழிப்புணர்வில்"
கவனம் செலுத்தி
அட ! இதத்தான் துள்ளியம் என்கிறோமோ ! வளைகுடவில் வயசைக் கரைக்கும் வாலிபமுதல் வயோதிகம் வரையினாலோரின் மனச் சுமையிம் நாடி பிடித்திருக்கிறார் MSM(n)
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எத்தனை காலம்
எத்தனை காலம்
அரபு நாட்டு வாழ்க்கை
எத்தனை காலம்!
தலையும் நரையாகியது
உடல் நரம்பும் சுருளாகியது!
எல்லா இருந்தும்
அநாதையாக
பாலை வெளியிலே!
ஒரு சகோதரன் கேட்டான்
முப்பது ஆண்டுகள்
ஓடி விட்டனவே இன்னும்
ஊரோடு நிரந்தரமாக தங்க
திட்டமிடவில்லையா? என்று!
அவனை கேட்டால்
என் பையன் படிப்பு
முடிய நான்கு ஆண்டுகள்
உள்ளது படிப்பு முடிந்தவுடன்
நான் ஊரோடு
தங்கி விடுவேன் என்றான்!
ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்
ஒரு லட்சியம்
நாம் எப்பொழுது சுதந்திர பறவையாய்
குடும்பத்தோடு நிரந்தரமாக ஊரில் தங்குவது!
சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது
அவர்களே! தங்களின் ஆதங்கமே
அனைவருக்கும் ஆனால் விடைதான்
பலருக்கு பலவிதமாக
கிடைத்து கொண்டு இருக்கிறது
கானல் நீராக!
கடல் இருக்கும், கரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது.
இது நல்லா இருக்கு
"காலம் ஒருநாள் மாறும் -நம்
கவலைகளெல்லாம் தீரும்" என்றொரு கவிஞன் பாடினான்.
நம் கடமையை செய்துவிட்டு காத்திருப்போம்!
கணிப்பொறி முன் அமர்ந்து கைதட்டிச்சிரித்தோம். வார விடுமுறையில் விழாக்கோலம் கண்டோம்.
குடும்பத்துடன் இருந்தாலும் குதூகலத்தில் குறைகள் கண்டோம்.
உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் -
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை…!
வர வர எல்லொரும் சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு பொலிப்புரை எழுத ஆரம்பித்தால் என்னைப்போல் உள்ள ஆட்கள் என்ன செய்வது? [ எனக்கு பொலிப்புரையில் "லி" யிலே சந்தேகம் வந்து உத்தேசமா எழுதியிருக்கேன்.
சகோதரர் நெய்னா....எதுக்கும் ஒரு எட்டு ஊருக்கு போயிட்டு வந்துடுங்க
nidurali சொன்னது…
கடல் இருக்கும், கரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது.
இது நல்லா இருக்கு//
துபாயில் இதையும் ஆரம்பிச்சிட்டாங்க கார்ன் என்ற பெயரில். பேப்பர் சுருளில் நிலக்கடலையும் கூட விற்கும்...
Post a Comment