வளைகுடா பாதிப்பும், பதிப்பும் 'O' my son! 'O' my son! - Gulf version!!
வளைகுடா வாழ்க்கையை பலபேர் தத்தமது அனுபவத்தில் பலவிதமாக கிண்டலாகவும், நக்கலாகவும், வேதனையாகவும் கூட பேசியதும், எழுதியதும் உண்டு. இது போன்ற செய்திகளை தாங்கிய மின்னஞ்சல்கள் பலரிடமிருந்து அவ்வப்பொழுது நமக்கு பறந்து வராமலில்லை.
அவர்களில் பலர் 'என்னையா ஊரு இது? பசுமை இல்லை. நீர் நிலைகள் இல்லை, ஏரி, குளங்கள் இல்லை. வயல்,வரப்புகள் இல்லை. போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. தெருக்கூத்து இல்லை, ஸ்ட்ரைக், போராட்டங்கள் இல்லை, தேர்தல் இல்லை' (நல்ல வேளை இங்கு பால் விலை உயர்வு இல்லை, பஸ்கட்டண உயர்வு இல்லை, மின்சாரக்கட்டண உயர்வு இல்லை, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இல்லை என்று சொல்லி அழுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி) என இப்படி பட்டியலிட்டு அழுத்துக்கொள்ளும் நபர்கள் பலர் உடும்பை விட அரபுதேசங்களை விடாப்பிடியாகத்தான் இன்றும் பிடித்துக்கொண்டுள்ளனர்.
எவரையும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் 'இந்த கம்பெனியை விட்டு விலகிச்சென்றால் உங்கள் தலை சீவப்படும்' என்றும் 'விடுமுறையில் ஊர் போய் திரும்பவில்லை' என்றால் இந்த வழக்கை நாட்டின் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் எந்த கம்பெனியும் கடின சட்டத்தை இயற்றி எச்சரிக்கையை அவர்களின் பணியாளர்களுக்கு விடுப்பதில்லை. இப்படி அடிக்கடி அரபு நாட்டு வாழ்க்கையை எதையாவது சொல்லி அழுத்துக்கொள்ளும் நபர்களிடம் சென்று 'தாங்கள் எத்தனை வருடங்களாக இந்த அரபுநாட்டில் வேலை செய்து வருகிறீர்கள்?' என்று கேட்டால் சர்வசாதாரனமாக சொல்வார்கள் 'வரும் டிசம்பருடன் மொத்தம் 17 வருடங்கள் ஆக இருக்கின்றன' என்று. அந்த 17 வருடங்களும் பஹ்ரைன், அபுதாபி, குவைத், கத்தார், சவுதி, ஓமன் என பரவலான அரபு தேசங்களில் அங்குமிங்குமாக கொஞ்சம் கொஞ்சம் பிச்சி,பிச்சி போடப்பட்டிருக்கும். ஆனால் எதிர்கட்சி தலைவர் போல் தான் வசித்து வரும் நாட்டை கண்டபடி விமர்சித்து விடுவர்.
அரபுநாட்டு வாழ்க்கையில் இளமையை தொலைத்து மனைவி, மக்களுடன் போதிய காலங்களை செலவழித்து அவர்களுடன் வாழ இயலாமல் போய் இருக்கலாம். ஆனால் அவர்கள் பலரின் வீடுகட்டுதல், பிள்ளைகளை படிக்க வைத்தல், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற தேவையான வாழ்வாதாரங்கள் ஊரில், வீட்டில் உயர்த்தப்படாமல் இல்லை.
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ஒரு ஆங்கில குழந்தை பாட்டை இப்படி சுவராஸ்யமாக அரபு நாட்டு வாழ்க்கையுடன் ஒப்பிட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லி விட இயலாவிட்டாலும் படிக்கும் பொழுது சிரிப்பை வரவழைத்தது. அது இதோ உங்களுக்காக.
'O' my son ! 'O' my son !- Gulf version!!
'O' my son ! 'O' my son... YES PAPA !
Job in Gulf.. YES PAPA !
Lot of Tension.. YES PAPA !
Too Much Work.. YES PAPA !
Family Life.. NO PAPA !
BP-Sugar.. HIGH PAPA !
Yearly Bonus.. JOKE PAPA !
Annual Pay.. LOWEST PAPA !
Personal Life.. LOST PAPA !
Promotion Incentive.. HA ! HA ! HA !
- மு.செ.மு. நெய்னா முஹம்மது
11 Responses So Far:
MSM(n): வெள்ளிக்கிழமை வளைகுடா வசந்தம் வீசம் இன்றைய நாள் அதாவது வெள்ளி மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் கலாச்சாரப்படி தூக்கஹ்த்தில் இருந்தேனே (அதுவும் இன்றைக்குத்தான் தூங்கினேன்)... ஒரு அலைபேசி அழைப்பு !
எம்.எஸ்.எம்.மின் பாப்பா பாட்டினை தமிழில் போட்டத்தான் என்னவாம் என்று சொல்லி என்னை தூக்கத்திலிருந்து விடுவித்தார் அவர்...
அவருக்காக !
யாராவது மாத்தித் தாங்களேன்... !
கண்டிஷன் அதுவும் அசல் பிரழாமல், இலக்கணம் மாறாமல், தூய தமிழில் என்றெல்லம் நான் சொல்லவே இல்லையே !
'ஏன் மொவனே! 'ஏன் மொவனே!... சொல்லுங்க வாப்பா!
'அரபு நாட்டு வேலை....சரிங்க வாப்பா!
'நெறையா தொந்தரவு....சரிங்க வாப்பா!
'எவ்ளோ வேலை....சரிங்க வாப்பா!
'குடும்ப வாழ்க்கை....இல்லெ வாப்பா!
'ரெத்த கொதிப்பு, இனிப்பு நீரு...கூடுதலா ஆயிடும் வாப்பா!
'வருச ஊக்கத்தொகை...தமாசா போயிடும் வாப்பா!
'வருச வருமானம்....ரொம்ப கொறச்சி வாப்பா!
'தனி சுதந்திரம்....தொலஞ்சி போயிடும் வாப்பா!
'பதவி உயர்வு, சம்பள உயர்வு....மெதுவான இந்த வேகத்தில் ஆமை கூட தோற்று போய் விடும் வாப்பா! (ஹா! ஹா! ஹா!வுக்கு இது தானே இங்கு அர்த்தம் வரும்?)
சும்மா லைட்டா தமிழ்லெ ட்ரைப்பண்ணுனேன்.
'ஏன் மொவனே! 'ஏன் மொவனே!... சொல்லுங்க வாப்பா!
'அரபு நாட்டு வேலை....சரிங்க வாப்பா!
'நெறையா தொந்தரவு....சரிங்க வாப்பா!
'எவ்ளோ வேலை....சரிங்க வாப்பா!
'குடும்ப வாழ்க்கை....இல்லெ வாப்பா!
'ரெத்த கொதிப்பு, இனிப்பு நீரு...கூடுதலா ஆயிடும் வாப்பா!
'வருச ஊக்கத்தொகை...தமாசா போயிடும் வாப்பா!
'வருச வருமானம்....ரொம்ப கொறச்சி வாப்பா!
'தனி சுதந்திரம்....தொலஞ்சி போயிடும் வாப்பா!
'பதவி உயர்வு, சம்பள உயர்வு....மெதுவான இந்த வேகத்தில் ஆமை கூட தோற்று போய் விடும் வாப்பா!
**************************************************************************************************************************************************************
குழந்தையின் பாட்டின் வடிவில்
உள்ள இந்த பாடல்
அனைவரின் உண்மையான
வாழ்க்கையை பிரதிபலிக்கிறது!
எங்க தெருப்பக்கம் ஜித்தா-இத்தா னு யாரோ தபால் எழுதுனதா சொன்னாப்லெ...[பல வருடத்துக்கு முன்]
Bro MSM Naina Mohamed,
சவூதியில் ஏதும் கவுன்சிலர் போஸ்ட்டுக்கு நிக்கிறாப்லெ ஐடியா எதுவும் இருக்கா?
எம் எஸ் எம்மின் கல்ஃப் வெர்ஷன்
கல்பைத் துளைக்குது.
ஆங்கிலமோ தமிழோ
அகிலமும் புரியும் மொழி
மழலை மொழியன்றோ?
யெஸ் பாப்பாவிலும்
நோ பாப்பாவிலும்
யெஸ்ஸும் நோவும் மாறுகின்றன
பாப்பா மாறுவதில்லை
நோவும்தான்.
பாடல் படிப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் அனால் அதுதான் யதார்த்தம் !!!! பலரையும் நிச்சயமாக சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன் .இரண்டாவது வரியில் வளைகுடாவில் வேலை என்று தானே அர்த்தம் .இல்லை அரபு நாடு தான் சரியா???
நல்ல கருத்துள்ள தொகுப்பு..வாழ்வின் உண்மையும் கூட
மகனே,மகனே -ஆம் வாப்பா
வளைகுடா சோலி- ஆம் வாப்பா
ரொம்ப கரைச்சல் -ஆம் வாப்பா
கடும் வேலை -ஆம் வாப்பா
சுக வாழ்வு -கிடையாது வாப்பா
கொதிப்பு,சக்கரை -சுனாமி வாப்பா
வருடபெறுமானம் - லாரல்,ஹார்டி வாப்பா
வருட வருமானம்- ஊத்திக்கிச்சி வாப்பா
சொந்த வாழ்வு- போயி போச்சி வாப்பா
ஊதிய உயர்வு-அந்தோ,அந்தோ,அந்தோ
நிதர்சனம்.
இந்த ஏக்க கவிதையையும் பாருங்கள். நாஞ்சில் சாதிக் வெளியிட்டது. ஷா நவாஸ் எழுதியது.
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் ....... மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ ) .
-இபுராஹீம் அன்சாரி
தனக்கு வந்த மெயிலை இப்படியும் ஒன்னு எழுதலாம்னு உன்னால் மட்டுமே முடியும் லே :)
Post a Comment