Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 14 25

அதிரைநிருபர் | March 03, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சகோதர, சகோதரிகள் சென்ற தொடரை படித்துவிட்டு பட்ஜெட் போட துவங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நமதாகும். 13வது தொடரில் சிக்கனத்தை பற்றி பார்த்தோம். மேலும் சேமிப்பு, சிக்கனம் இவைகளை தொடர்வோம்.
பிள்ளைகளின் சேமிப்பு :

தாய்மார்களுக்கு : வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள். மண் உண்டியல் உடைந்து விடும். தகரம், இரும்பில் உண்டியல்கள் கடையில் கிடைக்கிறது. இதில் காசு நிறைய சேர்த்து விட்டால் உனக்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லுங்கள். மேலும் தங்களிடம் காசு கேட்டால் நீ சேர்த்து வைத்துள்ள காசில் எடுத்து வாங்கிக் கொள் என்று சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பு வருவதை உணர்வீர்கள்.

வாங்கும் பொருட்களில் சிக்கனம் :

ஒரு கிரைண்டர் வாங்கினால் ஒரு கிரைண்டர் இலவசம். ஒரு மிக்ஸி வாங்கினால் ஒரு மிக்ஸி இலவசம். ஒரு ஸ்டவ்விற்கு ஒரு ஸ்டவ் இலவசம். இது போன்ற பொருட்களை வாங்காதீர்கள். ஒரு பொருள் குறைந்த பட்சம் 5 வருடத்திற்காவது  உழைக்க வேண்டும் என்றால் நல்ல தரமான கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்குங்கள்.

விலை குறைவாக இருக்கிறது என்று இலவசத்துடன் வரும் பொருட்களை வாங்காதீர்கள். பாதி விலையில் கிடைக்கிறதே என்று பயன்படுத்திய பொருட்களையும் வாங்காதீர்கள். எந்த மின் சாதனங்கள்  (உதாரணத்திற்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின்) வாங்கினாலும்  தரமான கம்பெனியின் பொருட்களையே வாங்குங்கள்.  பொருட்கள் வாங்கும்பொழுது ஒரே கடையில் வாங்கி விடாமல் இரண்டு மூன்று கடைகளில் சென்று விலைகளை பார்த்து எங்கு குறைவாக கிடைக்கிறதோ அந்த கடையில் வாங்குங்கள்.

துணிமணிகள்:

நம் சமுதாய பெண்மணிகள்   கண்ணை மூடிக்கொண்டு 4 ஆயிரம் 5 ஆயிரத்திற்கு சேலைகள் வாங்குகிறார்கள். இதற்கு மேலும் விலை அதிகமாக எடுப்பவர்களும் இருக்கிறார்கள். (ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் இவள் மாதிரி சேலை வாங்க முடியுமா? இவள் சேலை எடுத்தாலே விலை உயர்ந்ததுதான் என்று மற்ற தோழிகள் பெருமையாக பேச வேண்டுமாம்). (பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு கிடக்கிறது என்று நினைப்பது போல்).

வீண் விரயம்:

எனது அலுவலகத்தில் வேலை செய்த ஆபீஸ் பாய் சொன்னது: (கும்பகோணத்திற்கு பக்கத்து ஊர்) இவரின்  தந்தை முனிஸிபாலிட்டியில் வேலை செய்கிறார். இவர்கள் ஊருக்கு பணம் அனுப்பி அவர்கள் தாயார் கையில் கிடைத்தவுடன் அவர்கள் செய்யும் முதல் வேலை வாடகை ஆட்டோவில் கும்பகோணம் சென்று (வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இல்லை) தொலைக்காட்சியில் செய்து காட்டிய உணவு வகைகளை குறிப்பெடுத்து அந்த பொருட்களை தேடி அலைந்து வாங்கி வந்து செய்து பார்ப்பார்களாம். எவ்வளவு பணம் அனுப்பினாலும் தாயார் பணம் பற்றவில்லை என்ற புலம்பல்தானாம். பொழுது போக்கு சமையல் செய்வதற்காக மாதா மாதம் வீண் விரயமாக ஒரு தொகை போய்க்கொண்டு இருக்கிறது. சமுதாய பெண்களுக்கு மார்க்கம் சரியான வழியில் சென்றடையவில்லை. வீண் விரயத்தை வல்ல அல்லாஹ் கண்டிக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்: 7:31)

ஆகவே சகோதர, சகோதரிகளே:  வீடு கட்டுவது, துணிமனிகள் வாங்குவது, வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வாங்குவது, வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களுக்கு செலவழிப்பது இப்படி எந்த காரியத்திலும், ஆடம்பரம் கலக்காமல், பிறர் பாராட்ட வேண்டும் என்று நினைக்காமல், அவசியமா? அவசியமில்லையா? என்பதை சரிகண்டு பிறகு நாம் செய்யும் காரியத்தில் வீண் விரயம் இருக்கிறதா? நம்முடைய காரியத்தில் வல்ல அல்லாஹ்வின் திருப்தி கிடைக்குமா? நம் மனதிற்கு திருப்தியாக இருக்கிறதா? என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். ஊருக்காக, ஆடம்பரத்திற்காக எந்த ஒரு காரியமும் இருக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தள்ளுபடி:

ஆடித்தள்ளுபடி வருடா வருடம் போடுவார்கள். காரணம் அவர்களின் மூட நம்பிக்கையின்படி இந்த மாதம் நல்லமாதம் கிடையாது. அதிகம் பேர் கையில் பணமும் இருக்காது, (ஏன் பணம் இருக்காது என்று தெரியவில்லை) கேள்விப்பட்டேன். அதனால் நிறைய துணிக்கடைகள் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும். இந்த கடைகள் கண்டுபிடித்ததுதான் ஆடித்தள்ளுபடி.
இந்த நேரத்தில் தங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் தேவைப்பட்ட துணிமணிகளை சாதாரணமாக பயன்படுத்தவும், நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் வரைக்கும் சேலை, சுடிதார், பிள்ளைகள் துணிகள் என்று அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். (எந்தந்த ஊர்களில் தள்ளுபடியில் தரமான துணிகள் கிடைக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது).

இதனால் அடையும் பலன்கள் குறைவான விலையில் துணிகள் வாங்குவதோடு நாம் மீதப்படுத்தும் பணத்தில் அக்கம் பக்கம் உள்ள ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் துணிகள் எடுத்துக் கொடுக்கலாம்.(தருமம் செய்த நன்மை கிடைக்கும்) நோன்பு மாதத்தில் 20வது நோன்பு முதல் பெருநாள் முதல் நாள்வரை துணிகள் வாங்க அலைந்து புனித மாதமான நோன்பில் அமல்கள் செய்யாமல் புறக்கணிப்பது பாதுகாக்கப்படும். புனித மாதத்தின் நன்மைகள் முழுவதுமாக கிடைத்து நிம்மதியாக அமல்கள் செய்யலாம்.

சில பெண்களிடம் தள்ளுபடி விலையில் துணிகள் வாங்கலாம் என்றால் தள்ளுபடி துணிகளை உடுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்தா போய்விட்டோம் என்று கூறுகிறார்கள். சேமிப்பின் அவசியம் அவர்களுக்கு புரியவில்லை. விலை உயர்ந்த துணிகள்தான் உடுத்துவார்களாம். இனி வரும் காலங்களில் தள்ளுபடி போடாமல் எந்த வியாபாரமும் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு வருடம் முழுவதும் தள்ளுபடி திருவிழாவை காணலாம் (தரமான துணிகளும் தள்ளுபடியில் கிடைக்கும்). நமக்கு தேவை குறைந்த விலையில் மனநிறைவான துணிகள் இது போதாதா?


வளைகுடா சகோதரர்களின் சிக்கனம்:

லூயி பிலிப் (Louis Philipe Shirts )  வேன் ஹிஉசேன் (Van heusen shirts ) ஏஎல்எம் (ALM shirts)  (என்ன கடனைப்பற்றி எழுதி விட்டு, சட்டை துணிமணிகள் விற்பதற்கு ஏஜெண்டாகி விட்டீர்களா? என்று நினைக்க வேண்டாம்) நிறைய சகோதரர்கள் பிராண்டடு (Branded) என்ற வார்த்தையை அதிகம் உபயோகப்  படுத்துவதை காணமுடிகிறது. நல்ல கம்பெனிகளில் தரமான அழகான பேண்ட், ஷர்ட்களும் வெளிவருகிறது. அதேநேரத்தில் கிச்சனில் பயன்படுத்தும் துணிகள் போன்றதையும் 100திர்ஹம்  (ரூபாய் 1000) த்திற்கு மேல், 160திர்ஹம் (கிட்டத்தட்ட 2ஆயிரம் ரூபாய்) இந்த விலையில் கடைகளில் பார்க்க முடிகிறது.

சில நேரங்களில் (கிச்சனில் பயன்படுத்தும்) விலை உயர்ந்த சட்டைகளை கவலையே படாமல் கையில் இருக்கும் பிளாஸ்டிக் மணியை கொடுத்து நம் சகோதரர்கள் வாங்கிச் செல்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு மனதிற்கு சங்கடமாக இருக்கும். சம்பாரிக்கிறோம் என்ற நினைப்பில் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று. இப்பொழுதும் இந்த கம்பெனி துணிகளை எல்லா இடங்களிலும் தள்ளுபடி போட்டிருக்கிறார்கள். எப்படி இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசமாம். மேலும் குறிப்பிட்ட துணிமணிகள் (Half is Back – Half Priced Items) பாதி விலை தள்ளுபடி என்ற புதுவித தள்ளுபடி ஆரம்பமாகியுள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம்:  வளைகுடா நாடுகள் என்று இல்லாமல் எல்லாநாடுகளிலும் மெகா தள்ளுபடி போட ஆரம்பித்து விட்டார்கள். அதன் பெயர்களை தாங்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. கோடைகால தள்ளுபடி, குளிர்கால தள்ளுபடி, ரமலான் தள்ளுபடி, வாரத்தள்ளுபடி, ஸ்பெஷல் தள்ளுபடி, ஸ்டாக் கிளியரென்ஸ் தள்ளுபடி இது போக 50 சதவீத , 70 சதவீத தள்ளுபடியும் சில நேரங்களில் இருக்கும். சாதாரண நாட்களில் விருப்பட்டதை எடுங்கள். இந்த தள்ளுபடி காலங்களில் ஒரு வருடத்திற்கு தேவைப்படும் துணிகளை எடுத்து வைத்துக்கொள்ளலாம். நிறைய சேமிப்பு கிடைக்கும்.

பிராண்டடு உள்ள துணிகள் அதிக விலைக்குத்தான் எடுக்க முடியும் என்று நினைக்கலாம். எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. தள்ளுபடியே இல்லை என்றால் எடுக்கலாம். தள்ளுபடி காலங்களில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு உபயோகப்படும். மேலும் நமக்கு பணம் மீதப்படும். இந்தப்பணத்தில் ஏழை உறவினர்களுக்கு உதவி செய்யப்பயன்படுத்தலாம். நமக்கு சேமிப்பாகவும் இருக்கும்.

சிக்கனமா? கஞ்சத்தனமா?

சகோதர, சகோதரிகளே! நான் சிக்கனத்தைப் பற்றித்தான் சொல்லி வருகிறேன். சிக்கனமாக இருக்க சொல்கிறார்கள். நாம் சிக்கனமாக செலவு செய்து யாருக்கும் கொடுக்காமல் நமக்கு மட்டும் சேர்த்து வைத்துக் கொள்வோம் என்று நினைக்காதீர்கள். சிக்கனம் என்பது வேறு கஞ்சத்தனம் என்பது வேறு. சிக்கனத்தால் வாழ்வு சீரடையும். கஞ்சத்தனம் நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும்.

கஞ்சத்தனம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழுக்க அவ்விருவரையும் மூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.


25 Responses So Far:

Shameed said...

அலாவுதீன். S.
//வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள்.//


அஸ்ஸலாமு அழைக்கும்

சொல்லும் செயலும் சரியாக இருக்கிறது

நேற்று இரவு என் கடைசி மகள் உண்டியலை திறந்து அதில் எத்தனை ரியால் உள்ளது என்று எண்ணி 5 ரியால் 10 ரியால் என்று தரம் பிரித்து ரியால்களை ஒன்றாக வைத்து ரப்பர் பேண்ட் போட்டு அத்துடன் மொத்தம் எவ்வளவு உள்ளது என்று எண்ணி திரும்பவும் உண்டியலில் போட்டு வைத்துவிட்டது

இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து உருக்கு போகும் போது ஒரு நெக்லஸ் வாங்க வேண்டுமாம்.

Yasir said...

பிள்ளைகளின் சேமிப்பு,வீண்விரயம் செய்யக்கூடாது என்பது ஒரளவு எங்களுக்கு தெரிந்து இருந்தாலும்...துணிமணிகள் தள்ளுபடியில் கிடைக்கும் போது எடுத்து வைத்துகொள்வது என்பது நான் யோசிக்காதது...நல்ல யோசனை...குழந்தைகளுக்கு எடுக்காவிட்டாலும் நமக்காவது எடுத்து வைத்து கொள்ளாலாம்....நல்ல/ புதுவிதமான சேமிப்பு சிந்தனை....வாழ்த்துக்கள் காக்கா...
//சிக்கனத்தால் வாழ்வு சீரடையும். கஞ்சத்தனம் நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும்// மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..

sabeer.abushahruk said...

அருமையான விளக்கங்கள் அலாவுதீன்,

பாடம் நடத்துவதோடு படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் எப்படி மண்டையில் ஏறுமோ அப்படி ஏறுகிறது சிக்கனப் பாடம்!

தொடரட்டும் உன் பணி!

(அப்படியே ஒரு சின்ன குழப்பத்தையும் தீர்த்து வைத்துவிடு. இந்த தள்ளுபடி காலத்திலே வாங்கச் சொல்கிறாயல்லவா அப்பொழுதுதான் சின்னச் சின்ன பழுதுகளோடான சமான்களும் எவராலும் விரும்பப்படாமல் விற்காமல் கிடக்கும் சாமான்களும் தள்ளி விடப்படுகின்றன என்று கருத்து நிலவுகிறதே!?)

அலாவுதீன்.S. said...

///Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்
சொல்லும் செயலும் சரியாக இருக்கிறது.
நேற்று இரவு என் கடைசி மகள் உண்டியலை திறந்து அதில் எத்தனை ரியால் உள்ளது என்று எண்ணி 5 ரியால் 10 ரியால் என்று தரம் பிரித்து ரியால்களை ஒன்றாக வைத்து ரப்பர் பேண்ட் போட்டு அத்துடன் மொத்தம் எவ்வளவு உள்ளது என்று எண்ணி திரும்பவும் உண்டியலில் போட்டு வைத்துவிட்டது.
இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து ஊருக்கு போகும் போது ஒரு நெக்லஸ் வாங்க வேண்டுமாம்.///
**************************************************
சகோ. ஹமீது : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) பரவாயில்லை அறிவாளி மகள்தான் தங்கம் விற்கும் விலையில் நெக்லெஸ் வாங்குவதற்கு பணம் சேர்க்கிறதே பாராட்டுக்கள்.

அவசியம் மகள் சேர்க்கும் பணத்தோடு தாங்கள் பணம் போட்டு ஊருக்கு செல்லும்பொழுது நெக்லெஸ் வாங்கி கொடுத்து விடுங்கள். தொடரட்டும் தங்கள் மகளின் சேமிக்கும் பழக்கம். சேமிப்பிற்கு தடை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

///Yasir சொன்னது…
துணிமணிகள் தள்ளுபடியில் கிடைக்கும் போது எடுத்து வைத்துகொள்வது என்பது நான் யோசிக்காதது...நல்ல யோசனை...குழந்தைகளுக்கு எடுக்காவிட்டாலும் நமக்காவது எடுத்து வைத்து கொள்ளாலாம்....நல்ல/ புதுவிதமான சேமிப்பு சிந்தனை.///
********************************************************
சகோ. யாசிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) : 25% சதவீத கோடை கால தள்ளுபடி, குளிர் கால தள்ளுபடி, ரமலான் தள்ளுபடியில் துணிகள் எல்லாமே நன்றாக இருக்கும்.

ஸ்டாக் கிளியரன்ஸ், 50சதவீதம், 70 சதவீத தள்ளுபடி துணிகளை டேமேஜ் எதுவும் உள்ளதா என்று நன்றாக பார்த்து வாங்குங்கள். திருப்பி மாற்றிக்கொள்ளப்படாது என்று அவர்கள் போர்டே வைத்திருப்பார்கள். வருடத்திற்கு மேல் ஆனால் துணிகளில் அழுக்கு படிந்திருக்கும் இது ஒரு குறையல்ல கொண்டு போய் துவைத்து விட்டால் சரியாகிவிடும். கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

////sabeer.abushahruk சொன்னது…
அப்படியே ஒரு சின்ன குழப்பத்தையும் தீர்த்து வைத்துவிடு. இந்த தள்ளுபடி காலத்திலே வாங்கச் சொல்கிறாயல்லவா அப்பொழுதுதான் சின்னச் சின்ன பழுதுகளோடான சமான்களும் எவராலும் விரும்பப்படாமல் விற்காமல் கிடக்கும் சாமான்களும் தள்ளி விடப்படுகின்றன என்று கருத்து நிலவுகிறதே!? ///
****************************************************************************
சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உன்னுடைய சந்தேகம் நியாயமானதுதான். நாம் தள்ளுபடியில் மின் சாதன பொருட்கள் வாங்குவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. யு.ஏ.இல் மின் சாதன பொருட்களுக்கு அன்பளிப்பு கூப்பன்கள் கொடுப்பார்கள் இந்த திட்டத்தில் பொருள்கள் வாங்கலாம்.

25 சதவீத கோடை கால தள்ளுபடி, குளிர் கால தள்ளுபடி, ரமலான் தள்ளுபடியில் துணிகள் எல்லாமே நன்றாக இருக்கும்.

துணிமணிகள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். 50 சதவீத 70 சதவீத தள்ளுபடியில் ரெடிமேட் துணிகளில் சில பழுதுகள் இருக்கத்தான் செய்யும் பட்டன் தொங்கும் இல்லாமல் இருக்கும். சில துணிகள் அழுக்காக இருக்கும், சில துணிகள் வெளுத்துப்போய் இருக்கும். இப்படி குறைகள் இருக்கத்தான் செய்யும். மேலும் சில துணிகள் கறையாக இருக்கும் சில பிள்ளைகள் சாக்லெட் சாப்பிட்டு விட்டு கையை துணிகளில் துடைத்து விட்டுச்செல்லும்.

நானும் மகளுக்கு 4 சுடிதார் ஸ்டாக் கிளியரன்ஸ் தள்ளுபடியில் எடுத்தேன் வீட்டில் கொண்டு வந்து பார்க்கும் பொழுது பெரிய சைஸாக இருந்தது. திருப்பி கொண்டு போய் மாற்றலாம் என்றால் இது ஸ்டாக் கிளியரன்ஸ் மாற்ற முடியாது என்றான். பிறகு மேனேஜரை சந்தித்து விபரம் கூறி நான் பணத்தை திரும்ப கேட்கவில்லை இதே கிளியரன்ஸில் உள்ள சிறிய சைஸ் சுடிதாரை மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்லி மாற்றி வந்தேன். ஒரிஜனல் விலை 180, 250 திர்ஹம். நான் வாங்கியது 50திர்ஹத்திற்கு இதில் டேமேஜ் எதுவும் இல்லை ஆனால் கழுத்துப்பகுதியில் தூசி படிந்து அழுக்கு அதிகமாக இருந்தது. நான் வாங்கி வந்து ட்ரை வாஷிற்கு கொடுத்தேன். புதிய சுடிதாராகி விட்டது.

மற்றபடி 50, 70சதவீத தள்ளுபடியில் நல்ல துணிகளும் டேமேஜ் இல்லாமல் நிறைய துணிகள் பிள்ளைகளுக்கு 2008 வரை எடுத்துள்ளேன். 2009 முதல்தான் பெண் குழந்தைகளின் ஆடைகள் கை இல்லாமல் , ஒரு சைடு கிழிந்த நிலையில் நாகரீகம் என்ற பெயரில் வந்து கொண்டு இருக்கிறது. இப்பொழுதெல்லாம் இங்கு துணிகள் எடுப்பதில்லை. ஊரில்தான் பிள்ளைகளுக்கு துணிகள் எடுக்கிறேன். எனக்கு பேண்ட், சர்ட்கள் தள்ளுபடியில் எடுத்துக்கொள்வேன்.

தள்ளுபடியில் வாங்கும்பொழுது நன்றாக பார்த்து வாங்குவது நல்லது.

sabeer.abushahruk said...

விளக்கத்திற்கு நன்றி.

நானும் இன்னிக்கு பிள்ளைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்து விடுகிறேன். காசு கொடுக்காத நேரங்களுக்கு ஹெல்ப் லைன்னு போட்டு உன் ஃபோன் நம்பரையும் கொடுத்துவிடுகிறேன். எதுக்கும் செல்ல் ஃபோனில் சில்லரை குழுங்கும் சப்தத்தை பதிவு செய்து என் பெயருக்கு ரிங் டோனாக செட் பண்ணி தப்பிக்கவும்:)

(இந்த பக்கம்லாம் வர்ர ஐடியா இல்லையா?)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

சேமிப்புக்கு அறிய யோசனைகள் தந்தமைக்கு மிக்க நன்றி. இறுதியில் கஞ்சத்தனம் தொடர்பான ஹதீஸ் சரியான தேர்வு.

கடன் வாங்கலாம் கட்டுரை 14 தொடர்கள் இதுவரை எட்டியுள்ளது. மிகத் தெளிவாக ஒவ்வொரு பதிவையும் பல சிரமங்களுக்கு நடுவில் எழுதி எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் உங்களுக்காக மீண்டும் துஆ செய்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பிள்ளைகள் படிப்பில் சிறு சாதனை படைத்தாலும் அவர்களுக்கு பரிசாக பணம் கொடுக்கலாம், அவற்றை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை மேலும் அதிகப்படுத்தும்.

என் மகன் பள்ளி ஆண்டுவிழா போட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றான். நாங்கள் வாக்குறுதி கொடுத்தது போல் அவனுக்கு பரிசாக பணம் கொடுத்தோம், அந்த பணத்தை தன்னிடம் உள்ள உண்டியலில் போட்டு சேர்த்து வருகிறான், இது போல் தனக்கு கிடைக்கும் சிறு சிறு தொகைகளை உண்டியலில் போட்டு சேமித்து வருகிறான்.

படிப்பின் வெற்றில் கிடைக்கும் பணப் பரிசுகளை சேமித்துவைத்தால் அது தம் பிள்ளைகளில் பிற்கால படிப்பு செலவுகளுக்கே உதவலாம். இதை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஊக்கப்படுத்தி கற்றுத்தரலாமே.

Yasir said...

//என் மகன் பள்ளி ஆண்டுவிழா போட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றான். நாங்கள் வாக்குறுதி கொடுத்தது போல் அவனுக்கு பரிசாக பணம் கொடுத்தோம்// நேத்து KG-2 இறுதி தேர்வில் ஸ்டார் (ஃபுல் மார்க் ) வாங்கினால் எனக்கு SONY PSP வாங்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தான் பணமாக வாங்கிகோடா என்றால் இல்லை என்று அடம்பிடித்தான்...சரி ஸ்டார் வாங்கமாட்டான் என்ற நல்ல எண்ணத்தில் அதை வைத்து கோரிக்கையை நிராகரித்து விடலாம் என்று நினைத்தேன்...ஆனால் செல்லமகன் ஸ்டார் எடுத்து 699AED க்கு வேட்டு வைத்துவிட்டான்....அந்த இரவே அது வேணாம் என்றும் நல்லாயில்லா என்றும் சொல்லி பணத்தையும் பறித்து அவங்க உம்மாவிடம் கொடுத்து விட்டான்....இப்ப சோனியை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை...எனக்கும் கேம் விளையாட தெரியாது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

லேட்டா வந்துட்டேன் அதுக்காகாக நீங்களெல்லாம் கோவிச்சுக்கவா போறீங்க... சரி சரி...

ஆக்காமும் அதன் பின்னால் வரும் ஊக்கமும் தனி முத்திரை மட்டும் பதிக்கவில்லை முனோக்கிச் செல்ல வழித்தடம் போட்டு காட்டுகிறது...

அல்ஹம்துலில்லாஹ்...

என்னுடைய நேரத்தை(யும்) சேமித்துக் கொண்டு வருகிறேன் மீண்டும்

ZAKIR HUSSAIN said...

To Bro Yasir,

//சரி ஸ்டார் வாங்கமாட்டான் என்ற நல்ல எண்ணத்தில் //

இதற்க்கு பெயர் நல்ல எண்ணமா?

இதையெல்லாம் எப்ப நல்ல எண்ணம்னு மாத்திட்டானுக? அப்பப்ப "அப்டேட்'
ஃபைல் அனுப்புங்க யாசிர்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதையெல்லாம் எப்ப நல்ல எண்ணம்னு மாத்திட்டானுக? அப்பப்ப "அப்டேட்'
ஃபைல் அனுப்புங்க யாசிர்//

காக்கா சவுதி மன்னர் ஃபேஸ்புக்கை வாங்கிடட்டுமே அப்புறம் அப்டேட் செய்வோமே !! :))

Ahamed irshad said...

இந்த‌ க‌ட்டுரையை இங்கு ப‌திய‌லாமே?..அனுப்புவார்க‌ள் என்று எதிர்பார்க்காம‌ல் # ஊர் ந‌ல‌ன்..

http://adiraixpress.blogspot.com/2011/03/blog-post_02.html

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் இர்ஷாத், தங்களின் வேண்டுகோளுக்கு மிக்க நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியில் உள்ள செய்தி கடந்த இரண்டு வாரங்களாக பல இணைய மின்னஞ்சல் குழுமங்களில் வெளிவந்தது. அதிரைநிருபர் மின்னஞ்சலுக்கும் வந்தது. இந்த கட்டுரை ஒரே ஒரு சம்பவம் மட்டுமே நடந்ததை பற்றிய செய்தியே என்பதால் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை பதியவில்லை. இது போன்று தொடர்ந்து நடந்தால் நிச்சயம் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இந்த கட்டுரை எழுதிய சகோதரர் போலீஸில் புகார் தெரிவித்தாரா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் நம் பக்கம் தவறு இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார்கொடுத்து கயவர்களை கண்டுபிடிக்கலாம். இதுவே சரியான அனுகுமுறை.

விரைவில் அதிரைநிருபரில் வளார்ச்சியடைந்துள்ள தகவல் தொடர்புதுறையால் ஏற்படும் அசம்பாவிதங்கள் பற்றிய கட்டுரை வெளியிடப்படும்.

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல் இல்லாத செய்தியாக இருந்தாலும் ஊர் நலன் கருதி இந்த கோரிக்கையை நம்மிடம் வைத்த சகோதரர் அதிரை இர்ஷாத் அவர்களுக்கும் மீண்டும் நன்றி.

பொதுவாக அதிரையில் உள்ள வலைப்பூக்களில் வெளியாகும் செய்திகளை அனேக அதிரைவாகள் வாசிக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைமணம் வலைத்திரட்டி வருகையாளர்களும் அதிரையில் உள்ள அனேக வலைப்பூகளுக்கு செல்லுகிறார்கள் என்பது எங்கள் பார்வைக்கு வருகிறது.

அலாவுதீன்.S. said...

///அஹமது இர்ஷாத் சொன்னது…
good thought br.Alaudeen.. /// சகோதரர் அஹமது இர்ஷாத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்): தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

sabeer.abushahruk சொன்னது…
/// நானும் இன்னிக்கு பிள்ளைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்.///
சபீர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உடனே உண்டியல் வாங்கி கொடுப்பதோடு நில்லாமல் தினமும் ஒரு தொகையை அனைவருக்கும் கொடுக்கவும். இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் தின பேட்டா இல்லாமல் பள்ளிக்கூடம் போவதில்லை. திண்பண்டங்களோடு காசும் கொடுக்க வேண்டியுள்ளது.

/// (இந்த பக்கம்லாம் வர்ர ஐடியா இல்லையா?)///
இன்ஷாஅல்லாஹ் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

உன்னுடைய கருத்திற்கு நன்றி!

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அலாவுதீன் காக்கா, //வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள்.//மிகமிக பயனுள்ள யோசனை.

//சில பெண்களிடம் தள்ளுபடி விலையில் துணிகள் வாங்கலாம் என்றால் தள்ளுபடி துணிகளை உடுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்தா போய்விட்டோம் என்று கூறுகிறார்கள். சேமிப்பின் அவசியம் அவர்களுக்கு புரியவில்லை...//

அன்றைய அதிரைப்பட்டினம்(நமக்கு உடன்பாடு இல்லா)கந்தூரி காலங்களில், அண்ணா சோப்,அருணா சோப் அமோகமாக விற்பனையாகும். விளம்பர,வியாபார யுக்தியாக "இரண்டுபார் சோப் வாங்கினால் அழகிய பூப்போட்ட கிளாஸ் இலவசம்" என்று சொல்லியே விற்றார்கள்.

நம் வீட்டு பெண்களும் சோப்புக்கு சோப்பாயிற்று, கிளாசும் இலவசம் என்று பயன் படுத்திக்கொண்டார்கள். அப்போ இருந்த நமது பெண்களிடம் இருந்த கெட்டித்தனம் இப்போது இல்லை.

இந்த தொடர் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.இன்ஷாஅல்லாஹ்

அலாவுதீன்.S. said...

/// தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் உங்களுக்காக மீண்டும் துஆ செய்கிறோம். அல்லாஹ் போதுமானவன்.. ///

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்): தங்களின் துஆவிற்கும்! கருத்திற்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்! (தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்)
*********************************************************************
/// என் மகன் பள்ளி ஆண்டுவிழா போட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றான். நாங்கள் வாக்குறுதி கொடுத்தது போல் அவனுக்கு பரிசாக பணம் கொடுத்தோம், அந்த பணத்தை தன்னிடம் உள்ள உண்டியலில் போட்டு சேர்த்து வருகிறான், இது போல் தனக்கு கிடைக்கும் சிறு சிறு தொகைகளை உண்டியலில் போட்டு சேமித்து வருகிறான். ///

தங்களின் மகன் சேமித்து வருவது குறித்து சந்தோஷம். சேமிப்பின் முக்கியவத்தும் புரிந்ததற்கு வாழ்த்துக்கள்!

அலாவுதீன்.S. said...

/// Yasir சொன்னது…
நேத்து KG-2 இறுதி தேர்வில் ஸ்டார் (ஃபுல் மார்க் ) வாங்கினால் எனக்கு SONY PSP வாங்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தான் செல்லமகன் ஸ்டார் எடுத்து 699AED க்கு வேட்டு வைத்துவிட்டான்....அந்த இரவே அது வேணாம் என்றும் நல்லாயில்லா என்றும் சொல்லி பணத்தையும் பறித்து அவங்க உம்மாவிடம் கொடுத்து விட்டான்....இப்ப சோனியை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை...எனக்கும் கேம் விளையாட தெரியாது.///
********************************************************************************
சகோ. யாசிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
பிள்ளைகளுக்கு இதுபோன்ற அதிக தொகைக்கான வாக்கு கொடுப்பதை விட சிறிய தொகைக்கான வாக்கு கொடுப்பதே நமக்கு நன்மையளிக்கும். (நம் மணிப்பர்ஸ் எல்லா நேரமும் கணமாக இருக்காது) வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். சின்ன சின்ன பரிசு கொடுக்கலாம்.

அலாவுதீன்.S. said...

///அபுஇபுறாஹீம் சொன்னது…
லேட்டா வந்துட்டேன் அதுக்காகாக நீங்களெல்லாம் கோவிச்சுக்கவா போறீங்க... சரி சரி...
ஆக்கமும் அதன் பின்னால் வரும் ஊக்கமும் தனி முத்திரை மட்டும் பதிக்கவில்லை முனோக்கிச் செல்ல வழித்தடம் போட்டு காட்டுகிறது...
அல்ஹம்துலில்லாஹ்...///
***************************************************************

சகோதரர் அபுஇபுறாஹீம் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

லேட்டா வந்ததற்கு கோபித்துக்கொள்ளமாட்டோம். லேட்டா வந்தாலும் தங்களின் கருத்தை பதிந்து விட்டீர்கள். தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

/// அதிரைpost சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அலாவுதீன் காக்கா, மிகமிக பயனுள்ள யோசனை. நம் வீட்டு பெண்களும் சோப்புக்கு சோப்பாயிற்று, கிளாசும் இலவசம் என்று பயன் படுத்திக்கொண்டார்கள். அப்போ இருந்த நமது பெண்களிடம் இருந்த கெட்டித்தனம் இப்போது இல்லை. ///
****************************************************************
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதரரே! உண்மைதான் இப்பொழுது உள்ள பெண்களுக்கு தொலை நோக்கு திட்டம் குறைந்து வருகிறது.
தங்களின் கருத்திற்கு நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// அதிரைpost சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அலாவுதீன் காக்கா, மிகமிக பயனுள்ள யோசனை. நம் வீட்டு பெண்களும் சோப்புக்கு சோப்பாயிற்று, கிளாசும் இலவசம் என்று பயன் படுத்திக்கொண்டார்கள். அப்போ இருந்த நமது பெண்களிடம் இருந்த கெட்டித்தனம் இப்போது இல்லை. ///
****************************************************************
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதரரே! உண்மைதான் இப்பொழுது உள்ள பெண்களுக்கு தொலை நோக்கு திட்டம் குறைந்து வருகிறது.
தங்களின் கருத்திற்கு நன்றி! ///

இல்லை.. அப்படி ஒன்றும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லி இன்றைய சுட்டிகளின் (இளம் பெண்களின்) ஆளுமையையும் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும் தட்டிக் கழிக்க முடியாது... மாஷா அல்லாஹ்... நூலைப் போல் சேலை தாயைப் போல் பிள்ளை என்பதற்கும் உதாரணங்கள் ஏராளமுண்டு இதனை மறுக்க முடியாது !

கெட்டியாக களம் இறங்கி சாதிக்கும் இளம் தாய்மார்களும் அவர்களுக்கு உறுதுனையாக இருக்கும் கணவன் மற்றும் பெற்றோரையும் கண்கூடாக பார்க்கிறோம்... இதில் விதிவிலக்கு என்று பார்க்கும்போது அதன் விகிதாச்சாரத்தின் வேறுபாடு கொஞ்சம் அதிகமே அதுவும் ஒப்புக் கொள்ளப் படவேண்டிய உண்மைய்கள்.

அலாவுதீன்.S. said...

///அபுஇபுறாஹீம் சொன்னது…
இல்லை.. அப்படி ஒன்றும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லி இன்றைய சுட்டிகளின் (இளம் பெண்களின்) ஆளுமையையும் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும் தட்டிக் கழிக்க முடியாது... மாஷா அல்லாஹ்... நூலைப் போல் சேலை தாயைப் போல் பிள்ளை என்பதற்கும் உதாரணங்கள் ஏராளமுண்டு இதனை மறுக்க முடியாது ! ///
*****************************************************************
சகோ. அபுஇபுறாஹீம் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்து உண்மைதான் : எல்லோரையும் குறை சொல்ல முடியாது. சிக்கனமாக வாழும் சகோதரிகளும், இளம் பெண்களும் (((இளம் பெண்களின்) ஆளுமையையும் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும் தட்டிக் கழிக்க முடியாது...))) நிறைய பேர் இருக்கிறார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு