புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிடச் சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.
அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in
பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail : tsotnj.patukottai@tn.gov.in
குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்
13 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
குடும்ப அட்டை பெற்றுக் கொண்டாலும்.மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய பதிவு நன்றி சகோ. நிஜாம்
விழி(த்திரு)..
இன்றே அறியும் தகவல்களுடன்...
விழி(க்காதே)..
நாளை ஏதும் தெரியவில்லை என்று....
பழி(த்திடாதே)..
ஒன்றுமே கிடைக்க வில்லையே...
நல்ல பகிர்வு... முழிக்காமால் இருப்பவர்களுக்கும் / இருக்கவும் !
கடந்த மாதம் என்னுடைய குடும்ப அட்டையை புதுப்பிப்பதற்காக தாலுக்கா ஆஃபீஸுக்கு அலைஞ்சேன், நிறைய கத்துக்கிட்டேன், ஆனால் ரிசல்ட் தான் வருமா என்று தெரியலே.. பகிர்வுக்கு நன்றி
// கடந்த மாதம் என்னுடைய குடும்ப அட்டையை புதுப்பிப்பதற்காக தாலுக்கா ஆஃபீஸுக்கு அலைஞ்சேன், நிறைய கத்துக்கிட்டேன், ஆனால் ரிசல்ட் தான் வருமா என்று தெரியலே..//
சகோ. மாலிக்,
இறைவன் நாடினால் ! கண்டிப்பாகக் கிடைக்கும் !
அப்படி காலதாமதங்கள் ஆனால்.............................கீழ் கண்ட முறையில் ஆன் லைன் மூலம் ( Online Petition Filling ) நமது மாவட்ட கலெக்டர் அவர்களிடம் புகார் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
• இதற்க்கு முதலில் http://onlinegdp.tn.nic.in/indexe.php இந்த லிங்கில் செல்லுங்கள்.
• அதில் Tamil Version ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
• அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
• பதிவு செய்து அனுப்பியவுடன் நம்முடைய கோரிக்கைக்காண பதிவு எண் ஓன்று கொடுப்பார்கள் அதை வைத்து நமது கோரிக்கையின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
• சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
குறிப்பு : இவை நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமது சகோதர வலைதளங்களில் பதிந்த கட்டுரையின் ஒரு பகுதியாகும்
சகோதரர் சேக்கனா நிஜாமின் சமூக விழிப்புணர்வு சேவைகள் தொடர வாழ்த்துகள்.
தகவலுக்கு நன்றி
சகோதரர் சேக்கனாவின் சேவை வரிசையில் தேவையான நல்ல வழிகாட்டிப் பதிவு. நன்றி.
தகவலுக்கு நன்றி சகோ. சேக்கனா
மேலதிக விபரமாக, ஒரு வீட்டிற்குள் 2 -3 கூப்பன் வரும் வ்ருஷத்திலிருந்து நீக்கப்படுமாம், யார் பெயரில் மின்சாரம், தண்ணீர், வீட்டுவரி தகவல் இருக்கிறதோ அவர்கள் பெயரில் ஒன்று மட்டும்தான் விணியோகிக்கப்படுமாம், ஸ்மார்ட் கார்ட் அறிமுகப்படுத்துவதற்காகவே இதை வழங்குகிறார்களாம்.. எந்தளவுக்கு விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும் என்பது கேள்விக்குறியே
அஸ்ஸலாமு அலைக்கும்.
// டியர்மேலதிக விபரமாக, ஒரு வீட்டிற்குள் 2 -3 கூப்பன் வரும் வ்ருஷத்திலிருந்து நீக்கப்படுமாம், யார் பெயரில் மின்சாரம், தண்ணீர், வீட்டுவரி தகவல் இருக்கிறதோ அவர்கள் பெயரில் ஒன்று மட்டும்தான் விணியோகிக்கப்படுமாம், ஸ்மார்ட் கார்ட் அறிமுகப்படுத்துவதற்காகவே இதை வழங்குகிறார்களாம்.. எந்தளவுக்கு விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும் என்பது கேள்விக்குறியே .//
டியர் அப்துல் மாலிக்.ஒரு மீட்டர்க்கும் /பைப்புக்கும் ஒழுங்காதிய மின்சாரமோ ,தண்ணீரோ தரமுடிய வில்லை இந்த அரசால்.அதை சரி வர தந்து விட்டு மேல் உள்ள செய்தி போல்.நீக்கிக் கொள்ளட்டும்.ஸ்மார்ட் கார்டை வைத்து செம்ம காசு பார்ப்பதற்காகவே இத் திட்டங்கள்.
பெயர் நீக்கம் செய்ய லிங்க் கொடுங்கல்
sir,i was apply ration card 2010 august .but ennun ration card varala .enna seivathu pls
Dear Mr.Srinivasan:
தங்களின் கருத்துக்கு நன்றி.
மேலும் விபரங்களுக்கு comments@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் மின்னஞ்சலை அனுப்பினால் அதனை கட்டுரையாளருக்கு தெரியப்படுத்தி அவரிடமிருந்து விபரங்கள் நேரடியாக பெற ஏதுவாக இருக்கும்.
"ரேஷன் கார்டு தொலைந்து விண்ணப்பம் அளித்த 3 வருடம் கடாதும் திரும்பப் பெறுவ வேறு வழி இருடா mmdshariff@gmail.com
நான் குடும்ம அட்டை விண்ணப்பித்து ஒரு ஆண்டு காலம் ஆகி உள்ளது .நான் யாரிடம் முறைஇடுவது தகவல் அறிய விரும்புகிறான்
Post a Comment