Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம்-5 28

ZAKIR HUSSAIN | February 08, 2012 | , , ,


நம்பிக்கை & நாகரீகம்... இது இரண்டும் தூர நோக்கு உள்ள அனைவருக்கும் தேவை [தொழில் செய்தாலும் சரி , அல்லது வேலை செய்தாலும் சரி] இது போன்ற வார்த்தைகள் ஜவுளிக்கடை விளம்பரங்களில் மட்டும் கேட்கலாம். [ஸ்பீக்கர் வைத்து "காட்டுகத்து" கத்தும் நடைமுறை இன்னும் இருக்கிறதா?]
 
உங்களின் எதிர்காலம் சரியாக அமைய வேண்டுமானால் முதலில் உங்களை நம்ப கற்றுக்கொள்ளுங்கள். சிலரிடம் பேசும்போது அவர்களிடம் என்ன இல்லையோ அதில் தான் அவர்களின் பேச்சு "சுத்தி சுத்தி" வரும். சில தன்னிலை மறந்த டயலாக்ஸ்...

1. நான் அவ்வளவு படித்தவன் இல்லை
2. எனக்கு குடும்ப சப்போர்ட் இல்லை
3. வாய்த்த மனைவி/மக்கள் சரியில்லை
4. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன், அதனால் எனக்கு ஆதரவு இல்லை.
5. உடம்பு முன்பு மாதிரி ஒத்துழைக்கிறதில்லே....

படிப்பை காரணம் காட்டுபவர்களுக்கு...

"இன்றைய தேதியில் தமிழ்நாடு முழுக்க  Commerceல் Ph.D வாங்கிய புரபொசர்களை விட அந்த புரபொசர் வீட்டுக்கு மளிகைக்கடை பொருள்களை அனுப்பி வைக்கும் மளிகைக்கடை முதலாளி அதிகம் சம்பாதிக்கிறார்.

எனக்கு குடும்ப சப்போர்ட் இல்லை என்பவர்களுக்கு, உலகத்தில் சாதிக்கப்படும் அனைத்து சாதனைகளும் குடும்ப சப்போர்ட்டுடன் நடக்கிறதாஅலைகளில் நீச்சல் கற்றுக்கொள்ள நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அமைதியான குளத்தில் நீச்சல் அடிக்க கடலில் உங்களுக்கு இலவச பயிற்சி என எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.

பிரச்சினைகளை கண்டு அழுதவன் சாதித்ததாக சரித்திரம் இல்லை. பிரச்சினைகளுக்கும், தன்னம்பிக்கை வரும் அந்த நெருப்பு நிமிசத்துக்கும் ஒரு சின்ன கால அவகாசம்தான். அந்த நிகழ்வு நடக்க உங்கள் முயற்சி உங்கள் ஆதங்கம் உங்களின் மனதுக்குள் எரியும் அணையாத நெருப்பு மிக மிக தேவை. அது ரெடிமேட் ஆக எங்கேயும் கிடைக்காது. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உருவாக்க கூடிய வார்த்தைகளுக்குள் அடங்காத மனிதக்கோட்பாடு. இது கருவில் நீங்கள் உருவான நேரத்திலேயே உங்களுக்குள் இறைவன் அழகாக இணைத்திருக்கிறான். நாம் வளர்ந்து பல குப்பைகளை  படித்து, பல "பொறெக்கிறுக்கு" ஆட்களின் அட்வைசில் படைத்த இறைவனைக்கூட குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம். நம் நுண்ணறிவு ஒரு 'ஈ' தவறாக ரூமுக்குள் வந்து திறக்க முடியாத ஜன்னல் கண்ணாடியில் முட்டி மோதி வெளியேற நினைக்கும். அதேசமயம் கொஞ்சம் திரும்பி உள்ளே வந்த திறந்த வாசல் வழியிலும் வெளியேறலாம் என "சுத்தமா" மறந்து போகும் அறிவு. இந்த so called  கொசு அறிவை வைத்துதான் நாம் சில சமயங்களில் பிரபஞ்சத்தையே கட்டிக்காக்கும் இறைவனை விமர்சிக்கிறோம்.

உடம்பு சரியில்லை என்று தனக்குத்தானே கற்பனை செய்து கொள்ளும் ஆட்களுக்கு....முதலில் பெரும்பாலான விசயஙகள் சாதாரண சோம்பேரித்தனமாக இருக்கும். உங்கள் உடம்பை உங்கள் சொல் கேட்காமல் வளர்த்து அதற்கு நீங்கள் அடிமை ஆகி விட வேண்டாம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சொல்வது “ until you are bedridden , you can work”  நீங்கள் படுக்கையில் [நோயாளி] இருக்கும் சூழ்நிலை வரை நிச்சயம் உழைக்களாம்.

உடம்பில் குறை உள்ளவர்கள் எப்படியெல்லாம் தன் சாதனைகளை செய்கிறார்கள், எப்படியெல்லாம் அவர்கள் இயங்குகிறார்கள் என்பதற்கான காணொளி இன்னும் சில தெளிவைத்தரலாம்.


ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் தனது இளமைப்பருவத்தில் சரியாக கற்றுக்கொள்ளும் திறன் இல்லாதவர். பிறகு அவரின் சாதனைகள் சரித்திரம் படைத்தது.

ஜான் மில்ட்டன் தனது 43 வயதில் கண் பார்வையை இழந்தாலும் உலகில் சிறந்த கவிஞர்களில் ஒருவராக இன்னும் நினைவுகூறப்படுகிறார்.

தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாத மனிதனாய் இருந்தாலும் தனது கண்டுபிடிப்பில் உயரத்தில் நிற்கிறார்.

எல்லா சாதனைகளும் குறைகளோடுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சாதித்த பிறகு குறைகளுக்கு கூட மரியாதை கிடைத்துவிடுகிறது.

நாகரீகம் என்பது சிந்து சமவெளி சம்பந்தப்பட்ட விசயம் என்பது மாதிரி அதற்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என சிலபேர் தொழில் செய்ய பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் 'டச் ஸ்க்ரீன்' போன் வந்து விட்டது, உங்கள் கஸ்டமரிடம் பேசி வைத்து விட்டு [நல்லபடியாக] பிறகு உங்கள் கை பட்டு ரீ-டயல் ஆகி அதே கஸ்டமருக்கு தானாகவே லைன் கிடைக்க... இந்த மூலையில் அவரைப்பற்றி 'ஆத்து ஆத்து' என ஆத்திக் கொண்டிருந்தால். ஏன்யா நான் முன்னேறல என புலம்பினாலும் புண்ணியமில்லை. எப்போதும் பேச்சில் நாகரீகம் இருந்தால் இது பற்றிய கவலையே தேவை இல்லை. எனக்கு தெரிந்து ஒரு நண்பர் இருக்கிறார் அவரிடம் யாரும் மற்றவர்களைப்பற்றி குறை சொன்னால் ' அப்புரம். சட்டை எங்கே வாங்குனீங்க. நல்ல டிசைனா இருக்கே..../ வாட்ச் என்ன புதிசா.. என பேச்சை வேறு திசைக்கு திருப்பிவிடுவார்.  குறை சொல்ல ஆரம்பித்தவரும் அதை தொடர மாட்டார். நாவடக்கம் தொழிலில் /வேலையில் மிக மிக முக்கியம்.

அவரு எனக்கு பல வருச கஸ்ட்டமரு என்ன சொன்னாலும் தப்பா நினைக்க மாட்டாரு என நீங்கள் நினைத்தாலும் அவர் நாகரீகம் கருதி நீங்கள் எடுப்பது 'வாந்தி' என தெரிந்தும் அமைதிகாக்கும் நல் உள்ளமாக இருக்கும் என்பது உங்களுக்கு யாராவது வந்து சொல்ல வேண்டியிருக்கும். அப்போதுதான் நமக்கும் அது "எருமை மரத்து ஆணி போல் பதியும்" (பசு(மையான) மரத்து ஆணி என்று எத்தனை நாட்களுக்கு சொல்வது), மற்றவர்களின் ப்ராடக்டை / சேவையை குறை சொல்லி நம் ப்ராடக்டை / சேவையை விற்க முடியாது.  அப்படி செய்பவர்கள் தனக்கும் அப்படி நடக்கும் எனும் "முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்" 'தீதும் நன்றும்  பிறர்தர வாரா" என்று தமிழாசிரியர் பாடம் நடத்தும்போது கஸ்டம்ஸ் ரோட்டில் போய்க்கொண்டிருந்த லாரியை வேடிக்கை பார்த்திருப்பீர்கள் என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

உங்கள் ப்ராடக்டை / சேவையை உங்கள் கஸ்டமர் உங்கள் ஆபிஸ் சகா குறை சொன்னால் 'People in your position won’t simply  comment like this, there must be some valid reason behind this, May I know the reason sir?’  உங்களைப்போல் அனுபவசாலிகள் குறை சொல்வதாக இருந்தால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்க வேண்டும், அதை நான் தெரிந்து கொள்ளலாமா?' என முற்றுபுள்ளி வைத்து விடலாம்.நான் 20 வருசம் செய்ரேன், எனக்கு தெரியாதா என்ற மனப்பக்குவம் சண்டையை மூட்டிவிடும். விவாதத்தில் ஜெயிப்பது முக்கியமல்ல, வேலையில் ஜெயிப்பதே முக்கியம்.

ஒவ்வொரு நாளும் உங்கள் தொழில் / வேலையை ஆரம்பிக்கும்போது ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் உங்கள் நம்பிக்கையின் அடர்த்தியில் நிச்சயிக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு அது மனம் ஒன்றி கேட்கும் ;சுபுஹு தொழுகையின் துவா'வில் ஆரம்பிக்கிறது நம்பிக்கையின் முதல் படி..

சிலருக்கு தனது இலக்கின் மீதான பார்வை அடிக்கடி வந்து போகும் அதில் நிரந்தரம் இருக்காது, காரணங்கள் பல இருக்கின்றன .

we will see in next episode..
தொடரும்...
ZAKIR HUSSAIN

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிலருக்கு தனது இலக்கின் மீதான பார்வை அடிக்கடி வந்து போகும் அதில் நிரந்தரம் இருக்காது, காரணங்கள் பல இருக்கிறது . ///

அது ஏன் காக்கா ?

//அப்போதுதான் நமக்கும் அது "எருமை மரத்து ஆணி போல் பதியும்" (பசு(மையான) மரத்து ஆணி என்று எத்தனை நாட்களுக்கு சொல்வது), மற்றவர்களின் ப்ராடக்டை / சேவையை குறை சொல்லி நம் ப்ராடக்டை / சேவையை விற்க முடியாது//

இந்த கிச்சு கிச்சு தான் காக்கா படிக்கட்டுல ஏறும்போது சுறுசுறுப்பா இருக்கிறது...

நீங்க நிறைய வீடு கட்டனும் (செங்க)கற்கள் வைத்து அல்ல, கருக்களை வைத்து (அப்போதானே படிக்கட்டுகள் அதிகமாகும்) பழக்க தோசம் மண்வாசனை வேறு வூடு கட்டுவதிலையே இருக்கே....

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஒவ்வொரு நாளும் உங்கள் தொழில் / வேலையை ஆரம்பிக்கும்போது ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் உங்கள் நம்பிக்கையின் அடர்த்தியில் நிச்சயிக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு அது மனம் ஒன்றி கேட்கும் ;சுபுஹு தொழுகையின் துவா'வில் ஆரம்பிக்கிறது நம்பிக்கையின் முதல் படி..//
இன்ஷா அல்லாஹ், வாழ்வின் இலட்சியத்தை அடைய,ஒரு பாராவில் சொல்லிவிட்டீர்கள்,வெல்டன் பிரதர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்வில் வளம் பெற வசதியான முன்னேற்றப்படிகள்!
பக்குவமான வார்த்தைகள்!
வழிகள் வளரட்டும்!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிர் காக்கா நான்காவது படியில் மூச்சு வாங்கினாலும்.ஐந்தாவது படி ஆசுவாசம் செய்து கொள்ளும் அளவுக்கு ஏதுவாக இருக்கின்றன.

// நம்பிக்கை & நாகரீகம்... இது இரண்டும் தூர நோக்கு உள்ள அனைவருக்கும் தேவை [தொழில் செய்தாலும் சரி , அல்லது வேலை செய்தாலும் சரி] இது போன்ற வார்த்தைகள் ஜவுளிக்கடை விளம்பரங்களில் மட்டும் கேட்கலாம். [ஸ்பீக்கர் வைத்து "காட்டுகத்து" கத்தும் நடைமுறை இன்னும் இருக்கிறதா?]//

ஜவுளிக்கடை முதல் பினாயில் விளம்பரம் வரையிலும்.ஸ்பீக்கர் வைத்து "காட்டுகத்து" கத்து கத்தத்தான் சொல்லுறாங்க.காரணம் மக்கள் மறந்து விடுகிறார்களே! அதனால்தான் .எங்கள் கடைக்கும் திறப்பு விழா அன்று கத்தவிட்டோம். ஒரு ஆண்டு முடியும் நிலையுளும்.இரண்டாம் ஆண்டுக்கு அடி எடுத்து வைக்கும் நேரத்தில்.மக்களுக்கு நன்றி சொல்லி கத்த விடலாமென்று.நினைத்துக் கொண்டு இருக்கும் வேலையில்.இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டியலே.

Yasir said...

//நம்பிக்கை & நாகரீகம்... இது இரண்டும் தூர நோக்கு உள்ள அனைவருக்கும் தேவை//
//பிரச்சினைகளை கண்டு அழுதவன் சாதித்ததாக சரித்திரம் இல்லை.//
//சில சமயங்களில் பிரபஞ்சத்தையே கட்டிக்காக்கும் இறைவனை விமர்சிக்கிறோம்.//
//எப்போதும் பேச்சில் நாகரீகம் இருந்தால் இது பற்றிய கவலையே தேவை இல்லை.//
//எனக்கு தெரியாதா //
//ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.//

முத்து முத்தான வரிகள்...இதனையெல்லாம் நாம் வாழ்வில் கொண்டுவந்தால் முன்னேற்றத்திற்க்கு தடையேது....கொத்தனார் கூலி தான் உயர்ந்து போச்சு...கட்டணம் எதுவும் இல்லாத & கேட்காத உங்கள் படிகளை தொடர்ந்து கட்டுங்கள் & நாங்கள் அதில் ஏறி வருவோம் ஈசியாக

sabeer.abushahruk said...

ஜாகிர்,
படிக்கட்டுகள் பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இழுத்துக்கட்டிய நரம்புபோன்று விண்ணென்று ஒரு விரிவுரை விளக்கமாகவே நடக்கிறது.

உளவியல் கோட்பாடுகளை இலகுவாய்ச் சொல்கிறாய். கம்பிமேல் நடக்கிறாய் -கவனம்!

KALAM SHAICK ABDUL KADER said...

//விவாதத்தில் ஜெயிப்பது முக்கியமல்ல, வேலையில் ஜெயிப்பதே முக்கியம்.//

Asolutely you are telling the same practice what I am doing.

"Utmost good faith is essential for any agreement"

sabeer.abushahruk said...

ஜாகிர்,

கேட்க மறந்துவிட்டேன். இத்தனை வகையான மனிதர்களை நீ கிரகித்தாயா அனுமானித்தாயா?

Unknown said...

sabeer.abushahruk சொன்னது…
ஜாகிர்,

கேட்க மறந்துவிட்டேன். இத்தனை வகையான மனிதர்களை நீ கிரகித்தாயா அனுமானித்தாயா?

-------------------------------------------------------------------
Yes Zahir kaaka you have to answer this question ,because its not THAT easy to write these kind of articles!!!!!
just curiousity:)

ZAKIR HUSSAIN said...

//கேட்க மறந்துவிட்டேன். இத்தனை வகையான மனிதர்களை நீ கிரகித்தாயா அனுமானித்தாயா?//
//Yes Zahir kaaka you have to answer this question ,because its not THAT easy to write these kind of articles!!!!!
just curiousity:) //

To Sabeer & Harmy.Abdul Rahman,

மனிதர்களை அப்சர்வ் செய்யும் விதம்தான். முதலில் அவர்களின் எனர்ஜியை படிக்கத்தெரிந்திருக்கவேண்டும்.

ஒரு மனிதன் என்ன Energyல் என்னென்ன Belief ல் இயங்குகிறான் என்பதை கண்டு பிடிப்பது சில வழிமுறைகளில் தெரிந்து விடும்.

First we must practice to know our INNER SELF.

Allah given that ability to the human through DHIKR...unfortunately we always miss the essence of it.

sabeer.abushahruk said...

அதுசரி,
இப்டியே பேசிட்டிருந்தா?
சட்டுபுட்டுனு ஆசிரமத்தை ஆரம்பிச்சிட்டா ஒரு சிஷ்யனாகவாவது உன் பக்கத்ல வந்து இருந்துக்கலாம்ல?

மலேசியாவில அசத்தல் சாமிகளுக்குக் கூட்டம் கூட வாயிலேர்ந்து வாந்தி எடுத்துக்கொடுத்தா போதுமா?

(ஜாகிர் புழங்குகிற இடம் மாதிரி இல்லாம ரொம்ப சீரியஸா போகுது...அதான்...இடையில இந்த பிட்டைப் போட்டேன்)

ZAKIR HUSSAIN said...

To sabeer,

ஆசிரமமா?.....எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!!!

ZAKIR HUSSAIN said...

To Bro.Abul kalam

"Utmost good faith is essential for any agreement"

நன்றி...

சென்னை புதுக்கல்லூரியில் அட்வகேட் ஹிதாயத்துல்லாஹ் வின் பாடம் நடத்தும் இனிப்பு நிமிடங்களை நினைவு படுத்தியதற்கு

அப்துல்மாலிக் said...

நிறைய விமர்சித்துவிட்டாங்க, ஒரே வார்த்தையில் சொல்லவேணுமானால் ஒவ்வொன்றும் முத்தான வரிகள், தினம் படித்து அதன் படி நடக்கவைக்கும் நம்பிக்கையூட்டும் சொத்துக்கள், நன்றி காக்கா

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மனிதர்களின் குணங்களை நாடி பிடித்து சொல்லும் படிக்கட்டுகள்!

இறைநம்பிக்கை + தன்னம்பிக்கை இரண்டும் ஒரு சேர இருப்பது வெற்றிப்படிக்கட்டுல் நம்மை சேர்க்கும்.

Anonymous said...

அன்பு இளவல் ஜாகீர்!

//பிரச்சினைகளை கண்டு அழுதவன் சாதித்ததாக சரித்திரம் இல்லை. பிரச்சினைகளுக்கும், தன்னம்பிக்கை வரும் அந்த நெருப்பு நிமிசத்துக்கும் ஒரு சின்ன கால அவகாசம்தான். அந்த நிகழ்வு நடக்க உங்கள் முயற்சி உங்கள் ஆதங்கம் உங்களின் மனதுக்குள் எரியும் அணையாத நெருப்பு மிக மிக தேவை. அது ரெடிமேட் ஆக எங்கேயும் கிடைக்காது. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உருவாக்க கூடிய வார்த்தைகளுக்குள் அடங்காத மனிதக்கோட்பாடு.//

இந்த வைர வரிகள் ஒவ்வொருவர் வீட்டு வரவேற்பு அறையிலும் பொறிக்கப்பட வேண்டியது.

அசத்தல் காக்கா” என்று உங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் அ.நி.குழுவினர், மாஷா அல்லாஹ்!.

-இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"இந்த படிக்கட்டுகளை கட்டும் அசத்தல் காக்காவின் பதிவுகள் ஒவ்வொன்றும் பாராட்டப்பட மட்டும் அல்ல, அதன் தாக்கம் நம் வாழ்வியலிலும் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். அவ்வாறு செய்வதுதான் இவைகளை வாசித்ததற்கான நன்றியாக எழுதியவருக்கு செலுத்துவதாக அமையும்" - இவ்வாறு அலைபேசியில் அரவனைத்த அதிரைச் சொந்தம் ஒருவர் சொன்னதை காதால் கேட்டுவிட்டு சும்மா இருக்க முடியவில்லை என்னால் அதனாலதான் இங்கே பதிந்தும் வைக்கிறேன்...

sabeer.abushahruk said...

//அன்பு இளவல் ஜாகீர்//

இளவல்...? "OBJECTION" your honour!!!

Yasir said...

//இளவல்...? "OBJECTION" your honour!!!//

objection overruled கட்சிக்காரரின் எழுத்திலும்,எண்ணத்திலும் இளைமை என்றும் இருப்பதால் “இளவல்” என்பது சாலப்பொருந்தும்

KALAM SHAICK ABDUL KADER said...

To Bro.Zahir,

I too learned from our commerce class ("Partnership Agreement").We can apply this to all of our agreements like marital, friendship etc., we can reach the goal.

ZAKIR HUSSAIN said...

இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் மேற்கோல் காட்டிய எழுத்து என்னை கவர்ந்தது. ஏனெனில் நான் எழுதிய அந்த 'நெருப்பு நிமிசம்" பற்றிய விசயம் முன்னேறத்துடிப்பவர்களுக்கு இருக்க வேண்டும் என்று மிக ஆணித்தரமாக நம்புபவன் நான்.

Thanx to brothers AraAla, MHJ, Yasir, Abdul malik,Alaudeen, AbulKalam, Harmy, Abu Ibrahim.

To Bro.லெ.மு.செ.அபுபக்கர் ...உங்கள் கடைக்கு விளம்பரம் நன்று....[ அமைதியான முறையில் ஒரு 100 மீட்ட்ருக்கு தேவையான டெசிபலில் "கத்தினால்" பரவாயில்லை என நினைக்கிறேன் ]

உங்கள் ப்ராடக்டை பற்றி நேற்று எத்தனை பேரிடம் பேசினீர்கள்?..Your Personal touch also important in advertisement since you are in Adirai.

sabeer.abushahruk said...

டாய் அசத்தல் காக்கா,
ஏற்புரையில் என்னய கண்டுக்காம ஒன்னய "இளவல்"ன்னு சொன்ன ஈனா ஆனா காக்கவை மட்டும் கண்டுக்கிட்டுப் போறியா? ஒழுங்கு மருவாதியா நீயும் ஈனா ஆனா காக்காவும் அப்பாக்கள் தரப்புக்கு வாதாட அங்கே வாங்க இல்லேனா...?

(இதுல யாசிர் எனும் எக்ஸ்பென்சிவ் வக்கீல்லாம் வச்சு வேற வாதாட்றியா?)

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

//ஏற்புரையில் என்னய கண்டுக்காம.........//

இது வரை நான் இணையத்தில் எழுதிய எத்தனையோ விசயத்துக்கு நீயும் எழுதியிருக்கிறாய் [ கமென்ட்ஸ்] அதில் உள்ள ஏற்புரை எல்லாவற்றிலும் பார்க்கவும்..ஏதாவது நீ கேள்வி கேட்டிருந்தால் பதில் எழுதியிருப்பேன். மற்றபடி ஒன்றும் இருக்காது.

எனக்கு நானே எப்டிடா எழுதறது???

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

ஒருமுறை நம் முஹம்மது அலியிடம்
" ஹஜ் செய்ய எவ்வளவு செலவு ஆகும் என கேட்டேன்"
"போவனும்னு நிய்யத் வச்சிட்டா பாஸ்போர்ட் காப்பி அனுப்பிவையுங்க.. விசா சம்பந்தமான வேலை பார்க்கனும்ல"

'அதான் எவ்வளவு செலவு ஆகும்னு!!!'


'அப்டீனா நான் போறதுக்கும் நானே எனக்கு ஒரு சார்ஜ் வைத்துக்கொண்டு எனக்கு நானே பில் அனுப்ப வேண்டியதுதான்'



'

sabeer.abushahruk said...

((சிக்கமாட்டேங்கிறானேய்யா!))

KALAM SHAICK ABDUL KADER said...

//First we must practice to know our INNER SELF.

Allah given that ability to the human through DHIKR...unfortunately we always miss the essence of it.//

Those who prcatise to know their INNER SELF will be able to know The Creator.
If they are able to know The Creator, they will be able to know the creatures' nature by face-reading. This is what brothers Zahir & Sabeer have attained with The Grace Of The Creator.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புத் தம்பி ஜாஹிர்,

முன்னரே கூறியது போன்று கனத்த கருப்பொருளை எளிமையாக எழுதுகின்றீர்கள். இத்தொடர் நிறைவு பெற்றபின், அஹ்மது காக்காவிடம் கொடுத்துப் பிழைகள் களைந்து நூலுருவில் கொண்டு வரவேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன் (காரணங்கள் பல இருக்கின்றன).

பின்னூட்ட ஒரே கல்லில் இரண்டு புளியங்காய் அடித்துவிட்டீர்கள். சபீருக்கு ஆப்பு; நட்பு இறுக்கத்தின் உண்மை //எனக்கு நானே எப்டிடா எழுதறது?//

வாழ்த்துகள்!

அடுத்த-படி You win; I win policyயா?

ZAKIR HUSSAIN said...

To ஜமீல் நானா

வ அலைக்கும் சலாம்...

வ அலைக்கும் சலாம் ..உங்களைப்போல் அனுபத்தில் மூத்தவர்களின் உற்சாக வார்த்தைகள் இந்த தொடரை இன்னும் சரியாக , உபயோகமாக எழுத வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி நிறைய சிந்திக்க வைத்துள்ளது.

No Problem of proof reading with Ahamed kaka...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு