Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனிதம் - 2050 45

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2012 | , , , ,

தூசு கூடி காற்று யெல்லாம்
மாசு பட்டுப் போகும்
காசு டைத்த ஆளின் சொற்கள்
பேசு பொருள் ஆகும்

ஏசு புத்தன் காந்தியெல்லாம்
பூசு மூடு என்றாகும்
பாசு கெட்டு பாசம் நேசம்
லேசு பட்டுப் போகும்

ஓஸோன் ஓட்டை விசாலமாகி
உஷ்ணம் ஏறிப் போகும்
பூமிப் பந்து பொரித்துவைத்த
 'பூரி' போல வேகும்

துருவப் பகுதி உருகிஉருகி
பருவம் மாறிப் போகும்
கடலின் மட்டம் பெருகிபெருகி
கரையை அலைகள் தாவும்

போக்குவரத்து நெரிசல் கூடி
பயண நேரம் நீளும்
பாதி மனிதப் பழக்கவழக்கம்
வாகனத் துள் வாழும்

இயற்கை உணவு பஞ்சமாகி
இதயம் கெட்டுப் போகும்
செயற்கை தீனி தின்றுதின்று
சீக்குப் பிணி கூடும்

தேவைகளும் கூடிப் போக
சேவை நோக்கம் குறையும்
மனசாட்சி மடிந்து போய்
பணத் தாட்சி நிறையும்

உழைப்பின்மேல் நாட்ட மின்றி
ஊரும் கொள்ளைப் போகும்
கொடுத்துதவும் குணம் குன்றி
குற்றத் தொல்லைக் கூடும்

ஏற்றத் தாழ்வு மலிந்து மனிதம்
நாற்ற மாக நாறும்
போற்றத் தக்க தலைவன் இல்லா
தோற்ற கூட்டம் மாளும்

கற்ற கல்வி மறந்துபோக
பெற்ற அறிவு விரயம்
மற்ற எந்த விலங்கைப் போலும்
சுற்ற மின்றிப் போகும்

சோர்ந்து தோற்கும் முன்பதாக
கூர்ந்து எண்ணிப் பார்த்தால்
தேர்ந்த நெறி ஒன்றைத் தேடி
தாகம் கொள்ளும் மனிதம்

ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும்

-சபீர்

45 Responses So Far:

Yasir said...

வொண்டர்ஃபுல் காக்கா...மனிதம் 2050....அவலங்களின் கோலோச்சிய ஆண்டாக இருக்கும்...அதற்க்கான அறிகுறி இப்பவே தெரியுது

அழுகி வரும் மனிதத்தை பற்றிய அழகு கவிதை

“பாசு” என்றால் என்ன காக்கா ???

சேக்கனா M. நிஜாம் said...

// ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும் //

மனித நேயம் வளர வேண்டும் ! எதிர்மறை எண்ணம் ஒழிய வேண்டும் !!

சேக்கனா M. நிஜாம் said...

Dear bro. “kavi” Sabeer,

It is awareness poem !

Please try to send this poem to “Tamil Virtual Academy” and there is chance to add this poem to their academy.

Anonymous said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

இன்னொரு வைரைக்கல்லை உங்களின் கவி மகுடத்தில் பதித்து இருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

இப்ராஹீம் அன்சாரி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்காவின் 48.வரிகளையும்.மனிதன் நிதானமாக மனதில் பதிந்தால். மாசு படிந்த இதயத்தை மாணிக்கம் போல் மாற்றலாம்.

கவி வாழ்க......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா ஒரே ஒரு கேள்வி !

மனிதம்'ன்னா என்னா ?

இன்னொரு கேள்வி !

2050 வரைக்கும் ஏன் !?

அப்துல்மாலிக் said...

அருமை காக்கா, சாமானியன்களையும் தாண்டிய கவிப்புலம் இது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனிதம் மரணித்து வருவதையும் இது 2050 வரை தொடர்ந்தால் என்னவாகுமென்பதையும் நுணுக்கமாய் கவித்து, கணித்த விதம் சூப்பர்!

//மனிதம்'ன்னா என்னா ?
இன்னொரு கேள்வி !
2050 வரைக்கும் ஏன் !?//

சாரி! நான் குறுக்கிடுவதற்கு!

மனிதத்திற்கு என ஒரு மதம் என்றால் அது இஸ்லாம் மார்க்கம்.

அவர் வல்லரசு பற்றி கனவு கொண்டது போல்,ஓரிறைக் கொள்கையும் அதோடு ஒற்றுமையும் பரவ வேண்டும்.இல்லையேல் 2050 ல் மனிதம் எப்படி இருக்குமோ என கவிஞர் அஞ்சுகிறார்.

சேக்கனா M. நிஜாம் said...

நெறியாளரே !
ரேஷன் கார்டு என்னாச்சு ? இன்னும் பதியலையா ? அடுத்தக் “குடி” ரெடியா ஈக்கிது !

sabeer.abushahruk said...

தம்பி யாசிர்,

'பாசு' என்னும் சொல்லுக்கு 'அன்பு'  என்னும் பொருளும் உண்டு.

'பூரி' தமிழ் பதார்த்தமா?

வாழ்த்துக்கு நன்றி.

தம்பி சேக்கனா நிஜாம், விரும்பி வாசித்தமைக்கு நன்றி. நான் சரியான 'குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவன்'. எனக்கு நீங்கள் சொல்லும் அக்காடமி பற்றி ஓர் அட்சரம் விளங்காது. அங்கு பதிவு செய்தால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

அபு இபுறாஹீம்:

மனிதனை மிருகத்திலிருந்து எந்த பண்புகளும் தன்மைகளும் பிரித்துக் காட்டுகின்றனவோ அவை நிலவுவதை 'மனிதம்' எனலாம் என்பது என் கருத்து.

இதை இன்னும் விளக்கமாக ஏதாவது ஒரு படிக்கட்டில் உங்கள் அசத்தல் காக்கா சொல்வான். 

இரண்டாவது கேள்விக்கான பதில்:

பண்டைய காலத்தில் மனிதர்களில் மனிதம் மிகைத்திருந்தது; காலப்போக்கில் அது குறைந்து போனது. தற்கால மனிதர்களில் பலரிடம் மனிதன் பாதி மிருகம் பாதி கலவையாக இருக்கிறது. 

இது இப்படியே வளர்ந்து 2050 ல் இன்னும் சீரழியாமல் இருக்க மனிதன் வகுத்த நெறிகளை விடுத்து இறை நெறியை பின்பற்றினாலே மனிதனில் மனிதம் மிஞ்சும். அதுவும், ஏற்கனவே ஓரிறை என்று சொல்லிக்கொண்டு பிரிந்து கிடந்தாலும் சாத்தியமல்ல,,, ஒருங்கிணைந்த ஓரிறைக் கொள்கைதான் மனிதம் போதிக்கும். 

மேற்சொன்னவை என் அபிப்பிராயம் மட்டுமே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சமீபத்தில் நடந்த சம்பவம்...'

நான் வேலை செய்யும் கம்பெனியில் சீனியர் பைண்டராக இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் என்ற ஊரைச் சேர்ந்த ஓருவர் ஊருக்கு சென்றிருந்தார் அவரின் விடுமுறை முடிந்து திரும்பி துபாய் வருவதற்காக காரில் ஏர்போட்டுக்கு வந்து கொண்டிருந்திருக்கிறார் அவ்வழியே பைக்கிலிருந்து கீழே விழுந்து ஒருவர் அடிபட்டு இரத்தம் வழிந்தோடும் சூழலில் கண்டு இவர் சென்ற வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று உதவி செய்திருக்கிறார் அதோடு அவருடைய வாகனத்திலேயே ஏற்றிக் கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார் அவரும் அவருடன் சென்ற உறவினர்களும்.

அங்கே அவர்கள் அனுமதிக்க மறுத்து போலீஸ் கேஸ் ஆகும் ஆதலால் முதலில் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு அவர்கள் சொல்லும் மருத்துவமனையில் சேருங்கள் என்று சொல்லிவிட்டதால் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கின்றனர் அவர்களும் முறையாக கம்பெளைண்ட்டை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லி ஒரு போலீஸ்காரரையும் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

சரி வேலை முடிந்தது என்று, அங்கிருந்து நேரடியாக இவர் பயணத்தை தொடர்ந்திருக்கிறார் ஒரு மணிநேரப் பயணம் தொடர்ந்ததும் அவர்களை முந்திச் சென்று ஒரு போலீஸ் வாகனம் மறித்து மீண்டு அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவர்களை கைது செய்து அடுத்த நாள் ரிமாண்டில் விட்டிருக்கிறார்கள் அந்த கேஸ் முடியும் வரை ஊரிலேயே இருக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரையிலும் என்று...

சென்ற மாதம் விடுமுறை நிறைவுற்று பணிக்கு திரும்பியிருக்க வேண்டியவர் இன்னும் ஊரில் இருக்கிறார்...

மனிதாபிமானத்தோடு உதவிக்கு செல்ல நடந்ததோ வேறுவிதமாக !!

இங்கே மனிதம் நிலைபாடு !?

sabeer.abushahruk said...

/இங்கே மனிதம் நிலைபாடு !? //

இங்கே ஒரு பக்கமிருந்துதான் விவரிக்கப்பட்டிருக்கிறது. போலிஸ் தரப்பின் நியாயம் சொல்லப்பட வில்லை.

இரண்டாவதாக, விதி விலக்குகள் தீர்வுகளாகாது.

தர்க்கம் செய்ய வேண்டுமெனில் இப்படியும் சொல்லலாம். போலிஸிடம் மனிதம் இல்லாததால்தான் உதவி செய்தவரையும் வதைத்தது என்று.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//மனித சமுதாயம் தன்னை சீர்படுத்திக்கொள்ளவேண்டுமானால் இறைவனின் கட்டளைகளுக்கு பயந்து நடக்கவேண்டும் என்ற உணர்வு- அப்படி நடக்காவிட்டால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம்- ஆகியன தனிமனிதனிடம் மேலோங்க வேண்டும் அவைகள் மேலோங்கினால் மட்டுமே தவறுகள், சுயநலம், சுரண்டல், அநீதி ஆகியவை சமுதாயத்தைவிட்டு ஒழியும். ஆகவே இதற்கு தீர்வு இஸ்லாம்தான். மறைந்து கொண்டிருக்கும் மனித தன்மைகளை மீண்டும் வளர்த்துக்கொண்டுவர மாற்று மருந்து இஸ்லாம்தான். இஸ்லாம் தழைத்துள்ள பகுதிகளில் இத்தகைய சமூக அவலகுற்றங்கள் ஒப்பிடுகையில் குறைவு என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. .

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் சுரண்டலும், கொள்ளை இலாபமும் எப்படி ஒழிக்கப்படும் என்பதையும் தனிமனித ஒழுக்கங்கள் எப்படி மேம்படும் என்பதையும் அதற்கான நிருபிக்கப்பட்ட சான்றுகளையும் , இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடு செய்தோர் தண்டிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளையும் ஒரு தனி ஆக்கத்தில்தான் இன்ஷா அல்லாஹ் காணவேண்டும் . //

கடந்த ஜனவரி மாதம் நான் பதிவு செய்த- மறைந்து கொண்டிருக்கும் மனிதப்பண்புகள் -என்ற தலைப்பிட்ட ஆக்கத்தின் மேற்கண்ட வரிகளை இந்த இடத்தில் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்வதும் ஒரு நல்ல அறிகுறியே.

மனிதம் தழைக்க செய்வதே எதிர்காலபணியாக இருக்கவேண்டும். இதற்காக அதிகமதிகம் அழைப்புப்பணியில் ஈடுபடவேண்டும்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//போலிஸ் தரப்பின் நியாயம் சொல்லப்பட வில்லை.//

போலீஸிடம் அவரின் பயணத்திற்கான அனைத்து சான்றுகளையும் காட்டியிருக்கிறார்கள், ஆனால் போலீஸின் சந்தேகம் அவர்களும் அந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாமோ என்றும்....

விடுமுறை நீட்டிப்பு கேட்டு வந்ததும் இதே நினைப்புதான் எனக்கும் வந்தது... அடிபட்டவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம் வாகனம் அடித்து விட்டு சென்றுவிட்டது என்றும்... அப்படியிருந்தும் விடுபட்டதாக இல்லை !

இது தர்க்கமல்ல...

கடந்த வியாழன் மாலை, துபாய் - சலாஹுத்தீன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு ஷாப்பில் இண்டிரீயர் டிசன் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களுக்கு பிரச்சினை வலுத்து அடித்து கொண்டார்கள் அதில் ஒருவரின் கண்ணுக்கு அருகில் ஆழமாக சதை கிழிந்து இரத்தம் ஓடியது...

சுற்றியிருந்தவர்கள் அருகில் நெருங்க பயந்து கொண்டிருந்தனர் அடித்தவரோ ஓடிவிட்டார் அவரையும் யாரும் தடுக்க வில்லை, இரத்தம் சொட்ட சொட்ட நிற்பவருக்கு உதவலாம் என்று அருகில் சென்றால் அவர் விடுவதாக இல்லை போலிஸை கூப்பிடு என்று கத்துகிறார் அந்த அழுத்தத்தால் இரத்தம் பீரிட்டு வெளியில் அடிப்பதை கண்களால் பார்க்க முடியவில்லை... ஆம்புலன்சுக்கும் அழைத்து விட்டேன், ஆனால் அடிவாங்கிய நபர் (அரபு தேசத்துக்காரார்) அருகில் நெருங்கி முதலுதவி செய்ய அனுமதிக்க விடுவதாக இல்லை... அடுத்த 10 நிமிடத்தில் ஆம்புலசும் வந்தது... அப்படியே அவரை அலக்காக தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள் அதன் பின்னர் என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை... !

Anonymous said...

தீர்க்கப் பார்வை திண்ணமாய்க் கணிப்பு
பார்த்ததும் படித்ததும் புலமை மைய்யால்
பாட்டில் தீட்டும் பாவலர் சபீரின்
நாட்டில் நன்மைகள் நடக்க வேண்டும்
என்றப் பேரவா இனிதே வெல்ல
இன்றே சூளுரை எடுப்போம் இஸ்லாம்
ஒன்றே மார்க்கம் ஓங்கிச் சொல்வோம்
நன்றென உணரும் நாட்களும் வருமே

அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

சு.மூர்த்தி said...

முதலில் உங்கள் அனைவருக்கும் வணக்கம்,

கடந்த செம்மொழி மாநாட்டிலிருந்து உங்களின் வலைப்பூவை தொடர்ந்து இல்லாவிடினும் அவ்வப்போது வாசித்து வருகிறேன்.

இங்கே பதியப்பட்டிருக்கும் ஒரு சில வீடியோக்களையும் கேட்கும் வாய்ப்பும் கிட்டியது.

அற்புதமான மனிதத்தின் புனிதத்தை அதன் போக்கை கவிதையில் வடித்த கவிஞருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

இந்தக் கவிதையின் முடிவில்

***
ஒற்றை இறைக் கொள்கை தனில்
ஒருங்கி ணைந்தால் மட்டும்
ஈருலக வாழ்க்கை யிலும்
மனிதம் மிக்க நிலைக்கும்
***

மனிதன் மனிதனாக வாழ ஒற்றை இறைக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறீர்கள், கடவுள் நம்பிக்கை, கடவுளின் அச்சம் இருந்தால் மட்டுமே மனிதனாக இருப்பான் என்பதை அனுபவபூர்மாக உணர்ந்து கொள்ளக் கூடியதே.

நீங்கள் ஒரே இறைவனை மட்டும் வணங்குங்கள் என்று நிர்பந்தம் செய்கிறீர்களே அது ஏன் ?\

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சு.மூர்த்தி சொன்னது… நீங்கள் ஒரே இறைவனை மட்டும் வணங்குங்கள் என்று நிர்பந்தம் செய்கிறீர்களே அது ஏன் ?\ //

இதற்கு ஒரு தனி பதிவிட்டு விரிவாக சொல்ல வேண்டும்.

இறைவனின் சக்தி, தன்மைக்கு இணையாக இவ்வுலகில் வேறு எதுவுமில்லை என்று நம்புகிறோம்.

நிர்பந்தம் என்று சொல்லுவதைவிட சிந்திக்கும் மனிதர்களுக்கு எத்திவைக்கிறோம் என்று சொல்லுவதே சரி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஐயா சு. மூர்த்தி,

தனி பதிவு வருவதற்கு முன்பு, நேரம் கிடைத்தால் இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள் பயனுல்லதாக இருக்கும்.

http://www.tamililquran.com/qurantopic.php?topic=34

Anonymous said...

அன்பிற்குரிய சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு,

தங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தாங்கள் வருகை தரும் அளவுக்கு தளத்தை தரமாக வைத்திருக்கும் அதிரை நிருபர் குழுவினருக்கும் நன்றி.

நிற்க, சகோதரர் தாஜுதீன் சொல்வதைப் போல ஓரிறைக் கொள்கையை நான் நிர்பந்திக்கவில்லை, எத்திவைக்கிறேன். எத்திவைத்தல் என்மீதான ஒரு இறைக் கட்டளை, கடமை. அரசின் கட்டளைகளையே பின்பற்றும் மாந்தருக்கு அந்த அரசையே படைத்த இறைவனின் கட்டளையைப் பின்பற்றாதிருத்தல் அந்த இறைக்குச் செய்யும் துரோகமாகும்.

-நல்ல அருவியில் குளித்து இன்புற நேர்ந்த நான் எல்லோரையும் அங்கு குளிக்கச் சொல்வது நிர்பந்தமா உதவியா?

-ஆரோக்கியமான, ருசியான உணவு கிடைக்கப்பெற்ற நான் அதையே யாவரும் உண்ணுங்கள் எனச் சொல்வது நிர்பந்தமா உபகாரமா?

-நல்ல பள்ளியில், கல்லூரியில் படித்து அறிவாளியான நான் அந்த கல்வி நிறுவனத்தை அடையாளம் காட்டுவது நிர்பந்தமா சேவையா?

இனி, நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

தவிர, என் ஒருங்கிணையச் சொல்லும் நோக்கம் இஸ்லாமியரல்லாதோருக்கு மட்டுமல்ல சகோதரரே. ஒரே இறை என்று சொல்லிக் கொண்டு கிரியைகளில் எங்களுக்குள் பிரிந்து கிடக்கிறோம் அல்லவா அதையும் சேர்த்தே சொல்ல முனைந்திருக்கிறேன்.

மேற்கொண்டு விளக்கங்கள் வேண்டுமெனில் அறிந்துகொள்ள நான் www.sathyamarkam.com தளத்தை சிபாரிசு செய்கிறேன்.

-Sabeer

N. Fath huddeen said...

சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. சான்றாக, குர்ஆனில் Convert இல்லை, Convey தான் இருக்கு. So, we convey the message. It's upto you.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் மூர்த்தி உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக வாழ்த்துக்கள்.

// நீங்கள் ஒரே இறைவனை மட்டும் வணங்குங்கள் என்று நிர்பந்தம் செய்கிறீர்களே அது ஏன் ? //

இன்று உலகில் நிலவும் ஒவ்வொரு மதமும் இறைவனைப் பற்றி பலவிதமான கருத்தோட்டங்களை கொண்டுள்ளது.சிலமாதங்களில் கடவுள் இரண்டு;சில மதங்களில் எண்ணிக்கை இல்லை.எல்லாப் பொருள்களையும் கடவுளாக காணும்'மதங்களும் உலகில் உண்டு.இறைவனே இல்லை எனக் கூறும் நாத்திககொள்கையும் உண்டு.இறைவன் இருப்பதைப் பற்றியோ,
இல்லாததை பற்றியோ கவலைப்படாதவர்களின் கூட்டமும் இவ்வுலகில் உள்ளன.

இறைக் கொள்கையில் காணப்படும் இத்தகைய கருத்துக்கள் வாழ்வியல் துறைகளிலும் பல சிக்கல்களை ஏற்ப்படுத்தி,மனித வாழ்வின் இலக்கையே திசை மாற்றி விடுகின்றன.

ஆனால் மகத்துவம் மிக்க திரு குர்ஆன் கூறும் இறைக் கொள்கை எளிமையானது ;உறுதியானது ;குழப்பமற்றது .

இறைவன் கூறுகிறான்.

கூறுவிராக!அவன் அல்லாஹ்,ஏகன்.அல்லாஹ் (எவரிடத்திலும்)எந்த தேவையும் இல்லாதவன்.அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை.அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.மேலும் அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை.(112;1 -4 )

தங்களுடைய ஐயங்களுக்கு விளக்கம் தர வயதில் மூத்த சகோதரர்கள் வருகை தருவார்கள் பொருத்திருங்கள்.

Anonymous said...

// நீங்கள் ஒரே இறைவனை மட்டும் வணங்குங்கள் என்று நிர்பந்தம் செய்கிறீர்களே அது ஏன் ? //

வாழ்த்துகள் சகோதரரே!

ஏக இறையின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!

இறை நம்பிக்கையில் தாங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை என்பதை தாங்களின் பின்னூட்டத்தின் மூலம் உணர்கிறேன். தாங்களின் ஐயமெல்லாம் ஏன் ஒரே இறைவனை மட்டும் வணங்கி வழிபட வேண்டும்?

"மனிதர்களே! உங்களைப் படைத்து பரிபாளிப்பவனான (அல்லாஹ்வை) அஞ்சிக்கொள்ளுங்கள்; அவன் தான் ஒரே ஒரு ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்து அதிலிருந்து அதன் ஜோடியையும் படைத்து அவைகளிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தினான்..." (குர்ஆன் 004: 001)

உங்களையும் என்னையும் படைத்தது அந்த ஒரே ஒரு இறைவன் தான் என்றிருக்கும் போது அந்த ஒரே ஒரு இறைவனை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்விறைவனுக்கு யாதொன்றையும் இணையாக்களாகாது என்று சொல்வதில் என்ன பிழையிருக்கிறது சகோதரரே?

இறைவனால் படைக்கப்பட்டவைகளை வணங்குவதைத் தவிர்த்து படைத்தவனை வணங்குங்கள் என்று அழைப்பதில் தவறில்லை சகோதரரே!

உதாரனத்திற்கு கயவர்களால் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்படுகிறது. நம்மைப் போன்ற ஒரு சமானியனுக்கு அந்த கள்ள நோட்டுகள் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அவனும் அதை நம்பி பாதுகாத்து வைத்திருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அந்த நோட்டுக்களை முறையான வழியில் பெற்றதனாலோ அல்லது அவைகள் நல்ல நோட்டுகள் என்று நம்பியதாலோ அது நல்ல நோட்டாக ஆகிவிடாது. நீங்களும், நானும் அதற்கு அங்கீகாரம் கொடுத்தாலும் அரசாங்கம் அதை சம்மதிக்குமா?

அதே போலத்தான் நாம் இறைவன் என்று நம்புவதெல்லாம் இறைவனாக முடியாது.

நாம் சரி என எண்ணி பின்பற்றுவதெல்லாம் இறைமார்க்கமாகிவிட முடியாது.

அந்த ஒரிறை தன் தூதர் முகம்மது -அல்லாஹ்வின் சாந்தி அவர் மீது உண்டாகட்டுமாக- அவர்கள் மீது இரக்கிவைத்த மனித குலத்திற்கு வழிகாட்டியான குர் ஆனில் இறைவனுடைய தன்மைகளைப் பற்றி இவ்வாறு குறுகின்றான்.

(நபியே!) நீர் கூறுவிராக; அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; மேலும் (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை. (குர்ஆன் 112 : 1,2,3,4)

ஒரு அரசாங்கம் கள்ள நோட்டுகளைத் மக்கள் இணம் காண வேண்டுமென நல்ல நோட்டின் தன்மைகளை வெளியிடுவதைப் போல இறைவனுடைய தன்மைகள் இணம்காட்டப்பட்டுள்ளது. அதை எடுத்து நடப்போர் வெற்றிடைவர். மாறாக அதை புறக்கனிப்போர் நிலை வெற்றியடைவதைப் போல தோன்றினாலும் உண்மை அவ்வாறல்ல இறுதியில் அவர் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரனைக் குட்படுத்தப்படும் போது அவர் நிலை மிகவும் பரிதாபத்திற் குறியதாக இருக்கும். அவர் அங்கே யாதொரு உதவியாளரையும் காணமாட்டார்.

எனவே, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித் தறிவிக்கக் கூடிய வேதம் நம்மிடத்திலே இருக்கிறது. அதைப் படித் துணர்ந்து சத்தியத்தின் வழி தழுவ சகோதரரை அன்போடு அழைக்கின்றேன்.

Abu Easa

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்பான சகோதரர்களுக்கு,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ் என்பவன் ஏதோ அரபிய நாட்டு மக்களால் வணங்கப்படும் உள்ளூர் கடவுள் அல்ல. இவ்வகிலத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஒருவன். உலகில் மக்கள் அவனை பல்வேறு விதமாக தன் வசதிக்கேற்ப அழைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் அவன் எப்படி வணங்க வேண்டும் என்று அவனுடைய வேதப்புத்தகத்தில் (திருக்குர்'ஆன்) கட்டளைப்பிறப்பித்துள்ளானோ அப்படி பெரும்பாலான மக்கள் அவனை வணங்குவதில்லை.

அவன் அவனாகவே உருவாகியவன். அவனுக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை, மகனுமில்லை, மகளுமில்லை, உடன்பிறந்தோர் எவருமில்லை. அவனுக்கு பசியுமில்லை, தூக்கமுமில்லை. மனிதனுக்குரிய எவ்வித தன்மையும் பெற்றில்லாதவன். அவன் எவ்வித தேவையும் அற்றவன். ஆனால் அண்ட‌ சாஸ்திர‌ங்க‌ளில் எதேனும் ஒரு மூலையில் கிட‌க்கும் பாறைக்குள் ஒளிந்திருக்கும் தேரையின் உள்ள‌த்தின் ஊச‌லாட்ட‌ங்க‌ளையும் உபகரணம் ஏதுமின்றி தெள்ள‌த்தெளிவாக‌ அறிந்து கொள்ள‌க்கூடிய‌வ‌ன் அதோடு அவ‌ற்றிற்குரிய‌ இரையையும் வ‌ழ‌ங்க‌க்கூடிய‌வ‌னே க‌ட‌வுள், ஆண்ட‌வ‌ன், இறைவ‌ன் என்றெல்லாம் தமிழில் அழைக்க‌ப்ப‌டும் அந்த‌ வ‌ல்லோனே "அல்லாஹ்".

ச‌கோத‌ர‌ர் சு.மூர்த்திக்காக‌ சில‌வ‌ரிக‌ள் மேலே எழுத‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. விள‌ங்கிக்கொண்டு விரைந்து வாருங்க‌ள் அந்த‌ வ‌ல்லோனின் ஈருல‌க‌ வ‌ள‌ங்க‌ளை குடும்பம் சகலமும் அனுப‌வியுங்க‌ள். எம் ஒட்டு மொத்த‌ ச‌முதாய‌ ந‌ல‌னுக்காக‌ இறைவ‌னிட‌ம் பிரார்த்தியுங்க‌ள்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ZAKIR HUSSAIN said...

//கொடுத்துதவும் குணம் குன்றி
குற்றத் தொல்லைக் கூடும்...//

இப்பவே 2050 வந்திட்ட மாதிரி தெரியுதே...

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் மூர்த்தி அவர்கட்கு, வாழ்த்துக்கள்

“அல்லாஹ்” என்ற சொல் எல்லா மொழிகளிலும் இறைவனைக் குறிக்கச் சொல்லும் பதத்தின் அறபு மொழியாக்கம் மட்டுமே என்பதை முதற்கண் மனதில் இருத்திக் கொள்க. GOD, குதா, தெய்வம், தேவுடு, பகவான், இப்படி உள்ளது போல் அறபு மொழியின் தனிச்சிறப்புடைய ஒரு பதம். முஸ்லிம்கள் மட்டும் “அல்லாஹ்” என்று சொல்வதில்லை என்பதற்கு உதாரணம்: அறபு மொழிப் பேசும் கிறித்துவர்கள் (எகிப்து, லெபனான் போன்ற நாடுகளிலுள்ளவர்கள்) அல்லாஹ் என்றே சொல்வர். “பேனா”, “கலம்” PEN என்று சொன்னால் எல்லாம் “ஒரே பொருளைத்தான்” குறிக்கும் என்பது போல் உணர்க. நிற்க. உங்களின் முக்கியமான ஐயத்திற்கு ஒரே பதில் : நாங்கள் தொழுகையில் “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று சொல்லுவோம்; இதன் பொருள்: “உலகங்கள்-அணட சராசரங்கள் அனைத்தின் இரட்சகனுக்கே எல்லாப் புகழும்” என்பது மேலோட்டமான விளங்கினாலும். இதன் உட்பொருளில் உங்களின் விடையறியாமல் தவிக்கும் வினாவிற்கு விடை தர விழைகின்றேன்: அஃதாவது இங்கு “ஆலம்” என்ற அறபு மொழிக்கு “அல்லாஹ் அல்லாத எல்லாம்” என்று ஆகும். இப்பொழுது சொல்லுங்கள் அல்லாஹ்-இறைவன் -GOD-தெய்வம்-பகவான் அல்லாத யாவும் “படைக்கப்பட்டவைகளாகவும்”, அல்லாஹ்-தெய்வம்-GOD-தெய்வம்-பகவான் மட்டும் “தனித்தவனாக”-படைத்தவனாக இருக்கும் பொழுது “அவனை மட்டுமே” வழிபடுதல் தானே உண்மையான வழிபாடாகும். ஒருவன் தன் மனைவி தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று கருதுவதும் வேறொருவருடன் உறவாடினால் துரோகம் என்று கருதுவதும் மனித இயல்புதானே? படைத்தவனை விட்டு விட்டு படைக்கப்பட்டவைகளை வழிபயட்டால் படைத்தவனுக்குச் செய்யும் “துரோகம்” என்றும் அதனாற்றான் படைத்தவனின் “கோபம்” நம் மீது இறங்கும் என்றும் உண்ர்ந்தால் “ஓரிறைக் கொள்கை”-”ஒன்றெ குலம்; ஒருவனே தேவன் என்பது 100% அப்பழுக்கற்ற அரிய தத்துவம் என்பதை உணர்வீர்கள் அன்புச் சகோதரரே. தேன் குடித்த நாங்கள் தேன் சுவைக்கும் என்கின்றோம். குடித்துப் பார்த்தால் தான் தேன் சுவை என்று உணர்வது போலவே “தீன்” எனும் இஸ்லாமிய மார்க்கம் சுவைத்துப் பார்த்து உணர முடியும்!

sabeer.abushahruk said...

இங்கு கருத்துரைத்த சகோதரர்களுக்கும் விளக்கமளித்த சகோதரர்களுக்கும் நன்றி. மற்றொரு பதிவில் சந்திக்கும் வரை வஸ்ஸலாம்.

வரவேற்பு:

இஸ்லாம் என்பது மார்க்கம் - இதில்
இணைபவர் எங்கள் வர்க்கம்
இனிய வாழ்வியல் கற்கும் - இங்கு
இல்லை நமக்குள் தர்க்கம்

வணக்கத்துக்குரியன ஏதுமில்லை - அந்த 
வல்லோனைத் தவிர யாருமில்லை
வழிகாட்டித் தந்திட நபியவர்கள் - வந்து
வழங்கிய நெறிகளெம் வழியென்போம்


உள்ளத்துத் தூய்மைக்கு இறையச்சம் - உடலில் 
உள்ளவைத் தூய்மைக்கு ஒளூச்செய்தும்
உடலோடு உயிரும் ஒன்றித்தொழ - நாளில்
உனக்கான கடமைகள் ஐவேளை

அருந்தாமல் பருகாமல் பொறுத்திருந்து - உணவு 
அண்மையில் தொடும்தூரம் அடுத்திருந்தும்
அருமையான நோன்பை அகம்கொண்டு - மனத்தை
அடக்குவர் அல்லாஹ்வின் அடியாரே

 

எத்தனை வளங்களைப் படைத்துவைத்தான் - இறை
அத்தனை செல்வமும் நமக்களித்தான்
இத்தனைக் கித்தனை என்றெடுத்து
இல்லார்க்கு தானமாய் ஈந்துவப்போம்

மனிதருள் மாணிக்கம் மீட்டெடுத்த - அந்த 
புனிதமிகு கஃபாவை நேசிக்கனும்
கனிவான அல்லாஹ்வின் அருள்வேண்டி- நாம்
புனிதப் பயணமொன்று மேற்கொள்ளனும்

வான்மறையை வானோரை நம்பனும் - புவியில் 
வாழ்ந்தபின் வருமறுமை அஞ்சனும்
வழியை முடிவென்று மயங்காது - தீர்ப்பு
வரும்நாளே இறுதியென்று நம்பனும்

சகோதரத்துவம் என்பதெங்கள் பண்பு - என்றும் 
சாகாவரம் பெற்றதெங்கள் அன்பு
சச்சரவை ஒதுக்கும் எங்கள் பண்பு - இதுவே
சன்மார்க்க சனங்களின் மாண்பு

மன்னருக்கும் மக்களுக்கும் ஓரிறை - பசும் 
மரங்களுக்கும் வனங்களுக்கும் ஓரிறை
பறப்பவைக்கும் பிறப்பவைக்கும் ஓரிறை - பாரில்
படைக்கப்பட்ட மொத்ததிற்கும் ஓரிறை

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஒரு குலம் - இந்த 
எளியநல் சித்தாந்தம் எமதே
எல்லாமும் எல்லார்க்கும் நெறிமுறை - இதில்
எந்நாளும் தவறாது தலைமுறை

அடிப்படை அன்பு அதன்மேல் மனிதம் - என 
அடுக்கடுக்காய் நற் பண்புகளால்
அமையப்பெற்ற தெம் மார்க்கம் - இதில்
அனைவரும் இணைய வரவேற்போம்!

சபீர்
நன்றி: சத்யமார்க்கம் டாட் காம்

சு.மூர்த்தி said...

உங்கள் அனைவரின் ஆர்வமும் உடனுக்குடன் அளித்த பதிலும் தெளிவாக எடுத்துரைக்கிறது, ஒரே இறைவனை வழிபடும் கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள் - நன்றி.

நான் இந்த பதிவின் கவிஞர்தான் பதில் தருவார் என நினைத்திருந்தேன் மாறாக பெரும்பாலோருக்கும் ஒரே எண்ணோட்டத்தோடு முரண்பாடற்ற கருத்தில் இருக்கிறீர்கள், அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாத்திற்குள் அழைக்கிறீர்கள் காரணம் நீங்கள் நல்லதின்பால் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

இங்கே வாதிட்டு சிரமம் கொடுத்திட விரும்பவில்லை, பின்னூட்டங்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த எனது மனைவிக்கும் எழுந்த கேள்வி "இறைவன் எங்கும் இருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று கூறும் இஸ்லாமியர்களைப் போன்றுதானே நாமும் கடவுளை வணங்குகிறோம், அவர்கள் வணங்கும் இறைவனை மட்டும் ஏன் நம்மையும் வணங்கச் சொல்கிறார்கள்?"

அதுதான் தெரியவில்லை என்றேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அவர்கள் வணங்கும் இறைவனை மட்டும் ஏன் நம்மையும் வணங்கச் சொல்கிறார்கள்?"//

இஸ்லாமியர்கள் வணங்குவது இவ்வுலகம் மற்றும் உலக உயிர் அத்தனையையும் படைத்த ஒருவனை மட்டுமே.
மனிதனால் படைக்கப்பட்ட உருவங்கள் எதையும் வணங்குவதில்லை.
சிந்திப்பவர்களுக்கு இது அத்தாட்சியாக இருக்கும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மனிதம் 2050 -
2050ல் நாம் இருப்போமா? என்று தெரியவில்லை?
நாம் வாழும் இந்த நேரத்திலேயே
2050 வந்து விட்டது.
மறுமை வாழ்க்கையை மட்டும்
நினைத்து விட்டால்
மனிதம் மலர்ந்து
அனைவருக்கும் நன்மை ஏற்படும்.
*****************************************************************************
வரவேற்பு - ஓர் சிறந்த அழைப்பு பணியே!
வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு:
இறைவனின்(அல்லாஹ்வின்) சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாகட்டுமாக!
///// நீங்கள் ஒரே இறைவனை மட்டும் வணங்குங்கள் என்று நிர்பந்தம் செய்கிறீர்களே அது ஏன் ? ////

ஒரு கல்லூரிக்கு இரு முதல்வர்கள் இருக்க முடியாது!

மாநிலத்திற்கு இரு முதல்வர்கள் இருக்க முடியாது!

நாட்டிற்கு இரு பிரதமர்கள் இருக்க முடியாது!

வீட்டிற்கு இரு தலைவர்கள் இருக்க முடியாது!

அப்படி இருந்தால் நிர்வாகத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டு ஒழுங்கமைப்பே சீர் கெட்டு விடும்.

அதனால் இந்த உலகை படைத்த இறைவன்(அல்லாஹ்) எங்களுக்கு வழங்கிய குர்ஆனில் இந்த உலகத்தின் படைப்பை சிந்தித்து பார் எங்காவது உன்னால் குறை கண்டு பிடிக்க முடிகிறதா?

இந்த உலகை பல கடவுள்கள் படைத்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்ததை எடுத்துக்கொண்டு அவர்களுக்குள் பிளவு பட்டுப் போயிருப்பார்கள் (நிர்வாகம் சீர் கெட்டுப்போய்விடும்) என்று அறைகூவல் விடுகிறான்.

இறைவன் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற சொல்லவில்லை ஆய்வு செய்து சிந்தித்து புரிந்து பின்பற்றும்படி சொல்கிறான்.

தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் குர்ஆனின் தமிழ்மொழி பெயர்ப்பை படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரே இறைவனை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு விளக்கம் தெளிவாக இருக்கிறது.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு:
//// நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாத்திற்குள் அழைக்கிறீர்கள் காரணம் நீங்கள் நல்லதின்பால் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.////

திருக்குர்ஆனில் இறைவன் மனிதர்களே! என்றுதான் அழைக்கிறான். முஸ்லிம்களே, அரபுகளே! என்று அழைக்கவில்லை.

ஒட்டுமொத்த உலக மக்களையும் பார்த்துதான் திருக்குர்ஆன் அழைக்கிறது. இதில் நாங்களும் இருக்கிறோம். நீங்களும் இருக்கிறீர்கள்.

ஆதாம் , ஹவ்வா என்ற ஒரு ஜோடியை படைத்து இவர்கள் வழியாக இந்த உலக ஜனத்தொகை பெருகியது என்பது இறைவனின் வாக்காகும்.

இந்த இறைவாக்குப்படி சு.மூர்த்தி எங்களின் சகோதரர் ஆகிறார். எனக்கு கிடைத்த நன்மை என் சகோதரர்க்கும் கிடைக்க வேண்டும் என்பதில் ஆச்சர்யம் இருக்க முடியாது.

எங்களின் சொந்த கருத்தாக எதையும் சொல்லவில்லை.

இறைவன் எங்களுக்கு இட்ட கட்டளைப்படியே நன்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைக்கிறோம்.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு:

//// "இறைவன் எங்கும் இருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று கூறும் இஸ்லாமியர்களைப் போன்றுதானே நாமும் கடவுளை வணங்குகிறோம், அவர்கள் வணங்கும் இறைவனை மட்டும் ஏன் நம்மையும் வணங்கச் சொல்கிறார்கள்?"
அதுதான் தெரியவில்லை என்றேன். ////


இறைவன் எங்கும் இருக்கிறான் எல்லா இடங்களிலும் இருக்கிறான் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்று சொல்வார்கள்.

முஸ்லிம் அவ்வாறு நம்பமாட்டார்கள், அப்படி நம்புவது தவறாகும்.

அவனுக்கென்று இடமுண்டு அங்கு இருந்து ஆட்சி செய்கிறான்;
என்றுதான் நம்பவேண்டும்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆசனமே அர்ஷ் எனப்படும். இது வானங்களையும், பூமியையும் விட மிகவும் பிரமாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

இஸ்லாத்தில் புரிந்துதான் இறைவனை வணங்கச்சொல்கிறான். ஒரே இறைவன் தான் இருக்க முடியும் என்று உறுதியாக நம்பினால்தான் வணங்கமுடியும்.

இஸ்லாத்தில் கட்டாயம் என்பது இல்லை.

சிந்தித்து விளங்கி புரிந்து பின்பற்றுவதற்கு முதலிடம்.

சகோதரரே திருக்குர்ஆனை ஆய்வு செய்யும்படி அன்புடன் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

Muhammad abubacker ( LMS ) said...

அன்பு சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு.

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும்.உங்கள் குடும்பத்தார்கள் மீதும்.உண்டாகட்டும்.

// "இறைவன் எங்கும் இருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று கூறும் இஸ்லாமியர்களைப் போன்றுதானே நாமும் கடவுளை வணங்குகிறோம், அவர்கள் வணங்கும் இறைவனை மட்டும் ஏன் நம்மையும் வணங்கச் சொல்கிறார்கள்?"//

உங்கள் மனைவின் கேள்வி நியாயமானதே! ஏனென்றால் முஸ்லிம்களில் சிலபேருக்கு இஸ்லாம் சொல்லக் கூடிய விளக்கமின்மை காரணத்தால்.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற தவறான சொற்க்களை பயன்படுத்துகிறார்கள்.அவை மூடத்தனமான சொல்.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

கருணை மிக்க இறைவன் (பேரண்டத்தின்)ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான்.வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிக்கும் அவற்றிற்கிடையே உள்ளவற்றிக்கும் மற்றும் மண்ணுக்கு அடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான்.நீர் உம்முடைய சொற்க்களை உரத்துக் கூறும்;ஆனால்,இரசியமாக பேசுவதையும் ஏன்,அதை விட மறைவானவற்றையும் திண்ணமாக அவன் அறிகின்றான்.அவன்தான் அல்லாஹ்;அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.அவனுக்கு மிகவும் அழகிய பெயர்கள் உள்ளன. ( 20 : 5,6.7.)

கிழக்கு மேற்கு யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.எனவே,எங்கு திரும்பினாலும்,அங்கு அல்லாஹ்வின் திசை இருக்கின்றது.நிச்சயமாக அல்லாஹ் மிக விசாலமானவன்;மிக அறிந்தவன். ( 2 : 115 )

இந்த வசனத்தை நாம் கவனமாக சிந்திக்க வேண்டும்.அல்லாஹ்வின் திசைதான் இருக்கின்றது என்று சொல்லிக் காட்டுகிறானே தவிர நான் இருக்கிறேன் என்று சொல்லவில்லை.

இறைத்த் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன் மொழியை பாருங்கள்.

"நீங்கள் பூமியில் இருப்போர் மீது கருணை காட்டுங்கள்,வானத்திலிருப்பவன் (இறைவன்) உங்கள் மீது கருணை காட்டுவான்.

N. Fath huddeen said...

//அதனால் இந்த உலகை படைத்த இறைவன்(அல்லாஹ்) எங்களுக்கு வழங்கிய குர்ஆனில் இந்த உலகத்தின் படைப்பை சிந்தித்து பார் எங்காவது உன்னால் குறை கண்டு பிடிக்க முடிகிறதா?//

//எங்களுக்கு// = "இது உலக மாந்தர் அனைவருக்கும் ஒரு நல்லுறையே அன்றி வேறில்லை" என திருக்குர்ஆன் கூறுகிறது.

எனக்கு தெரிந்து இப் பூஉலகில் எந்த வேதமும் இந்த அரைகூவலை சொல்லவில்லை.

ஆக, திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் சொத்தல்ல!
முஸ்லிம்கள் என்பர் ஒரு ஜாதியும் அல்ல!

முஸ்லிம்கள் என்பவர்: "படைத்தவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து நடந்து, வாழ்பவர்"
அவ்வாறு கீழ்படிந்து நடக்கத்தான் இந்த அருள்மறை அல்குர்ஆன் வழி காட்டுகிறது. Islam is not a religion but a way of life.

உங்களுக்கு திருக்குர்ஆன் இலவச பிரதி ஒன்று கீழ் கண்ட முகவரியில் காத்திருக்கிறது. தயவு செய்து தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.

போஸ்டல் லைப்ரரி
138 பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை - 12
தொலைப்பேசி : 2662 0091

Anonymous said...

சகோதரர் சு. மூர்த்தி,

இவ்வளவு தன்மையாகவும் நாகரிகமாகவுமெனில் அது விவாதமாக இருப்பினும் சந்தோஷமே. தங்களைப் போன்ற பண்பான மனிதர்களுடனான உரையாடல் இரு தரப்புக்குமே பயனுள்ளதாகவே அமையும் என்பது திண்ணம்.

“இஸ்லாமியரைப் போன்றுதானே நாமும் கடவுளை வணங்குகிறோம்” என்ற சொற்றொடர் கேட்க இனிமையாக இருக்கிறது எனினும் ஒரு சில நிபந்தனைகளைக் குறித்துத் தீர்மானிக்காவிடில் குழப்பமே மிஞ்சும்.

அவையாவன?

- இஸ்லாம், படைப்பினங்களை அல்ல, படைப்பவனை வணங்கு என்கிறது. நான் சரிபார்த்துக் கொண்டேன். தாங்களும் சரி பார்த்துக்கொள்ளுங்கள்

- நான் ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒவ்வொரு இறைவனை வழிபடுவதில்லை. ஏனினெல், இறைவன் எல்லாவற்றிலும் மிகைத்தவனாக இருத்தல் அவசியம் (omnipotent). படைப்பிற்கு ஒரு கடவுள், பரிபாளிக்க ஒரு கடவுள், உயிர் கொய்ய ஒரு கடவுள் என்பது இறைவனின் தன்மையில் குறை கற்பிக்கிறது என்பதுதானே உண்மை?

- கடவுள் ஒப்பீடற்றவனாக இருக்க வேண்டுமல்லவா? (unique), அவன் மனிதரைப் போல பிறத்தலும் வாழ்தலும் மூப்பும் பின் இறத்தலும் என்று நிலவினால் அவை கடவுள் பண்புகளாக எப்படி இருக்க முடியும்?

- எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறான் என்பதில் பிழை என்னவெனில், அது, எல்லா இடத்திலும் அவன் ஆளுமை இருக்கிறது என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

மேற்சொன்னவையே பிரதான்மான வித்தியாசங்கள். இவற்றைக்கொண்டு நம் நம்பிக்கைகளைச் சரிபார்த்துக் கொண்டால் பெரும்பாலும் ஏற்படும் சந்தேகங்கள் விலகும்.

சகோதரி. திருமதி மூர்த்தி அவர்களுக்கு கீழ்கண்ட என் மற்றொரு பதிவை வாசித்துக்காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன்.


http://adirainirubar.blogspot.com/2011/08/blog-post_223.html

பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)

வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?

படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?

உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்

வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!

தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!

ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை

பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.

எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!

புர்கா என்றொரு திரை எதற்கு?

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!

பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!

ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?

பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?

மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!

பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!

கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!

- சபீர்
Sabeer abuShahruk

Abu Easa said...

சகோதரர் சு.மூர்த்தி அவர்களுக்கு..

அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!

இப்பின்னூடம் உங்களை தெளிவான இறைக் கொள்கையோடும், பூரன ஆரோக்கியத்தோடும், நிறைந்த மகிழ்வோடும் சந்திக்கட்டுமாக!


//இங்கே வாதிட்டு சிரமம் கொடுத்திட விரும்பவில்லை//

பிறருக்கு சிரமம் கொடுத்திட விரும்பாத உங்களின் நல்லெண்ணம் மதிப்பிற் குறியதே.

//பின்னூட்டங்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த எனது மனைவிக்கும் எழுந்த கேள்வி//

//இறைவன் எங்கும் இருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று கூறும் இஸ்லாமியர்களைப் போன்றுதானே//

சகோதரரே! இறைவன் எங்கும் இருக்கின்றான் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் என்று யாரேரும் தாங்களிடம் சொல்லியிருந்தால் நிச்சயமாக அது முற்றிலும் தவரான தகவல் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவ்வாறான நம்பிக்கை இஸ்லாத்திற்கு முறனானது என்பதையும் தாங்களுக்கு தெறியப்படுத்துகின்றேன்.

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கிறான் - அது நீரின் மீது இருக்கின்றது - அது ஏழு வானக்களுக்கு மேல் இருக்கிறது- என்பதே இஸ்லாத்தின் நம்பிக்கை. அங்கிருந்து அவன் ஆட்சி செய்கிறான்; அவனுடைய ஆட்சி, அதிகாரம், வல்லமை எங்கும் பரவியிருக்கிறது.

மேலும், இறைவன் எங்கும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை அனைத்துப் பொருட்களின் மீதும் இறைத்தன்மை உண்டு என்றே பறை சாற்றும். அப்படியானால் இறைத்தன்மை உங்கள் மீதும் என் மீதும் இருக்க; இறைத் தன்மை கொன்ட ஒருவர் இறைத்தன்மை கொன்ட மற்றவரை ஏன் வணங்க வேண்டும் என்ற கேள்வி அங்கே தொற்றி நிற்கும்.

//இஸ்லாமியர்களைப் போன்றுதானே நாமும் கடவுளை வணங்குகிறோம்//

உதாரனத்திற்கு:- ஒரு குவளையில் தண்ணீர் மற்றொரு குவளையில் பால் இருக்கிறது அதை இருவர் குடிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இங்கே அவ்விருவருடைய செயல் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் குடித்த பானம் வேறு வேறு.
அதே போலத்தான் இறை நம்பிக்கை கொன்ட ஒவ்வொருவரும் வணங்கினாலும் அவர்கள் வணங்கும் முறையும், அவர்களால் வணங்கப்படும் பொருளும் வேறு வேறாக இருக்க இஸ்லாமியர்களைப் போன்று தானே நாங்களும் கடவுளை வணங்குகிறோம் என்ற வாதம் ஏற்புடையதல்ல.
நம்முடைய (வணக்கம் என்கின்ற வகையில்) செயல் ஒன்றாறாக இருந்தாலும் நீங்கள் வணங்கும் முறையும், உங்களால் வணங்கப்படுகிற பொருளும் வேறாக இருக்கும்போது எப்படி நாங்களும் இச்லாமியர்களைப் போன்றுதான் வணங்குகிறோம் என்று சொல்ல முடியும்?

அல்லாமல், இஸ்லாமியர்களைப் போன்று அனைத்து நெறி முறைகளையும் பேனி நீங்களும் கடவுளை வணங்கினால் நீங்களும் இஸ்லாமியர்களே.

//அவர்கள் வணங்கும் இறைவனை மட்டும் ஏன் நம்மையும் வணங்கச் சொல்கிறார்கள்?"//

நீஙளும் நாங்களும் ஈருலகிலும் வெற்றிபெற வேண்டும் எம்பதற்கேயன்றி வேறில்லை.

திருக்குர்ஆன் மனித குலத்திற்கான வழிகாட்டி. குர்ஆனைப் படியுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் தாங்களையும் நேர்வழியின் பால் செழுத்துவானாக!

அன்புடன்
அபு ஈசா

KALAM SHAICK ABDUL KADER said...

சகோதரி. திருமதி. மூர்த்தி அவர்கட்கு வாழ்த்துக்கள்

மனம், மொழி, மெய் மூன்றும் ஒன்று பட்டால்- ஒரே நேர்கோட்டில் அமைன்ந்தால் அஃதே உண்மையின் அடையாளம் அல்லவா?
இப்பொழுது உலகில் உள்ள மதங்களுடன் இஸ்லாமிய மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகின்றேன்:

படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்று மனத்தால் எண்ணி, வாயால் மொழிந்து, மெய்யால் செயல் பட்டால் அஃதே உண்மையான நம்பிக்கை அல்லவா?
சிலர் மனத்தால் மட்டும் எண்ணுவர்;
சிலர் வாயால் மட்டும் மொழிவர்,
ஆம். “படைத்தவன் ஒருவன் தான் என்று எண்ணுவர்; சொல்லுவர் ; ஆனால் படைக்கப்பட்டவைகளிடம் போய் சரணடைவர்.
படைத்தவன் ஒருவன் எண்ணி, வாயால் மொழிந்து (கலிமா சொல்லி)
படைத்தவனிடம் மட்டுமே சரணடையும் உடல் செய்கைகளால் (தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ்) அவ்வெண்ணம்+மொழிதலை உண்மைப்படுத்தி- மெய்ப்பிப்பது “இஸ்லாம்” மட்டும் என்பதை அறுதியிட்டு உறுதியுடன் சொல்லுவோம்.

ஹிந்து, புத்த, கிறித்துவர் யாவரும் படைத்தவன் ஒருவன் உண்டு என்று எண்ணுவதும், மொழிவதும் மட்டிலும் சரி; ஆனால் அந்தப் படைத்தவனுக்கும் மட்டுமே சரணடைவதில்லையே?! அதனாற்றான், “முஸ்லிம்” என்ற பதத்திற்கும் “சரணடைபவர்” என்றே பொருள். இதனையேச் சகோதரர் அபு ஈசா அவர்கள் இவ்வாறுக் கூறியுள்ளார்கள்

//இஸ்லாமியர்களைப் போன்று அனைத்து நெறி முறைகளையும் பேனி நீங்களும் கடவுளை வணங்கினால் நீங்களும் இஸ்லாமியர்களே.//

சு.மூர்த்தி said...

ஒரு சகோதரனாக வாஞ்சையுடன் அழைத்து உரிமையாக கருத்துக்கள் சொன்ன அனைத்து சகோதரர்களுக்கு என்னுடைய மற்றும் குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றிகள்.

கவிஞரே, மற்றும் ஒரு அருமையான கவிதையை பின்னூட்டத்தில் பதிந்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

திரு.பத்ஹுத்தின் உங்களுடைய அன்புக்கு நன்றி, நான் சேலத்தில் இருக்கிறேன் சென்னையில் எனது அண்ணன் மகள் படித்துக் கொண்டிருக்கிறார் அவரை அனுப்பி உங்களின் அன்பளிப்பை பெற்றுக் கொள்ள சொல்கிறேன் மீண்டும் நன்றிகள் பல.

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு ஆசிரியை குடும்பம் இருக்கிறார்கள் அவர்களும் இஸ்லாமியர்கள் தான், அவர் எனக்கு ஒரு குரான் புத்தகத்தை அன்பளிப்பாக சென்ற மாதம்தான் கொடுத்தார் அதனை நேரம் கிடைக்கும்போது வாசித்து வருகிறேன் சந்தேகங்களை அவரிடமே கேட்டும் வருகிறேன். அவர் எனக்கு அதனை வழங்கும் போது சொன்னது "உலக மாந்தர்களுக்கு அருளப்பட்டது இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல" அதனையே நீங்கள் அனனவரும் வலியுறுத்தியிருக்கிறீர்கள்.

இங்கேயும் எனக்கு எழும் ஐயங்களை கேட்டு தெளிவு பெறலாம் நம்பிக்கையுடன்.

Abu Easa said...

சகோதரரே உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தி உண்டாவதாக!

உங்களுடைய பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது. உங்களுடைய ஐயங்களுக்கு இறைவன் நாடினால் நாங்கள் அறிந்தவரை தெளிவுபடுத்தக் காத்திருக்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் எங்களையும் நேர் வழியில் நிலைபெறச் செய்வானாக!
அவன் பொருந்த்திக்கொன்ட நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

அன்புடன்
அபு ஈசா

KALAM SHAICK ABDUL KADER said...

//அதனையே நீங்கள் அனனவரும் வலியுறுத்தியிருக்கிறீர்கள்.//
ஆம். சகோதரர் அவர்களே!

உங்களிடம் திருக் குர் ஆனைத் தந்த சகோதரியும், இங்குப் பின்னூட்டங்கள் இடும் சகோதரர்களும் ஒரே விதமான நம்பிக்கையினை எங்களின் சிறு வயதிலேயே ஊட்டப்பட்டுப் பக்குவப்படுத்தப்பட்டு விட்டோம்; எங்கட்குக் கிட்டியப் பேறு, அல்லாஹ் அருளால்..! இப்பொழுது உங்கட்கு அதனைத் தெரிவு செய்யும் விருப்பம் உங்களிடம் வாய்ப்பாக வந்துவிட்டதும் அல்லாஹ்வின் அருளே!

Kuthub bin Jaleel said...

Dear Brother Moorthy,

I would like to recommend you the following link to understand Holy Quran in a different angle. Understanding Quran is understanding Islam. I am sure you will love the lectures by Br.Nouman Ali Khan and get your misconceptions clarified.

http://www.halaltube.com/nouman-ali-khan-divine-speech

N. Fath huddeen said...

JUST NOW I SPOKE TO POSTAL LIBRARY CHENNAI. THEY ARE AWAITING TO GIFT YOU THE HOLY QURAN. HIS NAME IS MR. JALALUDEEN 9444901422.

sabeer.abushahruk said...

//மற்றும் ஒரு அருமையான கவிதையை பின்னூட்டத்தில் பதிந்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்//

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

சு.மூர்த்தி said...

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

சகோதரர் பத்ஹுத்தின், உங்களின் அன்பளிப்பை விரைவில் பெற்றுக் கொள்கிறேன், எனது அண்ணன் மகளுக்கு பரீட்சை நேரமாக இருப்பதனால் செல்ல முடியவில்லை. என்னுடைய நிலையை எடிட்டர் மெயிலுக்கு தகவல் அனுப்பி வைக்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு