தேர்தல் விவாதக் களம் - 2


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். - வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடனடியாக நீக்கம் செய்திடுவாருங்க !

_________________________________________________________

தேர்தல் விவாதக் களம் - 2

கை கொடுப்பாளா - தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 'கதாநாயகி' தேர்தல் அறிக்கை ?

சிறுபான்மையினர்களுக்கு...

* தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஈடுகொடுப்பாளா - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் (முன்னால்) கதாநாயகியின் (தேர்தல்) அறிக்கை ?

சிறுபான்மையினர்களுக்கு...

* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.

* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- அதிரைநிருபர்-குழு


"தேர்தல் களம்-வாக்குறுதிகள்"

வரும் தேர்தலுக்கு வாக்குறுதிகளை இரு பிரதான கட்சிகள் அள்ளி வீசி இருக்கின்றது.பலவிதிமுறைகளை அவ்வப்போது கொண்டு வரும் தேர்தல் கமிசன் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளையும் ஒப்புதலுக்கு பின் தான் வெளியிட முடியும் என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்.

செயல் படுத்த முடியாத அல்லது எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள திட்டங்கள் ஏதுமிருப்பின் அதை தேர்தல் கமிசன் தடுத்து நிறுத்த வேண்டும்.இப்போதைய வாக்குறுதிகளை பார்த்தால் கவர்ச்சியை தவிர வேறு அதிக நலத்திட்ட வாக்குறுதிகள் இல்லை.

ஏற்கனவே மின் தடைக்கு புகழ் பெற்ற நம் தமிழ் நாட்டில் மிக்சி கிரைண்டர் என அனைவருக்கும் கிடைத்து விட்டால் சொல்லவே தேவையில்லை மின்சாரத் தட்டுப்பாடு எப்படி இருக்குமென்று! ஏற்கனவெ இயற்கை காற்றிலேயே படுத்துப் பழகிப்போன குடிசைவாசிகளுக்கு மின்விசிறியும் வழங்கிவிட்டால் அதையும் அனைவரும் பயன் படுத்தி மின் கட்டணம் ஒருபுறமிருக்க மேலும் மின் பற்றாக்குறை தான் வரும்.இதற்கெல்லாம் முழுமையான தீர்வான புதுப்புது மின் உற்பத்தி திட்டங்கள் ஏதும் முழுமையாக இல்லை.

ஏழை இருக்கும் வரை இலவசம் தொடருமாம் ஆனால் ஏழ்மை ஒழிப்பு திட்டம் ஏதுமில்லை. ஆடுகள் அவற்றின் பெருக்கத்திற்காக ஒழிய மாமிசத்திற்கென்று ஆகி விடக்கூடாது. தேர்தலுக்கு முன் பெற்றால் லஞ்சம், பின் பெற்றால் அதற்கு பெயரென்ன? இந்த வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்னாடி பெறும் லஞ்சம் தானே!

குற்றங்கள் ஒழிப்பு,திருட்டு தவிர்ப்பு,கலவரத்தடுப்பு,சாலை மேம்பாடுகள்,போக்குவரத்தை எளிதாக்க மேம்பாலங்கள், சுகாதாரம்,புதுப்புது தொழிற்ச்சாலைகள் உருவாக்குதல், ஏற்றுமதி,விவசாய நவீன யுத்திகள்,வேலை வாய்ப்பை பெருக்குதல்,படிப்பின் தரத்தை உயர்த்துதல்,விலைவாசி குறைப்பு,மது ஒழிப்பு இதற்கான திட்டம் ஏதும் முழுமையாக இல்லை.சுருக்கமாகச் சொன்னால் நாளைய ஆட்சியை பிடிப்பதற்கு மட்டுமே இந்த கவர்ச்சி வாக்குறுதிகள்.
 
இப்போ சொல்லுங்க உங்கள் கருத்துக்களை எந்த கட்சி தேர்தல் அறிக்கை வெல்லும் இந்த தேர்தலில்?
 
-- M. H. ஜஹபர் சாதிக்

54 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கதாநாயகியின் பாட்டு !

கிரைண்டர் மிக்சி கதாநாயகிக்கு
அரைக்கத் தர்றாங்க...
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!

இலவசமா அரிசி கூட
கெடைக்கப் போவுதாம்...
வேகவைக்க கேஸ் அடுப்பும்
ஜோடி சேருதாம்!

அறுபது வயசு ஆகலையேன்னு
கவலை பொறக்குது...
ஓசி பஸ்ல போக முடியாது
என்ன பண்றது?

காலேஜுல சேரலாம்னா
ஏஜ் அவுட்டாயிடுச்சாம்..
லேப்டாப்பு கெடைக்காது
ரொம்ப லாஸுடா!

தேவையெல்லாம் இலவசமா
குடுக்கப் போறாராம்...
ஐயா எப்படி இந்தக் கடனை
அடைக்கப் போறாராம்?

இலவசத்தில் ஒண்ணு ரெண்ட
ஸ்டாப் பண்ணுங்கப்பா...
நாங்களும் கொஞ்சம் வாங்கிக்கிறோம்
அரசு வேலை குடுங்கப்பா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

செல்வியின் தேர்தல் அறிக்கை இடஒதுக்கீட்டைப் பற்றி மூச்சே விடவில்லை ! ஏனோ தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் கொட்டித் தீர்க்கிறார் பரிந்துரை செய்யப்படும் என்று !!

இலவசம் வாக்களனுக்கு - இவர்கள் மட்டும் பணக்காரர்களாக இருந்திடத்தானோ !?

Yasir சொன்னது…

இது புதுசு --ரீலா அல்லது ரியலா

//அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும்; இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம். மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.///http://www.dinamalar.com/News_Detail.asp?Id=212461

அப்துல்மாலிக் சொன்னது…

இதுவரை கொடுத்த இலவசத்துலே ஊருலே கொத்தனார், சித்தாலுக்கு ஏற்கனவே கிராக்கி... எனவே மக்கா வீடுகட்டுறத மறந்திடுங்கோ..

அப்துல்மாலிக் சொன்னது…

சாமானியனின் உழைப்பை மறக்கடித்துவிட்டது இந்த இலவசம்

தனக்கு 1கிலோ அரிசி, மளிகை சாமான்
குழந்தைக்கு இலவச மதிய உணவு முட்டையுடன்
தனக்கும்/குழந்தைக்கும் இலவச வீடு
தனக்கும்/குழந்தைக்கும் இலவச மருத்துவம் (109)
தனக்கு கட்டிக்க வேட்டி, சேலை ஒவ்வொரு பண்டிக்கைக்கும் (வருடத்தில் 7 பண்டிகை வருது)
குழந்தைகு இலவச சீருடை பள்ளியில்

எல்லாம் இலவசம், எங்கும் இலவசம், எதுக்கு உழைக்கவேண்டும், உழைப்பது வாழ்விற்கு மூலதனமான இருப்பிடம், உணவு, உடை இவையெல்லாம் இலவசமாக (இதை வாங்குவதற்கு மட்டும் கொஞ்சம் வரிசையில் காத்து மெனெக்கெடவேண்டும்)

அப்துல்மாலிக் சொன்னது…

மம்தாவின் தேர்தல் அறிக்கையை பார்த்தீங்களா? இதுலே ஒன்னுக்கூட இல்லே தமிழ்நாட்டின் இரு பெரு கட்சிகளின் அறிக்கையில்..@#@$

1.மாநிலத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும், தொழில் துறையையும், விவசாயத் துறையையும் இரட்டை சகோதரிகளாக கருதி, அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது, அடுத்த 1,000 நாட்களில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து, விளக்கமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3.தொழில் துறையை மேம்படுத்தி, அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

4. மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 51ல் இருந்து 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5.ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் அமைக்கப்படும். மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும்.

7.தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சி தரம் உயர்த்தப்படும்.

8. மாநிலத்தில் மேலும் 10 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.

9.தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும்.

10.மாநிலம் முழுவதும், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11.ஒவ்வொரு நகரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

12.விவசாயத் துறையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

13.மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைப்பதற்கான "மாஸ்டர் பிளான்' செயல்படுத்தப்படும்.

14.மாநிலத்தின் நிர்வாக பணிகளில் அரசியல் ஆதிக்கம் அகற்றப்படும்.

15.பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும்.

sabeer.abushahruk சொன்னது…

ரெட்டை இலையும்
சொட்டைத் தலையும்
படுத்துறாங்க பாடு!
பட்டைநாமம் போடுவாங்க
துலுக்கனுக்கும் சேர்த்து!

இலவசமா அரிசி வேனாம்
எலக்ட்ட்ரிக் கிரைன்டர் வேனாம்
மடிக்கணினி தந்துப்புட்டு
அடிமடியில் கையும் வேனாம்

விதிவசமா பயணம்
நெருங்குகின்ற வயசினிலே
இலவசமா பயணம்
எவனுக்குயா வேனும்?

தாய்குலத்தை தாஜாபண்ண
தனியா வரும் வாக்குறுதி
தென்றலுக்கும் செல்லம்மாக்கும்
வரிவிலக்கு உறுதி

குடிக்கிறதண்ணி காசு
படிக்கிற படிப்புக்கு காசு
சாலையில் வண்டிக்கு காசு
சோலையில் நுழையவும் காசு

உல்ட்டாவா நடக்குது ஆட்சி
அல்ட்டாப்பா பேசுது ஆச்சி
பொதுவில இருக்குது வேட்டு நீங்க
போடுங்கம்மா ஓட்டு!

Ahamed irshad சொன்னது…

மொழிப்போராட்ட‌த்தில‌ ஆர‌ம்பிச்ச‌ திமுக‌ இன்னைக்கு மிக்சி'ல‌ வ‌ந்து நிக்குது.. க‌ழுதை தேய்ஞ்சு க‌ட்டெரும்பானாக்கூட‌ ப‌ர‌வாயில்லை..இது காணாம‌ போயிருச்சே..அடுத்த‌ தேர்த‌லில் ம‌க்க‌ளுக்கு 50 எங்க‌ளுக்கு 50 'ன்னு கூட‌ அறிக்கை வ‌ர‌லாம். யாரு க‌ண்ட‌து..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

என்ன கவிக் காக்கா அதுக்குள்ளேயே ஓட்டுக் கேட்க வந்திட்டீங்க... இருங்க இருங்க அலசி ஆராய்ஞ்ஞ்ஞ்சிட்டு ஓட்டுக் கேட்போமே !? இன்னொற்னு இருக்கு ஓட்டுக் கேட்டு வருவாய்ங்க பாருங்க !!!!!

தம்பி இர்ஷாத் : இந்த டீலிங்க் ரொம பிடிச்சுருக்கு !! அதுக்கு ஐந்து வருசம் காத்திருக்கனுமா !?

Ahamed irshad சொன்னது…

அஞ்சு வ‌ருஷ‌மெல்லாம் தேவையில்லை... ஃபாலோ அப் டூ எகிப்து ppl's :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அஹமது இர்ஷாத் சொன்னது…
அஞ்சு வ‌ருஷ‌மெல்லாம் தேவையில்லை... ஃபாலோ அப் டூ எகிப்து ppl's :) ///

இவய்ங்களா சான்ஷே இல்லேப்பா !

இங்கே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 200% ஊதிய உயர்வு (பாதிப்பு அங்கே எஃபெக்ட் இங்கே)...

அப்துல்மாலிக் சொன்னது…

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு http://pandiidurai.wordpress.com/

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

எதுக்கு அரிசி மிக்ஸி, கிரைண்டர்னு தனித்தனியா தர்றாங்க!

ஒரு ஆளுக்கு 4 இட்லி கெட்டிச் சட்னின்னு வீடு வீடா அரசே தினசரி பார்சல் கொடுத்துட்டா, நிம்மதியா சாப்பிட்டுட்டு அவங்க கட்சி டி.வியை பார்த்துட்டு காலத்தை தள்ளிடலாமே.

இது சமீபத்தில் ஓர் வலைப்பூவில் படித்தது. மக்கள் எதிப்பார்பு இப்படி இருக்கு அடுத்த எலக்ஸன்ல பார்க்கலாம் இது போன்று இட்லி சட்னி இலவசம் என்று.

அப்துல்மாலிக் சொன்னது…

//தாஜுதீன் சொன்னது…

எதுக்கு அரிசி மிக்ஸி, கிரைண்டர்னு தனித்தனியா தர்றாங்க!

ஒரு ஆளுக்கு 4 இட்லி கெட்டிச் சட்னின்னு வீடு வீடா அரசே தினசரி பார்சல் கொடுத்துட்டா, நிம்மதியா சாப்பிட்டுட்டு //

தாஜ், நம்மக்க ஊட்டியும் விட சொல்லுவாங்க, இந்த இலவசம் அவுங்களை மேலும் சோம்பேறியாக்கிடும்

Yasir சொன்னது…

//ஒரு ஆளுக்கு 4 இட்லி கெட்டிச் சட்னின்னு வீடு வீடா அரசே தினசரி பார்சல் கொடுத்துட்டா, நிம்மதியா சாப்பிட்டுட்டு அவங்க கட்சி டி.வியை பார்த்துட்டு காலத்தை தள்ளிடலாமே//ஹாஹாஹா...சரியான ஜடியாதான்....ஒட்டுமொத்த மக்களையும் சோம்பெறி ஆக்கி விடலாம்

crown சொன்னது…

அப்துல்மாலிக் சொன்னது…

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு http://pandiidurai.wordpress.com/
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஜாம்,ஜாம்னு நடக்கட்டும்.இங்கே உள்ள இந்த சிக்கல்(சின்னல்)
டிராபிக்கு நீதி மன்றமே பச்சை சிக்கனல் காட்டிடும் எந்த சிக்கலும்,அம்மாவுக்கும்,
அய்யாவுக்கும் வராது.காரணம் இது (சன)பினனாயக நாடு.

Yasir சொன்னது…

///இதுவரை கொடுத்த இலவசத்துலே ஊருலே கொத்தனார், சித்தாலுக்கு ஏற்கனவே கிராக்கி... எனவே மக்கா வீடுகட்டுறத மறந்திடுங்கோ..// ஆமா சகோ.மாலிக் இதை நான் இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...அதிலும் நம்மூரில் ரொம்ப ஓவர்..கொத்தனார் கூலி இப்ப 500ரூ.....அதிலிலும் அவங்க நினைக்கும் போதுதான் வேலைக்கு வர்றாங்க...எதாவது பிரச்சனை என்றால் சங்கத்தில் புகார்...இதைப்பற்றி ஒரு ஆக்கம் எழுதி நடவடிக்கை எடுத்தால் ஏக்கம் தணியும்...போட்டது 25L பட்ஜெட் ஆனால் 31L தாண்யும் முடியாம இழுத்துக்கிட்டு கிடக்கிறது..அல்லாஹ் போதுமானவன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

(சிறுபான்மைச் சமூக) வேட்பாளர்களை அறிவிக்கவே இவய்ங்களுக்கு முழி பிதுங்குது... இட ஒதுக்கிடு கிடைக்குமா அல்லது இடையில் ஒதுக்கியது கிடைக்குமா ?

crown சொன்னது…

அப்துல்மாலிக் சொன்னது…

//தாஜுதீன் சொன்னது…

எதுக்கு அரிசி மிக்ஸி, கிரைண்டர்னு தனித்தனியா தர்றாங்க!

ஒரு ஆளுக்கு 4 இட்லி கெட்டிச் சட்னின்னு வீடு வீடா அரசே தினசரி பார்சல் கொடுத்துட்டா, நிம்மதியா சாப்பிட்டுட்டு //

தாஜ், நம்மக்க ஊட்டியும் விட சொல்லுவாங்க, இந்த இலவசம் அவுங்களை மேலும் சோம்பேறியாக்கிடும் .
--------------------------------------------------------------------
அப்படியே ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு ஊரிலிருந்து ஒவ்வொரு தெருவிற்கும்
பத்து ,பத்து குடும்பமாக இலவச ஊட்டி சுற்றுலா தமிழக சுற்றுலாத்துறை சார்பாக நடை பெறும்ன்னு அறிவிச்சாலும் அறிவிப்பாங்க.

Yasir சொன்னது…

//விதிவசமா பயணம்
நெருங்குகின்ற வயசினிலே
இலவசமா பயணம்
எவனுக்குயா வேனும்// அதானே நல்ல கேளுங்க :)

crown சொன்னது…

Yasir சொன்னது…

///இதுவரை கொடுத்த இலவசத்துலே ஊருலே கொத்தனார், சித்தாலுக்கு ஏற்கனவே கிராக்கி... எனவே மக்கா வீடுகட்டுறத மறந்திடுங்கோ..// ஆமா சகோ.மாலிக் இதை நான் இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...அதிலும் நம்மூரில் ரொம்ப ஓவர்..கொத்தனார் கூலி இப்ப 500ரூ.....அதிலிலும் அவங்க நினைக்கும் போதுதான் வேலைக்கு வர்றாங்க...எதாவது பிரச்சனை என்றால் சங்கத்தில் புகார்...இதைப்பற்றி ஒரு ஆக்கம் எழுதி நடவடிக்கை எடுத்தால் ஏக்கம் தணியும்...போட்டது 25L பட்ஜெட் ஆனால் 31L தாண்யும் முடியாம இழுத்துக்கிட்டு கிடக்கிறது..அல்லாஹ் போதுமானவன்.
-------------------------------------------------------------------
பில்டிங்கும், நாமளும் வீக்காயிட்டோம்,கொத்தனார்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்
கானுங்க. எல்லாம் நம் மிடையே பூசி மொழுகப்படும் ஒற்றுமையும்,பூசலும் தான்.
அவங்களை புறக்கணித்து வெளியூரிலிருந்து முஸ்லிம் கொத்தனார்களை கொண்டு
வரனும்னு பல வருடமுன்பே போராடினோம். நம்மவர்களே நம் ஒற்றுமையை
இடித்துவிட்டு அவங்களிடம் வேலைக்கு மன்றாடுகிறோம் இதை ஒவ்வொரு
சங்கமும் ஒருங்கினந்து பொது ஜாமாத்தில் முடிவு வராதவரை கொத்தனார்களின்
அட்டூழியம் அழியாது, நம் நினைத்தது முடியாது.பல லட்சம்ங்கள்வீனாக நம் அலட்சியமும்,
லட்சியம் இல்லாமையுமே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//பில்டிங்கும், நாமளும் வீக்காயிட்டோம்,கொத்தனார்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காய்ங்க. எல்லாம் நம் மிடையே பூசி மொழுகப்படும் ஒற்றுமையும்,பூசலும் தான்.//

Crown's day comment ! தமிழிலேயே சொல்லிடுறேன்(டா)ப்பா : இன்றைய நட்சத்திர கருத்து(டா)பா !!!!

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…
கதாநாயகியின் பாட்டு !..................
sabeer.abushahruk சொன்னது…

ரெட்டை இலையும்
சொட்டைத் தலையும்
படுத்துறாங்க பாடு!
பட்டைநாமம் போடுவாங்க
துலுக்கனுக்கும் சேர்த்து!
-----------------------------------------------------------------
ரெண்டுபேரும் கலக்குறீங்க போங்க எப்படித்தான் சூழ்னிலைக்கு தக்க இப்படி
நையான்டியாவும்,விமர்சனரீதியிலும் எழுதுரிங்களோ போங்க. வாழ்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஏனுங்க இலவச மின்சாரம் கிடைக்குமா ? அல்லது இன்வெர்ட்டர் கிடைக்கு மான்னு கேட்டுச் சொல்லுங்கப்பா !

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//குற்றங்கள் ஒழிப்பு,திருட்டு தவிர்ப்பு,கலவரத்தடுப்பு,சாலை மேம்பாடுகள்,போக்குவரத்தை எளிதாக்க மேம்பாலங்கள், சுகாதாரம்,புதுப்புது தொழிற்ச்சாலைகள் உருவாக்குதல், ஏற்றுமதி,விவசாய நவீன யுத்திகள்,வேலை வாய்ப்பை பெருக்குதல்,படிப்பின் தரத்தை உயர்த்துதல்,விலைவாசி குறைப்பு,மது ஒழிப்பு இதற்கான திட்டம் ஏதும் முழுமையாக இல்லை.சுருக்கமாகச் சொன்னால் நாளைய ஆட்சியை பிடிப்பதற்கு மட்டுமே இந்த கவர்ச்சி வாக்குறுதிகள். //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ஜஹபர் சாதிக், மிக அருமையாக அலசியுள்ளீர்கள்.

ஹைலைடானவைகளே விட்டுப்புட்டாங்க.

இந்த இலவச பெருட்களை கொடுப்பதற்கு விழா எடுப்பானுக அதுக்கு எவ்வளவு செலவழிக்க போராங்களோ நம் வரிப்பணத்தை.

ஆடம்ம்பர பொருட்க்கள் இலவச அறிவிப்புக்கள் தான் இவர்கள் அடிக்கடி மேடைகளில் பீற்றிக்கொள்ளும் அண்ணா, பெரியாரிடம கற்ற பகுத்தறிவா?

crown சொன்னது…

Yasir சொன்னது…

//விதிவசமா பயணம்
நெருங்குகின்ற வயசினிலே
இலவசமா பயணம்
எவனுக்குயா வேனும்// அதானே நல்ல கேளுங்க :)
--------------------------------------------------------------------
(இ)உறுதியா போகப்போற வயசுல ஊர்தில என்னயா இலவச பாஸ். நாளை
பாஸாக(After death passed away) போற வயசுயா இது.இந்தையர்களின் சராசரி ஆயுள் காலம் அருபது.மீதி இருப்பது போனஸ். இதில் என்ன அரசுவின் போனஸ்????

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அருபது.மீதி இருப்பது போனஸ். இதில் என்ன அரசுவின் போனஸ்????//

கலக்கல்(டா)ப்பா !

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

கதாநாயகியின் பாட்டு !

கிரைண்டர் மிக்சி கதாநாயகிக்கு
அரைக்கத் தர்றாங்க...
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!
---------------------------------------------------------------
முழுபூசனிக்காய சோத்துல மறைக்க கேட்டிருக்கோம்.இங்கே கவிஞர் அபுஇபுறாகிம்
காக்கா,புதிவிதியை உருவாக்கி அதையே உருவகப்படுத்தியிருக்கார்,சோத்துல
பூசினைக்காய் என்பது அரைத்த மாவையே அரைக்கிறமாதிரி ஆகையால்
இனி மொத மாவில்ஸ்பெட்க்ரம் போலன்னு புது தத்துவம் தமிழ்கூறும் நல் உலகு
க்கு சொல்லியுள்ளார்கள்.அவங்களுக்கு அதிரை நிருபர் ரசிகர் மன்ற சார்பா
என்ன கொடுக்கலாம்னு சகோ.யாசிர் சொல்லட்டுமே!என்ன கவிகாக்கா சரியா
நான் சொல்றது?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கிரவ்ன்(னு): கதாநாயகியின் பாட்டு (வலயில்)வாசித்ததும் அங்கே கைவத்து சேர்த்தம் உண்டு முழுப் பாட்டு எழுதவியப்பா !

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

கிரவ்ன்(னு): கதாநாயகியின் பாட்டு (வலயில்)வாசித்ததும் அங்கே கைவத்து சேர்த்தம் உண்டு முழுப் பாட்டு எழுதவியப்பா !
------------------------------------------------------------------
உங்களை மாதிரியோ,கவிகாக்காமதிரியோ எழுத இயலாது.வேறு மாதிரி(Example) முயற்சிக்கிறேன்.

அதிரை முஜீப் சொன்னது…

ஆக மொத்தம் இலவச அரிசி வாங்கி, இலவச தண்ணீருடன், இலவச மிக்ஸி கிரைண்டரில் அரைத்து, இலவச ஆடு மாட்டை அறுத்து, இலவச கேஸ் அடுப்பில் சமைத்து மிச்சம் மீதி இருந்தால், இலவச பிரிட்ஜில் வைத்து அதை மீண்டும் உண்டு , பின் நோய் ஏற்பட்டவனை இலவச ஆம்புலன்ஸில் கொண்டு சென்று அங்கே இலவச வைத்தியம் இலவச காப்பீட்டில் பார்த்து விட்டு ......

இருக்கும் உயிரையும் போலி மருத்துவரிடம் காட்டி, போலி மருந்து மாத்திரைகளை தின்றுவிட்டு, செத்து தொலைந்தால் அங்கேயும் வருகின்றான் இந்த அரசியல் வாதி, சுடுகாட்டில் பிணம் எரிக்க இலவசம் மின் மயான அடுப்பு என்று!.

ஆம்! அங்கேயும் பிணம எரியும் சூட்டின் கதகதப்பில் குளிர்காய்ந்து, சாவிலும் ஊழல் செய்ய சாவா வரம் பெற்றவன்தான் இந்த இலவச அரசியல் வாதி!.

தற்போதைய செய்தி:
பி.ஜெ.பி தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு நாப்தின் இலவசமாம்!. அட கருமம்!, கருமம்!. இதற்க்கு பிறகு வேறு என்ன இலவசம் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதிரை முஜீப் சொன்னது…

அரசியல் !
தேர்தல், ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரும் கொடை!. ஆனால் இன்று அநியாயக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!.

எதை செய்தேனும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று இன்றைய அரசியல், தரம் தாழ்ந்துவிட்டது. காரணம் தேடி அலைந்தோமேயானால் மக்களும், மறதியும் தான் முதல் இடத்தை பிடிக்கின்றது. நாம் தான் அவர்களை முடிவு செய்யும் முதலாளிகள். ஆனால் இலவசம் என்ற சிறிய மீனை போட்டு ஊழல் என்னும் பெரிய திமிங்கிலத்தை அவர்கள் பிடிக்கவும் நாமே காரனமாகின்றோம்!.

நாம் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்காத வரை, அரசியல் வாதிகள் தங்களை தானே, நியமன உறுப்பினர்களாக ஆக்கிக்கொள்ள முடியாது. நாம் தான் கயவர்களோ, நல்லவர்களோ தேர்ந்தேடுகின்றோம். ஆக பலியை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து இலவசம் என்பது ஒரு மாயை!. மக்களை திசை திருப்ப, அரசியல் வாதிகள் கையில் எடுத்திற்குக்கும் தற்காலிக ஆயுதம் தான் இது!. முன்பைப் போல் தமிழ் வெறி, தனி நாடு கோரிக்கை, ஆரிய எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, திராவிடம் போன்றவை எல்லாம் தற்காலத்திற்கு எடுபடாத விசயம். அதனால் தான் இலவசங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.
நீ எவ்வளவு அடித்தாலும் அடித்துக்கொள். எனக்கும் அதில் பங்கு கொடுத்தால் நான் அமைதியாகிவிடுவேன்!. பிரிக்கும் பங்கில் பிரச்சனை என்றால் மட்டும்தான், ஊழலை வெளி கொண்டு வருவேன் என்றுதான் எதிர்கட்சிகளும் செயல் படுகின்றார்கள்

இனி வருங்காலங்களில் இலவசங்கள் இப்படியும் இருக்கலாம்!.
-இலவச டி.வி, அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, லேப்டாப் ஆகிய பொருட்கள் கொடுப்பதால் அதை பழுதுபார்க்க வீட்டுக்கு வீடு ஒரு எலக்ட்ரீசியன் இலவசமாக கிடைக்கலாம்!.
-ஆடு மாடு கொடுக்க இருப்பதால் இனி வைக்கோலும், புல்லும் இலவசம்!. IAS, IPS ஆபீசர்கள் இவற்றை மேய்பதற்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுவார்கள்!.
-கீதாரிகளுக்கு ஆடு மாடு மேய்க்கும் தொழில் நுட்ப பயிற்சி இலவசம்.
-இலவசம்டாஸ்மார்க் சரக்கு(மது) ஒன்று வாங்கினால் அதை ஊற்றிக்கொடுக்க சரக்கு(மாது) ஒன்று இலவசம்!.
-கடைசி ஏழை இருக்கும் வரை தெருவோடு இலவசம்!.

படிக்க இலவச கல்வி நாம் கேட்டால், படித்துக் கொடுக்க அமைச்சர்கள் அனைவருக்கும் இலவச கல்லூரிகள்!.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மேதகு வாக்காளர் கேட்கிறார்ன் : உங்களைப் போல் என்னால் இலவசமாக செய்ய முடியாது / ஓட்டுப் போடமுடியாது ஆகவே என் ஓட்டுக்கு என்ன விலை ?

Yasir சொன்னது…

சகோ.கிரவுன்....போதும் நிறுத்துங்க :)...உங்கள் கருத்து மழையில் நனைந்து கொண்ட இருந்தால் தூக்கமும் வராது தூங்கவும் விடமாட்டீர்கள் அப்படி ஒரு ரசனையான் கருத்துக்கள்...பத்து நிமிடத்துக்கு ஒருமுறை கிரவுன் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்க எந்திரிக்க வேண்டி உள்ளது. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.... எப்படி இப்படியெல்லாம் தமிழில் தகடுதத்தம் ஆடுறீங்க....

ZAKIR HUSSAIN சொன்னது…

இப்போது உள்ள தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர் தெரியாத அளவுக்கு கட்சிகள் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு கட்சியின் பெயருக்கு என்ன முழுப்பெயர் என்று பாடம் எடுப்பவர்களுக்கு ஒரு ட்யூசன் பீஸ் கொடுக்களாம் போல் தெரிகிறது.

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் ஏதோ ஆடு எல்லாம் இலவசமா கொடுக்கிறார்களாமே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் ஏதோ ஆடு எல்லாம் இலவசமா கொடுக்கிறார்களாமே... ///

மேய்பதற்கு ஒரு தொண்டனும் இலவசம் (அறிவிக்கலாம்)!

Yasir சொன்னது…

கிரவுனே பல்மொழி வித்தகனே (ரே)..நீரே எங்கள் புதுமைகவி அபு இபுராஹிம் காக்காவிற்க்கு ஒரு பெயர் சூட்டும்..நாங்கள் வழிமொழிய தயார்

sabeer.abushahruk சொன்னது…

சகோதரர் ஜகபர் சாதிக்கின் ஓப்பெனிங்கே ஃபோரும் சிக்ஸூமா வெளுத்து வாங்குதே இங்கே ஏற்கனவே சிங்கிள் சிங்கிளா அடிச்சு ஸ்கோர் போர்ட் டிக் செய்துகொண்டிருக்கும் நாங்கள் இனி ரிட்டயர்ட் ஆகி கமென்டெரி கொடுக்கப் போய்டனுமோ?

நல்ல தூண்டல். வாழ்த்துகள் சகோ.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா : ஜஹபர் சாதிக்கிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...

அதிரை முஜீப் சொன்னது…

பேசாம, கிரிக்கெட் வீரர்களை I P L கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஏலம் எடுத்து டீம் அமைத்தது போல் இந்த வேட்பாளர்களையும் ஏலத்தில் விட்டால் நன்றாக இருக்கும். ஊழலை இங்கே இருந்தே தொடங்கிடலாமே!

ZAKIR HUSSAIN சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

//ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் ஏதோ ஆடு எல்லாம் இலவசமா கொடுக்கிறார்களாமே... ///

மேய்பதற்கு ஒரு தொண்டனும் இலவசம் (அறிவிக்கலாம்)!

என்ன இப்படி ஒரு அப்ரானியா இருக்கீங்க...ஏதும் சைவத்துக்கு மாறிட்டீங்களா?...

இஞ்சி பூண்டு தூக்களா எறச்சானத்துக்கு ஆட்டுக்கறி தேவைனு தெரியாதா உங்களுக்கு...

எதுக்கும் உங்களுடைய 'அதிராம்பட்டினத்து குடியுரிமை'யை புதுப்பித்து கொள்ளவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//எதுக்கும் உங்களுடைய 'அதிராம்பட்டினத்து குடியுரிமை'யை புதுப்பித்து கொள்ளவும் //

அடா ஆமாம் காக்கா (அசத்தல்தான் காக்கா), அதையும் செய்யனுமா !! கலரியில் அறைத்து தருவதற்கு வந்து கொண்டிருந்தவங்களெல்லாம் தான் இப்போ கூலாக "அன்புள்ள முதல்வருக்கு நன்றி"ன்னு கடுதாசி எழுதாறாங்களே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

முஜீப் சத்தாமா பேசாதீங்க காதில் விழுந்து அதனையும் தொடங்கிடப் போறானுவோ !

crown சொன்னது…

ZAKIR HUSSAIN சொன்னது…

இப்போது உள்ள தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர் தெரியாத அளவுக்கு கட்சிகள் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு கட்சியின் பெயருக்கு என்ன முழுப்பெயர் என்று பாடம் எடுப்பவர்களுக்கு ஒரு ட்யூசன் பீஸ் கொடுக்களாம் போல் தெரிகிறது.

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் ஏதோ ஆடு எல்லாம் இலவசமா கொடுக்கிறார்களாமே...
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மாடு கொடுத்தாளாவது
அதில் பால் கறந்து பிழைத்துகொள்ளலாம்.ஆடு எப்படியும் பலியாடாகபோவதுதான்.
இதே ஜெ.முன்பு முஸ்லிம்கள் ஆடு வெட்டகூடாதுன்னு பிரட்சனை பன்னினாள்.
பீ.ஜே.பி மற்றும் அவன் சகாக்கள் சொன்னது.மாடு குர்பான் கொடுக்கக்கூடாது
அது மாதா-குலமாதா என்று பிரட்சனைபன்னினானுவ.இன்னும் வட மானிலத்தில்
மாடு குர்பான் கொடுக்கவியலா சூழ்னிலைதான் பெரும்பாலும் நிகழ்கிறது.
அப்புறம் சகோ.முஜிப்(முத்தங்கள் கிடைத்ததா?)சொன்னபடி பெண்களுக்கு
நாப்கின் திட்டம் வேறு கட்சிகள் ஒருவேளை அறிவித்திருந்தால் பாரதமாதாவை
அவமானப்படுத்திவிட்டார்கள் என்கிற ரீதியில் போலியாக ஆர்பாட்டம் பன்னிருப்பானுங்க.

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

முஜீப் சத்தாமா பேசாதீங்க காதில் விழுந்து அதனையும் தொடங்கிடப் போறானுவோ !
----------------------------------------------------------------------
இருக்காதா பின்னே தேர்தல் நேரமாச்சுல்ல!கேட்காத காதும் கேட்கும்.பிணம்கூட
கிராபிக்ஸ்சில் வந்து பேசும்(உதாரணம்:இந்திரா,ராஜீவ்,அன்னா,எம்.ஜி.ஆர்,,,,)

crown சொன்னது…

Yasir சொன்னது…

கிரவுனே பல்மொழி வித்தகனே (ரே)..நீரே எங்கள் புதுமைகவி அபு இபுராஹிம் காக்காவிற்க்கு ஒரு பெயர் சூட்டும்..நாங்கள் வழிமொழிய தயார்.
---------------------------------------------------------------------
அன்பரே! நீரே கேள்வியும் கேட்டு பதிலும் தந்துவிட்டீரே!புதுமைகவியும் நல்ல
புனை(வு)பெயர்தானே?????

sabeer.abushahruk சொன்னது…

"கணினிக் கவி"???

அதிரை முஜீப் சொன்னது…

crown சொன்னது…

அப்புறம் சகோ.முஜிப் முத்தங்கள் கிடைத்ததா?
கிடைக்காமலா?. கிடைத்தது! தங்களின் இந்த அன்பிற்கும் பாசத்திற்கும் பாராட்டிற்கும் நான் நிச்சயம் (முத்தத்தை) கொடுத்து வைத்தவன் தான்!. துவா செய்யுங்கள். வீழ்ந்து கிடக்கும் இந்த சமுதாயத்தினை தூக்கி நிறுத்துவோம்!. உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் தான் என்னை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றது.

நான் பெற்ற சந்தோசம் (முத்தம்) இந்த அதிரை நிருபர்கள் அத்துணை பேருக்கும் பங்கிடப் படுகின்றது.

அதிரைநிலா சொன்னது…

மீண்டும் ஸ்கூல் போனால் லேப்-டாப் எங்கலுக்கு கிடைக்குமா?இன்டெர்னெட் இனைப்பும் இலவசமா?பெண்களுக்கு நாப்கின், அப்ப எங்களுக்கு என்ன கெடைக்கும்?

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

இலவசம் இலவசம் என்று சொல்லியோ தமிழகமக்களை சோம்பேறியாக ஆக்கிவிட்டார்கள் இதே நிலைமை நீடித்தால் நாளை நமக்கு இலவசங்களை வாங்க வரிசையில் நிர்க்கமட்டுமே தெரியும்

உழைத்தால்தான் உண்ணலாம் என்ற நிலை வந்ததால் தான் மக்கள் உழைக்க முயற்சிப்பார்கள்

இலவசங்களை முதலில் ஒழிக்க வேண்டும்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
இலவசம் ,இலவசம் இப்படியே சொல்லி இழுக்குறானுவ தன் வசம்.
இலவசம் அப்பன் ஆத்தாவீட்டு காசா? நாம அள்ளிக்கொடுத்தகாசுதானே?
குடும்பத்தில் சண்டைன்னு சொல்லி தனியே தொலைக்காட்சி
நிறுவுறான் தனி தொலைக்காட்சி நிலையம் கண்டதும்
கூட்டு சேர்ந்து நம் காச உருவுறான்.
அய்யா, அம்மா வாக்கு கொடுக்குறதுல கில்லாடி! நாமதான் அதிலேயே போயிடுவோம் அல்லாடி!
இப்படியே போனா நம் நிலம பெரும்பாடு, பிற்பாடு நம்மல சோம்பேறியா ஆக்க ஏற்பாடு , நம் சந்ததிக்கு பொங்கி போடுவானுவலா சாப்பாடு?
கேவலம் பிடிச்ச சனியனுவோ எல்லாம் சொல்லும்
இப்படியே நம்பி போனா நம் சமுதாயம் எப்படி வெல்லும்?
சிந்தித்து பார்த்து காரியம் ஆற்றுவோம். நமக்கு உதவாத உதவாக்கரைகளை மாற்றுவோம்.
நம் சத்தி என்னான்னு புரியவைப்போம் அதுக்கு முன்னாடி நம்மை நமக்கே யாருன்னு தெரியவைப்போம்.
அல்லாஹ்வின் அடிமைனாம் என்லோரும் ஒன்றுகூடினால்
சைத்தான் கூட்டம் தலைதெரிக்க ஓடுமே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
தாஜுதீன் சொன்னது." மிக அருமையாக அலசியுள்ளீர்கள்".ரொம்ப சந்தோசம் சகோதர தாஜுதீன், ஜஜாக்கல்லாஹ்.
sabeer.abushahruk சொன்னது…
"சகோதரர் ஜகபர் சாதிக்கின் ஓப்பெனிங்கே ஃபோரும் சிக்ஸூமா வெளுத்து வாங்குதே" கவிக்காக்கா நீங்கள் ஃபோர் என்பதை bore என்று புரிந்து டல்லாகிவிட்டேன் ஆனால் அப்பரம் தான் புரிந்தது அது FOURஎன்பதை! சந்தோசம் சகோதரரே!
அபுஇபுறாஹீம் சொன்னது…
"கவிக் காக்கா : ஜஹபர் சாதிக்கிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்", காக்கா உங்க கட்டளையை ஏற்கிறேன். ரப்பி ஜித்னி இல்மா!
மொழி,பழி பிழைகள் இருந்தால் 'சாரி' சகோதரர்களே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கருத்து வரைகலை (ஒட்டுப் -Paste)படம் போட்டுவிட்டு இனிமேல் கையெழுத்தும் போடனுமோ !?

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

இலவச அறிவிப்பெலாம் சரிதான்.முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய - முயல,தேர்தல் அறிக்கையில கூட சொல்ல முடியல இந்த அம்மாவால.

கருணாநிதி கூட்டிதர்றேன்னு சொன்னாலும்,இதுவர அதுல உள்ள சிக்கல தீக்கல.

இப்பிடி ஆள்ளாளுக்கு கூஜா தூக்கியே நாம ஒழிஞ்சு போய்ட்டோம்.

தனியாக போட்டிபோடும், லட்சக்கணக்கான கட்டுக்கோப்பான இளைஞர்களை - தைரியசாலிகளை இஸ்லாமிய விடியலை நோக்கி வீர நடைபோடும் SDPI யை நாம் ஆதரிப்போம்,இன்ஷா அல்லாஹ்.

அப்புறம் பாருங்க,

இதுக்கு கேரளா இன்ன பிற மாநிலங்களே சாட்சி