Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன் குறிப்பு : சொல்லித் தெரிவதில்லை ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | February 09, 2011 | ,

அன்றொரு சமயத்தில் புதுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அன்றைய சூழலில் இன்றைய இயக்கங்களில் பெருந்தலைகளாக வலம் வருபவர்கள் எங்களோடு சுற்றி சுற்றி வந்தார்கள். எங்களையும் நல்ல சூழலுக்குள் சுழலவிட்டார்கள் நல்லெண்ணமே அன்று மேலோங்கியிருந்தது அவர்களிடம் இன்னும் இருக்கலாம் அல்லாஹ் நன்கறிவான்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் தலைப்பகுதிக்கு எங்களை பயிற்சி முகாமுக்காக அழைத்துச் சென்றார்கள் அது ஒரு கணாக் காலம் அழகிய சூழல் அப்படித்தான் சென்றது. அங்கே நானும் மற்ற நண்பர்களும் காலார நடந்து கொண்டிருக்கும்போது ஓர் இடம் கண்டோம் அங்கே மனநல மருத்துவம் மற்றும் அதற்கான ஆராய்ச்சி மாணவர்களின் விடுதி இருந்தது அதன் பக்கதில் இருந்த காவலாளியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நிறைய விஷயங்களை சொன்னார் ஆனால், கொஞ்சம் புரிந்தது நிறைய புரியவில்லை அப்போது அங்கே கண்ட ஆங்கில கேள்வித்தாளில் கண்டதை இப்போது நினைவு படுத்தி பார்க்கிறேன் அதனைத்தான் இங்கே பதிந்திருக்கேன்...

1. உங்களின் பாலினம் ?

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?

4. பிறந்த ஊர் ?

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?

பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதில்லை, அதற்காக சொல்லாமிருக்கவும் தேவையில்லை, பட்டவர்கள், சுட்டவர்களையும், சூடுபட்டவர்களையும் நினைவுக்குள் கொண்டுவரலாம்தானே !?

ஆகவே மேலேயுள்ள கேள்விகள் யாவற்றிற்கு பதில் அளித்தால், இணையக் கடலில் உல்லாசப் பயணம் செல்ல இலவச ஏற்பாடு செய்து தரப்படும், அங்கே மூழ்கிட்டீங்கன்னா தேடி புடிக்க இந்திய கடலோரப் படையின் உதவி நாடப்படும் அதோடு இலங்கை கடற்படையை அங்கே நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

நடுக் குறிப்பு : நில்! கவனி! செல்!

நேற்று வேலை முடித்து காரில் வந்து கொண்டிருக்கும்போது, அமைதியாகத்தான் காரை ஒட்டி வந்தேன் ஆனால் எனக்குப் பக்கத்தில் காரை ஓட்டி கொண்டு வந்தவர் தொடர்ந்து ஹார்ன் அடித்து கொண்டே வந்தார் அந்த சத்தம் எனக்கில்லை என்று நானும் காணாது மாதிரியே தொடர்ந்தேன் அவர் எனக்கு முன்னாடிச் சென்று என்னை அப்படியே என்னை வழிமறித்து ஓரம் கட்டச் சொன்னார் நானும் என்னமோ ஏதோன்னு பதறிப்போய் ஓரமாக நிறுத்தினேன் இது வேற எங்குமில்லை ஷேக் ஜாயித் ரோட்டில்தான். இறங்கி வந்தவர் கோபமாக அரபியில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார் நானும் பேந்த பேந்த விழித்தேன் அப்புறம் அவரே அரைகுறை ஆங்கிலத்தில் ஆத்திரத்தைக் கொட்டினார் அதன் அழகே தனிதான்.

சரி, அவர் என்னதான் கேட்க நினைத்தாராம்னு நினைக்கிறீங்களா ? சாலிக்(salik)கை டோல் கேட்டைக் கடக்காமல் செல்ல எப்படிப் போகனும்னு கேட்கத்தான் எனக்கு ஹார்ன் அடித்து கேட்க பார்த்தாராம் அது என்னமோ அப்படியே என் மேல் குறிவைத்தே வந்துட்டார். அவரையும் பார்த்து விட்டு அப்படியே பக்கத்திலிருந்த அந்த TOLL GATEஐம் அன்னாந்து பார்த்தேன்... அட அரபியிலும் அங்கிலத்திலும் கோபத்தை காட்டிய சகோதரா அதத் தாண்டி வந்துதான் நாம் இங்கே காரை நிறுத்தியிருக்கோம் இப்போ எங்கு சென்றாலும் இழந்ததை இவனுங்க தரமாட்டானுங்கன்னு சொன்னதும் அவர் ஒரே வார்த்தைதான் - அல்ஹம்துலில்லாஹ் !

பின்குறிப்பு: மல்லாக்கப் படுக்கவில்லை!

- அபுஇபுறாஹீம்

22 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் நலமா? அபு இபுறாகிம் காக்காவின் ஆக்கம் சில நேரம் கடலையை கொரித்து முடித்ததும். பொட்டலாமாக இருந்த காகிதத்தை பிரித்து படிக்கும் போது சில வித்தியாசமான ,சுவாரசியமான தகவல்களோ,கதையோ,கவிதையோ இருக்கும் அது படிக்க படிக்க சுவையாகவும் ஏந்தான் முடிந்து விட்டது எனும் மனவருத்தம் தரக்கூடிய அளவு மனதை ஈர்கும் அது போல் தான் இந்த ஆக்கம்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உண்மையில் நீங்கள் மாற்றி தான் யோசித்து உள்ளீர்கள்.

"கார சாரமகத்தான் உள்ளது"

பாக்கி நாளை "உண்டு உண்டு அமத்து"

Shameed said...

1. உங்களின் பாலினம் ?
சொல்லித்தெரிவதில்லை அனைவருக்கும் தெரியும்.

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?
வா போ

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
போ வா ("கொஞ்சம் மாத்தி")

4. பிறந்த ஊர் ?

அதிரை (மணம்)

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?

தஞ்சை

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?

ஆம். தெரியும் ஆனா தெரியாது

தொடரும்

ZAKIR HUSSAIN said...

//9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?//

இது கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். நீங்கள் பரிதாபப்பட்டால் உங்களுக்கு மனசு மிகவும் இளகியதாக இருக்கும். அவரிடம் சகஜமாக பழகினால் சரி. அவருக்கு வேலை எதுவும் தேவைப்பட்டு உதவ முற்பட்டால் உருப்படியாக ஏதோ செய்யத் தெரிகிறது.

திரு நங்கைகளை 9 என கேவளப்படுத்துபவர்கள் உடன் பார்க்க வேண்டியது ஒரு சைக்யாட்ரிஸ்ட்டை. பண வசதியில்லாமல் கேவளப்படுத்த மட்டும் தெரிந்தவர்கள் சென்னை பொது மருத்துவமனையின் மன நலப்பிரிவில் அப்பாய்ன்ட்மென்ட் வைத்து சிகிச்சை பெறலாம் .

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்ளூம் உணர்வு இருக்கும்"
quote by...சுஜாதா"

இது ஒவ்வொரு முறையும் தலை தூக்குவதை சரியாக
உணர்ந்தால் பிரம்மச்சார்யம் நிறைவு அடைகிறது. தமிழ் நாட்டில் ப்ரம்மச்சார்யத்து பெயர் " கல்யாணம் செய்யாமல் தர்காவுக்கு நேந்து விட்ட ஆடு' மாதிரி திரிவதை தவறாக புரிந்து வைட்திருக்கிறார்கள்,

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
அருமையான இடுகை. வாழ்த்துகள்.
ஆயினும், புதுக்கல்லூரி நினைவுகளை தூண்டி கனவில் மிதக்கவைத்துவிட்டீர்கள்.

அது ஒரு காலமய்யா!

அன்பே
நாம்
காதல் சர்க்யூட்டை
சரியாகத்தானேப் போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?!
-என்று வயசு கிறுக்கித்தள்ள முழு கவனமுன் இயற்பியலில் லயித்த காலம்!

நாங்களும் இயக்கத்தில்தான் இருந்தோம். ஆனால், உறுப்பினர்மட்டும்தான், களம் காண்பதில்லை.

sabeer.abushahruk said...

01)எப்போதும் ஆவினத்தின் பால்தான். எருமைப்பால்லாம் பிடிக்காது.

02)கோபமாக இருக்கும்போது பெயர் சொல்லி. 
செல்லமாக, "நாயே" என்று.

03)அப்படியே உல்ட்டா (கொஞ்சம் மாத்தி)

04)பட்டுக்கோட்டையிலோ
தஞ்சாவூரிலோ அல்ல.

05)அதிரைப்பட்டினம்...அதிரைப்பட்டினம் மட்டுமே.

06)இல்லை...இன்னும் இல்லை இல்லை...அப்போ இல்லை.

07)மரியாதையாகவும் அன்பாகவும் கொஞ்சம் பயமாகவும். ஏனெனில், அவர்தான் "கல்" என்ற வார்த்தை எறிந்த ஆசிரியர். 

08)நண்பர்களை என்று நினைக்கிறேன். என் உலகமே அவர்கள்தான். காயமோ மருந்தோ அவர்களுக்கு மட்டும்தான் அவர்களிடமிருந்து மட்டும்தான்.

09)பாவமா இருக்கும். முடிந்தால் உதவத் தோன்றும்.

10)கை கொடுத்து பாராட்டுவோம்ல.

11)எதுவுமில்லை. இழப்புகள் நேரும்போது 'இதுவும் கடந்து செல்லும்' என்ற பக்குவம் உள்ளவய்ங்க நாங்க.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நான் விட்ட பதில்களுக்கு கவி காகா பதில் சொல்லி விட்டார்கள்

Abu Khadijah said...

1. உங்களின் பாலினம் ?

படிக்கின்ற எல்லோருக்கும் தெரியுமென நினைக்கிறேன்.

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?

வா, போ, சில நேரம் வாங்க போங்க.

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
ரொம்ப நெருங்கியவர்களை வாடா, போடா. மற்றவர்களை வாங்க போங்க.

4. பிறந்த ஊர் ?

அதிரை(பட்டினம்)

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?

ஜித்தா

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?

ஆம்,

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?

சின்னப்பிள்ளையா இருக்கும்போது அவனுடைய விரலை கடித்து விட்டேன்.(பிறகு ஆஸ்பத்திருக்கு போன கதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டாம்பா)

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?

என்னையே, ஏனெனில் திருத்தி கொள்ள.

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?

சகஜமாகத்தான் பழக தோன்றும்.

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?

அவரை போல் தகுதியை நானும் வளர்த்துக் கொள்ள முற்படுவேன்.

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?
என்னுடையப் (காரைக்காலின்)பள்ளி வாழ்கை.

Yasir said...

நீங்கள் அபு இபுராஹிம் காக்காவாக அல்லது அபு ஆக்கம் காக்காவா....உங்கள் ஆக்கங்கள் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துவைதான்..மெட்ரோ வாகட்டும்...சேக் சையத் ரோடாகட்டும்...அப்படியே கைப்பிடித்துக் கொண்டு கண்முன் நடப்பது போன்று எழுதும் உங்கள் லாவகம்...சூப்பரோ சூப்பர்....
கவிக்காக்கா.....எதோ ஷார்ட சர்கீயுட் ஆகி இருக்கும்....கை கால வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்...என்ன செய்றது வயசுக் கோளாரு

Yasir said...

1. உங்களின் பாலினம் ?.....ஆணு

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?.....நண்பா என்று அன்பா இருக்கும்போது

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?.. கேடுகெட்ட, வீணாப்போன விலங்குகள் மற்றும் ,நஜிசான விலங்கு பெயரை சொல்லித்தான்

4. பிறந்த ஊர் ? இடுப்பு வலிக்கும் போது எந்த ஊரில் ஹாஸ்பிட்டல் அருகில் இருந்ததோ அந்த ஊர்….பட்டுகோட்டை இல்லை பாம்பையாக இருக்கலாம்

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ? அதிரைப்பட்டினம் தான்

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?ஆம்…எதோ நாலுபேர் மாலை போட்டு பைத்து சொல்லி கூட்டிக்கிட்டு போனங்க…போன பிறகுதான் தெரிந்தது….உடல் மட்டும் இருந்த எனக்கு உயிரும் கொடுக்க போராங்க என்று

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?அடித்து விட்டேன்….ரொம்ப பாசமானவர்கள்….வார்த்தைகளால் காயப்படுத்தினால் தாங்க முடியாது…பிறகு மன்னிப்பு கோரினான்

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?..முடிந்தவரை. தவிர்த்து இருக்கிறேன்..சில சமயம் என் கம்பெனி முதலாளியை…நான் “ராஜினாமா” செய்யப்போகிறேன் என்று சொன்னது அவரை காயப்படுத்தி தூங்க விடாமல் செய்ததாம்….ரொம்ப நல்லவரூ

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ? இறைவனை புகழ்ந்து கொள்வேன் என்னை நன்றாக படைத்ததற்க்கு….அவர்களுக்காக இரக்கபடுவேன்

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ? அதை பெரிதாக, பொருட்டாக கருதமாட்டேன்……தாழ்வு மனப்பான்மையை துறந்தவன் நான்…..இறைவன் ஒவ்வொருக்கும் எதோ ஒரு வகையில் ஒரு திறமையை வழங்கி இருக்கிறான்

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?...எல்லாம் அவன் செயல்…..அவன் நாடியதை செய்வான் என்று சொல்லி “ சாலிக்” அரபி சொன்னதுபோல் “ அல்ஹம்துலில்லாஹ் “ சொல்லி கொள்வோம்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இப்படி வித்தியாசமான யோசனை ஏன் எங்களுக்கு வரவில்லை என்றேன்னுகிறது

அருமை அருமை வாழ்த்துக்கள் அபு இப்ராஹீம் காக்கா

இதோ என்னுடைய பதில்

1. உங்களின் பாலினம் ?
ஏலே இச்சத்தியமா ஆம்பலேதான்லே

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?
டேய் மச்சி,மச்சான் வாடா

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
போடா கோய்யலேன்னு தான்

4. பிறந்த ஊர் ?
அழகு அதிரை தான்

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?
சென்னைங்கோ

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?
ஆம், கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?
கோவம் வந்துச்சி ஆனா நெசமா அன்பாக தான்...நம்புங்க ப்ளீஸ்

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?
இதுவரையும் இல்லைன்னு நனைகிறேன்

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?
எதோ என்னாலே முடிஞ்சா ஹெல்ப் பண்ண தோன்றும்

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
சந்தோஷம் என்று மகிழ்வேன்

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?
பாசம், உறவு

Yasir said...

காக்கா இணையக்கடலில் இணைய என்னையும் தேர்ந்தெடுங்க.....பயணம் என்ன கூகுள் கப்பலிலா அல்லது பிங் கப்பலிலா ? எதுவா இருந்தாலும் சேஃபா சொகுசா இருக்கனும்

Meerashah Rafia said...

1. உங்களின் பாலினம் ?
ஆண் சிங்கம்

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?
அட வாடா,போடா

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
அட போடா, வாடா

4. பிறந்த ஊர் ?
அதிராம்பட்டினம்

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?
அதிராம்பட்டினம்

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?
ஒருமுறைகூட இல்லை(காக்கா. எனக்கு பொண்ணு கொடுக்குற வீட்ல இத சொல்லிராதீக..). ஆனபின் கடிதாசி போடுறேன்.

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?
எப்புடியும் சிறுவயசில் ரிவஞ் இருந்திருக்கும்.

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?
கடந்த சிலவருடமாக கலைஞர் கருணாநிதி

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?
திறனாளி என்று

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
ஒஹ்..அப்புடியா!!

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?
நட்பை..

MSM(MR)
MEERASHAH RAFIA

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தக் கேள்வித்தாளை கண்ட அன்று நான் பதிலாக்கியதை பதியலாம்னுதான் இருந்தேன் அதுக்கு முன்னாடி கேள்வியாக வைத்துதான் பார்ப்போமேன்னு ஒரு ஆசைதான் !

Meerashah Rafia said...

@அபு இபுராஹீம்

இன்னும் கொஞ்சம் விட்டால் அதிரை நிரூபரில் ஆன்லைன் இன்டர்வீவே பண்ணலாம் போலிருக்கே !!!

MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

meerashah சொன்னது…
இன்னும் கொஞ்சம் விட்டால் அதிரை நிரூபரில் ஆன்லைன் இன்டர்வீவே பண்ணலாம் போலிருக்கே !!!
MSM(MR)//

உங்கள மாதிரி(யான) Professionalsம் கைகோர்த்தால் why not !?

Meerashah Rafia said...

@அபு இபுராஹீம்
"உங்கள மாதிரி(யான) Professionalsம் கைகோர்த்தால் why not !?"

ஆஹா.. இது புது கான்சப்டால இருக்கிறது..பல யுக்திகள் என் தலையை சுற்றி பறக்கின்றது.
அதில் சில...

அ)நம் வலைதளத்தில், நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெறுவது எப்படி என்பதைப்பற்றி ஒரு கட்டுரை

ஆ)பொதுவான நேர்முகத்தேர்வு கேள்விகளை இணையதளத்திலே மக்களிடம் கேட்டு அதை பூர்த்தி செய்ய சொல்வது.

இ)பூர்த்தி செய்தபின் பரிசீலித்து, தகுந்த பதிலை வெளியிடுவது.

ஈ)வாசகர் வரவேற்புக்கேற்ப குறிப்பிட்ட துறைகேற்ப கேள்விகளும்/பதில்களும்...

இதுபோல் பலது தோன்றுகிறது. தக்க சமயம் வரும்வரை பொறுத்திருந்து பார்போம்.

நமதூர் மாணவர்கள் நன்கு படித்து பட்டம் பெற்றவர்களும் கூட நேர்முகத்தேர்வில் வெற்றிபெறுவது கம்ப சுத்துற காரியமாகத்தான் இருக்கிறது. அதற்கு இவை மிகவும் உதவும்.

MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! நல்ல பரிந்துரை.. "ஆ" விலிருந்து "ஈ" வரை விரைவில் செய்யலாமே ! இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

1. உங்களின் பாலினம் ?
காக்காவிற்கு நான் தம்பி

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?
சில நேரம் ஒருமை சில வேலை பண்மை

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
முந்தைய‌ பதிலே

4. பிறந்த ஊர் ?
அதிரைப்பட்டினம்

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?
அதிரைப்பட்டினமும் நமது மூதோர் வாழ்ந்த எகிப்தும்

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?
நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர எதுவும் 'இல்லை' தெரியும்!

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?
அவர் நெற்றியில் அடையாளமுள்ளது.

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?
(பதில் சொன்னால்)‍‍‍‍‍‍‍‍‍‍‍அவருக்கு நியாபகமூட்டியதாக ஆகிவிடும்

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ?
வித்தியாசம் பாராட்டமாட்டேன் (எல்லொரும் ஏதோ ஒரு விதத்தில் மாற்று திறணாளிகளே)

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
அவரின் நேர்மையை பாராட்டுவேன்

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ?
முஹம்மது தம்பி மரைக்காயர்( கட்டபிள்ளையார் அப்பா) , பாபா

crown said...
This comment has been removed by the author.
crown said...

crown சொன்னது…

1. உங்களின் பாலினம் ?
எந்த சூல்னிலையிலும் ஆம்பள.

2. உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ?
மாப்ள,கவிஞரு,டீ,ஆர்(டி.ராஜந்திரன் மனித கரடி),அறுவை.

3. உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள் ?
என்னாடா,என்னாங்கடா.

4. பிறந்த ஊர் ?
அதிரை பட்டினம்.

5. விருப்பத்திலிருக்கும் ஊர் ?
அதிரை பட்டினம் என்றென்றும் என் நிலையிலும்.

6. திருமணம் நடந்துவிட்டதா ? ஆம் என்றால் திருமணம் நடக்கும்போது அது உங்களின் திருமணம்தான்னு தெரியுமா ?
வேறவழி கிடையாது. தெரியாம முடிக்க என் உள்ளுனர்வு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் எனக்கு என் திருமணம் நடந்த தினம் அந்த விபத்தின் ஆழம் எல்லாம் இன்றும் என்றும் அத்துபடி.

7. உங்களை முதலில் (வார்த்தைகளால்) காயப் படுத்தியவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் ?

8. யாரை அதிகம் காயப் படுத்தியிருக்கிறீர்கள் (வார்த்தைகளால்) ?
சில பொருப்பற்ற வாத்திகளை என்னுடன் படித்தவர்கள் நன்கு அறிவர்.ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.

9. மாற்றுத் திறணாளியைக் கண்டால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றும் மனதில் ? இன்னிலையிலும் இப்படி திறமையானவர்களாக இருக்கிறாஙலேன்னு ஆச்சரியம், சின்ன பொறாமை.

10. உங்களைவிட மற்றவர் தகுதியானவர்னு உங்களிடமே சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள் ?அவங்க நட்பை விரும்பி பெறுவேன். வயதில் சிறியவர்களாக இருந்தாலும். சொல்லும் செயலும் நல்லவையாக, அறிவுத்தனமாக இருந்தால் மிக்க மதித்து ஏற்றுக்கொள்வேன். அதேவேளை சரியில்லா செய்கை,புத்தியற்ற நடவடிகை கொண்டவர் யாரக இருந்தாலும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவேன். இப்படித்தான் சாகும் வரை இருப்பேன் என்பது உத்திரவாதம் உண்டு. என்னையும் மன்னியுங்களேன்.

11. உங்களை விட்டுச் சென்றவைகளில் எதனை பேரிழப்பாக இன்னும் நினைக்கிறீர்கள் ? பள்ளி பருவம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனிதநேயம் செழிக்கும் என் இனிய சகோதரர்களே இன்றைய சூழலில் உங்களின் மனநிலையை அப்படியே சொன்ன விதங்களும் அதனை தாங்கள் யாவரும் கையாண்டதும் அருமை ! நகைச்சுவைக்கும், சில்லென்று சுண்டியிழுக்கும் வார்த்தை விளையாட்டுக்களும் என்றுமே சொல்லித் தெரிவதில்லை !

இணையக் கடலில் உல்லாசம்(னும்) சொன்னதும் அப்படியே எல்லோரும் கப்பலே விட ஆரம்பித்து விட்டீங்க !

தம்பி யாசிர், இவய்ங்க (கூகுள் கப்பலிலா அல்லது பிங் கப்பலிலா ?) ஓட்டுற கப்பல்தான் எபோவுமே மெதப்புலதானே இருக்கு ! நாம விடுவோம் விரைவில் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஓர் கப்பலை இவையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை !

என் சகோதர நேசங்களே உங்கள் யாவரின் எழுத்தாற்றல் யாவும் என்றுமே எதற்கும் சலைத்தவைகளல்ல சாதிக்கத் தூண்டும் ஊட்டச் சத்துகள் என்று யாருக்கும் இங்கே சொல்லித் தெரிய வேண்டியதில்லை !

உங்களுக்குத் தெரியாததா நேசங்களே ! ஆக இவைகள யாவும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... !

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு