நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இமாம் ஷாஃபி ஆண்டு விழா - தமிழ் நாடகம் காணொளி 9

தாஜுதீன் (THAJUDEEN ) | திங்கள், பிப்ரவரி 21, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்மையில் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியின் ஆண்டுவிழா பற்றிய செய்தி வெளியிட்டோம். ஆண்டுவிழா தொடர்பான காணொளி பதியவேண்டும் என்று நம் அதிரைநிருபர் வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆண்டுவிழாவில் இடம் பெற்ற தமிழ் நாடகம் ஒன்றின் காணொளி இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக தருகிறோம்.

போலி டாக்டர்களின் அட்டகாசத்தை இந்த மாணவர்கள் மிக அற்புதமாக நகைச்சுவையுடன் மிக குறுகிய நேரத்தில் இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக்காட்டி எல்லோருடையை சிந்தனையும் கவர்ந்ததை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு அதிரைநிருபர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நாடகத்தில் தங்களின் தனித்திறமையை காட்டியது போல் படிப்பிலும் கவனம் செலுத்தி பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் மற்றும் சமுதாயத்துக்கும் பெருமை தேடித்தர வாழ்த்துகிறோம்.

அதெல்லாம் சரி இதை பார்க்கும் பெருசுகள் நமக்கு பள்ளி ஞாபகம் நிச்சயம் வரும். பள்ளிப் பருவத்தில் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்த அனுபவங்கள் இருந்தால் இங்கு பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

-- அதிரைநிருபர் குழு

நன்றி: அப்துல் ரஹ்மான் -- harmys

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நான் பள்ளியில் படிக்கும் போது கனவில் மாவீரன் திப்பு சுல்தானாக நடித்து இருந்திருக்கிறேன்...

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) போலி டாக்டர் நாடகத்தை - ஒரு போலி கேமரா மேனை வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்த காணொளியை பார்த்து விட்டு நிச்சயம் நாம் ஒரு போலி கண் டாக்டரிடம் கண்ணை செக்கப் செய்து கொள்ள வேண்டும். (காணொளி நன்றாக ஆடுகிறது உங்கள் கண்ணும் சேர்ந்து ஆடும்).

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஃபுரபெஷனலாக எடுத்திடா விட்டாலும்... சிறார்களின் உணர்வுகளும் அவர்களின் ஆக்கங்களும், திறமைகளும் கண்முன்னால் வந்தது என்னமோ மெய்யே...

நாடகத்தில் நடித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

sabeer.abushahruk சொன்னது…

அருமை அருமை... அத்தனை துணுக்குகளும் துள்ளல். பிஞ்சுகளின் சரள்மான பேச்சும் நகைச்சுவையை சிரிக்காமல் தரும் லாவகமும் வாவ்!

அசத்துறாங்கப்பா!

தவிர,

பசுமையான வயல் வெளியில் ஒற்றையான மண் பாதையில் மாட்டு வண்டி பயணத்தில் ரசிக்க ஆயிரமாயிரம் அழகு கொட்டிக் கிடக்கையில் எப்ப்டி மேடு பள்ளங்களின் அதிர்வுகளைப் புறக்கனிப்போமோ...

கொட்டும் மழையில் குளிர்ச்சியான சீதோஷ்னத்தில் குடையின் மேலான மழையை ரசிக்கயில் எப்படி மடித்துக் கட்டிய கைலி நனைவதை கண்டுகொள்வதில்லையோ...

ஜன்னலோர இருக்கையிலிருந்து பேரூந்தில் பயணிக்கையில் முகத்தில் முத்தமிட்டுச் செல்லும் சுகமான காற்றை அனுபவிக்கையில் எப்ப்டி முடி கலைவதை விட்டுத்தள்ளுவோமோ...

அப்படி,சித்றாலான சினிமொட்டோகிராஃபியை மன்னித்தால்...இது ஒரு கூல் காணொளி... தானே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதெப்படி கவிக் காக்கா இப்படி coolலா காட்சியை கண்முன்னாலே காண்பிக்கிறீர்கள் !?..

சரியே.. கம்பொவுண்டரும் சரி டாக்டரும் சரி லாவகமான பேச்சும் அதற்குத் தகுந்த மாதிரி மைக்கையும் வளைத்து செயலோடு பேசும் அருமை...

சிங்கப்பூர் ஹாங்காங்கில் பேசுவது... காதில் விழுகிறது ! (நாடகத்தில்)...

நகைச்சுவையே...

ஐயா மருத்துவரே... போலிகளை தோளுரிக்க நீங்களும் படியுங்கள் மருத்துவருக்கே... அதனையும் நாங்கள் காதுகுளிர கேட்கனும் இன்ஷா அல்லாஹ்...

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

கவிக்காகாவின் இரசிப்புத்தன்மை பல கோணங்களிலும் வெளிப்படுகிறது

நிறைய கற்றுக்கொள்ள வேண்டிஉள்ளது உங்களிடம்

sabeer.abushahruk சொன்னது…

//நான் பள்ளியில் படிக்கும் போது கனவில் மாவீரன் திப்பு சுல்தானாக நடித்து இருந்திருக்கிறேன்...//

நல்லவேளை, அப்படி நீங்கள் நடித்த கனவு எனக்கு வரவில்லை! எந்த ஊர்ல தீரன் திப்பு சுல்தான் சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கான்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா அந்த தீரன் அப்போது கண்ணுக்குள்ளும் கண்ண்கு முன்னும் சோடாப்புட்டி போட்டிருக்கவில்லை... ஏன்னா இந்தக் கணினிகள் கனவுக்குள் வரவில்லையே !

அகமது அஸ்லம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

”_______________( ஷிர்க்கான வார்த்தை so சென்சார்) ஒப்பான தங்களை எட்டி உதைத்த கால்களை வெட்டி வீழ்த்த வேண்டும். தங்கள் மீது எச்சில் உமிழ்ந்த வாயினில் ஈயத்தைக் காச்சி ஊற்ற வேண்டும். இது தான் அந்த கயவனுக்கு ஏற்ற தண்டனை மன்னா”

------இது நான் 1993ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்த பொழுது ஆண்டு விழா நாடக மேடையில் பேசிய வசனங்களின் ஒரு பகுதி. அந்த் நினைவலைகள் வரும் பொழுது கோணலாய் ஒரு புன்னகை வருவதை தடுக்க முடியவில்லை.

அது ஒரு கனாக்காலம்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு