Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று 18 02 2011 22

ZAKIR HUSSAIN | February 18, 2011 | , ,

யார்ஷகும்பா [ YARSHAGUMBA ]

இதன் பெயர் ஏதோ பழைய தெலுங்கு டப்பிங் படத்து பெயர் மாதிரி இருந்தாலும் இதன் மதிப்பு இப்போது உலக அளவில் பேசப்படுகிறது. ஒரு கிலோ இப்போது USD 10,000/= வரை விலை போவதாக பி பி சி வெப்சைட் செப்புகிறது. இது உருவாகும் விதம் தான் கொஞ்சம் லாஜிக் உதைக்கிறமாதிரி இருக்கிறது.  விளையும் இடம் நேப்பாளத்தின் மிக உயர்ந்த மலைகளின் ப்ளேட்டூக்களில். அங்கு போய் யார்ஷகும்பாவை அறுவடை செய்வதை விட மலையின் அமைதியில் மனம் லயித்துவிடும். தேவைப்பட்டால் எக்கோ வருகிறமாதிரி பாட்டு பாடலாம்.

இதன் மருத்துவ குணங்களுக்குதான் இவ்வளவு மதிப்பு. இது சுவாசம், [Respiratory] ரத்த ஒட்டம் சம்பந்த பட்ட [Hematological] விசயங்களிலிருந்து _______ போட்டு எழுதும் விசயங்கள் வரை கை கண்ட மருந்து. [ கை எப்படி காணும்?]

இதை அறுவடை செய்ய நேப்பாளத்து மக்கள் செய்யும் வீர சாகசங்களை பார்த்தால் ரத்தம் உறையும். ஏறக்குறைய 5000 அடி மலைப்பிரதேசத்துக்கு கால் நடையாகவே சில தினங்களுக்கான உணவு எல்லாவற்றையும் எடுத்து [தலையில் கட்டிக்கொண்டு போகிறார்கள்] நமது பசங்களை இந்த வேலைக்கு அனுப்பினால் நிச்சயம் புறப்படுவதற்க்கு முதல் நாள் பாஸ்போர்ட்டை ஒழித்து வைத்து விட்டு "காணாப்போயிடுச்சே" என சூடம் அணைத்து சத்தியம் செய்வார்கள். அமெரிக்கர்கள் இதை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து சொந்தமாக ஒரு சுழலை உறுவாக்கி விளைச்சலை ஆரம்பித்து விட்டார்கள். எலிக்கு கட்டியை உறுவாக்கி பிறகு இந்த மருந்தை செலுத்தி கட்டி கரைவதின் மூலம் கேன்சர் சம்பந்தமான மருந்து கண்டுபிடிக்க ஒரு கண்டுவிட்டதாக இயம்புகிறார்கள். கூடிய சீக்கிரம் வேப்பை மரத்துக்கு உரிமை கொண்டாடியததை இதிலும் செய்யலாம். நேப்பாள் காரன் கத்தி எடுத்தால் ரத்தம் காட்டாமல் வைக்க மாட்டான் என்று ஒரு கூர்க்காவை காண்பித்து எனக்கு சின்ன வயதில் சொன்னார்கள். அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில ஃபைல்கள் இன்னும் இன்றைய நேப்பாளத்து ஆட்களிடமும் இருப்பதாக நாம் நம்புவோமாக.

மகள்

மகளின் மீதான பாசத்தை சபீரின் கவிதையில் படித்து இருப்பீர்கள். அந்த வரிகள் எல்லாம் எல்லா தகப்பனுக்கும் / மகளுக்கும் பொருந்தும். சமீபத்தில் நான் Air-crash Investigation லில் ஒரு தகப்பன் [வெள்ளைக்காரர்] ஒரு கடற்கரை ஒரத்தில் ரெஸ்டாரன்ட் வைத்து இருக்கிறார். அது அவர் வாழ்ந்த இடத்துக்கு வெகு தூரமானது. அவரது ரெஸ்டாரன்ட்டின் கதவை திறந்தால் அந்த கடல் தெரியும். அப்படி என்ன இருக்கிறதென்றால் அந்த கடற்கறைக்கு பக்கத்தில் தான் , தான் ஆசையாக வளர்த்த மகள் பயணம் செய்த விமானம் கடலில் விழுந்து தனது மகளுடைய உடலுடன் தனது சந்தோசமும் புதைந்து விட்டதாக சொன்ன நிமிடத்தில் ஏதோ ஒரு சோகம் எல்லாரையும் தாக்க்கியதை உணர்ந்தேன்.அந்த விமான ட்ரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன். விபத்துக்கு காரணம் ஒரு சின்ன ஒயரிங் மிஸ்டேக். ஒரு பெரிய தொழில் செய்த ஒரு மனிதன் [ ஒரு பெரிய நகரத்தில் ] மகளின் பாசமும் பிரிவும் தாங்காமல் இப்படி ஒரு முடிவெடுத்து 'என் மகள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்' என்று சொல்லும்போது ...வார்த்தைகள் இல்லை இனிமேலும் எழுத....

குப்பைப்பட்டினம் = AdiramPattinam



அதிராம்பட்டினத்தின் சுகாதார சீர்கேடுகள் இப்போது ரெட் அலர்ட்டில். நம் ஊரில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் பார்த்ததை செயல்படுத்தாமல் 'துபாயிலெ ரோட்டிலெ சோறு போட்டுத்தின்னலாம்"என லந்து பண்ணுவதால் வந்த விழைவா தெரியவில்லை; முன்பு இந்த டயலாக்கை பினாங்கு ஆட்கள் மொத்த குத்தகைக்கு எடுத்து இருந்தார்கள்.எங்கு பார்த்தாலும் பாலிதீன் பைகள்., டீ குடித்துவிட்டு கசக்கி வீசப்படும் லைட் பால்ஸ்த்ரீன் கப், குடி தண்ணீரும் ப்ளாஸ்டிக் பைகளில். ஊரு உருப்பட 200 வருசம் ஆகுமா? ஊரில் உள்ள கொசுக்களுக்கு இப்போது உடனடை தேவை Fogging Machine இது கொசுக்களை கட்டுப்படுத்திவிடும்.

அதன் பிறகு ஊர் உருப்பட சில யோசனைகள்.

1. ஜும்மா பிரசங்கத்தில் சுத்தம் பற்றி எடுத்து சொல்ல வேண்டும்.

2. ஜும்மா போய் வந்தவர்கள் வீட்டில் வந்து சாப்பாட்டு தட்டையில் பாயுமுன் அங்கு என்ன சொன்னார்கள் என்று வீட்டில் உள்ளபெண்களிடமும் சொல்ல  வேண்டும். [ அப்போது சீரியல் இல்லாததால் எக்ஸ்ட்ரா தைரியத்தை வரவழைக்க வேண்டியதில்லை]

3. சின்ன வயது மாணவர்களிடம் சொல்லி நமது தெருவை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி அதன் முதல் படியாக "கூட்டு முயற்ச்சியில்" ஒரு விடுமுறை நாளில் எல்லோரும் சுத்தம் செய்யும் வேலையை தன் வேலையாக செய்ய வேண்டும்.நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் தெரு மையவாடி & தெரு இரண்டையும் சுத்தம் செய்தோம். பிறகு அடுத்த நாள் தெருக்குளத்தை தூர் வாரும் வேளையை தெருவில் உள்ள அனைத்து ஆண்களும் செய்தோம்.

முயற்ச்சியை ஆரம்பிக்காமல் எதுவும் நடக்காது. முன்பு ஒருமுறை அதிரை போஸ்ட்டில் இது பற்றி ஒரு கட்டுரை படங்களுடன் வந்தது.

நம் ஊர் சுத்தக்குறைவாக இருப்பதற்க்கு ஆதாரமாக சில போட்டோக்கள் உடன் யாராவது எனக்கு அனுப்பினால் நன்மையாக இருக்கும். தமிழ்நாடு சுகாதார அமைச்சில் 2009 - 2010 பட்ஜெட்டில்Rs 383Lakhs இது போன்ற Epidemic Deseaseக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

- ZAKIR HUSSAIN

22 Responses So Far:

abufahadhnaan said...

சகோதரர் ஜாகிர் நமதுருக்கு புதிய பெயர் வைத்து எங்களை எல்லாம் கவலை கொள்ள வைத்து விட்டார்.
இந்த வலைதளத்தை உலகளவில் வாசகர்கள் பார்கிறார்கள் நமதுரை பற்றி என்ன நினைப்பார்கள்?
அதிரை வரலாறில் இந்த பெயரை பற்றி வரலாறு இல்லையா ?
ஜாகிர் அவர்கள் அதற்கான ஆதரங்களை அனுப்பிவைக்க வேண்டும் ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்காவின் கதம்பம் சொலித் தருவது... சுகமான சுவாசத்துடனும் பாசத்துடனும் இருந்திடும் நாம் ஏன் சுகாதாரத்துடன் இந்திடக் கூடாது... ! குப்பைகளுக்கு குட்பை சொல்லி வைத்திருப்பதாக சமீபத்திய தகவல் காரணம் ஓட்டு பொருக்கிகள் அங்கே உலாவருவதாலே...

அதிரைப்பட்டினம் அதிரைப்படினம்தான் என்றும்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

//நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் தெரு மையவாடி & தெரு இரண்டையும் சுத்தம் செய்தோம். பிறகு அடுத்த நாள் தெருக்குளத்தை தூர் வாரும் வேளையை தெருவில் உள்ள அனைத்து ஆண்களும் செய்தோம்.//

தேர்தல் போன்றவைகளில் அரசியலுக்காக போட்டிப்போட்டுகொண்டு செயலாற்றகும் பல இயக்கங்கள், சுத்தம் சுகாதரத்தில் செயலாற்றலாமே.

நீங்கள் சிறுவயதில் செயலாற்றியது போல், இன்று பள்ளிகளில் NSS போன்ற சேவை அமைப்புகள் மற்ற ஊர்களுக்கு சென்று சேவை செய்வதைவிட உள்ளூரிலே செய்யலாமே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// abdurrahman சொன்னது…

அதிரை வரலாறில் இந்த பெயரை பற்றி வரலாறு இல்லையா ?
ஜாகிர் அவர்கள் அதற்கான ஆதரங்களை அனுப்பிவைக்க வேண்டும் ? //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் abdurrahman, வரலாற்றி இருந்தால் தான் பெயர்வைக்க வேண்டுமா?

மேல் உள்ள புகைப்படங்களே ஆதாரம். இரண்டு புகைப்படங்களில் உள்ள தேதியை பாருங்கள். மேலும் புகைப்படங்கள் விரிவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு மழைப் பெய்தால் போதும், அதிரையிலும், பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பிவழிவது எல்லோரும் அறிந்தது தானே.

அதிரை பேரூராட்சியாலும், தெரு ஜமாஅத்துக்களாலும் இதுவரை சுகாதாரத்துக்காக எந்த முறையான செயல்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பதே நடைமுறை உண்மை. இதில் ஒரு சில வார்ட் உறுப்பினர்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஈசியாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு இருக்காது

அது போல் கஷ்டப்பட்டு கிடைக்கும் பொருளே மதிப்பும் மரியாதையும் கிடக்கும்.

Shameed said...

abdurrahman சொன்னது…

//இந்த வலைதளத்தை உலகளவில் வாசகர்கள் பார்கிறார்கள் நமதுரை பற்றி என்ன நினைப்பார்கள்?//


ஆக நம்ம ஊரு இவ்வளவு மோசமா உள்ளதே இதை தூய்மை படுத்தா என்ன செய்யலாம் என்று யோசிப்பார்கள்.

sabeer.abushahruk said...

மருத்துவம், வாழ்வியல் மற்றும் ஊர்நலன் என்கிற மூன்று முக்கிய அம்சங்களின் தொக்குப்பு கனககச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அமெரிக்கர்கள் அடித்துக்கொண்டு போவதற்குமுன் நேபாளம் விழித்துக்கொண்டால் கூர்க்கா பாரம்பரியத்திலிருந்து வெளியே வரும் அளவுக்கு துட்டு கிடைக்கும்.

மகள் பாசக்கதை ரொம்ப டச்சிங்க்.

புகைப்படங்களே சாட்சி சொல்லுது நம்மூர் குப்பைப்பட்டினம் ஆகும் தூரம் வெகு தூரத்தில் இல்லை என்பது: யாரும் இறங்கி வேலை செய்யாத பட்சத்தில்...

Shameed said...

//தெருக்குளத்தை தூர் வாரும் வேளையை தெருவில் உள்ள அனைத்து ஆண்களும் செய்தோம்.//


அஸ்ஸலாமு அழைக்கும்

தெரு வாசிகள் அனைவரும் உற்சாகத்துடன் வியர்வை சிந்தி குளம் சுத்தம் செய்ததை நேரில் கண்டேன்

அது போல் ஊருக்கே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தினால் என்ன ?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பிரியாணி சாப்பிட்ட களைப்பில் எல்லோரும் நல்ல தூக்கமா?????

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பிரியாணி சாப்பிட்ட களைப்பில் எல்லோரும் நல்ல தூக்கமா????? //

அஸ்ஸலாமு அலைக்கும்,

இல்லை ஹமீது காக்கா எல்லோரும் அதிரையில் குப்பை சேர்ந்துகிடக்கும் இடங்களை போட்டோ எடுக்கப்போயிருக்காங்க போல தெரியுது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Sஹமீத் காக்கா : ஊரிலிருக்கும் நட்புகளிடமும் சொந்தங்களிடமும் குப்பைகளை நிழல்படங்களில் குப்பைகளாக எடுத்தாருங்கள் என்றுதான் கேட்டிருந்தோம் ஆனால் அவர்கள் மூக்கில் விரல் வைத்துச் சொல்கிறார்கள் (நாற்றமெல்லம் இல்லை) அவ்வளவு சுத்தமாக தெருக்கள் இருக்கிறது தேர்தல் கைகூடி வருதால் அரசியல் சாக்கடை சீக்கிரமே ஊரில் ஓடயிருப்பதால் குப்பைகளுக்கு கொஞ்சம் விடை கொடுத்திருக்கிறார்களாம் துப்புறவு பணியாளர்கள் !

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//இல்லை ஹமீது காக்கா எல்லோரும் அதிரையில் குப்பை சேர்ந்துகிடக்கும் இடங்களை போட்டோ எடுக்கப்போயிருக்காங்க போல தெரியுது.//


வலைக்கும் முஸ்ஸலாம்

நம்ம ஊரில் குப்பையை போட்டோ எடுக்க வெளியோ போகவேண்டிய அவசியம் இல்லையோ
இருந்த இடத்தில் இருந்து கொண்டே போட்டோ எடுத்து தள்ளலாம்,எங்கு பார்த்தாலும் குப்பை காட்சி தான்

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//சாக்கடை சீக்கிரமே ஊரில் ஓடயிருப்பதால் குப்பைகளுக்கு கொஞ்சம் விடை கொடுத்திருக்கிறார்களாம் துப்புறவு பணியாளர்கள் ! //


அஸ்ஸலாமு அழைக்கும்

முள்ளை முள்ளால் எடுப்பது போல்
குப்பையை சாக்கடையால் சுத்தம் செய்வது தற்போது ஊரெங்கும் நடந்தேறும்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) --- யார்ஷகும்பா [ YARSHAGUMBA ] ஒரு கிலோ USD 10,000/=. இவ்வளவு விலைக்கு வாங்குவதற்கு ஒரு வீடு கட்டலாம் போல் தெரிகிறது.பணக்காரர்கள் மட்டும் வாங்கும் மருந்து (டாடா போல் உள்ளவர்கள் வாங்கலாம்).

தந்தை மகள் பாசத்தை விளக்க வார்த்தை இல்லை!

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! (அல்குர்ஆன் : 74: 1 - 5)

வல்ல அல்லாஹ் தூய்மையாக இருக்கும்படியும், அசுத்தத்தை வெறுக்கும்படியும் கூறுகிறான். இஸ்லாம் எல்லா விஷயங்களிலும் தூய்மையை கடைபிடிக்க சொல்கிறது. இப்படியே போனால் அதிரையில் எல்லா இடத்திலும் முகத்திற்கு கவசம் அணிந்துதான் செல்ல வேண்டி இருக்கும்.

பணம் சம்பாரிப்பது எதற்காக? தொழுவது எதற்காக? இஸ்லாம் வலியுறுத்தும் முக்கியமான விஷயத்தில் இப்படி தூங்கிக்கொண்டு இருந்தால் யார் வந்து நம்மை எழுப்புவது. சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்தால் நோய்களுக்கு நாம் விருந்து வைத்து அழைப்பது போலாகி விடாதா? பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஊர் உருப்பட சில யோசனைகள் நல்ல யோசனைதான். யார் ரிப்பன் கட் செய்வது? யார் தொடங்கி வைப்பது? யார் போட்டோ எடுப்பது? வல்ல அல்லாஹ்வுக்கு எல்லா காரியத்திற்கும் பதில் சொல்ல வேண்டும். பாதையில் கிடக்கும் முள்ளை அகற்றினாலும் அதற்கும் வல்ல அல்லாஹ் நன்மையை தருகிறான். தெருவை குப்பை காடாகவும், கழிவு நீர் செல்லும் இடமாகவும் மாற்றியதற்கும் இதை கண்டும் காணாமல் செல்பவர்கள் வல்ல அல்லாஹ்விடம் இதற்காக பதில் சொல்ல நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டால் - இன்ஷாஅல்லாஹ் ஒரு விடிவு பிறக்கும்.

ZAKIR HUSSAIN said...

நன்றி Tuan Haji Shahul, Sabeer, Alavudeen.s, Thajudeen அனைவருக்கும். சகோதார் அபு இப்ராஹிம் தந்து உதவிய படங்களுக்கும் அவரது முயற்சிகளுக்கும் மீண்டும் நன்றி.

சகோதரர் அப்துர்றஹ்மான்...உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதையும் மீறி நம் ஊர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் என்னால் உணர முடிகிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஆரோக்கியத்தின் விலையை சொல்லி ஆரம்பித்து பின்
ஆரோக்கிய கேட்டில் நமதூர் இருப்பதை தன் எழுத்தில் நன்கு இணைத்து.வழக்கம்போல்
ஊரின் நலனில் அக்கரை கொண்டு சகோ.ஜாஹிரின் எழுத்து உள்ளது.விழிப்புணர்வு
கட்டுரை மிக,மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.உங்கள் சமூக விழிப்புணர்வு
பிரச்சாரம் தொடரட்டும்.

Yasir said...

யாரு இந்த கும்பா ஜாஹிர்காக்கா...அறிந்திரதாத புதிய தகவல்..பகிர்ந்தற்கு நன்றி...
தந்தையின் பாசத்திற்க்கு எல்லையே இல்லை என்பதற்க்கு நீங்கள் சொன்ன சம்பவம் நல்ல உதாரணம்
பிரைவேட் முனிசிபாலிட்டி வைத்து நமதுரை சுத்தம் செய்வதற்க்கு கேபாசிட்டி படைத்த பணக்காரர்களை கொண்ட நமதூரின் நிலமை பரிதாபம்தான்...ஜீம்மாவில் பிரசங்கம் என்பது நல்ல யோசனை...அமுல் படுத்த வேண்டும்....

Riyaz Ahamed said...

சலாம்
பாசத்திற்கு ஒரு வரைமுறை இல்லை, இந்தமுறை கூட நெஞ்சை நெகிழ வைத்தது தான்,
அதிராம்பட்டினம் குப்பை பட்டினமனால் 23 ஆம் புலிகேசியிடம் சொல்லி தக்க பரிசு வங்கி தர சிபாரிசு செய்கிறேன்.அவங்க அவங்க வீட்டை சுத்தமா பார்த்துகிரங்க - வெளியே எப்படி இருந்தால் என்ன? இந்த என்ன என்பதை பத்தி தெரிந்தும் தெரியாத மாதிரியே இருக்கங்கபா

sabeer.abushahruk said...

எலே உன்னைய எங்கெங்கோ தேடுறோம் நீயி இவன் பின்னால வந்து ஒளிஞ்சிக்கினியா? குப்பைப்பட்டினம் ஆக விட மாட்டோம்டா நாங்க. இந்த படிப்பு மேட்டரை முடிச்சிட்டு வர்ரோம் பொறுங்கடா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன வலைவீசித் தேடிப் புடிக்கிற மாதிரியிருக்கு !?

Unknown said...

அதிராம்பட்டினமா அல்லது குப்பைப்பட்டினமா?
http://adiraipost.blogspot.com/2011/02/blog-post_26.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு