Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 8 15

ZAKIR HUSSAIN | February 28, 2012 | , , ,

வாக்கு கொடுத்தல்.

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி....' கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்" . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.


தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ' வாங்கித்தர்ரேன்' என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்... வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board]   இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள்.  அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட்,  முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் 'முடிவுறும் தேதி" க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் 'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

Image maker

நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.
  • ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  • 'என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
அல்லது
  • நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  • எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  • எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.

இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE  is YOURS.

வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது.  அப்படித்தானே?....அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் "திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector  கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor  ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் 'பேய்முழி" முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing /   தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக்கொடுக்கிறது.  

எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’  என்று சொல்லும்"  அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். 

உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

See you in next episode…. with lot of light readings…
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN


15 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் சகோ. ஜாகிர் அவர்களுக்கு,

தன்னம்பிக்கைத் தொடர் !

இப்னு அப்துல் ரஜாக் said...

//மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.//
அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்கள் கூற்று சத்தியம்.இன்னும் எழுதுங்கள் இது போன்று,நாங்கள் படிப்பினை பெற.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றினால் வானவில்லை விட பத்து மடங்கு அழகு பெரும் என்பதை.எட்டாவது படிக்கட்டு அறிவுறுத்துகிறது.

// எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’ என்று சொல்லும்" அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். //

ஆம் நமதூர்களில் ஒருவர் புதியதாக கடை திறந்து வியாபராம் அமோகமாக நடை பெற்றால்.மற்றவர்களும் அதேமாதிரியான கடைகளைதான் திறக்குகிறார்கள்.

மற்ற மற்ற வியாபாரத்தை தொடங்குவோம் என்கிற சுய சிந்தனை அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

எப்போதும் உங்கள் எழுத்துக்களில் அவதானிப்பது ஒவ்வொரு விசயத்தை சொல்லிவிட்டு இறுதியாக நீங்கள் தரும் பன்ஞ் வரிதான்.


//வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்ப்பு கூட நமக்கு இருக்காது.//

//'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.//

//போலீஸ் பயன்படுத்தும் Lie Detector கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.//

இப்படி எழுதுவது உங்களை போன்றவர்களால் மட்டுமே முடியும்.

கட்டுங்கள் படிகட்டை.. புத்தமகமாக வெளியிட்டால் இன்னும் பலர் பயன்பெறலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.//

சகோ. அப்துல் லத்தீப் அவர்கள் சொல்லியது போல்...

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்கள் கூற்று சத்தியம்.இன்னும் எழுதுங்கள் இது போன்று,நாங்கள் எல்லோரும் படிப்பினை பெற.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பல உயர் தத்துவங்கள்.

//நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.//

இத்தகைய நல் சொல்லை உடையவர்கள் என்றும் மோசம் போவதில்லை.

Yasir said...

படிக்கட்டுகள் மனதை பண்படுத்துகின்றன...உங்கள் தொடர் புத்தகமாக வெளியிடப்பட்டால் - தான் முன்னேறதற்க்கு சில உருப்படாத காரணங்களை சொல்லி தன்னை தானே தாழ்த்திக்கொண்டு வாழும் மனித மிருங்கள் உருப்பட்டு உண்ட சோறு வாங்கும்

Yasir said...

எங்கேயோ படித்தது

GREAT people talk about IDEAS
AVERAGE people talk about THINGS
SMALL people talk about OTHER PEOPLE

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.//

மெய்யாலுமே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... மெய்யைத் தவிர வேறு உண்மையில்லை !

படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவரையும் சேர்த்து எழுப்பிக் கொண்டிருங்கள் காக்கா, கலகலப்பா ஏறிக் கொண்டிருக்கலாம்....

sabeer.abushahruk said...

நல் வாக்கு சொல்லியிருக்கிறாய்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் போகும் யார் மீதும் கோபம் வருவது நிச்சயம். காரணம் இது ஈமானியப் பண்புகளில் ஒன்று.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்கா, உங்கள் படிக்கட்டுகள் வாழ்வில் முன்னேற முனைப்புடனும், துடிப்புடனும் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல எஸ்கலேட்டர். எழுத்துப்படி தொடரட்டும்....

ஒரு காலத்தில் கடன் வாங்கியவர்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டு அதை திருப்பும் வரை கவலையுற்று முயன்று கொண்டிருப்பர். ஆனால் இன்றோ கடன் கொடுத்தவர்களுக்கு உரிய நேரத்தில் திருப்பாமல் கடன் கொடுத்தவர்களை கெஞ்சி, கூத்தாடி காரணம் பல ஆயிரம் சொல்லி திருப்பி கேட்கும் பிச்சைக்காரர்களைப்போல் ஆக்கிவிடுகின்றனர் கடன் வாங்கியோர்.

அன்ப‌ளிப்பாக‌ நாம் கோடிக‌ள் பிரிய‌மான‌வர்களுக்கு கொடுத்து விட‌லாம். ஆனால் க‌ட‌ன் என்று வ‌ந்து விட்டால் வாங்கிய ஒரு ரூபாயும் எப்படியும் திருப்ப‌ப்ப‌ட்டே ஆக‌வேண்டும் என்ப‌து அதிகமான‌வ‌ர்க‌ளுக்கு புரிவ‌தில்லை. வாங்கிய‌ க‌ட‌னுக்கெல்லாம் கொடுத்த‌வ‌ர்க‌ள் திரும்பி கேட்காம‌ல் அப்ப‌டியே "ஹ‌லால்" சொல்ல‌ட்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள் திருப்பிக்கொடுக்க‌ இறைவ‌ன் அவர்களுக்கு வ‌ச‌தி வாய்ப்புக‌ள் கொடுத்திருந்தும்.

நாக்கு ஒன்றாக‌வும் பிற‌கு வாக்கு ப‌ல‌வாக‌வும் ஆகிவிடுகின்ற‌து இன்றைய‌ நாட்க‌ளில்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படியே போனால் ஆபத்து நேரத்தில் உண்மையான தேவையுடையோர்க்கு கடன்கொடுத்து உதவும் நற்பண்பு முற்றிலும் அழிந்து இனி ஒவ்வொரு வீட்டின் முன் "தயவு செய்து யாரும் கடன் கேட்டு இங்கு வந்து விடாதீர்கள்" அல்லது "யாருக்கும் கடன் கொடுப்பதில்லை" என்ற வாசகம் எழுதப்பட்ட பலகைகள் தொங்க விடப்படும்.

இதனால் உண்மையில் திருப்பிக்கொடுக்கும் நல்லெண்ணம் கொண்டோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

அப்துல்மாலிக் said...

ஜாகிர் காக்கா, சொல்ல வார்த்தைகளில்லை.. தொடரட்டும் உமது இந்த சிறந்த தொண்டு,

இறுதியில் புத்தகமாக வெளியிட்டால் முதல் காப்பி எனக்கு

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// வாக்கு கொடுத்தல் ////

வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற வேண்டும். நம்மால் செய்த முடிக்க முடியாதவற்றிற்கெல்லாம் வாக்களித்து சிரமப்படக்கூடாது.
நல்ல பெயர்கள் இங்கு மட்டும் போனால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் இறுதி தீர்ப்பு நாளில் கொடுத்த வாக்கைப் பற்றி வல்ல அல்லாஹ் கேள்வி கேட்பான் என்பதை மனதில் வைத்து வாக்கு என்பது மிக முக்கியமானது என்பதில் கவனத்தில் வைக்கவும்.

********************************
• நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
• எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
• எனக்கு நல்ல குடும்பத்தையும்இநண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.
********************************

நிச்சயம் இந்த எண்ணங்கள் வாழ்வில் பலனளிக்கும்.

///// ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் ஜ ஸல் ஸ அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும். //////

*************** உண்மை - உண்மை - உண்மை ********************

இந்த உலக முடிவு நாள் வரைக்கும் (முஸ்லிம் சமுதாயத்திற்கு) நமது ஒரே தலைவர் நபி(ஸல்)அவர்களே! மனிதர்களுக்கு அவர்கள் வழிகாட்டாத துறைகளே இல்லை. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்பது ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு.

ZAKIR HUSSAIN said...

Thanx to all the commenters & readers. sorry for not thanking individually as this week is really busy scheduled week.

we will meet in next episode.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு