அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
''என் அடியான் என்னிடம் ஒரு எட்டு நெருங்கினால், நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால், அவனிடம் நான் இரண்டு முழம் நெருங்குவேன். என்னிடம் அவன் நடந்து வந்தால் நான் அவனிடம் விரைந்து வருவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 96 )
"இரண்டு அருட்கொடைகள். இந்த இரண்டு விஷயத்திலும் மக்களில் அதிகமானோர் நஷ்டப்பட்டு விடுகின்றனர். அவை (1) ஆரோக்கியம் (2) ஓய்வு என்று நபி(ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 97)
''நபி(ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இரு பாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு விடும். 'இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாங்களை மன்னித்து விட்டானே?' என்று கேட்டேன். 'நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா?' என்று நபி(ஸல்) கேட்டார்கள்.'' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 98)
''சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பு வாரையும் விட மிக நெருக்கமாக உள்ளது. நரகமும் அதுபோல்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 105)
"அதிகம் ஸஜ்தா செய்வதை நீ கடைபிடிப்பீராக! நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்காக ஒரு ஸஜ்தா செய்வது என்பது; அதன் மூலம் அல்லாஹ் உனக்கு அந்தஸ்ததை உயர்த்தாமலும் அதன் மூலம் உம்மை விட்டும் ஒரு தவறை அழிக்காமலும் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஅப்துர்ரஹ்மான்) என்ற ஸவ்பான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 107)
'என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவரைத் தவிர நீங்கள் அனைவரும் வழி கேடர்களே! எனவே என்னிடம் நேர் வழியைக் கேளுங்கள். நான் நேர்வழி தருகிறேன்.
என் அடியார்களே! நான் உணவளித்தவரைத் தவிர நீங்கள் அனைவரும் பசியால் வாடுபவர்களே! எனவே என்னிடம் உணவு கேளுங்கள். உங்களுக்கு நான் உணவளிக்கிறேன்.
என் அடியார்களே! நான் ஆடை அளித்தவரைத் தவிர நீங்கள் அனைவரும் நிர்வாணிகளே! எனவே என்னிடம் ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்.
என் அடியார்களே! இரவிலும், பகலிலும் நீங்கள் தவறு செய்கிறீர்கள். நானே பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். என்னிடம் மன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே! நீங்கள் எனக்கு தீங்கை செய்துவிட முடியாது. நீங்கள் எனக்கு நன்மை செய்து விடவும் முடியாது. என் அடியார்களே! உங்களில் முதன்மையானவர், உங்களின் இறுதியானவர், உங்களில் மனிதர்கள், உங்களில் ஜின்கள் ஆகிய உங்களில் ஒரே ஒருவரின் இதயத்தில் இறையச்சம் இருந்தாலும்;, அது என் நிர்வாகத்தில் எதையும் அதிகப்படுத்தி விடாது.
என் அடியார்களே! உங்களில் முதன்மையானவரும், உங்களில் இறுதியானவரும், உங்களில் மனிதரும், உங்களில் ஜின்களும் ஆகிய உங்களில் ஒரே ஒருவரின் இதயம் அதிக குற்றம் நிறைந்ததாக இருந்தாலும், அது என் நிர்வாகத்தில் எதையும் குறைத்து விடாது.
என் அடியார்களே! உங்களின் முதன்மையானவரும், உங்களில் இறுதியானவரும், உங்களில் மனிதரும், உங்களில் ஜின்களும் என அனைவரும் ஒரே மைதானத்தில் நின்று, என்னிடம் அவர்கள் கேட்டால், ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்டதைக் கொடுப்பேன். கடலில் நுழைக்கப்பட்ட ஊசி தண்ணீரை குறைப்பது போன்றே தவிர, என்னிடம் உள்ளதை இது குறைத்து விடாது.
என் அடியார்களே! இவைதான் உங்களது செயல்கள்.அவற்றை நான் முழுமையாக அறிந்து வைத்துள்ளேன். பின்பு அவற்றை (அவற்றின் நற்கூலிகளை) உங்களுக்கு நிறைவேற்றுவேன். சிறந்ததை ஒருவன் பெற்றுக்கொண்டால் அல்லாஹ்வை புகழட்டும். இது அல்லாததைப் பெற்றுக் கொண்டால் அவர் தன்னையே தவிர (வேறு எவரையும்) பழித்திட வேண்டாம் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: (அபூதர் என்ற)ஜீன்துப் இப்னு ஜீனாதா(ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 111)
"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''
-S.அலாவுதீன்
11 Responses So Far:
"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின்,அல்லாஹ்வின் தூதரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம்.ஒவ்வொரு நொடியும் - திருக்குர்ஆன் ஒரு அற்புத -அதிசய வேதம் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.சகோ அலாவுதீன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
எனது மகள் எழுதிய ஒரு poem லிருந்து ஒருசில வரிகள்:---
Allah gave us special book
Quran is its name (2)
Q.U.R.A.N ...... Q.U.R.A.N...
Quran is its name..
We get everything from it
We solve all jobs from it
We are gaining from it..
...........
...................
நல்ல கருத்துக்கள் எங்கேனும் வெளிப்படும் பொழுது "உதிர்ந்த முத்துக்கள்" என்பார்கள் ஆனால் திருக்குர்'ஆனின் வசனங்கள் என்றும் "உதிராத, இறுதி நாள் வரை மின்னும் வைரங்கள்" ஆக உள்ளன.
அடிக்கடி இப்படி நம் திருவேதத்தை சில வரிகளால் ஞாபகப்படுத்த வைக்கும் அலாவுதீன் காக்காவின் பணி சாலச்சிறந்தது.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா, தொடர்ந்து நற்கருமங்களை செய்யத் தூண்டும் உங்களின் பதிவுக்கு.
என்னுடைய பங்கிற்கு நினைவூட்டலாக "சகோதரியே" :) காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
//எனது மகள் எழுதிய ஒரு poem லிருந்து ஒருசில வரிகள்:---
Allah gave us special book
Quran is its name (2)
Q.U.R.A.N ...... Q.U.R.A.N...
Quran is its name..
We get everything from it
We solve all jobs from it
We are gaining from it..//
சகோதரர் ரஃபீக், தங்களின் மகள் தனது உள்ளத்தில் பதிந்ததை அப்படியே சொல்லியிருக்கிறார் மாஷா அல்லாஹ் !
மேலும் அனைத்து விடயங்களில் சிறந்து விளங்க துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
@ m.nainathambi.அபுஇபுறாஹிம் : ஆமீன்...
உலக மாயையில் மாட்டிதவிக்கும் நம் மனத்திற்க்கும் ,வாழ்க்கைக்ககும் அது நிரந்தரமல்ல என்று அவ்வப்பொழுது தலையில் குட்டுவது போன்ற குர் ஆன் ஹதீஸ்களை தரும் அலாவுதீன் காக்கா அவர்களுக்கு துவாக்கள்
குர்-ஆன் ஹதீஸ்களை அவ்வப்போது தெரிய,ஞாபகப்படுத்தமைக்கு நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜனாப். எஸ். அலாவுதீன் அவர்கள் தரும் அருமருந்து தலைப்புக்கு ஏற்றபடி அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்தே.
உலக கண்ணோட்டத்தில் லயித்து இருக்கிற உள்ளங்களுக்கும் – குழம்பிக் கிடக்கும் உள்ளங்களுக்கும் ஆறுதலாகவும்
கோடையிலே இளைப்பாரிக்கொள்ளும் வகை கிடைத்த நிழலாகவும் இருக்கிறது.
உங்களின் நன்மையை ஏவும் இணையற்ற இந்த எழுத்துப்பணிக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பானாக.
ஆமீன்.
இபுராஹீம் அன்சாரி
அலாவுதீன்,
மிக்க நன்றி.
ஆறுவை சிகிச்சையைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நீ இந்த அருமருந்தைப் பரிந்துரைப்பதற்காக அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும்.
ஜஸாக்கல்லாஹு ஹைர்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment