அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும், அன்றாடம் நாம் கண்டுவரும் மிக கொடிய நோய் கேன்சர், இது தொடர்பாக சமையல் அட்டகாசம் என்ற வலைப்பூவை நடத்தி தமிழகத்தில் உள்ள வலைப்பூ வாசகர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள சகோதரி ஜலீலா கமால் அவர்கள் தங்கள் வலைப்பூவில் பதிந்த இந்த பயனுல்ல கட்டுரையை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
மிக அற்புதமான இந்த விழிப்புணர்வு கட்டுரையை எழுதிய சகோதரிக்காவும் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் துஆ செய்கிறோம். சகோதரரி அவர்களிடம் அனுமதி பெற்று இந்த ஆக்கத்தை நம் அதிரைநிருபரில் பதிகிறோம்.
--அதிரைநிருபர் குழு.
-----------------------------------
கடந்த ஐந்து வருட காலமாக என் காதில் மாதம் ஒருத்தருக்காவது கேன்சர் இருக்கு என்பது காதில் விழுந்து கொண்டே இருக்கு, அதில் சில பேர் சரியான சிகிச்சை, உணவு கட்டுபாடு, தொடர்ந்து கொடுத்த மாத்திரைகளை சரியாக உட்கொண்டு வருவதால் நன்றாக தேறி இருக்கிறார்கள். ஆனால் சில பேர் ( லிவர் மற்றும் தொண்டையில் கேன்சர் வந்தவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளனர்.
நான் நேரில் கண்ட கேள்வி பட்ட , எனக்கு தெரிந்த கேன்சர் பற்றிய விஷியங்களை எல்லோருக்கும் தெரியபடுத்தனும் என்ற் நோக்குடன். ஏற்கனவே பிளாக்கில் 4 பதிவுகள் போட்டு வைத்து இருந்தேன் அதை யாரும் படித்த மாதிரி தெரியல,
லேடிஸ் ஸ்பெஷலுக்காக தேனக்கா பதிவு அனுப்ப சொல்லும் போது என்ன செய்வது சமையலை தவிர ஒன்றும் தெரியாதே என்று எண்ணும் போது கேன்சர் என்னும் கொடிய நோயாலா எங்க வீட்டிலேயே அவதி பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆகையால் அதை பற்றியே எழுதி விட்டேன்.
இன்னும் பல சொந்தஙக்ள், மற்றும் தோழமைகள் வீட்டிலும், இப்படி இந்த ஐந்து வருடத்தில் எனக்கு 25 பேருக்கு மேல் வந்துள்ளது. இன்னும் உலகத்தில் பல பேருக்கு இருக்கும் (இது பெண்களுக்கு தொண்டை, லிவர்,கர்ப்ப பை , மார்பக புற்றுநோயும்)வந்துள்ளது. (ஆண்களுக்கு குடல், பிரெயின், நாக்கு, லிவர் ,பிளட் கேன்சர் போன்றும் வந்துள்ளது.) (ஆண்களுக்கு, தொடர்ந்து சிக்ரேட் பிடிப்பதாலும், என்னோரமும் பான் பீடா போடுவதாலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பேச்சுலர்களுக்கு சாப்பாடு பிரச்சனையாலும் ,சாப்பாடு ஒத்துக்காமல் வாய் புண் அல்சர் பிறகு அதே கேன்சராகவும் மாறி இருக்கு) வாய் புண் மற்றும் அல்சர் வராமல் ஓரளவுக்கு பாதுக்காக்கும் டிப்ஸை பிற்கு போடுகிறேன். .
இதற்கான உணவு முறைகள் சிலவற்றை பின்பு போடுகிறேன்.
இப்போதைக்கு லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழுக்கு நான் அனுப்பிய கட்டுரை சிலர் ஜூம் செய்து படிக்க முடியல என்றாதால் இங்கு அந்த மெசேஜை போட்டுள்ளேன்
லேடிஸ் ஸ்பெஷல் பிப்ரவரி மாத இதழில். 50 , 51 ஆம் பக்கம் என்படைப்பு.
இப்போது பெருகிவரும் நோயில் இப்போது சாதரண ஜுரம் தலைவலி போல் புற்று நோயும் அதிகரித்து கொண்டே இருக்கு முன்பு இதற்கு மருந்தில்லை என்ற காலம் போய் இப்போது அதை கை தேர்ந்த டாக்டர்கள் குணபடுத்தவும் செய்கிறார்கள்.
பெண்கள் இருக்கிற அவசர உலகில் வேலை வேலை என குழந்தைகளையும், கணவரையும் , பெரியவர்களையும் கவனிக்கும் பிஸியில் தங்கள் உடல் நலத்தை சற்றும் கவனிப்பதில்லை நேரத்துக்கும் உணவும் உட்கொள்வதில்லை.இதனால் பிற்காலத்தில் உடல்நலம் இயலாமல் போவதை பற்றி சற்றும் நினைப்பதில்லை.
-- 1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும் உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
2. அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன் படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.
3. அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால் கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான் என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.
4. அடுத்து புது துணிவாங்கும் போது கண்டிப்பாக கவணம் தேவை. வேவ்வேறு நாட்டில் இருந்து தயாரித்து வருகிறது, அதில் பல பேர்களிம் கை பட்டு தான் வந்து சேரும் அதனால் பல வியாதியை தரும் கிருமிகள் தொற்றி இருக்கும்.. இனி ஒரு முறை வீட்டில் அலசி அயர்ன் செய்து விட்டு போட்டு கொள்ளுங்கள்.
5 . பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும்.பெண்கள் உள்ளாடைகளை வெண்ணீரில் அலசுங்கள். இப்படி செய்வதால் கிருமிகள் அழியும்.உள்ளாடைகளை 6 மாதத்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கு.கர்ப்ப பையில் கேன்சர் வந்தால் அது கிட்னி லிவரையும்
பாதிக்கும்.
6. ஆண்கள் பான் பீடா போடுவதை தவிர்க்கவும். என்னேரும் பான் பீடா
போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் கண்டது
அந்த நபர் இப்போது உயிரோடு இல்லை.
7. எந்த வியாதியும் தலைவலியோ மற்றவலியோ தொடர்ந்து ஒரு மாதத்திலிருந்து முன்று மாதம் ஆறு மாதம் என்று விடாமல் வந்தால் உடனே முறையாக டிரீட்மெண்ட் எடுக்கவும். நீங்களாக வீட்டு வைத்தியம் எடுக்க வேண்டாம்.
8. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர் 1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது
9. ஒரு 45 வயது பெண்ணிற்கு வாயில் புண்ணு இரண்டு வருடமா இருந்திருக்கு அது வலிக்கவும் இல்லையாம் கடைசியில் போய் காண்பிக்க போன அது கேன்சர் , லாஸ்ட் ஸ்டேஜ் ஒன்றும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இன்னும் அதிகமாகி பிறகு சாப்பிட முழுங்க முடியாமல் இரண்டு மாதமாக அவதி பட்டு அவர் இறையடி சேர்ந்துவிட்டார்.
10. பெண்கள் எல்லோரும் 35., 40 வயதை கடக்கும் போது கண்டிப்பாக எண்டோஸ்கோபி டெஸ்டும், மேமோகிராம் டெஸ்டும் எடுத்து கொள்ளவேண்டும். நோய் இருக்கோ இல்லையோ ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது.
எல்லாத்துக்கும் நம் உணவு முறை தான் காரணம் . சரியான உணவு முறையை எடுத்துக்கொண்டாலே நல்லது, உணவே மருந்து.
-- Jaleela Banu, Dubai
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது.
இதையும் http://samaiyalattakaasam.blogspot.com/2009/07/blog-post_27.html சென்று படிக்கவும்.
18 Responses So Far:
இது ஒரு கொடிய வியாதிதான், இரண்டு மாதங்களுக்கு முன் என் நண்பர் நாகூரை சேர்ந்த இப்ராஹீம் பாட்சாவை (கூட நம்மூரில் படித்தவர்) இழந்தோம். வியாதியில்லா மரணத்தை தற வேண்டுவோம்..
நல்ல பயனுள்ள தொகுப்பு சகோதரி....அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...நாமதான் உணவு என்ற பெயரி நஞ்சு சாப்பிடுகிறோமே...எல்லா பயிர்களிலும் உயிர் கொல்லி மருந்து அடித்து...மனித உயிர்களை மெல்ல கொல்கிறோம்
அஸ்ஸலாமு அழைக்கும்
சிகரெட் மற்றும் புகையிலை பயன் படுத்துவது ரெட் கார்பெட் போட்டு கான்சரை வரவளைப்பதற்க்கு சமம்
அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோதரி ஜலீலா கமால் அவர்களின் இந்த ஆக்கம் இத்தோடு நின்று விடாமல் அடிக்கடி பதியப்பட்டு நம் அனைவர்களுக்கும் ஞாபகப்படுத்த வேண்டிய ஒன்று. இதை அருமை என்று சொல்வதை விட அவசியம் என்று தான் சொல்லனும்.
இக்கட்டுரை மூலம் பல விழிப்புணர்வை தந்த சகோதரி தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய சொல்ல மறந்து விட்டீர்.
சாப்பிட்ட உடன் ஐஸ்கிரீம் அல்லது பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள் அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
மணிக்கணக்கில் தினமும் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
செல்போன் டவர் அருகாமையில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்வது நல்லதல்ல.
நாக்கிற்கு ருசியாக இருக்கின்றது என்பதற்காக எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட மொரு,மொரு நொறுக்குத்தீணி திண்பதை தவிர்ப்பதும் நல்லது.
இன்னும் இந்த நோய் பற்றி பல தகவல்களும், அறிவுரைகளும், விழிப்புணர்வுகளும் அன்றாடம் நமக்குத்தேவை.
நண்பன் மாலிக் வேண்டிக்கொண்டது போல் கொடிய, கொடிய நோய் மூலம் வரும் மரணத்தை விட்டு எங்களுக்கு பாதுகாப்பு தா யா!அல்லாஹ்....ஆமீன்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது
புற்று நோய்...
இதனை நினைத்தாலே... கலக்கமும் கண்ணீரும்தான் முந்துகிறது...
அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்... நாமும் எல்லாவகையிலும் விழிப்புணர்வுடனும் சுகாதாரத்துடனும் இருந்திடனும்....
சகோதரியின் சமூக அக்கறை பாராட்டத்தக்கது.
மிக அருமையான ஆக்கம்,...யா அல்லாஹ் எம்மவர்களை இக்கொடிய நோயை விட்டும் பாதுகாப்பாயாக!!ஆமீன்
Mobile phones are a brain cell ‘killer’
USING a mobile DOES affect your brain, medics have warned.
And that may boost the chances of developing diseases like cancer.
A major scientific study of hundreds of mobile users revealed signals emitted during calls can cause a seven per cent rise in chemical changes in the brain.
This "brain metabolism" occurs in the part closest to the mobile's antenna – usually held very close to the head or even touching the face during calls.
Research has already shown mobiles emit radiation and can heat up brain cells. Some doctors say you should not sleep with one near your head and phone companies recommend wearing headsets.
The latest study, by top US scientist Nora Volkow, may make thousands more use their phones with extra caution.
Last night British experts called for more research.
Neuroscientist Professor Patrick Haggard, of University College London, said: "If further studies confirm mobile signals have direct effects on brain metabolism, it will be important to investigate if they have implications for health."
By EMMA MORTON, Health and Science Editor
Published: Today
http://www.thesun.co.uk/sol/homepage/news/3427617/Mobile-phone-signals-kill-brain-cells.html
மிக அருமைஇதை.படித்துபார்த்த.சகோதர்கல்.அனைவரும்.வீட்டி.உள்ளபென்கலை.இதைபடித்து.பர்கும்படிசொல்லவும்.முக்கியமாக.உபேகித்த.என்னையை.அதிகமாகயூஸ்பன்னுவது.நம்மஊரில்.அதிகம்.அதுவும்.நோன்புநேரத்தில்.நாம்.அனைவரையும்.இதுபோன்றகொடியநோய்களீருந்து.அல்லஹ்காப்பாத்துவானாக்.ஆமீன் நன்ரிஅதிரைநிருபர்குழு.மற்ரும்சகோதரிஜலிலாயான ஆக்கம்
இதை.படித்துபார்த்த.சகோதர்கல்.அனைவரும்.வீட்டி.உள்ளபென்கலை.இதைபடித்து.பர்கும்படிசொல்லவும்.முக்கியமாக.உபேகித்த.என்னையை.அதிகமாகயூஸ்பன்னுவது.நம்மஊரில்.அதிகம்.அதுவும்.நோன்புநேரத்தில்.நாம்.அனைவரையும்.இதுபோன்றகொடியநோய்களீருந்து.அல்லஹ்காப்பாத்துவானாக்.ஆமீன் நன்ரிஅதிரைநிருபர்குழு.மற்ரும்சகோதரிஜலிலா
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த அற்புதமான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரையை தந்த சகோதரரி ஜலீலா கமால் அவர்களுக்கு மிக்க நன்றி.
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டவன் நான், ஒரு சில புற்றுநோய்கள் கடும் வலி கொண்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து பணிவிடை செய்துள்ளோன். அவர்கள் படும் வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நினைத்தாலே கண்ணீர் வரும். இறைவன் நம் எல்லோரையும் பாதுக்காக்கவேண்டும்.
சரியான உணவு பழக்கங்களே இது போன்ற நோய்களுக்கு காரணம் என்பதை வழியுறுத்தி சொன்னதற்கு மிக்க நன்றி.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நமக்கு எந்த நோய்யையும் தருபவன் இறைவனே அதை குணமாக்குபவனும் அவனே. இவையெல்லாம் நம்முடைய ஈமானை சோதிப்பதற்காகவே.
இது போன்ற கொடிய நோயிலிருந்து யா அல்லாஹ் எங்கள் எல்லோரையும் பாதுகாப்பாயாக...
வா அலைக்கும் அஸ்ஸ்லாம் சகோ.நைனா முகம்மது அவர்களே,
நான் இதை பற்றி என் வலைப்ப்பூவில் சொந்தமாக நடைமுறையில் நான் சந்த்திதவைகளை இங்கு மனதில் ஆழமான பதிந்தவைகளை கோர்வையாக தொகுத்துள்ளேன்,
நீங்கள் சொல்லும் பாயிண்டுகளும் குறிப்பிட தக்கது,
இதற்காக அவர்கள் என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்ற எனக்கு தெரிந்த உணவு முறைகளும் அப்ப அப்ப சமையல் குறிப்பில் கொடுத்துள்ளேன்,
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுகும் மிக்க நன்றி + சந்தோஷம்,
இதை படிப்பவர்கள், இனையதளம் வசதி இல்லாதவர்களுக்கு இதை சொல்லலாம் பலரை சென்றடையனும் என்ற நோக்குடன் தான் இங்கும் பகிர்ந்து கொண்டேன்,
Saleem சொன்னது…
மிக அருமையான ஆக்கம்,...யா அல்லாஹ் எம்மவர்களை இக்கொடிய நோயை விட்டும் பாதுகாப்பாயாக!!ஆமீன்
Reply Monday, February 21, 2011 10:41:00 PM
சகோ, சலீம் சொன்னது போல் (யா அல்லாஹ் எம்மவர்களை இக்கொடிய நோயை விட்டும் பாதுகாப்பாயாக!! ஆமீன், தூஆ கேட்போம்
உங்கள் பாராட்டுக்கு மிக்க் நன்றி சகோ.சபீர்
சகோதரி கதீஜா , ஆம் நோன்பு காலங்களில் அதிக பொரிக்கும் ஐட்டம் எண்ணையை மாற்றாமல் செய்வது இது கண்டிப்பாக் எல்லா பெண்களுக்கும் தெரிய படுத்தனும்,
அப்படி இல்லை கொஞ்சமான எண்ணையில் பொரிக்கனும், இல்லை பயன் படுத்தியதை உடனே வடிகட்டி சமையலுக்கு பயன் படுத்தி விடலாம்.
இதனால் கோடி கணக்காக பணம் செலவழிப்பதையும் வாழ் நாள் பூரா அவஸ்தை படுவதை தவிர்க்கலாம், தெரிந்த தோழிகளுக்கு சொல்லுங்கள்
வா அலைக்கும் சலாம் சகோ.தாஜுதீன்.
எல்லோரும் பாதிக்கபட்டவர்களை நேரில் கண்டதாலும் பணிவிடை செய்தாதாலும் தான் இந்த அளவிற்கு எழுது முடிந்தது,
இதன் சில உணவு பழக்கஙக்ளும் வருகிற பதிவில் முடிந்த போது போடுகிறேன்,
//ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நமக்கு எந்த நோய்யையும் தருபவன் இறைவனே அதை குணமாக்குபவனும் அவனே. இவையெல்லாம்
நம்முடைய ஈமானை சோதிப்பதற்காகவே.//
மிக்கசரியே
நன்றி சகோ. யாசிர்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர, சகோதரிகளே!
இங்கு இன்னொரு விசயத்தையும் குறிப்பிட மறந்து விட்டேன். அது என்னவெனில் நம் கண்களை எளிதில் கவர்வதற்காக செயற்கை (வண்ண)க்கலர் பவுடர்கள் சேர்க்கப்பட்ட பல இனிப்பு பண்டங்களை கடையில் வாங்கி அதிகம் உட்கொள்வதாலும் இது போன்ற கொடிய கேன்சர் வருவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. செயற்கைகலரில் பல ரசாயன வேதிபொருட்கள் சேர்க்கப்படுவதே இதற்கு மூல காரணம்.
ஏதோ நமக்கு அறிவுக்கு எட்டியவைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அதன் உண்மையான மூல காரணத்தை எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் வல்ல இறைவனே நன்கறிந்தவன்.
இயற்கையோடு விளையாடுவதை மனிதன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நம் வாழ்வில் விளையாண்டு விடும் இதுவும் இயற்கையைப்படைத்த இறைவன் நாட்டப்படியே.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Post a Comment