Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டு விழா - 2011 13

அதிரைநிருபர் | February 19, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அழைக்கும்,

இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37 ம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை மாலை (17.02.2011) புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர்கள் மிகவும் திரளாக வந்திருந்தார்கள் பெண்கள் பகுதி நிரம்பி வழிந்தது. இமாம் ஷாஃபி பள்ளியின் பொருளாளர் ஜனாப் அஹமது இப்ராஹீம் அவர்கள் தலைமை ஏற்க, பேராசிரியர்  Dr. A. அப்துல் காதர் M.A. MPhil., Phd, (The Principal, Khadir Mohideen College) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இமாம் ஷாஃபி பள்ளியின் முதல்வர் பேராசிரியர் பரகத் M.A. MPhil அவர்களும் மற்றும் பள்ளியின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்று நடத்திய பல்சுவை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நடைபெற்றது, L.K.G. UKG, (குறிப்பாக) சிறு குழந்தைகளின் சூராஹ் மனனப்போட்டி, ஆங்கில டிராமா , ஹிந்தி பேச்சு என்று மிகவும் இனிமையாகவும் கண்கவர் நிகழ்ச்சியாக இருந்தது. மாஷா அல்லாஹ்.

குறிப்பாக அஸ்மாகுல் ஹுஷ்ணா (அல்லாஹ்வின் திருநாமங்கள்) போட்டியில் LKG இல் இருந்து 5ம் வகுப்பு வரை நடந்தது LKG, UKG வரை 50 சொல்லவேண்டும் என்று நிர்ணயித்து இருந்தார்கள் UKG மாணவி 99 திருநாமங்களையும் பிழையில்லாமல் கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. போட்டிக்கு முன்பு இந்த குழந்தையின் தாய் சிறு குழந்தைக்கு 50 அதிகம் என்று பள்ளி நிர்வாகத்திடம் குறைக்கும்படி கூறினார்கள், ஆனால் அவர்களின் குழந்தையே அனைத்தையும் கூறி சிறப்பு பரிசும் பெற்றது அல்ஹம்துலிலாஹ்.

அதைவிட ஒரு சிறப்பு UKG மாணவன் யாசீன் சூரா முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்து எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை. மாஷா அல்லாஹ்.

மூன்று சூராஹ் (வாக்கியா, அர்ரஹ்மான், துகான்) மனனப்போட்டியில் மாணவிகள் 10 பேர் பரிசு பெற்றார்கள்.

தமது பிள்ளைகளின் கல்வி சாதனைகளின் கண்கவர் நிகழ்சிகளை காண லீவு போட்டாவது ஊருக்கு வாங்க(ப்பா) வெளிநாட்டில் வாழும் சகோதரர்களே. இதைவிட சந்தோசம் வேறு எதில் கிடைக்கப்போகிறது. உங்கள் அனைவரின் பார்வைக்காக புகைப்படங்கள்.



 அன்மையில் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் மார்க்கக் கல்வியின் அவசியத்தை வழியுறுத்தப்பட்டது. இன்று இமாம் ஷாஃபி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் யாஸீன் சூரா, வாக்கியா சூரா, அர்ரஹ்மான் சூரா, துகான் சூரா, மற்ற சூராக்கள் மற்றும் அஸ்மாஹுல் ஹுஸ்னா மனன செய்யும் போட்டியில் மிக உற்சாகமாக இளம் சிறார்கள், சிறுமிகள் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளும் வாங்கியுள்ளார்கள். இறைவனுக்கே எல்லா புகழும்.

வருடா வருடம் இது போன்று நிகழ்ச்சிகளில் நம் ஊர் பள்ளிகளில் சிறுவர் சிறுமியர் தங்களின் திறமையை கொண்டும் சூரா மனன போட்டிகளில் பரிசுகள் அள்ளிச்சென்றாலும். இந்த நிகழ்ச்சியை மிக முக்கியமானதாக கருதி இந்த செய்தியை பதிந்திருக்கிறோம்.

இந்த மாணவர்களின் வெற்றியை அங்கீகாரம் கொடுத்து ஊக்கப்படுத்துவதற்காகவும், மேலும் மற்ற இளம் மாணவர்களுக்கு ஆர்வமூட்டவும்.  இதைப் பார்த்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை வரும் வருடங்களில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்ள செய்து நிறைய பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காவும் இங்கு நாம் புகைப்படங்களுடன் செய்தியை பதிந்திருக்கிறோம்.

வாருங்கள் எல்லோரும் மனதார வாழ்த்துவோம் இந்த இளம் சாதனையாளர்களை. இவர்கள் மேலும் பல வெற்றிகள் பெற வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

சூரா மனன போட்டியில் சாதனைபடைத்த மாணவ மாணவிகளை அதிரைநிருபர் குழு சார்பாகவும், நம் வாசகர்கள் எல்லோரின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெற்றவர்களுக்கு தன் பிள்ளையின் சாதனையை பார்த்து கிடைக்கும் சந்தோசத்துக்கு வேறு எந்த சந்தோசமும் ஈடாகாது.

அல்லாஹ் போதுமானவன்.

--அபு இஸ்மாயில்

-- அதிரைநிருபர் குழு.


13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !...

எனது தம்பியின் மூத்த மஹனார் மஹ்மூத் யாசீன் சூரா மனப்பாட போட்டியில் பங்கெடுத்து பரிசு பெறும் நிழல்படக் காட்சி (முதல் படம்) கண்டு அல்ஹம்துலில்லாஹ்... இதே போல் UKG படிக்கும் ஒரு குழந்தையும் (கம்பீரமாக பரிசு வாங்கும் - இரண்டவது படம்) யாசீன் சூரா மனப்பாட போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெருவதை கண்டு மகிழ்ச்சியே..

பரிசு பெறும் மற்ற மாணவமணிகளுக்கும் எங்கள் துஆவும் வாழ்த்துக்களும்..

rasheed3m said...

Assalamu Alaikum warah... please try to collect viedeo from the imam shafi (rah) annual day and post it here.

அதிரைநிருபர் said...

//Abdur Rasheed சொன்னது…
Assalamu Alaikum warah... please try to collect viedeo from the imam shafi (rah) annual day and post it here.//

வ அலைக்கும்முஸ்ஸலாம்,

சகோதரர் அப்துல் ரஷீத்,

முயற்சி செய்கிறோம், இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டுவிழா காணொளி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியிடுகிறோம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ---சூராக்கள் மனனப்போட்டியில் பரிசு பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.

சில குறைகள் :
---வருடா வருடாம் போட்டி வைத்துவிட்டால் போதுமா?

---தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி குர்ஆனையும் போதிக்க வேண்டாமா?

---வருடா வருடம் போட்டி நடத்துவது நாங்களும் இஸ்லாமிய பாடத்திட்டம் வைத்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவா?

---பிள்ளைகளுக்கு தினமும் ஒரு வகுப்பில் ஒதிக்கொடுத்துவிட்டால் நலமாக இருக்குமே!

---பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கு நேரமும் இல்லை. பள்ளியில் ஓதிக் கொடுக்க ஆலிமாக்களும் இல்லை. இம்மைக்குத்தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.

---மறுமைக்கான கல்வியில் எதுவும் முன்னேற்பாடுகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆண் பிள்ளைகள் எங்கும் ஓதிக்கொள்ளலாம். பெண் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு தெருவிலும் ஆலிமாக்களை வைத்து அவசியம் ஓதிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குர்ஆன் முக்கியம் இல்லையா? மார்க்க கல்வி முக்கியம் இல்லையா?

---இமாம் ஷாஃபி பள்ளியில் ஆண்டு விழாவுக்காக ஒவ்வொரு பிள்ளைகளிடமும் நாம் கட்டும் ஃபீஸ் பணத்தில் சேர்த்து வாங்கிக்கொள்கிறார்கள்.

---என் மகளும், பிற பிள்ளைகளும் விளையாட்டிலும் சூரா போட்டியிலும் சேர்ந்திருந்தார்கள். பிள்ளைகள் தோற்று விட்டார்கள்.அதனால் பரிசு கொடுக்க வில்லை, பரவாயில்லை. நாம் ஆண்டு விழாவுக்காக பணம் கட்டுகிறோம். ஒரு ஆறுதல் பரிசு கூடவா பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது. எவ்வளவு ஆசையோடு பிள்ளைகள் பயிற்சி எடுத்து போட்டியில் சேருகிறார்கள்.

---பிள்ளைகளின் மனம் எவ்வளவு வேதனை அடைகிறது. அனுபவம் பெற்ற மூத்தவர்கள் பணியில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் உள்ளங்களை அறியாதவர்களா? பணியில் இருக்கிறார்கள்?. நாங்கள் கட்டும் பணத்தில் சிறிய பிளேட் வாங்கி ஒரு கலர் பேப்பரில் சுற்றி பிள்ளைகளுக்கு ஆறுதல் பரிசு கொடுத்தால் அந்த பிள்ளைகளின் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சி அடையும். இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும் பொறுப்பாளர்களுக்கும், நடத்துபவர்களுக்கும்.

கல்வி கூடமும், ஒவ்வொரு தெரு ஜமாஅத்தும் பிள்ளைகளுக்கு ஆலிமாக்களை வைத்து குர்ஆன் ஒதிக்கொடுக்க முயற்சிகள் செய்யவேண்டும். செய்வார்களா?????????????????????????????????????

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அலாவுதீன் அவர்களின் ஆதங்கத்தில் நானும் முழுமையாக உடன் படுகிறேன்.

மேல் உள்ள பின்னூட்டத்திற்கு பள்ளியின் நல் உள்ளங்கள் பதில் தரவேண்டும்.

பெண்களுக்கு என்று எல்லா தெருக்களிலும் குர் ஆன் ஒதும் பயிற்சிமையங்கள் இல்லை என்பது வேதனையே.

ஆண் பிள்ளைகளுக்கும் குர் ஆண் ஓதிக்கொடுக்க பள்ளிகள் உள்ளது போல் பெண் பிள்ளைகளுக்கும் குர் ஆண் ஒத கற்றுத்தருவதற்கு ஒவ்வொரு தெருவிலும் ஆலிமாக்களை வைத்து பள்ளிகள் உருவாக வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், இமாம் ஷாஃபி போன்ற பள்ளிகளே குர் ஆண் ஓதுவதற்கான சிறப்பு பயிற்சிகள் எல்லான் மாணவ மாணவிகளுக்கும் செய்யலாமே.

பரிசு பெறும் மற்ற மாணவமணிகளுக்கும் எங்கள் துஆவும் வாழ்த்துக்களும்..

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ் !...பரிசு பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.

Unknown said...

இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்பகால மாணவனாகிய நான், சந்தோஷத்தை உள்ளூர உணர்கிறேன். நானும் இதுபோல் பரிசுகளை வாங்கி பல வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன். (இப்போதும் ஒரு பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எஞ்சியுள்ளது)

எனக்கு எழுத்துடன் மார்க்கத்தையும் போதித்த சிறந்த பள்ளிக்கூடம் அது. என் நினைவில் நிற்கும் என் ஆசிரியப் பெருமக்களான பாத்திமா டீச்சர், குர்ஷிதக்கா, சந்திரா டீச்சர், ராஜி டீச்சர், புலவர் சகுந்தலா, மும்தாஜ் உஸ்தாத் மற்றும் அவர்களின் கணவரான தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடுடைய எங்களின் கணக்கு வாத்தியார், பாத்திமா உஸ்தாத், ஷாஜஹான் உஸ்தாத், பத்மா டீச்சர், கிருஷ்ணகுமாரி டீச்சர், ளூp வில்லிப்புத்தூரை சேர்ந்த டீச்சர் (மன்னிக்கவும் கணக்கு வாத்தியார் பெயர் போலவே இவர்களின் பெயரும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) ஆகிய அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் கிட்டங்கி தெருவில் துவங்கிய பள்ளியில் விளையாடிய நாட்களும், பின் இடம் மாறிய பள்ளிக்கூட மரத்தில் பஞ்சுக் கொட்டை பொறுக்கிய நாட்களும், என் கால் மேல் பாம்பொன்று ஏறி வகுப்பறைக்குள் சென்ற அந்த திக் திக் நிமிடங்களும், பார்க் வாட்ச்மேன் ரேடியோவில் அடிக்கடி ஜன கன மன பாடல் கேட்ட நினைவுகளும், இமாம் ஷாஃபி பள்ளி ஆயா குடும்பத்தின் கரிசனமும் கூடவே நினைவுக்கு வருகிறது.

(ஐந்தாம் வகுப்புக்கு மேல் ஆம்பள பசங்களுக்கு அனுமதியில்லை வேற பள்ளிக்கூடத்தை பாத்துக்குங்கன்னு அப்போ வெளியே அனுப்பிட்டாங்க)

மறவா நினைவுகளுடன்
அதிரை அமீன்

ZAKIR HUSSAIN said...

முதலில் இந்த போட்டோ எடுத்தவருக்கு பாராட்டுக்கள். இவ்வளவு தெளிவாக இப்போது நல்ல கேமரா வைத்து இருப்பவர்கள் கூட மேனுவல் படிக்காமல் முன்பு இருந்த [1975- CLICK III ] கேமராவில் எடுத்த படம் மாதிரி எடுக்கிறார்கள். அட்லீஸ்ட் படம் எடுத்தவர் மேனுவலை சரியாக படித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

மேனுவலை சரியாக படிக்காமல் தூக்கி கடாசிய என் சொந்தக்காரப்பையனை என் அண்ணன்[காக்கா] கேட்டது " ஏன்டா அது கடலை மிட்டாய் பாக்கெட்டில் உள்ள லேபில்னு நெனச்சியா?'

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா: இப்போ என்கிட்டே Nikon D90 ஒன்னு இருக்கு... மெய்யாலுமே அதன் நுனுக்கம் தெரிந்திருந்தாலும் ஏன் கேட்லாக்கை manual வாசிக்க மனம் மல்லுக் கட்டுகிறதுன்னுதான் தெரியவில்லை ! படிக்க முயற்சிக்கிறேன் :)) ஒரு வேலை அதனைப் படித்து விட்டால்... திரைக்குப் பின்னாலிருப்பதும் தெரிந்திடுமோ (முயற்சித்துதான் பார்க்கிறேனே)

அபுஇஸ்மாயில் : ஜாஹிர் காக்காவின் (வெள்ளி மோதிரக்) கையால் ஒரு குட்டு என்சார்பாக வைத்துக் கொள்ளவும்

அதிரைநிருபர் said...

மேலும் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்படுள்ளன.

மேலும் இது போன்ற பள்ளி நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் உடனே நம் அதிரைநிருபரில் பதிந்துவிடுகிறோம்.

கல்வி சாதனை தொடர்பான செய்திகளுக்கு நிச்சயம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

sabeer.abushahruk said...

ஜாகிர், மானுவலோடு ஆப்ஜெக்ட் பொருத்து ஷட்டர் ஸ்பீட் அப்பர்ச்சர் போன்றவற்றோடு உன்னைப்போல் கோனங்களில் தனித்துவமும் வேண்டுமய்யா! மீராஷா (எம் எஸ் எம்) ஒய் கீப்பிங்க் கொயட்?

அபு இஸ்மாயில் said...

கருத்திட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சகோ. அலாவுதீன் எனக்கு தெரிந்த மட்டும் நன்கு படித்த ஆலிம்கள் மூன்று நபர் பணியாற்றுகிறார்கள் அது தவிர இரண்டு ஆலிம்கள் வேலை செய்கிறார்கள் ஒரு ஆலிமிடம் குரான் ஒதிகொடுப்பது சம்பந்தமாக பேசும்பொழுது வரும் கல்வி ஆண்டில் இன்ஷா அல்லாஹ் நடத்துவதற்கு முயற்சி நடப்பதாக சொன்னார் அனைவரும் துஆ செய்யவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு