Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 6 21

ZAKIR HUSSAIN | February 14, 2012 | , , , ,


சிலருக்கு தமது இலக்கின் மீதான பிடிமானம் தமிழ்நாட்டு மின்சாரம் மாதிரி நிரந்தரமற்ற சூழ்நிலையில் இருக்கும். இதன் காரணம், அவர்கள் ஒரு குறிக்கோளை நிர்ணயித்தபோதே அது அவர்களுடைய ஒரிஜினல் வெர்ஷன் இல்லை.

# "என்னங்க.... உங்க கண்ணு காண பொறந்தவன்... தோப்பு,வயல், பில்டிங் நு வாங்கி கிட்டே போறான்...நீங்களுந்தான் வெளிநாட்டுக்குப் போனிய...அப்படி ஒன்னும் நீங்க சூட்டிகையா கிழிச்ச மாதிரி தெரியலையே.

# எல்லோரும் முன்னேரனும்னு சொல்றாங்க அதனாலெ நானும் முன்னேறனும். அப்படி முன்னேரலேனா என்னைய தப்பா நினைப்பானுங்களே.

ஒப்பீடுகளால் ஒரு விசயத்தை சாதிக்க முடியாது என நான் சொல்லவில்லை. ஆனால் அது நிரந்தரமில்லை. இன்னொருவனை நான் ஓவர்-டேக் செய்ய நினைக்கிறேன், செய்து விட்டேன், பிறகு...???.

ஆக ஈகோவுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கும் சம்பிரதாயங்கள் வெள்ளைக்காரர்களின் படிப்பு. அதனால் தான் “You can Do it, I can do it”  என்று கத்தும் எந்த பயிற்சியும் வெகுநாட்கள் நின்று பிடிப்பதில்லை. தனி மனித முன்னேற்றத்துக்கு யார் மனதையும் புண்படுத்தாத சூழல் எப்போதும் நிரந்தரம். சாதித்த பிறகும் அதில் நிம்மதியும் இருக்கும். ஆக ஒப்பீடு யாருடன் இருக்க வேண்டும்?

நிச்சயம், நம்மோடுதான் !

இரண்டு வருடத்துக்கு முன் நம் மாத வருமானம் எவ்வளவு?. இப்போது எவ்வளவு? அதேதானா? இல்லை குறைவா? முன்னேற்றமில்லாத வருமானம் கால ஓட்டத்தில் நிச்சயம் பிரச்சினைகளைத் தரும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்.

பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் குடும்பம், உங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லது. If you born as a poor it could be a fate. But in this world opportunities are given to you to change the fate.

சில சமயங்களில் நாம் எப்படியிருக்கிறோம் என்று ஒரு சுய பரிசோதனை இல்லாமல் நிதர்சனத்தோடு மல்லுக்கு நிற்பதும் காரணமாகும்.

Passing Judgments

மனிதனின் 'மைன்ட்' தொடர்ந்து தீர்ப்புவழங்கிக் கொண்டிருக்கும் கருவி. இறைவன் உங்களுக்குக் கொடுத்தது BRAIN,  நீங்கள் உங்கள் சூழ்நிலைகளில் உருவாக்கி கொண்டது MIND. அந்த மைன்ட் தான் பெரும்பாலான விசயங்களில் காலை வாரி விடும் எதிரி.

எந்த சூழ்நிலை, எந்த மனிதர்கள் யாரைப்பார்த்தாலும் நமது மைன்ட் தன்னை ஓர் அறிந்த சூழலுக்குப் பழக்கிக்கொள்ளும். அதனால்தான் ஒருவரைப் பார்த்தவுடன் நீங்கள் இந்த ஊரா, எந்த பள்ளியில் படித்தீர்கள்? எனக்கு ஒருவரைத்தெரியும் [உங்கள் தெருவில்] அவர் உங்களுக்குச் சொந்தமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் தொடுக்கிறோம். இதற்கு காரணமும் ஒரு ஜட்ஜ்மென்ட்டுக்கு வருவதற்குத்தான்.

நமது ஜட்ஜ்மென்ட்டில் வாழ்வது உண்மையுடன் தொடர்பு அற்றவர்களாகப் போவதற்கு அதிக சான்ஸ் இருக்கிறது.

நிகழ்வு: ஒரு கண்ணாடி கிளாசை உங்கள் பிள்ளை போட்டு உடைத்து விட்டது உங்கள் வீட்டில்…..

ரியாக்சன் 1. "நல்ல வேளை காலில் விழவில்லை"
ரியாக்சன் 2. "ஒழுங்கா கையிலெ பிடிக்க தெரியாது?.."
ரியாகசன் 3. "உனக்கு எப்ப பார்த்தாலும் இதான் வேலை!!"

இதில் உண்மை நிலை என்ன?

"ஒரு கிளாஸ் விழுந்து உடைந்து விட்டது", அவ்வளவுதான்... இதற்குப் போய் ஏன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்?

இதை நான் எழுதக்காரணம் நம் தொழிலில் /  வேலையில் / குடும்பத்தில் இப்படித்தான் பிரச்சினை எது என்பது அறியாமல் பல முடிவுகளை நாம் எடுக்கிறோம். சென்டிமென்டையும் தொழிலையும் ஒன்றாய் போட்டு பின்னி பிணைப்பவர்கள் பிறகு வரும் பிரச்சினைகளால் மீள முடியாமல் கஷ்டப்படும்போது சொல்லும் வார்த்தை "நான் நல்லதைத்தான் நினைத்தேன்...எனக்கு போய் இப்படி" உண்மை அதுவல்ல.

உங்கள் தீர்க்கமான முடிவுகள் தவறாகவே இருந்து இருக்கிறது. எனவே உண்மையுடன் தொடர்பில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

இப்போதைய பிரச்சினை உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்னும் திருந்த மாட்டேன் என்றால்.... தயாராகி விடுங்கள் இன்னொரு புதிய பிரச்சினையை சமாளிக்க.

இது தொழிலில் மட்டுமல்ல நம் ஊரிலும் இந்த "ஜட்ஜ்மென்ட்" நோய் தாக்கி இருக்கிறது. இல்லாவிட்டால் சகோதர பாசம் முக்கியம் என்றும், சகோதரத்துவத்தை ஒவ்வொரு நாளும் 5 வேலை பாங்கு சொல்லும் 32 பள்ளிவாசல்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு பிரிந்து இருப்போமா?. சின்ன சின்ன பிரச்சினைகளிலும், இயக்கங்களிலும் மனிதனை மனிதனாக பார்க்கும் குணம் எங்கு குறைந்து போனது?. 

இன்று எதிரியாக உள்ள அரசியல் கட்சிகள் நாளை தேர்தலில் கூட்டு சேரும்போது நாம் விமர்சிக்கிறோம். "வெட்கங்கெட்டவைங்க" என பெயர் வைக்கிறோம். நாம் இன்று எதிரியாக நினைக்கும் இன்னொரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவன் நாளை நம்முடன் சேரும்போது நம் நிலைப்பாடுதான் என்ன?...பிரிவுகள் கருத்தோடு இருந்து விட்டுபோகட்டும்..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!

Vacuum Prosperity

நாம் முன்னேற்றம் அடைய பழையது நம்மிடம் இருக்க கூடாது என்பது ஒரு விதி. நாம் உபயோகப்படுத்தாத சட்டை, துணிமணிகள் எல்லாம் பல வருடம் நம்மிடம் இருக்கும். தேவை இல்லாத சென்டிமென்ட் பார்த்து நாமும் வைத்துக்கொண்டு நம்மை விட வசதியில் குறைந்தவர்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு Vacuum prosperity என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களிடம் பயன்படாமல் இருக்கும் சில துணிமணிகளைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள், தானாகவே புதிய உடைகள் உங்களுக்கு வந்து சேரும்.

உங்கள் வேலை இடத்தில் வியாபாரத்தில் சில டிப்ஸ்.

1.1. மனிதன் சந்தோசப்படும் வார்த்தை "அவனது பெயர்" ,   பேசும்போது இடையிடையே உங்கள் கஸ்டமர் பெயர் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள் [மரியாதை சேர்த்துக்கொள்வது உங்கள் கஸ்டமரின் வயதைப்பொறுத்தது.  தொடர்ந்து பெயர் உச்சரிக்கப்படும்போது கஸ்டமர் ஒரு safety ஐ உணர்வது நிச்சயம்.

1.2. நோ ப்ராப்ளம் எனும் வார்த்தையை எல்லாவற்றிற்கும் உச்சரிப்பவர்கள் ஏதாவது பிரச்சினையைத் தன் வசம் கவர்ந்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

1.3. உங்களுக்குத் தெரியாத விசயத்தை தெரிந்த மாதிரி சீன் போட்டு பிறகு வழிவதை விட்டு விட்டு, எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை விசாரித்து உடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என சொல்வதுடன், உங்கள் கஸ்டமரின் டெலிபோன் நம்பரை அவர் முன்னாடியே குறித்து கொண்டு அல்லது verify செய்து மறவாமல் அவருக்கு நீங்கள் விசாரித்ததைத் தெரிவித்தால் அவரது சந்ததியே உங்களிடம் பெரும் மதிப்பு வைத்திருக்கும்.

எதையும் முழுமையாக கேட்ட பிறகு பேசுங்கள். உங்களின் நிறைய நேரம், பணம்,  எனர்ஜி வீணாவதைத் தடுக்க முடியும்.

We will see “image maker” in next episode, Insha Allah !

ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எதையும் முழுமையாக கேட்ட பிறகு பேசுங்கள். உங்களின் நிறைய நேரம், பணம், எனர்ஜி வீணாவதைத் தடுக்க முடியும்.//

ஆமா காக்கா ! சரியே ! படிக்கட்டு உயர்ந்து கொண்டே செல்கிறது... மாஷா அல்லாஹ் !

உளவியல் உன்னதங்களை மனதில் இலகுவாக பதிய வைக்கிறீர்கள் !

sabeer.abushahruk said...

//நாம் முன்னேற்றம் அடைய பழையது நம்மிடம் இருக்க கூடாது என்பது ஒரு விதி. நாம் உபயோகப்படுத்தாத சட்டை, துணிமணிகள் எல்லாம் பல வருடம் நம்மிடம் //

(மனநல)மருத்துவராக்கா ஜாகிர்,

கப் போர்டை எட்டிப் பார்த்த மாதிரில்லோ சொல்லிப்போட்டிய. வர்ர வாரக்கடைசியில் மூட்டை கட்டிக் கொடுத்துடறேன்பா. ஆனா, ஆக்ச்சுவலா சென்ட்டிமென்ட்டுமில்லே ஒன்னுமில்லே, சோம்பல்தான்ம்பி. சென்ட்டிமென்ட்டுன்னா கொடுக்கச் சம்மதிப்பேனா சொல்லு.

பி.கு.: நீ சொன்னமாரி புதிய சட்டை வரலே...மவனே அப்ப இருக்கு உனக்கு.

ஜாகிர், கமிட் பண்ண தோரணை தெரிகிறது உன் எழுத்தில். அப்துல் கரீம், உதய மூர்த்தி எல்லாம் நெனப்பிருக்கா? கல்லூரி காலங்களில் போட்டி போட்டு வாசிப்போமே?

அதுபோல் இந்நேரம் டாட காமில் நம்ம "தோழர்கள்" ஆசிரியரின் "மனம் மகிழுங்கள்" தொடரும் வாசித்துப்பாரேன்.

sabeer.abushahruk said...

சாரிடா, அப்துல் ரஹீம்?

sabeer.abushahruk said...

//உண்மையுடன் தொடர்பில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.//

ஐ லவ் திஸ் சென்ட்டென்ஸ்

ZAEISA said...

அஸ்ஸலாமு அழைக்கும்.
படிக்கட்டுகள். படிக்கையில் ஒரு வரி எம்பொரடியைத்
தட்டியது.அனேகமாக மேலும் பலபேரின் பொரடியை நிச்சயம் தட்டும் என
நினைக்கிறேன்.அப்படிப் பார்த்தால் வரிகள் போதாது.இன்னும் வேணும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேலுயர மேலான உளவியல் தத்துவங்கள். நன்றியாக்கா.
மேலும் தாருங்கள் தாராளமாய்!

Anonymous said...

அன்பு தம்பி ஜாகீர்.

வரிகள் அனைத்தும் கரும்பின் சுவை. அவற்றுள் இது அடிக்கரும்பு.

//இப்போதைய பிரச்சினை உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்னும் திருந்த மாட்டேன் என்றால்.... தயாராகி விடுங்கள் இன்னொரு புதிய பிரச்சினையை சமாளிக்க.//

வாழ்த்துக்கள்.

இபுராஹீம் அன்சாரி

அப்துல்மாலிக் said...

//நோ ப்ராப்ளம் எனும் வார்த்தையை எல்லாவற்றிற்கும் உச்சரிப்பவர்கள் ஏதாவது பிரச்சினையைத் தன் வசம் கவர்ந்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.//

இது ஏனோ ஒரு வகையில் சரியே, பேசும்போது கேட்பவருக்கு வேணும்னா ஆறுதல் தரும் ஆனால் செயல்பாடு என்று வந்தபிறகு????

அப்துல்மாலிக் said...

வாழ்வின் முன்னேற்றத்திற்கான டிப்ஸ் களுக்கிடையே தனக்கேயுறிய பாணியில் நம்மூர் சகோதரர்களுக்கிடையேயுள்ள (இயக்கங்களால் பிரிந்திருக்கும்) ஒற்றுமையை வழியுறுத்திய விதம் பாராட்டட்தக்கது

வாழ்த்துக்கள் காக்கா..

இப்னு அப்துல் ரஜாக் said...

//மனிதன் சந்தோசப்படும் வார்த்தை "அவனது பெயர்" , பேசும்போது இடையிடையே உங்கள் கஸ்டமர் பெயர் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள் [மரியாதை சேர்த்துக்கொள்வது உங்கள் கஸ்டமரின் வயதைப்பொறுத்தது. தொடர்ந்து பெயர் உச்சரிக்கப்படும்போது கஸ்டமர் ஒரு safety ஐ உணர்வது நிச்சயம்.//

ரசூல் ஸல் அவர்கள் முதலில் மக்களின் பெயர்களை தெரிந்து கொண்டு,மறக்காமல்,எப்போதும் குறிப்பிட்ட நபரை சந்திக்கும்போது அவரவர் பெயர் சொல்லியே அழைப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.அன்று நம் தலைவர் சொன்னதுதான் அறிவியலாக,மருத்துவமாக,மனோ தத்துவமாகா,எல்லாமுமாக பல துறைகளாக இருக்கிறது.

இவைகளை வெளிக்கொணரும் ஜாகிர் காக்காவுக்கு நன்றிகள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

மனதிற்கு உற்சாகம் தரும் பதிவு, நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் ஒவ்வொன்றும் நம்மிடம் உள்ள சிறிய தவறுகளை திருத்திக்கொள்ள நிச்சயம் உதவும்.

மிக்க நன்றி காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இன்று எதிரியாக உள்ள அரசியல் கட்சிகள் நாளை தேர்தலில் கூட்டு சேரும்போது நாம் விமர்சிக்கிறோம். "வெட்கங்கெட்டவைங்க" என பெயர் வைக்கிறோம். நாம் இன்று எதிரியாக நினைக்கும் இன்னொரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவன் நாளை நம்முடன் சேரும்போது நம் நிலைப்பாடுதான் என்ன?...பிரிவுகள் கருத்தோடு இருந்து விட்டுபோகட்டும்..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!//

ஜாஹிர் காக்கா உண்மையில் ஒற்றுமையை விரும்பும் முஸ்லீம்கள் எல்லோரிடமும் உள்ள ஒட்டுமொத்த ஆதங்கம் இதுவே.

பிரிவுகளை கருத்தோடு விட்டுவிடாமல் உறவுகளை துண்டிக்கும் நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி வருத்தப்படாமல் இருப்பவன் சிறந்த முஸ்லீமா?

மனம் கலங்க வைத்துவிட்டீர்கள் இந்த வரிகளால்.

புதுசுரபி said...

// "என்னங்க.... உங்க கண்ணு காண பொறந்தவன்... தோப்பு,வயல், பில்டிங் நு வாங்கி கிட்டே போறான்...நீங்களுந்தான் வெளிநாட்டுக்குப் போனிய...அப்படி ஒன்னும் நீங்க சூட்டிகையா கிழிச்ச மாதிரி தெரியலையே //

இந்த மாதிரி ஆசாமிகளுக்கு இறைவனின் வார்த்தைகளையே (102வது அத்தியாயம்) பதிலாய் தருவதே சிறந்ததாகும்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- (1) நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (2) அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (3) பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (4) அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (5) நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (6) பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (7) பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (8)

அலாவுதீன்.S. said...

சகோ. ஜாகிர்ஹுசைன்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// ஒப்பீடுகளால் ஒரு விசயத்தை சாதிக்க முடியாது என நான் சொல்லவில்லை. ஆனால் அது நிரந்தரமில்லை. இன்னொருவனை நான் ஓவர்-டேக் செய்ய நினைக்கிறேன், செய்து விட்டேன், பிறகு...???.


தனி மனித முன்னேற்றத்துக்கு யார் மனதையும் புண்படுத்தாத சூழல் எப்போதும் நிரந்தரம். சாதித்த பிறகும் அதில் நிம்மதியும் இருக்கும். ஆக ஒப்பீடு யாருடன் இருக்க வேண்டும்?

சில சமயங்களில் நாம் எப்படியிருக்கிறோம் என்று ஒரு சுய பரிசோதனை இல்லாமல் நிதர்சனத்தோடு மல்லுக்கு நிற்பதும் காரணமாகும்.

நிகழ்வு: ஒரு கண்ணாடி கிளாசை உங்கள் பிள்ளை போட்டு உடைத்து விட்டது உங்கள் வீட்டில்….. இதில் உண்மை நிலை என்ன? ரியாக்சன் 1. "நல்ல வேளை காலில் விழவில்லை"

எனவே உண்மையுடன் தொடர்பில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!

உங்களிடம் பயன்படாமல் இருக்கும் சில துணிமணிகளைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள், தானாகவே புதிய உடைகள் உங்களுக்கு வந்து சேரும்.

உங்கள் வேலை இடத்தில் வியாபாரத்தில் சில டிப்ஸ்.

எதையும் முழுமையாக கேட்ட பிறகு பேசுங்கள். உங்களின் நிறைய நேரம், பணம், எனர்ஜி வீணாவதைத் தடுக்க முடியும். ////
*******************************************************************************
படிக்கட்டுகள் .. . ஏற்றம் - 6 -

படிப்பினை கலந்த நல்லதொரு பின்பற்றத்தக்க அறிவுரைகள். வாழ்த்துக்கள்!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உளவியல் ரீதியாக ஒரு இதமான பதிவு. ஜசாக்கல்லாஹ் பிரதர்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Yasir said...

சிந்தனையை தூண்டி உள்ளத்தை சீர்படுத்தும் ஆக்கம்...படிகள் மனதை பக்குவப்படுத்துக்கின்றன...தொடரட்டும் உங்கள் சீரிய பணி காக்கா

//தெரியாத விசயத்தை தெரிந்த மாதிரி சீன் போட்டு பிறகு வழிவதை விட்டு விட்டு, எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை// நமது ஆட்களில் பெரும்பாலோனர் இத்தவற்றை செய்கிறார்கள்...

N. Fath huddeen said...

சமரசத்தில் மௌலவி நூஹ் மஹழரி எழுதும் "இஸ்லாமும் இங்கிதமும்" தொடர்கட்டுரை படித்த மாதிரி இருக்கு. மாஷா அல்லாஹ்!

http://www.samarasam.net/01-15_Feb_12/index.htm

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

படிக்கட்டுகள் தலைப்பை/பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்

\\மனிதனின் 'மைன்ட்' தொடர்ந்து தீர்ப்புவழங்கிக் கொண்டிருக்கும் கருவி. இறைவன் உங்களுக்குக் கொடுத்தது BRAIN, நீங்கள் உங்கள் சூழ்நிலைகளில் உருவாக்கி கொண்டது MIND. அந்த மைன்ட் தான் பெரும்பாலான விசயங்களில் காலை வாரி விடும் எதிரி.//

MIND ஐ பற்றி விழக்கிய விதம் விழை மதிக்கமுடியாதொரு "DIAMOND" சொற்கள் அருமை

\\32 பள்ளிவாசல்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு பிரிந்து இருப்போமா?.//

நாம் பள்ளிவாசல் கணக்கில் மட்டுமா பிரிந்துள்ளோம் பல இயக்கங்களாக (ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு புது இயக்கங்கள் வளர்ந்துள்ளது) , இன்னும் தெருப்பாகுபாடுகளாக, நிலைத்து நிற்கிறது.

பள்ளிவாசலை பற்றியொரு சிறிய தகவல்:
விட்டு மனை விற்கப்படுவதற்க்கு அவ்விடத்தில் ஒரு பள்ளிவாசல் நிறுவ/வர உள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது இருக்கிற பள்ளிவாசலையே சரியாக பாரமரிப்பு இல்லாமை காரணமாக அடைமழைகளில் சேதமடைந்திருக்கிறது அப்பள்ளிவாசலை பாரமரித்தால் மட்டுமே போதும் மேலும் இருக்கிற பள்ளிவாசல்களில் தொழவரும் ஆட்கள் குறைவே

இப்பதிவை தந்த ஜாகிர் ஹுசைன் காக்கா அவர்களுக்கு நன்றி உங்களின் இப்படிகட்டுகள் ஒரு முடிவில்லா படிக்கட்டுகளாக தொடர வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்

நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்

நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்

நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்

ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை

எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்

நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகமே இன்பம் ஒழித்திடும்

நட்பின் வளையம் நமக்கு வரம்தரும்
தப்பு வராமல் தடுக்கும் அரண்பெறும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிர் காக்கா உங்களுடைய ஐந்தாவது படியில் ஏறி நின்றுக்கொண்டு இருக்கும் நேரத்தில்.லக்கேஜ் சுமை அதிகமாக சேர்ந்து விட்டதால்.உடனே ஆறாவது படி ஏற சிரமமாகி விட்டது.

// பேசும்போது இடையிடையே உங்கள் கஸ்டமர் பெயர் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள்.//

காக்கா ரொம்ப கஷ்டம்.எங்களுக்கு வருகிறது லேடிஸ் கஷ்டமராச்சே!

ZAKIR HUSSAIN said...

This is regarding படிக்கட்டுகள் -6

to Sabeer

...watch..the watcher.[ this is also one group of study]

Bro பத்ஹூதீன்...how are you? . நீங்கள் சொன்ன ஆர்டிக்கிள் நானும் படித்தேன். நீங்கள் சொன்ன பிறகு... அது ரொம்ப விளாவாரியாக இருந்தது. தமிழில் சொன்ன வந்த விசயத்தை சிம்பிளாக சொன்ன சுஜாதா போன்றவர்களின் புத்தகம் படித்தவர்கள் அப்படி எழுதுவதில்லை.

To Bro Thajudeen
//உண்மையில் ஒற்றுமையை விரும்பும் முஸ்லீம்கள் எல்லோரிடமும் உள்ள ஒட்டுமொத்த ஆதங்கம் இதுவே.//
இப்போது கொஞ்சம் பரவாயில்லை. நாம் எல்லாரும் ஒற்றுமை அடைய இறைவன் உதவி செய்வான் ...நாம் விரும்பினால் மட்டும்.

To bro புதுசுரபி...எப்படி இருக்கீங்க?,,மெட்ராஸ் வெயில் என்ன சொல்லுது. சமயங்களில் அங்கு நடக்கும் விசயங்களை செய்தியில் பார்க்கும் போது 'வியர்த்துப்போன மக்களின்" முகம் தான் முன்னுக்கு தெரிகிறது.


நீங்கள் சொன்ன குரான் ஆயத்து படிக்கும்போது இன்றைய நிலையை எப்படி இறைவன் நமக்கு கண்ணாடி மாதிரி காட்டியிருக்கிறான் என்பதுதெரிகிறது.

bro Ashiq....உங்களின் வலைப்பூவும் சமயங்களில் பார்ப்பேன்...வாழ்த்துக்கள்...keep up your good work.


Thanx to my brothers Abul Kalam, Abdul malik, AraAla, Alaudeen, yasir, athirai thendral [ thanx for your detailed comments]& kaka Ebrahim Ansari,,, sorry i am rushing for Jummah prayer , will meet in different articles.

LMS..you can call them sister what?

ZAIESA...what is that line?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு