அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்று மாலை நேரத்தில் சுய அறிமுகமில்லாத Adiraian என்ற பெயரில் அன்பு பாசமிகு ஒரு சகோதரர் ஒரே பின்னூட்டத்தை பல முறை நம் அதிரைநிருபரில் பதிந்து அவர் நேரத்தையும் நம் பொன்னான நேரத்தையும் அநியாயத்துக்கு வீணடித்துவிட்டார். பாவம் உண்மை நிலவரம் தெரியாமல் அப்படி செய்திருப்பார் என்று எண்ணுகிறோம்.
பொதுவாக சுய அறிமுகமில்லாதவர்களின் பின்னூட்டத்திற்கு அதிரைநிருபர் குழு பதில் அளிப்பதில்லை. இருந்தாலும் இந்த சகோதரர் தன் வேகத்தை பின்னூட்ட எண்ணிக்கையில் காட்டியதால் பதில் தரப்படுகிறது. சுய அறிமுகமில்லாத அந்த சகோதரர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருவதற்கு எந்த தயக்கமும் இல்லை, பயமும் இல்லை.
அதிரைநிருபர் எந்த வலைப்பூவுக்கும் பேட்டியில்லை என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். அதிரைநிருபர் வலைப்பூவை நடத்துவது யார் என்பதை நாங்கள் அறிவித்துவிட்டு தான் செய்கிறோம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதிரை வலைப்பு மற்றும் அனைத்து அதிரை வலைப்பூ நடத்துபவர்கள் எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்து வருகிறது. இது எந்த வித காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தபடுவதில்லை என்பதை அதிரைநிருபர் பக்கம் வரும் அனைத்துவாசகர்களும் அறிவார்கள். இது சொல்லித்தெரியவேண்டியது இல்லை.
சமூக அக்கரையுடன் எழுதியிருக்கும் தங்களின் கருத்தை முதலில் வரவேற்பதில் பெருமையடைகிறேம். இருந்தாலும் வலைப்பூ நடத்துவது என்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம், இதை யாரும் தடைபோட முடியாது.
ஒற்றுமையுடன் ஒன்றினைந்து அதிரைக்காக வலைப்பூ ஒன்றினைந்து நடத்த நாங்கள் தயார், கலந்தாலோசனைக்கும் தயார், விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் கீழே எங்கள் மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
சுய அறிமுகமில்லாத சகோதரர் கேள்வி கேட்டதால் எந்த கோபமும் இல்லை, மகிழ்ச்சியே அதிகம். ஏன் என்றால் நம்மை பற்றி தவறாக கருதும் அன்பர்களுக்கு தெளிவு பெருவதற்கு ஒரு வாய்பை ஏற்படுத்திவிட்டார். பின்னூடமிட்ட சகோதரர் உண்மையாளராக இருக்கும் பட்சத்தில் எல்லோரும் ஒன்றினைந்து அதிரைக்கான ஒரு தரமான இணையத்தளத்தை உருவாக்க அழைப்புவிடுங்கள் முதலில் வருபவர்கள் நாங்களாக இருப்போம். அல்லாஹ் போதுமானவன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பூவை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியமில்லை. ஒழித்துக்கட்டும் விதமாக அதிரைநிருபரில் எந்த செய்தியாவது வெளியிட்டுள்ளோமா? ஏதாவது ஒரு பதிவையோ, பின்னூட்டத்தையோ எடுத்துக்காட்ட முடியுமா? பின் எப்படி ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம் என்று சொல்லுவது சிறிதளவும் அறிவுக்கு பொருந்தாது என்பது இணையத்தில் அதிகம் ஈடுபடுத்திக்கொண்டுள்ள அதிரைவாசிகள் அனைவருக்கும் தெரியும்.
எல்லா மக்களுடைய கண்ணியம் கருதி தவறான பின்னூட்டங்களை உடனுக்குடன் நீக்கி வருகிறோம் என்பதை மட்டும் இங்கு அனைத்து சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், ஒற்றுமை மற்றும் இஸ்லாம், கல்வி, மருத்துவம் போன்ற நல்ல விசயங்களில் கவணம் செலுத்திவருகிறோம்.
எங்களின் பணி கல்வியிலும், உடல் ஆரோக்கியத்திலும் மற்றும் மார்க்க விசயங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே.
இறுதியாக எல்லோரும் அறிந்துக்கொள்வதற்காகவே, கருத்துவேறுபாடு இருந்தது உண்மை. ஒற்றுமை கரம் நீட்டப்பட்டது ஆனால் பிரச்சினையை பற்றியே பேச்சுக்கள் தொடர்ந்ததால் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. குறிப்பிட்டுள்ள வலைப்பூவின் நிர்வாக சகோதரர்கள் ஊரில் உள்ள சில பெரியவர்களிடம் கலந்தாலோசனை செய்து அதிரைநிருபர் குழுவில் உள்ள தாஜுதீனை அழைத்து ஒற்றினைத்து செயல்படலாம் என்று மட்டும் பேசினார்கள். பிறகு வேறு எந்த நடவடிக்கைகளும் இது தொடர்பாக இல்லை. இதுவரை எங்களுக்கு எந்த ஒரு அழைப்போ வரவில்லை.
நாங்கள் எங்கள் வழியில் அமைதியாக வெற்றிநடைபோட்டு வருகிறோம். எங்களின் அனுகுமுறைக்கு கிடைத்த முதல் வெற்றி அதிரையில் அதிரை இஸ்லாமிய கல்வி அரக்கட்டளை மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷனுடன் இணைத்து கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தினோம். எங்களால் முடிந்தது விழிப்புணர்வு சமூக அக்கறையுள்ள சகோதரர்களின் உதவியுடன் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு காணொளியை youtubeல் பதிவேற்றம் பல சிரமத்துக்கு மத்தியில் செய்துவருகிறோம்.
அமைதின் ஆளுமை மட்டும் தான் ஆணவத்தின் ஆளுமை கிடையவே கிடையாது. அல்லாஹ் பாதுகாப்பானாக.
சமுதாய பணிசெய்துவருகிறோம். ஆர்வமூட்டுங்கள். தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள். இன்னும் அதிரையில் எவ்வளவோ நம் மக்களுக்காக நன்மைகள் நிறைய செய்ய வேண்டியுள்ளது. நமக்கு எந்த வித சுய நலமும் இல்லை, நூறு சதவீதம் பொது நலனே நம் பார்வையில். இறைவனின் திருப்தியே எங்களின் ஒரே நோக்கம். வாருங்கள் ஒன்றினைவோம். வருங்கால நம் சமுதாயத்தில் தலைவிதியை மாற்றுவோம்.
இது ஒரு சாதாரண விசயம் இதை பொதுவில் பேசி எல்லோருடைய நேரத்தையும் வீணடிப்பதைவிட, நேரில் பேசிக்கொள்ளலாம் அல்லது அலைப்பேசியில் பேசிக்கொள்ளலாம்.
அன்புடன்
M.தாஜுதீன் மற்றும் அதிரைநிருபர் குழு சகோதரர்கள்
+97150 8858480
+97155 4212575
18 Responses So Far:
அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களுக்கு வந்த பின்னுட்டத்தை வேறு ஒரு வலை தளத்தில் காண நேர்ந்தது
அதை கண்டதும் அதிர்ச்சி யாக இருந்தது காரணம்
அங்கு சுய அறிமுகம் இல்லாத ஒருவரின் பின்னுட்டத்தை அவர்கள் மட்டுறுத்தாமல் எப்படி வெளிட்டார்கள் என்பதுதான்
மேலும் அதை இதுவரை நீக்கவில்லை இதை எல்லாம் சிந்தித்து பார்த்தல் அப்பன் குதுருக்குள் இல்லை என்பது போல் உள்ளது
அன்புத் தம்பி தாஜுதீன்,
கேள்வி எழுப்பியவர் தம்மை யார் என்று வெளிக்காட்டாத சூழ்நிலையிலும் அவரை மார்க்கம் சொன்ன சகோதரத்துவத்துடன் மதித்து நீங்கள் விளக்கங்கள் சொல்லியிருப்பது உங்கள் பெருந்த்தன்மையைக் காட்டுகிறது.
ஒற்றுமைக்காக நீங்கள் தயாராக இருப்பதை வெளிப்ப்டையாக சொல்லியிருப்பதும், எந்த தளத்திற்கும் எதிராக ஒரு படைப்போ பின்னூட்டமோ இடப்படவில்லையென சூளுரைப்பதும் உமது நேர்மையைக் காட்டுகிறது.
இந்நிலையில் நடுநிலையான் எந்தவொரு அதிரைச் சகோதரரும் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் சுய அறிமுகத்தோடு விவாதித்து நல்ல்தொரு தீர்வை எட்டுவதைத்தான் விரும்புவர்.
தவிர, சுய் அறிமுகம் இல்லாதோரின் கேள்விகளுக்கு நீங்கள் மேலும் விளக்கம்சொல்ல் தேவையில்லை என்பதுவே என் கருத்து.
சகோதரர் அதிரையன்: வாருங்கள் நமக்கிடையே சலாம் சொல்லி மேற்கொண்டு பேசுவோம். வெற்றிபெருவோம்.
- சபீர் அபுஷாருக்
ஷார்ஜாஹ்.
email; sabeer.abushahruk@gmail.com
00971504826377
இன்று வரை இத்தளத்திற்கும், அத்தளத்திற்கும் என்ன சம்மந்தம் என்று எமக்கு தெரியாது.தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. எமக்கு தெரிந்தது நாம் அனைவரும் அதிரைவாசி..அவ்வளவுதான்.
எப்பொழுதும் மிகவும் ஆராய்ந்து சென்சார் போர்டை தாண்டி பின்னூட்டம் வெளிவரும். இது ஹேக்கிங் முறையில் நுழைந்ததா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சரி, எங்கோ தவறு நடந்திருக்கலாம்..தவறென்று தெரிந்தும், பலர் அதை சுட்டிக்காட்டியும் நீக்காமல் அத்தளத்தில் அச்சானிப்போல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கின்றது.
ப்ளாக் ஆரம்பிப்பது ஒன்னும் கட்சி ஆரம்பிப்பதுபோல் அல்ல. குடும்பம் பெரிதாக இருக்கும்போது வேறு வீடு கட்டுவதால் குடும்பம் பிரிஞ்சதாக கூறமுடியாது. எல்லாம் நன்மைக்கே.(என்று நினைத்தால்).
அதிரைநிருபர் எந்த வலைப்பூவுக்கும் பேட்டியில்லை என்பதை நாங்கள் நம்புகிறோம், உணர்கிறோம்.
அதிரை என்னும் பெயரும் இணையமும் எவன் வீட்டு தனி சொத்தும் இல்லை.நமக்கு எவனும் அத்தாரிட்டியும் இல்லை.
M.தாஜுதீன் மற்றும் அதிரைநிருபர் குழு சகோதரர்களே!
வீனர்களின் வெட்டி பேச்சுகளுக்கு உங்களின் பொண்ணான நேரத்தை ஏன் செலவு செய்ய வேண்டும்?
(தடித்த வார்த்தையென்று நீக்கவேண்டாம்)
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்
இது போன்ற விசயங்களுக்கு மெளனம் மிகப்பெரிய ஆயுதம்.இதை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் அது பயன் தரும்.
இந்த "ப்ளாக்"குங்களையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்திக்கச் சொல்லலாமா MSM(MR) ? :)
கட்டுரையில் சுட்டிக் காட்டிய அந்த தொடர் கருத்து கொட்டிக் கொண்டிருக்கும்போது நேற்று சென்னையிலுள்ள பாரதி டெலிகாம் நிறுவனத்தினரோடு பேச வாய்ப்பு கிடைத்தது அது வேற விஷயம்னு வச்சுக்குவோமே.
Sஹமீத் காக்கா, கவிக் காக்கா, அசத்தல் காக்கா மற்றும் தம்பிகள் ஹிதாயத், MSM(mr) தாங்கள் அறியாததல்ல ! இணையத்தில் பினையமும் நிகழும் அடுத்தப் பக்கம் வினையும் தொடரும்னு.
இன்று நேற்றா இதனைக் காண்கிறோம்.. கையையோ காலையோ தூக்கி காட்டி செல்ல இது ஒன்றும் கபடி விளையாட்டல்ல.
ஆக கருத்துச் சுதந்திரம்ங்கிற பேரில் தனிமனித தூற்றலும் அல்லது புத்தி சொல்கிறேன்னு குத்திச் சிரிப்பதும், அவரவர்களின் அற்ப சந்தோஷமே.. அதனை அவர்களே திரும்பத் திரும்ப வாசித்தால் கர்வம் இருப்பதாக கணவுதான் நிகழும் அது மெய்ப்பட்டதில்லை என்றும் பிறகுதான் தெரிந்து வருத்தம் கொள்வர் !
சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!.
விளம்பர உதவிகள் ஏதும் இன்றி,தங்களுகிடையே உள்ள கடினமான பணிகளுக்குமிடையே சமுதாய நலனுக்காக நேரம் ஒதுக்கி பல செய்திகளையும் பிரித்து ஆராய்ந்து, செய்திகளுக்கு தேவையான ஆதாரங்களையும்,புகைப்படங்களையும் சேகரித்து, பின் அதை இணையத்தில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கிற்காகவும் செய்திகள் வெளியிட்டால், அதை படிக்கும் வாசகர்கள், நண்பர்கள், சகோதரர்கள், அதன் நன்மையை நாடி தங்களின் கருத்துக்களை பதியவேண்டும்!.
ஏதோ குறை சொல்லவேண்டும், குறைகாண வேண்டும் என்ற நோக்கில் தங்களின் மனதிற்கு படும் எல்லாத்தையும் கருத்து என்று பதிவதும் சரியல்ல!. பதிவில் சொல்லப்பட்டுள்ளதை ஆதரித்து கருத்து கூறலாம். இல்லை பதிவில் உள்ள குற்றங்களை கண்டு அதை சரிசெய்ய தங்களின் கருத்தினை மிக வலிமையுடன் வைக்கலாம். வைக்கவேண்டும்!. இல்லை எனில் பதிவுகள் அனைத்திற்கும் ஆமாம்!. என்று ஜால்ரா போடும் கூட்டமாகிவிடுவோம்.அதுதான் ஓரு மூமினின் ஜிஹாத்தாக இருக்கமுடியும். ஓரு அரசனின் முன் அவன் தீமையை சுட்டிக்காட்டுவானின் ஜிகாதிகள் போன்றதும் ஆகும்!.
ஆனால் ஒருசிலர் "குற்றம் கண்டு குறை கடிந்து மடிவதே/மாய்வதே கற்றறிந்தவர் கடமை" என்று கருத்து சொல்வது சரியல்ல!.
என் இணையத்திலும் கருத்து என்று உளறிவிட்டு செல்வதையும் நான் அறிவேன்!. இருந்தாலும் நாம் சொல்லவரும் கருத்துக்களை மன வலிமையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டு வரவேண்டும். நிச்சயம் ஒருநாள் அதற்கு வலிமை சேரும்.
ஓரு கோரிக்கை!. அதிரை நிருபர் மற்ற இணையத்தோடு சேர்ந்து செயல்பட நினைப்பது நல்ல குணம். அதற்காக அதன் குணத்தை வீரியத்தை இழந்துவிட "அதிரைமுஜீப்.காமிற்கு" மனமில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. உங்களை திட்டுகின்றார்கள் என்றால் நீங்கள் வளர்கிண்றீர்கள் என்று அர்த்தம்.
அபுஇபுறாஹீம் சொன்னது…
Sஹமீத் காக்கா, கவிக் காக்கா, அசத்தல் காக்கா மற்றும் தம்பிகள் ஹிதாயத், MSM(mr) தாங்கள் அறியாததல்ல ! இணையத்தில் பினையமும் நிகழும் அடுத்தப் பக்கம் வினையும் தொடரும்னு.
----------------------------------------------------------------------
பாத்தியலா நம்மலெல்லாம்( நான்) ஜுஜிப்பின்னு சொல்லாம சொல்லிடியல!
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆ சும்மா தமாசு ரொம்ப நாலாச்சுல விளயான்டூ
(உம்மைதான் பொறாமைல வயிரு பத்திக்கிட்டு எரிரத எப்படி வெளில சொல்ல
முடியும்???)
பாத்தியலா நம்மலெல்லாம்( நான்) ஜுஜிப்பின்னு சொல்லாம சொல்லிடியல!
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆ சும்மா தமாசு ரொம்ப நாலாச்சுல விளயான்டூ
(உன்மைதான் பொறாமைல வயிரு பத்திக்கிட்டு எரிரத எப்படி வெளில சொல்ல
முடியும்???-சும்மா சமாளிச்சு பாக்குறேன்....)
கிரவ்ன்(னு) தலையில வச்சுகிட்டுதான் இணையத்தில் சுத்தலாம்னு வந்தா இங்கே என்னடான்னா இப்புடி சிரிக்க வச்சுட்டே(டா)ப்பா !
வாயேன் (வியாபரம் முடிந்ததும்) வழக்கமான வார்த்தை விளையாட்டுக்கு நம்மிடையேவா பஞ்சம் ! காத்திரு மற்றவர்களின் நெஞ்சமும் துடிக்கும் கேட்டிடும் தஞ்சம் ! :))
என் தனிப்பட்ட கருத்து:
இணைத்தால் இரு இணைய தளங்களும் எப்படி இணையும் என்று எமக்கு தெரியாது..வேறு இணையத்தை தொடருமா/ஒரு இணையத்தோடு மறு இணையத்தின் தலையங்களை மட்டும் வெளியிட்டவாறு இணையுமா என்று..
எது எப்படியோ என் எண்ணம், 'மக்கள் பயனடைய வேண்டும் என்றால் ஒரே கட்டுரையை பல இணையத்தில் வெளியிடுவதிலும் தவறு இல்லை, சில ஆக்கங்கள் சில கூட்டதினற்குத்தான் புரியும் என்பதால் தனிப்பட்ட இணையத்தில் மட்டும் இடுவதும் தவறில்லை.
(இந்த வகைக்கு ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் "REACH THE TARGET AUDIENCE, INSTEAD OF REACHING MILLION")..
MSM(MR)
அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி
சட்டபடிஎழுத்தால்
அழகிய முறையிலே வார்த்தைகளை வடித்திருந்தது .சமுதாய ஒற்றுமையும் ஊர் நலனுமே முக்கியம் என ஆணித்தரமாக கூறியபடி இணைந்து செயல்பட இதையே அழைப்பிதழாக கருதுவோம். எம் தனயனும் கூறியபடி பல தரப்பட்ட வாசககர்களை பல பாணியில் கவர்வோம்.எங்களுக்கு இரு இணையத்தின் விரிசலின் விலாசம் தெரியாது!பூசலின் பூர்வீகம் தெரியாது!எக்ஸில் ஏகப் பட்ட படிப்பாளிகள்'நிரு'வில் நிறைஞ்ச படைப்பாளிகள்,நம் அதிரை மக்களுக்கு கல்வி தாகமும்அறிவுப்பசிக்கு தீணும்- மார்க்கப்பசிக்கு தீனும்
தந்து அனைவருக்கும் கவிதா தாகமும் ,எழுத்துத் திறமையும் வையகம் வியக்கும் வண்ணம் தமிழ் ஆற்றலை அபிவிருத்தித் தந்த அனைத்து சாராருக்கும் வெளிநாட்டில்வாடு(ழு)ம் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஜசாகல்லாஹ் !
முதலில் என் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு என்னுடைய ஸலாத்தினையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்விற்கு பயந்தவனாக இங்கே ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன், நிச்சயமாக நான் எந்த ஒரு வலைப்பூவையோ அல்லது தனிநபரையோ தாக்குவதோ இழிந்துபேசுவதோ நோக்கமன்று என்னிடம் உள்ள சில ஆதங்களை வெளிப்படுத்தவே அந்த ஒரு கருத்தை தங்களுடைய வலைத்தளத்திலும், அதிரை எக்ஸ்ப்ரஸ் வலைத்தளத்திலும் பின்னூட்டமிட்டேன். பொதுவாக நம் சமுதாயத்தை பொருத்தமட்டில் வேற்றுமையே அதிகம்!, ஒற்றுமையை பறைசாற்றுகின்ற, கற்றுத்தந்த நம் மார்க்கத்தில் நம் சமுதாயமோ இன்று பல இயக்கங்களாகவும், பல கட்சிகளாகவும், பல ஜமாத்தார்களாகவும் பிரிந்து சின்னபின்னமாகியுள்ளன. இதனால் ஏற்படுகின்ற விளைவு நம் சமுதாய மக்களுக்கு ஏற்படுகின்ற அநியாயங்கள், துன்பங்கள், அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றினைந்து குரல் கொடுக்கவும், நம் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் போன்ற எண்ணற்ற காரியங்களையெல்லாம் முஸ்லிம்களின் ஒரே குரலில் ஒரத்த குரலில் சொல்லி கேட்டுப்பெற முடியவில்லை, காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை. இதுதான் என்னுடைய வலியும்! ஆதங்கமும்!!
இந்த வலியும் ஆதங்கமும் உங்களை போன்ற எல்லா சகோதரர்களுக்கு இருக்கிறது, நம்மூரின் அனைத்து வலைப்பூக்களும் நம் சமுதாய மக்களின் நலனுக்காக செயல்படுகிறது, பாடுபடுகிறது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. ஒரே நோக்கத்திற்காக செயல்படும் அனைத்து வலைப்பூக்களிலுள்ள செய்திகளும், பதிவுகளும், ஆலோசனைகளும், ஆராய்ச்சி கட்டுரைகளும் ஒரே இடத்தில்(அதிரை எக்ஸ்ப்ரஸை குறிப்பிடவில்லை, எதோ ஒரு வலைப்பூவில்) குமியுமானால், சேருமானால் ஆஹா என்ன ஒரு அற்புதமான அறிவு களஞ்சியமாக திகழும் என்பது என்னுடைய அவா.
தயவு செய்து யாரும் என்னை தவறாக எண்ணி விடாதீர்கள், சகோதரர் தாஜீதீன் அவர்களுக்கு அந்த பின்னூட்ட மூலமாக மனதில் சங்கடங்களோ, வருத்தங்களோ ஏற்பட்டு இருப்பின் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அட்லீஸ்ட் நம்முடைய ஊரின் வலைப்பூக்களையாவது ஒருங்கிணைத்து மேலும் மேலும் ஒரு ஒற்றுமை முயற்சியை துவங்கவேண்டும் என்பது என்னுடயை ஆதங்கமும் நோக்கமும் அன்றி வேறொன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தியவனாக விடைபெறுகிறேன்! வஸ்ஸலாம்.
வாருங்கள்! ஒன்றுபடுவோம்!! வெற்றிபெறுவோம்!!!
Adiraian சொன்னது…
முதலில் என் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு என்னுடைய ஸலாத்தினையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். //
அல்ஹம்துலில்லாஹ் !
//அட்லீஸ்ட் நம்முடைய ஊரின் வலைப்பூக்களையாவது ஒருங்கிணைத்து மேலும் மேலும் ஒரு ஒற்றுமை முயற்சியை துவங்கவேண்டும் என்பது என்னுடயை ஆதங்கமும் நோக்கமும் அன்றி வேறொன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தியவனாக விடைபெறுகிறேன்! வஸ்ஸலாம்.
வாருங்கள்! ஒன்றுபடுவோம்!! வெற்றிபெறுவோம்!!//
கைகோர்க்க என்றுமே தயார் !
வேண்டுகோல் சகோரரே, தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டால் இன்னும் வலுப்பெறும் தங்களின் அவா !
நான் : M.Naina Thambi
தற்போது வசிக்குமிடம் : Dubai, U.A.E.
என் தொடர்புக்கு அலைபேசி : +971 55 4212575
என் மின் அஞ்சல் : naiathambi@live.in
//Adiraian சொன்னது…
...சகோதரர் தாஜீதீன் அவர்களுக்கு அந்த பின்னூட்ட மூலமாக மனதில் சங்கடங்களோ, வருத்தங்களோ ஏற்பட்டு இருப்பின் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.//
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வருத்தம் ஒன்றுமில்லை என்பதை இந்த கட்டுரையில் தெரிவித்துவிட்டோம். இந்த சாதாரண விசயத்துக்கு போய் எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு. வித்துத்தள்ளுங்க சகோதரரே. உங்களின் கேள்வி எங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டிருந்த சந்தேகங்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. நீங்கள் நன்மையே செய்துள்ளீர்கள்.
நல்லெண்ணத்தில் எழுதியுள்ள நீங்கள், எங்களை தொடர்புக்கொள்ளுங்கள். ஒன்றினைந்து செயல்படுவோம்.
அதிரையில் உள்ள 40 தளங்களை ஒருதளத்தில் இயன்கச்செய்வதற்கு தற்போதிற்கு நமது சகொததர்கள் கண்டுபிடித்த வழிதான் www.adiramanam.blogspot.com.இத்தளத்தை பரப்பினால் பாதி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
MSM(MR)
அன்பு சகோதரர் மீராசா, அதிரைமணம் http://adiraimanam.blogspot.com/ என்ற முகவரியெ சரியே.
அதிரைமணம் கடந்த 10 மாதங்களாக இணையக்கடலில் மிதந்து அதிரை மனங்களை இணைத்து வருகிறது என்பது 100க்கு 100 உண்மை.
நிச்சயம் அதிரைமணத்தை அதிகம் பிரபல்யப்படுத்தவேண்டும். அதிரைமணத்தில் உள்ள வலைப்பூக்களே இதை செய்யலாமே. அதிரைமணத்தின் இலச்சினையை (logo) அனைத்து வலைப்பூக்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
Post a Comment